கோச்சடையான் 2D [2014]

29
கோச்சடையான்

ல வருடங்களாகப் பலரை வாட்டி வதைத்து மன உளைச்சலை கொடுத்து அதோ இதோ என்று, வெளியான கடைசி நாள், நிமிடம் வரை தலை கிறுகிறுக்க வைத்த கோச்சடையான். Image Credit

மன்னரான நாசர் தளபதியான கோச்சடையானுக்கு கிடைக்கும் புகழையும் அவருக்கு மக்கள் கொடுக்கும் மரியாதையையும் கண்டு கடுப்பாகி அவரை ஒரு பிரச்சனையில் கொல்ல உத்தரவிடுகிறார்.

இதற்கு கோச்சடையான் மகன் “ராணா” பின் எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை.

கோச்சடையான்

எனக்கு அனிமேசன் (Motion capturing) படங்களில் ஆர்வம் இல்லை. தற்போது ரஜினி என்ற ஒரு நபருக்காக மட்டுமே சென்றேன்.

சீமாந்திராவில் பாடல் வெளியீட்டின் போது… “எனக்கு முதல் 15 நிமிடம் படம் பிடிக்கவில்லை. என்னடா இப்படி இருகிறதே என்று டென்ஷன் ஆகி விட்டது ஆனால், அதன் பிறகு படத்தோடு ஒன்றி விட்டேன்” என்று ரஜினி கூறி இருந்தார்.

இது 100% மறுக்க முடியாத உண்மை. இவர் கூறிய அந்த 15 நிமிடம் நபருக்கு நபர் நேரம் மாறுபடலாம் அவ்வளோ தான் ஆனால், இது உண்மை.

அனிமேசன்

துவக்கத்தில் அனிமேசனில் பார்க்கக் கடுப்பாகவே இருந்தது. ரஜினி வந்த போது, எங்கோ போகுதோ வானம் பாடல் இசை நான் பார்த்த திரையரங்கில் ரொம்ப சுமார்.

அதன் பிறகு வந்த காட்சிகள் ரஜினி வந்தும் திருப்தி இல்லாமலே பார்த்தேன். என்னடா இது! படம் முழுக்கவே இப்படித்தான் இருக்குமோ என்ற பயமும் வந்தது.

அதன் பிறகு ரஜினி, சரத், நாசர், ஆதி என்று வரும் போது அப்படியே கொஞ்சம் கொஞ்சம் பழகி விட்டது. உறுத்தலாக இல்லை.

இதில் அனைவர் முகம் மற்றும் உடல் நன்றாக இருந்தது ஆனால், ருக்குமணி தலை மட்டும் உடலுக்குச் சம்பந்தம் இல்லாமல் இருந்தது.

எனக்கு மட்டும் தான் அப்படித் தெரிந்ததா என்று தெரியவில்லை. ருக்குமணி பார்த்து டென்ஷன் ஆகி இருந்தால் வியப்பில்லை 🙂 .

முதல் பாதியில் கதையில் பல ட்விஸ்ட்கள் இருந்தாலும் ஒரு தெளிவான நிலை இல்லை. பாடல்கள் அடிக்கடி வந்து கொஞ்சம் சலிப்பை தந்தது.

நாகேஷ்

ரஜினியோட நம் அனைவரையும் முதல் பாதியில் ரசிக்க வைத்தது திரு நாகேஷ் அவர்கள்.

எப்படித்தான் நாகேஷ் போலவே கொண்டு வந்தார்கள் என்று மிக மிக ஆச்சர்யமாக இருந்தது. அவருடைய உடல் மொழி, குரல் எல்லாமே அப்படியே இருந்தது.

இவை எல்லாவற்றையும் விட இவரது கதாப்பாத்திரம் ரொம்ப அருமையாகச் சித்தரிக்கப்பட்டு  இருந்தது.

ராணாவின் மாமாவாக வருகிறார். நகைச்சுவைக்குக் குறைவில்லை.

இவங்க ஏடாகூடமாக வைத்து, நாகேஷ் அவர்களை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று யாராவது கிளம்பி விட்டால் என்ன செய்வது என்று பயம் ஆனால், அருமையாக இருந்தது.

இதோடு படம் துவக்கத்தில் நாகேஷ் அவர்களுக்குத் தனி மரியாதை செய்து இருந்தார்கள். இன்ப அதிர்ச்சியாகவும் மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.

நாகேஷ் கதாப்பாத்திரம் பற்றி ஒன்று கூற வேண்டி இருக்கிறது. நாகேஷ் பற்றி நமக்கெல்லாம் தெரியும் ஆனால், மற்ற மொழிக்காரர்களுக்கு!!

