எனக்கு மட்டும் தான் இப்படி ஆகுதா! :-)

39
எனக்கு மட்டும் தான் இப்படி ஆகுதா!

னக்கு மட்டும் தான் இப்படி ஆகுதா இல்லை எல்லோருக்கும் இப்படி ஆகுதானு தெரிஞ்சுக்கணும். Image Credit

உங்களுக்கும் இப்படின்னா…அப்பாடா! னு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுப்பேன் 🙂 .

பேருந்து

அது என்னன்னே தெரியலை.. எனக்கும் பேருந்துக்கும் அப்படியொரு ராசி.

சரி சென்னை ல இருக்கும் போது தான் அப்படின்னா! சிங்கப்பூர் வந்தும் இப்படித் தான் இருக்கு.

ஒரு பேருந்துக்கு நிக்கிறேன்னு வைங்க..அந்தப் பேருந்து வரவே வராது….இல்லை நான் வர வரப் போய்டும்.

எவ்வளோ தான் சீக்கிரம் வந்தாலும் அப்படி ஆகுது தாமதமா வந்தாலும் அப்படித் தான் ஆகுது (சிங்கப்பூர்ல பேருந்து கண்டிப்பா வந்துடும் அது ஒரு ஆறுதல்)

எனக்குத் தேவையில்லாத பேருந்துகள் மாற்றி மாற்றி வந்து மனுசன வெறுப்பேத்திட்டு இருக்கும்.

வரிசை

அது என்னமோ நான் நிற்கிற வரிசை மட்டும் நகரவே நகராது.

பக்கத்து வரிசை வேக வேகமா போகும்.. சரின்னு அதுக்கு மாறி நின்னா அந்த வரிசை நின்னுடும் 🙂 . இது எனக்கு ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யும் போது நேரும்.

அப்பாடா! ஒரு வழியா கவுன்ட்டர் கிட்ட வந்துட்டோம்னு நிம்மதியா இருக்கும் போது டக்குனு கவுன்ட்டர் மூடி விட்டு அடுத்த வரிசைல போய் நில்லுங்கன்னு சொல்லிடுவாங்க.

நாம உஷாராகி நிற்பதுக்குள்ள பக்கத்து வரிசை காரங்க டக்குனு வந்து நின்னு என்னை மறுபடியும் பின்னாடி தள்ளிடுவாங்க.

டிவியில் திரைப்படம்

நான் வீட்டுல இருக்கும் போது மொக்கைனா மொக்கை அப்படி மொக்கை படம் போடுவாங்க.

சரி வெளியே கிளம்பலாம் என்று முடிவு செய்து கிளம்பும் போது பார்த்தா சூப்பர் சூப்பர் படம் போட்டு வெறுப்பேத்துவாங்க.

அதுவும் இல்லைனா ஒரு சில நாள் எந்தச் சேனல் போட்டாலும் பாடாவதி படமா போட்டுக் கழுத்த அறுப்பானுக.

இல்லைனா மொத்தமா எல்லோரும் சொல்லிவைத்த மாதிரி நல்ல படம் போட்டு எந்தப் படத்தைப் பார்க்குறதுன்னு தெரியாம மண்டைய பிச்சுக்க வைப்பாங்க.

ஒரு சில நாள் ஏதாவது சேனல் ல நல்ல படம் இருக்கும் அன்னைக்குன்னு பார்த்து அந்தச் சேனல் பக்கமே போக மாட்டேன்.

க்ளைமாக்ஸ் கிட்ட வரும் போது தான் நினைவே வரும் கடைசில அடடா! வடை போச்சே மாதிரி முழிப்பேன்

தள்ளுபடி

வாங்கிய பொருள் அந்த வாரமே எங்காவது தள்ளுபடி போட்டு அதே பொருளை விலை குறைத்து கொடுத்து என்னைக் கொலை வெறி ஆக்கி விடுவார்கள்.

