உங்களுக்கேன் இந்தப் பெயர் வந்தது?

37
உங்களுக்கேன் இந்தப் பெயர் வந்தது?

ண்பர் சித்து அவரது நண்பர்களுடன் (தற்போது ஜெட்லி யுடன் (பதிவர்தாங்க)) சேர்ந்து பதிவுகள் எழுதி வருகிறார். Image Credit

அவர் இந்தத் தொடர்பதிவில் என்னை இணைத்ததால் இந்தப் பதிவு.

1. உங்களுக்கேன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

தாத்தாவின் பெயர் கிரி அவரின் நினைவாக இந்தப் பெயரை வைத்தார்கள்.

ரொம்பப் பிடிக்கும் அதுவும் கிரி படம் வந்த பிறகு.. ஹி ஹி அதுல தான் “இரண்டு காலு சிங்கம்டா கிரி” னு எனக்கு!! பாட்டு பாடி புல்லரிக்க வைத்துட்டாங்க 😉 .

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழவில்லை கண்கலங்கியது என்று வேண்டும் என்றால் கூறலாம்..அன்னையர் தின பதிவைப் படித்து விட்டு என் அம்மா அழுத போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

மோசம் என்று கூற முடியாது ..அதனால் ஓகே

4.பிடித்த மதிய உணவு என்ன?

சாப்பாடு நன்றாகச் செய்தால் எந்த உணவாக இருந்தாலும் 🙂 (ஆமா… அது என்ன மதிய உணவு !)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை..எனக்குச் செட் ஆகும் நபர்களுடன் மட்டுமே வைத்துப்பேன்..ஆனால் யாரையும் பகைச்சுக்க மாட்டேன்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா….அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

சந்தேகம் இல்லாமல் அருவி தான்..கடல் ரொம்ப உப்புத் தண்ணீர் ..வடவடன்னு, தலையெல்லாம் மண்ணு.

அருவி என்றால் நம்முடைய அனைத்து சோர்வும் போகும் வகையில் சுறுசுறுப்பாக இருக்கும். அதுவும் இல்லாமல் தடதடன்னு தண்ணீரில் உடல் அதிர குளிப்பதில் இருக்கும் சுகமே தனி.

கடைசியா கொல்லி மலையில் உள்ள அருவிக்கு நண்பர்களுடன் சென்று ஆடி அங்குள்ள குரங்குகளே நமக்குப் போட்டியா எவன்டா! இது ன்னு குழம்பியதும் உண்டு 😉 .

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்?

ஹி ஹி ஹி ….அது பார்க்கிற நபரைப் பொறுத்து 😉 .

8.உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எல்லோருக்கும் நல்லவனா இருக்க முயற்சிப்பது

9.உங்க சரி பாதிக் கிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விசயம் எது?

தாறுமாறான அன்பு

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

சென்னை நண்பர்களுடன்.. வருந்துகிறேன் என்று சொல்வது ரொம்ம்ம்ம்ம்ம்ம்பச் சாதாரணமான வார்த்தை.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கிர்ர்ர்ர்ர்ர்ர்….இதெல்லாம் நெம்ப ஓவர்ங்க

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

கரகாட்டகாரன் கவுண்டர் காமெடி 🙂 நான் வியாபாரிண்ணே! ஆமா! இவரு பெரிய கப்பல் வியாபாரி!

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு.

14.பிடித்த மணம்?

பெட்ரோல் வாசனை, மழை பெய்யும் போது வரும் மண் வாசனை

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்.அவரை அழைக்கக் காரணம் என்ன?

மன்னித்துக்குங்க நான் யாரையும் தொடர அழைக்கப் போவதில்லை…தொடர் பதிவு என்றாலே பலர் கொலை வெறியோடு இருக்கிறார்கள்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

செல்லிடப் பேசியும் செல்லாத பேச்சுக்களும்

17. பிடித்த விளையாட்டு?