எனவே, மலையாளம் தெலுங்கு ஹிந்தி மக்களால் இவரை ரசிக்க முடியாது, நாம் ரசிப்பது போல.

நாகேஷ்க்கு முதல் பாதியில் மட்டும் தான் அதிக வாய்ப்பு என்பதால் பெரிய பாதிப்பு இருக்காது.

முதல் பாதி முடிந்து இடைவேளையில் திருப்தி இல்லாமலே இருந்தேன். இதோடு கதையும் எனக்குக் கொஞ்சம் புரியாத மாதிரி தான் இருந்தது.

கோச்சடையான்

இடைவேளை கோச்சடையான் ப்ளாஷ்பேக் வர படம் செம வேகம் பிடித்து விட்டது.

படத்தின் மிகப்பெரிய பலமே கோச்சடையான் கதாப்பாத்திரம் தான். மிக மிக அருமையாக அமைத்து இருக்கிறார்கள்.

இவர் வந்தவுடனே படம் க்ளாஸ் படம் ஆகி விட்டது. இதன் பிறகு ஆரம்பிக்கும் படம் முடியும் வரை பட்டாசாக இருக்கிறது.

கோச்சடையான் பேசும் முறை, நடப்பது, மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் முறை, அதிகாரம் என்று அனைத்துமே படத்தை வேறு கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

ஒரு மெச்சூர்டான கதாப்பாத்திரத்தை இதை விடச் சிறப்பாக இந்தப் படத்தில் கொடுக்க முடியாது, அருமை. இரண்டாம் பாதி அனிமேசன் சிறப்பாக வந்துள்ளது.

கண்களில் உயிர்ப்பு இல்லை என்பது உண்மை ஆனால், இதில் எப்படி இதை எதிர்பார்ப்பது.

தீபிகாவிற்கு மோசமில்லாத அளவிற்கு நடிக்க வாய்ப்பு. நடனம் ஆடும் போது நளினமாக இல்லாமல் வெடுக் வெடுக்கென்று ஆடுவது திரும்புவது உறுத்தலாக இருக்கிறது.

ரஜினி தீபிகா பார்த்துக்கொள்வது பாடல் காட்சியில் கோணம் சரியாக இல்லை. மற்ற இடங்களில் சரியாக உள்ளது.

ஆதி நாசர் சரத் ஜாக்கி ஷெரப் என்று அனைவருக்குமே ஓரளவு நடிக்க வாய்ப்பு. சரத்க்கு பாட்டு கூட உள்ளது.

பாடல்கள் அதிகம்

பாடல்களின் எண்ணிக்கையை நிச்சயம் குறைத்து இருக்க வேண்டும். இதில் ஷோபனா கோச்சடையான் மனைவியாக வருகிறார்.

தளபதி” படத்தில் பிரிந்து இதில் இணைந்து விட்டார்கள் 🙂 .

இரண்டாம் பாதியில் ரசிக்க ஏகப்பட்ட காட்சிகள். ஒரு காட்சியில் கண் கலங்கி விட்டேன். அனிமேசன் படத்தில் கண்கலங்குவேன் என்று நினைத்ததில்லை.

இது போன்ற காட்சிகளே அனைவரையும் இரண்டாம் பாதியில் கட்டிப்போட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

இறுதி சண்டைக்காட்சி பிரம்மாண்டமாக இருக்கிறது. ரொம்ப நன்றாக வந்துள்ளது.

இதில் ஆதி ராணா சண்டைக் காட்சியை இன்னும் கொஞ்சம் கடினமாக வைத்து நீட்டி இருந்து இருக்கலாம், ரொம்ப நன்றாக இருந்தது.

இதில் காட்சிகள் பல மிரட்டலாக இருக்கிறது. இரண்டாம் பாதி முழுக்க அனிமேசன் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாகத் தலைவர் முகமும் நடையும் நன்றாக இருக்கிறது.

இறுதியில் ஒரு ட்விஸ்ட் வைத்து இருக்கிறார்கள் ஆனால், அதை முடிக்கும் போது அதிரடியாக வசனம் போல வைத்து முடித்து இருக்கலாம்.

சிலர் படம் முடிந்து விட்டதையே தாமதமாய்த் தான் உணர்ந்தார்கள்.

இறுதியில் இந்தப்படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதை காட்டுகிறார்கள். இது யாருடைய யோசனை என்று தெரியவில்லை. மிகச் சிறந்த யோசனை.

