விண்ணைத்தாண்டி வருவாயா (2010)

29
விண்ணைத்தாண்டி வருவாயா Vinnai thaandi varuvaya movie poster

வுதம் வாசுதேவ மேனன் மீண்டும் ஒரு காதல் கதையில் களம் புகுந்து இருக்கிறார், இந்த முறை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக, வம்பான ஆளான சிம்பை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா கொடுத்து உள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா

சிம்பு பொறியியல் பட்டதாரி, திரைத்துறையில் இயக்குனராக அதற்கு முதல் அடியான உதவி இயக்குனராகி வாய்ப்பு தேடுபவர்.

இவரது மாடி வீட்டில் வசிப்பவர் த்ரிஷா. முதல் முதலாகப் பார்க்கும் போதே சிம்பு த்ரிஷா மீது காதல் கொள்கிறார்.

ஆனால் இரு பிரச்சனை ஒன்று த்ரிஷா சிம்புவை விட ஒரு வயது மூத்தவர், இரண்டாவது சிம்பு ஹிந்து த்ரிஷா கிறிஸ்துவம்.

த்ரிஷா வீட்டில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு வருகிறது. இறுதியில் காதலில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதே படம்.

கவுதமின் இப்படமும் A வகுப்பினருக்கான படம்.

சிம்பு என்றாலே வம்பு தான் என்று இருக்கும் போது தன்னுடைய வழக்கமான விரல் வித்தை சேட்டைகள் மற்றும் பில்டப்புகள் அனைத்தையும் ஏறக்கட்டிவிட்டு அடக்கமான பையனாக இயல்பாக நடித்து உள்ளார்.

த்ரிஷா வழக்கமான பேக்குத்தனம் இல்லாமல் சிறந்த நடிப்பு. அவரது உடைகளே அவருக்குக் கூடுதல் அழகை கொடுத்தது என்றால் மிகையில்லை.

படத்தில் அடிக்கடி, பேசிய வசனங்களே வருவது அலுப்பை தருகிறது, அதுவும் கவுதம் படத்தின் இதற்கு முந்தைய படங்களின் வசனங்களும் கூட.

சிம்பு எத்தனை முறை ஜெஸ்சி (த்ரிஷா) என்று கூறினார் என்றும், த்ரிஷா எத்தனை முறை கார்த்திக் (சிம்பு) என்று கூறினார் என்று போட்டியே வைக்கலாம்.

கணேஷ்

குறிப்பிடத் தக்க இன்னொருவர் காக்க காக்க கேமரா மேன் என்று கூறிக்கொண்டு ஒளிப்பதிவாளராக நடித்து இருக்கும் கணேஷ்.

இவரைப்போல ஒரு அண்ணன் அல்லது ஒருத்தர் நமக்கு உடன் இருந்தால் எவ்வளவு சுவாராசியமாக இருக்கும் என்று ஏங்க வைத்து விட்டார்.

சிம்புவை பார்த்து ஒவ்வொரு முறையும் டேய் தம்பி! என்று ஆரம்பித்து இவர் அடிக்கும் கமெண்ட்டும் உடன் முகபாவனைக்கும் திரையரங்கில் சிரிப்பலைகள்.

சிம்புவும் அவருக்குப் பொருத்தமாக இருக்கிறார். சார் சார் என்று அவரிடம் சிம்பு பேசும் போது.. ஒரு செயற்கைத்தனமில்லாத இயல்பான உறவைக் காண முடிகிறது.

காரணம் சிம்புவின் லட்சியமே இயக்குனராவது தான் ஆனால் சிம்பு த்ரிஷா காதல் பகுதியே பெரும்பாலும் படத்தில் உள்ளது.

உடன் அவரது வேலையையும் பிரச்சனைகளையும் காட்டி இருந்தால் இன்னும் இயல்பாக இருந்து இருக்கும்.

த்ரிஷா அப்பாவாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு “பூ விழி வாசலிலே” புகழ் பாபு ஆண்ட்டனி, நடிக்க ஓரளவு வாய்ப்புண்டு. சிம்பு அப்பா கிட்டிக்கு எந்த வித வாய்ப்புமில்லை.

படத்தில் “ஒரு நாள் சிரித்தேன் ஒருநாள் வெறுத்தேன்” பாடல் வரும் இடத்தில் வரும் சிம்பு த்ரிஷா ரொமான்ஸ் டாப் க்ளாஸ்.

