சிங்கப்பூர் சுற்றுலா – 1

11
Singapore trip travel சிங்கப்பூர் சுற்றுலா

 ரில் இருந்து கோடை விடுமுறைக்கு குடும்பத்தினர் வந்து இருப்பதால், வார இறுதியில் சிங்கப்பூர் சுற்றுலா என்று அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறேன்.

சிங்கப்பூர் சுற்றுலா

சுற்றிக் காட்டுவது பிரச்சனையில்லை இவனுக இரண்டு பேரை சமாளிப்பது தான் மிகப்பெரிய வேலையாக இருக்கிறது.

நாங்கள் சென்ற இடங்களைப் பற்றிய தகவல்களைக் கூறுகிறேன்.

பறவைகள் பூங்கா

சிங்கப்பூரில் சுற்றுலா கட்டணங்கள் அதிகம் ஆகி விட்டது போலத் தோன்றுகிறது.

Zoo & Bird Park எல்லாம் குறைந்தது 25 டாலர் நுழைவுக் கட்டணம் வருகிறது [நம்ம பணத்தில் 1200 INR வருகிறது (01-05-2014)]. இணையத்தில் முன்பதிவு செய்தால் 20% தள்ளுபடி, இருப்பினும் இந்தக் கட்டணம் அதிகம் என்பது என்னுடைய கருத்து.

சிங்கப்பூரில் தனியார் அல்லது அரசாங்கம் எதுவாக இருந்தாலும் கட்டணம் அதிகமோ குறைவோ மிகச் சிறப்பாகப் பராமரிப்பார்கள்.

அதைவிட அவர்களுடைய வாடிக்கையாளர் சேவை மிக அருமையாக இருக்கும். மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள்.

பொது மக்களிடையே சில மனக்கசப்புகள் ஏற்பட்டு இருந்தாலும், இது போன்ற இடங்களில், அரசு அலுவலகங்களில் இன்று வரை ஒரு குறையும் கண்டதில்லை.

என்ன கேட்டாலும் புன் சிரிப்புடன் பதில் அளிப்பார்கள்.

பறவைகள் பூங்கா மிகச் சிறப்பாக இருந்தாலும், கடந்த முறை மலேசியா “லங்காவி” யில் சென்ற பறவைகள் பூங்காவுடன் ஒப்பிடும் போது இது மனநிறைவைத் தரவில்லை.

லங்காவியில் மிக அருமையாக இருந்தது.

கூண்டுப்பறவைகள்

பல பறவைகள் கூண்டில் அடைக்கப்படவே இல்லை ஆனாலும், அவை எங்கும் பறந்து செல்லவில்லை.

ரொம்ப சுந்ததிரமாக இருந்தது. இங்கே பறவைகளைக் கூண்டினுள் அடைத்து வைத்து அதை நாம் கும்பல் கும்பலாகப் பார்ப்பது சங்கடமாக இருக்கிறது.

அவற்றின் சுதந்திரத்தை இப்படி கூண்டிற்குள் அடைத்து விட்டார்களே என்று பார்க்கவே பாவமாக இருக்கிறது.

டேய்..  எங்களை உள்ளே வைத்துப் பூட்டி விட்டு.. இப்படி பார்த்துட்டே போறீங்களேடா…!’ என்று நினைக்குமோ 🙂 .

கூண்டுகள் பறவைகளுக்கு அருமையாக மரங்கள் சூழ்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கும், அதோடு உணவுகளும் சரியாகக் கொடுக்கப்படும்.

ட்ராம் (ரயில் போல) உள்ளது. இதற்குத் தனிக் கட்டணம். விருப்பப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் குழந்தைகளைத் தள்ளி வரும் ட்ராலி, தாராளமாக எங்கும் கொண்டு செல்லும் வசதி இங்கேயும் உள்ளதால், சக்கர நாற்காழியில் வருபவர்கள், குழந்தைகள் ட்ராலிகளை தள்ளி வருபவர்களுக்கு எளிது.

இங்கே ஒரு இடத்தில் சாப்பிட அமர்ந்து இருந்த போது தனியாக வந்த குட்டிக் கிளி யுவனை துரத்திக்கொண்டே இருந்தது ஆனால், கொஞ்சம் கூடப் பயப்படவில்லை.

இளங்கிளி பயமறியாது போலப் பின்னர் எங்கள் அனைவரையும் துரத்தியது.

விரலைக் காட்டினால் பயப்பட்டு ஒதுங்காமல் விரலைக் கடிக்கிறது. கடித்ததில் எனக்கு சிறு அளவில் ரத்தமே வந்து விட்டது.

