ஜெ கலைஞர் அறிவித்தத் திட்டங்களை மாற்றிக்கொண்டு இருப்பது அல்லது நிறுத்திக்கொண்டு இருப்பது தெரிந்த விஷயம் தான் என்றாலும் ஜீரணிக்க முடியாத விசயமாக உள்ளது மோனோ ரயில் திட்டம். Image Credit
திட்டங்கள்
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டு பொதுக்காப்பீட்டு திட்டம் கொண்டு வந்துள்ளார். சட்டசபை வளாகத்தை மறுபடியும் கோட்டைக்கே மாற்றி உள்ளார்.
ஒரு ருபாய் அரிசித் திட்டத்தை இலவச அரிசி ஆக்கி உள்ளார் மற்றும் இதைப்போல பல திட்டங்களை மாற்றி உள்ளார்.
எல்லாம் சரி! ஆனால் மோனோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவது மிக மிக முட்டாள்த்தனம்.
இதை நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்பதை விளக்கமாகவே கூறுகிறேன்.
காப்பீட்டுத் திட்டம், இலவச அரிசித்திட்டம், கோட்டை மாற்றம் இவற்றில் எல்லாம் பணம் மட்டுமே இழப்பு ஆகும்.
நஷ்டம் ஏற்பட்டால் அரசால் எப்படியும் சமாளிக்க முடியும் மற்றும் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.
இதனால் பெரியளவில் பாதிப்பு என்றால் அது நிச்சயம் “பணம்” மட்டுமே ஆகும்.
தமிழகம் பார்க்காத ஊழல், நஷ்டமில்லை ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறும் போதும் ஜெ கலைஞர் இருவரும் மாற்றி மாற்றி மற்றவர் திட்டங்களை நிறுத்துவதும் புதிய திட்டங்களை அறிவிப்பதும் தமிழக மக்களின் சாபக்கேடாகி விட்டது.
தற்போது இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக ஜெ வின் மோனோ ரயில் அறிவிப்புத் திட்டம் உள்ளது.
மோனோ ரயில் என்றால் என்ன?
மோனோ ரயில் என்பது சிறு ரயிலாகும் அதாவது இரு விமான [Terminal] நிலையத்தை இணைக்கவும், சுற்றுலா வருபவர்கள் சுற்றிப்பார்க்கவும், பெரிய தீம் பார்க்கை வலம் வரவும் பயன்படுத்தப்படும் ஒரு போக்குவரத்துச் சேவையாகும்.
இவை அல்லாமல் சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து பெட்டிகளைக்கொண்டு பயணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல மற்ற மெட்ரோ ரயில்களைப் போல பயன்படுத்தப்படும் சிறு போக்குவரத்துச் சேவையாகும்.
இந்த சிறு விளக்கமே போதும் இந்த மோனோ ரயில் எந்த அளவிற்கு சென்னை கூட்டத்திற்கு பயன்படும் என்று.
சென்னையின் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நெருக்கடியை அனுபவித்தவன் என்கிற முறையில் சிறு சந்தேகமும் இல்லாமல் இது அடி முட்டாள்த்தனமான சேவை [சென்னைக்கு] என்பதை நிச்சயம் கூற முடியும்.
சென்னையை விட்டுச் சிங்கப்பூர் வந்து நான்கு வருடம் ஆகிறது தற்போது உள்ள ஜன நெருக்கடியை என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.
சமாளிக்க முடியாது
மக்கள் அலுவலகம் செல்லும் போதும் முடிந்து திரும்ப வீட்டிற்கு வரும் போதும் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.
இது சென்னையில் உள்ள மற்றும் வந்து செல்லும் அனைத்து மக்களுக்கும் தெரிந்த ஒன்றாகும். இதை எவராலும் மறுக்க முடியாது.
இவ்வாறு இருக்கையில் இந்த மோனோ ரயில் எப்படி மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியும்? அறிவுள்ள எவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மெட்ரோ ரயில் சேவையின் 20% கூட்டத்தைக்கூட இதனால் சமாளிக்க முடியாது.
