பயணக் குறிப்புகள் [செப்டம்பர் 2018]

5
Ortho one

சென்னையே பரவாயில்லை என்கிற அளவுக்குக் கோபியில் வெயில் கொளுத்துகிறது. கிட்டத்தட்ட இரண்டாம் கோடை என்கிற அளவுக்குப் பளீர் என்று வெயில் உள்ளது.

கடந்த இரு வாரங்களாக இரவில் அவ்வப்போது கன மழை பெய்தாலும், காலை 11 மணிக்கு மேல் வெயில் வாட்டுகிறது. இவ்வளவுக்கும் பவானி ஆற்று நீர் எங்கள் பகுதி முழுக்க ஓடி பசுமையாக உள்ளது.

ஏன் இந்தக் கொடூர வெயில் என்று புரியவில்லை. கோபியில் கட்டிடங்கள் அதிகமாகி மரங்கள் குறைந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

கோவை

உறவினர்கள் இருவரைக் காண கோவை PSG மற்றும் Ortho – One மருத்துவமனைக்குச் சென்றோம்.

PSG

கோவையில் பிரபலமான மருத்துவமனைகளுள் ஒன்று, முதல் முறையாக உள்ளே சென்றேன். மிகப்பெரிய இடம், அந்தக்காலத்திலேயே வாங்கியதால், சாத்தியமாகி இருக்கிறது.

தற்காலத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அறைகள் நவீன முறையில் இல்லை, சிகிச்சை எப்படி என்பது குறித்துத் தெரியவில்லை.

Ortho – One

இம்மருத்துவமனை எலும்பு முறிவு சிகிச்சைக்குப் பெயர் பெற்றது, சமீபத்தில் தான் துவங்கப்பட்டதாகக் கூறினார்கள்.

எங்களுடைய பாட்டிக்கு (95) காலில் எலும்பு முறிவு (Hairline Crack) ஏற்பட்ட போது கடந்த முறை ஈரோட்டில் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள்.

கிட்டத்தட்ட 3 மாதம் சிகிச்சையில் இருந்தார்கள்.

திரும்ப கீழே தவறி விழுந்து போது இங்கே அனுமதிக்கப்பட்டு 4 நாட்களில் வீட்டுக்கே வந்து விட்டார்கள். எலும்பு முறிவுக்கு இம்மருத்துவமனையை அணுகப் பரிந்துரைக்கிறேன்.

Jungoo

என்னோட அக்கா பையன், “மாமா! Jungoo ஆட்டோ பயன்படுத்துங்க, கட்டணம் குறைவு” என்றான். நானும் செயலியை நிறுவி பயன்படுத்த நினைத்தேன் ஆனால், அதற்கான தேவை வரவில்லை. UBER மூலமாகவே சென்று விட்டோம்.

கோவை மக்களே Jungoo ஆட்டோ சேவை எப்படி உள்ளது?

கோவை நகரம் 

கோவை எனக்கு எப்போதுமே பிடித்தமான நகரம். 15 வருடங்களுக்கு முன்பு அக்காக்களுடன் இங்கே சுற்றியது அதற்குப் பின் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இந்தமுறை அனைவரும்இருந்தது, பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது.

நான் சென்னையில் பணிபுரிவதாலோ என்னவோ எனக்குச் சென்னை எப்போதுமே ஒரு Professional City (Busy, பரபரப்பு) எண்ணவோட்டம் இருக்கும் ஆனால், கோவை Comercial City என்பது போல எண்ணவோட்டம் இருக்கும்.

கோவையில் இருந்தால், எனக்குச் சுற்றுலாவில் இருப்பது போல் தோன்றும். பெரும்பாலும் கொங்கு வழக்கில் பேசுவது கூடுதல் மகிழ்வை, நெருக்கத்தைத் தரும்.

இரண்டு நகரங்களுக்கான வித்யாசத்தை எப்படி சரியாக விளக்குவது என்று தெரியவில்லை. நீங்களே குத்து மதிப்பா புரிந்துக்குங்க 🙂 .

நிழல்

சுவற்றைப் பெயர்க்கிறது என்பதால் எங்கள் வீட்டில் இருந்த மரத்தை வெட்டி இருந்தோம், தற்போது வெளியே மரக்கன்றுகளை வைத்து ஓரளவுக்கு வளர்ந்து விட்டது. மகிழ்ச்சி.

தற்போது இரவில் மழை பெய்வதால், வழக்கத்தை விடக் கொஞ்சம் வேகமாக வளர்வது போலத் தோன்றுகிறது.

தொழில்நுட்பம்

அப்பா காலமான போது நடந்த செலவுகளை, கூகுள் Excel sheet ஒன்று உருவாக்கி, Share செய்து அக்கா மற்றும் மனைவியிடம் பதியக் கூறி இருந்தேன்.

இதில் எங்கே இருந்தும், (அனுமதிக்கப்பட்ட) எவரும் தகவல்களைப் பதியலாம் என்பதால், அனைவரும் புரிந்து கொள்ளவும், பதியவும் எளிதாக இருக்கிறது.

