Duck & Hippo Tour
சிங்கப்பூரின் முக்கிய இடங்களைப் பேருந்தின் மூலம் சுற்றிப் பார்க்கும் வசதி இது. தற்போது இதன் ஒரு நாள் கட்டணத்தை 27$ ல் இருந்து 33$ ஆக உயர்த்தி விட்டார்கள்.
இது போல வேறு சில பேருந்துகளும் இதை விடக் குறைவான கட்டணத்தில் உள்ளன ஆனால், இதில் பேருந்துகள் எண்ணிக்கை அதிகம்.
நாம் பார்க்க வேண்டிய இடத்தில் இறங்கி சுற்றிவிட்டு அடுத்து வரும் பேருந்தில் ஏறிச் செல்லலாம் (20 நிமிட இடைவெளியில் பேருந்துகள் வந்து கொண்டு இருக்கும்).
வினய்க்கு மாடிப் பேருந்தில் செல்வது பிடித்தமானது என்பதால் இதில் செல்ல முடிவு செய்தேன்.
மேற்பகுதி திறந்த நிலையில் இருக்கும் எனவே, வெய்யில் அதிகம் இல்லாத நாளாக இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம். ஒரு பகுதி தார்பாயால் மூடப்பட்டு இருக்கும்.
எனவே, வெய்யில் அதிகம் இருந்தால், இதில் மாறி அமர்ந்து கொள்ளலாம்.
இந்தப் பயணச்சீட்டு 24 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம் ஆனால், வேலை நேரம் காலை 10 மணி, மாலை நேரம் கவனிக்கவில்லை (9.30 என்று நினைக்கிறேன்).
இந்த ஒரு நாளில் நாம் எத்தனை முறை வேண்டும் என்றாலும் பயணம் செய்து கொள்ளலாம்.
இதில் லிட்டில் இந்தியா, சைனா டவுன், Merlion Park, Clark Quay என்று பல இடங்களைப் பார்க்கலாம். 33$ என்பது அதிகம் என்பது என்னுடைய கருத்து.
எனக்கு பேருந்தில் சுற்றியதில் பிரச்சனையில்லை, இவனுக இரண்டு பேரும் செய்த அட்டகாசத்தில் தான் எனக்கு லைட்டா தலை சுற்றி விட்டது.
முருகன் கோவில் (Tank சாலை)
சிங்கப்பூர் தண்டாயுதபாணி முருகன் கோவில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
நாட்டுக் கோட்டை செட்டியார்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் சிங்கப்பூர் தமிழர்கள் அடையாளமாகவும் விளங்குகிறது.
எனக்கு பிடித்த கோவில் கூட.
கடந்த முறை இங்கு யுவனுக்கு மொட்டை அடிப்பதாக என் மனைவி வேண்டி இருந்ததால், கிருத்திகை அன்று இவனுக்கு மொட்டை போட்டோம்.
மொட்டை போடும் போது ரொம்ப அமைதியாக இருப்பான்.
மொட்டை அடிப்பவரே… என்னங்க அநியாயத்துக்கு அமைதியாக அமர்ந்து இருக்கானே! என்று கேட்பார்.
இங்கேயும் ரொம்ப அமைதியாக அமர்ந்து மொட்டை பாஸ் ஆகி விட்டான்.
எனக்கு அலுவலகம் இருந்ததால் நான் இரண்டு மணி நேரம் அனுமதி பெற்று வந்தேன்.
மனைவியிடம் எப்படி வருவது என்று கூறி இருந்ததால், அவரே இவர்களை நேராக கோவிலுக்கு அழைத்து வந்து விட்டார்.
மனைவி கற்பூரம் மாதிரி கப்புன்னு பற்றிக் கொள்வார் என்பதால், ரொம்ப விளக்க வேண்டிய அவசியமில்லை.
நானும் எங்கே போவது என்றாலும் அவரையே முன்னிறுத்துவேன் காரணம், நாளை எதற்கும் என்னை எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால்.
ஏங்க! இந்தக் கோவில்களில் கொடுக்கப்படும் புளி சாதம், பொங்கல் மட்டும் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கிறது!
நான் வேறு எங்கு சாப்பிட்டாலும் (என் வீடு உட்பட) இது போல சுவை வருவதில்லை. இது எனக்கு புரியாத புதிர்.