மிகச்சிறிய பெட்டிகளாகும்.
கூட்டத்தைச் சமாளிக்க தற்போது மீட்டர் கேஜ் பாதைகளை எல்லாம் மாற்றி பிராட் கேஜ் பாதைகளாக மாற்றிக்கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில் மீட்டர் கேஜ் ஐ விடச் சிறிய அளவில் கொண்டு வந்தால் இதை என்னவென்று கூறுவது?
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரமான “பீக்” நேரங்களில் ரயிலில் உள்ளே சென்று வெளியே வருவதற்குள் தாவு தீர்ந்து விடும்.
கூட்ட நெரிசலில் மூச்சு விடுவதே சிரமம் இப்படி கூட்ட நெரிசலால் சென்னை திணறிக்கொண்டு இருக்கிறது.
அப்படி இருக்கையில் இதை சமாளிக்க மோனோ ரயில் என்ற குட்டி ரயிலைக் கொண்டு வந்தால் என்ன ஆவது?
நீங்கள் இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும் இதை பாதாள ரயிலாக அமைக்க முடியாது ஒரே வழி பறக்கும் ரயில் அதாவது மாடி ரயில் மட்டுமே ஆனால், மெட்ரோ ரயில் அப்படி அல்ல.
ஏன் இதில் பணம் மட்டுமே ஒரு முக்கியப் பிரச்சனை இல்லை?
நான் முன்னரே கூறியபடி ஊழல் செய்தால் எப்படியும் பின்னாளில் அதை சரி செய்யக் கூடிய வாய்ப்புள்ளது அல்லது வேறு வழியில் பணத்தை பெறக்கூடிய வாய்ப்புள்ளது.
திட்டங்களை மாற்றுவதால் மக்கள் வேறு வழியில் (கலைஞர் திட்டம் இல்லாமல் ஜெ திட்டம்) திரும்பப் பெற முடியும்.
கோட்டைக்கு மாற்றினால் 1000 கோடி நஷ்டத்தோடு அது முடிந்து போனது மற்றபடி அதனால் எந்த வேலையும் பெரியளவில் பாதிக்கப்படப்போவதில்லை.
எடுத்துக்காட்டாக, கோட்டைக்கு மாறியதால் எந்தப் பணியும் நின்று விடவில்லை வழக்கம்போல நடந்து கொண்டு தான் உள்ளது.
கலைஞர் காப்பீட்டு திட்டம் சென்று பொதுக் காப்பீட்டு திட்டம் வரும். இதை மாற்ற ஆகும் செலவு மட்டுமே நமக்கு பிரச்சனை மக்களின் வரிப்பணம் வீண்.
பின் என்ன தான் பிரச்சனை?
ரயில் பாதை அமைப்பது என்பது இந்த மாதம் தொடங்கி அடுத்த மாதம் முடிக்கக்கூடிய சாதாரண விசயமல்ல அதுவும் சென்னை போன்ற நெரிசல் மிகுந்த நகரங்களில் இதை அறிவீர்கள்.
மிக மிகப்பெரிய ப்ராஜக்ட்.
பறக்கும் ரயில் (MRTS) திட்டம் செயல்படுத்தப்பட்ட போது அதை முடிக்க எவ்வளவு வருடங்கள் ஆனது (அது கூட கூவம் பகுதியில் மட்டுமே) அதனால் எத்தனை மக்கள் சிரமப்பட்டார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன்.
இந்தப்பாதை அமைப்பதற்காக பல்வேறு வழித் தடங்கள் மாற்றி விடப்பட்டும் பொதுமக்கள் டேக் டைவர்சன் டேக் டைவர்சன் என்று தலை சுற்றிக் கீழே விழாத குறையாக அவதிப்பட்டார்கள்.
