புது வேலை மாற்றலில் இடையில் கிடைத்த ஒரு வார விடுமுறையில் ஊருக்கு வந்து (சென்று) இருந்தேன். விடுமுறை முழுவதும் சொந்தக்காரங்க வீட்டிற்கு செல்லவே சரியாகி விட்டது.
திருமணம் ஆன பிறகு இது பெரிய இம்சையா இருக்கு. வீட்டில் இருக்கவே நேரம் இருப்பதில்லை.
திருமணம் பண்ணப்போறவங்க தயவு செய்து சொந்தக்காரங்க குறைவாக உள்ள இடமா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்குங்க 🙂 .
கோவை
தமிழ் செம்மொழி மாநாடு நடந்த பிறகு கோவை எப்படி உள்ளது என்று பார்க்க ஆவலாக இருந்தேன்.
கோவை செல்லவேண்டிய வேலையும் வந்ததால் சரி ஒரு ரவுண்டு அடித்து விடலாம் என்று சென்றேன்.
மாநாட்டிற்காக பலர் சந்தோசப்பட்டாலும் சாலை அகலகப்படுத்தலில் மரங்கள் பலவற்றை வெட்டியதால் பலர் அதிருப்தி அடைந்து இருந்தனர்.
இதனால் இந்த வருடம் வழக்கமான குளிர்ச்சி இல்லாமல் அனல் காற்று வீசியதாக பலரும் குறைப்பட்டுக்கொண்டனர்.
எனக்கும் மரங்கள் இல்லாததால் பல இடங்கள் குழம்பி விட்டது, அந்தப்பகுதியே மாறியது போல இருந்தது.
அதுவும் PSG கலைக்கல்லூரி சாலை எல்லாம் மொட்டையாக இருந்தது. அதற்கு மாற்று மரங்கள் சில இடங்களில் வைத்து இருந்தார்கள்..
ஒழுங்காக பராமரிப்பார்கள் என்று நம்புகிறேன். சாலைகள் நன்கு அகலமாக சிறப்பாக இருந்தது. ஒரு நல்லது நடக்கணும் என்றால் சில கெட்டதையும் சகிச்சுத்தான் ஆக வேண்டி இருக்கு 🙁 .
மரங்கள் வெட்டப்பட்டது போன்ற குறைகள் இருந்தாலும் பல வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன என்பதை மறுக்க முடியவில்லை.
மரங்களை வளர்க்க இனி சிறுதுளி அமைப்புப் போன்றவர்கள் முன் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
சென்னை
சென்னையில் இரண்டு நாள் இருந்தேன் சென்னை (அறை) நண்பர்களை மட்டும் சந்தித்தேன். சங்கர் சரவணன் ராஜ் போன்ற சில பதிவுலக நண்பர்களிடம் தொலைபேசியில் பேசினேன்.
எப்போதும் சென்னை சென்றால் சத்யம் திரையரங்கில் படம் பார்க்காமல் செல்ல மாட்டேன். இந்த முறை எவ்வளவோ முயன்றும் செல்ல முடியவில்லை.
நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டதால் ஒவ்வொருவரையும் பிடிப்பதே பெரிய லொள்ளாக இருக்கிறது.
படம் தான் போனதே தவிர.. ஹி ஹி ஹி வழக்கமாக செல்லும் சவேரா மூங்கில் பாருக்கு சென்று என் நண்பனுடன் “உற்சாகமாக” இருந்து வந்து விட்டேன்.
அப்பாடா! ரொம்ப மாசம் ஆச்சு! 😉
எக்ஸ்பிரஸ் அவென்யு
சட்டை எடுக்க வேண்டும் என்று என் நண்பனிடம் கூறி இருந்ததால் அவன் கூடச் சென்று சுற்றி விட்டு அவன் எக்ஸ்பிரஸ் அவென்யு நல்லா இருக்கு அங்கே போகலாம் என்று சொன்னான் என்று அங்கே சென்றோம்.