எப்போதுமே, எதுவுமே Organised ஆகவும், அனைவருக்கும் எளிதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அதோடு அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட வேண்டும் என்று கருதுவேன்.

துவக்கத்தில் செயலிகளைப் பயன்படுத்த அக்கா, மனைவி சிரமப்பட்டார்கள். தற்போது நான் கூறும் முன்பே அனைத்தையும் இவற்றில் செய்து வியப்பளிக்கிறார்கள்.

Google Pay ல எனக்கு, என் மனைவி பணம் அனுப்பினாலும், நான் அவருக்கு அனுப்பினாலும் அவருக்கு மட்டும் Reward ல பணம் கிடைக்கிறது, எனக்கு மட்டும் எப்போதுமே “Better Luck Next Time” தான் வருகிறது… கிர்ர்ர்ர்.

Google Pay பயன்படுத்த முதலில் அக்கா சிரமப்பட்டார், தற்போதெல்லாம் Google Pay, Google Excel Sheet, Splitwise என்று கலக்குகிறார் 🙂 .

Read அசத்தலான செயலி “Splitwise”

இவற்றைப் பயன்படுத்துவது எளிமைக்கு மட்டுமல்ல, தொலைந்து, மறந்து விடாமல் இருக்கும், அனைவரும் ஒரே சமயத்தில் பங்களிக்க முடியும், தேவைப்படும் போது திரும்ப சரி பார்க்க முடியும் என்பது போன்ற கூடுதல் வசதிகளுக்காகவும் தான்.

உங்கள் அனைவரையும் இது போன்ற சேவைகளைப் பயன்படுத்துங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இதன் மூலம் எதுவுமே தவறாது, எப்போது வேண்டும் என்றாலும் எளிதாகத் திரும்பச் சரி பார்க்க முடியும்.

வேட்டி

சமீபமாக வேட்டி கட்டுவதில் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஊரில் இருந்தால், பெரும்பாலும் வேட்டி தான் கட்டுகிறேன்.

தற்போது ஆர்வக் கோளாறாகி ஊரில் இருந்து சென்னை செல்லும் போதும் வேட்டி கட்டி செல்லும் அளவுக்கு ஆகி விட்டது. இரு முறை சென்னை <–> ஈரோடு சென்று வரும் போதும் வேட்டியே!

காலையில் சென்ட்ரலில் வேட்டியில் இறங்கினால், ஆட்டோகாரங்க மனம் போன போக்குல கட்டணத்தை சொல்றாங்க! “ஐயா! நான் சென்னைக்கு புதுசு இல்ல, உங்க கதை எல்லாம் என்கிட்டே வேண்டாம்“னு விளக்கி போய் சேர வேண்டி இருக்கு. முன்கட்டண முறை எனக்கு சரிவருவதில்லை.

சென்னையில் வெளியே செல்லும் போது இனி அதிகம் வேட்டி பயன்படுத்துவது என்ற முடிவில் உள்ளேன், பார்ப்போம் எந்த அளவுக்குச் சரியா வருகிறது என்று 🙂 .

கொசுறு 1

நான் என் அப்பா குறித்து எழுதிய “சென்று வாருங்கள் அப்பா!” கட்டுரை பலரிடையே சென்றடைந்ததுள்ளது குறிப்பாக உறவினர்கள், நண்பர்கள். அ

ம்மா படித்து விட்டு கண்ணீருடன் “நல்லா எழுதி இருக்க தம்பி” என்று கூறியதை பெரும் விருதாகக் கருதுகிறேன்.

கொசுறு 2

இன்று கூகுளுக்கு 20 வது பிறந்த நாள்! வாழ்த்துகள் கூகுள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. (எலும்பு முறிவுக்கு இம்மருத்துவமனையை அணுகப் பரிந்துரைக்கிறேன்.)

    உபயோகமான தகவல் . மிக்க நன்றி , நானும் யாருக்காவது தேவை என்றால் பரிந்துரைக்கிறேன்.உங்கள் பதிவை பார்த்து google sheet பற்றி தெரிந்து கொண்டேன் உபயோகித்து பார்க்கிறேன்.

    (Google Pay ல எனக்கு, என் மனைவி பணம் அனுப்பினாலும், நான் அவருக்கு அனுப்பினாலும் அவருக்கு மட்டும் Reward ல பணம் கிடைக்கிறது, எனக்கு மட்டும் எப்போதுமே “Better Luck Next Time” தான் வருகிறது… கிர்ர்ர்ர்)

    எனக்கும் அப்படி தான் . ஆனால் பல பேருக்கு ஒரு லட்சம் Reward கிடைத்ததாக நிறைய பேர் யூடியூபில் வீடியோ போட்டு உள்ளார்கள் . எனக்கு இதுவரை 803 ரூபாய் Reward கிடைத்து இருக்கிறது . பார்ப்போம் .

