தமிழ்மணம் | நட்சத்திர பதிவர் வாரம்

63
எதிர்பார்ப்புகளும் தமிழ்மணம் நட்சத்திரமும்!

நான் பெரும்பாலனவர்களைப் போல மற்றவர்கள் எழுதியதைப்பார்த்து படித்து அதில் ஆர்வம் கொண்டு பதிவு எழுத வரவில்லை.

எனக்கு இதைப் போல எழுத வேண்டும் என்று ஆர்வத்தை ஏற்படுத்தியது தட்ஸ்தமிழ் கமெண்ட் பகுதி. Image Credit

அதில் புனைப்பெயரில் கமெண்ட் எழுதுவேன் அதற்குப் பலர் பாராட்டு கூறும்போது நாம் ஏன் நம் கருத்தை நமக்கென்று ஒரு இடத்தில் எழுதக் கூடாது! என்று தோன்றியது.

Yahoo! Blog

அப்போது இணையத்தில் தேடிய போது எனக்கு கிடைத்த வசதி தான் Yahoo! Blog (2006).

இதில் யாருமே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல யாரும் படிக்கிறார்களா! இல்லையா என்று கூடத் தெரியாமல் எழுதிக்கொண்டு இருந்தேன்.

இணையத்தில் ஓரளவு பழக்கம் இருந்தும் எளிமையான Google Blogger பற்றித் தெரியவில்லை.

பின் Google Blogger பற்றித் தெரிய வந்து அதில் 2008 ல் இருந்து எழுதினேன் பின் தனியாக தளம் தொடங்க வேண்டும் என்று WordPress தளத்திற்கு மாறினேன்.

இது பற்றி விரிவான தொழில்நுட்ப விளக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினால் பின் வரும் கட்டுரையைப் படியுங்கள்.

வோர்ட்பிரஸ் (WordPress) என்றால் என்ன?

திரட்டி என்றால் என்ன? (இது பற்றித் தெரியாதவர்களுக்கு)

திரட்டி என்பது பதிவு செய்தவர்களின் வலைத்ததளங்களின் இடுகைகளை (post) திரட்டும் ஒரு தளமாகும்.

வலைத்தளங்களைப் படிக்க விரும்புவர்கள் இந்தத் தளங்களுக்கு வந்து எளிதாக தமக்கு பிடித்த தலைப்புகளைப் படித்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் பதிவு (Blog) எழுதுபவர்கள் தங்களின் தளத்திற்கு வாசகர்களைத் தங்களின் எழுத்துத் திறமைக்கு ஏற்பப் பெற முடியும்.

தங்களின் எழுத்திற்கு கிடைக்கும் அங்கீகாரமாக இதைக் கருதலாம். வாசகர்களும் பல வித கண்ணோட்டத்தில் உள்ள இடுகைகளைப் படிக்க முடியும்.

திரட்டிகளில் முன்னணியில் இருப்பது www.tamilmanam.net தளமாகும் இதன் பிறகு www.tamilveli.com, www.thiratti.com போன்ற திரட்டிகளும் பலரால் விரும்பிப் படிக்கப் படுகின்றன.

Bookmark தளங்கள் என்றால் என்ன?

தங்களுக்கு பிடித்த அல்லது தங்களுடைய தளங்களை எவர் வேண்டும் என்றாலும் இதில் இணைத்துக்கொள்ள முடியும் பதிவராக (Blogger) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை..

திரட்டிகளிலிருந்து சற்றே வேறுபடுகிறது.

இதில் Blog என்றில்லை எந்தத் தளத்தின் சுட்டியையும் (Link) இதில் கொடுத்து இணைக்க முடியும். இதில் முன்னணியில் இருப்பது Tamilish என்ற தளமாகும்.

தற்போது இது indli என்ற பெயரில் இயங்குகிறது. இதோடு tamil10 போன்று பல Bookmark தளங்களும் பிரபலமாக உள்ளன.

