பரபரப்பான இந்திய Vs இலங்கை ஒருதினப்போட்டி! | 2009

22
இந்திய Vs இலங்கை ஒருதினப்போட்டி

நேற்றைய ஒருதினப்போட்டியை பார்த்த பலருக்கு இதயத்துடிப்பு எகிறி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Image Credit

நமது ஆட்டத்தை ரசித்த அளவிற்கு அவர்களது ஆட்டத்தை ரசிக்கும் பெரிய மனது நமக்கில்லை அந்த அளவிற்கு நம்மை இலங்கை அணியினர் பஜ்ஜி ஆக்கி விட்டார்கள்.

சேவாக் சச்சின்

டாஸ் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் துவக்க வீரர்களாகச் சச்சினும் சேவாக்கும் இறங்கினார்கள்.

துவக்கம் முதலே அனைவரின் பந்து வீச்சையும் நொறுக்கி தள்ளினார்கள்.

சேவாக் வேறு சூப்பர் ஃபார்மில் இருந்ததால் வெளுத்துக் கட்டினார், 66 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். சச்சினும் சிறப்பாக விளையாடினார்.

இந்தியா 20 ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

சச்சின் ஆட்டமிழந்த பிறகு வந்த டோனி ஆரம்பம் முதலே பட்டைய கிளப்பினார், நீண்ட நாளைக்குப் பிறகு டோனியின் அதிரடியான ஆட்டம். இவர் வந்த பிறகு சேவாக் எடுக்கும் ஓட்டங்கள் குறைந்து விட்டது.

நான் சேவாக் எப்படியாவது இந்தப் போட்டியிலாவது 200 ஓட்டங்கள் எடுத்து அன்வர் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன்.

காரணம், ஏகப்பட்ட ஓவர்கள் மிச்சம் இருந்தது அதுவும் இல்லாமல் சேவாக் முன்பு ஒரு போட்டியில் கூறி இருந்தார்..

“ஒருதினப்போட்டியில் 200 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம்” என்று.

அவர் மறந்து விட்டாரா! என்று தெரியவில்லை அவர் விளையாடும் போது ஒவ்வொரு முறையும் இது என் நினைவில் வந்து செல்லும்.

இந்த முறையாவது 200 எடுத்து அன்வர் பெயரைத் தூக்குவாரா! என்று.

415 ஓட்டங்கள் இலக்கு

146 ஓட்டங்கள் எடுத்து இருந்த சேவாக் இந்தியா 309 ஓட்டங்கள் இருந்த போது ஆட்டமிழந்தார், உடன் டோனியும் போக இந்தியாவின் ஆட்ட வேகம் குறைந்து விட்டது.

அதன் பிறகு வந்த ரெய்னா, காம்பிர், ஹர்பஜன், யுவராஜ் க்கு மாற்றாக வந்த விராத் கோலி உட்பட யாரும் சோபிக்கவில்லை.

ஜடேஜா மட்டும் இரண்டு சிக்ஸ் அடித்து இலங்கை வயிற்றில் புளியை கரைத்து நம்மை 400 தாண்ட உதவினார்.

முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 414 ஓட்டங்கள் எடுத்து 415 ஓட்டங்களை இலக்காக வைத்தது.

நமது போட்டியில் நான் எதிர்பார்த்தவையும் நடந்தவையும்

நம்ம ஆளுங்க முதலில் சர சரன்னு அடித்தாலும் 250 ஓட்டங்கள் கிட்ட வந்ததும் பொட்டு பொட்டுன்னு எல்லோரும் காலி ஆகிடுவாங்க.

இதில 309 க்கு தான் தான் இரண்டாவது விக்கெட் விழுந்தது.

ஜடேஜா

இவர்கள் அடித்த அடியை பார்த்து 450 ஓட்டங்கள் வரும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால், வழக்கம் போலப் பின் வரிசை வீரர்கள் சொதப்பியதால் இதைவிடப் பெரிய ஸ்கோரை எடுக்கும் வாய்ப்பு வீணானது.

சேவாக் எப்படியும் 200 எடுப்பார் என்று நினைத்தேன், ஆனால் அவர் 100 தாண்டியவுடன் டோனி ஆட்டத்தை எடுத்துக்கொண்டார் அதனால், அந்த நம்பிக்கை போய் விட்டது.

காம்பிர் வந்து அதிரடியாக ஆடுவார் என்று பார்த்தேன், ஏனென்றால் சென்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இருந்தார்.

பொதுவாக மட்டை வீரர்களே சோபிக்காத நிலையில் ஹர்பஜன் சரவெடியாய் அடிப்பார் கடைசியில் அவரும் வந்த வேகத்தில் போய் விட்டார் 🙁 .