அடப்பாவிகளா! இதை ஒரு வாரம் முன்னாடி செய்து இருக்கக் கூடாதா என்று என்னைப் புலம்ப விட்டு விடுவார்கள்.. 🙁 .

முன் பதிவு

ரயில்ல முன் பதிவு செய்தால் அது என்னன்னே தெரியல எனக்கு மட்டும் 1 ல் இருந்து 10 க்குள் தான் படுக்கை எண் கிடைக்கும்.

அதில் என்ன பிரச்சனை அது தான் இடம் கிடைத்து விட்டதே என்று உடனே யோசிக்காதீங்க.. அங்க தாங்க மேட்டரே இருக்கு.

நான் ஊருக்குப் போகப் பொதுவா ஏற்காடு எக்ஸ்பிரஸ் ல தான் முன்பதிவு செய்வேன்.

இந்த ரயில்ல கழிவறை கப்பு தாங்காது (மற்ற ரயில்களை ஒப்பிடும் போது), 1 ல் இருந்து 10 இல்லைனா 60 ல இருந்து 70 னா கழிவறை பக்கம் வந்துடும்.

எப்படா ஈரோடு வரும் என்று ஆகி விடுவேன். அதுவும் இல்லாம அங்கே லைட்ட வேற போட்டுத் தூங்க விடாம உருட்டிட்டே இருப்பாங்க.

கடுப்போட தான் வந்து சேருவேன்.

அதுவும் இப்பெல்லாம் பரவாயில்ல ஓரளவு சரியான நேரத்திற்கு வந்து விடுகிறது, இல்லைனா கட்டவண்டியே ரயிலை ஓவர் டேக் செய்து விடும்.

இந்த ரயில் தான் என்னோட நேரத்திற்குச் சரியாக இருக்கும்.

மற்றதெல்லாம் நடு இரவில் வந்து சேரும் என்பதால் வேற வழி இல்லாம இதில் தான் வருவேன்.

இது மாதிரி சின்ன அதிர்ஷ்டம் இல்லைனாலும் எப்பாவது பெரிய அதிர்ஷ்டம் அடித்து இதைச் சரிக்கட்டி விடும், ஆனா நாம யாரு! அடிக்கடி நடப்பதை தானே நினைவு வைத்து இருப்போம்.. 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

39 COMMENTS

  1. ம் புரியுது. கவலைப் படாதிங்க.

    உங்களுக்கு லேட்டா கிடைத்தாலும் லேட்டஸ்டாக கிடைக்கும்.

  2. அப்போ அதிர்ஷ்டம் எல்லாருக்குமே ஒரே மாதிரி தான் இருக்கு போல.தேவைப் படற நேரம் நாம போக வேண்டிய பஸ் வராததுல இருந்து …டிக்கெட் கெளவுண்டர் க்ளோஸ் பண்றது வரை.!

  3. திருநெல்வேலியில் இப்போ எல்லாம் கார் ஓட்டுவது ரொம்ப கஷ்டம். அதிலும் டவுன் கடைக்குப் போக கீழரதவீதியில் தேரடியில் காரை பார்க் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். நாம் திரும்பி வரும்போது எடுக்க வசதியாக நான் ரிவெர்ஸில் செல்ல நினைத்து முன்னே போகும் போது பின்னால் திடீரென்று வரும் கார் நேராக அந்த இடைவெளியில் நுழைந்துவிடும். அதனால் நான் இன்னும் தள்ளி போகவேண்டியதாகும்.சகாதேவன்

  4. //கோவி.கண்ணன் said…
    ம் புரியுது. கவலைப் படாதிங்க.//

    சேரன் எக்ஸ்பிரஸ் மாதிரி விரைவா வந்து பின்னூட்டம் போட்ட கோவி கண்ணன் அவர்களுக்கு நன்றி 🙂