இது நடந்து பல வருடங்கள் ஆகி விட்டது தற்போது மக்கள் தொகை என்ன அதே அளவிலா இருக்கும்? எத்தனை மடங்கு அதிகரித்து இருக்கும்.
மோனோ ரயில் அமைப்பதால் போக்குவரத்து இடைஞ்சல் இருக்காது ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டியது இருக்காது என்றெல்லாம் தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள்.
மெட்ரோ ரயில் அளவை விட பாதிப்பு மிகக் குறைவாக இருக்கலாம் அவ்வளவே.
மோனோ ரயில் அமைக்க, மெட்ரோ ரயிலை அமைப்பதை விட குறைந்த செலவு ஆகும், விரைவாக முடிக்கலாம் மற்றும் இட நெருக்கடி காரணமாக மெட்ரோ ரயில் அமைக்க வேறு வாய்ப்பே இல்லாத இடங்களில் மோனோ ரயில் அமைக்கலாம்.
காரணம், சென்னை திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் அல்ல. குறிப்பாக தற்போது அமைக்கப்படும் மெட்ரோ வழித் தடங்களுக்கு இணைப்பாக மோனோ ரயிலைப் பயன்படுத்துவது நல்ல யோசனை.
அரசு என்பது தற்கால சிரமத்தைக் கணக்கில் கொள்ளாமல் எதிர்காலத்தைக் கணித்தே தனது திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் அதுவே உண்மையான அரசு.
கலைஞர்
கலைஞர் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும் சென்னையில் பல பாலங்களைக் கட்டியது அவரது ஆட்சியிலேயே என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவர் பெயரைப் பொறிக்க கட்டினாரா என்பதெல்லாம் இரண்டாவது பட்சம்.
மெட்ரோ ரயில் அமைக்கத் தற்போது சிரமப்பட்டாலும் எதிர்காலத்தில் மக்கள் அந்தப்பயனை நிச்சயம் அனுபவிப்பார்கள். மோனோ ரயில் வந்தால்?
தற்போது ஜெ கட்டளைப்படி மோனோ ரயில் கொண்டு வருகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இத்தனை மக்களை எப்படி அது தாங்கும்?
துவக்கத்தில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக இருப்பதாக தோன்றலாம்.
சரி பின்னாளில் இத்திட்டம் கணிப்பு தவறாகி விட்டது போக்குவரத்து நெரிசலை எந்த விதத்திலும் குறைக்கவில்லை அதனால் மோனோ ரயிலை எடுத்து விட்டு மெட்ரோ ரயிலைக் கொண்டு வந்து விடலாம் என்று just like that செய்யக்கூடிய விஷயம் அல்ல என்பது யோசிக்கும் திறன் கொண்ட அனைவருக்கும் புரிந்த விசயமாகும்.
கலைஞர் காப்பீட்டு திட்டம் போல அதை மாற்றி விட்டு வேறு திட்டத்தை அறிவித்துக் கொடுக்கக் கூடிய விசயமா இது!
எத்தனை பேரின் உழைப்பு இதில் உள்ளது, எத்தனை வருடம் இதற்காக செலவழிக்கப்படும், இதனால் மக்கள் படும் அவஸ்தைகள் என்ன ஆவது?
இன்னும் ஒரு 10 வருடம் கழித்து இருக்கும் போக்குவரத்து நெரிசலில் எப்படி மெட்ரோ ரயிலை அமைக்க முடியும்?
கண்டிப்பாக முடியும்! முடியும் என்று நினைத்தால் ஆனால், அதனால் பொதுமக்களுக்கு எவ்வளவு சிரமம்.
இதை எல்லாம் யோசித்துப்பார்த்தால் தலை சுற்றுகிறது.
இதற்கேன் மக்களிடம் பெரிதாக எதிர்ப்பு இல்லை?
காரணம் மிக மிக எளிது. மக்களுக்கு இன்னும் மோனோ ரயில் என்பதன் முழு அர்த்தம் தெரியவில்லை என்பதே.