பல முறை வெறுத்து ஒதுக்கினாலும் இந்தியா ஒரு போட்டியில் சிறப்பா வெற்றி பெறும்போது என் “கட்டுப்பாடான” கொள்கையைத் தளர்த்தி என்னைத் திரும்பப் பார்க்க வைக்கும் “கிரிக்கெட்” .

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை.

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அனைத்து வகைப் படங்களும் பிடிக்கும்.

சண்டை, சோகம், அழுகை, வன்முறை, ஹாரர், செண்டிமெண்ட், அரசர் காலப் படங்கள், சைக்கோ, சஸ்பென்ஸ், த்ரில்லர் மற்றும் திகில் படங்கள் போன்றவை.

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன் (டிவியில் ஒரு பெயர் மறந்த ஒரு ஆங்கில ஹாரர் படம்)

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர் காலம் (எங்க ஊரு கோபி ரேஞ்சுக்கு அதற்காக ஊட்டி ரேஞ்சுக்கு வெட வெட ன்னு இல்லை)

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புத்தகம் எல்லாம் படிப்பதே இல்லை, இந்தக் கேள்விய பார்த்தால் பல பேரு புத்தகப் பூச்சியா இருப்பாங்க போல (எத்தனை நாள் தான் புழு ன்னே சொல்றது)

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒருநாள் மாற்றுவீர்கள்?

அதில் உள்ள ஃபிகர் படம் போர் அடிக்கும் போது 😉

24.பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : பறவைகள் எழுப்பும் ஒலி

பிடிக்காத சத்தம் : இரு தகரங்கள் உரசி கொள்ளும் போது ஏற்படும் ஒலி

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகப் பட்ச தொலைவு?

மலேசியா

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கணும் கண்டிப்பா.. எனக்குத் தெரியல..[ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்று போர்க்கொடி உயர்த்திட மாட்டீங்களே! 😉 ]

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்குக் கொடுக்கப்படும் சப்பை தண்டனைகள் மற்றும் குப்பை சட்டங்கள்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வெளியே சொல்ல முடியாது 🙂 .

29.உங்களுக்குப் பிடித்த (சுற்றுலா) தலம்?

இயற்கை சூழ்ந்த எந்த இடமும் ..ரொம்ப நாளா நண்பர்களுடன் இப்படிப்பட்ட இடத்தில் ஒரு நான்கு நாட்களாவது செலவிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மற்றவர்களுக்குத் தொல்லை இல்லாமல்

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நண்பர்களுடன் வெளியே சுற்றுவது

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

யாரோட வாழ்வு பற்றி!! (எனக்கு என்றால், போராட்டம் மிகுந்தது)

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

37 COMMENTS

 1. மழை பெய்யும் போது வரும் மண்வாசனை சரி.அது என்ன பெட்ரோல் வாசனை!வளைகுடா வந்து சேர்ந்திருக்க வேண்டியவர் கிழக்கே போகும் விமானத்தைப் புடிச்சிட்டீங்க போல இருக்குது:)

 2. விளம்பரம் என்றால் இப்படி இருக்கணும் விளம்பரம்:)!
  அருமை! எல்லா பதிலகளும் ‘சுருக்’கமாய் மட்டுமின்றி சுவாரஸ்யமாகவும் உள்ளன! பாராட்டுக்கள்!

 3. //32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

  யாரோட வாழ்வு பற்றி!! (//

  அண்ணாச்சியோவ்..,

 4. சும்மா தமாசு தான் 🙂 ! கவுண்டர் ஒரு வேலை இதை பார்க்க நேர்ந்தால் இதை தான்
  சொல்லி இருப்பார்

  சும்மா விளம்பரம் …

  என்ன தம்பி விளம்பரம், சினிமா காரங்கதான் அவங்களுக்கு அவங்களே போஸ்டர் அடிசுகுராங்க!

 5. //
  7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

  ஹி ஹி ஹி ….அது பார்க்கிற நபரை பொறுத்து ;-)//

  ரெம்ப சரியான பதில்

 6. /உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

  எல்லோருக்கும் நல்லவனா இருக்க முயற்சிப்பது/

  ரெண்டுத்துக்கும் ஒரே பதிலா? இல்லைன்னா ரெண்டாவதுக்கு பதில் எங்கே?

