அழகர்சாமியின் குதிரை (2011)

6
அழகர்சாமியின் குதிரை

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல வெற்றிப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் அழகர்சாமியின் குதிரை.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்கள் கதையைப் படமாக்கி உள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

அழகர்சாமியின் குதிரை

தேனி மல்லையாபுரம் கிராமம் வறட்சியால் கஷ்டப்படுகிறது இதனால் அங்குள்ள அழகர்சாமி கடவுளுக்கு விழா எடுத்து வேண்ட நினைக்கிறார்கள்.

இந்தச் சமயத்தில் அழகர்சாமியின் குதிரைச் சிலை திருட்டுப்போகிறது இதனால் திருவிழா தடைபடும் நிலையில் உயிருள்ள ஒரு குதிரை கிடைக்கிறது.

இதைக் கடவுளே அனுப்பி வைத்ததாக அனைவரும் நம்புகிறார்கள்.

இந்நிலையில் இக்குதிரையை சொந்தம் கொண்டாடி அப்புக்குட்டி என்பவர் வருகிறார் ஆனால் கிராம மக்கள் குதிரையைக் கொடுக்க மறுக்கிறார்கள்.

இறுதியில் விழா நடந்ததா? அப்புகுட்டிக்குக் குதிரை திரும்பக் கிடைத்ததா! என்பதே கதை.

கிராம மக்கள் உணர்வுகள்

கிராம வாழ்க்கையை எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே கொடுத்து இருக்கிறார்கள்.

நானும் கிராமத்திலிருந்து வந்தவன் தான் என்பதால் கிராம மக்களுடைய உணர்வுகளை நன்றாக உணர முடிந்தது.

அதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கிராம மக்களின் பேச்சுக்களை செய்கைகளை அப்படியே படம் பிடித்துக்காட்டியது.

விழா நடத்த கிராமப்பெரியவர்கள் வசூல் செய்யப்போகும் போது நடக்கும் நிகழ்வுகள் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது அதிலும் ஒரு பாட்டி காது கேட்காதது போல நடித்து எஸ்கேப் ஆகப் பார்ப்பது நல்ல நகைச்சுவை.

குதிரைச் சிலை காணாமல் போனதால் ஊர்ப்பெரியவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சி கொஞ்சம் சலிப்பை வரவழைத்தது.

தற்போதெல்லாம் மக்களுக்குக் காட்சிகளை நீட்டி முழக்காமல் சுருக்கமாகக் கூறினால் மட்டுமே ரசிப்பார்கள்.

ஆனால், இதில் சீக்கிரம் யாராவது குதிரையைப் பற்றி விளக்கமா சொல்லுங்கப்பா! என்று நினைக்கும் அளவிற்கு காட்சியை இழுத்து விட்டார்கள்.

இதில் காவல் துறை அதிகாரியாக நடித்து இருந்தவரின் நடிப்பு நன்றாக இருந்தது.

கோடங்கி

கோவில்களில் குறி சொல்பவராக வரும் கோடங்கி போன்றவர்கள் செய்யும் ஏமாற்று வேலையை நன்கு காட்டியிருக்கிறார்கள்.

அவர் தன்னுடைய சுயலாபத்திற்காக கடவுளை பயன்படுத்துவதை பார்த்தாவது மக்கள் திருந்தினால் சரி.

அப்புக்குட்டியாக வெண்ணிலா கபடிக்குழுவில் ஐம்பது புரோட்டாவா! என்று ஆச்சர்யப்படுவாரே அவர் நடித்துள்ளார் இவருடைய பெயரும் அழகர்சாமி.

அப்புக்குட்டிக்கு தன்னுடைய குதிரை கிடைத்தால் மட்டுமே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறும் என்ற நிலை.

காணாமல் போனக் குதிரையை இக்கிராமத்தினர் பிடித்து வைத்து இருப்பதைக்கண்டு அழைத்துச் செல்ல நினைக்கும் போது ஊர்க்காரர்கள் அதை அனுமதிக்க மறுக்க இதனால் இவருக்கும் அவர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது.

இவர் அடிக்கும் காட்சியும் அடி வாங்கும் காட்சியும் சிறப்பாகக் காட்சியமைக்கப்பட்டுள்ளது. நிஜமாகவே அடி விழுந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

கேரளா மாந்திரீக நபராக வரும் முருகன் காட்சிகள் ரசிக்கும்படி இல்லை பழைய படங்களைப் பார்ப்பது போல இருந்தது.

அதே போல வேவு பார்ப்பவராக வரும் காவலர் பின் கோடங்கி போலச் செய்யும் காட்சிகளும் கடுப்பையே தந்தது. கிராமம் என்றால் ஒரு மைனர் என்பது போல இதிலும் ஒருவர் வருகிறார்.

இளையராஜா

இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்ததைப் பற்றிச் சிலாகித்துக் கூறி இருந்தார் ஆனால், அவர் குறிப்பிடும் அளவிற்கு பாடல்களும் பின்னணி இசையும் கவரவில்லை.

வழக்கமான மசாலப்படங்களிலிருந்து வித்யாசப்படுத்தி இதைப்போலப் படத்தை எடுக்கத் துணிந்த இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.

உடன் இதைத் தயாரித்த க்ளவுட் நைன் நிறுவனத்திற்கும்.

