THE IRISHMAN (2019) | I Heard You Paint Houses

3
The Irishman

லகின் மிகச்சிறந்த நடிகர்களான Robert De Niro, Al Pacino, Joe Pesci ஆகியோர் நடித்து, இயக்குநர் Martin Scorsese இயக்கி வெளிவந்த படம் THE IRISHMAN.

பலரும் புகழ்ந்து பேசியதாலும், எழுதியதாலும் படத்தில் அப்படி என்ன உள்ளது என்பதற்காகவே பார்த்தேன். Image Credit

THE IRISHMAN

உண்மையில் படம் முடிந்த பிறகும் என்ன பார்த்தேன் என்றே புரியவில்லை 🙂 .

பேசுறாங்க பேசுறாங்க..பேசிட்டே இருக்காங்க! படத்தின் நீளம் 3 மணி நேரம் 29 நிமிடங்கள். இப்படத்தில் மிகவும் கவர்ந்தது, படம் எடுக்கப்பட்ட விதம், அரங்க அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை.

எனவே, இவற்றைப் பற்றி மட்டும் எழுதலாம் என்று தோன்றியதால் இவ்விமர்சனம்.

NETFLIX

படம் கிட்டத்தட்ட $200+ மில்லியன் முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ளது. பல கைகள் மாறி, NETFLIX இறுதியாகத் தயாரிப்பை ஏற்றுக்கொண்டு வெளியிட்டுள்ளது.

இப்படத்தை எப்படி எடுத்தார்கள் என்றே புரியவில்லை. ஏனென்றால், அந்தக்காலத்தில் சுற்றிக்கொண்டு இருப்பது போலவே உள்ளது.

வண்ணம் மட்டுமே இக்காலத்தில் எடுக்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது.

De-aging Technology

Robert De Niro, Al Pacino, Joe Pesci மூவருமே 75+ வயதைக் கடந்தவர்கள். இவர்களைத் தொழில்நுட்பத்தின் மூலம் வயது குறைத்துக் காட்டியுள்ளார்கள்.

‘சிவாஜி’ படத்தில் ரஜினியை வெள்ளையாகக் காட்டியது போல ஒரு தொழில்நுட்பம்.

துவக்கத்தில் பழைய கதையை நினைத்துப் பார்க்கும் போதுள்ள Robert De Niro தோற்றமும், அதன் பிறகு அவர் வருகிற காட்சிகளில் உள்ள தோற்றமும் தான் படத்துக்கான பெரும் செலவு, அதோடு மற்ற இருவருக்கும்.

முகத்தின் சுருக்கங்களை நீக்கி இளமையாகக் காட்டும்.

Robert De Niro நடிப்பு அவர் வயதான பிறகு வரும் காட்சிகளிலேயே சிறப்பாக உள்ளது. இன்னொரு வகையில் கூறுவதென்றால், நடிப்பைக்காட்ட கூடிய காட்சிகள் அப்போது தான் அவருக்கு அதிகம் கிடைத்துள்ளன.

எப்படி எடுத்தார்கள்?!

காட்சிகளில் வரும் இடங்கள், உடைகள், கார்கள், பேருந்துகள், விமானம், மற்ற வாகனங்கள், சுற்றுப்புறம் என்று அனைத்துமே பழைய காலத்தையே காட்டுகின்றன.

அக்காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைவு, சாலைகள் பெரியதாக இருக்கும், கடைகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அனைத்துமே அப்படியே உள்ளது.

Period படங்களை எடுக்கும் போது ஒரு சில இடங்களை மட்டுமே அரங்கம் அமைத்து எடுத்துக் காட்டி, மீதியை வழக்கமாக முடித்து விடுவார்கள்.

ஆனால், இதில் பெரும்பாலான காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்பாக உள்ளது. இதுவே வியப்பையும் அளிக்கிறது.

1960-70 களில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை ReMaster செய்து வண்ணத்தில் வெளியிட்டது போல உள்ளது. இது எப்படிச் சாத்தியம்?!

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலம். அதிலும் ஒளிப்பதிவு, கோணம் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல உள்ளது.

திரையரங்கில் பார்த்தால் அட்டகாசமாக இருக்கும்.