அங்கே அத்தனை பேர் இருந்தும் யுவன் கூடத் தான் விளையாடிக் கொண்டு இருந்தது.

யுவன் பயந்து ஓடுவதைப் பார்த்து வினய் “பயந்தாங்கொள்ளி” என்று கூறி கிளி கிட்டப் போக, திரும்ப இவனைத் துரத்தியதும் “தைரியசாலி” மேசை மேலே ஏறி அடைக்கலமாகி விட்டான் 🙂 .

நான் நிழல்படம் எடுக்க முயற்சிக்கும் போது கொஞ்சமும் பயப்படாமல் தில்லாக நின்று கொண்டு இருக்கிறது.

மேலே இருக்கும் படம் ஜூம் செய்து எடுத்தது என்று நினைக்க வேண்டாம். வெகு அருகிலேயே கேமரா வைத்து எடுத்தேன்.. பயக்காமல் போஸ் கொடுத்தது.

இது காலுக்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருந்ததால், எங்காவது காலில் மிதிபட்டு சட்னி ஆகி விட்டால் என்னாவது என்று கிளம்பி விட்டோம்.

கடைசி வரை இந்தக் கிளி தில்லாக நின்றதை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது.

“நான் தான் உங்கொப்பன்டா நல்ல முத்து பேரன்டா வாடா டேய்!” என்று பாட்டுப் பாடாதது தான் பாக்கி 😀 .

Read: மலேசியா லங்காவி பயணம் – பறவைகள் பூங்கா

விலங்குகள் சரணாலயம்

பறவைகள் பூங்காவை விட கொஞ்சம் கட்டணம் அதிகம். இணையத்தில் முன்பதிவு செய்தால் 20% தள்ளுபடி. 

நாம் முன்பதிவு செய்தால் நமக்கு PDF ல் கட்டணத் தகவல் மின்னஞ்சலுக்கு வந்து விடும்.

பூங்காவினுள் செல்லும் போது நேரடியாகவே இதைக் காட்டினால் போதும் (Phone / Tablet) இதற்காக நாம் பிரிண்ட் எடுக்கத் தேவையில்லை இதைக் காட்டி திரும்பக் கட்டணச் சீட்டு வாங்கவும் தேவையில்லை.

ரொம்ப எளிது.

இங்கேயும் ட்ராம் உள்ளது. ஒரு முறை எடுத்தால் சுற்றிக்கொண்டே இருக்கலாம். பறவைகள் பூங்கா ட்ராம் விட விலங்குகள் சரணாலயம் ட்ராம் சுற்ற வசதியாக உள்ளது.

விலங்குகள்

வெள்ளைப் புலி, சிங்கம், கொரில்லா, ஒட்டகச் சிவிங்கி, நீர் யானை, யானை, குரங்குகள் என்று வழக்கம் போல விலங்குகள் இருக்கின்றன.

இங்கே விலங்குகளுக்கு உணவு கொடுக்கும் நேரம், பறவைகள் விளையாட்டு நேரங்களில், நம் நேரத்தைத் திட்டமிட்டுக்கொண்டால் இவற்றைப் பார்க்க முடியும்.

பறவைகள் விளையாட்டு மற்றும் வெள்ளைக்கரடி உணவு உண்ணும் நேரத்தில் சரியாக இருந்தோம்.

விலங்குகளை நன்றாகப் பராமரிக்கிறார்கள், வாடிக்கையாளர் சேவை நன்றாக இருக்கிறது என்பதைத் தவிர புதுமையாகக் கூற எதுவுமில்லை.

படகுச் சவாரி

சிங்கப்பூரில் பல இடங்களில் இருந்தாலும் நாங்கள் சென்றது Merlion Park.

சிங்கப்பூர் என்றால், ஒரு சிங்கத்தின் வாயில் இருந்து தண்ணீர் வருவது போல ஒரு படத்தை நீங்கள் பார்த்து இருப்பீர்கள், அந்த இடம் தான் இது.

கொஞ்ச மாதங்கள் முன்பு பராமரிப்புப் பணி நடைபெற்றதால் மூடி வைத்து இருந்தார்கள் தற்போது சிங்கத்தின் வாயைத் திறந்து விட்டார்கள் 🙂 .

இங்கே படகு ஏறினால் 45 நிமிடம் அருகே உள்ள இடங்களைச் சுற்றி விட்டுத் திரும்ப இங்கேயே வந்து விடும்.

இதில் செல்லச் சரியான நேரம் மாலை 6.45. பகல் இரவு இரு நேரங்களிலும் இந்த 45 நிமிடத்தில் கழிக்கலாம். சிங்கப்பூரில் இரவு 7 – 7.15 மணி வரை வெளிச்சமாகத் தான் இருக்கும்.

