வனிதா வாயை மூடாத வரை பிரச்னைக்கு முடிவில்லை

3
Vanitha Vijaykumar வனிதா வாயை மூடாத வரை

டந்த சில வாரங்களாக வனிதா விஜயகுமார் திருமணத்தைப் பற்றிய காணொளி, மீம்கள் தான் சமூகத்தளங்களில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.

வனிதா திருமண நிகழ்ச்சி காணொளி அவராக வெளியிட்டதா அல்லது மற்றவர்களால் வெளியிடப்பட்டதா என்பது தெரியவில்லை. துவக்கத்தில் மீம்கள் நகைச்சுவையாகத் தோன்றினாலும் பின்னர் எல்லை மீறிச் சென்று கொண்டுள்ளது.

பொதுவில் வந்துவிட்ட எவருமே விமர்சிக்கப்படும் காலமாகி விட்டதாலும், வனிதாவும் இப்பிரச்சனையை சரியாகக் கையாள முடியாததாலும் அல்லது தெரியாததாலும் குடும்ப விஷயம் சந்தி சிரிக்கும் நிலையாகி விட்டது.

இவ்வளவு மோசமாகப் போனதுக்கு வனிதா முக்கியக்காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. Image Credit

புறக்கணிப்பே சிறந்தது

இதுபோலப் பிரச்சனைகள் வரும் போது அவற்றுக்குப் பதில் அளிக்காமல் புறக்கணிப்பதே பிரச்சனையைத் தவிர்க்கும். இவர் போல ஒவ்வொருவருக்கும் பதில் அளித்துக்கொண்டு இருந்தால், பிரச்சனை மேலும் வளர்ந்து கொண்டே செல்லும்.

சர்ச்சை தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வனிதா நினைக்கிறாரா என்பதும் புரியவில்லை. யாரும் தங்கள் திருமண வாழ்க்கை பொதுவில் அசிங்கப்படுவதை விரும்பமாட்டார்கள் என்பதால், வேண்டும் என்று செய்வது போலக் கருதவில்லை.

பதிலுக்குப் பதில் கொடுப்பதாக நினைத்து அவரையே அசிங்கப்படுத்திக்கொண்டுள்ளார்.

காட்டமான பதில்

திருமணப் பிரச்சனையையொட்டி கருத்து கூறும் பிரபலங்களுக்கு வனிதா காட்டமாகப் பதில் அளித்து வருகிறார். இவ்வாறு சண்டை போட்டுகொண்டு இருப்பது சாதாரண மக்களுக்குப் பொழுதுபோக்காக மாறியுள்ளது.

எனவே, சண்டை காணொளிகளைப் பார்த்துச் சிரித்து, மீம் உருவாக்கி வருகிறார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை ஆனால், பொதுவில் குழாயடி சண்டை போட்டுக்கொண்டு இருப்பதால், சேதாரம் சம்பந்தப்பட்டவருக்குத் தான்.

அடுத்தவர் தனிப்பட்ட விஷயம் என்றால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடிப்பதும், பொதுவில் ஆபாசமாக விமர்சிப்பதும் பலருக்கும் எளிதாகி விட்டது.

வனிதாவின் முன்னாள் கணவரின் நண்பர்கள் கூறியதாகத் தகவல்களைப் விகடன் போட்டு,  அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் நிம்மதியிழக்க வைக்கிறார்கள்.

பொதுவில் வந்துவிட்ட பிரச்சனையை விமர்சிப்பதும், கிண்டலடிப்பதும் இயல்பு என்றாலும், இதையே வேலையாக வைத்து இருப்பது எரிச்சலையே தருகிறது.

வனிதா வாயை மூடாத வரை, இப்பிரச்னைக்கும் முடிவில்லை.

Read : கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது

3 COMMENTS

  1. கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றுமே இல்லை கிரி..

  2. பாவம் வனிதா அவர்கள். மலிவான விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு இவரின் திருமணத்தை பற்றி மற்றவர்கள் கருத்து கூறுகிறார்கள். வனிதா யாரை திருமணம் செய்தால் அவர்களுக்கென்ன? எத்தனையாவது திருமணம் செய்தால் அவர்களுக்கென்ன? ஏன் தேவையில்லாமல் இன்னொருவரின் வாழ்க்கையில் தலையிட வேண்டும். வனிதா, பீட்டர் பால், பாலின் முதல் மனைவி சம்பந்த பட்ட இந்த விசயத்தில், லஷ்மி ராமகிருஷ்ணன் கஸ்தூரி மாதிரியான ஆட்களுக்கு என்ன வேலை?

    இந்தமாதிரியான ஆட்களெல்லாம் எப்போதும் ஆதிக்க மனப்பானமையிலயே இருக்கிறார்கள்.

    //இதுபோலப் பிரச்சனைகள் வரும் போது அவற்றுக்குப் பதில் அளிக்காமல் புறக்கணிப்பதே பிரச்சனையைத் தவிர்க்கும். இவர் போல ஒவ்வொருவருக்கும் பதில் அளித்துக்கொண்டு இருந்தால், பிரச்சனை மேலும் வளர்ந்து கொண்டே செல்லும்.//

    வனிதாவுக்கு மட்டும் இல்ல, எனக்கும் இது பொருந்தும் அண்ணா. இது தெரியாமல் விளக்கம் கொடுக்கறேன்னு பேர் வழில பல பிரச்சனைகளை என் வாழ்க்கையில் நானே ஏற்படுத்திகிட்டு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றேன். விட்டொழிப்போம் இனி.

    உங்களுடையா எல்லா பதிவுகளையும் படித்து கொண்டு தான் இருக்கிறேன் அண்ணா. அனால் மேலே சொன்ன காரணத்தினால் எப்போதும் ஒரு வித மன உளைச்சலில் இருப்பதால் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதில்லை. இப்போது பழையபடி புத்தகம் படிப்பதில் கவனத்தை திருப்பிவிட்டேன். இந்த லாக்டவுனிலும் சென்னையில் தனியாக இருக்கிறேன். இதனால் இப்போ கொஞ்சம் நிம்மதி.

  3. @யாசின் அதெல்லாம் முடியாது சொல்லித்தான் ஆகணும் 🙂

    @கார்த்திக் “வனிதா யாரை திருமணம் செய்தால் அவர்களுக்கென்ன? எத்தனையாவது திருமணம் செய்தால் அவர்களுக்கென்ன? ”

    மிகச் சரி.

    “தெரியாமல் விளக்கம் கொடுக்கறேன்னு பேர் வழில பல பிரச்சனைகளை என் வாழ்க்கையில் நானே ஏற்படுத்திகிட்டு கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றேன்”

    புறக்கணிக்க பழகிக்கோ கார்த்தி.

    பிரச்சனைன்னு நினைத்தால் எல்லாமே பிரச்சனை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here