இந்திய பயண அனுபவங்கள்

36
gobichettipalayam

எங்க ஊர்ல உள்ள கோவில் திருவிழாவிற்காகப் பாடல்கள் போட்டு ஒலிபெருக்கியில் அலற விட்டுக் கொண்டு இருந்தார்கள் (அதுவும் விடியற்காலையிலே). Image Credit

பாவம் பொதுத் தேர்வு எழுதும் +2 வகுப்பு மாணவர்கள்.

இந்தக் கிறுக்கனுக எப்ப தான் திருந்தப் போறானுகளோ! இவங்க கிட்ட போய் ஏன்யா! இப்படிச் செய்யறீங்கன்னு கேட்டா நம்மைத் தான் திட்டுவானுக.

அவங்க பசங்களே படித்தாலும் இதே நிலைமை தான்.

இருக்கிற கோவிலை யாரும் பராமரிக்க மாட்டேங்கிறாங்க புதுசு புதுசா கோவில் கட்டுறாங்க.

என்ன விஷயம்னு பார்த்தால் அப்பத் தான் கோவில் தர்மகர்த்தா ஆக முடியுமாம்..அப்பத் தான் ஒரு மதிப்பு இருக்குமாம்..விளங்கிடும்.

ஆண்டவா! இவங்க இம்சைக்கு ஒரு அளவே இல்லையா!

ஏர்டெல் கஸ்டமர் கேர்

அக்கா பையன் அவனுக்கு அவனோட கல்லூரி நண்பர்கள் அனுப்பிய ஒரு வாய்ஸ் SMS கொடுத்தான், அதுல ஏர்டெல் கஸ்டமர் கேர்ல இருக்கிறவங்களைப் பலர் பயங்கரமா கலாய்க்கிறாங்க.

ஒருத்தர் அங்குப் போன் செய்து இந்த இடத்துல நிற்கிறேன் என்னோட வண்டி ரிப்பேர் ஆகி விட்டது யாரையாவது அனுப்புங்க என்று கூறுகிறார்.

அதற்கு அவங்க சார் இது ஏர்டெல் கஸ்டமர் கேர் னு கூற, நீங்க தானே எங்க இருந்தாலும் உதவிக்கு வருவோம்னு சொன்னீங்க என்று மொக்கைய போட்டுட்டு இருக்காரு, பாவம்.

இதில் பேசிய பலர் கொங்கு ஸ்லாங்கில் பேசினார்கள்.

இவர்கள் அனைவரும் கலாய்க்கிறார்கள் என்பது முதலில் பேசும் போதே தெரிந்து விடுகிறது.

ஆனால், அவர்கள் பேசுவது ரெகார்ட் செய்யப்படுவதால் கஸ்டமர் கேர் நபர்கள் வேறு வழி இல்லாமல் அமைதி காக்க வேண்டி உள்ளது.

ஒரு சிலர் மார்க்கெட்டிங் செய்கிறேன் பேர்வழி என்று நமக்கு ஃபோனை போட்டுக் கிரெடிட் கார்ட் வாங்குங்க அதை வாங்குங்க இதை வாங்குங்க என்று தொல்லை செய்வதைப் போல இவர்களுக்கு இதைப் போலத் தொல்லை.

இதைப் போல மார்க்கெட்டிங் செய்யும் பெண்களிடம் எதையும் வாங்காமல் கடலை மட்டும் போடும் வில்லாதி வில்லன்களும் பலர் உண்டு.

பிரச்சனைகள் பல விதம் அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் 🙂 .

பிசியோ பிசி

குடும்பஸ்தன் வேற ஆகி விட்டபடியால் ஊருக்கு வருவது விட்டுப் போன கல்யாண வீட்டிற்கும் இழவு வீட்டிற்கும் சொந்தக்காரங்க வீட்டிற்கும் செல்லவே சரியாக உள்ளது.

வெய்யில் வேற வறுத்தெடுக்குது ஏற்கனவே ரொம்ப “கலரா” இருப்பேன் வண்டில சுத்துனதுல சூப்பர் “கலர்” ஆகி விட்டேன், சுருக்கமா காஞ்சு கருவாடு ஆகிட்டேன்.

நம்ம பதிவர்கள் பரிசல் வேலன் வெயிலான் வால்பையன் சினிமா நிருபர், சென்னையில் அப்துல்லா (நம்பர் மாத்திட்டாரு அவசரத்துல கேட்டுப் போன் வேற பண்ணுல மன்னித்துக்குங்க).

