பலரும் ஈழ தமிழர்கள் விசயத்தில் தமிழகத் தமிழர்கள் தமிழுணர்வு இல்லாமல் நடந்து கொண்டார்கள் என்று கோபத்தில் இருந்தார்கள் இருக்கிறார்கள். Image Credit
எனக்கும் தேர்தல் முடிவு வந்தவுடன் கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தது.
எப்போதும் அவசரப்பட்டும் உணர்ச்சிவேகத்திலும் கோபத்திலும் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக வருவதில்லை, நானும் முன்பு உணர்ச்சிவசப்பட்டுப் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்.
பின்னர் அவ்வாறு எழுதியதை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறேன், இன்னும் பொறுமையாக இருந்து இருக்கலாமோ என்று!
அனுபவங்கள் நாம் செய்யும் தவறுகளில் இருந்தே பெற்றுக் கொள்கிறோம்.
அந்த வகையில் இந்தப் பிரச்சனையையும் அவசரப்பட்டு எழுதாமல் அனைவரும் கோபமாக இருக்கும் நேரத்தில் எழுதாமல் கொஞ்சம் தாமதமாக எழுதுகிறேன்.
காரணம், கோபத்தில் இருக்கும் போது நாம் என்ன தான் கூறினாலும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் பெரும்பாலனவர்கள் இருக்க மாட்டார்கள், அதை நான் தவறாகவும் நினைக்கவில்லை.
ஒரு நிறுவனத்தில் ஒரு கிளையில் நடக்கும் செய்தி மேலதிகாரி மூலம் மின்னஞ்சலாக மற்ற கிளையில் இருக்கும் அனைவருக்கும் கூறக் கூறி அதிகாரிகளுக்கு வருகிறது.
அவர் அந்தச் செய்தியை அவரது குழுவில் இருக்கும் மற்றவர்களுக்கு இதுபற்றிய தகவலைத் தெரிவிக்காமல் மறைத்து விடுகிறார்.
ஒரு நாள் இந்த மின்னஞ்சலை அனுப்பிய அதிகாரி இந்தத் தகவல் எதுவுமே தெரியாத நபர்களிடம் வந்து…
ஏன்யா! உங்களுக்கு எல்லாம் அறிவு இருக்கிறதா! உணர்வு இருக்கிறதா! அதன் முக்கியத்துவம் கொஞ்சமாவது உணர்ந்து இருக்கிறீர்களா!
நான் அவ்வளவு கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்களே! என்று அவர்களைத் திட்டினால்….!
தவறு யார் பக்கம்?
தகவல் அனுப்பிய அதிகாரியின் மீதா! அல்லது இந்தச் செய்தியை மற்றவர்களுக்குத் தெரிவிக்காமல் அல்லது சென்றடையாமல் தடுத்த அதிகாரி மீதா!
அல்லது எந்த விசயமும் புரியாமல் திட்டுகளை மட்டும் வாங்கிக் கொண்டு இருக்கின்ற மற்றவர்கள் மீதா!
இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும் தமிழக மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று.
நம்மைப் போல, பொது மக்கள் அனைவரும் இதே வேலையாக இணையத்தில் உட்கார்ந்து கொண்டு யார் அரசியலில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒருவர் செய்வது சரியா தவறா! என்று விவாதித்துக்கொண்டு இருப்பதில்லை.
அதற்கு அவர்களுக்குப் பணமும் இல்லை நேரமும் இல்லை. விற்கிற விலைவாசியில் தினமும் அவர்களது பிழைப்பை ஓட்டுவதே பெரும்பாடாக உள்ளது.
இப்படிப்பட்ட பெரும்பான்மை மக்களுக்குச் செய்திகள் தருவது அல்லது இவர்கள் தெரிந்து கொள்வது பெரும்பாலும் இந்த ஐந்து ஊடகங்கள் மூலமாகவே.
இவைகள் என்ன சொல்கிறதோ அதை வைத்து தான் உலகில் இந்தியாவில் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்கிறார்கள்.
1 சன் செய்திகள் 2 கலைஞர் செய்திகள் 3 தினகரன் 4 தினமலர் 5 தினத்தந்தி, இவைகள் தரும் செய்திகளே மக்களுக்குச் செய்திகள்.
இதைத் தவிர அவர்களுக்குத் தெரிந்து கொள்ள எதுவுமில்லை, இருந்தாலும் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் இல்லை.
முதலில் சன் குழுமம் மற்றும் கலைஞர் ஊடகங்கள்
ஈழ செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்காமல் முக்கியப் பங்காற்றிய பெருமை இவர்களையே சாரும்.