இந்த வேகத்தில்! சென்றதால் கண்டிப்பாக 400 எட்டாது என்று நினைத்தேன், ஜடேஜா அடித்ததில் 400 ஐ தாண்டி விட்டது.

அடித்தாடிய இலங்கை

415 என்ற மிகப்பெரிய இலக்கைத் தொட வேண்டும் என்ற கட்டாயத்தில் பலத்த அழுத்தத்தோடு இறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்களை நொந்து நூடுல்ஸ் ஆக்க வைத்தது.

இந்தியா அடித்த அடியை பார்த்து கிர்ர்ர்ர் என்று இருந்த எனக்கு, இவர்கள் அடித்த அடியை பார்த்து அனைத்து உற்சாகமும் வடிந்து கடுப்பாகி விட்டது.

அதுவும் இந்தத் தில்ஷன் பவுண்டரிகளாக அடித்து நொறுக்குகிறார், செம டென்ஷன் ஆகி விட்டது. ஒருத்தரும் ஆட்டமிழப்பதற்க்கான அறிகுறியே தெரியல!

நம்ம ஆளுங்க வேற “சூப்பரா” ஃபீல்டிங் பண்ணுறாங்க.

என்னடா இது! இப்படியே போனா போட்டியில் வெற்றி பெற்று விடுவாங்க போல இருக்கே, நம்ம மானம் போவது உறுதி தான் என்று கடுப்பாகி விட்டது.

தரங்கா ஆட்டமிழந்ததும் வந்த சங்ககாரா Twnenty-20 நினைப்பிலேயே இருந்தார் போல நாலா பக்கமும் பந்தை சிதறடிக்கிறாரு!

இவங்க இரண்டு பேரும் ஆட்டமிழக்கிற மாதிரி தெரியல.. இதுல தில்ஷன் மட்டும் 20 பவுண்டரி, கண்ணைக் கட்டி விட்டது.

அடப்பாவிகளா! இன்னைக்கு நம்ம மானம் போவது உறுதி என்றே ஆகி விட்டது.

பாலைவனத்தில் திரிந்தவனுக்குத் தண்ணீர் கொடுத்த மாதிரி பிரவீன் குமார் பந்தில் சங்ககாரா ஆட்டமிழந்தார் (43 பந்து 90 ஓட்டங்கள்).

மாத்யுஸ் மற்றும் கண்டம்பி

அதன் பிறகு சீரான இடைவெளியில் ஜெயசூர்யா, தில்ஷன் (124 பந்து 160 ஓட்டங்கள்), ஜெயவர்தனே என்று அனைவரும் ஆட்டமிழக்க அப்பாடா! என்று நிம்மதி பெருமூச்சு விட்டால் ஆணி அடித்த மாதிரி மாத்யுஸ் மற்றும் கண்டம்பி இருவரும் நின்று விட்டார்கள்.

இவர்கள் அடித்த அடியை பார்த்து விக்கெட் வேறு இருந்ததால் கண்டிப்பாக இந்தியா தோல்வி தான் என்று முடிவு செய்து கொஞ்ச நேரம் போட்டியே பார்க்கவில்லை அந்த அளவிற்கு டென்ஷன் ஆகி விட்டது (கொஞ்சம் ஓவரா இருக்கோ!).

ஆனால், கண்டம்பி ஸ்கோர் 401 இருக்கும் போது சச்சின் மற்றும் ஜாகிரால் ஓட்டமிழப்பு (run out) செய்யப்பட்டார், இதுவே ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது.

இதன் பிறகு சமவீராவும் இதே போல ஆட்டமிழக்க. கடைசி ஓவரில் இலங்கைக்கு வெற்றி பெற 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை வீச நெஹ்ரா அழைக்கப்பட்டார், முதல் மூன்று பந்துகளில் ஐந்து ஓட்டங்கள் எடுக்க நான்காவது பந்தில் சச்சினிடம் மாத்யுஸ் பந்தை கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசிப் பந்தில் 5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி 4 ஓட்டங்கள் எடுத்தால் சமநிலை என்ற பரபரப்பான சூழ்நிலையில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுக்க முடிந்ததால் முடிவில் இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 411 ஓட்டங்கள் எடுத்துப் பரிதாபமாகத் தோல்வி அடைந்தது.

