Dia (2020 கன்னடம்) மூன்று க்ளைமாக்ஸ்

2
Dia

ழக்கமான காதலை, ஆயிரம் முறை கூறப்பட்ட கதையை மீண்டும் ஒரு முறை காதல் படமாகக் கொடுத்துள்ளார்கள், அது தான் Dia. Image Credit

Dia

Dia என்ற பெண் சக கல்லூரி மாணவர் ரோஹித்தை ஒரு தலையாகக் காதலிக்கிறார். காதலை சொல்லும் முன்பே ரோஹித் வேறு நாடு சென்று விட, காதல் தடைபடுகிறது.

மும்பை செல்லும் Dia அங்கே திரும்ப ரோஹித்தை காண, என்ன ஆகிறது? என்பது ஒரு கதை.

இரண்டாம் பாதியில் ஆதியுடனான நட்பு என்று இன்னொரு கதை. இறுதியில் என்ன ஆகிறது என்பதே படத்தின் முடிவு..

ஒரு படத்துக்கு இதுவரை எத்தனை க்ளைமாக்ஸ் கேள்விப்பட்டு இருப்பீங்க?! ஒன்று தானே! இதுல மூன்று க்ளைமாக்ஸ் 🙂 .

முதல் க்ளைமாக்ஸ்ல முடித்து இருக்கலாம், சரி இரண்டாவது ஓகே.. அதையும் தாண்டி மூன்றாவதில் வந்து நிற்கிறது.

தியா வழக்கமான நாயகி போல இல்லாமல், சராசரி கல்லூரி பெண்ணாக இருப்பது படத்துக்கு இயல்புத்தன்மையைக் கொடுக்கிறது. பசங்க தான் காதலை சொல்லத்தயங்கிட்டு இருப்பாங்க, இதுல அப்படியே எதிராக 🙂 .

பொண்ணுக காதலை சொல்லுவாரா என்று ஏங்குவது, சொன்னால் பிகு செய்வது என்று ரசிக்கக்கூடிய உளவியல்.

ரோஹித்துக்கு நடிப்பதற்கான வாய்ப்புக் குறைவு. எனவே, மனதில் ஓரமாக வந்து போகிறார்.

பிருத்வி

இரண்டாம் பாதியில் ஆதியாக வரும் பிருத்வி அட்டகாசமான நடிப்பு. இக்கதாப்பாத்திரத்துக்கு என்றே அளவெடுத்துச் செய்தது போல உள்ளார்.

ரொம்பக் கண்ணியமாக நடந்து கொள்வதும், தியா ஸ்வரூப்பை ‘தியா சூப்’ என்று கலாய்ப்பதில் இருந்து நம்மைக் கவர்ந்து கொண்டே உள்ளார்.

இருவரும் பைக் பயணம், ரயிலில் செல்வதெல்லாம் கவிதையாக இருக்கும்.

ஆதி அம்மாவாக வரும் லக்கி பாந்தமான நடிப்பு. ஆதிக்கும் இவருக்கும் செம்ம பொருத்தம்.

உண்மையான அம்மா மகன் போலவே உள்ளார்கள், அப்படியொரு அன்பு, மரியாதை. இருவருமே மிகை நடிப்பில்லை.

மற்றவருக்கு அறிவுரை கூறுவது எளிது ஆனால், அதே நிலை நமக்கு வரும் போது எளிதல்ல என்பதை இப்படம் உணர்த்துகிறது.

ஆதியின் நடிப்பை கொஞ்ச நாளைக்கு மறக்க முடியாது, ஏமாற்றத்தை ஏற்றுக்கொண்டு குழப்பமான தியாக்குத் தைரியம் கூறும் போதும் அம்மாவிடம் ஏமாற்றத்தைக் கூறும் போதும் மனதைத் தொடுகிறார்.

இறுதியில் அனைவரையும் கலங்க வைத்து விடுவார்.

காதல் படம் ஆனால், பாடல்கள் இல்லை 🙂 .

பின்னணி இசையும் ஆர்ப்பாட்டமில்லாத ஒளிப்பதிவும் படத்துக்குக் கூடுதல் பலம்.

ஏற்கனவே, பலமுறை அனைத்து மொழிகளிலும் எடுக்கப்பட்ட கதை என்பது மட்டுமே படத்துக்குப் பலவீனம்.

ஆனால், எத்தனை முறை எடுத்தாலும் கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் ரசிக்க நபர்கள் இருக்கிறார்கள்.

முன்னரே கூறியபடி முதல் இரு க்ளைமாக்ஸில் முடிக்க வாய்ப்பிருந்தும் மூன்றாவதுக்குச் சென்று உள்ளார் இயக்குநர். தேவையில்லை என்று கூற முடியாது ஆனால், தவிர்த்து இருக்கலாம்.

குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு நட்டம் இல்லாமல் ஓடி விமர்சகர்களின் பாராட்டையும் மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.

பரிந்துரைத்தது கோபி. Amazon Prime ல் உள்ளது.

Directed by K S Ashoka
Produced by D Krishna Chaitanya
Written by K S Ashoka
Story by K S Ashoka
Starring Pruthvi Ambaar, Dheekshith, Kushee
Music by B. Ajaneesh Loknath
Cinematography Vishal Vittal, Sourabh Waghmare
Edited by Naveen Raj
Release date 7 February 2020
Running time 136 minutes
Country India
Language Kannada

தொடர்புடைய விமர்சனங்கள் 

Lucia [2013] நான் பார்த்த முதல் கன்னடத் திரைப்படம்

கே ஜி எஃப் [2018] முதல் அத்தியாயம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி,, எனக்கு வயசாகி போசிச்சா என்னனு தெரியல ??? நமக்கு இந்த காதல் படமே செட் ஆகிறது இல்ல .. காதல் பாடல்கள் கேட்க பிடிக்கும் … ஆனால் படங்கள் கேள்வி குறியே???? முன்பு பிடித்த பல விஷியங்கள் தற்போது சுத்தமாக பிடிப்பதில்லை ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here