காதலிக்கும் காதலித்த ஒவ்வொருவருக்கும் தங்களையே பார்த்தது போல இருக்கும், அத்தனை அருமை. ரொம்ப ரசிக்கும் படி எடுக்கப்பட்டு இருக்கும்.

ரகுமான்

ரகுமான் பின்னணி இசை கலக்கி உள்ளார். பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி பெற்றவை. பாடலும், படமாக்கப்பட்ட விதமும் ரசனையாக உள்ளது;

ஒளிப்பதிவு சென்னை, கேரளா, அமெரிக்கா என்று அனைத்து இடங்களிலும் உள்ள அழகை நமக்குத் தேடிக்கொண்டு வந்து தருகிறது.

இளையவர்களுக்கும் காதலர்களுக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா மிகப் பிடிக்கும்.

Directed by Gautham Menon
Produced by P. Madan
Written by Gautham Menon
Starring Silambarasan, Trisha
Narrated by Silambarasan
Music by A. R. Rahman
Cinematography Manoj Paramahamsa
Edited by Anthony Gonsalves
Release date 26 February 2010
Running time 167 minutes
Country India
Language Tamil

Read : நடுநிசி நாய்கள் (2011) | சைக்கோ த்ரில்லர்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

29 COMMENTS

  1. //நட்புடன் ஜமால் on 9:40 AM, March 08, 2010 said…

    அவசியம் பார்த்திடுவோம் …//

    ஜமால் என் பதிவில் இட்ட பின்னூட்டம்.

    //
    நட்புடன் ஜமால் said…

    சிம்பு படம் பார்க்க போனதற்கே உங்களுக்கு விருது கொடுக்கனும்ண்ணே//

    :))

  2. கணேஷ் – இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

    Produced by – Madan Ganesh Elred Kumar Jayaraman

  3. படம் பார்க்கலாம் எமாற்றமளிக்காது, காதலை ரசிப்பவர்களுக்கு.

    பார்க்கிறேன் கிரி

  4. படத்தின் பாடல்கள் சிறப்பாக உள்ளதாக அனைவரும் கூறினார்கள் எனக்கென்னவோ ஹாரிஸ் கவுதம் கூட்டணி போல இல்லை, நிறைவாக இல்லை.//

    பாடல்களை கேளுங்கள் கேளுங்கள் கேளுங்கள் பிறகு, அவைகளுக்கு நீங்கள் அடிமை, என்னைப்போல்.

  5. கிரி ,
    நல்ல விமர்சனம் : ) என்ன சொல்றதுனே தெரியல போங்க

  6. படத்தைபோலவே பெரிய விமர்சனம் , நன்றாக இருக்கிறது.

  7. Giri,

    As usual, this too is a balanced review from you.

    Though I don't see chimpanzee movies or Gautam movies, bec of the hype VTV has been getting, I watched the BlueTV (aka Sun TV) Thirai Vimarsanam. In the clippings they showed, I could see (?) shades of Maniratnam in Gautam. Yes. Most of the scenes were shot in dark or very less light. Then & there I knew that my decision not to bother to watch a Gautam movie is vindicated.

  8. ***உடன் அவரது வேலையையும் பிரச்சனைகளையும் காட்டி இருந்தால் இன்னும் இயல்பாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து,.***

    Your criticisms are very gentlle as usual.

    I think it was Lingusaamy's bheema, Gautam Menon was criticising him very badly as it had nothing original. Now he has come up with "original love story", I suppose! Even the name of hero as "karthik" reminds me of MaNi's alaipaayuthE! If he is such an original thinker, he could not find another name???

    I think this movie has been overrated by so many and I dont understand why. I dont find that "love" charming! The movie is very average and there is "no stuff" in it. I still suspect about the claimed "success" of this movie!

  9. முதல் படத்திலேயே இவ்வாறு செய்து இருந்தால் பிரச்சனை இல்லை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவது தான் உறுத்துகிறது. என்னமோ! நல்ல படம் கொடுக்கும் வரை சரி!