இதைப் பார்த்தால் எப்படி எடுத்தார்கள் என்பதையும், அதோடு இந்தத் தொழில்நுட்பத்தை  ஓரளவு புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

B C ல் படம் ஓடுமா?

இந்தப் படம் B C ல் எப்படிப் போகும் என்று தெரியவில்லை.

நிச்சயம் பலரைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படத்திற்கு வாய் வழியாகக் கேள்விப்பட்டு செல்பவர்கள் தான் நிறைய இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால், அனிமேசன் என்பதால் யோசனையாக இருந்தவர்கள், மற்றவர்கள் சிலாகிப்பதை பார்த்து நிச்சயம் வருவார்கள்.

எப்போதுமே ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது படத்தின் இரண்டாம் பாதி தான்.

முதல் பாதி என்ன தான் அருமையாக இருந்தாலும் இரண்டாம் பாதி சரியில்லை என்றால், அதுவும் கடைசி 15 நிமிடம் சரியில்லை என்றால் படம் படுத்து விடும்.

இங்கே இரண்டாம் பாதி முழுக்க பட்டையக் கிளப்புகிறது.

படத்தில் அதிகம் எதிர்பார்த்தது.. ரஜினி குரல், ரகுமான் இசை, KS ரவிக்குமார் திரைக்கதை. மூன்றுமே அற்புதமாக இருக்கிறது.

ரவிக்குமார் அவர்களின் திரைக்கதை படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கும். சவுந்தர்யாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ச்சும்மா அதிருதில்ல…

இந்தப் படத்தைப் பெரியவர், சிறியவர், நாகேஷ் ரசிகர்கள், குழந்தைகள் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழலாம்.

Directed by Soundarya R. Ashwin
Produced by Sunil Lulla Sunanda Murali Manohar Prashita Chaudhary
Written by K. S. Ravikumar
Narrated by A. R. Rahman (Tamil)
Amitabh Bachchan (Hindi)
Starring Rajinikanth R. Sarathkumar Aadhi Deepika Padukone Shobana Jackie Shroff Nassar Rukmini Vijayakumar
Music by A. R. Rahman
Cinematography Rajiv Menon
Editing by Anthony
Studio Eros International Media One Global Entertainment
Release dates 23 May 2014
Running time 124 minutes
Country India
Language Tamil

கொசுறு 

திரையரங்கில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து அனைவரையும் மகிழ்வித்த தம்பி மகேஷ்க்கு சிங்கப்பூர் ரஜினி ரசிகர்கள் சார்பாக மிகப்பெரிய நன்றி.

சிங்கப்பூர் “வசந்தம்” தொலைக்காட்சியிலிருந்து வந்து பேட்டி காணொளி எடுத்தார்கள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

29 COMMENTS

  1. ஒரு காட்சியில் கண் கலங்கி விட்டேன். அனிமேசன் படத்தில் கண்கலங்குவேன் என்று நினைத்ததில்லை. இது போன்ற காட்சிகளே அனைவரையும் இரண்டாம் பாதியில் கட்டிப்போட்டு விட்டது என்று நினைக்கிறேன்.
    ==========================================
    exactly

  2. இன்னும் குறைந்தது இரண்டு கோச்சடையான் சம்பந்தப்பட்ட பதிவுகள் வெளிவரும். இரண்டு பதிவாவது எழுதினால் தான் அமைதி ஆகும்.. நக்கல் அடித்தவங்களுக்கு ஏதாவது கொடுக்கனுமில்ல
    ==================================================================
    i am waiting bro…… 😀 😀

  3. ஒரு காட்சியில் கண் கலங்கி விட்டேன்.// naanum thaan. enjoyed very much 🙂

  4. கிரி அண்ணா கலக்கல் விமர்சனம் மிக்க நன்றி ……

  5. ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு தலைவர் படம் முதல் காட்சி பார்க்க வைத்தமைக்கு மிக்க நன்றி கிரி.

    ஒரு ரஜினி ரசிகனாக அறிமுக காட்சியில் தலைவர் முகத்தை பார்க்கமுடியாத வருத்தத்தை அந்த நடையும் ஸ்டைலும் அதே குரலும் என்னை சமாதான படுத்தினாலும், கோச்சடையாரின் சிவ தாண்டவம் முழுக்க குஷியாக்கி விட்டது 🙂

    இது ரஜினியின் பாஷா இல்லை என்பது எந்த அளவு உண்மையோ, அதே அளவு இது இந்திய சினிமாவில் ஒரு மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

  6. மாஸ் போஸ்ட்… இப்போதுதான் மனம் திருப்தி அடைந்தது…

  7. என் மன்னா..
    நக்கல் அடித்தவர்களுக்கு திருப்பி கொடுக்க..
    வாய்ப்புக்கள் அமையாது நாம் தான் அமைத்து கொள்ள வேண்டும்…