மிகப் பெரிய வணிக வளாகம். ஸ்பென்சர் ப்ளாசாக்கு பிறகு இங்கு தான் மிகப்பெரிய வாகனம் நிறுத்தும் இடத்தைப் பார்க்கிறேன் செம பெருசு.
சென்னையில் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததாலே பலர் ஒரு சில கடைகளுக்கு செல்வதை தவிர்க்கிறார்கள்.
அதனால் தற்போது வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.
இங்கே (தற்போது பெரும்பாலான இடங்களில்) மணி கணக்கில் கட்டணம் வசூலிப்பதால் இதற்கே பெரும்பணம் போய் விடுகிறது.
குறிப்பாக இதைப் போன்ற இடங்களில் உள்ள திரையங்கிற்கு வந்தால் 40 ருபாய் வாகன நிறுத்தக் கட்டணத்திற்கே சென்று விடும் போல உள்ளது.
கோபி
எங்கள் ஊர் கோபி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் பல இடங்களில் பாலங்கள் அமைத்து இருக்கிறார்கள்.
குறிப்பாக கோபியில் இருந்து அந்தியூர் செல்லும் வழியாக. பள்ளமாக இருந்த பல இடங்கள் உயரப்படுத்தப்பட்டு சீராக தார்ச்சாலை போடப்பட்டு இருந்தது.
ஏற்கனவே ஈரோடு மாவட்ட பகுதியில் நெடுஞ்சாலைகள் சிறப்பாக இருக்கும் தற்போது இந்தச் சாலை நிஜமாகவே கலக்கலாக உள்ளது.
வண்டி ஒட்டிச் செல்லவே ரொம்ப விருப்பமாக உள்ளது.
கோபியில் நகராட்சி தலைவர் அதிமுக அதனால் திமுக அதிமுக சண்டையில் கோபியில் எந்த வளர்ச்சி பணியும் ஒழுங்காக நடைபெறவில்லை.
சாலைகள் பல மிக மோசமாக உள்ளது.
மத்தியில் ஒரு ஆட்சி மாநிலத்தில் ஒரு ஆட்சி இருந்தால் எப்படி வேலைக்காகாதோ அதே மாதிரி மாநிலத்தில் ஒரு ஆட்சி நகராட்சியில் வேற ஆட்சி இருந்தால் விளங்காம போய்டும்.
அது தான் இப்ப கோபியில் நடக்கிறது. இவங்க சண்டையில் பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.
இது இப்படி இருந்தாலும் கோபியின் மதிப்பு நாளுக்கு நாள் அதிரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது ஒரு சென்ட்டின் நில மதிப்பு மூன்று லட்சத்து பத்தாயிரம் 😮 .
மதராசப்பட்டினம்
கோபியில் வள்ளி திரையரங்கில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது படம் பார்த்தேன் மதராசப்பட்டினம். படம் அருமை ஒரு சில குறைகள் இருந்தாலும் படம் ரொம்ப நன்றாக இருந்தது.
படத்தில் G.V.பிரகாஷ் இசை அவ்வளவாக ..இல்லை சுத்தமாகவே பொருத்தமாக இல்லை. ஆர்யா மற்றும் அமி நடிப்பு நன்றாக இருந்தது. இவர்கள் அனைவரையும் விடக் கலக்கியது அந்தப் பாட்டி தான்.
எதுவுமே பேசாமல் ஆனால் அற்புதமாக முகபாவனைகளை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்கள். அதுவும் கடைசியில் அவரின் நடிப்பு அட்டகாசம்.
இது வரை நீங்கள் இந்தப்படத்தை பார்க்காமல் இருந்தால் கண்டிப்பாக படத்தைப்பாருங்கள். நன்றாக உள்ளது.
களவாணி படம் பார்க்க நினைத்தேன் ஆனால் எங்கள் ஊரில் அந்தப்படம் வெளியாகவில்லை.