    //உங்களுக்கு லேட்டா கிடைத்தாலும் லேட்டஸ்டாக கிடைக்கும்.//

    இதுல எதோ உள்குத்து இருப்பதை போல தெரிகிறதே 😉

    ===============

    //பாண்டித்துரை said…
    பூன்லே – சவுத் துவாஸ் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். இன்னும் பதிவு செய்யவில்லை. அதில் உங்களின் பேருந்து அனுபவத்தை ஒத்த எனது அனுபவங்களை பதிவு செய்துள்ளேன்//

    why blood same blood :-))))

    ===========================

    //மிஸஸ்.டவுட் said…
    அப்போ அதிர்ஷ்டம் எல்லாருக்குமே ஒரே மாதிரி தான் இருக்கு போல.
    தேவைப் படற நேரம் நாம போக வேண்டிய பஸ் வராததுல இருந்து …டிக்கெட் கெளவுண்டர் க்ளோஸ் பண்றது வரை.!//

    அப்ப துணைக்கு நிறைய பேர் இருக்காங்க கவலைப்படாதீங்கன்னு சொல்றீங்க :-)))

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    ========================

    //சகாதேவன் said…
    பின்னால் திடீரென்று வரும் கார் நேராக அந்த இடைவெளியில் நுழைந்துவிடும். அதனால் நான் இன்னும் தள்ளி போகவேண்டியதாகும்.//

    ஹா ஹா ஹா ரொம்ப கஷ்டம் தான்.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி சகாதேவன்

    ===================

    //மோகன் said…
    கிரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் பத்தி ஏதாவது தப்பா பேசினீங்க நான் டெர்ரர் ஆகிடுவேன்//

    ஹா ஹா ஹா

    //சென்னைல நான் இருந்தப்போ எங்க ஊருக்கு வரதுக்கு சரியான ஒரே ட்ரைன் அது தான்.//

    நம்ம ஊருக்குன்னு சொல்லுங்க..:-))

    நேரம் மட்டும் தான் இதுல சரியா இருக்கு மற்றபடி..ம்ஹீம்

    //நான் மொபைல் போன் வாங்கின அடுத்த வாரமே அந்த மொபைல் விலை குறைஞ்சிடும். என்ன பண்ணுறது?//

    ஹா ஹா இனிமே நீங்க எப்ப வாங்க போறீங்களோ அதற்க்கு அடுத்த வாரம் அந்த மொபைல் வாங்கினா லாபம்னு சொல்றீங்க! :-))))

    ஆமா உங்க பதிவு எதையும் காணோமே.. பிசியா இருக்கீங்களா!

    ================

    சரவணகுமரன் முரளிகண்ணன் வருகைக்கு நன்றி

  5. கவலை படாதிங்க கிரி வாழ்க்கைல எல்லாருக்கும் ரெண்டு half இருக்கு First half ஜாலியா போரவங்களக்கு Second half நல்ல இருக்காது. First half toughஆ போரவங்களக்கு கண்டிப்பா செகண்ட் half செம சூப்பரா இருக்கும். என்னடா எங்கயோ கேட்ட மாதிரி இருக்குதா?

  6. நாம வாங்கவும் விலை குறைஞ்ச அனுபவங்கள் எனக்கும் இருக்கு நிறைய:)!

  7. முதன் முறையாக இன்றுதான் உங்கள் தளத்திற்கு வந்தேன்.அருமையாக இருந்தது அண்ணா.முழுவதும் படித்துவிட்டு வருகிறேன்..

  8. முதன் முறையாக இன்றுதான் உங்கள் தளத்திற்கு வந்தேன்.அருமையாக இருந்தது அண்ணா.முழுவதும் படித்துவிட்டு வருகிறேன்..

  9. hahah…:-))

    பேரூந்து சம்பவங்கள் சிங்கையில் நடைபெறுவது வழக்கம்..குறிப்பாக கூட்ட நெரிசல் நேரங்களில்

  10. இதே போல் நண்பர் பரிசல் கூட ஒரு எழுதியிருந்தார், இவையெல்லாம் வெறும் மாற்று எண்ணங்கள் தான்.