    Giri Rockzzz

  8. கிரி.. உங்க எதிர்பார்ப்பும் பலரது பிரத்தனைனும் வீண் போகவில்லை… உங்கள் சந்தோசம் மற்றும் உற்சாகமான வரிகளிலிருந்தே படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதை உணர முடிகிறது.. அடுத்தடுத்த பதிவில் பின்ணணி இசை மற்றும் பாடல்களை பற்றி விரிவாக குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன்.. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

  9. கிரி நலமாய் இருக்கிறீர்களா? தலைவரை முதல் காட்சியில் பார்க்க முடியவில்லை..
    படம் நன்றாய் இருக்கிறது என்பது மிகுந்த சந்தோசம்.

  10. இப்போ பாட்ஷா படம் கதை திரும்பி பார்ப்போமா?

    ஒரு ஊர்ல ஒரு சராசரி மனிதன் சண்டை என்றாலே ஒதுங்கி போகும் மனிதன். தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்கிறான். என்னதான் அவன் ஒதுங்கி போனாலும் அவனது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஒரு நபர் அவன் வாழ்வில் குறுக்கிடுகிறார்.

    இப்பொது அவன் யார் அவன் முன்னர் என்ன செய்து கொண்டு இருந்தான் என எதுவும் அறியாதவர்கள் அவர்களையும் அறியாமல் அவனது குடும்பத்தினை சீண்டுகின்றனர். அவன் எப்போதும் போல அவர்களிடம் கெஞ்சுகின்றான் ஒரு கட்டத்தில் அவர்கள் அவனை அடித்து துன்புறுத்துகின்றனர் அப்போதும் அவன் அடி வாங்கவே பிறந்த மாதிரி பேசாமல் வாங்கி கொண்டு இருக்கிறான்.

    ஒரு கட்டத்தில் அவர்கள் அவனது குடும்ப உறுப்பினரை சீண்டுகிறார்கள் அதுவரை அமைதியாக இருந்த அவன் வெகுண்டெழுந்து வேங்கையாய் சீறி பாய்ந்து அனைவரையும் அடித்து நொறுக்குகிறான். அதுவரை அவனை அப்படி பார்த்து பழக்கமில்லாத அவன் குடும்ப உறுப்பினர் மிரட்சியுடன் பார்கிறார்கள் நாம் உட்பட.

    இதுவரை தமிழ் சினிமா பார்க்காத மரண மாஸ் இது .மாஸ் சீன் எப்படி எடுக்கனும்னு கிளாஸ் எடுத்த படம்.
    இப்போ இன்டர்வெல் அதாங்க இடைவேளை சரியாய?

    அவன் அனைவரும் அவனை பார்த்து கேட்கிறார்கள் நீ யார் இருந்தாய் என்று ?
    இதுவரை அவனை சுற்றி பழகியவர்களாக இருந்தவர்கள் ஏற்கனவே அவனுடன் அவனது முந்தய வாழ்வில் தொடர்பில் இருந்தவர்கள். இது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது நாம் உட்பட.

    பிளாஷ்பாக்: வில்லன் ஒரு ஊரில் குண்டு வைப்பது கொலை செய்வது போன்ற அக்கிரமங்கள் செய்து கொண்டிருக்கிறான். அவனால் பலரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதனை வெகுண்டெழுந்து தன்னை சேர்ந்தவர்கள் அவனிடம் இருந்தாலும் தான் நியாயத்தின் பக்கமே என்று உணர்த்த அவனை பொறியில் சிக்க வைத்து அவனை அழிக்க முயல்கிறான் நாயகன் .

    ஆனால் அதிலிருந்து தப்பித்து தன குடும்பத்தையும் தன்னை சேர்ந்தவர்களும் அழிய காரணமான நாயகனை தேடிகொண்டு அலைந்தவர்கள் அதாங்க வில்லன்! வில்லன் ! அவனை தேடி வருகிறான் அழிப்பததற்கு . .
    நாயகனுக்கு உதவியாய் இருந்த நண்பரை கொல்கிறான் வில்லன். மேலும் வெடிகுண்டு வைத்து அனைவரையும் அழிக்க முயலும்போது தன்னுயிரை பணயம் வைத்து நாயகன் அனைவரையும் காக்கிறான்.

    சுபம் சுபம் .

  11. இப்போ விஸ்வரூபம் படம் கதை திரும்பி பார்ப்போமா?