சென்டோசா
சிங்கப்பூர் வருபவர்கள் பட்டியலில் இந்த இடம் நிச்சயம் இருக்கும். மிகப் பெரிய தீம் பார்க். இங்கேயும் கட்டணம் ரொம்ப அதிகமாக இருக்கிறது.
முன்பு 67$ க்கு முக்கிய விளையாட்டுகள் உள்ளடக்கி இருந்தது. தற்போது அப்படி ஒன்றும் முக்கிய விளையாட்டுகள் இதில் இல்லை.
அங்கே சென்று தனியே வாங்க வேண்டும். நாங்கள் அங்கேயே சென்று வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டோம்.
புதிதாக Skyline Luge என்ற விளையாட்டு நன்றாக இருந்தது, கட்டணமும் குறைவு.
நானும் வினய் மட்டும் சென்றோம் சிறு குழந்தைகள் செல்ல ஏற்றதல்ல. அவர்கள் திமிறினால் அவ்வளவு உயரத்தில் வைத்து இருக்க சிரமம்.
பிரபலமான ஒரு பகுதியான Underwater world கட்டணம் ஒருவருக்கு 30$ .
நம்மவர்கள் நிறைய பேக்கேஜ் சுற்றுலாவில் வந்து இருந்தார்கள். வயதானவர்கள் கூட்டம் தான் அதிகமாக இருந்தது 🙂 .
VivoCity
இங்கே வினயை மட்டும் அழைத்துச் சென்று இருந்தேன். இது மிகப்பெரிய வணிக வளாகம்.
இங்கே சுற்றி விட்டு, அங்கே பேட்டரியில் ஓடும் கார் இருந்ததால், அதில் கொஞ்ச நேரம் ஓட்டிக்கொண்டு இருந்தான்.
கடைகளுக்கு சென்று மற்றும் அங்கே சில இடங்களில் சுற்றி விட்டு கிளம்பினோம். மேலே இருக்கும் படம் Vivo City யில் எடுத்தது.
இந்த இடத்தில் இருந்து சென்டோசா க்கு செல்லலாம், மோனோ ரயில் அல்லது கேபிள் கார் மூலமாக.
சிங்கப்பூரில் ஒவ்வொரு ரயில் தடத்திற்கும் ஒரு வண்ணம் கொடுத்து இருப்பார்கள். Green line, Red line என்று இருக்கும்.
அதில் கடந்த வருடம் Yellow line என்ற Circle line ரயில் விட்டார்கள். இதில் ஓட்டுனர் கிடையாது.
தானியங்கியாகவே ஓடும் என்பதால், முன் பின் பக்கம் நின்று ரயில் செல்லும் போது பாதாள தடத்தைப் பார்க்கலாம். எனவே குழந்தைகளுக்கு இது ரொம்பப் பிடிக்கும்.
அங்கே நின்று கொண்டு இருந்த போது எடுத்த selfie படம் தான் அருகில் இருப்பது.
இன்னும் சில இடங்கள் இவர்களை சமாளிப்பது சிரமமாக இருந்ததால் செல்ல முடியவில்லை.
Read: சிங்கப்பூர் சுற்றுலா – 1
கொசுறு 1
சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில் புது திரைப்படங்களை விரைவில் வெளியிட்டு விடுவார்கள்.
அதில் “ஜில்லா” மே தின இரவு போட்ட போது வினய் பார்த்துட்டு இருந்தான் (வீரமும் போட்டு விட்டார்கள்).
ஜில்லா முதல் பாதி இவனுக்கு காமெடியாக இருந்ததால் பார்த்துட்டு சிரிச்சுட்டு இருந்தான்.
அதில் விஜய் காவல் அதிகாரி ஆகி “ஜிங்கலமணி” பாடல் வந்ததும் அதைப் பார்த்துட்டு இருந்தவன் அப்பா! ட்ரஸ் நல்லா இருக்குல்ல என்றான்.
அப்படி என்னத்தை இந்த விஜய் உடையில் பார்த்தான் இது நல்லா இருக்குனு சொல்றானே! என்று கேட்டால்..
அப்பா! அவங்க இல்ல.. இந்த கேர்ள் போட்டு இருக்கிற டிரஸ் என்றான்.. அடேய்! இவன் எந்த அர்த்தத்தில சொன்னான் என்று குழம்பிக் கிடக்கேன்…
ஏனென்றால் பாட்டுல வரவங்க போட்டு இருக்கிற உடை அப்படி இருக்கும்.
