விமானப் பயணம் என்ற டரியல் பயணம்!

46
flight விமானப் பயணம் என்ற டரியல் பயணம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்வது  யானை என்றால் அதற்குச் சற்றும் குறையாத ஆர்வத்தைக் கொடுப்பது விமானப் பயணம்.

விமானப் பயணம்

விமானத்தில் இது வரை செல்லாதவர்கள் விமானப் பயணம் என்றால், அதில் உள்ளவர்கள் ரொம்ப நாகரீகமாக நடந்து கொள்வார்கள், அமைதியாக இருக்கும் என்று கற்பனை செய்து இருந்தால் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

பல நேரங்களில் எனக்கு நகரப் பேருந்துகளில் பயணம் செய்த போது எப்படி இருந்ததோ அதைப் போலவே இருந்தது.

அனுபவங்கள் பலவிதம்

கடந்த முறை என் பையனை அழைத்துச் சென்ற போது (சிங்கை —> சென்னை)  செம பயம், இவன் கத்தி என்ன கலாட்டா செய்யப்போறானோ! என்று கலவரமாக இருந்தது.

ஒரு இடத்தில் 10 நிமிடம் உட்கார வைப்பதே சிரமம் இதில் எங்கே நான்கு மணி நேரம் உட்கார வைப்பது.எப்படித் தூங்க வைத்துக் கூட்டி வருவது என்று யோசனையில் இருந்தேன்.

போர்டிங் பாஸ் வாங்கும் இடத்திலேயே நம்மவர்கள் கூட்டம் அதில் பெரிய கும்பல் குருவிகள். 

ஆஹா! இவங்க வேற இத்தனை பேரா! என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே டர்ர்ர்ரர் புர்ர்ர்ரர்ர்ர் னு சத்தம்.

குருவிகள் தாங்கள் கொண்டு வரும் பெட்டிகளைப் பிரவுன் டேப் போட்டு ஒட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்தச் சத்தம் அந்த ஏரியாவையே கலங்கடித்துக்கொண்டு இருந்தது.

அந்த வழியாகச் சென்ற மற்ற வெளிநாட்டுப் பயணிகள் இவர்களை வியப்புடன் பார்த்துக்கொண்டே சென்றார்கள். https://www.changiairport.com

இளையராஜா பாடல்

இன்னொருவர் இளையராஜா பாடலைச் சத்தமாகத் தனது கைத்தொலைபேசி ஒலிப்பெருக்கி வழியாகக் கேட்டுக்கொண்டு அனைவரையும் பார்த்து எதற்கோ புன்னகை பூத்தார்!!

அடுத்தவர் கர்ண கொடூரமான ரிங் டோனை உடனே எடுக்காமல் கொஞ்ச நேரம் அலற விட்டு யார் என்று பொறுமையாகப் பார்த்துப் பின் எடுத்து என் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தார்.

இந்தச் சத்ததங்கள் எல்லாம் அமைதியான அந்த இடத்திலே எரிச்சலை வரவழைத்துக்கொண்டு இருந்தது.

நான் வேலை முடிந்து சென்றதால் கொஞ்சம் தாமதமாகி விட்டது அதனால் இருக்கை முன் புறம் கிடைக்காமல் பின்ன்ன்னாடி கிடைத்து இருந்தது.

திடீர் சலசலப்பு

சுங்க சோதனைகளை முடித்து இவனைச் சாப்பிட வைத்துப் போர்டிங் எல்லாம் முடித்து விமானத்தில் அமர அவர்கள் அறிவிப்பு செய்வதற்காக உட்கார்ந்து இருந்தோம்.

திடீரென்று சலசலப்பு!  நம்ம ஊர்க்காரர் ஒருவர் அங்கே பரிசோதனை பிரிவில் இருந்த பெண்ணிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தார்.

எடை 7 கிலோ மட்டுமே கையில் எடுத்து வர அனுமதி மீதியை லக்கேஜில் போட்டு விட வேண்டும் ஆனால், இவர் 12 கிலோ க்கு மேல் கொண்டு வந்து அதை அனுமதிக்க வேண்டிக்கொண்டு இருந்தார்.

இவர் பேசிக்கொண்டு இருந்தது சீனப்பெண்ணிடம் உடன் ஒரு தமிழ் பெண். யக்கா! யக்கா! இந்த ஒரு வாட்டி விடுக்கா! ப்ளீஸ்க்கா யக்கா! யக்கா!… இப்படித்தான் அங்கே கெஞ்சிக்கொண்டு இருந்தார்.

அவர்கள் மறுத்தாலும் இவர் விடுவதாக இல்லை கடைசியில் அனுமதி வாங்கி இருப்பார் என்று நினைக்கிறேன் அதற்குள் நான் உள்ளே வந்து விட்டேன்.

குருவிகள் அலப்பறை

உள்ளே நுழைந்ததுமே புரிந்து விட்டது இன்று நமக்கு ஆப்பு தான் என்று, பின்னாடி இருந்த பாதி இருக்கைகளுக்கு மேல் குருவிகளே இருந்தனர்.

எந்த இடத்தில் எதை வைப்பது சரக்குப் பாட்டில் எந்த இடத்தில் வைப்பது என்று பெரிய விவாதமே நடந்து கொண்டு இருந்தது.

யாரும் உட்காரவில்லை அவர்களை விலக்கி விட்டு நான், பையன், மனைவி, அம்மா மூவரும் சென்று அமர்ந்தோம்.

அவனோட தூங்குற நேரம், அது வரை அமைதியா இருந்தவன் இவர்கள் போடும் சத்தத்தில் கத்த ஆரம்பித்து விட்டான், என்ன சமாதானம் செய்தும் நிறுத்தவில்லை.

பெரிய சர்வர் பிரச்னையைக் கூடச் சமாளித்து விடலாம், குழந்தை தூக்கத்தில் அழுதால் சமாதானப்படுத்துவது என்பது இயலாத ஒன்று.

பணிப்பெண் அழாத குறையாக அனைவரையும் உட்காரக்கூறியும் ஒருவரும் காதில் வாங்கவில்லை.

அங்கே இங்கே நடந்து அவரையும் இடித்துக்கொண்டு சந்தைக்கடையை நினைவு படுத்தினார்கள்.

கேப்டன் அறிவிப்பு

கேப்டன் அறிவிப்புச் செய்து, பின் திரும்ப ஒருமுறை சிரித்துக்கொண்டே வந்து கூறிய பிறகு ஒரு வழியாக அமர்ந்தார்கள்.

இவனும் ஒரு வழியாகக் கத்தலை நிறுத்தி நெண்டிக்கொண்டு இருந்தான். நான் தூங்கவில்லை என்பதால்….. கண் வேறு எரிச்சலாக இருந்தது.

