கூகுள் க்ரோம் உலவி (Chrome Browser) தொடர்ச்சியாகத் தனது பாதுகாப்பை மேம்படுத்திக்கொண்டே உள்ளது. சமீபத்தில் கூடுதல் (Enhanced Protection) பாதுகாப்பை அளித்துள்ளது. Image Credit
Enhanced Protection
க்ரோம் உலவி மூன்று வகைப் பாதுகாப்பு வசதிகளைப் பயனர்களுக்கு அளிக்கிறது. அவை முறையே
- Standard protection
- Enhanced protection
- No protection (not recommended)
Bydefault அனைவருக்கும் Standard protection தேர்வு செய்யப்பட்டு இருக்கும். இதை நாம் Enhanced protection என்று மாற்றிக்கொண்டால் கூடுதல் பாதுகாப்பை பெறலாம்.
Enhanced protection
- Faster, proactive protection against dangerous websites, downloads, and extensions. Warns you about password breaches. Requires browsing data to be sent to Google.
- Predicts and warns you about dangerous events before they happen
- Keeps you safe on Chrome and may be used to improve your security in other Google apps when you are signed in
- Improves security for you and everyone on the web
- Warns you if passwords are exposed in a data breach
- Sends URLs to Safe Browsing to check them. Also sends a small sample of pages, downloads, extension activity, and system information to help discover new threats. Temporarily links this data to your Google Account when you’re signed in, to protect you across Google apps.
இவ்வசதியை எப்படிப் பெறுவது?
க்ரோம் உலவியில் Settings –> Securities –> சென்று Enhanced Protection தேர்வு செய்ய வேண்டும். இதைச் சில நொடிகளில் மாற்றி விடலாம்.
பொதுவாக High Security மாற்றும் போது பயன்பாட்டில் சில நெருக்கடிகள் இருக்கும். அதாவது சில அமைப்புகள் செயல்படாது அல்லது அனுமதிக்காது.
பயன்படுத்திய வரையில் இது போல எந்த நெருக்கடிகளையும் தரவில்லை. எப்போதும் போலவே பயன்பாடு இருந்தது.
Requires browsing data to be sent to Google என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. இதைத் தவிர்க்க நினைப்பவர்கள் பழைய முறையிலேயே (Standard protection) தொடரலாம்.
ஆனால், என்ன செய்தாலும் நம் தகவல்கள் கூகுளிடம் உள்ளதால், இதைத் தவிர்ப்பதால் பெரிய பயனில்லை.
எனவே, நீங்களும் இம்மாற்றத்தை செயல்படுத்திக் கூடுதல் பாதுகாப்பை பெறலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்
Authenticator App அவசியம் ஏன்?
ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
இதுவரை அறியாத புதிய தகவல் இது கிரி, தெரியப்படுத்தியதற்கு நன்றி!!! கூகுள் தன்னுடைய சேவையை விரிவுப்படுத்தி கொண்டே போகிறது.. ஈமெயில் இல் ஆரம்பத்தில் எனக்கு யாகூ மேல் அதீத காதல்.. பின்பு மெல்ல, மெல்ல உங்கள் மூலம் கூகுள் சேவைகளை தெரிந்து கொண்டு தற்போது நானும் கூகுளின் காதலனாகி விட்டேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@Welcome to the Google club Yasin 🙂
கூகுள் இலவசமாக தரும் சேவைகளின் தரத்தின் அளவுக்கு கூட பணம் செலுத்தி பெறும் பல சேவைகளின் தரம் இருப்பதில்லை.
கிட்டத்தட்ட 20 வருடங்களாக கூகுள் பயன்படுத்துகிறேன். நாளுக்கு நாள் இதன் சேவை மன நிறைவை அளித்து வருகிறது.
குறிப்பாக ஜிமெயில், க்ரோம், ட்ரைவ், வழிகாட்டி, ஃபோட்டோஸ் போன்றவை என் விருப்ப சேவைகள்.
இவையில்லாமல் என் தின வாழ்க்கை முடிவதில்லை 🙂 .