ஈழ செய்திகளைக் கூறினால் நமக்கு மக்கள் ஓட்டுப் போடமாட்டார்கள் என்று ஈழத்தில் நடந்த கொடுமைகள் எதையும் கூறாமல் புறக்கணித்து விட்டார்கள்.
கூறிய சில செய்திகளையும் பத்தோடு பதினொன்றாகக் கூறினார்கள். நல்லவேளை ஈழ செய்திகளை விளையாட்டுப் பிரிவில் சேர்க்காமல் விட்டார்கள்.
இலங்கை அரசின் இறுதி தாக்குதல் மற்றும் பிரபாகரன் பற்றிய செய்திகளின் போதும் கலைஞர் டெல்லியில் பதவி பெற கடும் முதுகு வலியிலும் சக்கர நாற்காழியில் சென்று போராடியதை முக்கியச் செய்தியாகக் காட்டிக்கொண்டு இருந்தார்கள்.
ஒன்றுமில்லாத செய்திகளைக் கூடப் பெரும் பிரச்சனையாக மாற்றக்கூடிய சக்தி பெற்றவர்கள்.
உலகமே அதிரும் செய்தியை ஒன்றும் இல்லாமல் செய்த பெருமைக்குரியவர்கள் ஆகி விட்டனர்.
முத்துக்குமரன் உண்மையைப் புட்டு புட்டு வைத்தாலோ என்னவோ அவர் இறப்பை ஜுஜுபி செய்தியாகக் கூறினார்கள்.
ஈழ செய்திகளைக் காட்டினால் மக்கள் மனம் மாற வாய்ப்புண்டு எனவே அது பற்றிய செய்திகளையே பாய்காட் செய்து விட்டால்…சாதித்து விட்டார்கள்.
தினமலர்
இந்தப் பத்திரிக்கையைப் பற்றிக் கூற எதுவுமில்லை.
புலிகள் எதிர்ப்பு என்ற பெயரில் ஈழத்தில் துன்பப்படும் பொதுமக்கள் படும் கஷ்டங்களைக் கூடக் கிண்டலடித்தவர்கள் அல்லது செய்திகளை மாற்றிக் கூறுபவர்கள்.
எனவே இவர்களிடமும் ஈழத்து செய்தியை எதிர்பார்க்க முடியாது.
தினத்தந்தி
இது ஓரளவு நடுநிலையான நாளிதழ் ஆனால், அரசு சார்பாகச் செய்திகளை வெளியிடும், அரசு என்ன செய்திகளைத் தெரிவித்தது என்று அனைவருக்கும் தெரியும்.
எனவே, இதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதில் ஒரு ஆறுதல் இவர்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை இவர்களைப் போல அநியாயமாகக் கொடுக்க மாட்டார்கள்.
ஜெயா செய்திகளை நடு நிலை மக்கள் யாரும் விரும்பிப் பார்ப்பதில்லை, அவருடைய கட்சிக்காரர்கள் மட்டுமே பார்ப்பார்கள்.
மக்கள் தொலைக்காட்சியில் அதிகளவில் ஈழ செய்திகள் பற்றிக் கூறினார்கள்.
ஆனால், இந்தத் தொலைக்காட்சிக்கு அவ்வளவாக மக்களிடம் ரீச் இல்லை, அதுவும் தேர்தல் சமயத்தில் இந்தத் தொலைக்காட்சியை இருட்டடிப்புச் செய்ததாகக் குற்றச்சாட்டுண்டு.
தூர்தர்ஷன் செய்திகள் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை!
தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
ஈழப்பிரச்சனை தமிழக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அனைவராலும் கூறப்படுகிறது. அது உண்மையும் கூட.
ஆனால், மக்களிடையே இந்தப் பிரச்சனை தெளிவாக எடுத்துச்செல்லப்பட்டு இது பற்றி அனைவருக்கும் தெரிந்து இதைப் போல நடந்தால் கூறுவதில் ஓரளவு நியாயம் உண்டு.
அப்படியே இருந்தாலும் யாருக்கு ஓட்டு போடுவது? யார் சரியான நபர்?
திமுக (கூட்டணி) அரசும் அனைத்து தொகுதியிலும் எளிதாக வெற்றி பெற முடியவில்லை, சில தொகுதிகளில் குறைந்த அளவே வாக்கு வித்யாசம்.
திமுகவின் கோட்டையான சென்னையில் தென் சென்னையில் அதிமுக வெற்றிப் பெற்றது, அதே போல TR பாலுவே தக்கி முக்கி தான் வெற்றி பெற்றார்.
ஈரோடு திருப்பூர் கோவை தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை.
நல்ல தலைவர் இல்லை
மக்களுக்கு ஓட்டு போட ஒரு நல்ல தலைவர் இல்லை என்பதே உண்மை, ஈழம் ஈழம் என்று தேர்தலுக்கு முன் முழங்கிய ஜெயாவை யாராவது கண்டு பிடித்தால் நல்லது.
