துணை முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் தகுதியானவரா!

26
துணை முதல்வர்

நீண்ட நாட்களாகப் பலரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நிகழ்வு நடந்து விட்டது. Image Credit

துணை முதல்வர்

கலைஞர் அவர்கள் தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஸ்டாலினை துணை முதல்வர் பொறுப்பில் அமர்த்தி இருக்கிறார் அல்லது அடுத்த முதல்வர் என்பதற்கு அச்சாரமாக இதைச் செய்து இருக்கிறார்.

ஸ்டாலின் துணை முதல்வர் ஆன செய்தியைத் தற்போதைய கலைஞர் சர்ச்சை என்ற குறுகிய வட்டத்திற்குள் பார்க்காமல் இது பற்றிப் பேசுவதே சரியான ஒன்றாகும்.

ஸ்டாலின், கலைஞரின் மகன் என்ற கூடுதல் தகுதியைத் தவிர அவர் மற்ற எந்த எந்த விதத்திலும் தகுதியிலும் குறைந்தவரல்ல.

கலைஞரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சில சலுகைகள் அவருக்குக் கிடைத்து இருக்கலாம்.

ஆனால் மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் அல்லது இவருக்குப் போய் இந்தப் பதவியா! என்று கேட்கும் அளவிற்கு இல்லாமல் அந்தப் பதவிக்குத் தகுதியானவராகவே இருந்துள்ளார்.

கட்சியில் உள்ள மற்ற முக்கியத் தலைவர்களுக்கு எவ்வாறு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதைப் போன்றே இவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

அனுபவம்

ஸ்டாலின் கடந்த ஐந்து வருடத்தில் கட்சியில் இணைந்து திடீரென இந்தப் பதவிக்கு வந்து விடவில்லை. 1970 களில் இருந்தே கட்சி பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டு உள்ளார்.

மேயராக இருந்த போதும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் இருந்த போதும் இவர் மீது யாராலும் பெரிதாக எந்தக் குற்றச்சாட்டையும் வைக்க முடியவில்லை. தன் பங்கைச் சிறப்பாகச் செய்து இருந்தார்.

பெருமளவில் மக்களைத் தனது செயல்பாடுகளால் கவர்ந்து இருந்தாரா என்பது சந்தேகமே!

ஸ்டாலின் மற்ற அரசியல்வாதிகளைப் போல அதிரடி அரசியல் செய்வதில்லை, கலைஞரைப் போல ஸ்டாலின் மக்களைக் கவர்ந்து இருக்கிறாரா! என்றால் இல்லை என்று தான் கூறுவேன்.

ஆனால், மேயராக இருந்த சமயங்களில் மற்ற அமைச்சர்களெல்லாம் குற்றசாட்டுகளில் அடிப்பட்ட போது இவர் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார்.

கலைஞர் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைக் கூறிக் கொண்டு இருக்கும் பலரும் ஸ்டாலின் மீது குற்றம் சாட்ட காரணத்தைத் தான் தேட வேண்டும்.

கலைஞரைப் பிடிக்காத “சோ” அவர்களே ஸ்டாலின் முதல்வர் ஆவதை வரவேற்று முதல்வர் பதவிக்குத் தகுதியானவர் என்று “துக்ளக்” பத்திரிகையில் கூறியவர்.

அரசியல் நாகரீகம்

இரு பெரும் கட்சி தலைவர்களான கலைஞரும் ஜெ’வும் பொது இடங்களில் எதேச்சையாகப் பார்க்க வேண்டி இருந்தாலும் பேசிக்கொள்ள மாட்டார்கள், அறிக்கையில் மட்டுமே பேசிக்கொள்வார்கள்.

இந்த விசயத்தில் வட மாநில அரசியல்வாதிகளைப் பாராட்டலாம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிவாரண நிதியை ஜெ’விடம் ஈகோ பார்க்காமல் ஸ்டாலின் சென்று கொடுத்து வந்தது பலரை புருவம் உயர்த்த வைத்து.

தற்போது வைகோ திமுக வில் இருந்து இருந்தால் கண்டிப்பாக ஸ்டாலினுக்குப் பெரும் பிரச்சனையாக இருந்து இருக்கும், அன்பழகன் அவர்களுக்கும் வயதாகி விட்டதால் ஸ்டாலினுக்குப் பதவி ஏற்பதில் எந்தப் பெரிய தடையும் இல்லை.