போட்டித்  துளிகள்

  • இது இந்தியாவிற்கு அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர். இதற்க்கு முன் 2007 உலகக் கோப்பையில் சுண்டக்கா பெர்முடா அணியிடம் 413 அடித்து இருந்தது.
  • இந்தியா முதலில் விளையாடும் போது ஜடேஜா அடித்த பந்து ஜெயசூர்யா இடது பெரு விரலில் பட்டு அடிப்பட்டு விட்டது.
  • இதனால் துவக்க வீரரராகக் களம் இறங்காமல் பிறகு இறங்கினார். இருந்தும் நல்ல வேளையாக அவர் வந்த வேகத்தில் சென்று விட்டார்! தப்பிதோம்டா சாமி! 🙂 .
  • யுவராஜ் சிங் மற்றும் முரளிதரன் விளையாடவில்லை
  • இந்திய அணியில் ஹர்பஜன் சிறப்பாகப் பந்து வீசி ஓட்டங்கள் எண்ணிக்கையை மட்டுப்படுத்தினார்
  • இந்தியா வெற்றி பெற கண்டம்பி ஓட்ட இழப்பு முக்கியக் காரணமாக இருந்தது
  • இந்திய அணி ஃபீல்டிங் கடைசியில் மட்டுமே சிறப்பாக இருந்தது
  • இலங்கை அணி தனது இரண்டாவது விக்கெட்டை 316 ஓட்டங்கள் இருக்கும் போது தான் இழந்தது
  • மேன் ஆஃப் தி மேட் சேவாக்கிற்கு வழங்கப்பட்டது

சிறப்பாக விளையாடிய இலங்கை

முடிவாக இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை இதற்கு முழுத்தகுதி இலங்கை அணிக்கே, கடைசி வரை போராடினார்கள்.

இது எவரும் எதிர்பார்க்காதது.

நானெல்லாம் எப்படியும் 260 க்குள்ளே எல்லோரும் காலி ஆகி விடுவார்கள் என்று நினைத்து இருந்தேன்.

என்னைப் போல நினைத்தவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு மிகச்சிறப்பாக விளையாடியது.

இவ்வளோ தூரம் விரட்டியும் மூன்று ஓட்டங்களில் போட்டியை இழந்தது அவர்களுக்குத் துயரத்தைத் தந்து இருக்கும்.

நம்மவர்களாக இருந்தால் இந்நேரம் எப்பவோ காலி ஆகி இருப்பார்கள், வரிசையாகப் பெவிலியனுக்குத் திரும்பி இருப்பார்கள்.

இப்படியொரு இமாலய ஸ்கோரை இவ்வளோ சிறப்பாக விரட்டுவது அதுவும் தொடக்கம் முதல் இறுதி வரை என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

எனக்கு இந்தியா தோற்பது கூடப் பெரியவிசயமாகத் தோன்றவில்லை, எத்தனை பார்த்து இருக்கிறோம் 🙂 .

அதனால பத்தோட பதினொன்னு அத்தோட இதொன்னு அப்படின்னு போய்டுவேன், ஆனா இவ்வளோ ஓட்டங்கள் விரட்டி வெற்றி பெற்றால் இது வேற ரொம்பக் கேவலமா இருக்குமே!

200

தில்ஷன் அடித்த அடிய பார்த்து இவர் வேற 200 போட்டு நம்மை நாறடித்து விடுவாரோ என்ற பயம் வேறு, அன்வர் சாதனையே இன்னும் அப்படியே இருக்கு!

நல்ல வேளை எப்படியோ தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலியா நிலைமை வராமல் தப்பித்தோம் 😉 .

எது எப்படியோ இந்தியா வெற்றிப் பெற்றது பெற்றது தான்.

நம்மவர்களும் கடைசியில் தங்கள் தவறுகளைத் திருத்திச் சிறப்பாக ஃபீல்டிங் செய்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதை முன்பே செய்து இருந்தால் இத்தனை அழுத்தமே வந்து இருக்காது.

என்ன செய்வது நம்ம ஆளுங்க இப்படி நம்மை டென்ஷன் செய்வதையே பிழைப்பா வைத்து இருக்காங்க!

ஆட்டக்களம் படு மோசமாக இருக்கிறது, மட்டையாளர்களுக்குச் சாதகமாக இதைப் போலக் கேவலமாக அமைக்கப்படும் ஆடுகளங்களால் நமக்குத் தான் கெட்ட பெயர்.

ஒருமுறை சுழல் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக அமைத்து ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியை இரண்டு நாளில் முடித்த பெருமையும்! பெற்றவர்கள்.

