எந்திரன் படம் ரஜினி என்று முடிவான பிறகு படப்பெயருக்கு முதலில் தேர்வு செய்யப்பட பெயர் Robo.
ஆனால், தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதால் “இயந்திரம்” என்று பெயர் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால், ரசிகர்களுக்கு படப்பெயர் பிடிக்கவில்லை “எந்திரன்” என்று மாற்றம் செய்யும்படி கோரிக்கைகள் வந்தன. பிறகு “எந்திரன்” என்று இறுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஒரு ரோபோ ரோஜாப் பூவை வைத்து இருக்கும்படி வித்யாசமான முறையில் படத்தின் விளம்பரமும் செய்யப்பட்டது.
தயாரிப்பாளர்
படத்தை தயாரிக்க பெரிய நிறுவனமாக தேவை என்பதால் முடிவானது தான் ஐங்கரன் இண்டர்நேஷனல் – ஈராஸ். இவர்கள் தான் பெரும்பாலான தமிழ் படங்கள் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமை பெறுபவர்கள்.
ரஜினியின் சிவாஜி படத்தை வாங்கி வெளியிட்டதில் 200% லாபம் அடைந்ததாக ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.
தோல்வியடைந்த குசேலன் படத்தில் கூட ஓரளவு லாபம் பார்த்தவர்கள். கிட்டத்தட்ட 30% படப்பிடிப்பு முடிந்த நிலையில் உலகம் முழுவதும் பொருளாதார சரிவு ஏற்பட்டது.
இதனால் பல தொழில்கள் நிறுவனங்கள் முடங்கின மற்ற நிறுவனங்களை போல ஐங்கரனும் பாதிக்கப்பட்டது இதனால் எந்திரன் படப்பிடிப்பு தொடருமா! என்று செய்திகள் பரவத்தொடங்கின.
ஒரு சிலர் எந்திரன் பாதியில் நிறுத்தம் என்று கூறத்தொடங்கினார்கள் இருந்தாலும் படப்பிடிப்பு மெதுவாக நடந்துகொண்டு தான் இருந்தது.
சன் டிவி
இந்நிலையில் தான் படத்தை வாங்கி கொள்வதாக சன் அறிவித்தது.
ஐங்கரன் இண்டர்நேஷனலுக்கு அவர்கள் செலவிட்ட தொகை மற்றும் அதற்கு மேல் பணம் கொடுக்கப்பட்டு சன் தயாரிப்பு உரிமையை பெற்றுக்கொண்டது.
இந்தப்படத்தை தயாரிக்க சன்னை விட பொருத்தமான நபர் இருக்க முடியாது என்பதால் ஷங்கரும் ஒத்துக்கொண்டார். ஷங்கர் ஒத்துக்கொண்டார் என்பதை விட ஒத்துக்கொள்ள வேண்டிய நிலை.
ரஜினி ஷங்கர் கலாநிதிமாறன் முன்னிலையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
இதே சன் தான் தனக்கு குசேலன் படத்தின் தொலைக்காட்சி உரிமை கிடைக்காத ஆத்திரத்தில் (அப்போது கலைஞர் டிவி உரிமை பெற்று இருந்தது மற்றும் கலைஞர் மாறன் குடும்பத்தினர் சண்டை நிகழ்ந்து கொண்டிருந்தது) குசேலன் படத்தை என்னவெல்லாம் செய்து டேமேஜ் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தார்கள்.
திரையரங்கு உரிமையாளர்களை தூண்டி விட்டு வேண்டும் என்றே பிரச்சனை செய்தார்கள். படம் வெளிவந்த மூன்றாம் நாளே நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் போராட்டம் செய்தார்கள்.
இதை சன் டிவி நன்றாக ப்ரொஜெக்ட் செய்தது, படமும் ரசிகர்கள் வரவேற்பை பெறாததால் இன்னும் கொஞ்ச நாள் ஓடி இருக்க வேண்டியது இவர்கள் செய்த அட்டூழியத்தால் விரைவிலேயே காலி ஆனது.
சன் டிவி கணக்குகள்
எந்திரன் படத்தை சன் டிவி வாங்குகிறது என்றால் சும்மா அல்ல! தண்ணீரிலே வெண்ணை எடுப்பவர்கள் திமிங்கலத்தை வாங்குகிறார்கள் என்றால் சும்மாவா!
பல கணக்கு போடாமலா வாங்குவார்கள்.
எந்திரனை வைத்து எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று எப்போதோ திட்டமிட்டு இருப்பார்கள். அதன் தொடக்கமாக அவர்களே எதிர்பாராமல் அவர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் தான் எந்திரன் புகைப்படங்கள் வெளியீடு.
எந்திரன் படத்தின் புகைப்படங்களை தினகரனில் வெளியிடுவதாக அறிவித்து அதற்கு நன்கு மார்க்கெட்டிங் செய்து பின் வெளியிட்டார்கள்.
அவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு பல லட்சம் பிரதிகள் அதிகமாக தினகரன் விற்பனையாகி நல்ல லாபம் பார்த்தது.
பல இடங்களில் தினகரன் காலையில் வழக்கமான நேரத்தை விட வெகு சீக்கிரத்திலே தீர்ந்து விட்டது.
