புகைப்பழக்கம் | ஆபத்து மட்டுமே!

7
புகைப்பழக்கம் Happy Family

டந்த முறை ஊருக்குச் சென்று இருந்த போது தெரிந்தவர் ஒருவரின் அண்ணன் இறப்புக்கு சென்று இருந்தோம். Image Credit

இறந்தவர் விலங்குகளுக்கான மருத்துவர், மிகவும் கைராசிக்காரர் அதனால் கிராம மக்களிடையே அதிகம் விரும்பப்பட்டவர்.

புகைப்பழக்கம்

எப்படி இறந்தார் என்று துக்கம் விசாரிக்கும் போது “புகைக்கும் பழக்கத்தால், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்” என்று கூறி மேலும் விளக்கினார்.

குடும்பத்தினர் எவ்வளவோ கூறியும், பிரச்சனை ஏற்பட்டால் நிகோடினை மட்டும் அறுவை சிகிச்சை செய்து சரியாக்கி விடலாம்!! என்று கூறி புகைக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து வந்தார்.

அவருக்கு வயது 52 மட்டுமே! (இவர் போலக் கதை 35 வயதில் நடந்தவருக்கு இருக்கிறது).

ஏற்கனவே, ஒருமுறை மாரடைப்பு வந்த போது எச்சரிக்கையாகாமல் தொடர்ந்ததால், இந்தமுறை ஒன்றும் செய்ய முடியவில்லை.

எப்படியாவது என்னைக் காப்பாத்திடுங்க இனி நான் புகைக்க மாட்டேன்” என்று கையைப் பிடித்துக்கொண்டு கதறினாராம்.

கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பது போலாகி விட்டது. காலம் கடந்து விட்டது.

நாட்கள் வேகமாக எண்ணப்படுகிறது

புகைப்பதை நிறுத்தாமல் ஏதோதோ காரணம் கூறித் தள்ளிபோட்டுக்கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கும் ஒன்று கூற விரும்புகிறேன்.

உங்கள் நாட்கள் வேகமாக எண்ணப்படுகிறது.

உணரும் போது காலம் கடந்த செயலாகத் தான் இருக்கப் போகிறது.

என்னைப் போலக் கூறுபவர்கள் வார்த்தைகளைக் கேட்கும் போது சலிப்பாகவும், இவனுங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லை என்பது போலவும் தான் தோன்றும்.

புகைப்பதற்கு செலவளிக்கும் பணத்தை சேமித்து இருந்தால் Ferrari Car வாங்கி இருக்கலாம் என்பது போன்ற மொக்கை நகைச்சுவைகளைக் கூற விரும்பவில்லை.

இதனால் உங்கள் உடல்நலம் கெடுகிறது என்பதையே முன்னிறுத்துகிறேன்.

அலுவலக நண்பர்கள்

அலுவலகத்தில் மூன்று நண்பர்கள் தொடர்ச்சியாகப் புகைத்து வந்தார்கள்.

அதில் வேறு மாநில நபர் ஒருவன். அவன் கூடத் தினமும் தேனீர் இடைவேளையில் புகைப்பதால் ஏற்படும் இழப்புகளைக் கூறிக்கொண்டே இருப்பேன்.

பல வருடங்களுக்குப் பிறகு கடந்த மாதம் புகைப்பதை நிறுத்தி விட்டான். “நான் புகைப்பதை நிறுத்தியதற்கு நீ 80% மும் என்னோட பையன் 20% மும் காரணமாக இருப்பீர்கள்” என்று கூறினான், மனநிறைவாக இருந்தது.

8 வருடங்கள் புகைப்பதை நிறுத்தியவர் கூட மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார் என்பதால், இவர்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருப்பதில்லை, தொடர்ந்தால் மகிழ்ச்சி.

மருத்துவர், “இனி புகைத்தால்.. நீ ஊத மாட்டே.. உனக்குத் தான் (சங்கு) ஊதுவார்கள்” என்று கூறும் நாள் வரை பலர் நிறுத்த மாட்டார்கள்.

இன்னும் இரு நண்பர்களிடமும் கூறிக்கொண்டு இருக்கிறேன் ஆனால், மண்டைய மண்டைய ஆட்டுகிறார்களே தவிர நிறுத்த மாட்டேன் என்கிறார்கள்.