    இவற்றை தான் மனபிராந்தி என்கிறோம்.
    என்னுடன் சேர்ந்து விஸ்கி குடித்தால் இவைகள் தோன்றாது.

    நாம் மேலும் ராசியாகி விடுவோம்.
    வீட்டில் உதை கிடைக்கலாம் அதற்கு நான் பொறுப்பல்ல!

  11. ///அப்பாடா! ஒரு வழியா கவுன்ட்டர் கிட்ட வந்துட்டோம்னு நிம்மதியா இருக்கும் போது டக்குனு கவுன்ட்டர் மூடி விட்டு அடுத்த வரிசைல போய் நில்லுங்கன்னு சொல்லிடுவாங்க..நாம உஷாராகி நிற்பதுக்குள்ள ..பக்கத்து வரிசை காரங்க டக்குனு வந்து நின்னு என்னை மறுபடியும் பின்னாடி தள்ளிடுவாங்க அவ்வ்வ்வ்வ்
    ///

    பூன்லே – சவுத் துவாஸ் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். இன்னும் பதிவு செய்யவில்லை. அதில் உங்களின் பேருந்து அனுபவத்தை ஒத்த எனது அனுபவங்களை பதிவு செய்துள்ளேன்.

  12. இவை எல்லாம் முர்ஃபி விதிகள் என்று அழைக்க்ப்படும். நான் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, சொல்லி வைத்தது போல் மிகச் சரியாக தவறாக தான் நடக்கும். ஏதாவது புரியுதா?

  13. கிரி, ஏற்காடு எக்ஸ்பிரஸ் பத்தி ஏதாவது தப்பா பேசினீங்க நான் டெர்ரர் ஆகிடுவேன். சென்னைல நான் இருந்தப்போ எங்க ஊருக்கு வரதுக்கு சரியான ஒரே ட்ரைன் அது தான்.

    //அப்படி வாங்க வேண்டி வந்தால் ..வாங்கிய அந்த வாரமே எங்காவது தள்ளுபடி போட்டு அதே பொருளை விலை குறைத்து கொடுத்து என்னை கொலை வெறி ஆக்கி விடுவார்கள்//

    நான் மொபைல் போன் வாங்கின அடுத்த வாரமே அந்த மொபைல் விலை குறைஞ்சிடும். என்ன பண்ணுறது?

  14. நான் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, சொல்லி வைத்தது போல் மிகச் சரியாக தவறாக தான் நடக்கும்.

  15. //Valaipookkal said…
    Hi
    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – valaipookkal com. ல் தொடுத்துள்ளோம்.//

    வலைபூக்களுக்கு நன்றி

    ====================

    //Logan said…
    கவலை படாதிங்க கிரி வாழ்க்கைல எல்லாருக்கும் ரெண்டு half இருக்கு First half ஜாலியா போரவங்களக்கு Second half நல்ல இருக்காது. First half toughஆ போரவங்களக்கு கண்டிப்பா செகண்ட் half செம சூப்பரா இருக்கும்//

    லோகன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் நீங்க சொன்ன அந்த second half எனக்கு வந்துடுச்சு போல இருக்கு.. மேட்டர் என்னன்னு நேர்ல சொல்றேன் :-))))

    //என்னடா எங்கயோ கேட்ட மாதிரி இருக்குதா?//

    உங்களை மனதில் வைத்து தான் இந்த பதிவே எழுதினேன் ஹி ஹி ஹி

    =====================

    //ராமலக்ஷ்மி said…
    நாம வாங்கவும் விலை குறைஞ்ச அனுபவங்கள் எனக்கும் இருக்கு நிறைய:)!//

    அப்பாடா! 😉

    =============================

    //Sriram said…
    இதையும் சேத்துக்குங்க …
    நாம சைட் அடிக்கிற பொண்ணுங்களுக்கு மட்டும் ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கும் அல்லது அட்லீஸ்ட் பாய் பிரென்ட் / லவ்வர் ஆவது இருக்கும்.//

    ஹா ஹா ஹா ஸ்ரீராம் உங்க ஃபீலிங்க்ஸ் புரிந்து கொள்ள முடியுது..