முரளிகண்ணன் மற்றும் பதிவுலகம் சாராத இணைய நண்பர்கள் வினோ சுந்தர் உட்படப் பலரை பார்க்க முடியலை ஒரு சிலரிடம் பேசவே முடியவில்லை.

இந்த முறை உண்மையாகவே ரொம்பப் பிசி, கவுண்டர் சொல்ற மாதிரி பிசியோ பிசி.

நீங்க சூப்பர் உங்க உடை சூப்பர்

சரி சிங்கையில் தான் பாட்டு எதுவும் அதிகமா டிவில பார்க்க முடியல இங்க வந்து பார்ப்போம்னு பார்த்தா..மொக்கைனா மொக்கை அப்படி ஒரு மொக்கையா இருக்கு.

போன் பண்ணி இவங்க பண்ணுற அலப்பறை தாங்க முடியல சத்தியமா!

எப்படித் தான் இப்படிப் போன் போட்டு நீங்க சூப்பர் உங்க உடை சூப்பர் உங்க பேச்சு சூப்பர் னு பேசிட்டு இருக்காங்களோ!

நம்பினா நம்புங்க 10 நாள்ல அரை மணி நேரம் கூட மியூசிக் சேனல் பார்க்கல நேரமும் இல்லை.

போன்ல பேசுறதை விட விளம்பரம் வேற சகிக்கல எத்தனை விளம்பரம்டா! சாமி.

ஜெயா மியூசிக்ல அப்படி இல்லைன்னு கேள்வி பட்டேன்.. எங்க ஊர்ல அந்தச் சேனல் தெரிய மாட்டேங்குது.

முதலில் scv சேனல்ல வெறும் பாட்டு மட்டும் வரும் அதை ஆன் செய்து விட்டு என் வேலைகளைப் பார்த்துட்டு இருப்பேன், இப்ப அதற்கும் வழி இல்லை.

என்னமோ போங்க! சேனல் தான் அதிகம் ஆகிட்டே போகுது பார்க்கிற மாதிரிச் சேனல் குறைந்து கொண்டே வருகிறது.

வாழ்த்துக்கள் தோனி

நான் சிங்கையில் இருக்கிற நினைப்பில் (அங்குத் தனிக் கட்டணம் என்பதால் subscribe செய்யவில்லை) கிரிக்கெட் நேரலை இருப்பதையே மறந்து விட்டுச் செய்திகளில் வரும் ஸ்கோர் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

நினைவு வந்து பார்த்தால் போட்டி பாதி முடிந்து விட்டது, அடடா! வடை போச்சே மாதிரி ஆகிட்டேன்.

இந்தச் சேவாக் என்னங்க இந்த அடி அடிக்கிறார்.

என்னமோ! ஆட்டமே அடுத்த ஓவரில் முடிந்து விடுவதைப் போலச் சிக்ஸ் ஃபோர் னு பட்டய கிளப்புறாரு (மைதானம் வேறு சின்னது கேட்க வேண்டுமா).

நியூசி டீம்ல சொன்னதைப் போல அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகிட்டாரு.

எல்லோரும் இவன் எப்ப தான் அவுட் ஆகி தொலைவான் என்று பார்த்துட்டே இருந்து இருப்பாங்க..

ஹி ஹி ஹி ஆனா நம்மாளுங்க பெரும்பாலும் அனைவருமே நல்லா விளையாடுனாங்க.

சச்சின் ஒரு போட்டியில் அடித்த அடியைப் பார்த்ததும் சரி எப்படியும் அன்வர் சாதனையை (194) முறியடித்து விடுவாரு என்று இருந்தேன் (ஓவர் நிறைய இருந்தது) கடைசில அடிபட்டுப் பெவிலியன் வந்துட்டாரு.

அடப்பாவிகளா இப்படிக் கவுத்துட்டீங்களே னு டென்ஷன் ஆகிட்டேன்.

இந்தியா இப்ப என்னடான்னா! தொடரையும் கைப்பற்றி விட்டாங்க.

நியூசி ல மட்டும் தான் நம்ம ஆளுங்க எடுபடாம இருந்தாங்க இப்ப அந்தக் குறையும் தீர்ந்து போச்சு.