தேர்தலுக்காகத் தான் ஸ்டண்ட் அடித்தார் என்பது தற்போது நிரூபணம் ஆகி விட்டது இது பற்றி முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.
திமுக விற்கு ஓட்டு போடவில்லை என்றால் யாருக்கு ஓட்டுபோடுவது.. அதிமுகவா! இதற்கு பெரும்பாலனவர்கள் தயாராக இல்லை என்பது தற்போது தெரிந்து விட்டது.
ஈழ தமிழர்களுக்கு டெல்லிக்கு தந்தி அடித்த கலைஞர் பதவி பெற உடல் நிலை முடியாத நிலையிலும் சென்று காங்கிரஸ் தலைமையிடம் கோபித்துக்கொண்டு, தான் நினைத்ததைச் சாதிக்கிறார்.
பாமக விற்குத் தர்ம அடி கொடுத்துள்ளார்கள், இதைப் பாமக உட்பட எவரும் எதிர்பாராதது, முதலில் இருந்தே எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருந்தார்கள்.
ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
யாருக்கு தான் ஓட்டு போடுவது!
இதை எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது. இதையும் மக்கள் யோசிக்காமல் செய்து விட்டார்கள் என்று கூறுவதா!
பணத்திற்காகச் சிலர் ஓட்டு போடுகிறார்கள் இல்லை என்று கூறவில்லை, இதைப் போல இருப்பவர்கள் எங்கும் இருப்பார்கள்.
அதற்காகத் தமிழகம் முழுவதும் அனைவரும் அப்படித் தான் என்று கூறினால் எப்படி!
அந்தத் தமிழகத்தில் தான் நம் குடும்பத்தினரும் உள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்து பேச வேண்டும்.
அரசியலில் தற்போது எவரும் நல்லவர் இல்லை பின் யாருக்கு தான் ஓட்டு போடுவது! விஜயகாந்த் போன்றோர்களால் ஓட்டுகளும் பிரிந்து விட்டன.
இதில் மக்களைக் குறை கூறி என்ன பயன்!
ஈழ தமிழர்கள் விசயத்தில் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் தான் தவறு செய்து விட்டனர், ஈழ செய்திகள் மக்களைச் சென்றடையாமல்.
இலங்கை அரசு, ஈழ கொடுமைகளை உலகத்திற்கு மறைக்க முயன்றது, நம் ஊடகங்கள் தமிழக மக்களுக்கு ஈழ செய்திகள் சென்றடையாமல் மறைத்து விட்டார்கள்.
இதில் என்ன பெரிய வித்யாசம்.
தவறு செய்தவர்கள் மீது கோபப்படலாம் என்னவென்றே தெரியாத மக்களிடம் கோபப்பட்டால்….
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
ஊடகங்கள் பற்றிய உங்கள் கருத்துப்படி ஓய்வில்,அலுப்பில் தொலைக்காட்சி முன் உட்காருபவர்களின் மனநிலையை ஊக்குவிக்கும்படி ஜனரஞ்சகமாக செயல்படுவது சன் டி.வியும்,கலைஞர் டி.வியும் தான்.தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் பத்திரிகை,புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.மக்கள் தொலைக்காட்சி ஈழம் குறித்த தகவல்களை கொண்டு வந்தாலும் தமிழ் சினிமா நிகழ்ச்சிகள்,ரஜனி எதிர்ப்பு போன்றவற்றால் பெரும்பான்மையோரைப் போய்ச் சேரவில்லை.அகன்ற பார்வையை இணையத்தில் தமிழ்மணம் கொண்டு வந்ததால் பதிவர் வட்டம் மட்டுமே நிகழ்வுகளை சரியாக பார்க்க முடிந்தது.
(உங்கள் CNN பதிவில் பின்புலத்தில் என்ன நிகழ்கிறது என்றே தெரியாமல் ஒரு PHD அண்ணாத்தே கருத்து சொன்னதை நேற்று காண நேர்ந்தது.அவருக்கு சரியான பதில் சொன்னதற்கு பாராட்டுக்கள்.அடிக்கிற சுனாமியில் மிதப்பதற்கு கிடைத்த சின்ன மரத்துண்டு மாதிரியான பதிவின் சாரம் அது.)