கலைஞர் மீது வாரிசு அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுண்டு, அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால், ஸ்டாலினுக்குப் வாரிசு அரசியல் என்ற நிலையைத் தாண்டிக் கட்சியில் பல காலம் இருந்தவர் என்ற முறையில் (கட்சி தலைவர் மகன் என்ற கூடுதல் சலுகை இருந்தாலும்) அவர் துணை முதல்வர் பதவிக்குத் தகுதியானவரே.

ஈழம் பிரச்சனையில் கலைஞர் அவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாலே மற்றும் வாரிசு அரசியல் செய்ததாலே திமுகப் பலரின் வெறுப்புக்கு ஆளாகி இருந்தது.

இருப்பினும் மக்கள் அவர்களுக்கு வெற்றியே கொடுத்துள்ளார்கள்.

கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக வழி நடத்துவார் என்று நம்புவோம்.

ஸ்டாலின் அவர்கள் கலைஞரைப் போல வழவழ கொழ கொழ முடிவுகளை எடுக்காமல் உறுதியான முடிவுகள் எடுத்து வெற்றி பெற வாழ்த்துவோம்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

26 COMMENTS

 1. இடுகை சமநிலைப் பார்வையுடன் இருக்கிறது.நீங்கள் சொன்னது போல் வரும்காலத்தில் தாக்குப் பிடிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விசயம்.அனுபவம்,அமைதி கைகொடுக்கும் என்று நம்புவோம்.

  கலைஞரின் வழவழ கொழ கொழ முடிவுகள் வயசான காலத்தில் வந்து ஒட்டிக்கொண்ட வியாதி.மனுசன் முன்பு நல்லாத்தான் இருந்தார்.எப்ப புள்ள குட்டி அரசியலை நினைச்சாரோ வந்து ஒட்டிகிச்சு வழ கொழ வியாதி.

 2. பின் தொடர்பவர்கள் 36 முகங்களுக்குத்தான் கேபினட் பதவி கொடுத்திருக்கீங்க.மிச்சம் 64 பேர் என்ன MP சீட்ல உட்கார்ந்து ரவுசு வுடுறவங்களா:)

 3. சரியான கருத்துக்கள். நானும் வழி மொழிகிறேன். எதிர்பார்ப்புடன்.

 4. ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!

  எல்லோரும் திருட்டு பயலுக தான்!

 5. //ராஜ நடராஜன் said…
  இடுகை சமநிலைப் பார்வையுடன் இருக்கிறது//

  நன்றி ராஜ நடராஜன்

  //நீங்கள் சொன்னது போல் வரும்காலத்தில் தாக்குப் பிடிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விசயம்//

  உண்மை

  //பின் தொடர்பவர்கள் 36 முகங்களுக்குத்தான் கேபினட் பதவி கொடுத்திருக்கீங்க.மிச்சம் 64 பேர் என்ன MP சீட்ல உட்கார்ந்து ரவுசு வுடுறவங்களா:)//

  புரியலையே! 🙂

  ==================================================

  //பாலா… said…
  சரியான கருத்துக்கள். நானும் வழி மொழிகிறேன். எதிர்பார்ப்புடன்.

  நன்றி பாலா..

  ==================================================

  //ஆ.ஞானசேகரன் said…
  நம்பலாம் என்றே தோன்றுகின்றது//

  காலம் (கோவி கண்ணன் அல்ல) தான் பதில் கூறனும்

  ==================================================

  //நசரேயன் said…
  பொறுத்து இருந்து பார்ப்போம்//

  அதே! 🙂

  ==================================================

  //ஷண்முகப்ரியன் said…
  காழ்ப்புணர்வு இல்லாமல் எழுதி இருக்கிறீர்கள்,கிரி.//

  நன்றி சார்

  =================================================

  //ஜோ/Joe said…
  எதார்த்தமான பார்வை//

  நன்றி ஜோ

  =================================================

  //எம்.எம்.அப்துல்லா said…
  சொல்லப்போனால் அதைவிட இன்னும் மேலான பதவிகளுக்கெல்லாம் தகுதியானவர்.//

  🙂 அப்துல்லா அண்ணே! பின்ன உங்கள் தலைவர் ஆச்சே!

