ஏர்டெல் DTH வாங்கிய அனுபவம்

18
Airtel Digital ஏர்டெல் DTH வாங்கிய அனுபவம்

னக்கு சன் DTH  போக விருப்பமில்லை அதனால், 10 வருடமாக மொபைல் பயன்படுத்தும் ஏர்டெல் DTH போவதாக முடிவு செய்தேன். Image Credit

குடும்ப நண்பர் “தம்பி! நானே வாங்கி வந்து விடவா?” என்று கேட்டார். இல்லை.. நான் அங்கே வந்து அவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டியது இருக்கும் என்று கூறியதால், வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றார்.

முகவர்

கடையில் இருந்தவருக்கு தகவல்கள் சரியாகத் தெரியவில்லை, அவர் கூறியதில் எனக்குச் சந்தேகங்கள் அதிகம் இருந்தது. பின்னர் இன்னொருவருக்கு ஃபோன் செய்து கொடுத்தார்.

அவரிடம் கொஞ்சம் கேள்விகள் கேட்டேன் திருப்தி ஆகவில்லை.

அவர் கொடுத்த தகவல்களை வைத்து மேலும் சந்தேகங்கள் கடையில் இருந்தவரிடம் கேட்க அவர் திரும்ப அவருக்குத் தொலைபேசியில் அழைத்தார்.

திரும்ப அவரிடம் கேட்டேன் 90% புரிந்தது.

High Definition

இறுதியில் அவர் “HD Setup Box வாங்கினால் தான் HD (High Definition) சேனல்கள் பார்க்க முடியும் அதோடு, LED தொலைக்காட்சியில் சரியாகத் தெரியும்,  இதற்கு (HD) கூடுதல் கட்டணம்” என்று கூறினார்.

எப்படி இருந்தாலும் பின்னால் HD  தேவைப்படும் என்பதால் இதையே தேர்வு செய்தேன். Image Credit

South Super Value Prime HD தேர்வு செய்து பணத்தையும் கட்டி விட்டேன்.

மதியம் வருவதாகக் கூறியவர்கள் பல முறை தொடர்பு கொண்ட பிறகு அதோ இதோ என்று இரவு 8 மணிக்கு வந்தார்கள்.

அனைத்தும் முடிந்த பிறகு ஒரு மொபைல் எண்ணைக் கொடுத்து அரை மணிநேரம் கழித்து இவருக்கு அழையுங்கள் இவர் உங்களுக்கு DTH ஏக்டிவேட் செய்வார் என்றார்.

அழைத்தால் முதலில் எடுக்கவில்லை திரும்ப மிஸ்டு அழைப்பு கொடுத்தார்!!

திரும்ப அழைத்தால் பிசி என்று வந்தது. அதன் பிறகு ரொம்ப நேரம் இதே நிலையில் இருந்தது. எனக்கும் ரொம்ப அவசரம் இல்லை என்பதால் அப்படியே விட்டு விட்டேன்.

ஹலோ டியூன்

காலையில் திரும்ப அவரை அழைத்தால் எடுக்கவே இல்லை. பல முறை அழைத்தும் எடுக்கவில்லை, இவர் தான் டீலராம்.

இதில் பெரிய கொடுமையாக இவர் வைத்து இருந்த ஹலோ டியூன் என்னைச் செம்ம வெறுப்பேத்துவது போல இருந்தது.

எனக்கு ஏற்பாடு செய்தவர் Retailer ஐ பிடித்துச் செம்ம காட்டு காட்ட அவங்க இவர்கிட்ட கூற இவர் வந்தார்.

அவரிடம் சண்டை போட்டதும் “சார் மீட்டிங்ல!! இருந்தேன் அதான் ஃபோன் எடுக்கல” என்றார்.

நாம பார்க்காத மீட்டிங்கா நமக்கே கதையா என்று நினைத்துக்கொண்டு விவரங்கள் கேட்க,  ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையம் எண்ணைக் கொடுத்து “இதில் அழைத்துக் கூறினால் ஏக்டிவேட் செய்வார்கள்” என்று கூற..

ஏங்க இதை நீங்க முதல்லையே கொடுக்க வேண்டியது தானே! எதற்கு இதைக் கொடுக்க இப்படி இழுத்தடிச்சீங்க!” என்றால்… கொடுத்துட்டேன்னு நினைத்தேன்!! என்கிறார்.

Registered Mobile Number

வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்க “Register செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அழைக்கப்படவில்லை” என்று கூற, செம்ம காண்டாகி விட்டது.