ஒருவழியாக விமானம் புறப்பட்டு ஒரு நிலைக்கு வந்த பிறகு கேப்டன் இருக்கை பெல்ட்டை விடுவித்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது தான் தாமதம் பெரும்பாலனவர்கள் எழுந்து விட்டார்கள்.

என்னடா இது! ஏதும் போராட்டம் செய்யப்போகிறார்களா என்று கலவரத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நாங்கள் இருக்கும் பின் பகுதிக்கு வர ஆரம்பித்தார்கள்.

கழிவறை செல்ல

பின்னர் தான் தெரிந்தது அனைவரும் கழிவறை செல்ல எழுந்தார்கள் என்று.

எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை.

இவ்வளோ நேரம் கீழே இருந்த போது அனைத்து வசதிகளும் இருந்தும் போகாமல் இங்க வந்தவுடன் தான் வருமா!

சரி எதோ! வந்து ஒரு மணி நேரம் ஆகி விட்டது என்றால் கூடப் பரவாயில்லை, அதுவும் ஐந்தாறு பேரு என்றாலும் கூடப் பரவாயில்லை இப்படி ஒட்டு மொத்தமாக அத்தனை பேருக்குமா வரும்!

அனைவரும் வரிசையாக வழியை அடைத்து நின்று விட்டார்கள்.

மறுபடியும் இவர்கள் சத்தத்தால் நெருக்கடியால் இவன் கத்த ஆரம்பித்து விட்டான், என்ன சமாதானம் செய்தும் அழுகையை நிறுத்தவில்லை.

எனக்கு மண்டை காய்ந்து விட்டது… அம்மா, மனைவி, பின்னாடி இருந்தவர்கள் விளையாட்டு காட்டியும் அடங்கவில்லை.

பின்னர் கத்தி கத்தி சங்கிப்போய்க் களைப்பில் அப்படியே தூங்கி விட்டான். நானும் அப்பாடா! என்று சாய்ந்தேன்.

கொஞ்ச நேரத்தில் ஒருவர் தான் கொண்டு வந்து இருந்த லுங்கியை அங்கேயே மாற்ற நான் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டேன், மொத்தப்பயணமே நான்கு மணி நேரம் தான்.

பரிதாபப் பணிப்பெண்கள்

பணிப்பெண் அவரை ஒரு முறைப்புடன் பார்த்துச் செல்ல அவரை இவர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

பின்னர் இருவர் எழுந்து நின்று அரட்டையடிக்க அங்கே வந்த பணிப்பெண்.. சார்! இங்கே நிற்கக் கூடாது தயவு செய்து உட்காருங்க! என்று கூறியதும் இவங்க இரண்டு பேரும் கண்டுகொள்ளாமல் அவரை நக்கலடிக்கிறார்கள்.

காரணம் குருவிகள் வாரம் இருமுறை அல்லது மூன்று முறை கூட விமானத்தில் பயணம் செய்வார்கள் அதனால் இவர்களுக்கு என்னவோ விமானமே தங்களுடையது என்று நினைப்பு எனவே, பணிப்பெண்களை மதிப்பதே கிடையாது.

இவர்கள் முக்கிய வருமானக் காரணியாக இருப்பதால் இவர்களும் ரொம்பக் கட்டுப்பாட்டைக் காட்ட முடிவதில்லை.

ஒருவர் சரக்கைக் கேட்டுக்கொண்டே இருக்க  பொறுமை இழந்த பணிப்பெண்..

சார்! உங்கள் அளவை தாண்டி விட்டது இதற்கு மேல் நீங்கள் குடித்தால் கட்டுப்பாட்டை இழந்து விடுவீர்கள்‘ என்று கூறியதை ஏற்காமல் சண்டைபோட்டுக்கொண்டு இருந்தார்.

எனக்கு எப்படா விமானம் தரை இறங்கும் என்று ஆகி விட்டது.

திகில்

காலை உணவு அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் ஒருவர் மாறி ஒருவர் அதிர அதிர நடந்து கொண்டே இருக்கிறார்கள்.

இவர்கள் விமானத்தைக் கவுக்காமல் விடமாட்டார்கள் போல இருக்கே! என்று பீதியில் உட்கார்ந்து இருந்தேன்.

இதில் பையன் வேறு எழுந்து விட்டால் என்ன செய்வது என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தேன்.

கொஞ்சம் அப்படியே அனைவரும் அமைதியாகி உட்கார ஆரம்பித்து இருந்தார்கள்.

நான் பையனைப் பார்த்தவாறே… எழுந்து விடுவானோ! என்று தூங்காமல் யாரும் இடித்து விடாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தேன்.

குருவிகளுக்கிடையே சண்டை

திடீரென்று காச்மூச்சென்று சத்தம், என்ன விஷயம் என்று தலையை உயர்த்திப் பார்த்தால் இரு குருவிகளுக்கிடையே சண்டை வந்து விட்டது.

அடித்துக்கொள்ளாத குறையாகச் சத்தம் போடுகிறார்கள் அவரவர் குழு சார்பாக ஒருவருக்கொருவர் வாதாட எனக்கு வயிற்றைக் கலக்காத குறை தான்.

அடப்பாவிகளா! இப்படிச் சண்டை போட்டு நம்ம ஊரைப் பார்க்கறதுக்கு இல்லாமல் இப்படியே மேலே கூட்டிட்டு போய்டுவாங்க போல இருக்கே! என்று பதட்டத்தில் இருந்தேன்.

உடன் இவன் எழுந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு.

பிறகு வழக்கம் போலப் பணிப்பெண்கள் தங்கள் விதியை நொந்தவாறு வந்து சமாதானப்படுத்தி இருவரையும் பிரித்தார்கள்.

இருவரும் முனகிக் கொண்டே உட்கார, எங்களைப் போல இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

பணிப்பெண்கள் நிலை ரொம்பப் பரிதாபம் தான்.

தரையிறங்கல்

விமானம் தரையிறங்க கொஞ்ச நேரம் இருக்கும் போது இவன் எழுந்து விட்டான், நல்லவேளை நன்றாகத் தூங்கி விட்டதால் பிரச்சனை எதுவும் செய்யவில்லை.

விமானம் ஓடுதளத்தில் சென்று கொண்டு இருக்கும் போதே எழுந்து விடுவார்கள்.

பணிப்பெண்கள் அமரக் கூறிக்கொண்டே இருப்பார்கள் ம்ஹீம்! யாரும் காதிலே வாங்க மாட்டார்கள், எல்லோரும் எழுந்து பெட்டிய எடுத்துக்கொண்டு தயாராக நிற்பார்கள்.