அதன் பிறகு அவர்களுடைய நாளிதல்களான குங்குமம் வண்ணத்திரை போன்றவற்றில் அவ்வப்போது துணுக்குகள் மாதிரி வெளியிட்டு படம் வெளிவரும் முன்பே எந்திரனை வைத்து சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பணம் போட்டவர்கள் செய்கிறார்கள்! இதில் தவறாக நினைக்க எதுவுமில்லை.
இன்னும் இதன் பிறகு பாடல்கள் வெளியீடு விழா, ரஜினி, ஷங்கர், ஐஸ் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேட்டி என்று பல விஷயங்கள் இருக்கிறது.
இதெல்லாம் படம் வெளிவரும் முன்பு இவர்கள் சம்பாதிக்கப்போவது.
HBO
இந்தப்படத்தை வெளிநாட்டில் HBO துணையுடன் அதிகளவில் வெளியிடுவதாக செய்திகளில் வந்தது.
சன் டிவி பல படங்களை வாங்கி வெளியிட்டு இருந்தாலும் அவர்களின் சன் பிக்சர்சுக்கு எந்திரன் படமே முதல் தயாரிப்பு.
சாதாரண படத்தின் விளம்பரங்களையே நிமிடத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பும் சன் டிவி எந்திரனுக்கு செய்யப்போவதை நினைத்தால் மயக்கம் வருகிறது.
ரஜினி ரசிகர்களுக்கு எத்தனை முறை ஒளிபரப்பினாலும் சலிக்காமல் பார்க்க முடியும் இதுவே அனைத்து ரசிகர்களுக்கும் பொருந்துமா என்பது சந்தேகம்!
அப்படி இருக்கும் போது பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூற முடியாது.
எனவே, சன் டிவி இந்த விசயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நலம் இல்லை என்றால் பொதுமக்களிடையே எரிச்சலையே இது வரவழைக்கும்.
படம் வெளியாகும் முதல் வாரம் இவர்கள் செய்வது கண்டிப்பாக ஓவர் டோஸாக இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
படத்தின் முக்கியத்துவம்
எந்திரன் யாருக்கு முக்கியமோ இல்லையோ ரஜினியை விட ஷங்கருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த படம்.
காரணம், இந்தப்படம் பற்றி பல வருடங்களாக கூறிக்கொண்டு இருப்பவர்.
கமல் ஷாருக் என்று முயற்சித்து அவர்கள் ஒதுக்கியதால் தன் கதையை திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அதுவும் குறிப்பாக ஷாருக்கிடம்.
ரஜினிக்கும் குசேலன் படம் தோல்வி அடைந்ததால் இதை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறார்.
பாபா படம் தோல்வி அடைந்த போது நான் யானை அல்ல குதிரை, விழுந்தால் எழ நேரமெடுக்காது என்று கூறி அதை சந்திரமுகியில் நிரூபித்தவர்.
தனக்கு கிடைக்கும் தோல்விகளை என்றும் அலட்சியப்படுத்தாதவர் அனுபவங்களை பாடமாக எடுத்துக்கொண்டு தன்னை மீண்டும் நிரூபித்துக்காட்ட வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பவர்.
எனவே, இவர்களின் உணர்வுப்பூர்வமான பங்களிப்பு இந்தப்படத்தில் கண்டிப்பாக இருக்கும்.
அமரர் சுஜாதா
இந்தப்படம் துவங்கி கொஞ்ச நாட்களுக்கு பிறகு இந்தப்படத்தில் கதை வசனம் எழுதியவரும் ஷங்கர் தன் தந்தையை போல மதிப்பவருமான சுஜாதா அவர்கள் காலமாகி விட்டார்.
இது ஷங்கருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
ஒரு பேட்டியில் கூட “சுஜாதா அவர்கள் ஒருவர் செய்யும் வேலையை 200 பேர் செய்ய வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
சுஜாதா தான் இறக்கும் முன்பே படத்தின் கதை வசனம் மற்றும் குறிப்புகளை எழுதி ஷங்கருக்கு தந்து விட்டார். இருந்தாலும் இவரின் இழப்பு ஷங்கருக்கு ஈடு செய்ய முடியாததே.
சுஜாதா அவர்கள் தற்போது இருந்து இருந்தால் தற்போது எடுக்கப்பட்டுள்ள எந்திரனை விட சிறப்பாக ஷங்கரால் எடுத்து இருக்க முடியும் அந்த அளவிற்கு விஞ்ஞானத்தில் புகுந்து விளையாடுபவர்.
பல புதிய உத்திகளை தொழில்நுட்பங்களை எப்படி புகுத்தலாம் என்று கூறி இருப்பார். இந்தப்படத்தின் மூலக்கதையே சுஜாதா அவர்கள் கொடுத்தது தான்.
சுருக்கமாக கூறினால் எந்திரனின் இதயம் அமரர் சுஜாதா அவர்கள். படத்தின் துவக்கத்தில் சுஜாதா அவர்களுக்கு ஷங்கர் தகுந்த மரியாதை செய்வார் என்று எதிர்பார்க்கிறேன் அதற்கு சன் டிவி யின் அனுமதியும் முக்கியம்.
ஒலிச்சேர்ப்பாளர் ரசூல் பூக்குட்டி
ரசூல் பூக்குட்டி பேட்மேன் படத்தில் வரும் ஜாக் நிக்கல்சனை போல வில்லன் ரஜினியின் நடிப்பு பயங்கரமாக உள்ளதாக கூறி இருக்கிறார்.
வில்லன் ரஜினியை பற்றி யாருக்கும் சொல்ல வேண்டுமா என்ன!