மட்டையாளர்கள் பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் சமமான வாய்ப்பை அளிக்கும்படி ஒரு களத்தை அமைப்பது தான் சரியான ஒன்று.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

22 COMMENTS

  1. சும்மா போங்க , பிளட் பிச் போட்டு விட்டு இதைஎல்லாம் ஒரு மேட்ச் என்று விமர்சனம் பன்னுறேங்க

  2. நல்ல விமரிசனம். மேட்சின் விருவிருப்பு எழுத்திலும்.

  3. விளையாட்டை நேரடியாகப் பார்த்ததுபோல் இருக்கிறது உங்கள் பதிவைப் படித்தபின் ஏற்பட்ட உணர்வு.

  4. உங்கள் பதிவு நன்றாக உள்ளது. ஆனால் அதில் ஒரு சிறு தவறு ஜெயசூர்யா காயம் காரணமாக தான் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக வரவில்லை என எழுதி உள்ளீர்கள். காரணாம் அதுவல்லா தொடர் தொடங்கமுன்னரே சங்ககார ஜெயசூர்யா ம்முறை மத்திய வரிசையில் விளையாடுவார் என அறிவித்து விட்டார்.

  5. // இந்த முறையாவது 200 எடுத்து அன்வர் பெயரை தூக்குவாரா! என்று.//

    ஹய்யா சேம் பிஞ்ச்…

    நானும் ரொம்ப நாளா இதையேதான் யோசிச்சிகிட்டு இருக்கேன் பாஸ்!

  6. //இந்தியா முதலில் விளையாடும் போது ஜடேஜா அடித்த பந்து ஜெயசூர்யா இடது பெரு விரலில் பட்டு அடிப்பட்டு விட்டது. இதனால் துவக்க வீரரராக களம் இறங்காமல் பிறகு இறங்கினார். இருந்தும் நல்ல வேளையாக அவர் வந்த வேகத்தில் சென்று விட்டார்! தப்பிதோம்டா சாமி! :-)//

    அண்ணே.. ஜெயசூர்யா இப்போதெல்லாம் மிடில் ஆர்டரில் தான் ஒரு நாள் போட்டிகளில் விளையாடப்போகிறார். அவரின் ஆட்ட இடம் முதலிலேயே முடிவு செய்யப்பட்டது 🙂

  7. // dialog said…
    சும்மா போங்க , பிளட் பிச் போட்டு விட்டு இதைஎல்லாம் ஒரு மேட்ச் என்று விமர்சனம் பன்னுறேங்க//

    :-)) ஏங்க! மொக்கை படத்துக்கெல்லாம் போட்டி போட்டு விமர்சனம் பண்ணுறாங்க..நான் என்னங்க விளையாட்டுக்கு தானே விமர்சனம் செய்தேன் 🙂

    ======================================================================

    தமிழ்நெஞ்சம், கலையரசன், பாலா சார், அப்துல்லா, ராமலக்ஷ்மி வருகைக்கு நன்றி

    ======================================================================

    சதீஷ் தகவலுக்கு நன்றி 🙂

    ராஜ் நீங்க சொன்னதை தான் ஏற்கனவே சதீஷ் கூறிட்டாரே! :-))

  8. விடுங்கப்பா விடுங்கப்பா. எல்லோருக்கும் நன்றியுங்கோ. ஏதோ நமக்கு therinchathai உங்களுக்கும் சொன்னேன்.

  9. சுரேஷ் வருகைக்கு நன்றி

    ======================================================================

    ஷான் இது எனக்கு முன்னமே தெரியும், கவுண்டி விளையாட்டை எல்லாம் எப்படி இந்த கணக்கில் வைப்பது.

    ======================================================================
    ராஜ் சதீஷ் அருண் வருகைக்கு நன்றி

  10. அருண் நான் இன்னும் வேட்டைக்காரன் படம் பார்க்கவில்லை, அவதார் பார்த்து விட்டேன்..படம் கண்டிப்பாக பாருங்க கலக்கல்.

  11. hello giri sir…… yappadi erukkkinga.? Inthe match nadakkum pothu naan current facility illatha oru village(Jharkhand) il erunthan. but AIR varnanai kattu kondu erunthan… unkalin vemarsanam appadiya match partha unarvuvai yakkaku thanthathu………. Thank you sir

  12. //thanga said…
    yappadi erukkkinga.?//

    ரொம்ப நல்லா இருக்கேன்..என்ன திடீர்னு காணாம போயிட்டீங்க!

    //Inthe match nadakkum pothu naan current facility illatha oru village(Jharkhand) il erunthan//

    ஐயையோ! அது ரத்த பூமி ஆச்சே!

    //unkalin vemarsanam appadiya match partha unarvuvai yakkaku thanthathu………. //

    அப்படியா! ரொம்ப நன்றி 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here