    /\*/\

    கவுதம் லூசு மேனன் ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை

  10. நல்ல விமர்சனம் கிரி,

    தப்பான க்ளைமாக்ஸை தமிழ் ஜனங்க எப்டி ஏத்துக்கிட்டாங்கன்னு புரியல….. தெலுங்கு க்ளைமாக்ஸ்தான் சரி. சர்ச்சில் கல்யாணத்தின் போது அவ்ளோ தில்லா வெளியேறி வரும் திரிஷா, கடைசியில் இன்னொருவரை கல்யாணம் செய்து கொள்வது அபத்தம்……….

    GV.மேன‌னின் (அடுத்த‌ ப‌ட‌த்துக்கு இந்த‌ பெய‌ரை ப‌ய‌ன்ப‌டுத்த‌ ப‌ரிந்துரைக்கிறேன்) பெய‌ர் நீள‌மாக‌ நீள‌மாக‌ ச‌ர‌க்கு குறைந்து கொண்டே வ‌ருகிற‌து.

  11. கிரி,

    உண்மையிலே நீங்க பெரிய ஆள்தான். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இவ்வளவு பெரியதாக எழுதி (Length) எழுதி இருகிறீர்கள். சரி, படத்துல தான் பெருசா எதுவுமே இல்ல..நம்மாலாவது பெருசா எழுதலாம் ன்னு நெனசுடீங்கள..

    நீங்களும் கதைய தேடி தேடி பார்த்து இருப்பீர்கள். Chacterization தவிர என்னத்த விமர்சனம் பண்றது. போன தடவை கேடீங்கள்ள..ஆ வூ ன்ன US போயறார் ன்னு. அது ஒரு நல்ல கேள்வி தான். Why blood, same blood.

    சிம்பு, த்ரிஷா வோட Transformation ஓகே. கதை எங்கே கெளதம். நான் நினைகிறேன் தாமரை இல்லாட்டி கெளதம் பாடு திண்டாட்டம் தான். மொத்தத்தில் டைரி யில் அங்கங்கே இருக்கும் சில Highlight ஆனா வரிகளை தவிர வசனத்தில் நீங்க சொன்ன மாதிரி பேரையே மாத்தி மாத்தி சொல்லிட்டே இருக்க வேண்டியது தான்.

    எல்லா படத்துல இருந்தும் கொஞ்ச சீன். அவரோட படத்துல இருந்தும் தான். ஒரு வேலை சரக்கு தீந்து போச்சோ. இருந்த தானே தீர ன்னு சசிகுமார் குரூப் கேக்கறது என் காதுல நல்லவே விழுது.

  12. கிரி,
    என்னதான் த்ரிஷா பற்றிக் கூறினாலும், ஜோவுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
    கவுதம் படங்களில் கதாநாயகியர்க்கு ஒரு சிறப்பான வேலையுண்டு. …. அது நடிப்பது. அதனைச் செவ்வனே செய்தது ஜோ மட்டுமே!.

    காக்க காக்கவில் வரும் ஜோ-சூர்யா காட்சி (பாண்டிச்சேரி), மின்னலேயில் வரும் சர்ச் காட்சி,வாரணம் ஆயிரத்தில் வரும் காதலியைத் தேடி அமெரிக்கா போகும் காட்சி, இவ்வுளவு ஏன்… பச்சைக் கிளி மித்துச் சரத்தில் ஆண்ட்ரியா கூறும் “i wanna make love to you" எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்துள்ளார்.
    மேனன் சேட்டனின் தமிழ்ப் பற்று படத் தலைப்பில் மட்டுமோ??
    ஆனால் இவரைப் போன்ற வெகு சிலரால் மட்டுமே மிக அழகாக தலைப்பு தேர்வு செய்யமுடிகிறது

  13. காக்க காக்க கேமராமேன் ; பச்சைக் கிளி முத்துச்சரத்தில் வரும் “call taxi driver"ஆக வருபவர் 🙂

  14. // நட்புடன் ஜமால் said…
    அவசியம் பார்த்திடுவோம் //

    பாருங்க ஜமால்

    ==========================================================================

    கோவி கண்ணன் உங்க டெர்ரர் விம்சர்சனம் பார்த்து அப்படி கூறி இருப்பாரு.. 😉

    ==========================================================================

    // ☼ வெயிலான் said…

    கணேஷ் – இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.//

    தகவலுக்கு நன்றி வெயிலான் 🙂

    ==========================================================================

    // r.v.saravanan kudandhai said…

    பார்க்கிறேன் கிரி//

    நன்றி சரவணன்

    ==========================================================================

    // ஆ! இதழ்கள் said…

    பாடல்களை கேளுங்கள் கேளுங்கள் கேளுங்கள் பிறகு, அவைகளுக்கு நீங்கள் அடிமை, என்னைப்போல்.//