    (கொசுறு தகவல்)

    அப்புறம் நீங்க கிரெடிட் கார்டு பற்றி நிறைய எழுதியதை படித்தேன் . கிரெடிட் கார்டு உபயோகிப்பாளருக்கு கிரெடிட் கார்டு இல் இருந்து வட்டி இல்லாமல் எப்படி bank account க்கு பணம் அனுப்புவது என்று சொல்கிறேன் .

    முதலில் இந்த ஆப்ஸ் எல்லாம் நாம் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் . (BHIM YES PAY – UPI, Wallet,, https://play.google.com/store/apps/details?id=com.YesBank&hl=en_IN ) Paytm Payments account துவக்கி இருக்க வேண்டும் .

    இப்போது yes PAY Wallet இல் ஆதார் நம்பர் கொடுத்து wallet activate செய்து கொள்ள வேண்டும் . ஆதார் கொடுக்க வில்லை என்றால் 10000 ரூபாய் தான் ஒரு மாதத்திற்கு உபயோகிக்க முடியும் . ஆதார் verification செய்து இருந்தால் ஒரு லட்சம் வரை ஒரு மாதத்திற்கு உபயோகிக்கலாம் .

    பிறகு அதில் Virtual Debit card ஐ activate செய்து கொள்ள வேண்டும் . Rupay Card ஆக தருகிறார்கள் . இப்போது yes pay wallet இல் கிரெடிட் கார்டு வழியாக பணம் போட்டு பிறகு paytm app இல் payments பேங்க் section க்கு சென்று (Add Money To Savings Account ) என்பதை தேர்வு செய்தால் டெபிட் கார்டு வழியாக paytm payment வங்கி கணக்கிற்கு பணம் போட்டு கொள்ளலாம்.

    ஒரு transaction க்கு அதிக பட்சம் 2000 ரூபாய் தான் போட முடியும் . ஆனால் எத்தனை முறை வேண்டுமானாலும் அதிக பட்சம் 2000 ரூபாயாக போட்டு கொள்ளலாம் .அதில் சென்று yes pay wallet இன் Virtual debit card வழியாக நாம் பணம் போட்டு கொள்ளலாம் .

    இப்போது paytm payments கணக்கில் இருந்து நம் வங்கி கணக்கிற்கு இலவசமாக அந்த பணத்தை Transaction செய்து கொள்ளலாம் . ( Paytm Wallet வேறு Paytm Payments Bank வேறு என்பதை புரிந்து கொள்ளவும் .

    paytm wallet இல் கிரெடிட் கார்டு வழியாக பணம் போட்டு அதை வங்கி கணக்கிற்கு மாற்றினால் 4% paytm service charge பிடித்தம் செய்து கொள்வார்கள். yes bank wallet ஐ போல் பல வங்கிகள் virtual debit card வழங்குகிறார்கள் .

    ஆனால் yes pay wallet virtual debit card ஐ வைத்து paytm payments வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த எந்த கட்டணமும் விதிப்பதில்லை . mobikwik இதற்கு 2% service சார்ஜ் பிடித்து கொள்கிறார்கள் .

    TMW போன்ற சில ஆப்ஸ் yes pay போல இச்சேவையை இலவசமாக தருகிறார்கள் .

    தேவை படுவோர் உபயோகித்து பாருங்கள்.

  2. வணக்கம்

    தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வரிகள் அனைத்தும் எதார்த்தமானதாக உள்ளது.

    கோவை… நான் விரும்பும் ஒரே ஒரு நகரம். சுமார் 11 வருடங்களுக்கு மேல் விரும்பி வசித்து வந்த ஊர். வாழ்வியல் பாடம் கற்றுக் கொண்ட ஊர்.

    ம்ம்ம்… நான் இனையதளத்தில் உள்ள வசதிகளை கற்று கொள்ள ஆர்வமாக உள்ளேன் அந்த வரிசையில் Google pay நான் முயற்சி செய்து பார்க்கனும்.

    Splitwise இதையும் முயற்சிக்க வேண்டும்.

  3. கிரி, சொந்த ஊருக்கு அப்புறம் எனக்கு பிடித்த ஊர் கோவை என்பதில் மறுப்பில்லை… சென்னை 3 மணி நேர பயண தூரத்தில் இருந்தாலும் தொலைவில் உள்ள கோவையின் மீது காதல் எப்போதும் அதிகம்.. முதல் வேலை, முதல் சம்பளம், முதல் இறுக்கமான நட்பு, முதல் தொலைதூர பயணம், முதல் பிரிவு… என பல நிகழ்வுகள் நடந்தது கோவையில் தான்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  4. @ஹரிஷ் எனக்கு 952 ருபாய் 🙂

    கடனட்டை இல்லையென்றால், என்னுடைய நிலை சிரமம் தான். இதனால் நான் அனுபவிக்கும் பயன்கள் ஏராளம்.

    Yes Bank தகவலுக்கு நன்றி.

    @சக்தி இது போன்ற பல சேவைகள் உள்ளது. பொறுமையாக முயற்சியுங்கள்.

    @யாசின் கோவையில் இருந்தது பற்றி கூறி இருக்கிறீர்கள் 🙂 . அப்ப உங்கள் அறிமுகம் இல்லாமல் போய் விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here