கொசுறு 2
ட்விட்டரில் தலைவர் இணைந்து இருக்கிறார்.
நான் ட்விட்டர் பயன்படுத்துவதில்லை, அதில் இன்று வரை ஆர்வமும் இல்லை. கணக்கு மட்டுமே உள்ளது என் Blog க்காக பயன்படுத்துகிறேன் அவ்வளோ தான்.
ரஜினி இணைந்தவுடன் முந்தைய துவக்க சாதனைகளுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
அப்போது ட்விட்டர் பயன்படுத்தியவர்கள் இருந்த அளவை விட தற்போது உயர்ந்து இருப்பார்கள். எனவே இணைபவர்கள் எண்ணிக்கையும் முன்பை விட அதிகமாகும்.
தலைவருக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றாலும், ஒப்பீடு செய்வது சரியல்ல.
எது எப்படியோ ரஜினி ட்விட்டர் வந்தது பலரால் வரவேற்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்கவில்லை.
சும்மாவே ஏதாவது பிரச்சனை செய்வாங்க.. இதில் இவர் ஏதாவது கூறப்போக அப்புறம் அது வேற பற்றிக்கொண்டு எரியும்.
இதனால் பல பிரச்சனைகள் வரப்போகிறது என்று நினைக்கிறேன். வந்தது தான் வந்தாரு.. அப்படியே FB க்கும் வந்தா நல்லது 🙂 .
அடுத்த வாரம் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக நான் இந்த வார இறுதியில் ஊருக்குச் செல்கிறேன்.
நேரத்தைக் கடத்த வழி தெரியாமல் எத்தனையோ படங்களைப் பார்த்த எனக்கு, தலைவர் படம் பார்க்கும் போது டெலிகேட் பொசிசன் 🙂 .
படம் வேற எப்படி இருக்கப் போகுதுன்னு கொஞ்சம் திகிலா தான் இருக்கிறது.
சிங்கப்பூரில் கோச்சடையான் வியாழன் இரவுக் காட்சி திரையிடப்பட்டால் செல்வேன் (ஆனால் தற்போது வரை அதற்கான அறிகுறி தெரியவில்லை) அப்படியில்லாமல் வெள்ளி திரையிட்டால், மாலை / இரவுக் காட்சி தான் பார்க்க முடியும்.
எனவே, விமர்சனம் வெள்ளி இரவு தான் வெளியிடுவேன்.
சனி ஊருக்குக் கிளம்பி விடுவேன் என்பதால் என்னிடமிருந்து ஒரு வாரத்திற்கு பதில் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊருக்குப் போயிட்டு வந்து “பஞ்சாயத்தை” வைத்துக்கலாம் 😉 .
Update: கோச்சடையான் வெளியீடு மே 23 க்கு தள்ளி வைக்கப்பட்டது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
“கோவில்களில் கொடுக்கப்படும் புளி சாதம், பொங்கல் மட்டும் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கிறது”
– எனக்கும் இதே டவுட்தான் தல. யாரிடமும் இருந்தும் சரியான பதில் கிடைபதில்லை.
வணக்கம்,
நான் ரவிச்சந்திரன் சென்னையில் இருக்கிறேன். கோவில் பிரசாதம் பெரும்பாலும் நல்ல சுவையாக இருக்கும். என் அனுபவத்திலும் பல முறை இப்படி நினைத்தது உண்டு. கோவிலில் சமைக்கும் உணவு தெய்வத்திற்கு படிக்கவேண்டும் என மிகவும் பயபக்தியுடனும், சிரத்தியுடனும் செய்யப்படுகிறது. அதுவும் தெய்வ அனுகிரகத்தினாலும் சுவையாக இருக்கிறது போலும்.
இங்கு (சென்னையில்) ஷிர்டி சாய்பாபா கோவில் இருக்கிறது. அங்கு பாபா கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் நல்ல சுவையோடு இருப்பதை பலர் சொல்லியும், எனது அனுபவத்திலும் உணர்ந்து இருக்கிறேன். நங்கள் ஒரு ஷிர்டி சாய்பாபா பக்தர். எங்கள் வீட்டிலும் சமைக்கும் இடத்தில் ஷிர்டி சாய்பாபா படம் வைத்து இருக்கிறோம். உணவு நல்ல சுவையாக இருக்கும். சமையல் தெரியாத நானே ஷிர்டி சாய்பாபாவிடம் வேண்டிக்கொண்டு சமையல் செய்து இருக்கிறேன். அதுகூட சுவையாக இருக்கும். ஓம் ஷிர்டி சாய்பாபா!