    நிறைய முறை கேட்டு விட்டேன்..:-) ரசனைகள் பல விதம்

    ==========================================================================

    // shankar said…

    கிரி ,
    நல்ல விமர்சனம் : ) //

    நன்றி ஷங்கர்

    ==========================================================================

    // M Arunachalam said…

    Though I don't see chimpanzee movies or Gautam movies, bec of the hype VTV has been getting, I watched the BlueTV (aka Sun TV) Thirai Vimarsanam.//

    :-))))

    //In the clippings they showed, I could see (?) shades of Maniratnam in Gautam. Yes. Most of the scenes were shot in dark or very less light. Then & there I knew that my decision not to bother to watch a Gautam movie is vindicated.//

    பலர் இது போல கூறினார்கள்.. அடுத்த படத்தில் இதை சரி செய்யட்டும்

    ==========================================================================

    // SENTHILKUMARAN said…

    அனைவரும் அளவிற்கு மீறி ரகுமானை புகழ்வது போல எனக்கு தோன்றுகிறது//

    🙂

  15. // எப்பூடி … said…

    படத்தைபோலவே பெரிய விமர்சனம் , நன்றாக இருக்கிறது//

    நன்றி எப்பூடி

    ==========================================================================

    // உடன்பிறப்பு said…

    கவுதம் லூசு மேனன் ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை//

    :-)) அது தான் எனக்கும் புரியலை..

    ==========================================================================

    // காத்தவராயன் said…

    தப்பான க்ளைமாக்ஸை தமிழ் ஜனங்க எப்டி ஏத்துக்கிட்டாங்கன்னு புரியல….. தெலுங்கு க்ளைமாக்ஸ்தான் சரி. //

    படம் முடியும் போது ரொம்ப பிழியாம இருந்ததால இருக்கலாம்

    //GV.மேன‌னின் (அடுத்த‌ ப‌ட‌த்துக்கு இந்த‌ பெய‌ரை ப‌ய‌ன்ப‌டுத்த‌ ப‌ரிந்துரைக்கிறேன்) பெய‌ர் நீள‌மாக‌ நீள‌மாக‌ ச‌ர‌க்கு குறைந்து கொண்டே வ‌ருகிற‌து.//

    🙂

    ==========================================================================

    // வருண் said…

    I think it was Lingusaamy's bheema, Gautam Menon was criticising him very badly as it had nothing original. Now he has come up with "original love story", I suppose! Even the name of hero as "karthik" reminds me of MaNi's alaipaayuthE! If he is such an original thinker, he could not find another name???//

    இவரது பச்சை கிளி முத்துசரம் Derailed படத்தின் அட்ட காப்பி ..இவர் எந்த தைரியத்தில் இப்படி பேசினார் என்றே புரியவில்லை.

    // think this movie has been overrated by so many and I dont understand why.//

    நம்ம ஆளுங்க ஒரு சில படத்தை குப்புற தள்ளுறதுக்கும் தூக்கி வைத்து ஆடுவதற்கும் காரணமே புரியாது.

    ==========================================================================

    // Sadhasivam said…

    உண்மையிலே நீங்க பெரிய ஆள்தான். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இவ்வளவு பெரியதாக எழுதி (Length) எழுதி இருகிறீர்கள். சரி, படத்துல தான் பெருசா எதுவுமே இல்ல..நம்மாலாவது பெருசா எழுதலாம் ன்னு நெனசுடீங்கள.//

    ஹி ஹி ஹி

    //ஆ வூ ன்ன US போயறார் ன்னு. அது ஒரு நல்ல கேள்வி தான். Why blood, same blood.//

    இதுல பார்த்தீங்கன்னா பாட்டெல்லாம் முந்தைய தெலுகு படம் மாதிரி உடனே வெளிநாடு வரும்.. இதுல சம்பந்தமே இல்லாம இருக்குது

    //எல்லா படத்துல இருந்தும் கொஞ்ச சீன். அவரோட படத்துல இருந்தும் தான். ஒரு வேலை சரக்கு தீந்து போச்சோ//

    ஆனாலும் இப்படி வைத்தே படத்தை ஹிட் பண்ணிட்டாரே..திறமையான ஆள் தான் 😉

    //இருந்த தானே தீர ன்னு சசிகுமார் குரூப் கேக்கறது என் காதுல நல்லவே விழுது.//

    நான் அப்படி சொல்லவே இல்லைன்னு கவுதம் கூறி இருக்காரு பார்த்தீங்களா!