குருவிகள் அனைவரும் இப்படி நடப்பதில்லை, ஒருசிலர் வந்தவுடன் எதுவும் சாப்பிடக்கூட மாட்டார்கள் உடனே தூங்கி விடுவார்கள், அருகில் இருப்பவருக்குச் சிறு சிரமத்தைக் கூடத் தரமாட்டார்கள்.

விழித்து இருந்தாலும் அமைதியாகப் படம் ஏதாவது பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

குருவிகள் மட்டுமல்ல நம்மைப் போலச் சாதாரணப் பொதுமக்களும் இவர்களுக்குச் சற்றும் சளைக்காமல் அடாவடித்தனம் செய்வார்கள்.

அதைப் போல நபர் நம் அருகில் என்றால் சரி! இன்று நமக்கு ராசி பலன் சரி இல்லை என்று நினைத்து அமைதியாக  இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

நம்மவர்கள் விமானங்களில் நடந்து கொள்வதைப் பார்த்தால் அவ்வளவு ஆத்திரமாக வரும். இதனாலே விமானப் பயணம் என்றாலே எனக்குக் கலவரம் தான்.

தொடர்புடைய கட்டுரைகள்

முதல் விமானப் பயண அனுபவம்

முதல் வெளிநாட்டு விமானப் பயணம் I

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

46 COMMENTS

  1. உங்களுக்குமா இந்த அனுபவம் கிட்டியது…எனக்கும் தான். ஒஸ்லோவிலிருந்து பாங்கொங் வழியாக சிங்கை திரும்பும் போது பாங்கொங்கில் ஏறியது கன்னட ஆன்மீக குருவிகள்….கிட்டத்தட்ட 50 பேர்….நீங்கள் விபரித்த அதே அட்டகாசங்கள் கிட்டத்தட்ட நடந்தன..நேரம் இருந்தால் பதிவாக போடுகிறேன்….சுவாரசியமான சம்பவங்கள் சிலவும் நடந்தன…..:-)))

  2. ம்ம்ம் என்ன கிரி ஒரே பேசாரா போயிட்டதா? என்ன பன்னுரது?????

  3. இதெல்லாம் இந்தியா & ஆசிய நாடுகளுக்கிடையில்தான் ரொம்பவே நடக்குது.

    ஒரு மூணரை, நாலு மணி நேரத்துக்குள்ளே இவுங்க அட்டகாசம் இருக்கே(-:

    சிலசமயம் நாங்க நியூஸியில் இருந்து பத்தரைமணி நேரம் பயணிச்சு அதே நாள் சென்னைக்குக் கனெக்டிங் ஃப்ளைட் எடுக்கும்போது நொந்து நூடுல்ஸ் ஆகிருவோம்.

    குடிமகன்கள் பாய்ச்சல்தான் அதிகம்.

    ஒருமுறை சென்னையில் இருந்து சிங்கை வந்துக்கிட்டு இருக்கோம். அதிலே ஒரு மாணவர்கள் கூட்டம் சீனர்கள். ஒரு நாப்பது அம்பது பேர் இருக்கும். அதுலே ஒருவருக்கு பொறந்தநாளாம். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஆரம்பிச்சு விடாம 'ஹேப்பி பர்த்டே டூ யூ' பாடிப் பாடி ரெண்டு மணிநேரத்துக்கு நம்மைச் சாகடிச்சுட்டாங்க.

    சத்தம் ஓய்ஞ்சது, அப்பாடான்னு இருப்போம். ஒன்னு ஆரம்பிக்கும். உடனே எல்லோரும் சேர்ந்துக்குவாங்க. போதுண்டா சாமி.

    இன்னொருமுறை ஏதோ சாமியார் ஆதரவாளர் கூட்டம். ஆன்னா ஊன்னா கோவிந்தா, நாராயணான்னு கூச்சல். பறக்கும்போது கத்துனா அங்கே சொர்க்கத்துலே நல்லா கேக்குமுன்னு நினைப்பு.

    டேக் ஆஃப், லேண்டிங் எல்லாம் ஒரே கோவிந்தா!!!!!!

  4. //கொஞ்ச நேரத்தில் ஒருவர் தான் கொண்டு வந்து இருந்த லுங்கியை!!!!!! //

    நானும் இந்தக்கொடுமையை ரெண்டு மூணு தரம் பாத்திருக்கேன். என்ன கொடுமைன்னா ஓய்வறையில் கூட போய் மாத்த மாட்டாங்க. அப்படி வழியில் நின்னுதான். நாம இருக்கறதோ ஃபிளைட்லன்னு கொஞ்சமும் அவங்களுக்கு வராது. 🙂

  5. விமானபயணம் நிஜமாவே எரிச்சல் தான், வேற வழியில்லாததால் அனுசரிக்க வேண்டியுள்ளது..:(

  6. பட்ட சங்கடங்களை சுவாரஸ்யமாக சிரிக்க சிரிக்க சொல்லியிருந்தாலும் வருத்தமே மேலிடுகிறது.

    //பறக்கும்போது கத்துனா அங்கே சொர்க்கத்துலே நல்லா கேக்குமுன்னு நினைப்பு.//

    துளசி மேடம்… :)))!

  7. // ’டொன்’ லீ said…
    உங்களுக்குமா இந்த அனுபவம் கிட்டியது…எனக்கும் தான். ஒஸ்லோவிலிருந்து பாங்கொங் வழியாக சிங்கை திரும்பும் போது பாங்கொங்கில் ஏறியது கன்னட ஆன்மீக குருவிகள்….//

    :-))) ஆன்மீக குருவிகள்

    //உங்களுக்குமா இந்த அனுபவம் கிட்டியது…எனக்கும் தான். ஒஸ்லோவிலிருந்து பாங்கொங் வழியாக சிங்கை திரும்பும் போது பாங்கொங்கில் ஏறியது கன்னட ஆன்மீக குருவிகள்….//

    எழுதங்க! அப்படி என்ன தான் செய்தாங்கன்னு பார்ப்போம்!