    ஒரு ஊர்ல ஒரு சராசரி மனிதன் சண்டை என்றாலே ஒதுங்கி போகும் மனிதன். தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்கிறான். என்னதான் அவன் ஒதுங்கி போனாலும் அவனது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஒரு நபர் அவன் வாழ்வில் குறுக்கிடுகிறார்.

    இப்பொது அவன் யார் அவன் முன்னர் என்ன செய்து கொண்டு இருந்தான் என எதுவும் அறியாதவர்கள் அவர்களையும் அறியாமல் அவனது குடும்பத்தினை சீண்டுகின்றனர். அவன் எப்போதும் போல அவர்களிடம் கெஞ்சுகின்றான் ஒரு கட்டத்தில் அவர்கள் அவனை அடித்து துன்புறுத்துகின்றனர் அப்போதும் அவன் அடி வாங்கவே பிறந்த மாதிரி பேசாமல் வாங்கி கொண்டு இருக்கிறான்.

    ஒரு கட்டத்தில் அவர்கள் அவனது குடும்ப உறுப்பினரை சீண்டுகிறார்கள் அதுவரை அமைதியாக இருந்த அவன் வெகுண்டெழுந்து வேங்கையாய் சீறி பாய்ந்து அனைவரையும் அடித்து நொறுக்குகிறான். அதுவரை அவனை அப்படி பார்த்து பழக்கமில்லாத அவன் குடும்ப உறுப்பினர் மிரட்சியுடன் பார்கிறார்கள் நாம் உட்பட.

    இதுவரை தமிழ் சினிமா பார்க்காத மரண மாஸ் இது .மாஸ் சீன் எப்படி எடுக்கனும்னு கிளாஸ் எடுத்த படம்.
    இப்போ இன்டர்வெல் அதாங்க இடைவேளை சரியாய?

    அவன் அனைவரும் அவனை பார்த்து கேட்கிறார்கள் நீ யார் இருந்தாய் என்று ?
    இதுவரை அவனை சுற்றி பழகியவர்களாக இருந்தவர்கள் ஏற்கனவே அவனுடன் அவனது முந்தய வாழ்வில் தொடர்பில் இருந்தவர்கள். இது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது நாம் உட்பட.

    பிளாஷ்பாக்: வில்லன் ஒரு ஊரில் குண்டு வைப்பது கொலை செய்வது போன்ற அக்கிரமங்கள் செய்து கொண்டிருக்கிறான். அவனால் பலரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதனை வெகுண்டெழுந்து தன்னை சேர்ந்தவர்கள் அவனிடம் இருந்தாலும் தான் நியாயத்தின் பக்கமே என்று உணர்த்த அவனை பொறியில் சிக்க வைத்து அவனை அழிக்க முயல்கிறான் நாயகன் .

    ஆனால் அதிலிருந்து தப்பித்து தன குடும்பத்தையும் தன்னை சேர்ந்தவர்களும் அழிய காரணமான நாயகனை தேடிகொண்டு அலைந்தவர்கள் அதாங்க வில்லன்! வில்லன் ! அவனை தேடி வருகிறான் அழிப்பததற்கு . .
    நாயகனுக்கு உதவியாய் இருந்த நண்பரை கொல்கிறான் வில்லன். மேலும் வெடிகுண்டு வைத்து அனைவரையும் அழிக்க முயலும்போது தன்னுயிரை பணயம் வைத்து நாயகன் அனைவரையும் காக்கிறான்.

    சுபம் சுபம் .

  12. கிரி விஸ்வரூபம் வந்தபோது மாஸ் சீன் எப்படி இருக்கணும்னு அந்த இண்டர்வல் பிளாக் பற்றி
    சிலாகிக்காதவர்கள் கிடையாது. நாம பேசாம இருந்தா என்னென்ன சொல்றாங்க பாருங்க . இந்த திரைக்கதை தலைவரின் நண்பர் கமல் எழுதியது. பாட்ஷா சத்யா மூவிஸ் ஹம் என்னும் ஹிந்தி படத்தை தழுவியது.

  13. இந்த விமர்சனத்தை படிக்கும் போது கொச்சடையாம் சூர மொக்கை என்று தெரிகிறது. மழுப்பி மழுப்பி எழுதி இருக்கிறீர்கள். இந்தப் படம் ரஜினிக்கே பிடிக்கவில்லை என்ற செய்தியை சொன்னதற்கு பாராட்டுகள்

  14. மன்னிக்கவும்…. கோவத்தோடு எழுபவன் நஸ்டத்தோடு தோடு உக்காருகிறான்,…. இங்கு ” கோச்சடையான் ” பற்றி போய் கொண்டு இருக்கிறது 😉

  15. ஹி ஹி ஹி பிடிக்காதது 15 நிமிஷமா அல்லது 1.59.55 நிமிஷங்களா கிரி.?