நம்ம ஆளுங்க இதுவரை அதிர்ஷ்டத்தில் வெற்றி பெறவில்லைனு மகிழ்ச்சியடையலாம் 🙂 வாழ்த்துக்கள் தோனி.

ரயில்

எங்க ஊரிலிருந்து சென்னை வந்து தான் சிங்கை வந்தேன்.

அப்பா ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட் நம்பர் பார்த்தேன் அப்பாடா! (25) நடுவில் தான் இருந்தது கழிவறை பக்கம் இல்லை.

பிறகு என் அத்தையும் சென்னை வருவதாகக் கூறியதால் அவருக்கும் முன்பதிவு செய்தார்கள் எங்கள் கோச்சிலேயே இடம் கிடைத்து விட்டது.

ரயில் நிலையம் வந்த பிறகு பார்த்தால் அவரது இடம் 65 (தாமதமாக முன்பதிவு செய்ததால் அருகில் கிடைக்கவில்லை. அதே கோச்சில் கிடைத்ததே பெரிய விஷயம்) கடைசி இடம்.

வேற வழி இல்லாம அவரை என் இடத்தில் விட்டு விட்டு நான் அங்கே சென்றேன்.

என்ன கொடுமை இது! அடேய்! கிரி உனக்கு ராசி விடாம துரத்துகிறது என்று புலம்பிக் கொண்டே சென்றேன்.

கழிவறை கப்பையும் லைட் வெளிச்சத்தையும் கூடச் சகிச்சுக்கலாம் போல, சேலத்தில் ஒரு மார்வாடி (தலையில முக்காடு போட்டு கலர் கலரா புடவை கட்டுவாங்களே அவங்க தான்) ஏறியது மூன்று பெண்கள் ஒரு ஆண்.

யப்பா! என்ன வாய்டா சாமி! லொட லொட ன்னு பேசிட்டே வராங்க.. மெதுவா பேசினா கூடப் பரவாயில்லை 10 ம் நம்பர் ல படுத்து இருப்பவனே டென்ஷன் ஆகிடுவான் அப்படிக் கத்துறாங்க.

என் நிலைமை ம்ம்ம் என்னத்தைச் சொல்றது. இவங்க சண்டை எல்லாம் போட்டா எப்படி இருக்கும்னு கற்பனை செய்து பார்த்து பீதி ஆகி கம்முனு தூங்கிட்டேன்.

சத்யம்

சென்னை நண்பர்களுடன் நேரமில்லாததால் எங்கும் செல்ல முடியவில்லை, சரி படத்திற்குச் செல்லலாம் என்று முடிவு செய்து “நான் கடவுள்” படம் “சத்யம்” திரை அரங்கில் சென்றோம்.

நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் என்றாலும் சத்யம்ல் பார்க்கலாம் என்று போனோம் அது என்னவோ எனக்குச் சத்யம் திரை அரங்கம் மேல ஒரு காதல்.

நான் முன்பு பார்த்ததை விட அதிக மாற்றங்கள்.

சும்மா சொல்லக் கூடாது சிங்கையில் கூட இதைப் போலத் திரை அரங்கு நான் பார்த்தது இல்லை.

வாங்கும் பணத்திற்கு (ரொம்ப அதிகம் தான் அதுவும் ஸ்நாக்ஸ்… முடியல) சிறப்பாக உள்ளது.

திரை அரங்கிற்குக் கூட்டம் வருவதே இல்லை என்று அனைவரும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இங்கே என்னடாவென்றால் நிற்க இடம் இல்லை அவ்வளோ கூட்டம் அதுவும் வார நாளில்.

பெரும்பாலும் இளசுகள் தான். ம்ம்ம் சென்னை பெண்கள் அழகாகி கொண்டே போகிறார்கள், ஒன்றும் சொல்வதிற்கில்லை 😉 நம்ம ஊர் நம்ம ஊர் தான்.

*********************

என்னடா ஆளை காணோமே என்று திட்ட வேண்டாம், இரண்டுவாரம் இணையம் வரவில்லை (வரக் கூடாது என்றே இருந்தேன்).

இப்ப என் பையன் வந்துட்டான் அதுனால அவன் கூட நேரம் செலவிடுவதையே விரும்புகிறேன்.