மூன்று முடிச்சில் கமல் ஆற்றுக்குள் விழுந்த பிறகு வசந்த கால நதிகளிலே பாடலைப்பாடி போவாரே அந்த காட்சி ஒன்றே போதும் வில்லன் நடிப்புக்கு.
சிவாஜியில் கூட மொட்டை பாஸ் ஆன பிறகு சுமன் அலுவலகத்தில் வந்து அவரை நாற்காலியில் அமர வைத்து இருபுறமும் காலை வைத்து சிரித்து பேசும் காட்சி ஒன்றே போதும் இன்னும் ரஜினியிடம் இருக்கும் வில்லத்தனமான நடிப்புக்கு.
ரசூல் பூக்குட்டி இந்தப்படத்தில் இயற்கையான சத்தங்களையே பயன்படுத்தி இருக்கிறார், அதாவது ஸ்லம் டாக் மில்லியனர் படம் போல.
இன்னும் கூற வேண்டும் என்றால் நடைமுறை வாழ்க்கையில் பொது இடங்களில் பேசும் போது உடன் என்னென்ன சத்தம் வருமோ அந்த சத்தங்களை மியுட் செய்யாமல் இரைச்சல் இல்லாமல் கொடுப்பது.
பெரும்பாலான படங்களில் கவனித்து இருக்கலாம் ரயில் நிலையத்தில் காதலன் காதலி பேசிக்கொண்டு இருப்பார்கள் ஆனால், பின்னணியில் எந்த சத்தமும் இருக்காது.
இதில் இருக்கும் ஆனால் இரைச்சல் இல்லாமல், அந்த ஒரிஜினாலிட்டி கெடாமல். இந்த விசயத்திற்க்காகத்தான ரசூல் பூக்குட்டிக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலு
இவர் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ரயில் சண்டை காட்சிகள் பற்றி சிலாகித்து கூறினார்.
இந்தியப் படங்களிலேயே பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ரயில் சண்டை காட்சிகளாக இதில் வரும் சண்டை காட்சியை கூறலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பல காட்சிகள் சிறப்பான ஒளித்தரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதற்கு பல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் உதவி புரிந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் கடைசியாக சொன்னது…. “நான் எதோ சொல்ல வேண்டும் என்பதற்காக கூறவில்லை தற்போது படத்தில் இருந்து ஒரே ஒரு டீசர் காட்சியை மட்டும் முன்னோட்டமாக (Trailer) வெளியிட்டால் எல்லோரும் மிரண்டு விடுவார்கள் அந்த அளவிற்கு உள்ளது” என்று.
இசையமைப்பாளர் A.R.ரகுமான்
ரகுமான் ஷங்கர் கூட்டணி பற்றி கூறத்தேவையில்லை, இவர்களது கூட்டணியில் அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட்.
தனது கனவுப்படமான எந்திரனுக்கு ரகுமானை சும்மா விடுவாரா! நன்கு வேலை வாங்கி இருப்பார். ரகுமான் படம் சிறப்பாக வந்துள்ளதாக கூறியுள்ளார்.
பொதுவாக ஒரு படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தை பற்றி உயர்வாகவே கூறுவார்கள். அது தான் நியாயம் கூட.
எனவே, படம் வெளிவந்த பிறகு தான் இவர்கள் கூறியது எந்த அளவு உண்மை என்று தெரிய வரும்.
எனவே இவர்கள் கூறுவதை வைத்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பது ரசிகர்களுக்கு நல்லது.
ஷங்கர் Vs சன் டிவி
எந்திரன் படத்தின் பட்ஜெட் 150 கோடி என்று கூறப்பட்டாலும் சன் டிவி பெரும்பாலும் படத்தை இந்தியாவிலேயே தான் எடுக்க அனுமதித்து இருக்கிறது வெளிநாடு காட்சிகள் அதிகம் இல்லை.
அதே போல ஷங்கர் வழக்கம் போல செலவு அதிகம் வைத்ததாகவும் கூறப்படுகிறது. எது உண்மை என்று தெரியவில்லை!
சன் டிவி படத்தின் செய்திகளை எந்த ஊடகத்திற்கும் தரவில்லை படங்களை கூட இவர்கள் ஊடகங்களே வெளியிட்டன.
இது ஷங்கருக்கு அதிருப்தியை தந்ததாகவும் அதனால் தான் கடுப்பில் ஷங்கர் தனது தளத்தில் படங்களை வெளியிட்டார் என்றும் கூறுகிறார்கள், இதனால் சன் டிவி கடுப்பாகி விட்டதாம்.
சன் டிவி எந்த செய்தியையும் மற்ற ஊடகங்களுக்கு தர மறுப்பதால் மற்றவர்கள் கடுப்பில் உள்ளதாகவும் கூறுகிறார்கள், மீறி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஷங்கர் சன் டிவியிடையே பனிப்போர் நிலவி வந்தாலும் படத்தின் ரஷ் பாத்து விட்டு சன் டிவி மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிகிறது.
வில்லன் டேனி டென்சொங்கப்பா (Danny Denzongpa)
ரஜினி படத்தில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ வில்லனுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும்.
என்னுடைய விருப்ப நடிகரும் ரஜினியின் ஆஸ்தான வில்லனுமான அமரர் ரகுவரன் இல்லாதது எனக்கு பெரும் ஏமாற்றம்.
