மதச்சார்பின்மை பற்றியெல்லாம் ஸ்டாலின் பேசலாமா?

3
மதச்சார்பின்மை

CAA சட்டத்தை ரத்துச் செய்யத் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ‘மதச்சார்பின்மை, மத உணர்வுகள்’ பற்றி கூறி கிறுகிறுக்க வைத்துள்ளார். அப்படியென்ன கூறியுள்ளார்? Image Credit Vikram G

மதச்சார்பின்மை என்றால் என்ன?

அனைத்து மதங்களையும் அனுசரித்துச் செல்வது, அனைத்து மதங்களுக்கும் பொதுவாக இருப்பது, அனைத்து மதங்களுக்கும் ஒரே நிலையில் கருத்து கூறுவது.

எதிர் திசை என்றால், எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளாதது, அனைத்து மதங்களையும் எதிர்ப்பது.

ஒரு சராசரி புரிதலுள்ள எவருக்கும் புரிந்த விளக்கம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

திராவிட மதச்சார்பின்மை

ஆனால், திராவிட மதச்சார்பின்மை என்ற ஒன்று தமிழகத்தில் உள்ளது.

அது என்னெவென்றால், இந்து மதக் கட்சியினர் தவிர்த்து மற்ற எல்லா மதத்தினரும் அவர்கள் மதம் / கட்சி சார்ந்து இணைவது மதச்சார்பின்மை கூட்டணியாகி விடும்.

நாம இந்துக்களை ரொம்ப மட்டம் தட்டினால், எங்கே தேர்தலில் வாக்களிக்க மறுத்து விடுவார்களோ! என்ற சிறு பயத்தில் திமுக தேர்தலுக்கு முன்பு அடக்கி வாசித்தது.

இந்துக்கள் எப்போதுமே வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர்கள் என்பதில் எப்படி திமுக க்குச் சந்தேகம் வந்ததோ தெரியவில்லை?!

ஒருவேளை இத்தேர்தலில் எதற்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து இருக்கலாம்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ‘இந்துக்கள் சொரணையற்றவர்கள் தான், மிக்ஸர் சாப்பிடுபவர்கள் தான்‘ என்பது திரும்ப! உறுதியானவுடன் தைரியமாகி விட்டார்கள்.

உணர்வுகளுக்கு மதிப்பு

CAA சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்ற பயனற்ற தீர்மானத்தில் பின்வரும்படி கூறப்பட்டுள்ளது

மக்களாட்சி தத்துவத்தின் படி ஒரு நாட்டின் நிருவாகம் என்பது அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்வுகளையும் புரிந்து அமைந்து இருக்க வேண்டும்.

ஆனால், இந்தியக் குடியுரிமை சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல், மத ரீதியாகவும் எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

CAA ஏன் தேவை? முஸ்லீம் மதத்தினருக்கு ஏன் தடை? அப்படி அனுமதித்தால் என்ன நடக்கும்? என்பதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

CAA சட்டத்தை முன்பு எதிர்த்தவர்கள் கூட ஆப்கானிஸ்தான் / தாலிபான் பிரச்சனைகளுக்குப் பிறகு இதன் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள்.

சுருக்கமாக, இந்திய முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. அவர்கள் CAA சட்டம் குறித்துக் கவலை கொள்ளத்தேவையில்லை.

இந்துக்கள் மாதிரி அடி முட்டாள்கள் நமக்குக் கிடைக்க மாட்டார்கள் என்று சிரித்துட்டே தீர்மான நகலைத் தயார் செய்து இருப்பார்கள்.

என்னே ஒரு மதச்சார்பின்மை!

அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்வுகளையும் புரிந்து அமைந்து இருக்க வேண்டும்

எப்படிப் பாருங்க!! எவ்வளவு அழகாகக் கூறி இருக்கிறார்.

ஆனால், செய்வது என்ன? இந்து மதத்தை இழிவு செய்வது, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பது, ஓர வஞ்சனை செய்வது.

பக்கத்து மாநில பண்டிகையான ஓணத்துக்கு வாழ்த்து கூறிய ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லணும்னு தோணல பார்த்தீங்களா!

விநாயகர் சதுர்த்தி என்றில்லை எந்த இந்து பண்டிகைக்கும் வாழ்த்தில்லை. இவரெல்லாம் மத உணர்வுகளைப் பற்றிப் பேசலாமா?

பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது‘ என்று மற்ற நாட்டு மக்களுக்காகக் கூறத்தோன்றிய ஸ்டாலினுக்கு, தான் ஆளும் மாநில இந்து மக்களிடம் பாகுபாடு காட்டுகிறோமே என்று நினைக்கத் தோன்றவில்லை பார்த்தீர்களா?