    எனக்கு கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கு அதனால எதையும் சத்தம் போட்டு சொல்ல முடியல ஹி ஹி ஹி

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    ===========================
    //Anbu said…
    முதன் முறையாக இன்றுதான் உங்கள் தளத்திற்கு வந்தேன்.அருமையாக இருந்தது அண்ணா.//

    ஆஹா! இப்படி பாசக்கார புள்ளையா இருக்கீங்களே! நன்றி நன்றி

    //முழுவதும் படித்துவிட்டு வருகிறேன்..//

    வரேன்னு சொல்லிட்டு ஆளையே காணோம்.. படித்து பார்த்து தெறித்து ஓடிட்டீங்களா! ஹா ஹா ஹா இப்படி எல்லாம் பயப்படப்படாது :-))))

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    =========================

    //’டொன்’ லீ said…
    பேரூந்து சம்பவங்கள் சிங்கையில் நடைபெறுவது வழக்கம்..குறிப்பாக கூட்ட நெரிசல் நேரங்களில்//

    அப்பாடா! சாட்சிக்கு ஒருத்தர் கிடைத்தாருப்பா! :-))))

    =======================

    //வால்பையன் said…
    இவற்றை தான் மனபிராந்தி என்கிறோம்.
    என்னுடன் சேர்ந்து விஸ்கி குடித்தால் இவைகள் தோன்றாது.//

    ஹா ஹா ஹா அருண் தயாரா இருங்க ..அடுத்த வாரம் ஊருக்கு வருகிறேன் 😉

    ஆட்டோ ல வேற ஒரு ரவுண்டு கூட்டிட்டு போறன்னு கூறி இருக்கீங்க, மறந்துடாதீங்க. :-)))

    //நாம் மேலும் ராசியாகி விடுவோம்.
    வீட்டில் உதை கிடைக்கலாம் அதற்கு நான் பொறுப்பல்ல!//

    ஹி ஹி அதெல்லாம் பிரச்சனை இல்ல.. பூரி கட்டை அடி எல்லாம் எனக்கு இல்லை.
    ===================

    //ராம்சுரேஷ் said…
    இவை எல்லாம் முர்ஃபி விதிகள் என்று அழைக்க்ப்படும். நான் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, சொல்லி வைத்தது போல் மிகச் சரியாக தவறாக தான் நடக்கும். ஏதாவது புரியுதா//

    எனக்கு பர்ஃபி தான் தெரியும் நீங்க எதோ முர்ஃபி னு சொல்றீங்க :-))))

    ======================

    //ஷாஜி said…
    நான் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, சொல்லி வைத்தது போல் மிகச் சரியாக தவறாக தான் நடக்கும்//

    ஷாஜி நீங்களும் ராம் சுரேஷ் மாதிரி சொல்லறீங்களே! இரண்டு பேருக்கும் பர்ஃபி கொடுத்த சரி ஆகிடும் என்று நினைக்கிறேன் ஹி ஹி

  16. தங்கமணி சொன்ன பொருள் ஒன்ன மறந்துடுவோம் தினசரி.திடீர்னு ஞாபகம் வந்து வாங்கீட்டுப் போனா அன்னைக்குத்தான் தங்கமணியும் வாங்கி வச்சிருப்பாங்க. அப்புறமென்ன மண்டகப்படிதான்.