பாட்ஷாவில் எப்படி ரஜினி இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாதோ அதே போல ரகுவரன் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது.
ரஜினி படத்தில் எப்போதும் வில்லனுக்கு நடிக்க நன்கு வாய்ப்பு இருக்கும். சிறு எடுத்துக்காட்டு தளபதி அம்ரீஷ்பூரி, பாட்ஷா ரகுவரன், அண்ணாமலை ராதாரவி, படையப்பா ரம்யா கிருஷ்ணன், சிவாஜி சுமன் போன்றோர்.
வில்லனை ஹீரோவிற்கு நிகராக காட்டுவதன் மூலமே அந்தப்படத்திற்கு ஒரு கெத்து கொண்டு வர முடியும். வில்லனை சொத்தையாக காண்பித்தால் படமும் எடுபடாமல் போய் விடும்.
எனவே, தான் ரஜினி தன் படத்தில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். பலர் கொடுக்க மறுப்பதற்கு காரணம் நம்மை விட அவர் அதிகம் பெயர் வாங்கி விட்டால் என்ன செய்வது என்பது தான்.
டேனி ஹிந்தி திரையுலகில் மிகப்பெரிய நடிகர், ரொம்ப மூத்த நடிகர். அமிதாப் காலத்தில் மிகப்பிரபலமாக இருந்தவர், இவர் ஹிந்தியில் பிரபலப் படமான குர்பானியில் நடித்து இருக்கிறார் தற்போது நடிப்பதில்லை.
எந்திரனில் யார் வரப்போகிறார்களோ என்று நினைத்து இருந்தேன் நல்ல வேளை எதோ மொக்கை வில்லனாக இல்லாமல் படத்தின் பட்ஜெட்டிற்கு தகுந்த மாதிரி ரிச்சான, சீனா பட வில்லன் மாதிரி நச்சுனு ஒருவரை போட்டு இருக்கிறார்கள்.
ஆளும் சும்மா கும்முன்னு பர்சனாலிட்டியாக இருக்கிறார். ரஜினிக்கு பயங்கரமாக குடைச்சல் குடுக்கணும் அப்போது தான் படம் பட்டாசாக இருக்கும் 😉 .
இதில் இவரோட நம்ம ரோபோ வில்லன் ரஜினியும் சேர்ந்து ஹீரோ ரஜினியை பஜ்ஜி ஆக்க போகிறார்கள், தலைவர் என்ன செய்து இருக்கிறார் என்று பார்க்க ரொம்ப ஆவலாக உள்ளேன்.
வில்லன் ரஜினி
ஹீரோ ரஜினியை விட வில்லன் ரஜினியை அதிகம் எதிர்பார்க்கிறேன். ரோபோ ரஜினி முதல் பாதியில் காமெடியாகவும் இரண்டாம் பாதியில் வில்லனாகவும் நடித்துள்ளதாக செய்திகளில் வந்தது.
ஷங்கர் படம் எப்போதும் வேகமான திரைக்கதை தான்.
படத்தின் ஆரம்பித்திலிருந்து முடிவு வரை படம் பார்ப்பவர்களைப் பரபரப்புடன் வைத்துத் தொய்வு இல்லாமல் படத்தைக் கொண்டு செல்வதில் இவர் கிங்.
இதில் தான் நினைக்கும்படி காட்சி வர வேண்டும் என்பதற்காக ரஜினியை பல டேக்குகள் எடுக்க வைத்து கிறுகிறுக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.
தனக்கு காட்சி திருப்தியாக வரும்வரை ரஜினியை விடுவதில்லை. ரஜினி ஒப்பனைக்காக மட்டும் பல மணி நேரம் எடுத்துக்கொண்டு இருக்கிறார் தனது முழு ஈடுபாட்டுடன்.
பேட்டியின் போது ஷங்கர் தன்னை எப்படி வேலை வாங்கினார் என்பதை ரஜினி குறிப்பிடுவார் என்று நினைக்கிறேன். உண்மையான ஈடுபாடும் வெற்றிக்கான முனைப்பும் இருந்தால் எந்தக்காரியமும் வெற்றி பெறும்.
அது இந்தப் படத்தில் ரஜினியிடமும் ஷங்கரிடமும் அதிகமாகவே உள்ளது. ஷங்கர் எந்திரனை பற்றி கூறிய போது “முதல் பாதி வேகம் என்றால் இரண்டாம் பாதி ரோலர் கோஸ்டர்” என்று 🙂 .
எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைத்தாலும் ஒரு ரசிகனாக ஏற்படும் ஆர்வத்தை தவிர்க்க முடியவில்லை.
ஷங்கர் பாணியிலே கூற வேண்டும் என்றால் அறிவுக்கு தெரிவது மனதுக்கு புரிவதில்லை.
எந்திரன் படம் பல சாதனைகள் படைக்க லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக வாழ்த்துகிறேன். சீக்கிரம் படத்தை வெளியிடுங்கப்பா!
எந்திரன் பற்றி பதிவு எழுதுங்கள் என்று ரொம்ப நாட்களாக கேட்டுக்கொண்டு இருக்கும் ரஜினி ரசிகர்களான அருண் மற்றும் சங்கர் ஆகியோருக்கும் ரஜினியை ரசிக்கும் அனைவருக்கும் இந்தபதிவு சமர்ப்பணம்.
பதிவு ரொம்பப் பெரிதாகி விட்டது போர் அடிக்காமல் எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கலக்கல் கிரி தல…..