 7. 7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
  ஹி ஹி ஹி ….அது பார்க்கிற நபரை பொறுத்து 😉

  Kalakkal Giri ithuu

  Thanks,
  Arun

 8. குறை ஒன்றும் இல்லை, ராஜ நடராஜன், நசரேயன், திகழ்மிளிர், ராமலக்ஷ்மி, சுரேஷ், தேவா, பிரசாத், பாலா, சித்து, அருண் மற்றும் அருண் பாராட்டுக்கூறிய மற்றும் டென்ஷன் ஆன 🙂 அனைவருக்கும் என் நன்றிகள்.

  @ குறை ஒன்றும் இல்லை

  ரஜினியை நீங்க கூறிய 2.5 மணி நேரத்தையும் தாண்டி எனக்கு பிடித்து விட்டது அது தான் பிரச்சனை. ரஜினியை பிடித்து இருந்தாலும் அதற்காக கேவலமான இடுகைகள் எதுவும் எழுதவில்லை என்று நம்புகிறேன். நீங்களும் அதை பெரிதாக நினைக்காமல் என் மற்ற பதிவுகளை பாராட்டியதற்கு நன்றி

  @ ராஜநடராஜன்

  முதலில் உங்கள் இடம் வரவே இருந்தேன், பின் வேலை சிங்கப்பூர் மாறி விட்டது 🙂

  @ சுரேஷ்

  பொதுவாக கேட்ட மாதிரி இருந்தது, இருந்தாலும் எனக்கும் சேர்த்தே கூறி இருக்கிறேன். ஒருத்தரை கேட்டால் வாழ்க்கை என்பது ஒரு சுகமான அனுபவம் என்று கூறுவார்கள். ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படுகிறவன் கிட்ட போய் இதை கேட்டால் என்ன பதில் வரும்? அதனாலே யாருக்கு என்று கேட்டேன்.

  @தேவா

  ஆமாங்க தேவா, யாரையும் அழைக்கவில்லை. விருப்பப்பட்டால் யார் வேண்டும் என்றாலும் இந்த பதிவை தொடரலாம் நான் அழைத்ததாக.

  @பிரசாத்

  இந்த தலைப்பையே கவுண்டரின் கரகாட்டகாரன் காமெடியை மனதில் வைத்தே எழுதினேன். பொதுவா என்னை பற்றி கூறுவதில் (பதிவு போட்டு) எனக்கு விருப்பம் இல்லை, இதை பார்த்தால் எனக்கு அந்த காமெடி தான் நினைவிற்கு வந்தது :-)))

  @பாலா

  இரண்டிற்கும் ஒரே பதில் தாங்க பாலா 🙂 எல்லோரிடமும் நட்பை இருக்கணும் என்று தான் எதிர்பார்க்கிறேன், நடைமுறையில் அது சாத்தியமா! அதுவுமில்லாமல் இதனால் பல பிரச்சனைகள்..எனவே இரண்டிற்கும் ஒரே பதில் தான்.

  @சித்து

  என்னை மதித்து அழைத்ததற்கு நன்றி

 9. ரொம்ப பிடிக்கும் அதுவும் கிரி படம் வந்த பிறகு.. ஹி ஹி அதுல தான் "இரண்டு காலு சிங்கம்டா கிரி" னு எனக்கு!! பாட்டு பாடி புல்லரிக்க வைத்துட்டாங்க 😉
  //
  கொப்பம் மவனே சிங்கண்டா ! !

 10. மன்னித்துக்குங்க நான் யாரையும் தொடர அழைக்க போவதில்லை…தொடர் பதிவு என்றாலே பலர் கொலை வெறியோடு இருக்கிறார்கள்.
  //
  என்ன! மெய்யாலுமா?

 11. கொப்புரான நல்லாருக்கு…! இப்புடி தொடர யாரையும் அழைக்காம வெட்டிபூட்டியே மாமு!
  நீ அனுபவிச்சத எல்லாரும் அனுபவிக்க வேணாம்?