  17. இது எல்லாம் அப்படியே எனக்கும் நடக்குது , ஒன்னு உங்களுக்கு நடகவிலேயே , அதாவது நான் எப்பவெல்லாம் தியேட்டர் படம் பார்க்க போகிறேனோ எனக்கு வரும் டிக்கெட் நம்பர் சுவர் ஓரம் தான் வரும்

  18. //நான் ஒரு பேருந்துக்கு நிக்கிறேன்னு வைங்க..அந்த பேருந்து வரவே வராது….இல்லை நான் வர வர போய்டும்..எவ்வளோ தான் சீக்கிரம் வந்தாலும் அப்படி ஆகுது தாமதமா வந்தாலும் அப்படி தான் ஆகுது//அங்கேயுமா……….அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  19. என்ன கிரி, ப்ளாக் டெம்ப்ளேட் எல்லாம் மாத்திட்டீங்க, எனக்கு அடையாளமே தெரியல, நல்லவேளை ப்ரொபைல் போட்டோவ வைச்சுத்தான் அடையாளம் கண்டுபுடிச்சேன்.

    அப்றம் நீங்க சொல்றது எல்லாம் நெம்ப சாதாரண மேட்டருங்க. இதையெல்லாம் விட மோசமான பல அனுபவங்கள வாங்கி வைச்சுக்கிட்டு நாங்க எல்லாம் இருக்கோம்ல.
    ஆனா நல்லா எழுதியிருக்கீங்க.

  20. என் பின்னூட்டத்தை வெளி இடவா வேண்டாமா என்று ஆழ்ந்து யோசனை செய்து வெளி இட்டதற்கு வன்மையான கண்டனம் !

  21. //வடகரை வேலன் said…
    தங்கமணி சொன்ன பொருள் ஒன்ன மறந்துடுவோம் தினசரி.திடீர்னு ஞாபகம் வந்து வாங்கீட்டுப் போனா அன்னைக்குத்தான் தங்கமணியும் வாங்கி வச்சிருப்பாங்க. அப்புறமென்ன மண்டகப்படிதான்.//

    ஹி ஹி ஹி நம்ம நினைவு எப்போதும் லேட் ஆக தான் வேலை செய்யும் போல :-))

    =========================

    //ஜோசப் பால்ராஜ் said…
    என்ன கிரி, ப்ளாக் டெம்ப்ளேட் எல்லாம் மாத்திட்டீங்க, எனக்கு அடையாளமே தெரியல, நல்லவேளை ப்ரொபைல் போட்டோவ வைச்சுத்தான் அடையாளம் கண்டுபுடிச்சேன். //

    ஹா ஹா ஹா உங்களுக்கு குசும்பு ….என்னோட ப்ளாக் ப்ரொபைலை கிண்டலடிக்கனும்னு இப்படி ஒரு திட்டமா :-))))

    //அப்றம் நீங்க சொல்றது எல்லாம் நெம்ப சாதாரண மேட்டருங்க. இதையெல்லாம் விட மோசமான பல அனுபவங்கள வாங்கி வைச்சுக்கிட்டு நாங்க எல்லாம் இருக்கோம்ல.//

    அப்ப துணைக்கு இருக்கோம்னு சொல்லாம சொல்லிட்டீங்க 🙂

    //ஆனா நல்லா எழுதியிருக்கீங்க//

    நன்றி

    =====================

    //Felix Raj said…
    இது எல்லாம் அப்படியே எனக்கும் நடக்குது , ஒன்னு உங்களுக்கு நடகவிலேயே , அதாவது நான் எப்பவெல்லாம் தியேட்டர் படம் பார்க்க போகிறேனோ எனக்கு வரும் டிக்கெட் நம்பர் சுவர் ஓரம் தான் வரும்//

    ஆஹா! நீங்க சொன்னதுக்காக சொல்லலை எனக்கும் இப்படியே.. இதை குறிப்பிட மறந்து விட்டேன் ..

