தமிழ் இந்து செய்தி நிறுவனம் சிறந்த வலை தளங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் என் தளத்தையும் அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.
இதற்கு முன்பு என் தளத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் என்றால் தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவர், தட்ஸ்தமிழில் எழுதிய மின்னஞ்சல் அழியப்போகிறதா? மற்றும் விகடனின் வலையோசை இதைத் தொடர்ந்து தற்போது தமிழ் இந்து.
நண்பர் மணிகண்டன் அருணாச்சலம் கடந்த மாதம் இந்தப் பகுதிக்கு என் தளத்தைப் பரிந்துரைத்து இருப்பதாகக் கூறி இருந்தார்.
நானும் சரி என்று கூறி விட்டு அது பற்றி மறந்து விட்டேன்.
கடந்த செவ்வாய் இரவு என்னுடைய தளத்தைக் குறிப்பிட்டு இருப்பதாக நண்பர்கள் கூறிய பிறகு தான் இது குறித்து அறிந்து கொண்டேன்.
நண்பர் சூர்யா (எனக்குப் புத்தகம் கொடுப்பாரே 🙂 அவர் தான்) முதலில் கூறினார்.
ரமணி பிரபா தேவி
என் தளத்தைப் பற்றி “ரமணி பிரபா தேவி” அவர்கள் குறிப்பிட்டு இருந்தார். இவர் தான் இந்தப் பகுதிக்குத் தளங்களைத் தேர்ந்தெடுத்து பிரசுரிக்கும் பொறுப்பில் இருக்கிறார்.
இவர் குறிப்பிட்டு இருக்கும் தகவல்களைப் படித்தால் நீண்ட காலமாக என்னுடைய தளத்தைப் படித்தது போல எழுதி இருக்கிறார்.
என்னைப் பற்றிய தகவல்களை நான் About பகுதியில் குறிப்பிட்டு இருக்கிறேன் என்றாலும் அதில் இருந்து எடுத்தது போல இல்லாமல் நேரடியாக விசாரித்தது போல விவரித்து இருந்தார்.
தேர்வு செய்த கட்டுரைகளைப் பற்றிய குறிப்புகளும் ஏனோ தானோவென்று இல்லாமல் சிறப்பாகத் தொகுத்து இருந்தது உண்மையிலேயே வியப்பாக இருந்தது.
இவர் என் தளத்தை நண்பர் மணிகண்டன் பரிந்துரைத்த பிறகே பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இருந்தும், விரிவாகக் கொடுத்து இருந்தது பாராட்டத்தக்கது. இதைப் படிப்பவர்கள் ஏற்கனவே தொடர்ந்து படித்தவர் கொடுத்த அறிமுகம் போலத் தான் நினைத்து இருப்பார்கள்.
நான் என் தளத்தை வைத்து மட்டும் கூறவில்லை, இதற்கு முன்பு வந்த தளங்களுக்கும் சிறப்பான அறிமுகம் / முன்னுரை கொடுத்து இருந்தார்.
“தொழில் சுத்தம்” என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்கள் அல்லவா! இது பணி சுத்தம் 🙂 .
அதாவது கடமைக்கு “நானும் அறிமுகப்படுத்துகிறேன்” என்று இல்லாமல் உண்மையாகவே பொறுப்பாக அறிமுகம் கொடுத்து இருக்கிறார்.
என் மனமார்ந்த பாராட்டுகள்.
அங்கே குறிப்பிட்டுள்ளதை நான் இங்கே போட்டால், நானே எழுதி நானே லைக் போட்டுக் கொள்வது போல இருக்கும் என்பதால், படிக்க நினைப்பவர்கள் நேரடியாகச் சென்று படித்துக் கொள்ளலாம்.
தலைப்பு எனக்கே கொஞ்சம் கூச்சம் ஆகி விட்டது 🙂 .
Read : பல தளங்களில் பிரித்து மேயும் கிரி!
நான் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இது போன்ற அங்கீகாரங்கள் எழுதுவதற்கு மேலும் ஊக்கம் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
யார் படித்தாலும் படிக்கவில்லை என்றாலும் நான் எழுதுவேன் என்று வசனம் பேச எல்லாம் தயாராக இல்லை. குறைந்தபட்ச வருகையாவது தேவை.
அங்கீகாரம் என்ற ஒன்று இல்லையென்றால் நானெல்லாம் எப்போதோ காணாமல் போய் இருப்பேன்.
படிக்கும் நீங்கள் கொடுக்கும் உற்சாகம் (பின்னூட்டம் / Comment), விமர்சனங்கள் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது. நான் புதிதாகக் கற்றுக் கொள்ளவும் உதவுகிறது.
தமிழ் இந்து, ரமணி பிரபா தேவி, மணிகண்டன் அருணாச்சலம், பரிந்துரைத்த அனைவருக்கும் மற்றும் எனக்கு உற்சாகம் கொடுத்த / கொடுக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.
தொடர்ந்து இணைந்து இருங்கள்.
அன்புடன்
கிரி
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
முதல் வாழ்த்து. முக்கியமான அங்கீகாரம்.
வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள் – மேலும்
பல வெற்றிகளைக் குவிக்க
எனது வாழ்த்துகள்!
வாழ்த்துகள் ப்ரோ…… 🙂
சூப்பர் கிரி…….வாழ்த்துக்கள்…….
மகிழ்ச்சி. தி இந்துவில் வாசித்தேன். அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள். சிறப்பான அங்கீகாரம். தொடருங்கள்.
வாழ்த்துக்கள் கிரி.
நேர்த்தியாக தொகுத்து உங்களையே அட போட வைத்து விட்டார்கள். இன்னும் உற்சாகத்துடன் உங்கள் பணியை தொடருங்கள். வாழ்த்துக்கள்……
கலக்கிட்டீங்க தல. அருமை. வாழ்த்துகள்.
வாழ்த்துகள்…
நீங்கள் இதற்கு தகுதியானவர் தான் அண்ணா .. வாழ்த்துக்கள் 🙂
வாழ்த்துக்கள் கில்லாடி 🙂
ரமணி பிரபா தேவி “பல தளங்களில் பிரித்து மேயும் கிரி” என்று உங்க பாணியிலேயே தலைப்பிட்டு இருக்காங்க! 🙂 வாழ்த்துகள் கிரி!
தல,
வாழ்த்துக்கள்.. ரொம்ப சந்தோசமா இருக்கு
இதுல கூச்ச பட எதுவுமே இல்லை என்னை பொறுத்த வரைக்கும் “u deserve much more ”
“தொடர்ந்து இணைந்து இருங்கள்.” – விட்டுரு வோமா பின்ன.. இப்ப பாருங்க நான் ஏத்தி விடுறேன் -> “வலை உலக சுஜாதா அண்ணன் கிரி வாழ்க” நு ஒரு ப்ளெக்ஸ் வைக்கணும்
Jokes apart ur writing is unique – உங்க ரசிகனா மட்டும் சொல்லல யதார்த்த writing ரசிகனா சொல்லுறேன்.. உங்க பயண கட்டுரைகள், IT related contents ரெண்டும் நிச்சயம் ஒரு புக்கா வர அளவுக்கு வொர்த்.. நீங்க எழுதின புக் ஒன்னு எதிர் காலத்துல வரும் நு உறுதியா நம்புறேன் நான்
– அருண் கோவிந்தன்
வாழ்த்துக்கள் கிரி..
வாழ்த்துக்கள் கிரி
Ippodhaan paarthen. Vaazththugal.