சிறு காயம் கூட மிகப்பெரிய சிக்கலில் சென்று விட்டு விடும் என்று சமீபத்தில் கண்ட சம்பவம் உணர்த்தியது. சிறு காயம், துரு காரணமாக பிரச்சனையாக்கி விட்டது.
சமீபத்தில் நடந்த இரு சம்பவங்கள், இப்பிரச்சனைப் பற்றித் தெரியாதவர்களுக்குக் கூற வேண்டும் என்று எழுதியதே இக்கட்டுரை. Image Credit
துரு காயம்
கை, காலில் அடிபட்டால் ஆயின்மென்ட் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி சரி செய்துகொள்வோம் ஆனால், இரும்பில் அடிபட்டால் இவ்வாறு செய்வது கூடாது.
காரணம், துருவில் உள்ள Tetanus கிருமி காலையே காலி செய்து விடும்.
கை / கால் உள்ளே சதைப்பகுதிகளைச் சிதைத்து அழுக செய்து விடும். இதன் பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்குச் செல்ல வேண்டியது வரும்.
Tetanus Toxoid
அடிபட்டால் TT போட்டாச்சா? என்று கேட்பார்கள். TT தெரியும், அதன் விளக்கம் Tetanus Toxoid.
காயம் ஏற்படும் போது குப்பை, தூசி, மண், துருவில் இருந்து Tetanus கிருமி உடலுக்குள் சென்று விட்டால், மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடும்.
நமக்குத் தெரியாததுக்குக் காரணம் பெரும்பாலும் எதிர்ப்புசக்தி உள்ளவர்களுக்கு இக்கிருமி பெரியளவில் பிரச்சனையைக் கொடுப்பதில்லை.
ஆனால், எதிர்ப்புசக்தி குறைவாக இருந்தால், வேலையைக் காட்டி விடும்.
அடிபட்டால், பெரும்பாலும் தற்போது TT போட்டு விடுகிறார்கள் ஆனால், சிலர் கவனக்குறைவாக உள்ளார்கள்.
ஒருவேளை அக்கிருமி பாதிப்பை ஏற்படுத்தவில்லையென்றால், நமக்கு நல்ல நேரம் ஆனால், ஏற்படுத்தி விட்டால் மிகப்பெரிய சிக்கல்.
TT விலை ₹10 கூட இல்லை ஆனால், சேதத்தை ஏற்படுத்தி விட்டால் சரி செய்யப் பல இலட்சங்கள், பல மாதங்கள் ஆகும்.
அடிபட்ட 24 மணி நேரத்துக்குள் TT போட்டுக்கொள்ள வேண்டும்.
ஒருமுறை TT போட்டுக்கொண்ட பிறகு எவ்வளவு மாதங்கள், வருடங்கள் இதன் வீரியம் இருக்கும் என்ற கால அளவுள்ளது. எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுப் போட்டுக்கொள்வது நல்லது.
இதுவும் தடுப்பூசி போன்றதே.
காயம் சரியாக மாதங்கள் ஆகும்
எனவே, சிறு புண் தானே! என்ன செய்து விடும்? என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம் குறிப்பாக இரும்பில் அடிபட்டால்.
மற்ற காயங்களுக்குப் பெரிய அளவில் பயமில்லை ஆனால், மருத்துவர் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
ஆனால், இரும்பில் அடிபட்டால் கண்டிப்பாக மருத்துவர் ஆலோசனை பெற்று TT போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு முன் போட்டு இருந்தால், அதன் விவரங்களையும் கூற வேண்டும்.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், வெளியே பார்க்கச் சிறு காயமாகத் தெரியும் ஆனால், உள்ளே மிகப்பெரிய பகுதியைச் சேதமாக்கி இருக்கும்.
எனவே, இரும்பில் அடிபட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுபவரா?
வறட்டு இருமலை குணப்படுத்துவது எப்படி?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கட்டுரையை படிக்கும் போதே பகீரென்று இருக்கிறது கிரி.. இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது எல்லோருக்கும் நலமானது.. வெளிநாடு வந்த பின் 12 வருடங்களுக்கு மேலாக வார விடுமுறையில் கிரிக்கெட் விளையாடி வருகிறேன்.. ஒரு முறை கூட விளையாடாமல் இருந்ததில்லை (இந்தியாவில் இருக்கும் நாட்கள் தவிர) இதுவரை பெரிதாக அடி ஏதும் பட்டதில்லை.. ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன் விக்கெட் கீப்பிங் செய்யும் போது கண்ணில் ஒரு பலமான அடி விழ வேண்டியது, நிச்சயம் யாரோ செய்த புண்ணியத்தினால் கடவுளின் கருணையால் தப்பித்தேன்..
ஆனால் இந்த நிகழ்வின் பயம் ஒரு வாரத்திற்கு மேல் இருந்தது.. பந்தை வீசியது என் மனைவியின் தம்பி தான் .. கூட விளையாடிய நண்பர்கள் வேறு கலாட்சி கொண்டே இருந்தாங்க!!!! சம்பவம் மனைவிக்கு தெரியாது.. தெரிந்தால் மூன்றாம் உலக போருக்கான அறிகுறி விரைவில் தென்படும்… என்னை பொறுத்தவரை விளையாட்டில்லா வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.. வயது வேறு நாற்பதை நெருங்கி கொண்டிருக்கும் போது மனதளவில் இன்னும் இளமையாக உணர்கிறேன்.. ஆனால் உடலில் மாற்றங்கள் நன்றாக தெரிகின்றது.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மனதும், உடலும் ஒத்துழைக்க போகிறதோ என்று தெரியவில்லை..பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“கட்டுரையை படிக்கும் போதே பகீரென்று இருக்கிறது கிரி”
நேரில் பார்த்த எனக்கு இதை விட அதிர்ச்சி. இதுவே கட்டுரை எழுதவும் தூண்டியது.
“சம்பவம் மனைவிக்கு தெரியாது.. தெரிந்தால் மூன்றாம் உலக போருக்கான அறிகுறி விரைவில் தென்படும்”
😀 😀