ருபாய் சிம்பள்
தற்போது இந்திய அரசு டாலர் ஈரோ போன்றவற்றிக்கு இருக்கும் சிம்பளை போன்று நமது இந்திய ரூபாய்க்கும் கொண்டு வந்து விட்டது நம் அனைவருக்கும் தெரிந்ததே.
எனக்கு சிம்பள் அவ்வளவா பிடிக்கவில்லை ஏனோ.. ஆனால் இதைப் போல அறிவித்தது ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது.
திடீரென நம்முடைய மதிப்பு உயர்ந்து விட்டதைப் போல உணர்வு 🙂 .
பலருடன் நாமும் போட்டிக்கு வந்து விட்டதைப் போல ஒரு பெருமிதம். இந்த முறையை அறிவித்த பிறகு அடுத்த நாள் செய்தித்தாள்களில் ருபாய் என்பதற்கு பதிலாக இந்தச் சிம்பளை பார்த்தபோது ஆச்சர்யமாகவும் அதே சமயம் மிக மிக மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்.
இந்த சிம்பளை உருவாக்கியவர் ஒரு தமிழர் எனும் போது மகிழ்ச்சி இரு மடங்காகிறது.
விர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்ரும்
ஊர்ல எந்த பைக் இருந்தாலும் எனக்கு ஸ்ப்லெண்டர் ப்ளஸ் மேல அளவு கடந்த காதல்.
சென்னையில் இருந்த போது இதே வண்டி தான் வாங்குவேன் என்று பல வருடம் முன்பே கூறி எந்த மாற்றமும் இல்லாமல் அதே நீலக்கலர் வண்டியை வாங்கினேன்.
நாங்க ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா.. 😀 .
அதை ஓட்டுறதுன்னா எனக்கு ரொம்ப விருப்பம் அதுவும் போக்குவரத்து குறைவாக உள்ள சாலை என்றால் குஷி ஆகி விடும்.
சிங்கப்பூர் சென்ற போது அதை மச்சானிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டேன். ஊருக்குச் சென்றால் இதை எடுத்துக்கொள்வேன்.
இந்த முறை அக்கா பையனை ஈரோடில் உள்ள பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்துள்ளார்கள் எனவே அவனைப் பார்ப்பதற்காக இதே பைக்கில் சென்றோம்.
நீண்ட மாதங்களுக்கு பிறகு இந்த வண்டியை ஓட்டப்போவதால் சந்தோசமாக இருந்தது. தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்ட மாட்டேன்.
ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு கோபியிலிருந்து ஈரோடு வரை சென்றது செம ஜாலியாக இருந்தது.
அதுவும் சித்தோடு சென்றவுடன் அங்கே இருந்து புதிதாக போடப்பட்டுள்ள புறவழிச்சாலையில் சென்றோம். பட்டாசாக இருந்தது சாலை… அதில் வண்டி ஓட்டும் சந்தோசமே தனி தான். செம!
ஈரோடு
ஈரோடில் ஒரு முறை அருணை (வால்பையன்) சந்தித்து இருந்தாலும் அதன் பிறகு சென்ற போதெல்லாம் சந்திக்க முடியவில்லை.
இந்த முறை நேரமிருந்ததால் அருண் மற்றும் அவரது நண்பர் பிலால் மற்றும் பதிவை மட்டும் படிக்கும் கார்த்திக்கையும் சந்தித்தேன்.
பிலால் ஏற்கனவே அறிமுகமானவர் கார்த்திக் புதியவர் எனக்கு. ரொம்ப நன்றாக பழகினார்.
புதிதாக ஒருவரிடம் பழகும் உணர்வே இல்லாமல் ரொம்ப நாள் பழகியவர் போல அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.
பின்னர் வீட்டிற்கு செல்ல இரவு நேரம் ஆகி விட்டதால் செல்லவேண்டியதாகி விட்டது.
