அம்னீசியா பிரச்சனையால் தவிக்கும் தமிழக ஊடகங்கள்

2
அம்னீசியா

H ராஜா ஏதாவது சர்ச்சையா பேசுவாரு, அதை வைத்துக் கொஞ்சம் ஜாலியா கடையை ஓட்டலாம் என்று சென்ற முன்களப்பணியாளர்களை, Presstitute ன்னு சொல்லி ராஜா அசிங்கப்படுத்தி விட்டார். Image Credit

இதனால் இரு நாட்களாக ஆளாளுக்குப் பொங்கிட்டு இருக்காங்க.

பத்திரிகையாளர்களை H ராஜா அநாகரீகமாகப் பேசியுள்ளார். எனவே, ஊடகங்கள் அவரைப் புறக்கணிக்க வேண்டும்‘ என்று பத்திரிகையாளர் சங்கம் கூறியுள்ளது.

இதைக் கேட்டவுடன் வடிவேல் திடீர்னு விழிப்பது போல ஒரு மீம் வருமே! அது தான் நினைவுக்கு வந்தது 🙂 .

Presstitute

ஒரு தலைப்பட்சமான ஊடகங்களை Presstitute என்று சமூகத்தளங்களில் விமர்சிப்பார்கள்.

கூகுள் என்ன கூறுகிறது என்றால்..

Presstitute is a term that references journalists and ‘talking heads’ in mainstream media who give biased and predetermined views misleadingly tailored to fit a particular partisan, financial or business agenda, thus neglecting the fundamental duty to report news impartially.

என்ன தான் மேற்கூறிய விளக்கம் இருந்தாலும், பொதுவெளியில் ராஜா இவ்வாறு கூறியது தவறு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

RS பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் RS பாரதி, ஊடகங்களைச் சிவப்பு விளக்கு பகுதியோடு ஒப்பிட்டுப் படுகேவலமாகப் பேசினார்.

H ராஜா Presstitute ன்னு கூறினார், RS பாரதி ஒரு படி மேலே போய் Prostitute ன்னு கூறிட்டார் ஆனால், ஊடகங்கள் வாயே திறக்கலையே!

அட! இப்படியொரு சம்பவம் நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.

டிவி காரனுக இருக்கானுங்க பாருங்க.. அவனுக மாதிரி உலகத்திலேயே அயோக்கியனுக எவனும் கிடையாது‘ என்றார் RS பாரதி.

இன்று ஆளாளுக்குப் பொங்கிட்டு இருக்கும் மானமிகு பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் சங்கம் ஒருவரும் அன்று என்னன்னு கூடக் கேட்கவில்லை.

தற்போது பத்திரிகையாளர்களுக்கு எதற்குக் கோபம் வருகிறது என்றே புரியலை!

கோபம் யாருக்கு வரும்?! வர வேண்டும்?! இவர்களுக்கேன் இப்ப கோபம் வருகிறது? எப்படி யோசித்தும் புரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

அம்னீசியா பிரச்சனை

தங்களை நிரந்தரப்பணியாளர்களாக மாற்றக் கூறி சென்னை DMS ல் செவிலியர்கள் செவ்வாய் (28 செப்டம்பர் 2021) இரவில் போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி முன்களப்பணியாளர்கள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

ஆனால், இதே அதிமுக ஆட்சியில் நடந்து இருந்தால், விவாதம் மேல விவாதம் போட்டு, பேட்டி எடுத்து விஜய் டிவி மாதிரி கண்ணீர் விட வைத்து இருப்பார்கள்.

திமுக என்றால் விழுந்தடிச்சுட்டு Fact Check போடும் ஊடகங்கள், ஏன் மற்ற கட்சியினருக்கு இது போல நடந்தால் கண்டுகொள்வதில்லை!

ஒருவேளை அதைச் செய்வதே இவர்கள் என்பதாலா?!

முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி ஊழலுக்காகக் கைது செய்யப்பட்டார் என்று செய்தி போடும் ஊடகங்கள் அவர் தற்போது திமுக வில் உள்ளார் என்பதைச் சொல்ல மறந்ததேன்!

தமிழக ஊடகங்களுக்கு அம்னீசியா பிரச்சனை உள்ளது போல, அதிலும் வித்யாசமாகச் சில பிரச்சனைகள் மட்டும் மறந்து விடுகிறது.

இது போலச் செய்திகளில் பாகுபாடு காட்டுபவர்களுக்கு மற்றவர்களைக் கேள்வி கேட்கக் கூச்சமாக இருக்காதா?

செய்திகளைக் கொடுப்பது போய், திணிப்பது என்றாகி விட்டது.

H ராஜாவைப் புறக்கணியுங்கள்ன்னு கதறிட்டு அவரிடமே மைக்கை நீட்டுவது, பின்னர் இது போல அசிங்கப்பட்டு வந்து புலம்புவது.

சமூகத்தளங்களின் கருத்துப்பகுதியில் எப்போதும் H ராஜாவை கழுவி ஊத்தும் நபர்களே இந்த விஷயத்தில் ஊடகங்களைப் படுகேவலமாக திட்டிக்கொண்டு இருப்பதிலேயே ஊடகங்கள் எந்த அளவில் உள்ளன என்று புரிந்து கொள்ளலாம்.

H ராஜா கூறிய விதம் தவறு என்றாலும், கூற வந்த விஷயம் சரியே!

தொடர்புடைய கட்டுரைகள்

ஊடகத்துக்கு ஆர் எஸ் பாரதி ‘பொளேர்’

ஆர் எஸ் பாரதி திட்டியது தவறே இல்லை

ஊடகங்கள் மோசமான செய்திகளைக் கொடுப்பதேன்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. வெகு சமீபத்தில் படித்தது.. கடந்து செல்வதை, விட கண்டுக்காமல் செல்வது தான் தான் சரி .. (ஒரு விஷியத்தை புறக்கணிக்க இதை விட சரியான விளக்கம் இதுவரை நான் படிக்கவில்லை..) மிகவும் ஆழமாக அர்த்தம் கொண்ட வரிகள்.. இதையே தொடர்வோமே..எல்லோருக்கும் நன்மை பயக்கும்..

  2. @யாசின் நான் வெறுக்கும் விஷயங்களில் ஊடகங்களும் ஒன்று. இவர்களை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் கழுவி ஊத்திட்டே இருப்பேன்.

    ஊடகம் என்பதற்கு இருக்கும் மரியாதையையே குழி தோண்டி புதைத்து விட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here