இதுவரை எப்படியோ இருக்கட்டும்!

தற்போது முதல்வர், ஒரு மாநிலத்துக்குப் பொதுவானவர். தன் தனிப்பட்ட கொள்கைகளை மறந்து பண்டிகைக்கு வாழ்த்து கூற வேண்டாமா?

ஏன் இந்தப் பாகுபாடு?

அட! வாழ்த்து தான் சொல்லவில்லை, விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகளையாவது கொஞ்சம் தளர்த்தி இருக்கலாமே!

சரி மக்கள் நலன் என்றால், ஏன் திரையரங்கு திறப்பு? ஏன் டாஸ்மாக் திறப்பு? ஏன் மெரினா திறப்பு? இவற்றையெல்லாவற்றையும் விட ஏன் பள்ளி திறப்பு?

மூன்று நாட்கள் விடுமுறை என்று இலட்சக்கணக்கான மக்கள் பேருந்துப் பயணம் மேற்கொண்டனரே அதற்கேன் தடையில்லை? கொரோனா வராதா?!

டாஸ்மாக்குக்குக் காவல்துறை உதவியுடன் குடிகாரர்களை வரிசையாகச் செல்ல வைத்த அரசால் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதிக்க முடியாதா?!

பள்ளியை ஏன் திறந்தீர்கள் என்றால், தொற்று குறைந்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு ஏன் தடை என்றால், தொற்று ஆபத்து உள்ளது!

மக்கள் நலன் முக்கியம் என்பதை மாற்றுக்கருத்து இல்லாமல் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால், இதற்குப் பொருந்துவது மற்றவற்றுக்கு ஏன் பொருந்தவில்லை?

தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை

ஸ்டாலினுக்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகறாரா?! இல்லையே.

நான் கேட்பது ‘ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன் வைக்கிறீர்கள்?‘ என்பது தான்.

ஸ்டாலின் நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறார், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கிறார்.

தமிழகத்தின் வளர்ச்சி எப்படி முக்கியமோ அதே போல என் மதமும் முக்கியம்.

மற்ற மதங்களையும் இழிவுபடுத்த வேண்டும் என்பது என் விருப்பமல்ல, பொறுப்பான பதவியிலிருந்து கொண்டு ஏன் இந்து மதத்துக்கு மட்டும் பாகுபாடு காட்டுகிறீர்கள்? காரணம் தேடுகிறீர்கள்? என்பதே கேள்வி.

அதற்கு அப்படிச் சொன்னீர்களே இதற்கு ஏன் அதன்படி நடக்கவில்லை என்பதே இங்கே கேட்கப்படுவது.

இந்து மதத்துக்குச் சிறப்புக் கவனம் வேண்டாம் ஆனால், அவமானப்படுத்தினால், புறக்கணித்தால், ஒருதலைப்பட்சமாக நடந்தால் கேள்வி கேட்கத்தான் செய்வேன்.

சொரணை கெட்ட இந்துக்களும், என்ன நடந்தாலும் முட்டு கொடுக்கும் திமுக இந்துக்களும் கேள்வி கேட்காமல் இருக்கலாம். மற்றவர்கள் ஏன் இருக்க வேண்டும்?!

CAA பற்றிப் புரிதலே இல்லாமல் வாக்கு வங்கிக்காகப் பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கு, திமுக க்கு மதச்சார்பின்மை, மத உணர்வுகளைப் பற்றிப் பேச எந்தத் தகுதியுமில்லை.

காலம் இவர்களுக்குப் பதில் கூறும், கூற வேண்டும்.

தொடர்புடைய கட்டுரைகள்

குடியுரிமைச் சட்டம் | முஸ்லிம் எதிர்ப்புகள்

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. வணக்கம் கிரி,

    நீங்க படிக்காம இருந்திருங்க மாடீங்க. நிச்சியமா படிச்சு இருப்பீங்க.
    இந்துமதம் தொடர்ந்து இழிவு படுத்துவதை நம்ம ரைட்மந்த்ரா திரு.சுந்தர் அவர்களுடைய பாணியில் எழுதியது. இந்த பதிவை பாருங்க.

    http://rightmantra.com/?p=29586

    அவர் இந்த பூமியை விட்டு போறதுக்கு ஒரு நாள் முன்னாடி எழுதிய பதிவு என்று நினைக்கிறேன்.