    ======================================================================

    // ஆ.ஞானசேகரன் said…

    ம்ம்ம் என்ன கிரி ஒரே பேசாரா போயிட்டதா?//

    கொலைவெறி ஆகி விட்டது..கிர்ர்ர்ர்

    ======================================================================

    கிஷோர் வருகைக்கு நன்றி 🙂

    ======================================================================

    //துளசி கோபால் said…

    இதெல்லாம் இந்தியா & ஆசிய நாடுகளுக்கிடையில்தான் ரொம்பவே நடக்குது//

    ஆமாம் மேடம்

    //குடிமகன்கள் பாய்ச்சல்தான் அதிகம்//

    சத்தியமா இவங்க இம்சை தாங்க முடியலை

    //இன்னொருமுறை ஏதோ சாமியார் ஆதரவாளர் கூட்டம். ஆன்னா ஊன்னா கோவிந்தா, நாராயணான்னு கூச்சல். பறக்கும்போது கத்துனா அங்கே சொர்க்கத்துலே நல்லா கேக்குமுன்னு நினைப்பு.//

    ஹா ஹா ஹா

    //டேக் ஆஃப், லேண்டிங் எல்லாம் ஒரே கோவிந்தா!!!!//

    போகும் போதே ரிசல்ட்ட சொல்லிடுவாங்க போல இருக்கே!

    ======================================================================

    சின்ன அம்மணி அப்துல்லா பேசாம இந்த மாதிரி செய்தால் வழியில! இறக்கி விட்டுவிடுவோம்னு சொல்லிட வேண்டியது தான் ஹி ஹி ஹி

    ======================================================================

    // mayil said…

    விமானபயணம் நிஜமாவே எரிச்சல் தான், வேற வழியில்லாததால் அனுசரிக்க வேண்டியுள்ளது..:(//

    அதே தாங்க எனக்கும்! 🙁

    ======================================================================

    //ராமலக்ஷ்மி said…

    பட்ட சங்கடங்களை சுவாரஸ்யமாக சிரிக்க சிரிக்க சொல்லியிருந்தாலும் வருத்தமே மேலிடுகிறது. //

    :-))) இன்னும் பல ரணகளங்கள் உண்டு..இந்த இடுகையே பெரியதாகி விட்டதால் நிறுத்திக்கொண்டேன்

  8. ஒரு தடவைதான் விமானத்தில் பயணித்துள்ளேன்,அதுவும் உள்ளூரில்
    வெறும் ஒருமணிநேரப்பயணமே, ஆனால் விமானம் தரையிறங்குமட்டும் எங்கே விமானம் விழுந்துவிடுமோ என்றபயத்தில் வேறெதனையும் அவதானிக்க முடியவில்லை ,எனக்கு விமானபயணம் என்றால் அம்புட்டு பயம்….

  9. //காலை உணவு அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் ஒருவர் மாறி ஒருவர் அதிர அதிர நடந்து கொண்டே இருக்கிறார்கள், எனக்கு பயமே வந்து விட்டது இவர்கள் விமானத்தை கவுக்காமல் விடமாட்டார்கள் போல இருக்கே//

    LOLZ கலக்கல் 🙂

  10. //கொஞ்ச நேரத்தில் ஒருவர் தான் கொண்டு வந்து இருந்த லுங்கியை!!!!!! அங்கேயே மாற்ற //

    அண்ணே சத்தியமா இதே காட்சி நான் சிங்கை-சென்னை வந்தப்பயும் பார்த்தேன்.

    அப்புறம் ஒருத்தர் டூட்டிஃபிரீ சரக்கை எடுத்து நின்று கொண்டே ஸ்டைலாக குடித்துக்கொண்டு அடுத்த சீட்காரரிடம் பேசிக்கிட்டே வந்தார் கிட்ட்டத்தட்ட 2 மணி நேரமா.

  11. புது டெம்ப்லேட் மிக அழகு. அனுபவம் அதைவிட அழகு:))

  12. //பெரிய சர்வர் பிரச்னையை கூட பொறுமையாக பார்த்து விடலாம் ஒரு குழந்தை தூக்கத்தில் அழுதால் சமாதானப்படுத்துவது என்பது இயலாத ஒன்று, இதை குழந்தையை பராமரிப்பவர்களாலே உணர முடியும்.//
    unmai thaan basu…

  13. //பெரிய சர்வர் பிரச்னையை கூட பொறுமையாக பார்த்து விடலாம் ஒரு குழந்தை தூக்கத்தில் அழுதால் சமாதானப்படுத்துவது என்பது இயலாத ஒன்று//

    நூறு சதவீதம் உண்மை கிரி.

    ஐயோ! எனக்கு சில சமயம் அழுகையே வந்து விடும் 🙁

    எங்க அம்மாவை கேட்டால், நான் உன்னையே வச்சு பாத்துக்க வில்லையா?

    இது என்ன பாவம் ரொம்ப நல்ல குழந்தைன்னு சொல்லி இன்னும் கூட்டி விடுறாங்க!

  14. அண்ணே! அடுத்து எப்ப ஊருக்கு போறீங்கன்னு சொல்லுங்க…குருவி கூட்டமா ஏறுற விமானத்துல உங்களுக்கு டிக்கெட் போட்டுருவோம். 🙂

    இவ்வளவு பெரிய கூட்டம் அடாவடித்தனம் பண்ணும்போது நம்ம பண்ணக்கூடாதுன்னு உங்க பையன் சமைத்த இருந்துட்டான் போல…:-))

  15. // ஒரே இடத்தில் வெறும் மேகத்தை பார்த்துக்கொண்டு //

    நானெல்லாம் இந்த மாதிரித் தான்….
    🙂

  16. படு பேஜாரா ஆயிடுச்சா. இந்த குருவிகள் அட்டகாசம் பண்றது உண்மைதான். எனக்கும் அனுபவம் உண்டு. இதாச்சும் பராவயில்ல ஒரு தடவை ஒரு சேட்டன் ஒருத்தரு தண்ணியிடிச்சுட்டு உலகத்தல என்ன கெட்டவார்த்தையெல்லாம் உண்டுமா அதையெல்லாம் விமானம் ஏறியதிலிருந்து இறங்கியது வரை எல்லாருக்கும் கேட்கம்படி சொலிட்டே வந்தாரு…நாறிடுச்சு… இதையே தாங்கிட்டோம்..

  17. //எப்பூடி … said…
    எனக்கு விமானபயணம் என்றால் அம்புட்டு பயம்//

    எனக்கு விமானத்தில் வரும் ஒரு சிலரை பார்த்து பயம் 🙂

    ======================================================================

    மகா மற்றும் சிங்கக்குட்டி என்னை போலவே "பலத்த" அனுபவம் இருக்கும் போல 😉

    ======================================================================

    பாலா சார் டெம்ப்ளேட் அதே தான்..மேலே படம் மட்டும் மாற்றி இருக்கிறேன், கூகிள் கனக்ட் மாற்றி அமைத்துள்ளேன்

    ======================================================================

    // ரோஸ்விக் said…

    இவ்வளவு பெரிய கூட்டம் அடாவடித்தனம் பண்ணும்போது நம்ம பண்ணக்கூடாதுன்னு உங்க பையன் சமைத்த இருந்துட்டான் போல…:-))//

    ஹி ஹி ஹி நல்ல வேளை தூங்கிட்டான் ..இல்லைனா… அதோ கதி தான்.