என்ன தான் சொல்லுங்க குழந்தைங்க கூட நேரம் செலவிடுவதில் இருக்கும் சுகமே தனி தான், அது இப்ப தான் எனக்கு (வாய்ப்புக் கிடைத்தது) தெரியுது, சுகமான சுமை.

நெக்ஸ்ட் மீட் பண்றேன்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

36 COMMENTS

 1. மசாலா பொரி கொறிக்க சுகம்.
  குழந்தையுடன் நேரம் செலவழித்தல் அதை விட சுகம்.

 2. ரொம்ப பெரிய பதிவுங்கண்ணா…

 3. //இருக்கிற கோவிலை யாரும் பராமரிக்க மாட்டேங்கிறாங்க புதுசு புதுசா கோவில் கட்டுறாங்க, என்ன விஷயம்னு பார்த்தால் அப்ப தான் கோவில் தர்மகர்த்தா ஆக முடியுமாம்.//

  நல்லா இருக்கே இந்த யோசனை

 4. குடும்பதினருடேன் நேரம் செலவழிக்க வாழ்த்துக்கள் கிரி,

  //கிரி உனக்கு ராசி விடாம துரத்துகிறது//

  உங்களக்கு மட்டும் இல்லை எனக்கும் தான், நேற்று மனைவி, மகனுடன் லிட்டில் லிட்டில் இந்திய செல்லலாம் என்று கிளம்பி LRT வந்தேன். லிப்ட் அருகில் சென்றதும் உள்ள இருந்த சீனன் க்ளோஸ் பட்டனை அழுத்த கண் முன்னே அது மேல சென்றது 🙁 . தங்கமணி முறைத்து “நாந்தான் சீக்கிரம் வாங்கனு சொன்னனே” சரி நம்ம ராசி இன்னைக்கு கரெக்டா வேலை செய்து நினைத்து, வெயிட் செய்து சுவைப் செய்து மேல வந்தால் மறுபடியும் கண் முன்னே LRT Rail கதவு க்ளோஸ் செய்து முன்னே செல்கிறது 🙁 தங்கமணி மீண்டும் முறைத்து “நாந்தான் சீக்கிரம் வாங்கனு சொன்னனே” சரி நம்ம ராசி இன்னைக்கு மருபடியும் கரெக்டா வேலை செய்து நினைத்து, வெயிட் செய்து அடுத்த LRT பிடித்து MRT வந்தோம். தானியங்கி படிகட்டுகள் மூலம் மூன்று மாடிகள் கிழறங்கி வரும்போது ரயில் தள மேடையில் இருந்து எல்லோரும் ரயிலில் உள்ள சென்று கொண்டிருந்தார்கள். சரி என்று சந்தோஷபட்டு கிடு கிடு வென்று இருவரும் ரயில் அருகில் வந்து தங்கமணி உள்ளே சென்று விட்டார்கள் 🙂 நான் மகனுடன் வந்ததால் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. மறுபடியும் கண் முன்னே ரயில் கதவு க்ளோஸ் செய்து முன்னே செல்கிறது 🙁 இந்த முறை தங்கமணி “நாந்தான் சீக்கிரம் வாங்கனு சொன்னனே” சொன்னது கேட்க வில்லை ஏன் என்றல் ரயில் கண்ணாடி கதவு தான் மூடி கொண்டதே 🙂 முறைத்து மட்டுமே தெரிந்தது. அப்பாடா என்று நினைத்தால் கைத்தொலைபேசி அழைத்தது யார் என்று பார்த்தல் தங்கமணி “நாந்தான் சீக்கிரம் வாங்கனு சொன்னனே” 🙁 சரி “அடுத்த ஸ்டேஷனில் இறங்கிடு”, நான் அடுத்த ரயில் பிடித்து தங்கமணியுடன் சேர்ந்து லிட்டில் இந்திய போய் இறங்கினேன். அங்கு வேலை முடிந்து கிளம்பும்போது தனித்தனியாக இரண்டு டாக்ஸி பிடித்து தங்கமணியை வீட்டுக்கும் நான் அலுவலகத்திற்கும் வந்து சேர்ந்தேன் 🙁

 5. //arun said…
  nalla alasal giri..//

  நன்றி அருண்

  =================================================================================

