ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோவில் | அடையார்

2
Padmanaba swami temple ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோவில்

ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோவிலை என்னமோ நினைத்துட்டு போனேன் ஆனால், கோவில் செம்மையா இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் பிடித்து விட்டது.

ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி

விஷ்ணு படுத்துக் கொண்டே இருக்கும் நிலை. கோவில் வடிவமைப்பு, விளக்கு அமைப்பு எல்லாமே ரொம்ப அழகாக உள்ளது.

பெருமாள் கோவில் என்றாலே ஒரு சொதப்பல் நினைவுக்கு வரும். எனக்குக் கடவுள் பிடிக்கும் ஆனால், மற்றவர்களைப் போல விவரமா எதுவும் தெரியாது.

எங்க ஊர் அருகே தனியார் பராமரிக்கும் “தென் திருப்பதி” கோவிலுக்குச் சென்று அங்கே அவர்கள் செய்த கட்டுப்பாடுகளை எல்லாம் பார்த்துக் கடுப்பாகி, இனி இந்தப் பக்கமே எட்டிப்பார்க்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இது பற்றி “பாருங்க.. திருநீர் கூடக் கொடுக்கவில்லை” என்று எழுதி இருந்தேன். ஒருவர் “பெருமாள் கோவில்ல திருநீரா?!” என்று கேட்டு இருந்தார்.

அப்பத் தான்தெரியும் பெருமாள் கோவிலில் திருநீர் கொடுக்க மாட்டார்கள் என  😀 .

Readகடுப்பாக்கிய “தென் திருப்பதி” ஊழியர்கள்

எனவே, பெருமாள் கோவில் சென்றால் இச்சம்பவம் நினைவுக்கு வரும்.

குங்குமமும், துளசியும் கொடுத்தார்கள் வாங்கிக்கொண்டேன். உள்ளே திறன்பேசியை பயன்படுத்த அனுமதியில்லை என்பதால், நிழற்படம் எடுக்க முடியவில்லை.

நுழையும் போது இடது புறம் பிள்ளையார் கோவிலும், வலது புறம் நவக்கிரகமும் உள்ளது. கோவில் திறந்தவுடனே ஓரளவுக்குக் கூட்டம் வந்தது வியப்பளித்தது.

ஞாயிறு என்பதால் இருக்கலாம். காலணியை விட இலவச இடமும் உள்ளது.

அடையார் (Signal) பகுதிக்குச் செல்லும் வேலை இருப்பவர்கள், இங்கேயும் ஒரு எட்டு சென்று வாருங்கள். ரொம்ப அழகான கோவில். உங்களுக்கும் பிடிக்கும்!

2 COMMENTS

 1. என்ன கிரி, UKG கே தனியான பிறந்த நாள் விழாவா??? ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.. இந்த பிறந்த நாள் கலாச்சாரம் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத ஒன்று.. பையன் பள்ளி செல்வதால் மாதத்தில் ரெண்டு, மூன்று சக பள்ளி மாணவனுக்கு பிறந்த நாள் வருவதால், பள்ளியில் இதை தனியாக கொண்டாடுவதால் பையனின் மனதில் பதிந்து விடுகிறது.. அவனுக்கும் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது..(அம்மாவின் சப்போர்ட்டும் உண்டு) வீட்டின் அருகில் வசிப்பவர்களின் அழைப்பை 95 % தவிர்த்து விடுவேன்.. என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஓரே ஜீவன் நண்பர் சக்தி!!! அவர் பிறந்த நாள் என் நினைவில் கூட இல்லை…

  தென்திருப்பதிக்கு ஒரு முறை நண்பன் சக்தியுடன் சென்றுள்ளேன்.. நாங்கள் தங்கி இருந்த பகுதியிலிருந்து கொஞ்சம் தூரம்.. வழி கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமமாக இருந்ததாக நியாபகம்.. 12 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்..

  செல்லும் போது கை வீசிட்டு போக முடியாது : இதற்கு தான் எங்கும் செல்வதில்லை.. அழைப்பு வந்தாலும் எப்படியும் தவிர்த்து விடுவேன்..(சில நேரங்களில் மனைவியுடன் கம்பு சுத்த வேண்டி இருக்கும்..) பகிர்வுக்கு நன்றி கிரி.

 2. “பள்ளியில் இதை தனியாக கொண்டாடுவதால் பையனின் மனதில் பதிந்து விடுகிறது.. அவனுக்கும் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது..(அம்மாவின் சப்போர்ட்டும் உண்டு) ”

  இது மறுக்க முடியாத உண்மை.

  எங்க வீட்டில் நாங்கள் மட்டும் கொண்டாடி கொள்வோம். எனக்கு கேக் வெட்டுவதெல்லாம் விருப்பமில்லை, இருப்பினும் நம்ம கட்டுப்பாடை பசங்க மேல திணிப்பது சரியில்லை என்று இதற்கு மட்டும் எதுவும் சொல்வதில்லை.

  மற்றவர்களை அழைப்பதில்லை.

  நீங்க கடந்த முறை எழுதிய பதிவிலேயே தென் திருப்பதி சென்றது பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.

  “சில நேரங்களில் மனைவியுடன் கம்பு சுத்த வேண்டி இருக்கும்”

  🙂 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here