    அனிமேஷனில் கொஞ்சம் அல்ல நிறையவே இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்!!

    Bewolf படம் பாத்துருக்கீங்களா 2007ல வந்தது… அந்த டெக்னாலஜிய கூட கொண்டுவரமுடியல… இதுல எங்க அவதார் டின்டின் கூட கம்பேர் பண்றது.
    மோஷன்கேப்சர் மட்டும்தான் பண்ணியிருக்காங்க… பெர்பாமன்ஸ் கேப்சர் பண்ண தெரியல..

    மொத்தத்துல… புள்ளைங்க ஆசைப்பட்டா பொம்மை வாங்கி கொடுக்கலாம்… ரஜினி கொஞ்சம் அதிகமாவே தன் பிள்ளைக்காக பொம்மையாவெ நடிச்சிட்டார்.. (அதிலும் தீபிகா வேறு) சரத், ஆதி, ருக்மிணி எல்லாம் இருக்காங்கன்னு நீங்க சொல்லித்தான் தெரியுது.

    ப்ராஜெக்ட் ஆரம்பிச்சாச்சே முடிச்சி வைக்கணுமேன்னு என்ற தலைவலியுடன் கூடிய பரிதவிப்பு நல்லாவே படத்துல தெரியுது.

    ஓவர் பில்டப்பெல்லாம் சரி வராது பேசாம தலைவர் ரியலாவே நடிச்சிருந்தா இன்னொரு மகதீராவா வந்திருக்கும். அமிதாப் தன்னோட கடைசிபடம்ன்னு அறிவிச்சது குதாகவா (1991-93) படம் படுத்துகிச்சி அதுக்கப்புறம் தன்னோட பில்டப் எல்லாத்தையும் விட்டுட்டு இப்போ என்ன கலக்கு கலக்குறார்..

    கதைக்கா பஞ்சம் – வருஷத்துக்கு ஒன்னு அல்லது ரெண்டு படம் நடிச்சா என்னவாம்.. பணப்புழக்கம் அதிகமாகுமில்ல அதுவும் தழுவிய கதையை இருந்தாலும் என்ன ரஜினி வந்து நின்னாலே போதாதா ? சமீபத்தில் வந்த லியாம் நீல்சன் படங்கள், திருஷ்யம், கொரியனில் சில கதைகள்… எவ்வளவோ சொல்லலாம்.

    • ராஜ்குமார்

      எங்களுக்கு இதுவே போதும் .. இதையே பிளக் பஸ்ட்டர் ஆக்கி காட்டுவோம் .. நீங்கள் வேணும்னா அமெரிக்கா போகலாம் அல்லது இங்கிலாந்த் போகலாம் … டிக்கெட் வேணும்னா நாங்க ரஜினி பான்ஸ் எடுத்து தர்றோம்

      ராஜேஷ்

      • பிளாக் பஸ்டரை தமிழகத்தோட நிறுத்தியிருந்தா ஓகே… ஆனா அவதார் டின் டின்னோட ஒப்பீடு, கேமரூனுக்கே போட்டு காட்டப்போறோம் அப்படியெல்லாம் மார்கெடிங் பண்றாங்க பாருங்க அதைதான் சகிக்க முடியல. மேற்கூறிய டெக்னாலஜி இல்லாத காலத்துல வந்திருந்த நிச்சயம் பாராட்டப்படவேண்டிய விஷயம் ஆனா இப்போ காலம் அப்படியா ?
        முதலில் படம் யார் எடுக்குறான்னு குழப்பம் (சவுந்தர்யா / ரவிகுமார்)
        அப்புறம் பெயர் குழப்பம்.. ரானா சுல்தான்
        அப்புறம் சுல்தான் அனிமேஷன் கிடையாது ரியல்ன்னு ஒரு செய்தி…
        மறுபடியும் அனிமேஷன்தான் என்று கன்பார்ம் செய்யப்பட்டது 2011ல் – இப்போ 2014. இதற்கிடையே ரிலீஸ் தேதிகளும் ஒரு வழி ஆக்கிவிட்டன..