  //நசரேயன் said…
  பையனோட நிறைய நேரம் செலவழிக்கிறது நல்லது தான்//

  அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்கிட வேண்டியது தான் 😉

  ================================

  //பிரேம்ஜி said…
  ரொம்ப சுவையான மசாலா. ரசிச்சு படிச்சேன்//

  நன்றி பிரேம்ஜி

  =========================

  //ராமலக்ஷ்மி said…
  மசாலா பொரி கொறிக்க சுகம்.//

  :-))) நமத்து போகாம இருந்தா சரி

  //குழந்தையுடன் நேரம் செலவழித்தல் அதை விட சுகம்.//

  உண்மை தான்

  ====================

  //SUREஷ் said…
  ரொம்ப பெரிய பதிவுங்கண்ணா…//

  :-))) அந்த ஏர்டெல் விஷயத்தால் அப்படி தெரிகிறது என்று நினைக்கிறேன்

  //நல்லா இருக்கே இந்த யோசனை//

  ரூம் போட்டு யோசிக்கறாங்கலாம்

  =============================

  //SurveySan said…
  :)//

  இவ்வளோ பெரிய பதிவிற்கு இவ்வளோ சின்ன பின்னூட்டமா அவ்வ்வ்வ்வ்வ்

  =======================

  //தமிழ் பிரியன் said…
  வாங்க.. வாங்க… நாமலும் ஊருக்கு போய் இருந்த போது இண்டர்நெட்டுக்கே வரலை…//

  நல்ல காரியம் செய்தீங்க போங்க 🙂

  //பையன் கூட செலவிடுவதை விட சிறப்பான நேரம் எதுவுமில்லை.. :-)//

  100% சரி

  =======================

  //கணேஷ் said…
  கிரி, சென்னை வந்துட்டீங்களா? தொடர்பு கொள்ளலமா?//

  கணேஷ் நான் சிங்கையே வந்து விட்டேன் 🙂 என்னுடைய மின்னஞ்சலுக்கு உங்க தொலைபேசி என்னை அனுப்புங்கள் அடுத்த முறை வரும் போது கண்டிப்பாக(நம்புங்க) அழைக்கிறேன் 🙂

  ==============================

  //M Arunachalam said…
  This post is very nice. You have described your experiences in a short & sweet manner.//

  நன்றி அருண்

  //we can't get back certain phases in life later on, if we miss enjoying them. Internet can always wait.//

  சரியா சொன்னீங்க அருண். யாராலையும் எத்தனை பணம் கொடுத்தாலும் திருப்பி தர முடியாது.

  இணையத்துக்கு அடிமையாகி விட கூடாது என்று தான் பதிவுகளையே குறைத்து கொண்டேன்

  =======================

  //முரளிகண்ணன் said…
  வருக வருக//

  முரளிகண்ணன் உங்களை சந்திக்க நினைத்தேன் முடியலை..அடுத்த முறையாவது சந்திப்போம்.

  ===========================

  //பாசகி said…
  எப்பவும் போல கலக்கல்ஸ்…//

  வாங்க சக்தி, கலக்கல்னு மசாலா தலைப்பு பார்த்து சொல்றீங்களா :-)))

  ======================

  //Logan said…
  குடும்பதினருடேன் நேரம் செலவழிக்க வாழ்த்துக்கள் கிரி, //

  நன்றி லோகன்

  //உங்களக்கு மட்டும் இல்லை எனக்கும் தான்//

  ஹா ஹா ஹா ஹா ஹா லோகன் உங்க அனுபவம் செம காமெடி…

  "நாந்தான் சீக்கிரம் வாங்கனு சொன்னனே" செம வசனம் :-)) கற்பனை செய்து பார்த்தேன் ஹா ஹா ஹா

 6. வாங்க.. வாங்க… நாமலும் ஊருக்கு போய் இருந்த போது இண்டர்நெட்டுக்கே வரலை… பையன் கூட செலவிடுவதை விட சிறப்பான நேரம் எதுவுமில்லை.. 🙂

 7. //Vaanathin Keezhe… said…
  அதென்ன கெட்ட பழக்கம்… ப்ளைட்ல வந்து உட்கார்ந்த பிறகு எஸ்எம்எஸ் கொடுக்கிறது… //

  ஹலோ! நான் அதற்க்கு முன்னாடியே கொடுத்துட்டேன்(ஆனா விமான நிலையத்தில் இருந்து தான் கொடுத்தேன்) நீங்க தாமதமா பார்த்து நான் உள்ளே இருக்கும் போது போன் பண்ணினா என்ன பண்ணுறது? என் பையன் வேற கத்துகத்துனு கத்துறான் அவனை சமாதானம் செய்வதற்குள் எனக்கு கிறுகிறுன்னு ஆகி விட்டது.