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஃபெலிக்ஸ் ராஜ்

    =================================================================================

    // அத்திரி said…
    //நான் ஒரு பேருந்துக்கு நிக்கிறேன்னு வைங்க..அந்த பேருந்து வரவே வராது….இல்லை நான் வர வர போய்டும்..எவ்வளோ தான் சீக்கிரம் வந்தாலும் அப்படி ஆகுது தாமதமா வந்தாலும் அப்படி தான் ஆகுது//

    அங்கேயுமா……….அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    இங்கேயும் தான் ஆனா நம்ம ஊர் அளவிற்கு மோசமில்ல :-))

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி அத்திரி

    ======================

    //நசரேயன் said…
    நீங்க ரெம்ப அதிஷ்டசாலிதான்//

    ஹி ஹி நல்லா புரிஞ்சுக்கிட்டீங்க :-)))

    ========================

    //கோவி.கண்ணன் said…
    என் பின்னூட்டத்தை வெளி இடவா வேண்டாமா என்று ஆழ்ந்து யோசனை செய்து வெளி இட்டதற்கு வன்மையான கண்டனம் !//

    இது என்னய்யா! புது கரடியா இருக்கு!

    கோவி கண்ணன் உங்களுக்கு சண்டை போட நான் தான் கிடைத்தேனா! :-)))

    நான் ஆழ்ந்து யோசனை செய்ததெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்,, சரி மொதல்ல உங்க பின்னூட்டம் வெளியிட நான் எதுக்கு யோசனை செய்யணும்.நீங்க என்ன என்னை திட்டியா எழுதி இருக்கீங்க, நான் யோசிக்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    நான் பதிவை தமிழ் மணத்தில் இணைத்த பிறகு புது இடுகை எதுவும் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தது நான் என்னடான்னு யோசிச்சுட்டு இருந்தேன், அந்த கேப்புல நீங்க போட்டு இருப்பீங்க.

    பெரியவாள் (வால் அல்ல ஹி ஹி) நீங்க கோவித்துக்கொள்ளலாமா! அடியேனை பொறுத்தருள்க 😉

  22. முர்ஃபி (பர்பி இல்ல) விதின்னு தொரை சொல்லி வெச்ருக்கான். அட, ராம்சுரேஷ் ஏற்கனவே சொல்லிட்டாரா? அவ்வ்வ்வ். :))நிறைய விஷயங்கள் சேம் பின்ச்.கோவி அண்ணா சொன்னது நிஜமாவே உமக்கு புரியலையா? இல்ல சும்மா நடிப்பா? :p

  23. //நான் said…
    SAME BLOOD..

    Now Am happy..//

    ஹா ஹா நான் சந்தோசமோ சந்தோசம்..எனக்கு மட்டுமில்லைனு

    ===================

    //ambi said…
    நிறைய விஷயங்கள் சேம் பின்ச்.//

    பாருங்க அப்ப! எத்தனை பேர் ஒரே மாதிரி சிந்திக்கறாங்கன்னு :-)))

    //கோவி அண்ணா சொன்னது நிஜமாவே உமக்கு புரியலையா? இல்ல சும்மா நடிப்பா? :p//

    அட! நிஜமாதாங்க! நான் ரொம்ப அப்பாவி! code வோர்ட் எல்லாம் எனக்கு தெரியாது :-)))

  24. //பரிசல்காரன் said…
    சேம் பளட்!!!//

    ஹய்யோ! ஹையோ!! சந்தோசம் பொங்குதே! சந்தோசம் பொங்குதே!

    எல்லோரும் என்ன மாதிரியே புலம்பறாங்களே! :-))))) இப்ப தாம்பா நிம்மதியா இருக்கு

  25. //பிரேம்ஜி said…
    கிரி,
    இது எல்லாருக்கும் நடக்கிறது தான். இங்கே ரொம்ப……… விளக்கமா விளக்கியிருக்காங்க… முடிஞ்சா(கஷ்டம் தான்!!) படிச்சு பாருங்க//

    படித்து பார்த்து குழம்பிட்டேன், ஒரே பதிலையே மாற்றி மாற்றி கூறி இருப்பது போல இருக்கிறது. ஆனால் நன்றாக உஉள்ளது.