“திவு ரொம்பப் பெரிதாகி விட்டது போர் அடிக்காமல் எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.” – repeated audience வர்ற அளவுக்கு நல்லா இருக்கு … இதுல போர் அடிக்குமா?
கிரி
பதிவு பெரிதாக இருந்தாலும், பட்டாசாக இருக்கிறது (வார்த்தை இரவல் உங்களின் இந்த பதிவிலிருந்து தான்…!!)…..
இந்த ௨௦௧௦ வருடம் சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு பிரம்மாண்டமான படம் கூட வரவில்லை… ஆகவே, எந்திரன் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்..
எந்திரன் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் கோடிக்கணக்கான பேர்களில் ஒருவன்…
கிரி அண்ணா, நல்லா எழுதி இருக்கீங்க. நான் ரெண்டாம் பகுதி வந்ததுக்கு அப்புறமா பின்னூட்டம் போடலாம்ன்னு இருந்தேன்.
//சாதாரண படத்தின் விளம்பரங்களையே நிமிடத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பும் சன் டிவி எந்திரனுக்கு செய்யப்போவதை நினைத்தால் மயக்கம் வருகிறது// -எனக்கு வாந்தி வருது அண்ணா !! இந்த ஒரு விஷயத்துக்காகவே நான் வெளிநாட்ல சன் டிவி இல்லாம இருக்கறத நெனச்சு ரொம்ப சந்தோஷப்படுறேன்.
//தலைக்கனம் காட்டாமல் எப்போதும் தன்னடக்கமாக//-ஆமா, ஆமா அதுதானே அவர உச்சியில கொண்டு போயி உக்கார வெச்சிருக்கு !
// ஹீரோ ரஜினியை விட வில்லன் ரஜினியை அதிகம் எதிர்பார்க்கிறேன்//-நெறைய மக்களும் உங்கள மாதிரி தான் !!
கலக்கலான பதிவு, தலைவர் படத்தை பற்றி படிக்க கசக்குமா என்ன?
//சாதாரண படத்தின் விளம்பரங்களையே நிமிடத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பும் சன் டிவி எந்திரனுக்கு செய்யப்போவதை நினைத்தால் மயக்கம் வருகிறது. ரஜினி ரசிகர்களுக்கு வேண்டும் என்றால் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் சலிக்காமல் பார்க்க முடியும் இதுவே அனைத்து ரசிகர்களுக்கும் பொருந்துமா என்பது சந்தேகம்! அப்படி இருக்கும் போது பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூற முடியாது. எனவே சன் டிவி இந்த விசயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நலம் இல்லை என்றால் பொதுமக்களிடையே எரிச்சலையே இது வரவழைக்கும்.//
சரியாகச்சொன்னீர்கள், இதை எப்படியாவது யாராவது சன் டிவி காதில போட்டிடுங்க.
ஐயோ கிரி ,
பிரஷர் ஏறுதே !!!!!!!!
***********
////வில்லன் ரஜினியை பற்றி யாருக்கும் சொல்ல வேண்டுமா என்ன!/////
சந்திரமுகி படத்துல வினீத் தலையை வெட்டிட்டு ,”’தளாங்கு தகதீம் தளாங்கு தகதீம்”’னு கண்ணை உருட்டுவரே …,சான்சே இல்லை !!!! இதுல மிரட்டி இருப்பார் போல இருக்கே ..,பிரஷர் ஏறுதே !!!!!!
********
///பேட்மேன் படத்தில் வரும் ஜாக் நிக்கல்சனை ///
கிரி ,
அது HEATH LEDGER இல்ல ??
கிரி ,
உங்க பதிவுக்கு எப்படி வோட்டு போடுவது …,??
/// ரஜினி ரசிகர்களான அருண் மற்றும் சங்கர் ஆகியோருக்கும் ரஜினியை ரசிக்கும் அனைவருக்கும் இந்தபதிவு சமர்ப்பணம்.///
நன்றி கிரி ….,
///ரஜினி ரசிகர்களான அருண் மற்றும் சங்கர் ஆகியோருக்கும்///
சிறு திருத்தம் ,ரஜினி மற்றும் கிரி ரசிகர் சங்கர் ஆகியோருக்கும்……,இப்படி இருக்கணும்
//////கலக்கல் கிரி தல…..
“திவு ரொம்பப் பெரிதாகி விட்டது போர் அடிக்காமல் எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.” – repeated audience வர்ற அளவுக்கு நல்லா இருக்கு … இதுல போர் அடிக்குமா?
றேபலி//////
இதை கன்னா பின்னா வென்று வழிமொழிகிறேன் …..,
@அருண்
உங்களுக்கு இப்ப ஓகே வா! தலைவர் மாதிரி லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துட்டோம்ல! 😉
=================================================================================
@கோபி
நன்றி கோபி படம் பட்டய கிளப்பும் என்று நம்புவோம்.
=================================================================================
@பிரதீபா
//எனக்கு வாந்தி வருது அண்ணா !! இந்த ஒரு விஷயத்துக்காகவே நான் வெளிநாட்ல சன் டிவி இல்லாம இருக்கறத நெனச்சு ரொம்ப சந்தோஷப்படுறேன்.//
😀 ஆனா பல இடங்களில் சன் டிவி உள்ளதே!
//நெறைய மக்களும் உங்கள மாதிரி தான் !!//
எதிபார்ப்பை நிறைவேற்றுவார் என்று நம்புவோம்.