திரும்ப இவரை அழைக்க.. எடுக்கவே இல்லை. அதோட இந்த ஹலோ டியூன் வேற என்னைக் கொலை வெறி ஆக்கிக் கொண்டு இருந்தது.

கடுப்பாகி 5 மணிக்குள்ள ஏக்டிவேட் பண்ணலைனா கேன்சல் செய்து விடுவேன் என்று குறுந்தகவல் அனுப்பினேன். உடனே சரி ஆகிடும் சார்… சாரி  என்று பதில் வந்தது.

4 மணிக்கு ஒரு Reminder குறுந்தகவல் அனுப்பினேன். 5 மணிக்கு ஒன்றையும் காணோம். பொறுமையிழந்து அடுத்தாகக் கேன்சல் செய்யக் கூறி குறுந்தகவல் அனுப்பிட்டேன்.

திரும்ப “சார் சாரி இப்ப பண்ணிடுறேன்..!” என்று மறுபடியும் எல்லா கோட்டையும் அழிங்க முதலில் இருந்து ஆரம்பிப்போம் என்றார்.

நல்லவேளை 10 நிமிடத்தில் ஏர்டெல்லிலிருந்து குறுந்தகவல் அனுப்பினார்கள்.

திரும்ப அதே எண்ணை அழைக்க… வேலை செய்தது. ஆக.. இவர் என்னுடைய மொபைல் எண்ணை முதலில் பதிவு செய்யவே இல்லை.

வாடிக்கையாளர் சேவை மையம்

தமிழ் தேர்வு செய்தால் நமக்கு ஒன்றுமே தெரியாது என்ற நிலையில் அவர்கள் பேசுவார்கள் என்று ஆங்கிலம் தேர்வு செய்தேன்.

ஏன்டா தேர்வு செய்தோம் என்று ஆகி விட்டது. எடுத்தது எதோ வடா தோசா காரன் போல அதுவும் ஓடிஸா மாதிரியான இடத்து பையன் போல.

அவன் பேசுற ஆங்கிலம் ஒரு வெங்காயமும் புரியலை. உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் V என்பதை B என்று தான் அழைப்பார்கள்.

ஆங்கிலத்தையே கொத்து பரோட்டா போட்டு விட்டான். நான் ஆங்கிலப்புலி இல்லையென்றாலும் கேட்பதற்கு இது கொடூரமாக இருந்தது.

இவர் கூறியதில் இருந்து குத்து மதிப்பாக நான் புரிந்து கொண்டது இன்னும் சில குறுந்தகவல்கள் (மொத்தம் 7 என்றார்) வரும் அதன் பிறகு அழைக்க வேண்டும் என்பது.

அரை மணி நேரத்தில் அனைத்து குறுந்தகவல்களும் ஏர்டெல்லில் இருந்து வந்து விட்டது. இந்த முறை தமிழுக்கே போவோம் என்று தமிழ் தேர்வு செய்தேன்.

பெயர், முகவரி சரி பார்த்த பிறகு 5 நிமிடத்தில் ஏக்டிவேட் செய்து விட்டார்கள். பேசியவர் அனைத்து தகவல்களையும் தெளிவாகக் கூறினார்.

அதோடு நான் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறினார். நான் எப்போதும் அதிக கேள்விகள் கேட்பேன் 🙂 .

பிறகு பார்த்தால் சன் குழும சேனல்கள் எதையுமே காணோம். திரும்பக் கடுப்பு. நாங்கள் அடுத்த இரு நாட்கள் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

1 அமுக்கு 4 அமுக்கு 5 அமுக்கு

திரும்ப வந்து வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தால் 1 அமுக்கு 4 அமுக்கு 5 அமுக்கு என்று தான் போகிறதே தவிர யாரிடமும் பேச முடியவில்லை.

அக்கா பையன் “மாம்ஸ்! இங்க ஏர்டெல் அலுவலகம் இருக்கிறது நான் போய் கேட்டு வரவா?” என்று கேட்டு அங்கே போனால் தான் தெரிகிறது Retailer Top-Up ல் தமிழுக்கு பெங்காலியை தேர்வு செய்து வைத்து இருந்தது.

அதை அவர்கள் மாற்றி விட்டதும் உடனே வந்து விட்டது.

சில விளையாட்டு மற்றும் ஆங்கில திரைப்பட சேனல்கள் HD ல் இருக்கிறது. செமையாக உள்ளது. அதுவும் IPL தாறுமாறாக இருக்கிறது.

பார்க்கிறவங்க எல்லோருமே செம க்ளாரிட்டி என்று கூறி விட்டார்கள். தெளிந்த நீர் எப்படி இருக்கும்! அது போல இருக்கிறது.