அருண் அடம்பிடித்து அங்கே உள்ள கடையில் மீன் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டதால் எனக்கு சாப்பிட விருப்பம் இல்லை என்றாலும் அவரது விருப்பத்திற்காக சென்றேன்.
கடைசியில் நானே எதிர்பார்க்காத அளவிற்கு சாப்பிட்டு விட்டேன், ரொம்ப நன்றாக இருந்தது. நன்றி அருண் 🙂
பரிசல் வெயிலான் வேலன் ஆகியோரிடம் பேச மட்டுமே முடிந்தது நேரில் சந்திக்க முடியவில்லை.
எந்திரன்
மனைவி மற்றும் மகன் ஊரில் உள்ளார்கள் அவர்களை அழைத்து வர செப்டெம்பரில் சிறு விடுமுறையில் வருவேன் அப்படியே எந்திரன் வெளியாகும் நேரமாக பார்த்து.
தாமதம் செய்தால் மனதை தேத்திக்கொண்டே சிங்கையில் பார்க்க வேண்டியது தான். எங்கே பார்த்தாலும் சென்னையில் பார்ப்பதை போல வரவே வராது.
இணையத்தில் உலவும் எந்திரன் பன்ச் வசனம் இது. படத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை ஆனால் நன்றாக இருந்தது.
“Buddy… if i beat you, even Google won’t be able to find you” இது எப்படி இருக்கு 🙂
நட்பு
எந்திரன் பாடல்கள் அகிலமெங்கும் கலக்கிட்டு இருக்கு படமும் பட்டயக் கிளப்ப போகப்போகிறது.
வெற்றிக்குப் பிறகு வைத்துக்கொள்கிறேன் கச்சேரிய Lol. குசேலனில் பல்பு வாங்கி விட்டதால் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டியதாக இருக்கிறது 😉 எதிரிகளே! 😉
ஜெலுசில் வாங்கி வைத்துக்கொள்வதை தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை ஹி ஹி ஹி.
சிங்கப்பூர் ல் உள்ள மகேஷ் என்ற ரஜினி ரசிகர் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டார் நேரமிருந்தால் சந்திக்கலாம் என்று கூறி இருந்தேன்.
எந்திரன் பாடல் வெளியான சமயம் லிட்டில் இந்தியா பகுதி சென்று இருந்தேன் அவரும் எந்திரன் CD வாங்க வந்து இருந்தார்.
பார்த்துப் பேசியவுடன் எவ்வளவோ மறுத்தும் அண்ணா! நீங்க எந்திரன் CD வாங்கியே ஆக வேண்டும் என்று அவருக்கு வாங்கியதை வறுபுறுத்தி எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் எனக்கு கொடுத்து பணம் வாங்க மறுத்து விட்டார்.
கொஞ்ச நேரம் அவருடைய அன்பில் திணறி விட்டேன், காரணம் இந்த CD வாங்க எவ்வளவு நேரம் காத்து இருந்தார் என்று எனக்கு தெரியும்.
இவ்வளவுக்கும் அன்று தான் அவருடன் தொலைபேசியிலே பேசினேன்.
ரஜினி என்ற ஒரு நபரால் பல நபர்களை நண்பர்களாக பெற்று இருக்கிறேன் என்றால் கண்டிப்பாக மிகையில்லை. ரொம்ப நன்றி மகேஷ்.
வருத்தம்
நான் முன்பு இருந்த வேலையில் ஷிப்டில் இருந்ததால் பல நாட்கள் விடுமுறை கிடைத்தது அதனால் பதிவு எழுத நேரமிருந்தது.
தற்போது புது வேலையில் வழக்கமான முறையில் நேரம் வந்து விட்டதால் சுத்தமாக நேரமில்லை.
நிறைய பேரு இடுகை படிக்க நேரமில்லாம அப்படியே இருக்குது…. மெதுவா வருகிறேன்.