    ==========================================================================

    // கைப்புள்ள said…

    த்ரிஷா ஒரு சப்பை ஃபிகர், etho dress pottu emathuthu boss//

    ஹா ஹா ஹா

    ================================================================================

    // Vijay said…

    கவுதம் படங்களில் கதாநாயகியர்க்கு ஒரு சிறப்பான வேலையுண்டு. …. அது நடிப்பது. அதனைச் செவ்வனே செய்தது ஜோ மட்டுமே!.//

    உண்மை தான்.. ஜோ க்கு நடிக்க நல்லா வாய்ப்பு கிடைத்ததும் உண்மை.

    //மேனன் சேட்டனின் தமிழ்ப் பற்று படத் தலைப்பில் மட்டுமோ??//

    அதே அதே!

    //ஆனால் இவரைப் போன்ற வெகு சிலரால் மட்டுமே மிக அழகாக தலைப்பு தேர்வு செய்யமுடிகிறது//

    மணி ரத்னம் கூட அழகாக வைப்பார்.. ஷங்கர் ஸ்டைல் ஆக வைப்பார்.

    //காக்க காக்க கேமராமேன் ; பச்சைக் கிளி முத்துச்சரத்தில் வரும் “call taxi driver"ஆக வருபவர் :)//

    அப்படியா! தகவலுக்கு நன்றி.. அடுத்த முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கவனிக்கிறேன்.

  16. படத்தில் கணேசின் காமெடியை ரொம்ப ரொம்ப ரசிச்சேன் கிரி. சிம்பு இப்படி நடித்திருப்பதை பார்த்து படம் எனக்கு பிடித்துவிட்டது. படத்துல ஒரு ரிச்னெஸ் இருக்கு.

  17. நான் அப்படி சொல்லவே இல்லைன்னு கவுதம் கூறி இருக்காரு பார்த்தீங்களா!

    நானும் படித்தேன் கிரி.

    எது உண்மை எது பொய் னே தெரியல. அதே மாதிரி ஹாரிஸ் யை பார்த்ததாகவும் படித்தேன் ஆனால் அடுத்த ரெண்டு படத்துலயும் அவர் இல்லை என கேள்வி.

    ஹ்ம்ம், பார்போம். நல்ல படம் கொடுத்த சரி.

  18. படத்தின் ஒளிபதிவாலரை விட்டு விட்டீர்களே கிரி, கேமரா கோணங்கள் அவ்வளவு அருமை.

    மற்றபடி படம் முழுவதும் சிம்பு-த்ரிஷா தான் வருகிறார்கள். இதனால் சலிப்பு தோன்றுவதை கட்டுப்படுத்த முடியவில்லை

    இன்னொன்று, கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடித்தால் கண்டிப்பாக அமெரிக்கா சென்று வந்து விடலாம் போல. எல்லா படங்களிலும் அமெரிக்கா தான்.

    எனக்கும், ARR-goutham கூட்டு haris-goutham கூட்டை விட சிறப்பாக இல்லாததுபோல் தான் தோன்றுகிறது.
    பாடல்களை தனியாக கேட்கும் போது அவ்வளவாக எடுபடவில்லை. ஆனால் படத்துடன் பார்க்கும போது, நன்றாக உள்ளது. பாடல்கள் படத்துடன் நன்றாக ஒன்றிவிடுகிறது.

  19. ***வருண் said…

    I think it was Lingusaamy's bheema, Gautam Menon was criticising him very badly as it had nothing original. Now he has come up with "original love story", I suppose! Even the name of hero as "karthik" reminds me of MaNi's alaipaayuthE! If he is such an original thinker, he could not find another name???//

    இவரது பச்சை கிளி முத்துசரம் Derailed படத்தின் அட்ட காப்பி ..இவர் எந்த தைரியத்தில் இப்படி பேசினார் என்றே புரியவில்லை.