தமிழுணர்வு இல்லாதவர்களே…இதற்கு மேல் ஏதாவது எழுதப் போனால் வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போலிருக்கிறது…போங்க… இவனுங்களும்… இவங்க போலித் தமிழுணர்வுல தீயை வைக்க!
yarum thiruntha povathillai
உண்மையோ உண்மை. அது அவங்களுக்கே தெரியும்.ஒளி/லி பரப்பு செய்வபர்களுக்கே தெரியும் – அவங்களையே offline ல அந்த செய்திகளைப் பார்க்க சொன்னால் – பார்க்க மாட்டாங்க – செய்திகளை வாசிப்பவர்களை – ஒரு அறையில் பூட்டி – 6 மணி நேரத்துக்காவது தொடர்ந்து ஜெயா செய்திகளைப் பார்க்கச் சொல்லனும். இது என்னுடைய சிறிய ஆசை. சின்னச் சின்ன ஆசை//ஜெயா செய்திகளை நடு நிலை மக்கள் யாரும் விரும்பி பார்ப்பதில்லை என்பது என் கருத்து, அவருடைய கட்சிக்காரர்கள் மட்டுமே பார்ப்பார்கள்.
you are writing very good analyse.Tamil nadu need big changes.It need start from tamil villages to chennai.It may take 5 years or more but it started with strong base and financially supported education basics..At last best tamil politician selected from educated background and without selfishness who really like tamilpeoples live. Can you do that?Only in tamil nadu this problem because there is no strong tamil politician there. tamil nadu controlled by the people from other state, their purpose only politic and money making.. no bother about tamils live.. tamils are illishavaay..yaathum uuree policy need to change. Poor and not enough unity among them.. tamils need to buildup more education and strong financial base and unity and awareness make one day tamilnadu for tamils.One day and make more politically tamilnaadu state come to tamils hand.
//நல்லவேளை ஈழ செய்திகளை விளையாட்டு பிரிவில் சேர்க்காமல் விட்டார்கள்.//
:-)))
உங்கள் பிற்குறிப்பு காரணம் தான் நான் இப்போது வலைப்பக்கம் வராமல் இருப்பதற்கு காரணம்..:-(
தமிழக தமிழர்கள் தமிழுணர்வு இல்லாதவர்களா!உண்மையான வார்த்தை …எல்லோரும் தேர்தல் நேரத்தில் கத்தினார்கள் அதில் அதிமுக பாமக போன்ற கச்சிகள் குளிர்காய்ந்தன.தேர்தலுக்குப் பிறகு யாரையும் காணும் அம்மையார் வந்தால் மட்டும் என்ன நடக்க போகுது ?
தினமணி பத்திரிகை ஓரளவு நடுநிலைமையுடன் செயலாற்றியதென்று நான் நினைக்கிறேன் !
நல்ல அலசல்… எண்ணங்கள் !! உங்க எழுத்துல முதிர்ச்சி கூடுது !!
ஆகக் கூடி ஊடகதர்மம்னு ஒண்ணு இல்லவே இல்ல. நல்ல கருத்துக்கள். பாராட்டுக்கள் கிரி.
கிரி,
உணர்ச்சிவசப்படாமல் ,சும்மா பரபரப்புக்காக எழுதாமல் ,உண்மையான அக்கறையோடு எழுதப்பட்ட பதிவு இது என்பது என் கருத்து.
ஆனால் சினிமா நடிகைகளுக்கு குழந்தை பிறந்த அதி முக்கிய செய்திகளியெல்லாம் தேடிப்பிடித்து படித்து அறிந்து கொன்டு விவாதிக்கும் நம் மக்கள் தன் இனத்தைப் பற்றியும் தன் இன மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை பற்றியும் இன்னும் கொஞ்சம் அக்கறையோடு தேடி தெரிந்து கொண்டிருக்கலாம்.
நல்ல நிலைப்பாடு கிரி.
ஊடகங்கள் விளம்பரங்களாகவும், கொ.ப.செ வாகவும் மாறி பல காலங்கள் ஆகின்றன
இந்த பத்திரிக்கையை பற்றி கூற எதுவுமில்லை, புலிகள் எதிர்ப்பு என்ற பெயரில் ஈழத்தில் துன்பப்படும் பொதுமக்கள் படும் கஷ்டங்களை கூட கிண்டலடித்தவர்கள் அல்லது செய்திகளை மாற்றி கூறுபவர்கள். எனவே இவர்களிடமும் ஈழத்து செய்தியை எதிர்பார்க்க முடியாது.
////
தினமலர் கொடுமையானவனுங்க!! எரியுற கொள்ளியில் எண்ணை ஊத்துவானுங்க!!!
//Mahesh said…
நல்ல அலசல்//
நன்றி மகேஷ்
=======================================================================
//ஜோ/Joe said…
ஆனால் சினிமா நடிகைகளுக்கு குழந்தை பிறந்த அதி முக்கிய செய்திகளியெல்லாம் தேடிப்பிடித்து படித்து அறிந்து கொன்டு விவாதிக்கும் நம் மக்கள் தன் இனத்தைப் பற்றியும் தன் இன மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை பற்றியும் இன்னும் கொஞ்சம் அக்கறையோடு தேடி தெரிந்து கொண்டிருக்கலாம்//
நீங்கள் கூறுவதில் எனக்கும் மாற்று கருத்தில்லை. இதற்க்கு இன்னும் காலம் எடுக்கும் என்றே நான் கருதுகிறேன்.