ஒரு சில தளங்கள் வைரஸ் பிரச்சனையால் பதிவர்களின் நன்மதிப்பை இழந்து விட்டன.

தமிழ்மணம்

நான் திரட்டி என்ற ஒன்று இருக்கிறது என்பதே இதை பார்த்த பிறகு தான் தெரியும்.

முதன் முதலில் பல வலைத்தளங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருந்த போது எங்க இருந்துடா! எல்லாம் வருகிறார்கள்? நம்ம எழுதுவதைப்படிக்க ஒரு பயலும் வரமாட்டேன் என்கிறானே!

நம்ம கடையில் போட்ட டீ எல்லாம் குடிக்க ஆள் இல்லாம இருக்கே! என்று மண்டை காய்ந்து இருந்த போது ஒரு தளத்தின் பார்வையாளர்கள் வருகைப்பதிவில் இருந்த சுட்டியைப் பார்த்தால் தமிழ்மணம் என்ற தளத்திலிருந்து வருவதை காட்டியது.

சரி! என்ன மேட்டர் என்று பார்க்கப்போனால் தான் தெரிகிறது திரட்டி என்ற ஒன்று இருக்கிற விசயமே! அடப்பாவிகளா! இது தெரியாம இத்தனை வருடம் எழுதிட்டோமே! என்று நொந்தே போயிட்டேன்.

அதன் பிறகு இந்தத் திரட்டியில் இணைத்து எழுதிய பிறகு தான் என் தளத்திற்கு பலர் வருகை தந்தார்கள், நான் எழுதுவதற்கும் ஒரு அர்த்தம் கிடைத்தது.

தமிழ்மணம் வாராவாரம் ஒரு சிறந்த பதிவரைத் தேர்ந்தெடுத்து தமிழ்மண நட்சத்திரமாக கவுரவிக்கிறது. இதில் இந்த ஒருவாரம் தமிழ்மணம் நட்சத்திரமாக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது.

பதிவு எழுதும் ஒவ்வொருவருக்கும் தமிழ்மண நட்சத்திரம் என்பது பெருமை அளிக்கக்கூடிய விசயமாகும் அதில் நானும் விதிவிலக்கல்ல.

நான் எப்போது தமிழ்மண நட்சத்திரம் ஆவேன் என்று நினைத்துக்கொண்டு இருப்பேன்.

தமிழ்மணம் நட்சத்திரமாக தேர்ந்தேடுப்பவர்களில் இன்னும் பலரிடம் சர்ச்சை உண்டு. பல காலமாக சிறப்பாக எழுதும் பதிவர்கள் பலர் கவனிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டுண்டு.

எனக்கும் இதில் உடன்பாடு உண்டு.

ஏதாகினும் இவ்வளவு நாள் எழுதியதற்கு என் எழுத்திற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்.

என்னைத் தமிழ்மண நட்சத்திரமாக தேர்வு செய்ததற்கு தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Blogging is a Passion

Blog என்பதை ஒரு விருப்பமாக என் எண்ணங்களைப் பதிவு செய்யும் இடமாக கருதி வருகிறேன் அதன்படியே நடந்து கொண்டுள்ளேன்.

இதற்கு அடிமையாகி விடக்கூடாது என்று அளவாகவே எழுதிக்கொண்டுள்ளேன்.

கொஞ்ச நாள் ஆர்வமாக எழுதி பின் அப்படியே விட்டுவிடக்கூடிய நபரல்ல. 2006 ம் ஆண்டிலிருந்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

Blog பற்றி முன்பே தெரிந்து இருந்தால் இதற்கு முன்பே எழுதத் தொடங்கி இருப்பேன்.

நான் தமிழ் வழியில் பயின்றவன் என்பதாலோ என்னவோ எனக்கு தமிழ் மீதும் தமிழில் எழுதுவதின் மீதும் ரொம்ப ஆர்வம்.