மோனோ ரயிலும் மெட்ரோ ரயில் போலவே ஒரு மாஸ் போக்குவரத்து என்றே நினைத்துக்கொண்டுள்ளார்கள்.
இதைப் படித்துக்கொண்டு இருக்கும் உங்களில் பலருக்குக் கூட இன்னும் மோனோ ரயில் என்பதன் முழு அர்த்தம் தெரிந்து இருக்காது என்றே கருதுகிறேன்.
இதில் தவறாக நினைக்க எதுவுமில்லை காரணம், பலருக்கு இது பற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு மிக மிகக் குறைவு.
இதைப் பற்றிய அறிமுகமோ அல்லது இதைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளோ உள்ள மக்கள் மிகக் குறைவு அப்படி இருக்கையில் மக்களைத் தவறாக நினைக்க முடியாது.
மக்களைத் தான் தவறாக நினைக்க முடியாதே தவிர இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிற அரசை மற்றும் அதற்கு திட்டங்களைக் வகுத்துக் கொடுக்கும் அரசு அதிகாரிகளை நாம் நிச்சயம் மன்னிக்க முடியாது.
இதைப்போல மிகப்பெரிய திட்டங்களைச் செய்யப்போகிறவர்கள் அதனுடைய சாதக பாதகங்களை அறியாமலா செய்வார்கள்?
தெரிந்து செய்தால் அதன் பெயர் என்ன? தெரியாமல் செய்தால் அவர்கள் எதற்கு அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள்?
சிங்கப்பூர் & மலேசியா
கட்டமைப்பு சிறப்பாக உள்ள மிகவும் குட்டி நாடான சிங்கப்பூரிலேயே (சென்னையை விடப் பரப்பளவில் சிங்கப்பூர் சிறியது) மோனோ ரயில் ஆரம்பிக்கப்பட்டு பின் அது நிறுத்தப்பட்டு விட்டது.
தற்போது அது அமைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
தற்போது அமைக்கப்படும் புதிய வழித்தடங்கள் அனைத்தும் MRT என்று அழைக்கப்படும் Mass Rapid Transit என்கிற நமது ஊர் மெட்ரோ ரயில் போலவே அமைக்கப்படுகிறது.
பெரும்பாலும் இங்கே பாதாள வழித்தடங்கள் அதிகம் எனவே, இதற்கும் கூட்டத்தைச் சமாளிக்கவும் சிங்கப்பூர் அரசாங்கம் மோனோ ரயிலை நிறுத்தி விட்டு MRT எனப்படும் முறையையே பின் பற்றி வருகிறது.
சிங்கப்பூர் போல மலேசியாவிலும் மோனோ ரயில் உள்ளது ஆனால் அவர்களும் உருவாக்கிய காரணத்திற்க்காக அதை நடத்திக்கொண்டுள்ளார்கள்.
எவ்வகையிலும் மக்களின் முழுப் பிரச்னையைத் தீர்க்க உதவவில்லை.
தற்போது உள்ள இடத்தில் இதே மெட்ரோ ரயில் போல இருந்து இருந்தால் இன்னும் பல மக்கள் பயன்பெறுவார்கள் என்பது உண்மை (அமைப்பதில் உள்ள இட நெருக்கடி தவிர்த்து).
சில ஆசிய நாடுகளான சீனா ஜப்பான் வெகு சில ஐரோப்பா நாடுகள் மட்டுமே இதைப் பயன்படுத்துகிறார்கள்.
அங்கும் கூட மோனோ ரயிலைப் பயணிகளின் முக்கியப் போக்குவரத்துச் சேவையாக பயன்படுத்தவில்லை அல்லது பயன்படுத்த முடியவில்லை.
நிலைமை இப்படி இருக்கும் போது இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் ஒன்றான சென்னையில் மோனோ ரயில் வந்தால் சென்னை மக்களின் விதி என்று கூறுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
நம்மால் அரசை (ஜெ வை) மீறி எதுவும் செய்ய முடியாது என்றாலும் குறைந்த பட்சம் மோனோ ரயில் வந்தால் ஏற்படும் பிரச்சனைகளைக் கொஞ்சமாவது நாம் அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
ஒருவேளை (ஒருவேளை தான்) எதிர்ப்புகள் அதிகமானால் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, சரியான நேரத்தில் அவசியமான பதிவு…..