இந்த வலைப்பதிவு வந்த பிறகு தான் ஈழ தமிழர்கள் பற்றி பல விஷயம் நான் தெரிந்து கொண்டேன். மலையக தமிழர்கள் பற்றி எல்லாம் இங்குள்ள நண்பர்கள் கூற தெரிந்து கொண்டேன். என்னை போல பலர் இருக்கிறார்கள். இன்னும் பெரும்பாலனவர்கள் ஈழ தமிழர்கள் என்பவர்கள் இங்கே இருந்து சென்று இலங்கையில் வசிப்பவர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையை உரிமையில்லாமல் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதாக கருதி கொண்டு இருக்கிறார்கள்.
இதை எல்லாம் பொறுப்பானவர்கள் மக்களுக்கு எடுத்து கூறினால் மட்டுமே உண்டு, படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான பக்குவம் நம்மவர்களுக்கு வர இன்னும் காலம் எடுக்கும் என்பது கசப்பான உண்மை மற்றும் என் கருத்து.
===============================================================
//ராஜ நடராஜன் said…
அகன்ற பார்வையை இணையத்தில் தமிழ்மணம் கொண்டு வந்ததால் பதிவர் வட்டம் மட்டுமே நிகழ்வுகளை சரியாக பார்க்க முடிந்தது//
இதிலும் பலர் கண்டபடி எழுதுவது வருத்தம் அளிக்கிறது.
//PHD அண்ணாத்தே கருத்து சொன்னதை நேற்று காண நேர்ந்தது//
அவருக்கு அவரை தவிர மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் போல உள்ளது.
================================================================
//நட்புடன் ஜமால் said…
ஊடகங்கள் விளம்பரங்களாகவும், கொ.ப.செ வாகவும் மாறி பல காலங்கள் ஆகின்றன//
வருத்தமளிக்கும் செய்தி
================================================================
//ARASIAL said…
தமிழுணர்வு இல்லாதவர்களே…
இதற்கு மேல் ஏதாவது எழுதப் போனால் வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போலிருக்கிறது//
உங்கள் கருத்திற்கு நன்றி வினோ
=======================================================
//Preethiv said…
yarum thiruntha povathillai//
யாரை சொல்றீங்க.. ! 🙂
=================================================
//thevanmayam said…
தினமலர் கொடுமையானவனுங்க!! எரியுற கொள்ளியில் எண்ணை ஊத்துவானுங்க!!!//
ஒன்றும் சொல்வதிற்கில்லை..வெறுப்பு தான் மிஞ்சுகிறது
=================================================
//தமிழ்நெஞ்சம் said…
செய்திகளை வாசிப்பவர்களை – ஒரு அறையில் பூட்டி – 6 மணி நேரத்துக்காவது தொடர்ந்து ஜெயா செய்திகளைப் பார்க்கச் சொல்லனும். இது என்னுடைய சிறிய ஆசை. சின்னச் சின்ன ஆசை//
பாவங்க அவங்க 🙂
=========================================================
//E Quality said…
you are writing very good analyse.//
நன்றி
====================================================================
//’டொன்’ லீ said…
உங்கள் பிற்குறிப்பு காரணம் தான் நான் இப்போது வலைப்பக்கம் வராமல் இருப்பதற்கு காரணம்..:-//
நீங்கள் சொல்லவே தேவையில்லை டொன் லீ
==========================================================
//malar said…
எல்லோரும் தேர்தல் நேரத்தில் கத்தினார்கள் அதில் அதிமுக பாமக போன்ற கச்சிகள் குளிர்காய்ந்தன.
தேர்தலுக்குப் பிறகு யாரையும் காணும் //
தேர்தல் முடிந்தது அவர்கள் வேலையும் முடிந்தது
===========================================================
//
அருப்புக்கோட்டை பாஸ்கர் said…
தினமணி பத்திரிகை ஓரளவு நடுநிலைமையுடன் செயலாற்றியதென்று நான் நினைக்கிறேன் !//
ஆனால் அதை படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவு பாஸ்கர் அது தான் பிரச்சனை.
============================================================
//பாலா… on 6:44 PM, May 26, 2009 said…
ஆகக் கூடி ஊடகதர்மம்னு ஒண்ணு இல்லவே இல்ல//
அதை இவர்கள் எப்பவோ குழி தோண்டி புதைத்து விட்டார்கள்
கிரி, அருமையான எண்ணங்கள். சரியான எண்ணங்கள்.