 12. \\27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

  பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு கொடுக்கப்படும் சப்பை தண்டனைகள் மற்றும் குப்பை சட்டங்கள்\\

  அருமை கிரி

 13. //உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
  இயற்கை சூழ்ந்த எந்த இடமும் ..//
  இமயமலையா ???

  அதுசரி உங்கட desktop இல் மாலுவோட‌ படம் தானே இருக்கு.

 14. //கலையரசன் said…
  கொப்புரான நல்லாருக்கு…! இப்புடி தொடர யாரையும் அழைக்காம வெட்டிபூட்டியே மாமு!//

  இப்ப என்ன குறைஞ்சு போச்சு ..நீங்க தான் தொடருங்க..

  //நீ அனுபவிச்சத எல்லாரும் அனுபவிக்க வேணாம்//

  அடுத்த வாட்டிக்கு ஆளு சிக்கியாச்சு அப்பாடா! 😉

  =========================================================

  ஜமால் வருகைக்கு நன்றி

  =========================================================

  //வாசுகி said…
  //உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?
  இயற்கை சூழ்ந்த எந்த இடமும் ..//
  இமயமலையா ??//

  வாசுகி நிஜமாவே எனக்கு இமயமலை போகணும் (மேலே இல்ல..அடிவாரம்) என்று ரொம்ப நாளா ஆசை. அங்கே ரொம்ப சுத்தமான காற்றை நீரை பசுமையான இடங்களை பார்க்கலாம் என்றார்கள். இதை போல இடங்கள் பல உண்டு என்றாலும் இங்கே செல்ல வேண்டும் என்பது என் ஆசை கண்டிப்பாக ஒரு நாள் போக தான் போறேன்.. என் அம்மா கிட்ட சொல்லிட்டே இருப்பேன்.

  //அதுசரி உங்கட desktop இல் மாலுவோட‌ படம் தானே இருக்கு.//

  :-)))

  மாளு படம் இல்ல..பல படம் மாறிட்டே இருக்கும். மாளு படத்தையே பார்த்தால் அப்புறம் மாளுவே போர் ஆகிடும் அதனால அப்பப்போ ! 😉

  மாளவிகா ஒரு படத்திலையும் காணோம்..இனி அடுத்ததா பாட்டியா எங்காவது நடிக்க கூப்பிட்டு விடுவாங்களோன்னு யோசனையா இருக்கு :-))) விரைவில் வேற ஆள பிடிக்க வேண்டியது தான் ஹா ஹா ஹா

  ======================================================

  //arun said…
  Giri,
  Mudincha antha Kuzhanthai yoda irukura anupavam yeppadi iruku nu oru pathivu podunga thalaiva//

  கண்டிப்பாக அருண். விரைவில் எழுதுகிறேன்..நீங்க ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கீங்க.. நான் மறக்கவில்லை. நீங்க அப்ப கேட்ட போது ரொம்ப கொஞ்ச நாளே அவனுடன் இருந்து இருந்தேன்.. இப்ப ஓகே..கண்டிப்பா எழுதறேன்.

  உங்கள் அன்பிற்கு நன்றி.

 15. //17. பிடித்த விளையாட்டு?
  பல முறை வெறுத்து ஒதுக்கினாலும் இந்தியா ஒரு போட்டியில் சிறப்பா வெற்றி பெறும்போது என் "கட்டுப்பாடான" கொள்கையை தளர்த்தி என்னை திரும்ப பார்க்க வைக்கும் "கிரிக்கெட்" //

  எஜமான் படத்தில் நெப்போலியன் அடிக்கடி சொல்ல்வார்…"கல்யாண வீடா இருந்தா நான் தான் மாப்பிள்ளையா இருக்கனும் இலவு வீடா இருந்தா நான் தான் பொணமா இருக்கணும் மாலையும் மரியாதையும் எனக்குத்தான் கிடைக்கனும்னு"

  விளையாட்டில் கூட உங்க பேர் உள்ள "கிரி"க்கெட் தான் உங்களுக்குப்பிடிக்குமா…?