==================================================================
@ஜீவதர்ஷன்
இதை எவ்வளோ நாளா எல்லோரும் புலம்பிட்டு இருக்காங்க அப்பவே இவங்க கண்டுக்கல.. எந்திரனுக்கா கண்டுக்க போறாங்க! கண்ணுல ரத்தம் வராம விட மாட்டாங்க 😉
===========================================================================
@சங்கர் உங்களோட அன்பிற்கு நன்றி 🙂
//அது HEATH LEDGER இல்ல ??//
இல்லை.. கூகிள் செய்து பாருங்க 🙂
//உங்க பதிவுக்கு எப்படி வோட்டு போடுவது …,?//
தமிழ்மணம் கருவிப்பட்டை மற்றும் தமிழிஷ் ஓட்டு பட்டையை நான் இணைக்கவில்லை.. நான் எந்த குழுவிலும் இல்லாததால் ஓட்டு அவ்வளவா வருவதில்லை அதனால் நானும் விட்டுட்டேன்.
கிரி, படம் பார்த்த பீல் கொடுத்துடீங்க..
மைக்ரோ வே இப்படினா படம் வந்த விமர்சனம், நாலு பேஜ் போகும் போலே..
சன் டிவி தயாரிப்பு ஒன்றை தவிர அனைத்தும் சூப்பர்…(ஓவர்டோஸ்)
உங்க உரைநடை படித்தால் ரஜினியை யாரும் பிடிக்காது என சொல்லவே முடியாது
நிறைவான தகவல்கள் (சங்கர் மாதிரி), வேகமான உரைநடை (தலைவர் மாதிரி)…
கமல் ஒரு லெஜென்ட் என்பது எல்லோருக்கும் தெரியுமே! இது தலைவர் பதிவு என்பதால் அவரை பற்றி மட்டும் கூறினேன்.
பதிவு மட்டும் அன்றி பின்னுடதிட்க்கு ஆன பதில்களும் நச்…
யாருக்கு எப்படியோ, நமக்கும் நம்ம தலைவருக்கும் இது ரொம்ப ரொம்ப முக்கியமான படம். இந்த படத்துக்கு அப்புறம் ரஜினி படம் நடிப்பது என்பது ஒரு கனவுதான் (நம்ம கணக்கே வேற ;)). படம் மட்டும் பட்டய கெலப்பிடுச்சு, நாம உலகத்தையே கலக்கிட மாட்டோம்? அதனால படம் பட்டாசா இருக்கணும்னு கடவுள வேண்டிக்கிறேன்.
கிரி எந்திரன் படத்தை பற்றி நல்ல முறையில் அலசி எழுதியிருக்கின்றீர்கள் விரிவானதாய் இருந்தாலும் படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது நிறைய எழுதுங்கள்
அடுத்து
உங்களுக்கு இருக்கும் பயம் தான் எனக்கும் சன் டிவி எந்திரன் படத்தை விளம்பரம் என்ற பெயரில் ஓவர் டோஸ்ஆக கொடுத்து விட போகிறார்களே என்று
அவர்களுக்கு இந்த படம் வியாபாரம்
ஆனால் ரஜினிக்கு ஷங்கருக்கு நமக்கு இது ஒரு கனவு
என் குடந்தையூர் தளத்தில் எந்திரன் படத்தை பற்றி நான் எழுதிய இடுகையில் நான் குறிப்பிட்டிருந்த வரிகள்
ஒவ்வொரு துறையிலும் உச்சம் தொட்ட சாதனையாளர்கள் இணைந்து பணியாற்றும் இத் திரைப்படம் இந்திய திரை வரலாற்றில் உச்சம் தொட உளமார வாழ்த்துகிறேன்
என்று குறிப்பிட்டிருந்தேன்
எந்திரன் இமாலய வெற்றி பெற நாம் எல்லோரும் இணைந்து வாழ்த்துவோம்
i love Rajini >>>எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்துக்கொள்ளக்கூடாது ன்னு நீங்களே சொல்லிடீங்க ..எனக்கு சன் டிவி விளம்பரத்தை நெனெச்சதான் கை கால்லாம் நடுக்குது
நண்பர் கிரி! எப்பா என்ன ஒரு அலசல். பதிவின் நீளம் படித்துமுடித்த பின்தான் தெரிந்தது. எந்திரன் திரைக்கதை எவ்வளவு வேகமாக இருக்குமோ அதேயளவு சுவை குன்றாத பதிவு. தொடர்ந்து கலக்குங்க. எந்திரன் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
நல்ல முன்னோட்டம்…
@சதா
//மைக்ரோ வே இப்படினா படம் வந்த விமர்சனம், நாலு பேஜ் போகும் போலே..//
சதா அது அந்த மைக்ரோ அல்ல 🙂 நுண்ணிய என்கிற அர்த்தத்தில்
//சன் டிவி தயாரிப்பு ஒன்றை தவிர அனைத்தும் சூப்பர்…(ஓவர்டோஸ்)//
இவங்க ட்ரைலரை நினைத்தால் கலவரமா இருக்குது
//உங்க உரைநடை படித்தால் ரஜினியை யாரும் பிடிக்காது என சொல்லவே முடியாது. நிறைவான தகவல்கள் (சங்கர் மாதிரி), வேகமான உரைநடை (தலைவர் மாதிரி)//
உங்கள் அன்பிற்கு நன்றி சதா. உங்களை போன்றவர்களின் உற்சாக வார்த்தைகளே என்னை இன்னும் தொடர்ந்து எழுத தூண்டும் காரணிகளில் ஒன்று.