நல்லது தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே…. நல்ல அலசலாக இருகின்றது..
romba unarvu poorvamana pathivu Giri
Thanks,
Arun
//நம்மை போல, பொது மக்கள் அனைவரும் இதே வேலையாக இணையத்தில் உட்கார்ந்து கொண்டு யார் அரசியலில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், ஒருவர் செய்வது சரியா தவறா! என்று விவாதித்துக்கொண்டு இருப்பதில்லை. அதற்க்கு அவர்களுக்கு பணமும் இல்லை நேரமும் இல்லை. விற்கிற விலைவாசியில் தினமும் அவர்களது பிழைப்பை ஓட்டுவதே பெரும்பாடாக உள்ளது// Reality or Fact, atleast one among the bloggers finally realized this…
அருமையாக எழுதினீர்கள் கிரி. ஒரு ஈழ தமிழனாக இதனை ஏற்கனவே உணர்தேன் . கவலை வேண்டாம் சகோதரா எமது இனத்தின் விடுதலைக்காக உழைப்போம் இந்த புதிய நெடிய களத்தில்
நாம் எல்லாரும் ஐந்நூறு ருபாய்க்கு விலை போய்விட்டோம் கிரி. வேறு எந்த காரணமும் இல்லை.பிரபாகரன் இறந்துவிட்டதாக பத்மநாபனே அறித்த பிறகும் வைகோவும்,நெடுமாறனும் அதை ஏற்க மறுக்கிறார்கள். ஒரு வேலை பிரபாகரன் நிஜமாகவே இறந்திருந்தால் அவருக்கு கிடைக்க வேண்டியா நியாமான புகழஞ்சலியை இவர்கள் தடுத்து விட்டார்கள் என்று தானே அர்த்தம்.அது சரி,பிரபாகரன் இறந்து விட்டால் பிறகு எதை வைத்து இவர்கள் தமிழகத்தில் அரசியல் செய்வார்கள்.
//சரவணகுமரன் said…
கிரி, அருமையான எண்ணங்கள். சரியான எண்ணங்கள்//
நன்றி சரவணகுமரன்
===========================================================
//ஆ.ஞானசேகரன் said…
நல்லது தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.//
நன்றி ஞானசேகரன்
===========================================================
//arun said…
romba unarvu poorvamana pathivu Giri//
நன்றி அருண். என் ஃப்ரோபைலில் இருக்கும் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்
============================================================
//Renga said…
Reality or Fact, atleast one among the bloggers finally realized this.//
நன்றி அருண்..பலரும் இதை போல நினைத்து இருப்பார்கள்..எழுதாமல் விட்டு இருக்கலாம்.
============================================================
//jackiesekar said…
எந்த பக்கத்தையும் விட்டு விடாமல் நடுநிலையான அலசல் நல்ல பதிவு கிரி வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்//
நன்றி ஜாக்கி சேகர்
============================================================
//கண்டும் காணான் said…
ஒரு ஈழ தமிழனாக இதனை ஏற்கனவே உணர்தேன் . கவலை வேண்டாம் சகோதரா எமது இனத்தின் விடுதலைக்காக உழைப்போம் இந்த புதிய நெடிய களத்தில்//
உங்களை போல புரிந்து கொள்பவர்கள் இருப்பதாலே குழப்பம் இல்லாமல் இருக்கிறது. உணர்ச்சிவசப்படுவதால் ஒரு பயனும் இல்லை.
=============================================================
//காத்தவராயன் said…
கிரி மிக அற்புதமான அலசல். எதார்த்தத்தை மிக எளிமையாக கூறியுள்ளீர்கள். //
நன்றி காத்தவராயன்
//அனைத்து ஊடகங்களும் (ஈழ ஆதரவு ஊடகங்களையும் சேர்த்து) நடுநிலைமையுடன் இலங்கை பிரச்சனையை மக்களுக்கு கொண்டு சென்றிருந்தாலும்…….. மக்கள் ஈழப்பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே!//
நீங்கள் கூறுவது சரி தான். அதற்க்கு காரணம் நம் மக்களுக்கு ஈழ தமிழ் மக்களின் வரலாறு தெரியாததே. இன்னும் படித்தவர்களுக்கே ஈழம் பற்றி சரியாக தெரியாது. சாதாரண பொதுமக்கள் பற்றி நாம் நினைக்கவே தேவையில்லை. நம் தமிழக மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அதற்க்கு எடுத்துக்காட்டாக ராஜிவ் மரணம், ஜெயலலிதா சசிகலா ஊழல், கலைஞர் சிறைபிடிப்பு போன்ற சமயத்தில் நடந்த தேர்தல்களே உதாரணம்.