  ஹய்யோ ஹய்யோ…

 16. //15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்.அவரை அழைக்கக் காரணம் என்ன?

  மன்னித்துக்குங்க நான் யாரையும் தொடர அழைக்க போவதில்லை…தொடர் பதிவு என்றாலே பலர் கொலை வெறியோடு இருக்கிறார்கள். //

  என்னை இதில் இழுத்து விட்டிருக்கும் "நட்புடன் ஜமாலை" நானும் தான் கொலை வெறியோட தேடிக்கிட்டிருக்கேன்…

 17. அருமையாக உள்ளது கிரி ரத்தின சுருக்கமாக இருக்கிறது பதில்கள், உங்க தாய் அழுதது உங்கள் பதிவுக்கு கிடைத்த மிக பெரிய பரிசு

 18. கிரி பிரமாதம்….

  நகைச்சுவை யான பதிவுக்கு நடுவில் இந்த பின்னூட்டத்தை இடுகிறேன் …

  "குழல் கொடுமை யாழ் கொடுமை" என்று ஒரு பதிவைப் போட்டு இருக்கிறேன்… பாருங்கள்..

  http://padikkathavan.blogspot.com/2009/06/blog-post_3621.html

  நன்றி

  ஈ ரா

 19. நண்பரே !!
  நான் ஒன்றும் ரஜினிக்கு எதிரானவன் அல்ல .. சினிமாவுக்கும் எதிரி அல்ல .. என்ன எனக்கு எந்த தனிப்பட்ட நடிகரையும் பிடிக்காது ..
  மற்றபடி உங்கள் பதிவுகள் எனக்கு பிடிக்கும்

 20. //7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

  ஹி ஹி ஹி ….அது பார்க்கிற நபரை பொறுத்து ;-)//

  ********

  Romba ketta paiyanunga indha GIRI.

  Idha naan sollala, naadey solludhu…….

 21. //கீழை ராஸா 9 said…
  விளையாட்டில் கூட உங்க பேர் உள்ள "கிரி"க்கெட் தான் உங்களுக்குப்பிடிக்குமா…?//

  🙂 தலைப்பை ஒரு முறை மறுபடியும் படிக்கவும்

  //என்னை இதில் இழுத்து விட்டிருக்கும் "நட்புடன் ஜமாலை" நானும் தான் கொலை வெறியோட தேடிக்கிட்டிருக்கேன்//

  😉

  ==================================================================

  //தமிழ் பிரியன் said…
  நல்லா விளக்கிட்டீங்க கிரி… ://

  இதுல இந்த "நல்ல்லா" ல எதோ உள் குத்து இருக்கிற மாதிரி இருக்கே 😉

  =======================================================

  //Suresh said…
  அருமையாக உள்ளது கிரி ரத்தின சுருக்கமாக இருக்கிறது பதில்கள், உங்க தாய் அழுதது உங்கள் பதிவுக்கு கிடைத்த மிக பெரிய பரிசு//

  நன்று சுரேஷ்

  =======================================================

  //ஈ ரா said…
  கிரி பிரமாதம்..//

  நன்றி ஈரா

  //"குழல் கொடுமை யாழ் கொடுமை" என்று ஒரு பதிவைப் போட்டு இருக்கிறேன்… பாருங்கள்//

  மறுபடியும் எழுத ஆரம்பித்து விட்டீர்களா!… கண்டிப்பாக படிக்கிறேன் ஈரா

  ==========================================================

  //குறை ஒன்றும் இல்லை !!! Said…
  நண்பரே !!
  நான் ஒன்றும் ரஜினிக்கு எதிரானவன் அல்ல .. சினிமாவுக்கும் எதிரி அல்ல .. என்ன எனக்கு எந்த தனிப்பட்ட நடிகரையும் பிடிக்காது ..
  மற்றபடி உங்கள் பதிவுகள் எனக்கு பிடிக்கும்//