  //”100 பின் தொடருபவர்கள்”

  வாழ்த்துகள்//

  நாங்களும் ரவுடி தான்! :-))

  =======================================================

  //வால்பையன் said…
  ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!

  எல்லோரும் திருட்டு பயலுக தான்!//

  என்ன பண்ணுறது..

  ========================================================

  //சினிமா நிருபர் said…
  ஸ்டாலின் மீது மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா (சும்மாதாங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உடன்பிறப்பு போல சொல்லிப் பார்த்தேன்) மேம்பால ஊழல் வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக எல்லா பாலங்களிலும் ஒரு ஓரத்தில் உடைத்து பார்த்தார்கள். பாலம் பலமாக இருக்கிறது என்றே அதிகாரிகளால் சான்றிதழ் தர முடிந்தது. இதனால் அந்த வழக்கை மேற்கொண்டு நடத்த முடியாமல் அப்போதைய ஜெயலலிதா அரசு திணறியது.//

  வாங்கோ வாங்கோ! நிருபரே நன்னா இருக்கேளா! :-)))

  ரொம்ப வருசத்திற்கு ஹி ஹி சரி சரி ரொம்ப மாசத்திற்கு பிறகு தரிசனம் தந்து இருக்கீங்க..

  ஜெ டெஸ்ட் பண்ணுறேன்னு மொத்த பாலத்தையும் நோண்டாம விட்டாங்களே!

  //ஐயா… நான் சத்தியமா தி.மு.க. காரன் இல்லீங்க சாமீமீமீமீ//

  முடியாது! முடியாது! நாங்க ஒத்துக்க மாட்டோம் இதை நம்ம்ம்ம்ப மாட்டோம் 😉

 6. //”ஸ்டாலின்” (துணை) முதல்வர் பதவிக்கு தகுதியானவரா! //

  சொல்லப்போனால் அதைவிட இன்னும் மேலான பதவிகளுக்கெல்லாம் தகுதியானவர்.

 7. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோதுதான் சென்னையில் 10 மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டன. அதில் பெரம்பூர் பாலம் தவிர மற்ற பாலங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே கட்டி பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இந்த பாலங்களால் சென்னை நகரி்ன் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த பாலம் விவகாரத்தை ஏன் சொல்கிறேன் என்றால்…, ஸ்டாலின் மீது மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா (சும்மாதாங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உடன்பிறப்பு போல சொல்லிப் பார்த்தேன்) மேம்பால ஊழல் வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக எல்லா பாலங்களிலும் ஒரு ஓரத்தில் உடைத்து பார்த்தார்கள். பாலம் பலமாக இருக்கிறது என்றே அதிகாரிகளால் சான்றிதழ் தர முடிந்தது. இதனால் அந்த வழக்கை மேற்கொண்டு நடத்த முடியாமல் அப்போதைய ஜெயலலிதா அரசு திணறியது. பிற்காலத்தில் வழக்கு புஸ்ஸ்ஸ் ஆகி விட்டது என்பதை இந்த இடத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.

  என்னை பொறுத்தமட்டில்… ஸ்டாலின் தனது கடமைகளை ஒழுங்காக செய்து வருபவர். கலைஞர் அளவுக்கு பேச்சுத்திறமையுள்ள ஒரே அரசியல் தலைவர் என்ற பெயரைப் பெற்ற வைகோவைப் போல பேச முடியாவிட்டாலும், தொண்டர்களின் ஏகோபத்திய ஆதரவு ஸ்டாலினுக்கு உண்டு என்பதில் ஐயமில்லை. ஸ்டாலின் என்ற வாகனம் இதுவரை நல்லாத்தான் போயிட்டிருக்கு…, இனி எப்படியோ? பொறுத்திருந்து பார்ப்போம்!! தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அவரது நடவடிக்கை மற்றும் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை வைத்து அவர் முதல்வராக தொடர தகுதியானவரா, இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம். (ஐயா… நான் சத்தியமா தி.மு.க. காரன் இல்லீங்க சாமீமீமீமீ).