    ======================================================================

    // வாசகன் said…

    விமானப்பயணம் நமக்க சாதாரணமாக நிகழும் சூழல்கள் வரும் போது இவ்வித சலிப்புகள நிகழத்தான் செய்யும்;இதே விமானப்பயணம் கிடைத்தற்கரிய ஒன்று என்ற நிலையிலிருக்கும் மனிதர்களின் சூழலில் எண்ணிப் பாருங்கள்…வித்தியாசம் புரியும்.//

    அதைத்தான் முதலிலேயே கூறி இருக்கிறேனே வாசகன். அதுவுமில்லாமல் என்னோட முதல் விமான பயண அனுபவத்தை படித்து பாருங்கள், அதிலே நீங்கள் கூறியதை நானும் கூறி இருப்பேன். இந்த இடுகை தலைகணத்தால் எழுதப்பட்டதல்ல..ஒரு பகிர்வே!

    No Senthiments!

    ======================================================================

    வெயிலான் 🙂

    ======================================================================

    வாங்க ராஜ்… உங்கள் பதில் எதிர்பார்த்தது தான் 😉

  18. விமானப்பயணம் நமக்க சாதாரணமாக நிகழும் சூழல்கள் வரும் போது இவ்வித சலிப்புகள நிகழத்தான் செய்யும்;இதே விமானப்பயணம் கிடைத்தற்கரிய ஒன்று என்ற நிலையிலிருக்கும் மனிதர்களின் சூழலில் எண்ணிப் பாருங்கள்…வித்தியாசம் புரியும்.

  19. //விமானப்பயணம் நமக்க சாதாரணமாக நிகழும் சூழல்கள் வரும் போது இவ்வித சலிப்புகள நிகழத்தான் செய்யும்;இதே விமானப்பயணம் கிடைத்தற்கரிய ஒன்று என்ற நிலையிலிருக்கும் மனிதர்களின் சூழலில் எண்ணிப் பாருங்கள்…வித்தியாசம் புரியும்.//

    I 100 % Agree this Comment …..

  20. //புதிது என்பதால் தான் அதற்கு பிறகு இதெல்லாம் சகஜம் என்று உணர்ந்து கொண்டேன்//

    அண்ணே இது உங்க முதல் வெளி நாட்டு பயணக்கட்டுரையில எழுதி இருந்தீங்க :))))))))))

  21. //நான் வேலை முடிந்து சென்றதால் கொஞ்சம் தாமதமாகி விட்டது அதனால் இருக்கை முன் புறம் கிடைக்காமல் பின்ன்ன்னாடி கிடைத்து இருந்தது//

    அப்போ டிக்கட்டில சீட் நம்பர் எல்லாம் இருக்காதா?

  22. ராஜ் Cool nothing serious! 🙂 என்னோட அடுத்த பதிவு உங்களுக்கு ரொம்ப "பிடித்த" பதிவு :-)))

    //அப்போ டிக்கட்டில சீட் நம்பர் எல்லாம் இருக்காதா?//

    இருக்கும் கண்டிப்பா! முன்னாடி அமர்ந்தால் குழந்தைகளை படுக்க வைக்க என்று ஒரு தொட்டில் மாதிரி கொடுப்பார்கள் இட வசதியும் அதிகம் இருக்கும் , நெரிசல் கூட்டம் குறைவாக இருக்கும் (கழிவறை பின் பகுதியில் இருப்பதால்)

    ======================================================================

    // அத்திரி said…
    ஆஹா இதுக்கு நம்ம அரசு விரைவு போக்குவரத்து கழகம் எவ்வளவோ பரவாயில்லை போல//

    இது கொஞ்சம் ஹைடெக்கான அரசு போக்குவரத்து கழகம் 😉

    ======================================================================

    // கிருபாநந்தினி said…

    கிரி! உங்க பதிவைப் படிச்சதும் எனக்கு கிரிகிரியாயிடுச்சு! பிளேன்ல போகணும்கிற ஆசையே போயிடுச்சு, போங்க!//

    நந்தினி "ஞாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" 🙂

  23. அடுத்த முறை online check-in செய்து விடுங்கள். முன்புறம் உள்ள இருக்கை கிடைக்கும். ஆனால் “அவசரம்” என்றால் queவில் நிற்க வேண்டும் ;))

  24. அடுத்த முறை online check-in செய்து விடுங்கள். முன்புறம் உள்ள இருக்கை கிடைக்கும். ஆனால் “அவசரம்” என்றால் queவில் நிற்க வேண்டும் ;))

  25. தமிழ்-ல எழுதுறேன் இன்னு சொல்லிபுட்டு அது இன்னா டரியல் , டெர்ரர் இன்னு….

    ஒழுங்கா எனக்கு டரியல் – க்கு அர்த்தம் சொல்லிட்டு போங்க .

    நல்லா எழுதுறிங்க கிரி, தொடருங்க…..

  26. // நாடோடி இலக்கியன் said…
    சிங்கை – சென்னை பயணத்தில் எனக்கும் குருவிகளிடம் இந்த அனுபவம் இருக்கிறது.//

    கண்டிப்பாக அனைவருக்கும் இருக்கும் 🙂

    ======================================================================

    // Senthilkumar Manavalan said…

    ஒழுங்கா எனக்கு டரியல் – க்கு அர்த்தம் சொல்லிட்டு போங்க//

    க க போ! :-))))

    //நல்லா எழுதுறிங்க கிரி, தொடருங்க.//

    நன்றி செந்தில்..நீ தொடர்ந்து படிக்கிறாய் என்பதே எனக்கு ஆச்சர்யம்!

    ======================================================================

    // Vijay said…

    அடுத்த முறை online check-in செய்து விடுங்கள். முன்புறம் உள்ள இருக்கை கிடைக்கும். ஆனால் “அவசரம்” என்றால் queவில் நிற்க வேண்டும் //

    நான் செய்து இருப்பேன் அதில் ஒரு சிக்கல்.. நான் தனி பயணச்சீட்டு முன்பதிவு செய்தேன் (UP and Down), அதனால் எனக்கு மட்டும் ஆன்லைனில் செய்ய முடிந்தது மற்றவர்களுக்கு முடியலை 🙁

  27. என்னடா இது! ஏதும் போராட்டம் செய்யப்போகிறார்களா….