பிற்சேர்க்கை – ஒருவர் புகைப்பதை நிறுத்தி விட்டார். இன்னும் ஒருவர் மட்டுமே தொடர்கிறார்.

பொண்ணு கிடைக்காது

தற்போதெல்லாம் திருமணத்துக்குப் பெண் கிடைப்பதில்லை. பெண் வீட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள்.

Resume எல்லாம் கேட்கிறார்களாம் அதோடு உடற்தகுதி சான்றிதழும் கொடுக்க வேண்டும்.

புகைப்பழக்கம் காரணமாக ஆண்மைக் குறைவு என்றால் அதோகதி தான்.

கடைசிவரைக்கும் Single dawww தான். பார்த்துக்கோங்க..!

Readபெண் தேடும் படலம்!

கெடுப்பது உடலை மட்டுமல்ல குடும்பத்தின் எதிர்காலத்தையும்

புகைப்பவர்கள், அவர்களை மட்டும் கெடுத்துக்கொள்வதில்லை அவர்களது குடும்பத்தையும் தான். ஒருவேளை இவர்களுக்கு ஏதாவது ஆனால், குடும்பத்தை நினைத்துப் பார்த்தார்களா?!

பின்னால் இதன் காரணமாகப் பெரும் மருத்துவச் செலவு வந்தால், எப்படிச் சமாளிப்பது? சேமித்த பணம் அனைத்தும் இதற்கே சரியாகி விடும்.

பின் எப்படி வாழ்க்கையைத் தொடர்வது?!

திமிர் அன்றி வேறில்லை

பணம் கொடுத்து உடலைக் கெடுத்துக் கொள்ளும் கிறுக்கன்கள் யார் என்றால், யார் கூறியும் கேட்காது புகைக்கும் இந்த அடி முட்டாள்கள் தான்.

குடும்பத்தின் மீது அக்கறை இருந்தால், அனைவரும் அவ்வளவு கூறியும் தெரிந்தே படு குழியில் விழுவார்களா?! அப்படி விழுந்தால் “திமிர்” அன்றி வேறு என்ன?

எதிர்பாராமல் நடக்கும் பிரச்சனைகளை ஒன்றும் செய்ய முடியாது ஆனால், இது போலத் தெரிந்தே விழுபவர்களைக் கொழுப்பு என்பதைத் தவிர வேறில்லை.

இளமை இருக்கும் தைரியத்தில், குடும்பத்தை மனதில் நினைக்காமல் புகைப்பழக்கம் தொடர்பவர்கள் அனைவருக்கும் அன்பாக ஒன்று கூற விரும்புகிறேன்.

த்தா.. நீங்கெல்லாம் அடி வாங்குனாத்தான்டா திருந்துவீங்க!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. கிரி, நீங்கள் புகையை மட்டும் குறிப்பிடுளீர்கள். புகையை போல் கொடுமையான மற்றொன்று மது. சந்தோசமாக இருந்தாலும் சரக்கு, துக்கமாக இருந்தாலும் சரக்கு. அவர்களுக்கு புகைக்கவும், குடிக்கவும் ஏதோ ஒரு காரணம் வேண்டும்.

  கல்லூரி நாட்களில் மிக குறைவான நண்பர்களே இந்த பழக்கங்களை தவிர்த்து வந்தோம். பல ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் போது நிலைமை தலைகீழ். அன்று அதிலே மூழ்கி கிடைத்தவர்கள் இன்று எல்லா பழக்கத்தையும் விட்டு விலகிவிட்டனர். அன்று எந்த பழக்கமும் இல்லாதவர்கள் இன்று எல்லாவற்றிலும் மூழ்கி கிடக்கின்றனர். இதை நேரடியாக காணும் போது மனது ரொம்ப வலித்தது.

  கொடுமையான விஷியம் இவர்களின் குடும்பம் தான். குடும்ப தலைவனின் இறப்புக்கு பின் அவர்களின் நிலைமை சொல்ல வேண்டியதில்லை. 41 வயதில்என்னுடைய தந்தையின் மரணமும் தீய பழக்கத்தில் தான் . நான் 7 வகுப்பு படிக்கும் (1992 ) போது அவர் இறந்ததால், இன்று வரை அவர் இல்லாதது குடும்பத்தில் ஒரு வெற்றிடமே!!!! அந்த வலிக்கு எந்த நிவாரணமும் இல்லை. எச்சரித்தமைக்கு நன்றி கிரி.