நீங்க என்னதான் சொன்னாலும் “அம்மா” சொன்னா கரீக்கிட்டாதான் இருக்கும் :)))
அட….. நான் கூட “மீ த ஃபர்ஸ்ட்’’ சொல்லலாம் போல !!! 😀
கருணாநிதி என்ன செய்திருந்தாலும் மாற்றவேண்டும் என்ற வெறியே ஜெ.விடம் தெரிகிறது.
தெளிவான பார்வையுடன் விரிவான அலசல்… அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே.
கிரி!நீங்கள் சொன்னது போல் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான் தமிழகத்தில் அனைவரும் வாய் மூடிகளாக இருக்கிறார்கள்.
ஜெயலலிதா நல்லதை செய்தால் ஆதரிப்பதும்,தவறான திட்டங்களை உருவாக்கினால் பிரச்சினைகள் பற்றி சொல்லவும் வேண்டும்.அதனையும் மீறி மூணு கால் விவாதம் செய்தால் குரல் கொடுக்கவும் வேண்டும்.
உங்கள் கருத்தை பதிவில் வைத்தற்கு நன்றி.
வணக்கம் கிரி அவர்களே,
நிச்சயமாக இது ஜெயின் தவறான முடிவுதான் .மோனோ ரயில் பற்றி நண்பர்கள் கூறிதான் தெரியும் இப்போது உங்கள் பதிவு மூலம் விரிவாக அறிந்து கொண்டேன்.மோனோ ரயில் திட்டத்திற்கு பெரிதாக எதிர்ப்பு எழுந்ததாக தெரியவில்லை.யாராவது இத்திட்டத்தை தடுத்து நிறத்தினால் மகிழ்ச்சிதான் அதற்கு என் முழு ஆதரவும் உண்டு.
சென்னைக்கு மோனோ ரயில் – ஒரு பயங்கர கேலிக்கூத்து.
மோனோரயில் திட்டம் வர போகுதுன்ற செய்தியே உங்க blog படிச்சு தான் தெரிஞ்சுகிட்டேன்,
சின்ன பரப்பளவுக்கு every 2 min க்கு oru service வெச்சா நல்லா வேலை செய்யும். population பிரச்சனை இல்லை. for ex: சமீபத்துல டிஸ்னி வேர்ல்ட் போயிருந்தேன். அவ்வளவு population அட்டகாசமா manage பண்ணினாங்க. உண்மையிலேயே வியந்து போனேன்.
இவங்க எவ்வளவு பெரிய பரப்பளவுல பிளான் பண்ணுறாங்கன்னு தெரியலை. ரொம்ப பெரிய ஏரியா பிளான் பன்னுராங்கன்னா… கண்டிப்பா unga post oru nalla foresight.
நல்லா போஸ்ட் கிரி.
அருமையான பதிவு. நான் கூட மோன மெட்ரொவுக்கு ஒரளவு மாற்று திட்டம் தான் என நினைத்திருந்தேன்.ஆனால் அம்மா கலைஞர் அறிவித்த மெட்ரோ,சமச்சீர் கல்வி இரண்டையும் தடுப்பது சரியல்ல. இந்தியாவில் மட்டும் தான் மக்களுக்கு எந்த விவரங்களையும் தெரிவிக்காமல் திட்டங்களை செயல் படுத்த முடிகிறது
கிரி
இதன் (மோனோ ரயில்) பிண்ணனி முழுவதும் தெரியுமா? எங்கு படித்தீர்கள்? இங்கு இருக்கும் எனக்கு செய்தி தாளில் படித்த ஞாபகம் இல்லை,வந்ததாகவும் தெரியவில்லை.மேம்போக்கான தகவல்களை மட்டுமே காணமுடிகிறது. இப்படிப்பட்ட நிலையில் “இமாலய தவறு” என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்.