தமிழில் கிட்டத்தட்ட அனைத்துச் சேனல்களும் வருகிறது. ஆங்கிலச் சேனலில் AXN வரவில்லை என்று நினைக்கிறேன்.

நேரமில்லையாதலால் நான் முழுமையாகச் சோதனை செய்து பார்க்கவில்லை.

துவக்கக் கட்டணமாக 2000/- (மாதக் கட்டணமாக 215/- , HD 100/-) கட்டினேன்.

இதில் மாதக் கட்டணம் 215 என்றால் நம் கணக்கிலிருந்து இதை 215 / 30 என்ற கணக்கில் தினமும் 7.16 Rs வசூலிப்பார்கள்.

முதல் மாதம் இலவசம். இலவசம் முடிந்து அடுத்த மாதம் தான் உறுதியான சேனல்கள் / கட்டணம் பற்றிய தகவல்  கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

பிரச்சனை ஏர்டெல் DTH கிடையாது

கடைசியாக நான் புரிந்து கொண்டது, பிரச்சனை ஏர்டெல் கூடக் கிடையாது.

Retailer, Dealer போன்றவர்கள் சரியாகக் கூறாததும் தங்கள் பணியைச் சரிவரச் செய்யாததுமே இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று.

ஏனென்றால் ஏர்டெல் தன் நேரத்தில் சரியாகவே நடந்து கொண்டது. வாடிக்கையாளர் சேவை மையத்திலும் சரியான தகவலையே கொடுத்தார்கள்.

இவர்கள் தான் என்னைச் சுற்ற விட்டு விட்டார்கள். இறுதியில் கெட்ட பெயர் கிடைப்பது என்னவோ ஏர்டெல்லுக்கு தான்.

இந்தப் பிரச்சனையில் ஏர்டெல் DTH தவறு எதுவுமில்லை.

ஒரே தவறு இவர்களைச் சரியாக வைத்து இருக்காமல் இருப்பது தான்.

இது போலச் சரியான தகவல்களைக் கொடுக்காமல், பணம் கொடுத்தவர்களை இழுத்தடித்தால் கடைசியில் அனைவர் வாயிலும் வரும் வார்த்தை “ஏர்டெல் DTH சரியில்லப்பா இவனுக இப்படித்தான் பண்ணுவானுக” என்பது தான்.

ஏர்டெல் தங்கள் முகவர்களைச் சரியாக வைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைகளை / குறைகளைக் களையலாம்.

எல்லாம் சொன்னேன்.. ஆனால், என்னை வெறியேற்றிய ஹலோ டியூன் என்னன்னு சொல்லலையே..!

அது “உன்னால் முடியும் தம்பி தம்பி“!!.  ஃபோன் எத்தனை முறை செய்தாலும் எடுக்காமல் இருப்பவர்கள் இது போல ஹலோ டியூனை தயவு செய்து தேர்வு செய்ய வேண்டாம் என்று நொந்து போனவர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

பிற்சேர்க்கை 

தற்போது (2020) இப்பிரச்சனைகள் இல்லாமல் எளிதாக அனைத்தும் நடக்கிறது. 

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

18 COMMENTS

  1. // அதென்னங்க இந்த பாலிமர் டிவி ஹிந்தி டப்பிங் சீரியலுக்கு இத்தனை ரசிகர்கள். //

    கொடுமை! அது தான் எனக்கும் புரியல.

  2. அச்சு அசலா நான் ஏர்டெல் டிவி வாங்கும் போதும் இதே பிரச்சனை இருந்தது..

    ஹா ஹா ..புத்தரை கூட கொலைகாரனாக்க அவர்களால் முடியும்..

    ஆனா எனக்கு மாசம் 615 ஓவா வாங்குரானுங்களே..!

  3. நீங்கள் sunhd தேர்வு செய்திருக்லாம் அதில் sunhd ktvhd sunmusichd மற்றும் ஆங்கில சேனல்கள் sonysixhd qulity நன்றாக உள்ளது

  4. கிரி.. அனுபவங்கள் எல்லாம் தடுப்பூசிகள் என படித்துள்ளேன், ஆனால் இந்த அனுபவத்தை என்னன்னு சொல்ல???..