    மிக்க நன்றி,
    இரா.சாமிராஜன்

  2. கிரி, உலகம் அனைத்து உயிரிங்களுக்கும் பொதுவானது.. ஒரு தாய் தான் பெற்ற எந்த குழந்தையாக (கூன், குருடு, செவிடு) எவ்வாறு இருந்தாலும் வேறுபாடு இன்றி எல்லோரையும் ஒரே மாதிரி தான் தன் அன்பை பகிர்வாள்.. ஆட்சியில் இருக்கும் அரசனின் நிலையும் அவ்வாறு தான் இருக்க வேண்டும்.. அப்போது தான் நிலையான நேர்மையான ஆட்சியை எந்த சமரசமும் இல்லாமல் வழங்க முடியும்..

    CAA வை பற்றி தெளிவான புரிதலை சாதாரண மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமையாகும்..CAA மட்டும் அல்ல மத்திய அரசின் பல திட்டங்கள் சாதாரண மக்களை போய் சேரவில்லை என்றே நினைக்கிறேன்.. குறிப்பாக பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இந்த நிலை உள்ளது ..

    கொரோனாவின் தாக்கத்திலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.. தற்போது தான் சிறிது, சிறிதாக மீண்டு வருகின்றார்.. இவர்களை கரை சேர்க்க வேண்டிய முதன்மை பொறுப்பு மத்திய, மாநில அரசிற்கு உண்டு.. எந்த சட்டங்களும், திட்டங்களும் யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் இயற்றப்பட வேண்டும் என்பது என் எண்ணம்.. வலி என்று எழுதினாலோ, படித்தாலோ வலிக்காது.. அதை நாம் உணரும் போது தான் உண்மையில் வலிக்கும்..

    உன்னால் முடியும் தம்பியின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.. (ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா) படம் வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்னும் காட்சிகள் ஏதும் மாறவில்லை.. இந்த நிலை மாற வேண்டும்..

    மெர்சல் படத்தில் கூறுவது போல் ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் தேவைப்படுகிறது.. தலைவன் என்பவன் தனியாள் கிடையாது.. அவனின் பின் ஒரு மிக பெரிய மக்கள் சக்தி இருக்கிறது.. குறிப்பாக இந்தியா போன்ற ஒரு மிக பெரிய ஜனநாயக நாட்டில், தலைவன் ஒரு மிக பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி காக்கும் பொறுப்பை கொண்டுள்ளான்.. இது எளிமையான பணி கிடையாது.. பிறந்ததால் நீ தலைவனாக முடியாது, தலைவன் என்பவன் உருவாக்க பட வேண்டும்..

  3. @ஸ்வாமிராஜன் நீங்க சுந்தரை மறக்காமல் நினைவு வைத்து இருப்பது மகிழ்ச்சி.

    இது சுந்தர் எழுதியதில்லை சுவாமி வித்யானந்தர் எழுதியது, அதைச் சுந்தர் பகிர்ந்து இருந்தார்.

    இவர் கூறுவது சரியானது என்றாலும், நடைமுறையில் சாத்தியப்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

    கசப்பான உண்மை.

    @யாசின்

    “ஆட்சியில் இருக்கும் அரசனின் நிலையும் அவ்வாறு தான் இருக்க வேண்டும்.. அப்போது தான் நிலையான நேர்மையான ஆட்சியை எந்த சமரசமும் இல்லாமல் வழங்க முடியும்”

    சரியா சொன்னீங்க யாசின்.

    இதையே நானும் கூறுகிறேன். தலைவன் என்பவன் அனைவருக்கும் பொதுவானவன் ஆனால், அரசியல் காரணங்களுக்காக பாகுபாடு காட்டும் போது விமர்சனமும் தவிர்க்க முடியாததாகிறது.

    “CAA வை பற்றி தெளிவான புரிதலை சாதாரண மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமையாகும்..CAA மட்டும் அல்ல மத்திய அரசின் பல திட்டங்கள் சாதாரண மக்களை போய் சேரவில்லை என்றே நினைக்கிறேன்.. குறிப்பாக பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இந்த நிலை உள்ளது”

    100% சரியானது. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

    மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை.

    திட்டங்கள் சரியாக இருந்தாலும், அதில் உள்ள சந்தேகங்களைச் சரியான முறையில் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்தாலும், மக்களிடையே விளக்கங்களைக் கொண்டு செல்லாதது மத்திய அரசின் தவறே.

    இதில் எந்தச் சந்தேகமுமில்லை.

    நீங்கள் கூறியது போல மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களிடையே சென்று சேர வில்லை. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை.

    தமிழக பாஜக வாவது முயற்சி எடுத்துச் செய்து இருக்க வேண்டும்.. அவர்களும் தற்போது தான் செய்து வருகிறார்கள் ஆனாலும், போதாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here