காலையில் எழுந்து அலுவலகம் செல்லவும் திரும்ப வந்து கொஞ்ச நேரம் இணையத்திலிருந்து விட்டுத் தூங்கவுமே நேரமுள்ளது. வார இறுதி நாட்களான சனி ஞாயிறு மட்டுமே இனி ஓய்வு.
எனவே பதிவு எழுதும் எண்ணிக்கையும் குறைந்து விடும்.
எழுதாமல் இருப்பதால் பூமி வேறு பாதையில் சுற்றப்போவதில்லை இருந்தாலும் ஆசை ஆசையாக எழுத நினைக்கும் விஷயங்கள் பலவற்றை இனி அவ்வளவாக எழுத முடியாது என்று நினைக்கும் போது ஏற்படும் சிறு வருத்தம் மற்றும் ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை. என்னமோ போங்க! 🙁
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
//ரஜினி என்ற ஒரு நபரால் பல நபர்களை நண்பர்களாக பெற்று இருக்கிறேன் என்றால் கண்டிப்பாக மிகையில்லை.//
எனக்கும் தான், இதை நான் வழிமொழிகிறேன்.
கடைசியா சட்டை எடுத்தீங்களா?.. இல்லையா?..
/சிங்கப்பூர் ல் உள்ள மகேஷ் என்ற ரஜினி ரசிகர் //
இது எனக்குத் தெரியுமா கிரி?? :))))))))))
சூப்பர் குறிப்புகள்…..!!!!
என்னங்ணா நீங்க? பாட்டப்பத்தி கும்முன்னு ஒரு பதிவு போடுவீங்கன்னு பாத்தா… அப்ப எல்லாமே Release-க்கு அப்புறம் தானா? 🙁
//*கோபியில் எந்த வளர்ச்சி பணியும் ஒழுங்காக நடைபெறவில்லை. சாலைகள் பல மிக மோசமாக உள்ளது. இவங்க சண்டையில் பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்கள் தான்.**/
கோபியில் கடந்த 10/15 வருடங்களாக இதே நிலைமை தான். 10/15 வருடங்களுக்கு முன் இருந்த கோவை, ஈரோடு, திருப்பூருக்கும் இப்போதிருக்கும் கோவை, ஈரோடு, திருப்பூருக்கும் பலப்பல வித்தியாசங்கள் உண்டு. ஆனால் கோபில ஒரே வித்தியாசம் தான். அது அன்புபவன் முன்னாடி உள்ள சிக்னல்.
//*கல்யாணம் பண்ணப்போறவங்க தயவு செய்து சொந்தக்காரங்க குறைவாக உள்ள இடமா பார்த்து கல்யாணம் பண்ணிக்குங்க**/
பொண்ணு கிடைக்குறதே பிரச்சினையா இருக்கும் போது இதெல்லாம் தேவையா? 🙂
ரஜினி என்ற ஒரு நபரால் பல நபர்களை நண்பர்களாக பெற்று இருக்கிறேன் என்றால் கண்டிப்பாக மிகையில்லை.//
எனக்கும் தான், இதை நான் வழிமொழிகிறேன்.
நானும் தான்
கிரி எந்திரன் பாடல்கள் பற்றி ஒரு விமர்சனம் எதிர்பார்கிறேன்
பெரிய கடை உணவை விட ரோட்டுகடையில் சுவை அதிகமாக இருக்கும்,
பழைய எண்ணைய், கொஞ்சம் சுகாதார குறைவு என்ற குறைகளை தவிர ருசிசை ரசிக்க சிறந்த இடம் எங்களுக்கு அது தான்!, உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி!