அதே போல ஈழ மக்களை பற்றி முழுவதும் தெரிந்து இருந்தால் இதை போல கண்டிப்பாக நடந்து கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை ராஜிவ் மரணத்திற்கு பிறகு அவர்களை தீவிரவாதிகளாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், நமது ஊடகங்கள் அவ்வாறு தான் காண்பித்து இருக்கின்றன. மக்களுக்கு சரியான புரிதல் இல்லாததே இதற்க்கு காரணம்.
// இங்ன உள்ள பிரச்சனையே தீக்க முடியல….. இதுல எலங்க பிரச்சனைய வேற தீத்து வய்க்கனுமா? இவிய்ங்களுக்கு வேற வேல இல்ல”.//
உண்மை தான்..இதற்கும் காரணம் சரியான புரிதல் இல்லாததே.
=============================================================
//Bleachingpowder said…
பிரபாகரன் இறந்துவிட்டதாக பத்மநாபனே அறித்த பிறகும் வைகோவும்,நெடுமாறனும் அதை ஏற்க மறுக்கிறார்கள்//
இது குறித்த சர்ச்சை இன்னும் முடியவில்லை என்பதால் இதில் கருத்து கூற விரும்பவில்லை
//ஒரு வேலை பிரபாகரன் நிஜமாகவே இறந்திருந்தால் அவருக்கு கிடைக்க வேண்டியா நியாமான புகழஞ்சலியை இவர்கள் தடுத்து விட்டார்கள் என்று தானே அர்த்தம்.//
உண்மையில் இதுவே என் வருத்தமும். காலம் தான் பதில் சொல்லணும் பார்ப்போம்.
//பிரபாகரன் இறந்து விட்டால் பிறகு எதை வைத்து இவர்கள் தமிழகத்தில் அரசியல் செய்வார்கள்.//
ஐநா தன் உதவிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டும், மற்ற அமைப்புகள் ஈழ தமிழர்களுக்கு இலங்கை வந்து உதவக்கூடாது என்று இலங்கை அரசு ஒரு கோரிக்கை விடுத்து இருக்கிறது இதற்க்கு இந்தியா சீனா நாடுகள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.
இலங்கை அரசு தமிழர்களுக்கு கண்டிப்பாக சரியான உதவிகளை நிவாரண பணிகளை செய்யாது என்பது அனைவருக்கும் தெரியும். இது வரை கொடுக்கப்பட்ட பல நிவாரண பொருட்கள் ஈழ அப்பாவி தமிழ் மக்களை சென்றடையவில்லை.
இத்தனை பிரச்சனை நடக்கும் போது கலைஞர் அவர்கள் இது குறித்து மத்திய அரசிற்கு “கடிதம்” எழுதி கொண்டு இருக்கிறார்.
தற்போது நீங்கள் மறுபடியும் நீங்கள் கேட்ட கேள்வியை ஒருமுறை படித்து பாருங்கள் (அதாவது இனி அவர்களை பற்றி இவர்கள் கவலைப்படவே மாட்டார்கள் என்பதே என் கருத்து)
எந்த பக்கத்தையும் விட்டு விடாமல் நடுநிலையான அலசல் நல்ல பதிவு கிரி வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்
அன்புடன்
ஜாக்கி
கிரி மிக அற்புதமான அலசல். எதார்த்தத்தை மிக எளிமையாக கூறியுள்ளீர்கள்.
அனைத்து ஊடகங்களும் (ஈழ ஆதரவு ஊடகங்களையும் சேர்த்து) நடுநிலைமையுடன் இலங்கை பிரச்சனையை மக்களுக்கு கொண்டு சென்றிருந்தாலும்…….. மக்கள் ஈழப்பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே! பூகம்ப, வெள்ளநிவாரணம் மாதிரியான உதவிகளை மட்டுமே ஈழத்திற்க்கு வழங்க மக்கள் முன்வந்திருப்பார்கள்/வருவார்கள் என்றே தோன்றுகிறது.
பொதுவாக அனைவரும் Inner circle-இல் (நான், நம் குடும்பம், நமது ஜாதி, நமது ஊர்,……..,மனிதன்) இருந்து தான் பிரச்சனையை அனுகுவார்களே ஒழிய, Outer circle-இல் (மனிதன், நமது நாடு, நமது மாநிலம்,……,நான்) இருந்து பிரச்சனையை அனுகுவது என்பது ஏட்டுச்சுரைக்காய்(கீ-போர்டு கீரை என்று வைத்தால் சமகாலத்திற்க்கு மிகப்பொறுத்தமாய் இருக்கும்). இந்த அளவிற்க்கு மனிதன் பக்குவப்படவில்லை……. பக்குவப்படவே…….. மாட்டான் என்பதே நிஜம்.