சில குறிப்புகள்

  • தயாரிப்பாளர்கள் மாறி இறுதியில் NETFLIX வசம் வந்துள்ளது.
  • அமெரிக்காவில் குறைந்த எண்ணிக்கையில் வெளியிடப்பட்டது. படம் தோல்வி.
  • நீளம் 3 மணி நேரம் 29 நிமிடங்கள் என்பதால், ஒரு மூச்சில் பார்ப்பது எளிதல்ல.
  • பெரும்பாலும் / முழுவதுமே வயதானவர்கள் மட்டுமே முக்கியக் கதாப்பாத்திரங்கள்.
  • வசனங்களே அதிகம்.
  • ஆஸ்கார் விருதில் 10 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, ஒரு விருதைக் கூடப் பெறவில்லை.
  • அரங்க அமைப்பு, தொழில்நுட்பத்துக்காவது கொடுத்து இருக்கலாம், எதோ அரசியல்.
  • பல ஆராய்ச்சிகள் செய்த பிறகே படமாக்கப்பட்டது.
  • I Heard You Paint Houses‘ என்ற வசனம் வரும். இதன் அர்த்தம், ஒருவரை சுடும் போது அவரின் ரத்தம் சுவர்களில் தெறிப்பதால் வருவதைக் குறிப்பதோடு, சங்கேத வார்த்தை பரிமாற்றமாகவும் கூறப்பட்டது.
  • 50+ வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் விரும்பிப் பார்த்துள்ளார்கள் காரணம், அக்காலகட்ட நடிகர்கள் நடித்த படம் என்பதால்.
  • படத்தின் தயாரிப்பாளர்களுள் Robert De Niro வும் ஒருவர்.

விமர்சகர்களிடையே THE IRISHMAN பலத்த பாராட்டைப் பெற்றுள்ளது.

துவக்கத்தில் The God Father பிடிக்கவில்லை, பின்னர் ரொம்பப் பிடித்தது. அது போல இப்படமும் பின்னாளில் பிடிக்கலாம் / புரியலாம் 🙂 .

NETFLIX ல் உள்ளது.

Directed by Martin Scorsese
Screenplay by Steven Zaillian
Based on I Heard You Paint Houses by Charles Brandt
Starring Robert De Niro, Al Pacino, Joe Pesci
Music by Robbie Robertson
Cinematography Rodrigo Prieto
Edited by Thelma Schoonmaker
Distributed by Netflix
Release date September 27, 2019 (NYFF), November 1, 2019 (United States)
Running time 209 minutes
Country United States
Language English

Read : Paatal Lok (2020 இந்தி Season 1) | பூலோக நரகம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. It took me nearly two weeks to complete The Irishman film with so many sittings..
    In the early 80’s, I remember seeing an Academy Award winning film ” Moscow does not Believer in Tears” in Emerald Theatre (Safire Complex, Madras )
    One film reviewer wrote in Indian Express summarizing the viewers who saw the film ” ?????? ???? ??? ??????? ?? ?????” that henceforth the viewers are not going believe an Academy Award film.
    Sometimes so celebrated movies by others bring no celebration mood when we see the movies. .

  2. கிரி , இதுவரை நான் இந்த படத்தை பற்றி கேள்விபட்டதில்லை.. ஆனால் படத்தை பற்றி நீங்கள் கூறிய விஷியங்கள் பிடித்து இருந்தது .. பார்த்து விட்டு பின்பு கூறுகிறேன் .. பகிர்வுக்கு நன்றி கிரி .. Sudani from Nigeria, இந்த மலையாள படத்தை பார்க்கவும் ..இந்த படம் 2018 வந்தது ..

  3. @James Prabhakar Dr கால மாற்றத்தில் சில படங்கள் ரொம்பப் பிடிக்கிறது.. சில பிடிக்காமல் போகிறது. இதற்கு நமக்கு கிடைக்கும் அனுபவங்களே.

    முன்பு கொண்டாடிய படங்களை தற்போது பார்த்தால் சில இதையா ரசித்தோம் என்று தோன்றுகிறது.

    @யாசின் ஒரே சமயத்தில் முழு கவனத்தோடு பார்ப்பது கடினம்.

    Sudani from Nigeria ஏற்கனவே பார்த்துட்டேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here