//ரஜினி என்ற ஒரு நபரால் பல நபர்களை நண்பர்களாக பெற்று இருக்கிறேன் என்றால் கண்டிப்பாக மிகையில்லை.//
என்னக்கும் தான் கிரி
//*கல்யாணம் பண்ணப்போறவங்க தயவு செய்து சொந்தக்காரங்க குறைவாக உள்ள இடமா பார்த்து கல்யாணம் பண்ணிக்குங்க**/
///பொண்ணு கிடைக்குறதே பிரச்சினையா இருக்கும் போது இதெல்லாம் தேவையா? ////
superuu அப்பு …,
கிரி ,
நேரமிருந்தால் பாட்டை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்
Kovai mtp road-lum anaithu marangalum vettappadugindrana.
Ini pudhiya marangal nattalum, avai payan thara evlo varudangal aagumo?
Eapadiyo neenga enga oor pakamdhanu therinchadula magilchi
அதான் கொஞ்ச நாளா ஆளை காணோமா. நம்ம பக்கம் பார்த்தீங்களா
@ஜீவதர்ஷன் அதே! 🙂
@பட்டாப்பட்டி ஹா ஹா ஹா Good Question! எடுத்தேன் அதுல ஒரு சோகம் ஆகிடுச்சு.. வேற இடத்துல ஒரு சட்டை எடுத்துட்டு இங்கே வந்து இன்னொன்னு எடுக்கலாம் என்று வந்தால்.. இங்கே அதே சட்டை இரண்டு எடுத்தால் ஒன்று இலவசம் என்றார்கள் அடடா! வடை போச்சே என்று ஆகி விட்டது. இது தெரியாம போச்சே! என்று சோகம் ஆகி விட்டது.
@மகேஷ் இது வேற மகேஷ் 🙂
@செந்தில் மோகன் K அப்பாஜி கண்டிப்பா அடுத்த வாரம் எழுதறேன். அடுத்த திங்கள் சிங்கப்பூர் ல் பொது விடுமுறை ஹையா! அப்புறம் நீங்க சொன்ன கோபி சிக்னல் 😀 அதே போல பொண்ணு மேட்டர் செம காமெடி! ஹி ஹி ஹி
@சரவணன் அடுத்த வாரம் எழுதுகிறேன்
@அருண் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. மீண்டும் ஒரு நன்றி வாங்கி கொடுத்தமைக்கு.
@சங்கர் பாட்டை அடுத்த வாரம் எழுதுகிறேன். ஒரு வாரம் கழித்து எழுதினால் தான் கொஞ்சமாவது நியாயம். உடனே கேட்டு உடனே எழுதுவது என்ன விமர்சனம் என்று எனக்கு புரியவில்லை பலர் அப்படி தான் எழுதுகிறார்கள். படத்தை வேண்டும் என்றால் அப்படி எழுதலாம் பாடலுக்கு கண்டிப்பாக கொஞ்ச நாள் ஆகணும் ஓரளவு கேட்ட பிறகு பாடல் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். சரவெடியா ஒரு பதிவு போடுவோம் 🙂
@Mrs..Krishnan நீங்க கோவை (பக்கம்) தானா! 🙂 நீங்க சொல்ற மாதிரி மரம் வளர ரொம்ப நாள் ஆகும் தான்.. நமது அடுத்த தலைமுறையாவது
சந்தோசமாக இருக்கட்டும்.
@உடன்பிறப்பு தலைவரே! உங்க பதிவை காலையிலே பார்த்து விட்டேன். நேரமில்லை (நிஜமாத்தான் நம்புங்க) கண்டிப்பாக வருகிறேன்..
சார்,
உங்களை போன்ற ரசிகர்களே குசேலன் ‘ரஜினி படம்’னு சொன்னா எப்படி?
Kuselan is a movie in which Rajini acted as a guest, without incurring any salary.
Guest appearance ல வந்தா உடனே அவரு படம் ஆயிருமா?
சுத்த கேனத்தனமா இருக்கு.