குறைவாக எழுதினாலும் இதுவே நான் தொடர்ந்து எழுதக்காரணம். நான் எழுதாமல் இருந்தால் அது கண்டிப்பாக நேரமின்மையால் மட்டுமே இருக்கும்.

எழுத எனக்கு பிடித்து இருந்தாலும் என் அலுவலகம் மற்றும் குடும்பத்திற்குப் பிறகே எழுதுவதெல்லாம்… அதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

நான் எழுதும் போது பெரும்பாலும் ஒரு சில தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில விளக்கம் கொடுத்து இருப்பேன் ஒரு சிலர் கவனித்து இருக்கலாம்.

அதற்கு காரணம் வலைப்பதிவர்கள் இல்லாமல் சாதாரணமாக படிப்பவர்களும் அதிகம் வலைத்தளங்களைப் படிக்கிறார்கள் அவர்களுக்கு இடுகை [post], பின்னூட்டம் [comment], பதிவர் [Blogger] போன்ற வார்த்தைகள் புதிது அர்த்தம் தெரியாது எனவே தான் அவற்றைக் குறிப்பிடுகிறேன்.

எதோ வந்தோம் எழுதினோம் என்று பத்தோடு பதினொன்றாக எல்லாம் இருக்க எனக்கு விருப்பமில்லை.

என் எதிர்பார்ப்புகள் எண்ணங்கள் எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

சிறந்த தளமாக கொண்டு வர வேண்டும்

நான் முன்னரே கூறியபடி என்னுடைய தளத்தை ஒரு சிறந்த தளமாக கொண்டு வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

எனவே எதையாவது எழுதி வைப்போம் என்று ஏனோ தானோவென்று எழுத நினைப்பதில்லை.

கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் கிரி Blog தளம் பலரால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய தளமாக வரும் என்று முழுமையாக நான் நம்புகிறேன்.

நேரம் கிடைத்தால் நான் செல்ல நினைத்துள்ள இடங்கள் இமயமலை, காசி, ரிஷிகேஷ், ராஜஸ்தான், சில நாடுகள் மற்றும் சில காடுகள்.

இவை எல்லாம் பணிச்சூழல் காரணமாக செல்ல முடியாமல் இருக்கிறது.

செல்ல வாய்ப்புக்கிடைக்கும் போது இவைப் பற்றிச் சுவாராசியமாக எழுத வேண்டும் என்பது என் விருப்பம். நான் ஒரு இயற்கை ரசிகன்!

நான் இங்கே எழுத வந்தது என்னுடைய எண்ணங்களை, சமூகக் கோபங்களை, நகைச்சுவையை, தொழில்நுட்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே மற்ற பதிவர்களுடன் சண்டைப்போடவோ அல்லது அரசியல் செய்யவோ அல்ல.

அதனால் தான் கூறினேன் என் எதிர்பார்ப்புகள் அதிகம் என்று 🙂 .

தினமும் ஒரு கட்டுரை

தமிழ்மண நட்சத்திரமாக இருப்பவர்கள் தினமும் குறைந்த பட்சம் ஒரு கட்டுரையாவது ஒரு வாரத்திற்கு எழுத வேண்டும் பலர் அதை சரியாக பின்பற்றுகிறார்கள்.

ஒரு சிலர் தமிழ்மண நட்சத்திரமாக வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் சென்று விடுகிறார்கள்.

நான் ரொம்பக்குறைவாக எழுதுவதாக என் தளத்தைப் படிக்கும் நண்பர்கள் கூறுவார்கள். இந்த ஒருவாரமும் தினமும் கண்டிப்பாக ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

என் தளத்தைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரிந்து இருக்கும் நான் எப்போதும் ஒரே மாதிரியான பதிவுகளை எழுதுவதில்லை என்பது.