தலமை செயலகம் மாற்றம் பற்றி திரு முருகன் அவர்கள் துக்ளக்கில் சொல்லியுள்ளார்,படித்து பாருங்கள்.
மிகப்பிரமாதமான பொறுப்பான அனுபவப்பூர்வமான கட்டுரை… நாம் (பொதுமக்கள்) அனைவரும் சேர்ந்து எதிர்த்து போராட வேண்டும். ஜெ ஒரு முளைச்சூடு கொண்ட பெண்மணி.தான் நிணைத்தது மட்டும் சாதிக்கவேண்டும் என்று ஈகோ கொண்டவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அல்லது மிக கடுமையாக அனைவரும் இணைந்து போராடவேண்டும்.. குறிப்பாக வடசென்னை தென்சென்னை மக்கள் மட்டும் பொங்கி எழுந்தால் போதும். ஆனால் அவர்களும் இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது வெளியூர் மற்றும் வெளிமாநில கம்யூட்டர் மக்கள்தான். நாள் பட நாள் பட பேயாட்சி உச்சகட்டம் எட்டும். அந்த கொள்ளைக்காரர்கள் ஒழிந்து இந்த பேய் வந்திருக்கிறது. எதிர்த்து போராடத வரை எல்லாம் நாம் விதி …..என்று வாழவேண்டியதுதான்.
பல வருடங்களா எங்கூர்ல ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது அகல ரயில் பாதை போட போறோம்ன்னு சொல்லி – எப்ப தான் நிறைவேறுமோ.
நிச்சியமாய் மெட்ரோவை விட மோனோ ரொம்ப கஷ்ட்டம் தான், ஆனால் ஈகோவுக்கு முன்னாடி எல்லாமே கோ-கோ தான் …
நீங்க தமிழ்நாட்டு ரூல்ஸ் தெரியாம பேசறீங்க
Rules for next 5 yrs
1 . J is is always right
2 . if you think, she is not right, read rule 1 again
First of all you need to understand what the purpose of monorail system is. As you said in Malaysia it is failed and still they continue just because they have. Its big blunder and that’s what you understood. You may live in Singapore but you never know why they system is interrupted and it was not withdrawn.
Developing city always has an issue with the respective infrastructure. To implement any new system it needs a large space. But here in the monorail system it doesn’t need much space like MRT or LRT. For an example in kuala lumpur: Raja chulan – Imbi – KL sentral( this route is very much complicated and its very messy. If you want to implement any LRT or MRT here, there is no way to keep your track. Just imagine Chennai is not a planned city and restructuring can be possible. It can’t be development from its scrap.
As you spent 4 years in Singapore, I wonder what you have been observing all this days. Don’t write whatever you think and you may mislead people.
தம்பி ஈஸ்வர் ஓவரா பேசாதிங்க, அள்ரியடி மெட்ரோ ரயில் பிளான் போட்டு ப்ரோசெச்ஸ் இஸ் ஒன தி கோ. அத விட புதுசா போன்ற மோனோ ரயில் பிளான் டைம் அண்ட் ச்பசே எடுக்காத? மக்களோட பந்த போடு நூறு பேர் போக மோனோ ரயில் எதுக்கு? கொஞ்சம் கஷ்ட பட்டாலும் மெட்ரோ ரயில் திட்டாத முடிப்பதே சரி.
வரலாறு தெரியாம பேசாதிங்க தம்பி.
வெரி குட் reply
அருமையாக, தெளிவாக எழுதப்பட்டுள்ள கட்டுரை!
@வடுவூர்குமார்
உங்கள் முதல் கேள்வி புரியவில்லை. மோனோ ரயில் பற்றி கேட்கிறீர்களா அல்லது அறிவிப்பை கேட்கிறீர்களா? ஜெ அறிவிப்பு என்றால் கவர்னர் தனது உரையில் மோனோ ரயில் பற்றி பின்வருமாறு அறிவித்தார்.
“சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
படிப்படியாக 300 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயிலின் தூரம் அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்.”
சென்னையைப் போலவே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை குறித்து .. எனக்கு முதலில் தேவையில்லாமல் கலைஞர் ஆயிரம் கோடி செலவு செய்து வந்ததே பிடிக்கவில்லை. கட்டப்பட்ட கட்டிடமும் நம் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் படி இல்லை. ஜெ சொல்வது போல கட்டிடம் இன்னும் கட்டி முடிக்கப்படவே இல்லை.. அப்படி அவசர அவசரமாக செட்டிங்க்ஸ் போட்டு கட்ட வேண்டிய அவசியம் என்ன? அதனால எனக்கு முதல்ல கலைஞர் செய்ததிலேயே உடன்பாடில்லை அப்புறம் தானே ஜெ!
@ஈஸ்வர் நான் “அமைப்பதில் உள்ள இட நெருக்கடி தவிர்த்து” என்று சரியாகத்தானே குறிப்பிட்டு இருக்கிறேன். இங்கே குறிப்பிட்டதால் மேலே கூறும் போது தேவையில்லை என்று நினைத்தேன் அங்கேயும் இணைத்து விடுகிறேன்.
இட நெருக்கடி உள்ள இடத்தில் அதாவது MRT அமைக்கவே முடியாத இடத்தில் மோனோ ரயில் அமைப்பதில் எனக்கு எந்த வித கருத்து வேறுபாடுமில்லை. யாருக்குமே இருக்க முடியாது என்றே நினைக்கிறேன் (அதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருந்தால்).
ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் MRT கால தாமதம் ஆகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மைலாப்பூருக்கு கூடத்தான் MRT வாய்ப்பே இல்லை என்றார்கள் எல்லோருமே அப்படித்தான் நினைத்தார்கள் ஆனால் கூவம் வழியாக கொண்டு வந்து சாதிக்கவில்லையா. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
எல்லா விசயத்தையும் முழுசா தெரிஞ்சு பேசணும். மெட்ரோ ரயில் நல்ல போக்குவரத்து ஊடகம். ஆனால் அதை செயல்படுத்த நிறைய இடம் தேவைப்படும் , நிறைய ஆக்கிரமிப்புகள், வீடுகள், கடைகள் அகற்ட்ட பட வேண்டும்.
பொதுமக்களுக்கு நிறைய சிரமம் ஏற்படும். இன்னும் அதிக காலம் பிடிக்கும். ஆனால் மோனோரயில் அதில பாதி தான் பிடிக்கும். செயல்படுத்துவது ரொம்ப சுலபம்.
கொஞ்சம் விஷயம் தப்பா புரிஞ்சிகிட்டு கண்டபடி எழுத வேண்டாம். இந்தியாவில எந்த திட்டமும் முழு அளவில யாரையும் திருப்தி படுத்தாது. நல்ல விஷயங்கள் வரவேற்க்கனும்.
இந்தியாவின் முதல் மோனோரயில் திட்டத்தில் பெருமையுடன் வேலை பார்க்கும்,
செல்வகுமார்.
மும்பை.
மாற்றங்கள் வரும் என்று நம்பிக்கை இல்லை. மாற்றம் ஏற்பட்டால் நன்றாக இருக்கும்.
@ செல்வா அண்ணா
நல்ல போக்குவரத்து ஊடகம் தான் .. ஆனா நமக்கு பெரிய போக்குவரத்து ஊடகம் தான் வேணும், ஏன்னா சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் போருகிகிட்டே போகுது..