Giri Sir,
I was checking your site twice a day for the song review 🙁
//“உற்சாகமாக” இருந்து வந்து விட்டேன்//
நீங்களே உங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
@ Sivaji Rao Veriyan தலைவரே! கப்பித்தனமா பேசிட்டு இருக்காதீங்க. 2008 ஆகஸ்டில் வந்த என்னுடைய இடுகைகளையும் அதில் உள்ள பின்னூட்டங்களையும் படியுங்கள். நாங்கெல்லாம் அந்த நேரத்தில் பிரச்சனையையே போர்வையா போட்டு தூங்கினவங்க 🙂 வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே! இப்படி எல்லாம் குசேலன் ரஜினி படம் இல்லை என்று எஸ்கேப் ஆகிட முடியாது. டர்ர்ர் ஆக்கிடுவாங்க 🙂
@தமிழ் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவோம்ல 😉 கவலைப்படாதீங்க அடுத்த வாரம் அதிரடியா வருகிறேன்.
@ஷிர்டி சாய்தாசன் ஐயையோ நீங்க நினைக்கும் அளவிற்கு எதுவுமில்லை..நானெல்லாம் பாட்டில் மூடிய திறந்தாலே கிக்காயிடுச்சுனு சொல்ற ஆளு 🙂 சும்மா ஜாலிக்கு தான் எப்பவாவது. ரொம்ப நல்லவனா இருந்தாலும் ரொம்ப பிரச்சனைங்க.
உங்க பதிவு உங்க மின்னஞ்சல் எல்லாம் பெண்டிங்கா இருக்கு மெதுவா வருகிறேன்.
சிங்கப்பூரில் தொடங்கி அங்கேயே முடித்திருக்கிறீர்கள் கிரி. அழகு!
வேலை மாற்றம் குறித்து இப்போது தான் அறிந்தேன்.
//புது வேலை//
வாழ்த்துக்கள் கிரி, கூடிய விரைவில் “CIO” ஆக வாழ்த்துக்கள் 😉
//கல்யாணம் பண்ணப்போறவங்க தயவு செய்து சொந்தக்காரங்க குறைவாக உள்ள இடமா பார்த்து கல்யாணம் பண்ணிக்குங்க//
ரொம்ப நன்றிங்கண..
//கோவை ஒரு நல்லது நடக்கணும் என்றால் சில கெட்டதையும் சகிச்சுத்தான் ஆக வேண்டி இருக்கு //
“இது எந்த பதிவையும் குறிபிடுவன அல்ல” அப்படின்னு எடுத்துக்கலாமா ?
//“Buddy… if i beat you, even Google won’t be able to find you”//
Then Giri can.
சிங்கை, கோவை , சென்னை, ராயப்பேட்டை, கோபி, ஈரோடு, சித்தோடு, லிட்டில் இந்தியா…என்னமோ போங்க பாதி தமிழ்நாட்டை பார்த்த மாதிரி இருக்கு…
கிரி….
மற்றொரு கலக்கல் காக்டெயில் பதிவு….
நிறைய விஷயங்களை சுருங்க சொல்லி, விளங்க வைத்த பதிவு இது…. அப்படியே இந்த விஷயத்தயும் கொஞ்சம் ஞாபகத்துல வச்சுக்கோங்க….
//shirdi.saidasan August 4, 2010 at 12:49 AM
//“உற்சாகமாக” இருந்து வந்து விட்டேன்//
நீங்களே உங்களை மாற்றிக்கொள்ள முடியும்//
கிரி தல,
நல்லா இருக்கு பதிவு ஆனா தலைவர் songs reviewww எப்பபோ? வீட்டுல வேற இல்லன்னு சொல்லிட்டீங்க அப்ப உரிமையா கேக்குறோம் உடனே பண்ணுங்க தல
கிரி தல,
நல்லா இருக்கு பதிவு ஆனா தலைவர் songs reviewww எப்பபோ? வீட்டுல வேற இல்லன்னு சொல்லிட்டீங்க அப்ப உரிமையா கேக்குறோம் உடனே பண்ணுங்க தல
போன கமெண்ட் ல name மாத்தி போட்டேன் sorry 🙂
வணக்கம் கிரி, உங்கள் தளத்தினை அடிக்கடி பார்த்து படித்து வருகிறேன்… வெகு இயல்பா எழுதுறீங்க… வாழ்த்துக்கள்…. மேலும் கலக்குங்க… 🙂
ரஜினி ரசிகன் என்ற முறையில், எந்திரன் பாடல்கள் குறித்த உங்கள் எண்ண ஓட்டங்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்பு கட்டளை இடுகிறேன்
நன்றி
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
கிரி,
Waiting for thalaivar songs review.. seekarammm share pannunga thala…….