பகிர்வுக்கு மகிழ்ச்சி கிரி..
கொசுறு ஒன்று ஹி ஹி
கொசுறு இரண்டு தலைவர் ட்வீடரில் இணைந்தது மகிழ்ச்சியே அவர் எது கூறினாலும் பிரச்னை பண்ணுபவர்கள் இருக்கிறார்கள் என்ன செய்வது
நானும் கோச்சடையானை காண ஆர்வமாய் இருக்கிறேன்
நல்ல படியா ஊருக்கு போயிட்டு வாங்க கிரி
ஹாப்பி ஹாலிடேஸ்
கோயில் பொங்கல் மற்றும் மற்ற பிரசாதங்கள் சுவையின் காரணம் மக்கள் அனைவரின் பங்களிப்பும் அதில் இருக்கும்.அப்புறம் கோயில்ல சாமிய வரிசைல நின்னு கும்பிட்ட பிறகு பசியோட இருக்கும்போது சுடச்சுட எதிர்பாராத சமயத்துல கையில கிடைக்கிறதும் காரணம்னு நினைக்கிறேன். இந்த சமயத்துல பாய்ஸ் பட செந்தில் காமெடி நினைவுக்கு வருது..:-)
யுவன் மொட்ட அடிக்கும் போது இவ்ளோ அமைதியா!! இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருக்கு. 🙂
இனிய பயணத்திற்கு வாழ்த்துகள்..
மொட்டை அடிக்கும் போது அமைதியாய் இருக்கும் குழந்தையை இப்போதுதான் பார்க்கிறேன்:).
கோச்சடையான் ரஜினி நடித்த படம் இல்லை. ரஜினி என்றில்லை உங்கள் தலையையும் அங்கே சேர்க்கலாம். அடுத்து வரும் லிங்காவைப் பார்க்கவும்.
வணக்கம்,
நான் ரவிச்சந்திரன் சென்னையில் இருக்கிறேன். கோவில் பிரசாதம் பெரும்பாலும் நல்ல சுவையாக இருக்கும். என் அனுபவத்திலும் பல முறை இப்படி நினைத்தது உண்டு. கோவிலில் சமைக்கும் உணவு தெய்வத்திற்கு படைக்கவேண்டும் என மிகவும் பயபக்தியுடனும், சிரத்தியுடனும் செய்யப்படுகிறது. அதுவும் தெய்வ அனுகிரகத்தினாலும் சுவையாக இருக்கிறது போலும்.
இங்கு (சென்னையில்) ஷிர்டி சாய்பாபா கோவில் இருக்கிறது. அங்கு பாபா கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் நல்ல சுவையோடு இருப்பதை பலர் சொல்லியும், எனது அனுபவத்திலும் உணர்ந்து இருக்கிறேன். நங்கள் ஒரு ஷிர்டி சாய்பாபா பக்தர். எங்கள் வீட்டிலும் சமைக்கும் இடத்தில் ஷிர்டி சாய்பாபா படம் வைத்து இருக்கிறோம். உணவு நல்ல சுவையாக இருக்கும். சமையல் தெரியாத நானே ஷிர்டி சாய்பாபாவிடம் வேண்டிக்கொண்டு சமையல் செய்து இருக்கிறேன். அதுகூட சுவையாக இருக்கும். ஓம் ஷிர்டி சாய்பாபா!
எனக்கு பேருந்தில் சுற்றியதில் பிரச்சனையில்லை, இவனுக இரண்டு பேரும் செய்த அட்டகாசத்தில் தான் எனக்கு லைட்டா தலை சுற்றி விட்டது.
🙂 🙂
அனைவரின் வருகைக்கும் நன்றி
@ராவணன் ரஜினி படம் பார்க்க எனக்கு ரஜினி குரல் இருந்தால் கூட போதுமானது. எந்தப்படம் பார்க்க வேண்டும் / வேண்டாம் என்பதை நான் முடிவு செய்து கொள்கிறேன்.