    Thanks for this information, Giri. I did not know about it. Let me do little more research and take on this GM on this issue soon!

  20. Giri,

    Check this out!

    ***Gautham rips Bheema!
    By Moviebuzz
    Friday, 08 February , 2008, 12:52

    Gautham Vasudeva Menon is a gutsy guy. In the weekly column
    "love/hate" in "The Hindu", Cinema Plus (Feb 8), he has ripped Vikram-
    Lingusamy Bheema to shreds!
    The film Gautham loves is Mani Ratnam classic Nayakan, which he says is
    his "all time favourite film". And why he hates Bheema, Gautham
    explains- "when you see Bheema, you are left wondering what Vikram
    saw in the narration and in the first place made him sign a film like this.
    The way it was made, it was a rip-off of so many films without a trace of
    originality running through it."

    The ace director further asks- "When you see a film that has a scene that
    reminds you of your own film, you don't know whether they are trying to
    emulate you or imitate you… In so many places, it was like
    Thalapathy,like Company,like Kaakha Kaakha and the last scene was
    straight out of The Departed. More than being a film I hate, it was a film
    that completely disappointed me."

    Will Vikram and Lingusamy defend their much publicised "classic with
    never-seen-before stunning climax" ? ***

    Look, how he talked!!! I just checked out derailed plot and realized that what you said it TRUE!

    I cant believe this guy has the nerve criticise others when he is worst of all!!!

  21. // Sadhasivam said…
    எது உண்மை எது பொய் னே தெரியல. அதே மாதிரி ஹாரிஸ் யை பார்த்ததாகவும் படித்தேன் ஆனால் அடுத்த ரெண்டு படத்துலயும் அவர் இல்லை என கேள்வி//

    யாருக்கும் புரியலை!

    //ஹ்ம்ம், பார்போம். நல்ல படம் கொடுத்த சரி.//

    அதே!

    ======================================================================

    // ரோஸ்விக் said…

    படத்தில் கணேசின் காமெடியை ரொம்ப ரொம்ப ரசிச்சேன் கிரி. சிம்பு இப்படி நடித்திருப்பதை பார்த்து படம் எனக்கு பிடித்துவிட்டது. //

    எனக்கும் 🙂

    //படத்துல ஒரு ரிச்னெஸ் இருக்கு//

    கவுதம் படத்துல எப்போதும் இருக்கும்

    ======================================================================

    // Senthilkumar Manavalan said…

    படத்தின் ஒளிபதிவாலரை விட்டு விட்டீர்களே கிரி, கேமரா கோணங்கள் அவ்வளவு அருமை.//

    கூறி இருக்கிறேன் செந்தில்

    //படம் முழுவதும் சிம்பு-த்ரிஷா தான் வருகிறார்கள். இதனால் சலிப்பு தோன்றுவதை கட்டுப்படுத்த முடியவில்லை//

    ஆமாம் அதனால் தான் சிம்பு வேலை சம்பந்தமாக காட்சிகள் கொஞ்சம் சேர்த்து இருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்து இருக்கும்

    //கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடித்தால் கண்டிப்பாக அமெரிக்கா சென்று வந்து விடலாம் போல. எல்லா படங்களிலும் அமெரிக்கா தான்.//

    ஹி ஹி ஹி ஆமாம்

    //பாடல்களை தனியாக கேட்கும் போது அவ்வளவாக எடுபடவில்லை. ஆனால் படத்துடன் பார்க்கும போது, நன்றாக உள்ளது. பாடல்கள் படத்துடன் நன்றாக ஒன்றிவிடுகிறது//

    உண்மை தான், நானும் இதை நினைத்தேன்.

    ======================================================================

    வருண் இந்த கவுதமை புரிந்து கொள்ளவே முடியலை..