    அவரிடம் சண்டை போட்டதும் “சார் மீட்டிங்ல!! இருந்தேன் அதான் ஃபோன் எடுக்கல” என்றார். நாம பார்க்காத மீட்டிங்கா நமக்கே கதையா – SAME BLOOD

    கிரி.. அவரோட ரிங் டோன பத்தி நீங்க தப்ப புரிஞ்சி வச்சி இருக்கீங்க.. உன்னால் முடியும் தம்பினா என்ன அர்த்தம் அவர் பாணியில் (நீங்க 100 முறை கால் பண்ணி எடுக்கவில்லை என்றாலும் 101 முறையும் ட்ரை பன்னிங்கன அவர லைன்ல புடுச்சிடலாம்..அது தான் உன்னால் முடியும் தம்பி ) ஆனால் என்னால முடியாதுட சாமி, இந்த மாதிரி ஆள சமாளிக்க!!!!!! கிரி நீங்க கிரேட்…

    பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி…

  5. பாலிமர்ல வர ஹிந்தி டப்பிங் சீரியல் எல்லாமே நல்ல இருக்கும் அண்ணா..அவங்க costume marriage rituals ,romance , லவ், எல்லாமே different ஆக இருக்கும் .
    அதனால தான் இபோ எல்லாம் சவுத் people இத அதிகமா பார்கரங்க..முடிஞ்சா நிங்களும் பாருங்க u will like it …பட் கொஞ்சம் பொறுமை வேணும் 🙂

    • ஆம்! எங்கள் வீட்டில் முதலில் சன் டிவி தொடர்தான் பார்த்துவந்தனர் ஒருநாள் தவறுதலாக பாலிமர் கண்ணில் பட்டது பின் கொஞ்சகாலம் சன் , பாலிமர் என்று விளம்பரம் வரும்போது மாறி மாறி பார்த்தனர் மெல்ல மெல்ல பாலிமரே என்றாகிவிட்டது நான் குறிப்பிடுவது (இரவு 9 மணியிலிருந்து 10 மணிவரை )

  6. நான் பார்த்த வரைக்கும். TATA SKY பெஸ்ட் கிரி.
    நீங்க எதற்கு உங்கள் மொபைல் நம்பெர பதிவு செய்தீர்கள்! உங்கள் அப்பா அல்லது அம்மா நம்பரை தான் பதிவு செய்திருக்க வேண்டும். நீங்கள் ஊரில் இல்லை என்றால் அவர்களால் airtel customer care-ஐ தொடர்பு கொள்ள இயலாது. திரும்ப மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. முடிந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

  7. அதையேத்தான் என் வொய்பும் சொன்னார் – நார்த் இந்தியன் சீரியல்களில் உடை நகை அலங்காரம் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கும்.
    உதா : தெய்வம் தந்த வீடுன்னு ஒரு சீரியல்.. மாமியா மருமகள்ன்னு எல்லாருக்கும் ஓவர் மேக்கப் மற்றும் நகை அலங்காரம். சீரியல் படு மொக்கை (ஒரு நாள் பார்த்ததுக்கே இப்படி) மிஞ்சிப்போனா ஒரு எபிசோடுக்கு பத்து தடவை தான் பேசுவாங்க பாக்கி Individual Closeup மற்றும் இசையை வைத்து ஒப்பேத்தி விடுவார்கள்.
    பொண்டாட்டிக்கு ஆதரவா டெய்லி ரெண்டு சீரியல் மட்டும் பார்க்க ஆரம்பிச்சேன் அப்புறம் சீரியல் சம்பந்தமாக சிந்திக்க ஆரம்பிச்சி எப்படி விடுறதுன்னு தெரியாம தவிச்சேன். ஒரு மாசம் சீனா போனபோது (யுடியுப் தடை என்பதால்) கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டேன்.
    கிரி – பேங்கில் ஈமெயில் ஐடியும் கொடுத்துவிடுங்கள் OTP உடனுக்குடன் அதில் அனுப்பிவிடுவார்கள். IOB அப்படித்தான் அனுப்புகிறது.

    • சரியாய் சொன்னீங்க தெய்வம் தந்த வீடு சீரியல்ல சுதா ரகுநாதன் மேக்கப் பார்த்திங்கன கன்னா பின்னா னு இருக்கும்…no one will like it ….

  8. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @ஆனந்த் 615 மாதம் என்பது ரொம்ப அதிகம். நீங்கள் அனைத்து சேனல்களையும் பெற்று இருந்தால் கூட.

    @ராஜன் நீங்கள் கூறுவது சரி தான்.. ஆனால் எனக்கு சன் பிடிக்காது.

    @யாசின் நீங்க கூறியதைத் தான் நானும் கூறி இருக்கிறேன்.. இவரு நான் எடுக்கலைனா இன்னும் முயற்சி செய்துட்டே இருங்க என்று நக்கல் அடிப்பது போலவே உள்ளது 🙂 . செம்ம கடுப்பாகிட்டேன்.