இயல்பாகப் படத்தை எடுத்து இருந்தாலும் எதோ ஒன்று குறைகிறது. விறுவிறுப்பாகக் கொடுத்து இருக்கலாமோ! என்ற எண்ணம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.

Directed by Suseenthiran
Produced by P. Madhan
Written by Bhaskar Sakthi
Screenplay by Suseenthiran
Based on Azhagarsamiyin Kudhirai by Bhaskar Sakthi
Starring : Appukutty, Saranya Mohan
Music by Ilaiyaraaja
Cinematography: Theni Eashwar
Editing by Kasi Viswanathan
Studio Escape Artists Motion Pictures
Distributed by Cloud Nine Movies
Release date(s) May 12, 2011

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

6 COMMENTS

  1. நந்தலாலா க்கு அப்புறம் இன்னமும் திரையரங்க பக்கம் செல்லவில்லை :-(, குள்ள நரி கூட்டம் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று ஞாபகத்தில் இருக்கும் ஒரே திரைப்படம், ஒரிஜினல் dvd க்காக வெய்ட்டிங்.

    அழகர்சாமி குதிரை இங்கு எங்கும் திரை இடப்படவில்லை, இருந்தாலும் பார்க்கவேண்டுமேன்ரும் தோன்றவில்லை.

    எந்திரனுக்கப்புரம் அதிகமாக நான் எதிர்பார்க்கும் திரைப்படம் ‘அவன் இவன்’ தான், என்ன பாலாவை விமர்சிக்கிறேன் என்கிற பேர்வழி படத்தை ஒரு வழி பண்ணாவிட்டால் சரி.

    என்னதான் ஆடுகளம் சிறந்த திரைப்படமாக இருந்தாலும் 6 விருது என்னும்போது சம்திங் ராங்:-) (பாலு மகேந்திரா or சன் பிச்சர் # டவுட்டு :-))

    அப்புறம் வைரமுத்து பெயருக்கு கூட தேசிய விருது குடுப்பாங்களா? 🙂

    கனிமொழி விடயத்தில் அவர் உண்மையிலேயே தப்பு செய்யாமல் சிறை சென்றிருந்தால் நான் இன்னமும் மகிழ்வேன்.

  2. வாழ்ந்து கெட்டவர்கள் படும் பாட்டை விட அந்த ரூமுக்குள் இருந்த கக்கூஸ் தான் இவர்களுக்கு பல பாடங்களை உணர்த்தும் போல.

    உண்வதும் போவதும் ஒரே இடத்தில்?

    எப்படி வாழ்க்கை மாறியுள்ளது பாத்தீயளா?

  3. நல்லா இருக்கு கிரி

    “ஆடுகளம் உங்க விமர்சனம் படிக்க ஆர்வமா இருக்கு
    நீங்க எவ்வளவு பெருசா எழுதினாலும் ரொம்ப ரசிச்சு தான் படிப்போம்.. அது நீங்க வாங்கி வந்த வரம் தல”

    – அருண்

  4. @ராஜகோபால் மிக்க நன்றி. இதை ஏற்கனவே படித்து இருக்கிறேன்.

    @ஜீவதர்ஷன்

    நான் கூட குள்ளநரிக்கூட்டம் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இங்கு வரவில்லை.

    பாலா என்றாலே இப்பிரச்சனை வராமல் இருக்குமா! 🙂

    ஆடுகளத்திற்கு ஆறு விருது என்பது ரொம்ப ஓவராக தான் இருக்கிறது. மைனா அங்காடித்தெரு மதராசப்பட்டினம் ஆகியவையும் சிறந்த படங்களே.

    வைரமுத்து விருது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. என்னவோ போங்க!

    கனிமொழி 🙂 தான் செய்த பாவம் பிள்ளைகளை தாக்கும் என்பது எவ்வளவு உண்மை. கனிமொழி தவறு செய்து இருந்தாலும் அவரை விட சீனியர்கள் பலர் மாட்டாமல் உள்ளார்கள். ஒருவேளை சிறைக்கு வந்ததால் பக்கா அரசியல்வாதி ஆனதுக்கு தகுதி பெற்று விட்டாரோ!

    @காயத்ரிநாகா சமச்சீர் கல்வி பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. மேலோட்டமாகத்தான் படித்து இருக்கிறேன் இன்னும் அதில் உள்ள சாதக பாதகங்கள் முழுதாகத் தெரியாது. தெரியாத ஒன்றை நான் விமர்சிப்பது இல்லை. நன்றாக புரிந்து கொண்ட பிறகு வாய்ப்புகிடைத்தால் கண்டிப்பாக எழுதுகிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி.
    @அருண் அப்படி உங்களுக்கு மட்டும் தான் தோன்றுகிறது போல.. உங்களைத்தவிர வேற யாரும் சொன்னதா தெரியல (தினேஷ் சொன்னாரு) 🙂

  5. …Suseenthiran after the success of his Naan Mahan Alla is going back to his forte rural themes with Azhagarsamiyin Kudhirai.. Suseenthiran who lived his early life in a village near Palani understands the customs rituals and sports in rural Tamil Nadu as proved by Vennila Kabadi Kuzhu.

  6. அழகர்சாமியின் குதிரை கதையை ஆனந்தவிகடன் பத்திரிகையில் படித்த ஞாபகம். சினிமாவுக்காக என்னென்ன மாத்தியிருக்காங்களோ, நா இன்னும் படம் பாக்கலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!