 8. ஸ்டாலினுக்கு வைக்கோ என்றுமே எதிரி இல்லை. ஏன் என்றால் அவர் பதவி
  பித்து பிடித்தவர் இல்லை. பிறர் வாய்ப்பை தட்டி பறிக்க நினைப்பவரில்லை. அண்ணனுக்கு மேலே
  தம்பிக்கு கீழே என்று பாகப்பிரிவினை நடந்து இருக்கு.எல்லாம் சுகுமமுடன் நடந்தால் சரிதான்.
  தமிழன்பன்.–

 9. //கலைஞர் அவர்கள் தன் உடல் நிலையை கருத்தில் கொண்டு// Fortunately, a legitimate reason came his way to anoint Stalin now. Its an open secret that when his brother MKA got cabinet ministership at the Centre, how can Stalin, who has been 'serving' the party far longer, be left behind? Lest, the delicate family equations may again take a tumble, remember Dinakaran episode?

  //1970 களில் இருந்தே கட்சி பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டு உள்ளார்.// Though you have mentioned it matter of factly, I can only smile at the word "கட்சி பணிகளில்" – you know Stalin was notoriously famous for ill-treating the police officers & for Eve-teasing (being a CMs son in the 70s) in Chennai & many parents' curse came to fruition very soon with your following sentence – கட்சி நடத்திய மிசா சட்டம் உட்பட போராட்டங்களில் கலந்து சிறைக்கு சென்றுள்ளார் – he got in kind from Indira Gandhi's police when he was arrested under MISA. Whatever ill-treatment he gave to the police before his father's Govt. was dismissed, the police gave a tit-for-tat to him in jail and FROM THAT INSTANT HE QUALIFIED TO BECOME A RIGHT POLITICIAN TO HEAD A PARTY LIKE DMK.

  //ஸ்டாலின் மற்ற அரசியல்வாதிகளை போல அதிரடி அரசியல் செய்வது இல்லை// True. Ageing must have mellowed him down.

  //நிவாரண நிதியை ஜெ'விடம் ஈகோ பார்க்காமல் ஸ்டாலின் சென்று கொடுத்து வந்தது பலரை புருவம் உயர்த்த வைத்து.// When, in a similar spirit, Rajini praises Jaya for having successfully put an end to Veerappan menace, why some people don't show the similar spirit of appreciation? Selective amnesia or Tamilians' Double Standards?

  //தற்போது வைகோ திமுக வில் இருந்து இருந்தால் கண்டிப்பாக ஸ்டாலினுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து இருக்கும்// Thats why, Dravidian Chanakya i.e. Karunanidhi, has deftly eased out Vaigo from the party long long ago.

  //திமுக பலரின் வெறுப்புக்கு ஆளாகி இருந்தது// Who are that "பலரின்"? Tamil Bloggers?

  //இருப்பினும் மக்கள் அவர்களுக்கு வெற்றியே கொடுத்துள்ளார்கள்// Makkal Theerppe Magesan Theerppu.

 10. அடப்பாவிகளா !!!!!!!!!!!
  இன்னுமா நம்பிகிட்டு இருக்கிங்க, நீங்க சொல்லுற படி எழுபதுகளில் இருந்தே கட்சிக்கு பாடு படுகிறார் , அது சரி எழுபதுகளில் இருந்து இவர் மாற்றுமா கட்சிக்கு பாடுபடுகிறார்?

  நீங்க சொல்லுற படி ஸ்டாலின் பெரிதாக ஆரவாரமான தப்பொன்றும் செய்யவில்லைதான்?
  கலைஞ்சரும் அப்படித்தான் முதல்வர் ஆகமுதல்…. அப்படி இருந்தால் தானே முதல்வர் ஆகலாம் ?
  முதல்வர் ஆகட்டும் அதுக்கு பிறகு பாருங்க…… ஓடுறது யாரோட ரத்தம்…..

  சரி ஸ்டாலின் ஒழுக்கமானவரு என்று சொல்லுறீங்களே, ஆனால் ஒரு மீட்டிங்கில பேசும் போது , ஜெயலலிதா ஊட்டியில அறையில வீடு வச்சிருக்கா இவ்வளவு அறையில இவ குடும்பம் நடத்துகிறாரா அல்லது வேற ஏதாவது நடத்துகிறாரா என்று பேசினார் . இதுக்கு பேர் தான் ஒழுக்கமான பேச்சா ?