    @ஜானகி என்னோட அக்காவும் இதைத் தான் கூறினார்கள் அதோடு அழுகை குறைவாக இருப்பதாகக் கூறினார்கள்.

    நான் பார்ப்பதா.. ! நான் இங்கே சன் விஜய் அனைத்தையும் Unsubscribe செய்து விட்டேன். இதில் எங்க பாலிமர் 🙂

    @கௌரிஷங்கர் வாடிக்கையாளர் சேவை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் நம் தேவையை நிறைவேற்ற முடியும். நான் ஏற்கனவே என்னுடைய கணக்குகள் அனைத்தையும் என் மொபைல் எண் பயன்படுத்தி தான் செயல்படுத்துகிறேன் என்பதால், என்னுடைய எண்ணை கொடுத்தேன்.

    என்னோட அக்கா பையன், மனைவி இருக்கிறார்கள் எனவே அவர்கள் நேரிடையாக ஏர்டெல் அலுவலகத்தில்
    பேசி சரி செய்ய முடியும்.

    @ராஜ்குமார் HDFC மற்றும் ICICI ல் OTP மின்னஞ்சலில் வருவதில்லை.

    BTW உங்க கமெண்ட் (மட்டும்) எப்போதுமே ஸ்பாம் க்கு சென்று விடுகிறது. என்ன காரணம் என்றே தெரியவில்லை.

  9. VIDEOCON D2H தான் மிக சிறப்பாக உள்ளது..மாதம் ருபாய் 174 மட்டுமே ..நவீன் தர்மபுரி .

  10. கிரி சார்…
    என்னை உங்களுக்கு நினைவு இருக்குதுங்ககளா? நான் சென்னையில் இருக்கிறேன். நீங்கள் புதிய வாடிக்கையாளர் என்பதால் தான் இந்த சலுகை.30 நாட்களுக்கு மட்டும் அதன்பிண்பு தான் அதிர்ச்சி மேல அதிர்ச்சி தந்து கொண்டே இருப்பார்கள். என்னுடைய Subscription details, south super value. Rs.175 + pogo tv (Rs.50)+sports annual package (all espn groups channels 4only)+ M tunes HD(Rs.15), இந்தளவு காசுக்கு நிறைய லோக்கல் டிஜிட்டல் டிவி டிஷ் (SCN,Sumangali,etc..,) எடுத்து இருந்து இருக்கலாம். இவைகளில் 215 ருபாய்க்கே எல்லா சேணல்களையும் பார்க்க முடியூம்…
    கூடுதல் தகவல். கிரி சார் உங்களுக்கு இந்தி விடியோ சாங்ஸ் லைக் பண்ணி பார்பிங்கனா கண்டிப்பாக M tunes HD active செய்யுங்கள்…. 5.1 audio output செமையாக இருக்கும்.

  11. @நவீன் தகவலுக்கு நன்றி

    @அகிலா 🙂

    @தங்கராஜ் எப்படி இருக்கீங்க? 🙂 உங்கள் தகவலுக்கு நன்றி. நான் தற்போது சிங்கப்பூரில் இருப்பதால், M Tunes ஏக்டிவேட் செய்தால் கேட்க ஆளில்லை.

    அதிர்ச்சி மேல் அதிர்ச்சி என்றீர்கள்.. மாத வாடகை தவிர வேற என்ன பிரச்சனையை அவர்கள் கொடுக்க முடியும்?

  12. I had airtel internet for some time. Initially it was okay, after some time, since they have given too many connections, my internet became very slow and at times no internet at all.Subsequently I disconnected due to poor service. after this they called over my cell every 5 – 10 minutes asking me to reconnect. I even abused them to stop calling me and troubling me, but they never cared and kept on calling me for a month. You must experience it to understand what a nuisance it is. It seems they will do anything for money!! Sharing my experience with other readers may be useful. Never go for Airtel net. Now I have BSNL, service is very good indeed.

  13. ஏர் டெல் மொபைல் செய்த கடுப்பால் தான் போர்டபிளட்டியை பயன்படுத்தி பிஎஸ்என்எல்ல்லுக்கு மாறிவிட்டேன்.. அதிலும் இன்டர்நெட் கட்டணம் அளவிட முடியாத் கொள்ளை.

    எனக்குத் தெரிந்த வகையில் பிஎஸ்என்எல் கட்டண விபரங்களை தெரிந்து கொண்டு அதன்படி தேர்ந்தெடுத்தால் நமக்கு மிகப் பெரிய லாபம். புரிந்தவர்கள் புண்ணியவான்கள் மற்றும் சிக்கனகாரர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here