ஒரு உதாரணம்:
போர் நிறுத்தத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தினர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை அனைத்து ஊடகங்களும் மக்களுக்கு சரியாக கொண்டு சேர்த்தன (டி.ஆர்.பி ரேட்டிங்- சர்க்குலேஷனுக்காகத்தான் என்பது வேறு விஷயம்), உண்ணாவிரதம் முடிந்த ஓரிரு நாளில் டாக்டர்.கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதைத்தொடர்ந்து தென்மாவட்டங்களில் (மதுரை,விருதுநகர்,தேனி) லேசான சலசலப்பு. சாலை மறியலால் நான் பயனம் சென்ற பஸ் நடுவழியில் தாக்கப்படவுடன் சுமார் 5கிலோமீட்டர் தூரம் மதுரை-திருவில்லிபுத்தூர் சாலையில் சகபயனிகளுடன் பாதயாத்திரை சென்றபோது காதில் கேட்டது ” இங்ன உள்ள பிரச்சனையே தீக்க முடியல….. இதுல எலங்க பிரச்சனைய வேற தீத்து வய்க்கனுமா? இவிய்ங்களுக்கு வேற வேல இல்ல”.
இது தான் தேர்தலில் பிரதிபலித்தது.
சே சே!
அப்படியெல்லாம் சொல்லமுடியாது!
வேணும்னா தமிழக மக்கள் சொரணை இல்லாதவங்கன்னு சொல்லிக்கலாம்!
அருமையான விளக்கம் புரியமாதிரியான எடுத்துகாட்டு நன்றி கிரி
உணர்சிவசப்படாமல் அருமையாக எழுதியுள்ளீர்கள்.
ஊடகங்கள் காசுகொடுத்து வாங்குபவனுக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டன. எல்லாம் வியாபாரமாகிவிட்டது.
பிரபாகரன் மரணம் என்ற செய்தியை வெளியிட்ட ஹெட்லைன்ஸ் டுடே எனும் சானல் worlds bloodiest terrorist velupillai prabakaran is shot to death அப்டின்னு சொல்றான். தீவிரவாதிகளுக்கும் , போராளிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவன் எல்லாம் செய்தி சொன்னா எப்டியிருக்கும்?
மும்பை தாக்குதல் தீவிரவாதி என்ன பேஸ்ட் கேட்டான், என்ன பேப்பர் கேட்டான், என்ன சாப்பாடு கேட்டான்னு விலாவரிய செய்தி வெளியிடுற நம்ம நாட்டு ஊடகங்கள், ஈழத்துல ஒரு இனம் உசுற காப்பாத்துங்கடான்னு சர்வதேசத்தையும் பார்த்து கேட்டத எவனாலயும் எழுத முடியலை.
அதான் தமிழனோட நிலை.
வியன்னால அவனுங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டு செத்ததுக்கு ஊர கொளுத்தி, ட்ரெயின கொளுத்தி எரியவிட்டானுங்க. ஆனா நாம என்ன தமிழ்நாட்ட கொளுத்தவா சொன்னோம், குரல் கொடுங்கன்னு தானே சொன்னோம், அதுக்கு ஆள் இல்லாம போச்சுல்ல. அங்க செத்தவன் வயிறெரிஞ்சு சாபம் விட்ருப்பான் கிரி. அது நம்ம மேலயும் இருக்கும்.
//வால்பையன் said…
சே சே!
அப்படியெல்லாம் சொல்லமுடியாது!
வேணும்னா தமிழக மக்கள் சொரணை இல்லாதவங்கன்னு சொல்லிக்கலாம்!//
🙂
==================================================
//Suresh said…
அருமையான விளக்கம் புரியமாதிரியான எடுத்துகாட்டு நன்றி கிரி//
🙂
===================================================
//தமிழர்ஸ் – Tamilers said…
வாழ்த்துகள் !
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
அப்படியே தமிழர்ஸின் வோட்டு பட்டையையும் இணைத்துவிட்டால் இன்னும் நிறைய வோட்டுகள் கிடைக்கும்//
நன்றி தமிழர்ஸ்
====================================================
//ஜோசப் பால்ராஜ் said…
ஊடகங்கள் காசுகொடுத்து வாங்குபவனுக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டன//
உண்மை
//நாம என்ன தமிழ்நாட்ட கொளுத்தவா சொன்னோம், குரல் கொடுங்கன்னு தானே சொன்னோம், அதுக்கு ஆள் இல்லாம போச்சுல்ல. அங்க செத்தவன் வயிறெரிஞ்சு சாபம் விட்ருப்பான் கிரி. அது நம்ம மேலயும் இருக்கும்.//
வருத்தமா தான் இருக்கு ஜோசப் பால்ராஜ்