  தமிழர்கள் ஏன்தான் இப்படி மடையர்களாக இருக்கிறாங்களோ ?

  anyway your article is a good analysis…

 11. இந்த‌ பதிவில் எனக்கு ஒண்டு….மே விளங்கவில்லை. ஹி ஹி

  பிரபல பதிவர் கிரி,
  நூறுக்கு வாழ்த்துக்கள்.

 12. //M Arunachalam said…
  you know Stalin was notoriously famous for ill-treating the police officers & for Eve-teasing (being a CMs son in the 70s) in Chennai & many parents' curse came to fruition very soon with your following sentence//

  நீங்கள் கூறுவதை ஏற்று கொள்கிறேன்..நான் சிறு வயதாக இருந்த போது இது பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன், இது அல்லாமல் தொலைக்காட்சி நிலையத்தில் எதோ பிரச்சனை நடந்ததாகவும் கேள்வி பட்டு இருக்கிறேன்..இவையெல்லாம் என்னால் உறுதியாக கூற முடியவில்லை(அந்தளவு இப்போது நினைவில்லை) அதனால் நன்றாக தெரியாத ஒன்றை என்னால் குறிப்பிட முடியவில்லை.

  //When, in a similar spirit, Rajini praises Jaya for having successfully put an end to Veerappan menace, why some people don't show the similar spirit of appreciation? Selective amnesia or Tamilians' Double Standards?//

  என்னங்க அருண் பண்ணுறது…ரஜினி கன்னடராக போய் விட்டாரே! எனவே அவர் என்ன சொன்னாலும் தவறு தான் என்ன செய்தாலும் சுயநலம் தான்..

  //Thats why, Dravidian Chanakya i.e. Karunanidhi, has deftly eased out Vaigo from the party long long ago.//

  🙂

  //Who are that "பலரின்"? Tamil Bloggers?//

  :-)))

  இந்த தேர்தலில் பார்த்தீர்கள் என்றால் தென் சென்னை கோவை திருப்பூர் ஈரோடு சேலம் போன்ற முக்கிய தொகுதிகளில் திமுக கூட்டணியால் ஜெயிக்க முடியவில்லை.

  சென்னையில் TR பாலுவும் எளிதில் வெற்றி பெற முடியவில்லை எனவே திமுக போன முறை போல எளிதாக வெற்றி பெற முடியவில்லை குறைந்த வாக்கு வித்யாசங்களே.

  இதற்க்கு காரணங்கள்

  விலைவாசி உயர்வு, ஈழ விவகாரம், மின்சார தடை, வாரிசு அரசியல், திமுக வின் ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பல்வேறு கரணங்கள் இருக்கலாம்.

  எனவே மக்கள் இதனால் தான் வாக்களிக்க வில்லை என்று யாராலும் உறுதியாக கூற முடியாது. எனவே வாக்களிக்காத இவர்கள் "பலர்" தானே 🙂

  //Makkal Theerppe Magesan Theerppu.//

  வழிமொழிகிறேன்

  =======================================================

  //மயாதி said…
  அடப்பாவிகளா !!!!!!!!!!!//

  ????????

  //அது சரி எழுபதுகளில் இருந்து இவர் மாற்றுமா கட்சிக்கு பாடுபடுகிறார்?//

  நான் இதற்க்கு என் பதிவிலே பதில் கூறிவிட்டேன்

  //முதல்வர் ஆகட்டும் அதுக்கு பிறகு பாருங்க…… ஓடுறது யாரோட ரத்தம்…..//

  :-)))) இருக்கலாம் நான் அவர் ரொம்ம்ம்ம்ப நல்லவர் என்று எங்கேயும் ஸ்டேட்மென்ட் எதுவும் தரவில்லையே

  //ஸ்டாலின் ஒழுக்கமானவரு என்று சொல்லுறீங்களே, ஆனால் ஒரு மீட்டிங்கில பேசும் போது , ஜெயலலிதா ஊட்டியில அறையில வீடு வச்சிருக்கா இவ்வளவு அறையில இவ குடும்பம் நடத்துகிறாரா அல்லது வேற ஏதாவது நடத்துகிறாரா என்று பேசினார் . இதுக்கு பேர் தான் ஒழுக்கமான பேச்சா ?//