திரைப்படம், விளையாட்டு, அரசியல், தொழில்நுட்பம், ஆன்மிகம், நகைச்சுவை, தொலைக்காட்சி மற்றும் விமர்சனங்கள் என்று கலந்து தான் எழுதுவேன்.

அதே போல இந்த நட்சத்திர வாரத்திலும் தினமும் வெவ்வேறு வகையான பதிவுகளை எழுதப்போகிறேன் சர்ச்சையான பதிவு உட்பட 🙂 .

பதிவு எழுதுவதே நம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்குத்தான் அது நாகரீகமான முறையில் இருக்கும் போது எந்த விசயத்தையும் தைரியமாக எழுதலாம் என்பதே என் கருத்து.

முடிந்த வரை நான் எழுதும் நட்சத்திர வாரத்தை வித்யாசமாக எழுத வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். பார்ப்போம் 🙂 .

பிற்சேர்க்கை– சமூகத்தளங்கள் வளர்ச்சியால் தமிழ்மணம் தளம் நிறுத்தப்பட்டது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

63 COMMENTS

 1. தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள் நண்பரே..!

 2. மனம் திறந்த பாராட்டுக்கள் நண்பா.

  மேலும் நீண்ட நாட்களுக்கு பின் உங்களை பற்றி நீங்களே தொகுத்த தகவல்கள் :-).

  கொசுறு 3 – நீங்க ஒரு பூமி மாதிரி கிரி நீங்களே சுற்றி சுற்றி இறங்கினாலும் கெக்க பிக்கேன்னு சிரிசுகிட்டே உங்களை சுற்றி பொண்ணுங்க இல்லையா அதான் :-).

  நன்றி!.

 3. நட்சத்திர வாழ்த்துக்கள். சிறப்பான ஆரம்பம் கிரி.

  ஒவ்வொரு பதிவையும் அதீத கவனம் எடுத்து எழுதும் உங்கள் வழக்கத்தை கடந்த இரண்டு வருடங்களாகக் தொடர்ந்து கவனித்து வருகிறேன். //நட்சத்திர வாரத்திலும் தினமும் வெவ்வேறு வகையான பதிவுகளை எழுதப்போகிறேன்// நிச்சயம் இவையும் அற்புதமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை:)!

  மிகுந்த மகிழ்ச்சியும் பாராட்டுக்களும். தொடருங்கள்!!!

 4. வாழ்த்துக்கள் கிரி சார் 🙂
  நீங்கள் எதிர்ப்பார்க்கும் படி உங்கள் தளம் மென்மேலும் வளர்ச்சி அடைந்து எல்லாரும் பயன்பெற வேண்டும் .
  இந்த ஒரு வாரம் தினம் ஒரு இடுகைன்னு பட்டய கெளப்புங்க 🙂

 5. //////////// தமிழ்மணம் வாராவாரம் ஒரு சிறந்த பதிவரை தேர்ந்தெடுத்து தமிழ்மண நட்சத்திரமாக கவுரவிக்கிறது. இதில் இந்த ஒருவாரம் தமிழ்மணம் நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்துள்ளது. //////////

  தல …., நட்சத்திரமா !!!!!!!!! வாழ்த்துக்கள் …,இந்த ஒரு வாரம் என்னக்கு வேட்டை தான் ..,

  மேற்கண்ட பகுதியை பாத்ததும் செம்ம சந்தோசம் …,அப்படியே கமெண்ட் செக்ஷன் வந்தாச்சு..இருங்க படிச்சிட்டு வரேன்

 6. //எனக்கு இதைப்போல எழுத வேண்டும் என்று ஆர்வத்தை ஏற்படுத்தியது தட்ஸ்தமிழ் கமெண்ட் பகுதி என்றால் அது சற்றும் மிகையல்ல.//

  ஆகா!!!!!! அப்ப தட்ஸ்தமிழ்ல கெட்ட கெட்ட வார்த்தையில கமன்ட் போடுறது நீங்கதானா? 🙂

  உங்க பதிவை பாத்ததுக்கப்புறம் எனக்கும் பதிவுலகைப்பற்றிய எனது சில எண்ணங்களை எழுதவேண்டுமென்று தோன்றுகிறது, மிக விரைவில் எழுதுவேன் 🙂

 7. நட்சத்திர கிரிக்கு வாழ்த்துகள்.