==============================================================
@முத்துக்குமார்
// படம் மட்டும் பட்டய கெலப்பிடுச்சு, நாம உலகத்தையே கலக்கிட மாட்டோம்? //
படம் வெற்றி பெறட்டும் அப்புறம் வைத்துப்போம் நம்ம கச்சேரிய! 😉
=============================================================
@சரவணன்
//கிரி எந்திரன் படத்தை பற்றி நல்ல முறையில் அலசி எழுதியிருக்கின்றீர்கள் விரிவானதாய் இருந்தாலும் படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது நிறைய எழுதுங்கள்//
நன்றி சரவணன்
//ஒவ்வொரு துறையிலும் உச்சம் தொட்ட சாதனையாளர்கள் இணைந்து பணியாற்றும் இத் திரைப்படம் இந்திய திரை வரலாற்றில் உச்சம் தொட உளமார வாழ்த்துகிறேன்//
ரிப்பீட்டிக்குறேன் 😉
==============================================================
@ஆனந்த்
//எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்துக்கொள்ளக்கூடாது ன்னு நீங்களே சொல்லிடீங்க ..எனக்கு சன் டிவி விளம்பரத்தை நெனெச்சதான் கை கால்லாம் நடுக்குது//
எல்லோருக்கும் இதே பயம் தான் போல.. 🙂 பலரும் இதையே கூறி இருக்காங்க.. இங்க மட்டுமல்ல பல இடங்களில் நான் படித்த வரைக்கும்.
==============================================================
@நிஜாம்
//பதிவின் நீளம் படித்துமுடித்த பின்தான் தெரிந்தது. எந்திரன் திரைக்கதை எவ்வளவு வேகமாக இருக்குமோ அதேயளவு சுவை குன்றாத பதிவு//
நன்றி நிஜாம்.
==============================================================
@ராசராசசோழன்
நன்றி
ஹீரோ ரஜினியை விட வில்லன் ரஜினியை அதிகம் எதிர்பார்க்கிறேன்
adhey….correct a sonninga Giri… Ippo irukara villainga ellam palaya Rajni(villian a act panna) padatha konjam paaka sollanum.. Dasavatharam la chiristian fletcher enakku romba pidichi irundhadhu.. adhey madhiri thalaivarum pattaya kelappanum…
வணக்கம் கிரி
எப்படி இருக்கிறிங்க?
பதிவு மிகமிக அருமை சிங்கப்பூரில் இருந்தது வேலை பார்த்துகொண்டு எப்படி இவ்வளவு நேரம் எங்களுக்காக செலவிடமுடிகிறது. மிக்க மகிழ்ச்சி நன்றி
யுவராஜ்
தலைமை மன்றம்
பாண்டிச்சேரி
ஈரம் பட பிஸினஸின் போது ஷங்கருக்கும் சன் டி.விக்கும் லாடாய் ஏற்பட்டதாக கேள்வி. கோவா படத்துக்கும் கடைசி நேரத்துல கம்பி நீட்டினார்கள். நடக்கும் அனைத்தையும் வேறு வழியின்றி தலைவரும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனா ஒன்னு சன் டி.வி என்னும் சாம்ராஜ்ஜியம் அழிந்து மண்ணோடு மண்ணாய் போவதை எதிர்காலம் பார்க்கத்தான் போகிறது. அவ்ளோ பெரிய ஜெமினி ஸ்டியோ, மார்டன் தியேட்டர்ஸே காணாம போச்சு, இவனுக என்ன பிஸ்கோத்து.
அப்புறம் சுஜாதாவுக்கு வருவோம்,
தசாவதாரம் படத்துல சுஜாதா மற்றும் கிரேஸி மோகனுக்கு டைட்டில் கார்டில் நன்றி கூட தெரிவிக்காத அநாகரிகத்தைப்போல ஷங்கர் செய்யமாட்டார் என நினைக்கிறேன்.(கமல் ரசிகர்கள் தாராளமாக சண்டைக்கு வரலாம்).
Macchi …kalakkal poda….
Jack Nicholson acted as villain in the 1989 batman movie (Batman) and Heath Ledger in the 2008 batman movie (The Dark Knight).
@விக்னேஷ்
அதே தான்! தலைவரோட வில்லத்தனத்தை தான் அதிகம் எதிர்பார்க்கிறேன்.
@யுவராஜ்
ரொம்ப நல்லா இருக்கேன் 🙂 இப்பெல்லாம் ரொம்ப எழுதுவதில்லை யுவராஜ். வேலை (பொறுப்பு) அதிகம் ஆகிடுச்சு நேரமில்லை.
@காத்தவராயன்
ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க 🙂 சுஜாதாவிற்கு ஷங்கர் நன்றி கூறாமல் இருக்க வாய்ப்பில்லை அப்படி கூறவில்லை என்றால் அது பெரிய இழுக்காகி விடும் அவருக்கு. இதுவே நன்றி தெரிவிக்க சரியான தருணம்.
@கடாவெட்டி
டேய்! உன்னை உகாண்டாவிற்கு துரத்தி விட்டுட்டாங்கன்னு கேள்விப்பட்டேன் 😉 எப்படி இருக்கிறே !
