That’s 1 minute. See you tomorrow | Nas Daily

2
That's 1 minute.

ணையத்தை குறிப்பாகச் சமூகத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு Nuseir Yassin தெரியாமல் இருக்காது. பெயரைத் தெரியவில்லையென்றாலும் அவர் கூறும் That’s 1 minute. See you tomorrow தெரியும். Image Credit

Nuseir Yassin

பாலஸ்தீனிய இஸ்ரேலியரான யாசின் படிப்புக்காக (Harvard University) அமெரிக்கா சென்று பின்னர் PayPal உட்படச் சில நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார்.

இஸ்லாமியரான யாசின் தன்னை இஸ்லாமிலிருந்து விடுவித்துக்கொண்டு Non-religious Muslim என்பதாக அறிவித்துக்கொண்டார். Info WikiPedia.

2016 ல் பணியிலிருந்து விலகித் தினமும் ஒரு காணொளி என்ற வைகையில் உலகம் முழுக்கச் சுற்றி காணொளிகளைப் பதிய ஆரம்பித்தார்.

தினமும் 1 நிமிட காணொளி என்ற வகையில் ஃபேஸ்புக்கில் 2016 ல் ஆரம்பித்து 2019 ல் முடித்தார்.

முன்பு சிங்கப்பூரில் வசித்து வந்த யாசின் தற்போது (செப்டம்பர் 2021) துபாயில் வசித்து வருகிறார்.

That’s 1 minute. See you tomorrow

காணொளி முடியும் போது என்ற அவர் கூறும் That’s 1 minute. See you tomorrow பிரபலமான வசனமாக உள்ளது.

தற்போது YouTube Shorts, Reels வந்த பிறகு இவரது காணொளிகள் மேலும் பிரபலமடைந்து வருகிறது.

தற்போது நீண்ட காணொளிகளைப் பார்க்க யாரும் விரும்புவதில்லையென்பதால், குறுகிய நேரத்தில் சுவாரசியமாகக் கூறும் அவர் பாணி பலரை கவர்ந்ததில் வியப்பில்லை.

உஸ்பெக்கிஸ்தானில் ஒரு சிறு கடலே வற்றிப்போனதை பற்றி இவர் விளக்கிய காணொளியில் தான் இவர் எனக்கு அறிமுகம்.

அதன் பிறகு சீனா எப்படி மற்ற நாடுகளை (இலங்கை உட்பட) தன் கட்டுப்பாட்டில் எடுக்கிறது என்று இவர் கூறியது பலரை கவனிக்க வைத்தது.

பிலிப்பைன்ஸ் மீது அதிக அன்பு கொண்டவரான யாசின், பிலிப்பைன்ஸ் பற்றி ஏராளமான காணொளிகளை வெளியிட்டுள்ளார். இயற்கை பேரிடர்களில் நிதி வசூலித்துக் கொடுத்துள்ளார்.

உலகம் முழுக்க இவர் பிரபலமானதால், எங்குச் சென்றாலும் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் செல்லும் இடங்களில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

Nas Acadamy என்ற பெயரில் தன் அனுபவங்களை, எப்படியொரு காணொளியைக் கொடுக்க வேண்டும் என்பது உட்படப் பல நுணுக்கங்களைக் கற்றுத்தருகிறார்.

சர்ச்சை

பிரபலம் என்றாலே சர்ச்சை இல்லாமல் இருக்குமா! 🙂 . இவரும் சர்ச்சைகளுக்கு விதிவிலக்கல்ல.

அதுவும் காணொளி எனும் போது சிலருக்கு ஏற்புடையதாக இல்லாததும், இவரது அகாடமியில் டாட்டூ சம்பந்தப்பட்ட ஒரு படிப்பை நீக்கியதும் சர்ச்சையானது.

இதனால் பல மில்லியன் பின்தொடர்பவர்கள் இவர் பக்கத்திலிருந்து விலகினார்கள்.

சர்ச்சைகள் இருந்தாலும், இவருடைய குறுகிய நேர காணொளிகள் பலருக்கு சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு நிமிடத்தில் அனைத்து முக்கியச் செய்திகளையும் அடக்குவது அதுவும் சுவாரசியமாகக் கூறுவது சவாலான செயலே!

இக்காணொளிகள் அல்லாது விரிவான காணொளிகளையும் இவரது பக்கங்களில் காணலாம். இவற்றில் இதுவரை தெரியாத தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Video Blogging செய்து வரும் பலருக்கு யாசின் முன்மாதிரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. இதுவரை இவரை பற்றி ஏதும் தெரியாது.. நீங்க கொடுத்துள்ள காணொளியை பார்க்கும் போது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. That’s 1 minute. See you tomorrow.. ஒரு நிமிடத்தில் தகவல் என்பது.. மிகவும் கடினமான ஒன்று.. அதை சுவாரசியமாக வேறு கொடுக்க வேண்டும்.. மிகவும் சிரமமான பணி.. அவர் பெயரோடு என்னோட பெயர் வேறு இருக்கும் போது இன்னும் கொஞ்சம் வியப்பாக இருக்கிறது..மற்ற காணொளிகளை பின்பு பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின் இவருடைய காணொளிகள் சுவாரசியமாக இருக்கும். Shorts ல் அடிக்கடி வருகிறது.

    ஆமாம், இவர் பெயரைப்பார்த்தவுடன் உங்கள் நினைவு தான் வந்தது 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here