  //அதே போல இந்த நட்சத்திர வாரத்திலும் தினமும் வெவ்வேறு வகையான பதிவுகளை எழுதப்போகிறேன்//

  அதில் ஒன்று கணினிநுட்பம் சார்ந்து இருக்குமா?

 8. வலைச்சரத்துல என் நண்பன் அருண் பிரசாத் தான் இந்த வாரம் ஆசிரியர் ..,தமிழ் மணத்துல எங்க கிரி ..,ஆஹா…ஆஹா

 9. ஆகவே கணினி தொழில்நுட்ப பத்திரிக்கை ஆசிரியர்களே ,பதிவர்களே …,இந்த வாரம் ஏதேனும் ஒரு நாள் அட்டகாசமான கணினி பற்றிய ஒரு பதிவு வர போகிறது …,காத்திருங்கள் …,

 10. /////// சிங்கப்பூரில் தற்போது ரவுடிகள் குழுவாக அவர்களுக்குள் சண்டைப்போட்டுக்கொள்வது அதிகம் ஆகி விட்டது.//////

  அங்கயுமா !!!!!

 11. பொதுவா அறிமுகத்தின் போது பலர் கொடுக்கும் விபரங்களை கொடுக்கும் ஆச்சரியமாய் தான் பார்த்துள்ளேன்.

  நீங்கள் கொடுத்துள்ள முதல் இடுகையும் உங்களை குறித்து அறிமுக விசயங்களும் ரொம்பவே அதிசியமாயிருக்கு. மொத்தத்தில் சொல்லும் செயலும் ஒரே மாதிரி தான் இருப்பீங்க போலிருக்கு. வாழ்த்துகள்..

  குறிப்பா என்னை விட நிறைய திறமைசாலிகள்……………… இந்த உலகில்…………… அற்புதம்..

  உங்க பாணியிலே சொல்லப்போனா உங்க தல சொன்ன உதாரணம்

  கலைத்தாயிடம் கேட்டேன் ஏன் கமலுக்கு மட்டும் இந்த அங்கீகாரம்…………………….

  கமல் அதற்கு சொன்ன பதில் அதை விட அற்புதம்……………

  எவன் தன்னை இந்தஅளவிற்கு கீழே தாழ்த்திக் கொண்டு பாராட்ட மனம் வரும்………. உங்கள் தல பாணியில் எதார்த்தமாய் தொடக்கத்தை கலக்கீட்டீங்க கிரி.

 12. /////// சமீபத்தில் இரு சிறுவர்கள்/இளைஞர்கள் கையில் அருவாளுடன் மின்சார ரயிலில் புகைப்படம் எடுத்து அது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையானது. //////

  அட நீங்க வேற கிரி ,இங்கெல்லாம் ஸ்கார்பியோ கார் ல ஸ்ட்ரைட் ஆ போலீஸ் ஸ்டேஷன்க்கு போறாங்க ..,

 13. /////// “Emergency situation Please evacuate from office immediately , do not use lift” ///////

  இந்த மாதிரி SURPRISE CHECK பண்ணும் போது .., நாங்க கூல்லா லைன் ல தான் இறங்கி போனோம் ….,SAFETY OFFICER செம்ம டென்ஷன் ஆகிட்டாரு ..,ஏனா இந்த செக் பத்தி எங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சி போச்சு # கருப்பு ஆடு ஒன்னு என் டீம் ல இருக்குது