    கொஞ்ச நேரத்தில் ஒருவர் தான் கொண்டு வந்து இருந்த லுங்கியை!!!!!! அங்கேயே மாற்ற ..நான் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டேன்,

    ஒருவர் மாறி ஒருவர் அதிர அதிர நடந்து கொண்டே இருக்கிறார்கள், எனக்கு பயமே வந்து விட்டது இவர்கள் விமானத்தை கவுக்காமல் விடமாட்டார்கள் போல இருக்கே!

    super இங்க கிரி…

    இந்த காமெடி scene பார்கனுமுனா கண்டிப்பா நம்ம ஆளுக அந்த flight la இருக்கணும்….

    இன்னும் Business class la போனாம்ன நம்ம அரசியில்வதிக காமெடி யும் பார்க்கலாம் போல…

    ஆனா நான் போற எந்த travel ah இருந்தாலும் இந்த மாதிரி நெறைய காமெடி பீஸ் என்னை tension பீஸ் அஹ் மத்திருவாக….

    இதுகே யோகா பண்ணுனம் போல

  28. //Sadhasivam said…
    இந்த காமெடி scene பார்கனுமுனா கண்டிப்பா நம்ம ஆளுக அந்த flight la இருக்கணும்.//

    :-)))

    //இன்னும் Business class la போனாம்ன நம்ம அரசியில்வதிக காமெடி யும் பார்க்கலாம் போல.//

    எனக்கு இன்னும் இந்த "அனுபவம்" கிடைக்கல 😉

    //ஆனா நான் போற எந்த travel ah இருந்தாலும் இந்த மாதிரி நெறைய காமெடி பீஸ் என்னை tension பீஸ் அஹ் மத்திருவாக….//

    ஹா ஹா பொறுமையாக இருப்பவன் கூட பொறுமை இழந்துடுவான் :-))

    ======================================================================

    புன்னகை மன்னன் ஜெகதீசன் வருகைக்கு நன்றி 😉

  29. ரொம்பக் கொதிப்புல இருக்கீங்க போலிருக்கு..!

    இப்படி பிரச்சினை பண்றவங்களை பாதியிலேயே கதவைத் திறந்து வெளில தள்ளிட முடியாதா..?

    ஒரு நாள் செஞ்சிருண்ணே..! வலைப்பதிவர்கள் சார்பா பாராட்டு விழா ஏற்பாடு பண்றேன்..!

  30. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said…
    இப்படி பிரச்சினை பண்றவங்களை பாதியிலேயே கதவைத் திறந்து வெளில தள்ளிட முடியாதா..? //

    தண்ணிய போட்டு சலம்பல் பண்ணுறவங்கள..பறக்கும் போதே சிங்கப்பூர் இறங்குரவங்க எல்லாம் இறங்குங்க ஸ்டாப்பிங் வந்தாச்சு என்றால் அப்படியே மப்புல இறங்கி போனாலும் போய்டுவாங்க! :-))

  31. //விமானப்பயணம் நமக்கு சாதாரணமாக நிகழும் சூழல்கள் வரும் போது இவ்வித சலிப்புகள நிகழத்தான் செய்யும்; இதே விமானப்பயணம் கிடைத்தற்கரிய ஒன்று என்ற நிலையிலிருக்கும் மனிதர்களின் சூழலில் எண்ணிப் பாருங்கள்… வித்தியாசம் புரியும்!//

    மிகவும் சரியாகச் சொன்னீர்கள் வாசகரே!

    போதுமான கல்வியறிவைப்பெறாத (தற்கு காரணம் யாரென்று கண்டுபிடித்து, அவர்களிடம் சென்று முறையிடலாமே!) பாமரர்கள் செய்கின்ற வெகுளித்தனமான செய்கைகளை சகித்துக்கொள்ளவியலாத நாமெல்லோரும், ஒன்று பிஸினெஸ்/ஃபர்ஸ்ட் கிளாஸில் டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்ள வேண்டும்; அல்லது இப்படி குறைபட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்!

    அதைவிடுத்து, அவர்களுடைய செய்கைகளைக்கண்டு, இப்படி பரிகசிப்பது சரியெனப்படவில்லை!

    அடுத்தடுத்த பதிவுகளில் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்த்துக்கொள்வீர்களென நம்புகிறேன்.

  32. என்னது வெகுளித்தனமான செய்கையா! ஒரு பெண்ணை இடிப்பதும் அவரை அனைவர் முன்பும் காலாய்ப்பதும் வெகுளித்தனமா!

    படித்தவன் எல்லாம் பொறுக்கி அல்ல படிக்காதவன் எல்லாம் வெகுளியும் அல்ல. ஏழை என்றாலே அவன் நல்லவன் எந்த தவறும் செய்யாதவன் என்ற வழக்கமான வசனத்தை பேசி கொண்டு இருக்காதீர்கள்.

    அநாகரீகமாக நடப்பவர்கள் எதிலும் உண்டு. கண்டிப்பாக அநாகரீகமாக நடந்தால் இதைப்போல கூறத்தான் செய்வேன் என்னை நான் மாற்றிக்கொள்ள முடியாது. என்னால் முதல் வகுப்பில் எல்லாம் செல்ல முடியாது.. நான் செல்லும் வகுப்பில் இதைபோல நடந்தால் கூறத்தான் செய்வேன்.

  33. அண்ணே எனக்குதான் இப்படியெல்லாம் நடக்குதோன்னு நினைச்சேன் உங்களுக்குமா.
    2 வருஷம் கழிச்சு ஊருக்கு போகும்போது மனிதர்கள் மாறியிருப்பார்கள்ன்னு நினைச்சா அந்த எண்ணத்தை எர்போட்டிலேயே மாற்றிவிடுவார்கள் நம் நாட்டினர். அதவிட உள்ளர லக்கேஜ் வக்கிர கொடுமை இருக்கே.. என்ன ஒரே மொழி பேசுறாங்கன்னு அனுசரிச்சு போக வேண்டியதாயிருக்கு. அதே மாதிரி பிளைட் டேக் ஆப் ஆகும்போது தான் ஜன்னல ஒட்டி உட்கார்ந்து இருக்குறவன் எழுந்திரிச்சி மேல லக்கேஜுல எதையாவது தேடுவான்.
    அடுத்த முறை பயணிக்கும்போது நம் நாட்டினருக்கு சேவை செய்யும் அந்த பணிப்பெண்களின் முக பாவனையை கவனிக்கவும்.
    அப்புறம் பிளைட் நிற்கும் முன்னர் எழுந்துவிடுவது இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் இதே கூத்துதான் (ஹாங்காங்கில் கிடையாது). இங்கவாவது லான்ட் ஆகும் போது ப்ளைட் நேரா போகும் சீனாவுல பாம்பு மாதிரியே போகும் (உட்டா அதே ஸ்பீடில் U டர்ன் கூட அடிப்பானுவோ).
    கடைசியா நீங்க சொன்னது உண்மை. நாகரீகம் படிப்பறிவினால் கற்று கொடுக்கப்படுவது அல்ல.