  ஏங்க! நான் என்னமோ அவர் பத்திரை மாற்று தங்கம் என்று கூறியதை போல என்னை கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் 🙂

  மற்றவர்களுடன் ஒப்பிடும் போது பரவாயில்லை என்று தான் கூறினேன்..அதற்காக அவர் அரிச்சந்திரன் என்றா கூறினேன். இப்போதைய அரசியலில் இதுவே பெரிய விஷயம் என்று எடுத்துக்கொள்ளும் நிலைமையில் தான் நாம் உள்ளோம் அல்லது நம் அரசியல் உள்ளது.

  //தமிழர்கள் ஏன்தான் இப்படி மடையர்களாக இருக்கிறாங்களோ ?//

  ஹா ஹா ஹா அப்ப நீங்க யாரு? கன்னடரா! தெலுங்கரா! மலையாளியா!

  //anyway your article is a good analysis…//

  சொல்வதெல்லாம் சொல்லி விட்டு இது என்ன கொசுறு! 🙂 இருப்பினும் உங்கள் பாராட்டிற்கு நன்றி.

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி மயாதி

  ========================================================

  //வாசுகி said…
  இந்த‌ பதிவில் எனக்கு ஒண்டு….மே விளங்கவில்லை. ஹி ஹி//

  :-)))

  //பிரபல பதிவர் கிரி,
  நூறுக்கு வாழ்த்துக்கள்//

  பிரபல பதிவர் னு கூறினாலே வயித்தை கலக்குது…சாதா பதிவர் தாங்க நான்

  உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி 🙂

  =======================================================

  //anburaja said…
  ஸ்டாலினுக்கு வைக்கோ என்றுமே எதிரி இல்லை. ஏன் என்றால் அவர் பதவி
  பித்து பிடித்தவர் இல்லை. பிறர் வாய்ப்பை தட்டி பறிக்க நினைப்பவரில்லை. //

  🙂 இருக்கலாம் ..இருப்பினும் நான் எதுவும் இது பற்றி கருத்து கூறவிரும்பவில்லை.

  //அண்ணனுக்கு மேலே தம்பிக்கு கீழே என்று பாகப்பிரிவினை நடந்து இருக்கு.எல்லாம் சுகுமமுடன் நடந்தால் சரிதான்//

  🙂

  உங்கள் முதல் வருகைக்கு நன்றி தமிழன்பன்

 13. //இந்த தேர்தலில் பார்த்தீர்கள் என்றால் தென் சென்னை கோவை திருப்பூர் ஈரோடு சேலம் போன்ற முக்கிய தொகுதிகளில் திமுக கூட்டணியால் ஜெயிக்க முடியவில்லை.

  சென்னையில் TR பாலுவும் எளிதில் வெற்றி பெற முடியவில்லை எனவே திமுக போன முறை போல எளிதாக வெற்றி பெற முடியவில்லை குறைந்த வாக்கு வித்யாசங்களே.

  இதற்க்கு காரணங்கள்

  விலைவாசி உயர்வு, ஈழ விவகாரம், மின்சார தடை, வாரிசு அரசியல், திமுக வின் ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பல்வேறு கரணங்கள் இருக்கலாம்.//

  மிந்தடை மற்றும் கொங்கு முன்னேற்றப் பேரவை பிரித்த ஓட்டுகள் தவிர தோல்விக்கு வேற எந்தக் காரணமுமே இல்லை. நீங்கள் பட்டியலிட்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் காரணமாக இருந்தால் தோல்வி வித்தியாசம் லட்சங்களில் இருந்திருக்கும் கிரி. ஆனால் திருப்பூர்(கம்யூனிஸ்ட்கள் பலம்) தவிர வேற எந்தத் தொகுதியிலும் 50000 வாக்குகளுக்கு மேல் குறைவாக பெறவில்லை.

 14. Nalla pathivu Giri but I had a doubt now a days about Stalin.

  We alread know about our famous JJ and MK for echo clash as well as silly statemets. But stalin in his recent election propaganda he told in front of the public that “JJ did lot of good things for elephants because she resembles small elephant”. I am pretty sure that he used this word because I was the live witness for that meeting. After hearing this I started having the assumption that Stalin will become the better replcament for MK in future with the same old silly fights with JJ.