 14. அன்பின் கிரி… நட்சத்திர வாழ்த்துக்கள்.. நன்றாக நினைவு இருக்கின்றது நான் எழுத வந்த புதிதில் நீங்கள் நிறைய எழுதி இருக்கின்றீர்கள்… நான் அப்பபோது தொடர்ந்து வாசித்துக்கொண்டு இருந்து இருக்கின்றேன்.அதன் பிறகு உங்கள் ஆபிசில் என் தளம் வாசிப்பு குறித்து உங்கள் நண்பர்கள் என்னிடத்தில் சில செய்திகள் பகிர்ந்தது உண்டு. எந்திரன் துவக்கவிழாவின் போது நான் சென்னையில் எடுத்த போட்டோவை போட்டு ரெண்டு பேருக்கு காரசாரமான விவாதங்கள் வந்தது என் நினைவுகளில்.. வலைதளம் பற்றி மிக அழகாய் விரிவாய் எழுதி இருக்கின்றீர்கள். மிக்க நன்றி…மீண்டும் நட்சத்திர வாழ்த்துக்கள்

  பிரியங்களுடன்
  ஜாக்கிசேகர்.

 15. எப்படியோ அந்த கட்டிடத்தில் இருந்த எல்லாரும் எங்கள் தானை தலைவன், செம்மொழி வேந்தன் கிரி அண்ணன் அவர்களால் காப்பற்றபட்டுள்ளர்கள் என்பதை பெருமையுடன் பகிர்ந்து கொள்ள கடமை பட்டுள்ளேன்…. (எவண்டா சொன்னது கப்டன் விஜயகாந்த் மட்டுமே காப்பாத்துவார்னு?) எங்க தல ஒத்த ஆளா இருந்து மொத்த ஆமபளைகளையும் காப்பாத்தி இருக்கார்.. ஒ இந்த பெண்கள அவுங்கதான் எங்க தல எங்க போனாலும் பின்னாடியே ஓடி வந்துருவாங்களே சோ அவங்களையும் காப்பாத்திட்டார்…(கோபி கண்ணன் அல்லவா )

  எங்கள் தானை தலைவன், தமிழ் நாட்டின் தன்னம்பிக்கை, பொன்மன செம்மல், விடிவெள்ளி, இடி தாங்கி, குடி தாங்கி, ஏழைகளின் தோழன், கன்னி பெண்களின் மனதை கொள்ளை கொள்ளும் கள்ளன்(கண்ணன் கோபி கண்ணன்), கோபியின் பில் கேட்ஸ், சிங்கபூரின் சிகரம், வோர்ட் பிரஸ் வேந்தன், கோபியின் பாலுமகேந்திரா, சிங்கையின் பிதாமகன், மொத்த்த்தில் தமிழ் நாட்டின் இமயமலையே,

  எங்கள் கிரி அண்ணாச்சி அவர்களை இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ் மனதிர்க்கு புரட்சி புயல், சூராவளி, தமிழ் நாட்டின் வேங்கை (etc .) கிரி அன்னணனின் தொண்டர் படை/தற்கொலை படை தளபதியின் வந்தனங்கள்..

  ஒரு சின்ன மொக்கை :
  இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் . சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் . ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

  Hearty wishes thala . Seekirame ungal latchiyathai adaya vaalthukkal….

  என்றும் நட்புடன்,
  ஆர்.கே.நண்பன்

 16. இங்கதான இருந்தது, எங்க பொசி இந்த தமிழ் மணம் வோட்டுபட்டை ??

  யாராவது எங்க இருக்குனு சொன்ன புண்ணியமா போகும்…

 17. வாழ்த்துக்கள் கிரி .

  உங்கள் எழுத்தின் வெற்றிக்கு காரணம் எளிமையும் யதார்த்தமும் .