    ================

    // Pattaampoochi said…
    :))))//

    முதல் வருகைக்கு நன்றி பாட்டாம்பூச்சி

  26. பஸ்ஸுக்கு காத்திருத்தல் முதல், ஆபரில் விலை குறையும் சமாச்சாரம் வரை எல்லோரும் கண்டதுதான். அதுவும் டிவி,வாஷிங் மிஷின் எல்லாம் விலை குறைச்சு வெறுப்பேத்துவாங்க பாருங்க….!பரவாயில்லை உங்களைப் போலுள்ளார் இப்பூமியில் பல பேர் உள்ளார். ஆறு மனமே ஆறு!!!!!

  27. கேள்வி நெட்டிற்கு நன்றி

    ====================

    //நானானி said…
    பரவாயில்லை உங்களைப் போலுள்ளார் இப்பூமியில் பல பேர் உள்ளார். ஆறு மனமே ஆறு!!!!!//

    ஹி ஹி ஹி நன்றி நன்றி நன்றி!

    ================================

    //Somz said…
    கிரி, நமக்கும் இதே பிரச்சனை தான்//

    அப்பாடா! நல்லா இருங்கய்யா எல்லோரும்! 🙂

    புண் பட்ட நெஞ்சை பின்னூட்டம் மூலம் விளக்கம் கூறி ஆற்றி விட்டுட்டீங்க 🙂

    சோம்ஸ் முதல் பின்னூட்டத்திற்கு நன்றி

    பின்னூட்டமே போடாத நீ பின்னூட்டம் போட்டதில் இருந்தே தெரியுது எப்படி நொந்து போய் இருக்கேன்னு ஹி ஹி ஹி

  28. கிரி இதெல்லாம் எனக்கும் தான் நடக்குது என்ன பண்றதுன்னு தெரியலை

    சில வருடங்களுக்கு முன் லைப் டைம் சிம் கார்டு 999 ரூபாய்க்கு நான் வாங்கினேன் இப்போது லைப் டைம் சிம் கார்டு ப்ரீ யாவே
    கிடைக்குது இந்த கொடுமையை என்னன்னு சொல்றது

    நான் சில நாட்கள் முன் ஜுரம் வந்து என் அலுவலகத்தில் நாள்
    விடுமுறை கொடுத்தார்கள் வீட்டிலிருந்த நான் நாளும் சேனல் லே
    படங்களா பார்த்து தள்ளிடனும் என்று முடிவு செய்து பார்த்தால்
    எல்லாம் மொக்கை படங்கள் விடுமுறை முடிந்து நான் ஆபிஸ் கிளம்பும்
    போது சூப்பர் ஹிட் படங்களா
    போட்டு என்னை வெறுப்பு ஏத்திட்டாங்க

    இது மாதிரி எனக்கு நிறைய அனுபவம் இருக்கு …………

  29. நான் சில நாட்கள் முன் ஜுரம் வந்து என் அலுவலகத்தில் 15 நாள்
    விடுமுறை கொடுத்தார்கள் வீட்டிலிருந்த நான் 15 நாளும்
    சேனல் லே
    படங்களா பார்த்து தள்ளிடனும் என்று முடிவு செய்து பார்த்தால்
    எல்லாம் மொக்கை படங்கள் விடுமுறை முடிந்து நான் ஆபிஸ் கிளம்பும்
    போது சூப்பர் ஹிட் படங்களா
    போட்டு என்னை வெறுப்பு ஏத்திட்டாங்க

  30. //எல்லாம் மொக்கை படங்கள் விடுமுறை முடிந்து நான் ஆபிஸ் கிளம்பும் போது சூப்பர் ஹிட் படங்களா போட்டு என்னை வெறுப்பு ஏத்திட்டாங்க//

    எனக்கும் இதைப்போல ஆகும் :-)) செம கடுப்பாகிடுவேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!