  16. படத்தில் பாடல்களும் வசனங்களும் மிக அருமையாக இருந்தது. ரஜினியின் குரலில் வசனங்கள் மெய் சிலிர்க்க வைத்தது. ரஜினியின் படங்களில் மிக முக்கியமான் ஒன்று முக வெளிப்பாடு… அது இந்த படத்தில் கொஞ்சம் கூட இல்லை. பிழைப்பே இல்லாமல் இருபதற்கு மார்க்கெட்டிங் தொழில் எவ்ளவோ மேல் என்பது போல..ரஜினியின் படத்திற்காக பல காலம் காத்து இருந்தவர்களுக்கு(நானும் கூட) முக வெளிபாடு இல்லை என்றாலும் குரலாவது ஆறுதலை அளித்தது. எல்லாவற்றையும் பொறுத்து கொள்ளலாம் அனால் தீபிகா வின் அனிமேஷன் கேரக்டர் எந்த விதத்திலும் பொருந்தவில்லை. வட இந்தியாவில் தீபிகா வின் டான்ஸ் மற்றும் முக expression கு மயங்கதவ்ர்களே இல்லை. அதும் கடந்த ஆண்டு வெளியான ராம்லீலா படத்தில் பின்னியிருப்பார் … ஆனால் இந்த படத்தில் தீபிகா டான்ஸ் பார்த்தால் கொலைவெறி ஆக இருக்கும் …இந்த படத்தை அவதார் உடன் compare செய்வது சிறுபிள்ளை தனமான செயல்… ஆனால் சௌந்தர்ய வின் முயற்சியை ஊக்குவிக்கலாம்…

  17. விமர்சனத்திற்கு நன்றி கிரி .படம் பார்க்க ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரு ரசிகனின் மன நிலையை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்

  18. சிறப்பான விமர்சனம் கிரி.. 3D ல் பார்த்ததன். மிக அருமையாக இருந்தது . முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் தொழில்நுட்பம் கலக்கல். எதிர்மறையாக பேசியவர்களில் சிலர் இப்போதும் பேசி வருகின்றனர் . ஆனால் டிரைலர் பார்த்து விட்டு படம் சூர மொக்கையயாகவே இருக்கும் ஏகத்துக்கும் கலாய்க்கலாம் என நினைத்தவர்களுக்கு சரியான பாடம

  19. சிறப்பான விமர்சனம் கிரி.. 3D ல் பார்த்ததன். மிக அருமையாக இருந்தது . முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் தொழில்நுட்பம் கலக்கல். எதிர்மறையாக பேசியவர்களில் சிலர் இப்போதும் பேசி வருகின்றனர் . ஆனால் டிரைலர் பார்த்து விட்டு படம் சூர மொக்கையயாகவே இருக்கும் ஏகத்துக்கும் கலாய்க்கலாம் என நினைத்தவர்களுக்கு சரியான பாடம் சொல்லி விட்டது படம் என்பது முற்றிலும் உண்மை . அது மட்டுமின்றி சிலர் கூறுவது போன்று இந்த கதையை live action படமாக எடுத்திருந்தால் நிச்சயம் எடுபட்டிருக்காது என்பது என் கருத்து . தாங்கள் கூறியது போன்று நிச்சயம் கோச்சடையான் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல் தான் .

  20. இந்தியா போக.. சீனா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், கத்தார், பஹ்ரைன் சவுதியிலும் கோச்சடையான் சீடிக்கள் வெள்ளிமுதல் கிடைக்கின்றன.. இதுபோக பலர் டவுன்லோட் செய்து இந்த மொக்கை படத்தை பார்த்து வருகின்றனர்.. தீபிகாவோடு சேர்ந்து ஆடும் மயில் / ரஜினியை தூக்கிவிடும் டால்பின் போன்ற காட்சிகள் (ஏற்கனவே குசெலன்ல ஏரிக்குள்ள டால்பின் விட்டவங்கலாச்சே) வரும்போது ஆவென்று வாயை பிளக்கும் ரசிகர்கள் வாயில் பல ஈக்கள் புகுந்து வருவதால் இந்த படம் மூலமாக பலவித நோய்கள் உருவாகுமென்று ஒபாமாவே ஒப்பாரி வைத்துள்ளார்.

  21. சூப்பர் கிரி. எனக்கு என்னமோ இந்த விமர்சனம் கொஞ்சம் காரம் கம்மி யா இருக்கிற மாதிரி இருக்கு :). டிரைலர பாத்து பயந்த மாதிரி ஒண்ணும் நடக்க ல. படம் ஹிட் தான் பேசுற பய புள்ளை க பேசிட்டு தான் இருக்கும். நீங்க கோச்சடையான் 1,2 பதிவு சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க 🙂

  22. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @தனபாலன் ஒன்றா இரண்டா! 🙂

    @ரோஷன் இங்கே ஒரே ஒரு சுமாரான திரையரங்கில் மட்டுமே 3D வெளியாகியுள்ளது. மற்ற நல்ல திரையரங்குகள் அனைத்திலும் 2D தான் வந்துள்ளது.