 18. ஸ்டார் (நட்சத்திரம்) ஆயிட்டிங்கன்னு சொல்லுங்க. மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள் கிரி. அருமை நட்சத்திரம் (சுப்பர் ஸ்டார்) ஆக வளர வாழ்த்துக்கள். 🙂

  பதிவுத் தளத்துல இத்தன விஷயம் இருக்குதா? இதுல ஒரு சில விஷயம்தான் எனக்கு தெரியும்.

  உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே உங்க எழுத்து நடையும் நேர்மையும்தான். இந்த வாரம் தினமும் ஒரு பதிவா, அப்படிப் போடு? “இதுக்காகவாவது இவருக்கு வாரா வாரம் நட்சத்திர பதிவர் விருது குடுங்கப்பா”.

  சிங்கப்பூர்ல ரவுடிங்களா? கேட்கவே பயமா இருக்குங்க.

  மழை நம்ம மேட்டூர்-கொலத்தூர் ஏரியால கூட பட்டய கெளப்புதுன்னு கேள்வி. ரொம்ப நாலா மழை இல்லன்னு எங்க ஊர்ல வருத்தப்பட்டாங்க, இப்போ மொத்தமா போட்டு வாங்குது.

  இந்த பயர் அலாரம் (ஒண்ணுமே இல்லாம எவனாவது அடிப்பானுங்க) எனக்கு எப்பவுமே கிலிதான். அடிக்கும்போதெல்லாம் இது பால்ஸ் (false) அலாரமா இருக்கணும்னு வேண்டிக்குவேன். 🙂

 19. நட்சத்திர வாரத்தை சிறப்பாக தொடர வாழ்த்துகள்.

 20. வாழ்த்துக்கள்…உங்கள் தளத்தை அவ்வப்போது படித்திருக்கிறேன். இப்போது தமிழ்மணம் நட்சத்திரமாக உயர்த்தப்பட்டிருப்பதால் கொஞ்சம் கவனத்துடன் படித்தேன். ரொம்பவும் இயல்பாக பக்கத்தில் இருக்கும் நண்பருடன் பேசுவதுபோன்ற பாணியில் அமைந்த உங்களின் எளிமையான நடை பிடித்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

 21. கிரி….

  தமிழ்மணத்தில் நட்சத்திரமாக தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்…

  நிறைய எழுத வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக எழுத முடியும்… எழுதுங்கள்….

  நேரம் கிடைக்கும் போது நம் தளங்கள் பக்கமும் வாருங்கள்….

 22. //ஒரு நாள் கிரி Blog தளம் பலரால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய தளமாக வரும் என்று முழுமையாக நான் நம்புகிறேன்//

  நட்சத்திர ஆசிகள் மற்றும் வாழ்த்துக்கள்

 23. வாழ்த்துக்கள்! தாங்கள் மென்மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  உண்மையில் தங்களைப் போன்ற தொழிற்நுட்ப பதிவர்களை பார்த்துதான் எனக்கும் தொழிற்நுட்ப பதிவுகளை எழுதும் ஆவல் வந்தது! தங்களுக்கு மிக்க நன்றி!

 24. நட்சத்திர பதிவராக பிரமோசன் ஆனத்ற்கு வாழ்த்துக்கள்..ரஜினி பற்றிய ஸ்வாரஸ்யமான பதிவு ஒன்றையும் எதிர்பார்க்கிறேன்…நிங்க ரஜினி பத்தி எழுதும்போது கூடுதல் ஸ்வாரஸ்யம் அதான்

 25. தமிழ்மணத்தில் நட்சத்திரமாக தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்…

  உங்களின் பணி மென்மேலும் சிறக்க பாராட்டுகளும், வாழ்த்துக்களுடன்
  மாணவன்

  நன்றி

  வாழ்க வளமுடன்

 26. நட்சத்திரம் ஆனதற்க்கு வாழ்த்துக்கள்.