  நன்றிங்க.. புரிந்து கொண்டமைக்கு

  ==========================================================

  //R.Gopi said…

  Idha naan sollala, naadey solludhu……//

  இது நெம்ப நெம்ப ஓவரா இருக்கே 😉

  ஆஹா! கோபி ஊர்ல இருந்து வந்துட்டீங்களா! அடி பட்டைய கிளப்புங்க! 🙂

 22. உங்களுக்கு தமிலிஷ் ஓட்டுப் போடலாமுண்ணு வந்தா ஓட்டு விழ மாட்டேங்குது!காரணம் என்ன?பின்னூட்டம் போடலாமுன்னு எழுதினா ஆங்கிலத்துல தட்டி தமிழுக்கு மாறும் டார்ச்சர் தாங்க முடியல.நான் இகலப்பை உபயோகிப்பதால் தமிலிஷ் எழுத்து எனக்கு சரிப்பட்டு வரல.

 23. //ராஜ நடராஜன் said…
  உங்களுக்கு தமிலிஷ் ஓட்டுப் போடலாமுண்ணு வந்தா ஓட்டு விழ மாட்டேங்குது!காரணம் என்ன?//

  ஒரு வழியா தமிளிஸ் ல ஒட்டு போட்டுட்டீங்க போல 😉

  //பின்னூட்டம் போடலாமுன்னு எழுதினா ஆங்கிலத்துல தட்டி தமிழுக்கு மாறும் டார்ச்சர் தாங்க முடியல.நான் இகலப்பை உபயோகிப்பதால் தமிலிஷ் எழுத்து எனக்கு சரிப்பட்டு வரல//

  நாங்க கூகிள் ஆண்டவர் தான் 🙂

  ============================================================

  //கடைக்குட்டி said…
  நல்லா இருக்கு :-)//

  கடைசி பின்னூட்டம் கடை குட்டி 🙂 நன்றி

 24. என்ன கிரி சார் …
  முதல் வரியிலே நம்மளையே காலாய்க்கிரிங்க…..
  ஏன் என் புனை பேர் உங்களுக்கு புடிக்கிலியா?

 25. Here also the same.

  //பிடித்த மதிய உணவு என்ன?

  சாப்பாடு நன்றாக செய்தால் எந்த உணவாக இருந்தாலும் 🙂 (ஆமா… அது என்ன மதிய உணவு !)

 26. //ஜெட்லி சிட்…
  முதல் வரியிலே நம்மளையே காலாய்க்கிரிங்க….. ஏன் என் புனை பேர் உங்களுக்கு புடிக்கிலியா//

  அட! கலாய்க்கலீங்க

  பேரு நல்லா இருக்குங்க ஜெட்லி .. நீங்க ஜெட்லி ரசிகரா!

  ==========================================================

  //தமிழ்நெஞ்சம் said…
  now you people are enjoying answers for 32 different questions.
  idhu edhil pogi mudiyumo? valaiyulagirge theriyadha mudicchu.. kalakkunga boss//

  என்னை மாதிரி செய்ய ஆரம்பித்து அப்படியே கொஞ்ச நாள்ல இதை யாரும் கண்டுக்க மாட்டாங்க

  ==========================================================

  //ஜோதிபாரதி said…
  கிரி,
  தங்களின் பதில்கள் சிறப்பாக இருக்கின்றன.//

  நன்றி

  //இந்த கேள்விகளைக் கேட்ட ஆளைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.//

  கேள்வி கேட்டதற்க்கா இல்லை இதை போன்ற பதில்கள் வந்து கொண்டு இருக்கிறது என்பதாலா.. :-))))

  ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க.

 27. // 10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

  என்னுடைய சென்னை நண்பர்களுடன்.. வருந்துகிறேன் என்று சொல்வது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சாதாரணமான வார்த்தை. //

  உங்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரியதா இருக்கும் போல தெரிகிறது.

  // 30.எப்படி இருக்கணும்னு ஆசை?

  மற்றவர்களுக்கு தொல்லை இல்லாமல் //

  மற்றவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கனும் என்றால் அது சற்று கஷ்டமான விஷியம் தான். அதற்க்கு மிகவும் பொறுமை வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here