@விஜய்
கில்லாடி விஜய் ஆக விளக்கிட்டீங்க 🙂 நன்றி
miga thelivaana alasal. Unga blog pathi ippodan therinjudhu. Inime thodarndhu padikaren.
Thanks to onlysuperstar.
கிரி சார்
நல்ல விரிவான அலசல் , படித்து முடித்தவுடன் மனதில் பரபரப்பு ஏற்படுகிறது …வணிக ரீதியாக சிவாஜி புரிந்த சாதனை நம் தமிழ் படங்களுக்கு உலக அளவில் ஒரு சந்தை ஏற்படுத்தியது அதை பண் மடங்கு பெரியதாகி நிலை நிறுத்த நம் எந்திரனால் முடியும் .படம் பார்ப்பது மகிழ்ச்சி என்றாலும் இது போன்ற pre release hype மற்றும் கொண்டடாங்கள் தலைவரின் ரசிகர்களாகிய நமக்கு நிறைய மகிழ்ச்சி தரும் . stan winston studios உடைய பணியை நம் படத்தில் காண வெகு ஆவலாக இருக்கிறது .நல்லதே நடக்கும்.எந்திரன் ஒரு benchmark film ஆகா நிச்சயம் வரும்.
மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் தந்து உள்ளீர்கள் மிக்க நன்றி mr . கிரி
Hi Giri,
Nice write up.
Kamesh
கிரி சார் ஒவ்வொரு வரிகளும் அருமை. மெய்மறந்து படித்தேன். இப்படியெல்லாம் எழுத புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது கிரி சார்
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
🙂
கிரி ,
ஊருக்கு போய்டீங்களா ? பாட்டெல்லாம் அதகளம் ..,கேட்டீங்களா ?
GIRI தல,
THALAIVAR PATTTUUU ALUMMMPUU KETTACHAAAA???
@mrs.krishnan நன்றி தொடர்ந்து படிங்க 🙂
@dr suneel ரசிகனின் மனதை அப்படியே கூறி உள்ளீர்கள். உங்களைப்போலவே அனைவரும் எதிர்பார்ப்பார்கள்
@மாரியப்பன் & காமேஷ் நன்றி
@வசி என்னை ரொம்ப புகழறீங்க (சிவாஜி ரஜினி வசனம் 😉 ) உங்கள் அன்பிற்கு நன்றி
@ஷங்கர் ரொம்ப நன்றி ஆனா முன்னாடியே கிடைத்து விட்டது. நாங்களும் நெட் ல புடிப்போம்ல 😉
@ஸ்வேதா இணைக்கிறேன் நன்றி
@சங்கர் & அருண் பாட்டெல்லாம் இரண்டு நாளா கேட்டுட்டு இருக்கிறேன். எனக்கு 30 ம் தேதியே பாடல் வந்து விட்டது 🙂 சூரியன் FM போட்ட கொஞ்ச நேரத்துலையே RIP செய்து வந்து விட்டது. ரொம்ப ரொம்ப ரொம்ப சாரி இருவருக்கும் அனுப்ப மறந்து விட்டேன். என்னோட http://www.facebook.com/girirajnet அப்டேட் நீங்க பார்த்து இருந்தால் தெரிந்து இருக்கும். இருவரும் என்னை மன்னித்துக்குங்க இனி வரும் அனைத்து அப்டேட் ம் அனுப்புகிறேன்.
அப்புறம் பாட்டெல்லாம் தாறுமாறாக இருக்கு எனக்கு ரொம்ப பிடித்த பாடல் காதல் அணுக்கள், கிளிமாஞ்சாரோ, Boom Boom Roboda 🙂
கிரி ,
இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க …,நாடு கேட்டு போச்சி , உங்களை திருத்த முடியாது ..,சும்மான எந்திரன் பேர போட்டு ஹிட்ஸ் வாங்குரதக்காக ….,உட்டா ரஜினியை நாட்டுல நடக்கிற அநியாயத்துக்கு ரஜினி தான் காரணம் ,கரண்ட் கட்டுக்கு ரஜினிதான் காரணம் ,விலை வாசி உயர்ந்ததுக்கு ரஜினி தான் காரணம் ,அப்பன் பாக்கெட்ல இருந்து ரஜினி படத்துக்கு போறாங்க அப்படின்னு எத்தன பதிவு வரபோகுதுன்னு பாருங்க …..ஒரு நாள் சந்தோசம் அத கெடுக்க பார்கிறாங்க:(
சூப்பர்
கிரி ,
நேரமிருந்தால் பாட்டை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்
Its really great that Super star is going to rock again…….
We all are proud to have a such a men in our life………
Superstar is going to rock the whole world………..
we are eagerly waiting for Endhiran release…………
Superstar I pray to god to u Long life……….
@சங்கர் அதெல்லாம் கண்டுக்காதீங்க! அப்படித்தான் சொல்வாங்க.. எனக்கு பழகி விட்டது 🙂
@கடையம் ஆனந்த் நன்றி
@சங்கர் பார்த்து விட்டேன். தலைவர் எப்போதும் கலக்கல்ஸ்
@பிரதிபா நன்றி
super super
I am a Super Star Fan.Always mr Sankar is super Directer of Tamil industry.Hats of SANKAR ANBUDAN KARUPPIAH,
கிரி
கலகிட்டிங்க ponga
வாழ்த்துக்கள்
சிறந்த பதிவு மிக்க நன்றி
இலங்கை வாசகன்