நெறைய இடம் தேவைதான் படும் .. ஆக்கிரமிப்புகள் அகற்றிதான் ஆகா வேண்டும் .. கொஞ்சம் சிரமம் பாக்காமல் செயல் படுத்தினால் அடுத்த 20 வருடங்களுக்கு அது போதுமானதாக இருக்கும் ஆனால் மோனோ ரயில் அடுத்த 10 வருடத்திற்கு கூட போதுமானதாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து
இந்தியாவின் முதல் மோனோரயில் திட்டத்தில் பெருமையுடன் வேலை பார்க்கும்,
செல்வகுமார்க்கு என் வாழ்துக்கள்
சென்னை : “”சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை, இந்த அரசு கைவிடவில்லை. திட்டமிட்டபடி, அப்படியே நிறைவேற்றப்படும். குறுகிய காலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கூடுதல் வசதியாக தான், “மோனோ ரயில்’ திட்டம் கொண்டு வரப்படுகிறது,” என, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
நன்றி தினமலர்
techinical லா நிறைய விஷயம் தெரிஞ்சு கிட்டேன் நன்றி தல
கிரி, நீங்க சொன்னது மிக மிக சரி, மிகச்சிர்ய வழித்தடங்களுக்கு வேண்டுமானால் இது உதவியாக இருக்கலாம், சென்னைக்கு ம் ம் ம் சான்ஸே இல்லை, சின்ன வழித்தடங்களுக்கும் இத்தனை செலவில் செய்து பின் செய்து விட்டோமே என்றுதான் நடத்த வேண்டி வரும், இல்லையென்றால் , தாழ்வு நிலை சொகுசுப்பேருந்து அறிமுகப்படுத்தி இரண்டு மடங்கு டிக்கெட் வசூலித்து முன்பிருந்த அதே வசதிகளை செய்த தந்தது போல் ஆகிவிடும், எனிவே நண்பர்கள் சொல்வது போல் ஜெ முன்புபோல் இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை யோசிக்கட்டும்,
// மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்.//
இந்த 45 கிமீ போட்டாங்கன்னாலே தெரிஞ்சிடும்ங்க இது ஒத்துவருமாவராத்தான்னு
பொருத்திருந்து பாப்போம் என்ன நடக்குதுன்னு :-))))
நல்ல பதிவு தல :-))
மெட்ரோ ரயில் நிறைவேற்ற முடியாத வழி தடங்களில் வேணுமென்றால் மோனோ செயல் படுத்தலாம் , காரணம் சென்னை வரைந்து செயல் படுத்திய மாநகரம் அல்ல . இதில் கொஞ்சம் நெருக்கடியும் இருக்கு , உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் . ஜெ , 10 % மட்டுமே மாறி இருக்காங்க மத்த படி அவரு அவரு தான் ………………பிறவி குணம் மத்த முடியுமா பாஸ் ……
நீங்க எது சொன்னாலும் கரெக்டாதான் இருக்கும் கிரி
ராஜேஷ்.v
மாஸ் ராபிட் ட்ரான்சிட் enbathey சரி. மாஸ் ராபிட் ட்ரான்ஸ் போர்ட் தவறு.
பிரபு நீங்கள் கூறுவது சரி தான். மாற்றி விட்டேன். நன்றி
நன்றி !
பழைய காலத்து டிராம் வண்டி போல மேல் பாலத்தில் ஓடப்போகும் சிறு வண்டி. மெட்ரோ ரயிலின் தோற்றத்தில் ஒரு” ஆட்டோ ” மாதிரி! ஏதோ மிருக மெஜாரிட்டியுடன் இருப்பதால், மேஜை தட்டும் ஜால்ரா உறுப்பினர்களையும்,பொம்மை தலையாட்டி அமைச்சர்களுடன் ஒப்புதல் பெற்று தனது ஆட்சியில் ஒரு தெண்ட திட்டம் திறந்து விடவேண்டும் என்ற மமதையில் துவங்கப்பட்ட திட்டம்தானே இது? எப்படியும் இந்த அம்மாவோ அவரது நண்பியோ இதில் பயணிக்கப் போவது இல்லை! காண்ட்ராக்ட் கொடுத்து கமிஷன் பெறுவதுதானே குறிக்கோள்!