  இந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை தான் ரொம்ப நாளா உங்க தளத்துல தேடிக்கிட்டு இருக்குறேன் கெடைக்க மாட்டேங்குதே… ஒளிச்சு வச்சிருந்தா வெளியில விடுங்க தல…
  ஜனநாயக கடமை ஆற்ற கைகள் பரபறக்கிறது…

 27. தமிழ்மண நட்சத்திரம் ஆக தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! சூப்பர்!

 28. தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டமைககு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் கிரி சார். (உண்மையில் தமிழ்மணம் தாமதமாக தேர்நதெடுத்து இருப்பதை நினைக்கும் போது வருத்தமா இருக்கு..) எவ்வளவு சிறந்த படைப்பாளியை இவ்வளவு காலம் மறந்திருங்காங்க..??!! ஆனால் வாசகர்களிடம் நீண்டகாலத்திற்கு நீங்கள் ஒரு நட்சத்திரமாகவே ஜொலித்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு இதுவரை வந்த நண்பர்களின் வாழ்த்துகளையும் கருத்துகளையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம். அதையும் தாண்டி வாசகர்களின் மனதில் ஒரு நிரந்திரமான நட்திரப்பதிவராக எப்பவும் ஜொலிப்பீங்க.,! என்பதில் எள்ளவும் எனக்கு ஐயமில்லை..! தங்களது வெளி்ப்படையான எண்ணப் பகிர்வுகள் மென்மேலும் தொடரட்டும். மீண்டும் வாழத்துகள் மற்றும் பாராட்டுகள்.

 29. வாழ்த்துகள் கிரியண்ணே. எனது சமகாலப் பதிவரை நட்சத்திரமாகப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.அப்புறம் நம்ம சின்ன அண்ணன் எப்படி இருக்காரு???

 30. மனமார்ந்த வாழ்த்துக்கள் பாஸ்.. மின்னுங்க…!!!

 31. வணக்கம் கிரி அவர்களே
  நீங்கள் நட்சத்திரம் ஆனதற்கு பலர் வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அந்த பட்டியலில் நானும் இணைந்து கொள்கிறேன்.இணையத்தின் சூப்பர் ஸ்டார் கிரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
  அன்புடன்
  இளவரசன்

 32. நட்சத்திர வாழ்த்துக்கள் கிரி.

  தங்களுடன் பணி புரிந்ததில் பல தொழில்நுட்ப நுணுக்கங்களும், தனிப்பட்ட முறையில் பல நல்ல பழக்கங்களும் கற்று கொண்டேன்.

  //கொசுறு 3 //
  காமெடி டைம்

  //என் வழி தனிவழியாக இருப்பது பதிவுலகிற்கு நான் செய்யும் பெரிய சேவை//

  சூப்பர் ஸ்டார் பாட்ஷா ஸ்டைலிலா ?

 33. வாழ்த்துக்கள் கிரி அண்ணா !! நம்ம ஊர்க்காரர் நட்சத்திரம் ஆனது ரொம்ப பெருமை எனக்கு !! தொடரட்டும் உங்க தொய்வில்லாத பணி !!

 34. நான் பதிவுலகிற்கு வரமுன்னரே தங்களின் பதிவை தொடர்ந்து ரசித்திருக்கிறேன்… அதன் பிறகு மின்னஞ்சலில் மட்டும் படித்துக் கொண்டிருந்தேன்… இன்று தங்களின் நட்சத்திர வார பாராட்டுக்காக ஓடோடி வந்திருக்கிறேன்… வாழ்த்தக்கள் சகோதரம்..

  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா

 35. நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள். தெளிவாக எழுதுகிறீர்கள். மரங்கள் மீதான உங்களின் நேசிப்பிற்கு பாராட்டுதல்கள். ஒரு பத்திரிகையாளனாக உங்கள் ஊருக்கு அருகில் உள்ளவர் குறித்து எழுதி இருக்கிறேன்.
  எனது வலைப்பக்கம்: http://www.kalyanje.blogspot.com
  நன்றி நண்பரே ச்ந்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here