 2. ‘நிறையபேர் ‘மதுப்பழக்கம்’ மோசம் என்று சொல்கின்றனர் (புகையைவிட). ஆனால் என்னைப் பொறுத்தவரை, சிகரெட் பிடிப்பவன் மிக மிக மோசமானவன். அவன் தான் மட்டும் புகை பிடித்துச் செத்துப்போனால் கவலை இல்லை. போய்த்தொலையறான் பாவம் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் அவன் விடுற புகையினால அப்பாவியான நாங்களும் பாதிக்கப்படுகிறோமே. அதிகாலைல நடைப் பயிற்சிக்குப் போகலாம்னா, வழியெங்கும் சிகரெட் குடிக்கிற கொலைகாரர்கள் தென்படுகின்றனர். ஒருவன் மது குடிப்பதால், அவனும், அவனுக்குத் தெரிந்து அவன் குடும்பமும்தான் அவதிப்படுகின்றனர். இது தெரிந்தே செய்யும் செயல். அதனால் பிற அப்பாவிகள் பாதிக்கப்படுவதில்லை. புகைப் பழக்கத்தால் பிற அப்பாவிகள் (அதாவது குடி பக்கமே ஒதுங்காத என்னைப்போன்ற) பாதிக்கப்படுவதால்தான், புகை பிடிப்பவர்மீது எனக்குத் தாங்கவொண்ணா வெறுப்பு.

 3. நான் திரு கிரி சொன்ன கருத்தை சப்போர்ட் பண்றேன் , காரணம் குடிக்க இடம் பொருள் காலம் எல்லாம் தேவை படுது, ஆஃபீசிலே வேலை செயறவங்க எல்லாம் பகலில் குடிக்க மாடங்கா, ஆனால் சிகெரட்ட் அப்படி அல்ல, அது ரொம்ப சுலபமா ஆபீஸ் வாசல் பெட்டி கடையில் கிடைக்குது , மற்றும் 5 நிமிடம் போதும், இது போன்ற காரணங்களால் cigerette ரொம்ப சுலபமாக அடிமை ஆகி விடுகிறார்கள்

 4. சிறு வயதில் எல்லோரை போலவும் நானும் அம்மாவிடம் கெட்ட பழக்கத்தை தொடமாட்டேன் என்று சத்தியம் செய்தேன்.. அதில் குறிப்பாக புகை பிடிப்பது. இப்போது குடிப்பது சோசியல் ஆகிவிட்டது, வலுக்கட்டாயம்க
  இல்லைன்னாலும் வேறு வழியில்லாமல்… கம்பெனி மேனேஜர், சப்ளையர்ஸ் மீட்டிங் – ஆனால் இப்பவும் அட்லீஸ்ட் இந்த சத்தியத்தையாவது காப்பாத்துவோம்ன்னு இன்று வரை புகை பிடித்ததில்லை.

 5. புகை பழக்கம் சிறுவயதில் இருந்தே எனக்கு அதிக பழக்கம் ஆனாலும் இன்று வரை நீறுத்திய பாடூ நண்பர்கள் உறவினர்கள் இவர்களிடம் எல்லாம் அசிங்கபடூவது இந்த புகைப்பிடிப்பவர்களின் வாடிக்கையாக உள்ளது..அதுபோக புகை பழக்கம் கெட்ட சகவாசம் ஏற்படூத்தி புகைபிடிப்பவரின் குடூம்பத்தை நாசம் செய்கிறது ..
  மேலும் கொடூமை என்றால் மனநலம் பாதிக்கபட்டூ சித்தபிரம்மை பிடித்து கிருக்கன் ஆக்கிவிடூம் போல இந்த புகைப்பழக்கம் எனவே புகை பழக்கம்
  உடனே நீறுத்தாவிடில் நம்குடூம்பம் நம் நாடூ எல்லாம் நாசாமாகபோவது
  உறுதி ..இதை மூதலில் தடூத்தாலே போதும் இளைஞர்கள் எழூச்சி பெற்று விடூவார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here