தலைக்கவசம் அணிந்தும் ஆபத்து!

3
தலைக்கவசம் அணிந்தும் ஆபத்து!

ரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது விதி. விதி என்பதையும் தாண்டி நம்முடைய பாதுகாப்பு என்ற முக்கியக் காரணமும் அடங்கியுள்ளது.

தலைக்கவசம் அணிந்தும் ஆபத்து!

பலர் தலைக்கவசம் அணிவதில்லை, கேட்டால் அதற்குப் பல காரணங்கள் கூறி தங்கள் தவறை நியாயப்படுத்துகிறார்கள். Image Credit

நடந்த மூன்று உண்மைச் சம்பவங்களைக் கூறுகிறேன், பின்னர் உங்களின் முடிவு.

சம்பவம் ஒன்று

நண்பருக்கு நண்பர் தலைக்கவசம் அணிந்து செல்லாமல் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டுத் தலையில் மட்டும் அடிபட்டு அப்போலோ மருத்துவமனையில் 12 லட்சம் செலவு செய்தும் காப்பாற்ற முடியாமல் இறந்தார்.

திருமணமாகி ஒரு மாதம் தான் ஆகிறது.

சம்பவம் இரண்டு

நண்பர் தலைக் கவசம் அணிந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டு, தலையில் கவசம் இருந்ததால், தலையில் அடிபட்டும் பாதிப்பு இல்லாமல் கை எலும்பு முறிவோடு தப்பினார்.

சம்பவம் மூன்று

நண்பரின் நண்பருக்குத் தெரிந்தவர், இவர் தலைக் கவசம் அணிந்து இருந்தார் ஆனால், Helmet Strap அணியாமல் சென்றதால், விபத்து நடந்தபொழுது தலைக்கவசம் கழன்று கொண்டது.

இதனால் தலையில் அடிபட்டு மறதி ஆகி விட்டார். அதாவது அவரது அம்மா, அப்பா, நண்பர்களையே அடையாளம் தெரியவில்லை. இது குணமாகுமா ஆகாதா? என்பது கேள்விக்குறி.

25 வயது தான் ஆகிறது.

தலைக்கவச பாதுகாப்புப் பட்டை அணியாமல் செல்வதும், தலைக்கவசம் அணியாமல் செல்வதும் ஒன்று தான்.

இது போலப் பலர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். நண்பன் கூட ஒருவன் இதே போலச் சுற்றிக்கொண்டு இருக்கிறான், கூறி அலுத்து விட்டது.

சரி மச்சி! மாற்றி விடுகிறேன்” என்று கூறுகிறான் ஆனால், பல காலமாக அப்படியே உள்ளது.

Master Control of Body

நம்முடைய முழு உடலையும் கட்டுப்படுத்துவது தலைப்பகுதி தான். தலையில் அடிபட்டால் மொத்த உடலுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே தான் தலைக் கவசம் அவசியமாகிறது.

தலைக்கவசம் அணிந்தாலும் பெரிய விபத்தில் தப்பிக்க வாய்ப்பில்லை ஆனால், வாய்ப்பு இருக்கும் சமயங்களில் தப்பிக்கலாமே! என்பது தான் இங்கே வலியுறுத்தப்படுகிறது.

ஒருவேளை தலைக் கவசம் அணிந்து இருந்தால், பிழைத்து இருக்கலாம் எனும் நிலையிலேயே இவை பேசப்படுகிறது.

நம்மை மீறி நடப்பதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ஆனால், குறைந்த பட்ச பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கையை விதண்டாவாதம் பேசாமல் நாம் பின்பற்றுவது நமக்கு நல்லது.

நம்மை நம்பி ஒரு குடும்பம் உள்ளது என்பதைத் தயவு செய்து உணருங்கள்.

தொடர்புடைய கட்டுரை

புகைப்பழக்கம் | ஆபத்து மட்டுமே!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

 1. 9 வருடங்கள் முன்னாடி எனக்கு நடந்த ஒரு விபத்தில் இருந்து நான் பிழைத்ததுக்கு தலை கவசம் தான் முக்கிய காரணம். KG அலுவலகம் செல்லும் போது SRP டூல்ஸ் சந்திப்பில் எனக்கு நடந்த விபத்தில் மூன்று நான்கு முறை 10 அடிக்கு நான் உருண்டு சென்றேன் அப்பொழுது பின்மண்டை அத்தனை முறை சாலையில் மோதியது, தலை கவசம் தான் அப்பொழுது என் தலையை பாதுகாத்தது. எனவே தலை கவசம் உயிர் கவசம் என்பது சத்தியம்.

 2. அருமையான பதிவு.
  தலைக்கவசம் அணிந்தும் ஆபத்து!
  தலைப்பை பார்த்ததும் தமிழகத்தில் பலர் எதற்கு தான் தலைக்கவசம் என்று சாக்கு போக்கு சொல்வது போல் சொல்கிறீர்களோ என்று நினைத்துவிட்டேன் 🙂

 3. தலைக்கவசம் என்பது நிச்சயம் அவசியமான ஒன்று.. ஆனால் நிறையபேர் இதை பயன்படுத்த தயங்குகின்றனர்.. தயக்கம் என்பதை விட அலட்சியப்படுத்துகின்றனர்.. குறிப்பாக பள்ளி / கல்லுரி மாணவர்கள்.. வெளிநாடுகளில் சீட் பெல்ட் போடவில்லை என்றால் அபராதம் அதிகம்.. நான் வந்த புதிதில் என்னடா சீட் பெல்ட் போடாததற்கு 5000 ரூபாய்க்கு மேல் அபராதம் என்று வியந்து இருக்கிறேன்.. ஆனால் பல விபத்துகளில் சீட் பெல்ட் ஓட்டுனரை காப்பாற்றி இருக்கிறது என்று பின்பு அறிந்தேன்..

  சென்ற வாரம் கூட எங்கள் நிறுவன ஓட்டுனருக்கு AED 800 (INR 15000) அபராதம், காரணம் கார் ஓட்டும் போது அலைபேசி பயன்படுத்தியது.. பெரிய தொகை தான், ஆனால் தற்போது விபத்துகளில் அலைபேசி பெரிய பிரச்சனையாக இருக்கிறது.. இதனால் இந்த அபராதம் விதிப்பது சரி தான்..

  தண்டனைகள் அதிகம் தரப்படும் போது தான் குற்றங்களின் எண்ணிக்கை குறையும்.. விபத்து நடப்பது என்பது சில மணித்துளிகளே!!! ஆனால் நமது சிறிய தவறு, எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய விளைவினை உண்டாகும் என்பது நாம் அறியாதது.. எச்சரிக்கையான இருப்பது எல்லோரும் நல்லது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here