  //அப்பதான் வந்து ‘பிடிக்க’ முடியாதுங்கற ‘தெகிரியம்’தானே!//

  :-)))) நான் என்ன பண்ணுறது சுத்தமா டைம் இல்ல..அடுத்த முறை கண்டிப்பா “மீட்” பண்ணுறோம் 😉

  =================

  //SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said…
  எங்களை பார்க்க வருவதாக சொலிவிட்டு டேககா குடுத்துட்டிங்களே அதை சொலவே இல்லையே.. :))//

  சஞ்சய் நான் வியாழன் வருகிறேன் என்று தான் கூறினேன், வேலன் தான் போன் செய்வதாக கூறினார், பிறகு அவர் வேலை இருந்தபடியால் அழைக்கவில்லை, எனக்கும் அடுத்த நாள் உறவினர் திருமணம் இருந்ததால் வெள்ளிகிழமை வரமுடியாது. நம்புங்க.. வேடும் என்றால் வேலன் அவர்களிடம் கேட்டு பாருங்க.. நான் எவ்வளோ நல்லவன் என்று :-)))

  //அந்த ஏர்டெல் மேட்டர் நிஜம் இல்லை கிரி.//

  அப்படியா! ஆனா அவர்கள் பேசியது நிஜமான கஸ்டமர் கேர் ஆள் போல தான் இருந்தது.

  உங்களுக்கு கண்டிப்பாக SMS வந்து இருக்கும்…. அனுபவஸ்தர் சொன்ன கேட்டுக்க வேண்டியது தான் ;௦-)

 8. Giri,

  This post is very nice. You have described your experiences in a short & sweet manner.

  Pl try to spend more time with your son. As you may well know, we can't get back certain phases in life later on, if we miss enjoying them. Internet can always wait.

 9. நீங்க கஷ்டப்பட்டு பொழத கழிச்சது எங்களுக்கு படு தமாசா இருக்கு!

  நெட்டு படுத்துவதால் கும்மி நாளைக்கு

 10. அதென்ன கெட்ட பழக்கம்… ப்ளைட்ல வந்து உட்கார்ந்த பிறகு எஸ்எம்எஸ் கொடுக்கிறது… அப்பதான் வந்து ‘பிடிக்க’ முடியாதுங்கற ‘தெகிரியம்’தானே!

 11. எங்களை பார்க்க வருவதாக சொலிவிட்டு டேககா குடுத்துட்டிங்களே அதை சொலவே இல்லையே.. :))

  அந்த ஏர்டெல் மேட்டர் நிஜம் இல்லை கிரி. அதுல இந்த பையன் பேசறது சத்தமா தெளிவா இருக்கும். ஆனா கஸ்டமர் கேர்ல பேசறது சரியா கேட்காது. போனில் பதிவு செய்தால் 2 தரப்பும் ஒரே அளவு சத்தத்தில் தெளிவாக கேட்கும். இதுபோல் இப்போ நிறைய வேடிக்கை MMS வந்துவிட்டது. ஒரு வங்கியிலிருந்து கிரெடிட் கார்ட் வாங்க அழைக்கும் போது ஒருவர் விஐபி சூட்கேஸ் பத்தி பேசுவார் தப்பு தப்பா ஆங்கிலத்தில். அதுவும் நீண்ட நேரத்திற்கு. இதெல்லாம் நிஜம் இல்லை.

 12. //வால்பையன் said…
  நீங்க கஷ்டப்பட்டு பொழத கழிச்சது எங்களுக்கு படு தமாசா இருக்கு!//

  இருக்கும் இருக்கும்

  //நெட்டு படுத்துவதால் கும்மி நாளைக்கு//

  ரொம்ப கும்மிடாதீங்க 😉

  =====================

  //Senthil Kumar said…
  hi giri, yeppa chennai vanthinga?. //

  போன வாரம். யோவ்! உனக்கு போன் செய்தேன் செகண்ட் லைன் போனது, சரி நீ திரும்ப பண்ணுவே என்று இருந்தேன்..காணோம் நானும் மறந்துட்டேன்.பாக்கியநாதனுக்கு வேற போன் பண்ணல, அவன் என்ன சொல்ல போறானோ 😕

  //your writings are very good now a days. lot of impovements. //

  எனக்கென்னமோ எப்போதும் போல எழுதற மாதிரி தான் இருக்கு..