  Thanks,
  Arun

 15. //$anjaiGandh! on 8:47 PM, June 02, 2009 said…
  தலைப்பிற்கு பதில் : தகுதியானவரே..//

  இருக்கணும் என்பது பலரின் விருப்பம்

  //மிந்தடை மற்றும் கொங்கு முன்னேற்றப் பேரவை பிரித்த ஓட்டுகள் தவிர தோல்விக்கு வேற எந்தக் காரணமுமே இல்லை. நீங்கள் பட்டியலிட்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் காரணமாக இருந்தால் தோல்வி வித்தியாசம் லட்சங்களில் இருந்திருக்கும் கிரி. ஆனால் திருப்பூர்(கம்யூனிஸ்ட்கள் பலம்) தவிர வேற எந்தத் தொகுதியிலும் 50000 வாக்குகளுக்கு மேல் குறைவாக பெறவில்லை//

  நீங்கள் கூறிய படி நம் பகுதியில் மின் தடை பெரிய விஷயம்..இதனால் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. பல தொழிலார்கள் மில் மூடப்பட்டதால் தங்கள் வேலையை இழந்தனர்.

  அதே போல கொங்கு பேரவை இந்த தேர்தலில் பெரும் வாக்குகளை பிரித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை, என்னோட அப்பா கூட சொல்லிட்டு இருந்தாங்க…பொள்ளாச்சில அவங்க ஜெயித்தால் கூட ஆச்சர்யபடுவதற்க்கில்லை என்று.

  நாம என்ன தான் காரணம் சொன்னாலும் மக்கள் என்ன நினைத்து ஒட்டு போட்டார்கள் என்று அவர்களுக்கு தான் தெரியும். நீங்கள் கூறிய காரணம் அதிகளவில் இருக்க கண்டிப்பாக வாய்ப்புண்டு என்பதும் உண்மை தான்.

  அது சரி சஞ்சய்…உங்க கூட்டணி பதிவு போட்டா தான் வந்து எட்டி பார்ப்பீங்களா! இல்லைனா வரமாட்டீங்களா! 🙂

  ==========================================================

  //arun on 4:56 AM, June 03, 2009 said…
  We alread know about our famous JJ and MK for echo clash as well as silly statemets. But stalin in his recent election propaganda he told in front of the public that “JJ did lot of good things for elephants because she resembles small elephant”. I am pretty sure that he used this word because I was the live witness for that meeting. After hearing this I started having the assumption that Stalin will become the better replcament for MK in future with the same old silly fights with JJ.//

  நீங்கள் கூறுவதை யாராலும் மறுக்க முடியாது. எனக்கும் இந்த சந்தேகம் உண்டு. நாளை அவரும் இதை போல வசனங்கள் தொடர்ந்து பேசலாம். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்பது சரியா தான் இருக்கு..

  இதை போல பேசி இவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

  நாகரீகமான அரசியலை இனி எதிர்பார்க்கவே முடியாதோ! என்பதும் என் வருத்தம்.

 16. //"ஸ்டாலின்" (துணை) முதல்வர் பதவிக்கு தகுதியானவரா! //

  பிரதமர் ஆகுவதற்கே தகுதியானவர், ஏனெனில் நாட்டின் குடிமகன்களில் ஒருவர் அல்லவா ?
  🙂

 17. நண்பரே !!
  நல்ல பதிவு .. பாப்போம் இவர் எப்படி தன் மகனை வளர்த்து விட போகிறார் என்று .. இவருக்கு ஒரு சந்தோசம் தன் தந்தையை போல பல தொல்லைகள்(!!!) இல்லை .. ஒரே மகன் என்று நினைக்கிறன் …

  என்ன நடந்தாலும் நம்மால் எதுவும் செய்ய இயலாது .. வேடிக்கை பார்க்க மட்டுமே இயலும் ….

