கடைசீல பிரியாணி (2021) | காட்டுக்குள் ஒரு துரத்தல்

0
கடைசீல பிரியாணி

றிமுக இயக்குநரின் இயக்கத்தில் வெளியான படம் கடைசீல பிரியாணி.

கடைசீல பிரியாணி

தங்கள் அப்பாவைக் கொன்றவரை பழிவாங்க நினைக்கிறார்கள் அவருடைய மகன்கள் இருவர். Image Credit

பிரச்சனைகள் இல்லாத சாதாரண வாழ்க்கை வாழ நினைக்கும் இவர்கள் தம்பியும் இதில் விருப்பமில்லை என்றாலும் இணைய வேண்டியதாகிறது.

அப்பாவைக் கொன்றதற்கு பழி வாங்கினார்களா? இறுதியில் என்ன ஆனது என்பதே கடைசீல பிரியாணி.

வன்முறை மற்றும் டார்க் காமெடி கலந்த வித்யாசமான கதை. மலையாளப் படங்களில் வழக்கம் என்றாலும் தமிழுக்கு இது புதுசு.

பெரும்பான்மையான கதை கேரளாவில் நடைபெறுகிறது. அதோடு வசனங்களும் மலையாளம். எனவே, சப்டைட்டில் இல்லாமல் படத்தைப் பார்க்க முடியாது.

துவக்கத்தில் கதை புரியவில்லை, என்ன நடக்கிறது என்பதே குழப்பமாக இருந்தது ஆனால், அதன் பிறகு தெளிந்த நீரோடை போல நகர்கிறது.

நடிப்பு

அண்ணன்கள் இருவர், வில்லனாக வருபவர் மற்றும் சிலரின் நடிப்பு அபாரம். அதிலும் வில்லனாக வரும் மலையாள நடிகர் சைக்கோ நடிப்பில் பயமுறுத்துகிறார்.

இவர்களுடன் வரும் மலையாள காவலர்கள் நடிப்பும் மிக எதார்த்தமாக இருந்தது.

அவசரத்தில் செல்லும் இவர்கள் தம்பி லெமன் சோடா குடிக்க ஒரு பாட்டியிடம் கேட்டு அந்தப் பாட்டி செய்வதும், அதற்குத் தம்பியின் நிலையும் கலகலப்பு 🙂 .

என்ன தான் வில்லன் பெரியாளாக இருந்தாலும் வெளிப்படையாக கொலைக்கு காவலர்கள் உடந்தையாக இருப்பதெல்லாம் மிகைப்படுத்தலாக இருந்தது.

வாகனத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்தும் நம்ப முடியாததாக உள்ளது.

படத்தில் பெரியளவில் செலவே இல்லை. காடு, சில கடைகள், சாலை மற்றும் வீட்டிலேயே மொத்த படத்தையும் முடித்து விட்டார்கள்.

நட்புக்காக விஜய்சேதுபதி வந்து செல்கிறார்.

ஒளிப்பதிவு

படத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் ஒளிப்பதிவு. அட்டகாசமாக உள்ளது.

காடும், டிரோன் காட்சிகளும் படத்தை வித்யாசமாக காட்ட உதவி இருக்கிறது. குறிப்பாக டிரோன் காட்சிகள் வெளிநாட்டு படம் போல உள்ளது.

காட்டின் நடுவே உள்ளே வீட்டை டிரோன் வழியாக காணுவது தாறுமாறாக உள்ளது. வில்லன் வீட்டை எங்கே பிடித்தார்களோ!

4K தரத்தில் இல்லாததாலோ என்னவோ டிரோன் காட்சிகள் பளிச்சென்று இல்லை அதாவது காடானது இயல்பான பச்சை நிறத்தில் இல்லை.

பின்னணி இசையில் மிரட்ட ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் பயன்படுத்தவில்லை.

யார் பார்க்கலாம்?

அனைவருக்குமான படமல்ல.

ஒளிப்பதிவுக்காக திரையரங்கில் பார்க்கக்கூடிய படமென்றாலும், கதை OTT க்கானது.

கதாப்பாத்திரங்கள், காட்சிகள், இடங்கள் குறைவு. எனவே, வழக்கமான படமாக எதிர்பார்த்து பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும்.

வித்யாசமான கதை, டார்க் காமெடி, வன்முறை, அழகான ஒளிப்பதிவு ஆகியவற்றில் சம்மதம் என்றால், படத்தைப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

Poster Design, font முதற்கொண்டு வித்தியாசம் காட்டியுள்ளார்கள்.

குறைகள் இருந்தாலும் OTT யை மனதில் வைத்துக் குறைவான முதலீட்டில் இது போன்ற வித்யாசமான படங்களைத் தமிழுக்கு வரவேற்கிறேன்.

NETFLIX ல் காணலாம். பரிந்துரைத்தது சூர்யா.

Directed by Nishanth Kalidindi
Screenplay by Nishanth Kalidindi, Vivekanand Kalaivanan
Story by Nishanth Kalidindi
Produced by S. Sashikanth, Chakravarthy Ramachandra, Nishanth Kalidindi
Starring Vasanth Selvam, Dinesh Pandi, Vijay Ram
Cinematography Azeem Mohammed, Hestin Jose Joseph
Music by Judah Paul, Neil Sebastian
Distributed by YNOTX
Release date 19 November 2021
Running time 113 minutes
Country India
Language Tamil

தொடர்புடைய விமர்சனங்கள்

Joji (2021 மலையாளம்) | A Psychological Thriller

Kala (2021 மலையாளம்) | நாய்க்காக ஒரு பழிவாங்கல்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here