    @சிங்கக்குட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் கூட 😉

    @சக்தி ஸ்ரீராம்.. டேய் தம்பி.. கலக்குறே போ! 🙂

    @யாசின் / ரோஷன் உண்மையில் நான் பார்த்த திரையரங்கில் ஒலி மிகவும் மோசமாக இருந்தது அதனாலையே விரிவாகக் குறிப்பிடவில்லை. இருந்தும் அதிலேயே ரகுமான் இசை நன்றாக இருந்தது. திரும்ப ஒருமுறை நல்ல திரையரங்கில் பார்த்தோம். அருமையாக இருந்தது.

    @காயத்ரிநாகா நலம்,

    @Aran எப்படி இப்படியெல்லாம் 🙂 🙂 கலக்கல்

    @ரவி சூர மொக்கை 🙂 🙂 படத்தின் வெற்றியை நான் தனியாகக் கூற வேண்டியதில்லை..

    @ராஜ்குமார் நீங்கள் கமல் ரசிகர் என்றாலும் இதை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அனிமேசன் பற்றி நானே இதில் நீங்கள் குறிப்பிட்டது போல கூறி இருக்கிறேன் ஆனால், நீங்கள் கூடுதலாகவே ஓட்டி இருக்கிறீர்கள். பரவாயில்லை.. படம் சொதப்பி இருந்தால், இது குறித்து கவலைப்பட்டு இருப்பேன். படம் வெற்றி ஆனதால், இது எந்த விதத்திலும் என்னை பாதிக்கவில்லை.

    உண்மைய சொல்லுங்க படம் நன்றாக இல்லையா.. முதல் பாதி சுமார் தான் அதை நானே மறுக்கவில்லை. இரண்டாம் பாதி மிக மிக அருமையாக இருந்தது. அனிமேசனில் குறைகள் இருந்தாலும் கதை, திரைக்கதை,ரஜினி குரல், இசை என்று படு கலக்கலாக இருந்தது. நானே புகழ்வது என்னவோ போல இருக்கிறது.. படத்தின் வெற்றியே மீதியைக் கூறும்.

    இந்தப் படத்தை லைவ் ஆக எடுத்து இருந்தால் செலவு ஏகப்பட்டது ஆகி இருக்கும். தெலுங்கிலும் ஹிந்தியிலும் சரியாகப் போகவில்லை ஆனால், இதெல்லாம் போனஸ் தான்.

    BTW நீங்கள் என்னுடைய நண்பர் என்பதால் மட்டுமே இந்த விளக்கம்.. வேறு யாரும் கிண்டல் செய்து இருந்தால்.. அது பற்றி கண்டுக்கவே மாட்டேன்.

    @ஜானகி அவதாருடன் ஒப்பிட்டால் அது காமெடி தான். சந்தேகமே இல்லை.

    @சரத் “டிரைலர் பார்த்து விட்டு படம் சூர மொக்கையயாகவே இருக்கும் ஏகத்துக்கும் கலாய்க்கலாம் என நினைத்தவர்களுக்கு சரியான பாடம் சொல்லி விட்டது படம் என்பது முற்றிலும் உண்மை”

    இது 100% உண்மை. திருடனுக்கு தேள் கொட்டியது போல அமைதியா இருக்காங்க 🙂

    @TR Fan உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தால் யார் ஒப்பாரி வைத்து இருக்கிறார்கள் என்று படிப்பவர்களுக்குத் தெரியும் 🙂

    @அரிகரன் காரம் கம்மியா இருக்கக் காரணம் இது திரைவிமர்சனம் என்பதால். இதில் நம் கருத்தை புகுத்தினால் படம் பற்றிய மதிப்பு குறைந்து விடும். விமர்சனத்திற்கு மதிப்பு இருக்காது. எனவே தான் அதோடு நிறுத்தி இருக்கிறேன் 🙂 . விரைவில் எழுதுகிறேன்.

  23. நன்றி கிரி – ஆமா நான் ஓவராத்தான் பொங்கிட்டேன்.. காரணம் இந்த படத்திற்காக அவர்கள் செய்த மார்கெடிங் பில்டப் தான். அனிமேஷன் குறைகளை தவிர வேறெந்த குறைகளையும் படத்தில் நான் சுட்டிகாட்டவில்லை.
    பிடித்தது கமல் என்றாலும் அவருடைய தற்கால படங்கள் என் விருப்பங்களை குறைக்கின்றன. விஸ்வரூபம் உள்பட…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here