    தன்னிடமும் தவறை வைத்துக்கொண்டு எப்படி இவரால் அடுத்தவரை குறை கூற முடிகிறது என்று தெரியவில்லை. ஒருமுறை சிவாஜி படத்தில் கதை இல்லை என்று கூறி இதை நம்பி எப்படி ஷங்கர் படம் எடுத்தார் என்று கூறி இருந்தார். சாதிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. அவருக்கு தன்னோட திரைக்கதை மேல் நம்பிக்கை அதே போல வெற்றியும் பெற்றார். அப்படி பார்த்தால் எந்தவித அனுமதியும் பெறாமல் மொத்த படத்தையும் derailed ல் இருந்து சுட்ட இவரை என்ன சொல்வது 🙂

  22. //இவரது பச்சை கிளி முத்துசரம் Derailed படத்தின் அட்ட காப்பி ..இவர் எந்த தைரியத்தில் இப்படி பேசினார் என்றே புரியவில்லை.//

    * If I remember correctly Gautham acknowledged it in the title as well as mentioned openly (only for this movie 🙂 ) in the interviews.

    * Regarding the gap in not showing Karthik's profession, if you remember, initially KS Ravikumar would say that he'll start the movie after 2/3 months and consider him then. I guess, it implicitly means Karthik is sure of his opportunity with KSV, spent the next 2/3 months ogling behind Jessie. After that (or post interval), you can observe there will be more scenes in movie filming backdrop.

    * Most of the duet songs were shot in Malta, only the last segment were shot in US.

    * After a long time, I enjoyed the orchestration of "Kannukkul Kannai " song in Rahman's music. Taste differs. 🙂

    * I see Jessie's character as a girl who fell in love and have strong feelings for her lover. At the same time she is sensitive to her family's wish and impact of her love on her family and community. It is the oscillation between these two extremes force to keep changing her decisions. However, her feelings are getting stronger as the time pass. I think this captured well through the narration. Jessie's characterization also shows she is not strong willed as can be seen by her last decision to ditch Karthik.
    If you observe, Karthik's characterization is that he is strong willed, never doubted about his love and willing to go any extreme.

    * Why the name Karthik (urban middle class engineering graduate)? Jessie, a programmer analyst liking a Murugesan or Paalpandi from remote districts(even as a fellow in same profession which is not quite rare these days) is a distant reality.

    * The movie do have typical GV Menon's mokkai's but far less this time. 🙂

    * Week area in my opinion was how come a leading Cameraman develop a friendship with a young guy at short time.

  23. இந்தியன் முதலில் உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி 🙂

    //If I remember correctly Gautham acknowledged it in the title as well as mentioned openly (only for this movie 🙂 ) in the interviews//

    🙂

    //Most of the duet songs were shot in Malta, only the last segment were shot in US.//

    உண்மை தான்! எப்படியோ அவர் விருப்ப இடத்தில் எப்படியோ ஒரு காட்சி வைத்து விட்டார் 😉

    // After a long time, I enjoyed the orchestration of "Kannukkul Kannai " song in Rahman's music. Taste differs. :)//

    இந்தியன் எனக்கும் அந்த பாடல் ரொம்ப பிடித்தது.. உண்மையில் கூறினால் பாடலை கேட்ட போது அவ்வளவாக பிடிக்கவில்லை ஆனால் படத்தில் பார்க்கும் போது நன்றாக இருந்தது.

    //The movie do have typical GV Menon's mokkai's but far less this time. :)//

    ஹா ஹா ஹா நன்றாகவே இருந்தது. மோசம் என்றெல்லாம் எந்நாளும் கூற முடியாது.. அப்புறம் எனக்கு அவருடைய அனைத்து படங்களும் ரொம்ப பிடிக்கும் பச்சை கிளி முத்துச்சரம் தவிர. குறிப்பாக பாடல் காட்சிகளை எடுக்கும் விதம் ரொம்ப சிறப்பு.

    //Week area in my opinion was how come a leading Cameraman develop a friendship with a young guy at short time.//

    நம்பினால் நம்புங்க! 🙂 இதை நானும் நினைத்தேன். சரி நிறைய நெகடிவ் விஷயத்தை கூற வேண்டாம் என்று அதை தவிர்த்து விட்டேன் 🙂

  24. ////காக்க காக்க கேமராமேன் ; பச்சைக் கிளி முத்துச்சரத்தில் வரும் “call taxi driver"ஆக வருபவர் :)//

    அப்படியா! தகவலுக்கு நன்றி.. அடுத்த முறை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கவனிக்கிறேன்.//

    Vettayadu vilayadu la M.L.A va varuvaar…

  25. yanga class விண்ணைத்தாண்டி வருவாயா
    details unkaluku veanumna
    please call this நம்பர்
    9677332919

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here