  34. “பெரிய சர்வர் பிரச்னையை கூட பொறுமையாக பார்த்து விடலாம் ஒரு குழந்தை தூக்கத்தில் அழுதால் சமாதானப்படுத்துவது என்பது இயலாத ஒன்று, இதை குழந்தையை பராமரிப்பவர்களாலே உணர முடியும்.”
    – அனுபவபூர்வமான உண்மை

  35. @ராஜ் எனக்கு இப்பெல்லாம் விமானம் என்றாலே கடுப்பு தான் வருது. அப்புறம் நம்ம பகுதியில் உள்ள பணிப்பெண்கள் இருப்பது Punishment period னு சொல்றாங்க. அதாவது அவர்கள் மீது பிரச்சனை என்றால் நம்ம பகுதி விமான சேவைக்கு மாற்றி விட்டு விடுவார்களாம்.

    @செந்தில் ரைட்டு 🙂

  36. சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறக்கையில் குடித்துவிட்டு கும்மாளம் செய்த 3 பயணிகள் செய்யப்பட்டனர்.

    232 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு மது வழங்கப்படும். விமானத்தில் இருந்த சென்னையைச் சேர்ந்த தினகரன் (30), திருவாரூரைச் சேர்ந்த அந்தோணி மெர்வின் (32), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராம்பாபு (28) ஆகிய 3 பேர் 2 முறை மது அருந்திவிட்டு மீண்டும் மது கொடுக்குமாறு விமானப் பணிப் பெண்களிடம் கேட்டுள்ளனர்.

    குறிப்பிட்ட அளவு தான் மது அருந்த வேண்டும். நீங்கள் ஏற்கனவே அதிகம் குடித்துள்ளீர்கள் என்று கூறி பணிப் பெண்கள் கூடுதலாக மது கொடுக்க மறுத்துவிட்டனர்.

    அவ்வளவு தான் போதை ஆசாமிகள் 3 பேரும் பணிப் பெண்களுடன் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதிலும் ஒரு பணிப் பெண்ணை தாக்கவும் முயன்றனர். பயந்து போன அவர்கள் கேப்டனிடம் தெரிவித்தனர். விசாரிக்க வந்த அவரிடமும் இந்த 3 பேர் தகாராறு செய்தனர்.

    இவர்களிடம் பேசி பயனில்லை என்று தீர்மானித்த கேப்டன் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, விமானம் தரையிறங்கியவுடன் அவர்களை கைது செய்ய ஏற்பாடு செய்தார்.

    விமானத்தை தரையிறக்கும் முன் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். போதை ஆசாமிகள் 3 பேரும் சீட் பெல்டை மாட்டாமல் எழுந்து நின்று ஆட்டம் போடத் துவங்கிவிட்டனர். இதனால் விமானம் தரையிங்க முடியாமல் 15 நிமிடம் வானில் வட்டமிட வேண்டியதாகிவிட்டது.

    இவர்கள் ரகளையைப் பார்த்து ஆத்திரம் அடைந்த மற்ற பயணிகள் 3 பேரையும் வலுக்கட்டாயமாக சீட்டில் அமர வைத்து சீட் பெல்டை மாற்றினர். அதன் பிறகு விமானம் தரையிறங்கியது. இந்த ரகளையால் 10. 25 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் 10.40 மணிக்கு தரையிறங்கியது.

    விமானத்தின் கதவு திறக்கப்பட்டவுடன் ஏர் இந்தியா நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள் வந்து போதை பயணிகள் 3 பேரையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை முடிந்த பிறகு அவர்கள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விமான நிலைய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    ======================

    செவத்தப்பா இவர்களா வெகுளிகள்… இதுல என்னை இதைப்போல எழுதாம தவிர்க்க சொல்கிறீகள்..

  37. தங்களுடைய தகவலுக்கு நன்றி நண்பரே! தங்களுடைய குறை/நிறைகளை எங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள் கிரி… மேலே தந்துள்ள தட்ஸ்தமிழ் செய்தியை வாசிக்கும்போது, இதுபோன்ற குடிமகன்களுக்கு போதிய அறிவுரைகளை வழங்கி விமானத்தில் ஏற்றிச்செல்ல வேண்டியிருக்கும் போலிருக்கிறது… மது உள்ளே சென்றதும் “வெகுளிகள்” தன் நிலை மறந்து மெய்நிலை அடைவதற்கு பதிலாக, வேற ஏதோ வேற்றுகிரக நிலையை அடைந்துவிட்டதால்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்வதாக அதிகாரப்பூர்வ செய்திகள் சொல்கின்றன… 🙂 முதலில் நான் சொன்ன கருத்து தங்களை வருத்தியிருந்தால், அதற்காக மன்னித்தருள வேண்டுகிறேன். நன்றி!

  38. செவத்தப்பா எனக்கு வருத்தம் எதுவும் இல்லை மன்னிக்கும் அளவு நீங்களும் எதுவும் கேட்டு விடவில்லை நானும் அந்த அளவுக்கு உயர்ந்தவனும் இல்லை எனவே பெரிய வார்த்தைகள் வேண்டாம்.. நான் ஒவ்வொரு முறையும் செல்லும் போதும் அனுபவிக்கும் கொடுமைகள் இவை. நான் எழுதும் போது எதையும் மிகைப்படுத்தி எழுத மாட்டேன் அதே போல எனக்கு ஒருவனுக்கு நடந்ததை வைத்து ஒட்டுமொத்தமாகவும் கூற மாட்டேன். பல முறை இவர்கள் கொடுமையை அனுபவித்து பலரின் அனுபவங்களை வைத்து நொந்து போய் எழுதியவையே மேற்க்கூறியவை.

    பணிப்பெண்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு மிகக்கொடுமை. இதை நாம் வெகுளி என்று கூறி இதைப்போல செயல்களை ஆதரித்து விடக்கூடாது என்பதே என் கருத்து. இதைப்போல செய்பவர்கள் இவர்கள் மட்டுமல்ல நன்கு படித்தவனும் நாகரீகமாக பெரிய பதவியில் இருப்பவர்களும் கூட இதைப்போல கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள். இதைப்போல செயல்களில் பணக்காரன் ஏழை வெகுளி என்ற எந்த வித்யாசமும் இல்லை.