படகு ஏறும் இடத்தின் எதிரே உள்ளே Marina Bay Sands என்ற கட்டிடத்தின் மீது இருந்து லேசர் ஒளி நிகழ்ச்சி நடைபெறும்.

இதைக் காண நீங்கள் இங்கே இரவு 8 மணிக்கு இருக்க வேண்டும். எனவே 6.45 க்கு கிளம்பினால் படகு 7.30 க்கு திரும்ப இதே இடம் வரும்.

அரை மணி நேரம் அங்கேயே சுற்றிவிட்டு 8 மணிக்குப் பார்க்கச் சரியாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரை

சிங்கப்பூர் சுற்றுலா – 2

11 COMMENTS

  1. எங்களுக்கும் சேர்த்து சிங்கப்பூர சுத்தி காட்டிடீங்க 🙂 . குட்டீஸ் ரெண்டும் ரொம்ப அமைதியா தானே இருக்காங்க..இவங்களயா வாலுன்னு சொல்றீங்க?!! 🙂

  2. கிரி… குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என்றுமே மகிழ்வான ஒன்று.. சிங்க குட்டிங்க போட்டோவையும், நீங்க சொல்ற சம்பவத்தையும் வச்சி பார்த்த (இது உலகமகா நடிப்புடா சாமி!!!) இந்த வசனம் தான் நியாபகத்துக்கு வருது… பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..

  3. சூப்பர் கிரி.. இந்த கார்டூன் சேனல் மட்டும் இல்லைனா இன்னும் நெறைய கேள்விகளை நீங்க சந்திக்க வேண்டி வந்து இருக்கும். 🙂
    லங்காவி பறவைகள் பூங்கா வும் கொஞ்சம் காசு அதிகம் னு கேள்வி பட்டேன்.

  4. அழகான பகிர்வுக்கு நன்றி கிரி.. மவுன சிங் பேச நினைத்தாலும் மம்மி அனுமதிப்பாரா என்று தெரியவில்லை . அப்புறம் அந்த கிளியை அருகில் வைத்து புகைப்படம் எடுத்த போது தான் உங்கள் கையை கடித்ததோ?

  5. எனக்கென்னமோ வினய்ய விட யுவன்தான் சுட்டிய வருவான் போல தெரியுது 🙂
    எப்போவும் போல நல்ல பதிவு. (என்ன குறைய சுட்டிக்காடலாம்னு நிறைய தேடுனேன், கிடைக்கல கிரி)

  6. நல்ல பதிவு.

    எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். கூகிள் மற்றும் இதர வெப்சைட் களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? நாம் பார்க்கும் ஒவ்வொரு வெப்சைட்கும் நமது ISP provider பணம் கட்டுவாங்களா? நாம் இன்டர்நெட் dataku ISPku கட்டும் பணம் யாருக்கு போகிறது? இன்டர்நெட்டில் படம் மற்றும் பாட்டு upload பண்றவங்களுக்கு என்ன லாபம்?

    நீங்கள் ப்ரீயான பிறகு இதை பற்றி ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்.

  7. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @அகிலா @ யாசின் இவனுக இரண்டு பேரை எடுத்த நிழல் படங்களில் இது மட்டுமே ஒழுங்காக இருக்கிறது. இதை எடுக்க நான் பட்ட பாடு..

    @அரிகரன் லங்காவி பறவைகள் பூங்கா கட்டணம் அதிகம் தான்.. ஆனால், இங்கு விட அங்கு நன்றாக இருக்கிறது.

    @சரத் கடி வாங்கிய பிறகு எடுத்த படம் 🙂

    @கௌரிஷங்கர் பொதுவா இரண்டாவது குழந்தை சுட்டியாக இருக்கும்.. எனவே வாய்ப்புள்ளது.

    @முத்து உங்க அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் “விளம்பர வருமானம்” இந்த உலகில் இலவசம் சேவை என்று எதுவுமில்லை.. எதன் பின்னும் ஒரு காரணம் இருக்கும்.

  8. வணக்கம்,

    நல்ல பயனுள்ள தகவல். சிங்கபூர் செல்ல்வோர்க்கு நன்கு உபயோகமாக இருக்கும்.

    நன்றி,
    ரவிச்சந்திரன்
    சென்னை

  9. துரு துரு னு இருந்தா மட்டும் தான் குழந்தைங்க நல்லா இருப்பாங்க …வினை யுவன் 2 பேரும் சூப்பர்.. நீங்க தான் அவங்கள சமாளிக்க கிளாஸ் போகணும் னு நினைக்றேன் அண்ணா…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here