வழக்கம் போல உங்கள் பதிவு என்றால் சூப்பர் சூப்பர் என்று சொல்லி அலுக்க வைத்து விடுகிறீர்கள்.
சும்மா பதிவு என்றாலே சொல்ல வேண்டாம். அதுவும் பயண குறிப்பு என்றால் ஹ்ம்ம் கிளப்புங்கள்.
என்ன இந்த தடவை விமானத்தில் காமெடி ஏதும் இல்லை போல…
கோவை பற்றி கேள்வி பட்ட செய்திகள் அனைத்தும் வருத்தமாக உள்ளன. எப்படி இருந்த ஊரு ஹ்ம்ம். தமிழ் நாட்ல இருந்த ஒரு நல்ல இடமும் போச்சா…
எந்திரன் பாடல்களின் வரிகளை கேட்டு புரிந்த கொள்ள கொஞ்ச நாள் ஆகும்..இசை வழக்கம் போல சூப்பர்..
ஒ…புது சட்டை எல்லாம் புது வேலைக்கு தான?
தலைவா சொல்லவே இல்லயே ஊருக்கு வருவதாக… மற்ந்துவிட்டீர்களே????
நீங்க அலுவலகம் மாறிடிங்க்களா?. எப்போ சென்னை வந்திங்க?
@வெயிலான் லோகன் கோபி நன்றி
@அருண் மற்றும் அருண் பிரசங்கி இதற்க்கு நான் அடுத்த பதிவில் பதில் அளிக்கிறேன்.
@ சதா நன்றி
@சுந்தர் உங்களை தொலைபேசியில் அழைக்கவில்லையே தவிர நான் மற்றும் அருண் உங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அடுத்த முறை மறக்காமால் அழைக்கிறேன். மன்னிக்கவும்.
@செந்தில் நான் மறுபடியும் Temenos (Singapore) சேர்ந்து விட்டேன்.
//இது பெரிய இம்சையா இருக்கு//
இம்சையாக நினைக்க வேண்டாம் கிரி,.
நல்ல சுற்றம் அமைவது மிக அபூர்வம். பொதுவாக என் சொந்த பிரச்சனைகளை நான் பதிவதில்லை, இருந்தாலும் இந்த இடுகையை படித்ததும் சிலவற்றை எழுதிவிட்டேன்.
தல மறுபடியும் வரும்போது பகல் டையத்துல வாங்க மத்த எல்லாத்தையும் சந்திக்கலாம் :-))
@சிங்கக்குட்டி அக்கறைக்கு இக்கரை பச்சை 🙂
@கார்த்திக் எனக்கு மிகக்குறைவான நண்பர்களே பதிவுலகத்தில் உள்ளனர். அதிகம் பெற விருப்பமில்லை. நீங்க அருண் பிலால்.. இவர்கள் அளவிலே போதும் எனக்கு. பெரும்பாலும் பதிவர்களிடம் பேசினால் பதிவு சண்டை அரசியல் இதைப்பற்றியே பேசுகிறார்கள். எனக்கு அலுத்து விட்டது.
பட் உங்க அப்ரோச் பிடிச்சு இருக்கு 😀 நாடோடிகள் ஸ்டைல் ல படிக்கவும்.