யுனிவர்சல் ஸ்டுடியோஸ் | சிங்கப்பூர்

3
யுனிவர்சல் ஸ்டுடியோஸ்

விரைவில் இந்தியாக்கே கிளம்ப இருப்பதால், இதுவரை செல்லாத இடமான “யுனிவர்சல் ஸ்டுடியோஸ்” செல்லலாம் என்று நண்பன் பாபுவுடன் சென்றேன்.

யுனிவர்சல் ஸ்டுடியோஸ்

இங்கே போனதும் அட! இதன் அருமை தெரியாம இவ்வளவு வருடங்கள் இருந்து விட்டோமே என்று கடுப்பானது.

கட்டணம் 74$,  “Master” கடனட்டை பயன்படுத்தினால் 10$ குறைவு. கொடுக்கும் பணத்திற்கு முழுமையான திருப்தி கிடைக்கிறது.

Travels நிறுவனங்களில் நுழைவுச் சீட்டு வாங்கினால் 50$ க்கு கூடக் கிடைக்கிறது என்றார்கள். நேரமில்லாததால் நாங்கள் முயற்சிக்கவில்லை.

சென்டோசா

சிங்கப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் சுற்றுலாத்தலம் சென்டோசா.

இங்கே பணத்தைக் கொடுத்து வீண் செய்வதை விட “யுனிவர்சல் ஸ்டுடியோஸ்” வரலாம். புதிதாகச் சிங்கப்பூர் வர நினைப்பவர்கள் சுற்றிப்பார்க்க இங்கே செல்லுங்கள்.

சென்டோசாவில் ஒவ்வொன்றுக்கும் கடுமையான கட்டணம் அதுவும் இல்லாமல் ஒவ்வொன்றுக்கும் ரொம்பத் தொலைவு செல்ல வேண்டும்.

இதுவே நம்மைக் களைப்படையச் செய்து விடும். குழந்தைகளை அழைத்து வந்தால் மிகச் சிரமம்.

ஒவ்வொரு முக்கிய இடத்துக்கும் 25- 30$ குறைந்தது வசூலித்து விடுவார்கள்.

யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஒரே கட்டணம். விளையாட்டுகளுக்கு எத்தனை முறை வேண்டும் என்றாலும் செல்லலாம். கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

விளையாட்டுகளும் அருகருகே உள்ளது வசதி.

Transformers, Mummy, Roller coaster போன்றவை சரவெடியாக உள்ளது.

Transformers

நாங்கள் Transformers மூன்று முறை சென்றோம். நாமே சண்டை போடுவது போலவும் கீழே விழுவது போலவும் 3D காட்சிகள் அசரடிக்கிறது.

ரத்த அழுத்தம், தலைசுற்றல், வாந்தி பிரச்சனை இருப்பவர்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகள் கொண்டாடுவார்கள்.

குழந்தைகள் ஆறு வயதுக்கு மேலே இருந்தால் மட்டுமே செல்லுங்கள். அதோடு அவர்கள் குறிப்பிடும் உயரம் இருக்க வேண்டும் இல்லையென்றால் அனுமதிக்க மாட்டார்கள்.

Mummy யில் இருட்டினுள் வாகனம் பின்னாடி வேகமாக வரும் பாருங்க… செம. ஜுராசிக் பார்க் பகுதி, 4D திரையரங்கம் போன்றவையும் நன்றாக இருந்தது.

4D யில் நம் இருக்கை அருகே தண்ணீர் தெறிக்கும், காற்று வீசும், இருக்கை குலுங்கும். வித்யாசமான அனுபவம்.

மேலே உள்ள படம் Transformer ல் எடுத்தது. அங்கே நீல மற்றும் சிவப்பு சைரன் ஒளி இருக்கும். வித்யாசமாக இருந்ததால்… நானும் பாபுவும் 🙂 .

இது சைரன் விளக்குப் பகுதி, “சிவப்பு விளக்குப்” பகுதியல்ல 🙂 .

Water World புகைமூட்டம் (Haze) காரணமாக ரத்துச் செய்து விட்டார்கள். ஏமாற்றமாகி விட்டது.

எனக்காக வரச் சம்மதித்த பாபுக்கு நன்றி. பாபு வரவில்லையென்றால் தனியாகச் சென்று இருக்க முடியாது. இதன் பிறகு செல்ல நேரமுமில்லை, வாய்ப்புமில்லை.

சிங்கப்பூர் வருகிறவர்கள் “யுனிவர்சல் ஸ்டுடியோஸ்” அவசியம் செல்லவும். வார நாட்களில் செல்லுங்கள் கூட்டமே இருக்காது! விருப்பம் போல விளையாடலாம்.

தொடர்புடைய கட்டுரை

Bye Bye சிங்கப்பூர்

3 COMMENTS

  1. தங்கள் தளம் சிங்கப்பூர் பற்றி அறிய பயனுள்ள தளமாக உள்ளது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  2. சென்டோசா சென்று இருக்கிறேன் தெரிந்து இருந்தால் யுனிவர்ஸல் சென்று இருப்பேன் வாய்ப்பு தவறிவிட்டது. அடுத்த முறை பார்க்க வேண்டும்.

    நீங்களே இவ்வளவு வருடங்களில் இப்பொழுது தான் சென்று உள்ளீர்கள். அனைவரும் சென்டோசா தான் பார்க்க வேண்டிய இடம் என்கிறார்கள் அதை விட இதில் அதிக சுவாரஸ்யம் உள்ளது.

  3. @ரமணி நன்றி

    @பிரகாஷ் அவசியம் சென்று வாருங்கள். சென்டோசாவை விட யுனிவெர்சல் ஸ்டுடியோஸ் லாபகரமானது அதோடு விளையாடவும் வசதியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here