    தவறு யார் செய்தாலும் நாம் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர அவர் ஏழை வெகுளி என்பதற்காக அவர்கள் செயலை நாம் நியாயப்படுத்த முயல்வது நாமே அவர்களை கெடுப்பது போலாகும்.

    தட்ஸ்தமிழின் இந்தச்செய்தியில் கூட இவர்கள் செயலை கொஞ்சம் மிகைபடுத்தி கூறி இருக்கலாம் ஆனால் இதைப்போல கண்டிப்பாக நடந்து இருக்கும்.

    எனக்கு இந்த செய்தியை படித்தவுடன் உங்கள் நினைவு தான் வந்தது அதனால் இதை இங்கே குறிப்பிட்டேன். மற்றபடி என் எழுத்து மீது வரும் விமர்சனங்களை என்றும் வரவேற்கிறேன். நீங்கள் என் எழுத்துக்களில் தவறு கண்டால் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள் ஏற்புடையதாக இருந்தால் நிச்சயம் மாற்றிக்கொள்கிறேன்.

    நன்றி

  39. எனது முதல் வெளிநாட்டு பயணம் 2007 நவம்பர் அது. ஏர் இண்டியா விமானம் காலையில் 10 மணிக்கு கிளம்பியதும் ஆரம்பித்து விட்டார்கள் நம் குருவிகள். ஒல்லியான தோற்றம் கொண்ட ஒருவருக்கு முதல் அனுபவம் போல் இருக்குது, அவர் அளவுக்கு அதிகமாய் குடித்து விட்டு விமான பணிப்பெண்களிடம் மீண்டும் மீண்டும் சரக்கு கேட்டு சண்டை போட்டு வாங்கி வாங்கி குடித்த படி வந்தவர் டாய்லெட்டுக்கு போக வரிசையில் நின்று கொண்டிருந்தவர் சிறுநீரை கட்டு படுத்த முடியாமல்அப்படியே பேண்டோடு நின்ற வாக்கிலேயே கழித்து விட, அதிர்ச்சியில் உறைந்த நான் சீட்டை காலி செய்து விட்டு எழுந்து விட்டேன். பணிப்பெண் என்னை முன்புறத்தில் உள்ள சீட்டில் அமரும் படி செய்தார். அருகில் இருந்த பயணிகள் அனைவரையும் முன்புறத்தில் இருந்த இருக்கைகளுக்கு மாற்றபட்டார்கள். மூத்த பணிப்பெண் அவரை கடுமையாக கோபித்து “இறங்கியதுமே கம்ளெயிண்ட் பண்ணி திரும்பி அனுப்பி விடுறேன் இருங்க, எவ்வளவு சொல்லியும் நிருத்தாமல் குடிச்சிகிட்டே இருந்தீங்களே” என்றதும் அவர் பதறியபடியே கைகால்கள் உதர “சாரி மேடம் பிளீஸ் டயாபடிக் மேடம்” என்று கெஞ்சியது எனக்கு இன்னும் கோபத்தை தூண்டியது. டயாபடிக்காக இருந்தும் அவர் சிறிது கூட கட்டு பாடு இல்லாமல் அளவுக்கு அதிகமாய் குடித்தது எந்த விதத்தில் நியாயம். மற்ற நாட்டவர்களை பற்றி எனக்கு தெரியாது ஆனால் நம்மவர்கள் எதையும் கணிவாக சொன்னால் கேட்கும் திறனை இழ்ந்தவர்கள் என்பது என் கருத்து. மிரட்டும் தொனியில் சொன்னால்தான் பலிக்கும்.
    நான் பலமுறை வெளிநாடுகளில் விதிமுறைகளை மீறும் நம்மூர் காரர்களை பணிவாய் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றுள்ளேன். அதனால் பலமுறை அவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளேன். பொதுவாக தனியாக பயணம் செய்யும் போது இது போன்றவர்கள் நம் வழிகாட்டுதலை கேட்பதில் நாட்டம் காட்டுவார்கள் ஆனால் அதே நபர் நான்கைந்து பேர்களோடு கும்பலாய் பயணம் செய்யும் போது செய்யும் அட்டகாசங்கள் அதிகம். இவர்களின் மீது பலசமயங்களில் எனக்கு கோபத்தை விடவும் பரிதாப உணர்வே அதிகம் ஏற்படுகிறது இப்போது , ஒருவேளை இதற்கெல்லாம் காரணம் நாம் அதிகமாய் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருப்பது கூட இருக்கலாமோ என்று ஒரு கேள்வி எழுகிறது கிரி?

    ஆனால் சமீபத்தில் air asia வில் பயணம் செய்ய நேர்ந்தது. பட்ஜெட் ஏர்லைனராச்சே எப்படியிருக்குமோ என்று நினைத்த எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. மூன்றறை மணிநேர பயணம். விமானத்தில் மதுபாணம் இலவசமில்லை. எது வேண்டுமானாலும் பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். உணவுகளும் ஸ்நாக்குகளும் கூட. சப்தமேயில்லாமல் அமைதியான பயணம் பணியாளர்கள் மட்டுமே நடமாடி கொண்டும் பேசி கொண்டும் இருந்தனர். நான் முன்கூட்டியே உணவு ஆர்டர் பண்ணியிருந்தேன். அதும் நன்றாகவே இருந்தது.

    பி.கு – இதில் நான் நம்மவர்களை மட்டுமே குறிப்பிட்டு பேசியுள்ளேன் அதனால் மற்ற நாட்டவர்கள் அனைவரும் விதிமுறைகள் மீறாதவர்கள் மற்றவர்களுக்கு தொல்லை தராதவர்கள் என்பது என் கருத்தில்லை. விமானத்திலும் மற்ற இடங்களிலும் நாகரீகத்தின் முதல் எழுத்து கூட எது என்பது தெரியாமல் நடந்து கொள்ளும் பல நாட்டவர்களை கண்டிருக்கிறேன், குறிப்பாக ரஷ்யர்கள், பிரஞ்சு காரர்கள் ஏன் பல அமெரிக்கர்கள் கூட. நான் பேசுவது நம்மவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றி மட்டும்தான். காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.

  40. @ராமமூர்த்தி நீங்க ஒருமுறை என்னுடைய வீட்டு வாடகை பற்றிய பதிவுக்கு கமெண்ட் போட்டது போன்ற நினைவு.

    நீங்கள் இதில் கூறி இருக்கும் அனைத்தும் உண்மையே. தற்போதெல்லாம் விமானம் ஏறியதும் உடனே சென்னை வந்து விடக்கூடாதா! என்றே நினைப்பேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here