 18. //கோவி.கண்ணன் said…
  //பிரதமர் ஆகுவதற்கே தகுதியானவர், ஏனெனில் நாட்டின் குடிமகன்களில் ஒருவர் அல்லவா ?//

  இந்த பதில் அப்துல்லாவிற்கா சஞ்சய்க்கா 😉

  ==============================================

  //Kurai Ondrum Illai said…
  இவருக்கு ஒரு சந்தோசம் தன் தந்தையை போல பல தொல்லைகள்(!!!) இல்லை .. ஒரே மகன் என்று நினைக்கிறன் //

  ஹா ஹா ஹா ஆனா பங்குக்கு பல பேரன் பேத்திகள் இருப்பார்களே! 😉

  //என்ன நடந்தாலும் நம்மால் எதுவும் செய்ய இயலாது .. வேடிக்கை பார்க்க மட்டுமே இயலும்//

  அதே! அதே!! 🙂

 19. //இந்த தேர்தலில் பார்த்தீர்கள் என்றால் தென் சென்னை கோவை திருப்பூர் ஈரோடு சேலம் போன்ற முக்கிய தொகுதிகளில் திமுக கூட்டணியால் ஜெயிக்க முடியவில்லை.

  சென்னையில் TR பாலுவும் எளிதில் வெற்றி பெற முடியவில்லை எனவே திமுக போன முறை போல எளிதாக வெற்றி பெற முடியவில்லை குறைந்த வாக்கு வித்யாசங்களே.//

  During the 2004 Lok Sabha polls, the DMK-Sonia Cong. aligned with many other parties (who are/were in AIADMK alliance in 2009 polls) and GOT THE MAXIMUM POSSIBLE RESULT – THE FULL 40 SEATS (incl. Pondy). So, it will be clear even to a school-going kind that, being a ruling combine (in both State & Centre), it will be not be possible to "increase" their tally of seats because they have won the maximum possible seats last time. The only possible way is GOING DOWN in number of seats or vote share.

  That being the case, the DMK-Sonia Cong. combine has DONE CREDITABLY WELL, considering the exodus of their allies to the opposite camp & THE STRIDENCY OF THE SRI LANKAN TAMIL CAMPAIGN AGAINST THE RULING COMBINE. Retaining 70% of the seats (28 out of 40) is extremely well done by DMK-Sonia Cong. combine – losing just 12 seats is nothing considering the media-helped onslaught on DMK-Sonia Cong. by the opposition combine as well as the "intellectuals" in media & of course, the blog world. Pl note that both DMK's & Sonia Cong.'s vote share has increased by 1% each as against REDUCTION IN VOTE SHARE FOR EACH OF THE OPPOSITION PARTIES LIKE AIADMK, TWO COMMUNISTS, PMK & MDMK.

  Even getting 1 seat for AIADMK is an "INFINITE" success for Jaya. in statistical/mathematical term. Considering she got 8 or 9 seats overall, if you so wish, it may be hailed as a Himalayan Victory. Even though Chennai is considered as a DMK-bastion, DMK rarely had it as a cake-walk in South Chennai, which is considered a Congress-oriented constituency. After last AIADMK rule & during the last assembly election in 2006 itself, AIADMK won many more seats in Chennai city which was considered a "first" for AIADMK, which could never perform like that even during MGR days.

  So, if winning South Chennai or few other sundry constituencies can be a basis to say that DMK lost due to anti-incumbency factors like price rice, etc., the mega opposition alliance losing 28 constituencies, CAN BE VERY WELL TERMED AS A SLAP ON THEIR FACES FOR THEIR PRO-EELAM STANCE, howsoever thin the margin of victory in some seats were. The reduction in vote share by each of the opposition parties proves that beyond any reasonable doubt.

 20. Having started perusing one of your blogs, I took interest in reading almost all of them. I like your Tamil writing style. Sorry, I haven't learnt yet how to record my views in Tamil. About Stalin, yes, he is better than many of the older politicians in TN. Surely, he is the best among the worst. He has proved to be a doer, and comparatively, does not hurt the sentiments of other people, particularly not making statements like 'has Rama studied in any engineering college'. However, I personally feel that it is time for TN to have a non-dravidian party. Congress must take the lead without having to piggy-back on DMK or AIADMK for a few parliamentary seats. Only Congress can form the third front. Congress must rope in Rajini in this momentous task. Vijay also seems interested in working for Congress. Once Congress gets into power, their infights may also reduce. TN needs a fresh breath of air.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here