  ==================

  //singainathan said…
  🙂

  Pls Come tomorrow without fail//

  நாளைக்கு இல்லைங்க ஞாயிறு.

  ========================

  //ஜோதிபாரதி said…
  ஆகா! அருமையான பகிர்வு!!//

  நன்றி ஜோதிபாரதி

  //இதிலிருந்து எனக்கு ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது!நாளை சிங்கை நாதன் அல்வா கொண்டு வருவார்!!//

  ஹி ஹி ஹி ஹி

 13. //Blogger singainathan said…

  🙂

  Pls Come tomorrow without fail//

  இதிலிருந்து எனக்கு ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது!
  நாளை சிங்கை நாதன் அல்வா கொண்டு வருவார்!!
  வரவேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!!!
  இப்போது மனசை மாற்றிக் கொண்டேன்!
  நாளை கண்டிப்பாக வருகிறேன்!!

 14. சென்னைக்கு வந்து படத்துக்கெல்லாம் போக முடியுது. எனக்கு போன் பண்ன முடியல??

  //சென்னையில் அப்துல்லா (நம்பர் மாத்திட்டாரு அவசரத்துல கேட்டு போன் வேற பண்ணுல மன்னித்துக்குங்க) //

  சீரியசாவே சொல்றேன். மன்னிப்பு…எனக்கு தமிழில் பிடித்த ஒரே வார்த்தை.

  மன்னிச்சிட்டேன் 🙂

 15. //சரவணகுமரன் said…
  என்ஜாய் பண்ணுங்க… கிரி…//

  🙂 நன்றி சரவணகுமரன்

  =====================

  //எம்.எம்.அப்துல்லா said…
  சென்னைக்கு வந்து படத்துக்கெல்லாம் போக முடியுது. எனக்கு போன் பண்ன முடியல??//

  போன் நம்பர் மாத்தறீங்க எங்களுக்கு ஒரு மெயில் அனுப்பனும் என்று தோணல 😉

  //மன்னிச்சிட்டேன் :)//

  நன்றி அப்துல்லா

 16. கொஞ்சம் பெரிய பதிவுதான்.. இருந்தாலும் படிக்கும்படி இருக்கு ..
  தொடர்ந்து எழுதுங்கள் கிரி

 17. நெறைய மசாலா படம் பாத்து கேட்டு போய்டீங்க (உங்க பதிவு தலைப்பு பத்தி சொல்லுறேன்).

  இந்த மசாலா பதிவு ரசிக்கும் படியா இருக்கு கிரி.

 18. //தமிழன்-கறுப்பி… said…
  அப்புறமா வாறேன்.. :)//

  ஆளையே காணோம்!

  ==================

  newspaanai க்கு நன்றி

  =========================

  //ஆ.ஞானசேகரன் said…
  கொஞ்சம் பெரிய பதிவுதான்.. இருந்தாலும் படிக்கும்படி இருக்கு ..//

  நல்ல வேளை 🙂

  தூக்கம் வருதுன்னு சொல்லாம இருந்தீங்களே 😉

  =======================

  //மோகன் said…
  நெறைய மசாலா படம் பாத்து கேட்டு போய்டீங்க (உங்க பதிவு தலைப்பு பத்தி சொல்லுறேன்). //

  வருவது எல்லாமே மசாலா படமா தான் இருக்கு 😉

  //இந்த மசாலா பதிவு ரசிக்கும் படியா இருக்கு கிரி.//

  :-)) நன்றி மோகன்

 19. அருண் இது மாதிரி எல்லாம் சண்டை போட்டு சலித்து விட்டது, உங்களுக்கு தெரியாததா! அதனால் தற்போது இதை போன்ற விசயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.

 20. //மங்களூர் சிவா said…
  நல்ல மிர்ச்சி மசாலா. //

  :-))) நன்றி சிவா

  //சென்னை பெண்களெல்லாம் அழகாகீட்டே போறாங்களா?????
  ம் இருக்கட்டும்! இருக்கட்டும்!!!//

  நாங்க உண்மைய தான் பேசுவோம் 😉

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here