Singapore Stadium | Marina Bay Sands

5
Singapore Stadium | Marina Bay Sands

நிழற்படங்கள் பார்ப்பதில் எனக்கு அலாதி ஆர்வம் மற்றும் நல்ல ரசிகன் கூட.

படங்களைப் பார்த்துப் பார்த்து நாமும் சிறப்பான படங்களை எடுப்போம் என்று முயற்சித்து ஒன்றிரண்டு நன்றாகவும் மீதி உள்ளவைகள் மிக மொக்கையாகவும் வந்ததால், கடுப்பாகி விட்டுட்டேன்.

உண்மையிலேயே பிரச்சனை முழுக்க என்னிடம் மட்டுமேவா அல்லது நிழற்படக் கருவியிலும் விசயம் இருக்கிறதா? என்று தோன்றியது.

இதன் காரணமாகத் தரமான நிழற்படக் கருவியில் படம் எடுத்துச் சோதித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்தேன்.

Singapore Stadium | Marina Bay Sands

நண்பர் சுரேஷ் Canon EOS 7D நிழற்படக் கருவி வைத்து இருந்தார். அவரிடம் இரவல் வாங்கி முயற்சித்துப் பார்க்கலாம் என்று கேட்ட போது மறுப்பேதும் கூறாமல் கொடுத்தார். நன்றி 🙂 .

ஆனால், இன்னொரு நண்பன் பாபுவும் கேட்டு இருந்ததால், சில பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு லென்ஸ் பாபுக்கும் நிழற்படக் கருவி எனக்கும் முடிவாகியது.

எனக்கு இதில் பழக்கம் இல்லையாததால் Basic Lens எனக்கும் சக்திவாய்ந்த லென்ஸ் பாபுக்கும் முடிவானது.

பாபுவிடம் இதைப் பயன்படுத்தும் முறையைக் கேட்டுக்கொண்டேன். பின்னணியை மங்கலாகக் காட்டும் படம் எனக்குப் பிடிக்கும்.

எனவே இதை எப்படிச் செய்வது என்று தெரிந்து கொண்டேன்.

Stadium

ஆனால், முதல் முறை DSLR கருவியில் முயற்சிப்பதால், பலவற்றை முயற்சித்துச் சொதப்பாமல், வழக்கமா எடுப்பது போல எடுப்போம், இது சரியாக வந்தால் அடுத்த முறை மற்றதை முயற்சிப்போம் என்று மங்கலாக எடுக்கும் திட்டத்தைக் கைவிட்டேன்.

முதலில் Marina Bay Sands சென்று படம் எடுக்கலாம் என்று திட்டமிட்டேன் ஆனால், பாபு Stadium ல் எடுக்கப்போவதாகக் கூறியதால், சரி இங்கே சென்று பிறகு Marina Bay Sands செல்லலாம் என்று முடிவு செய்தேன் ஆனால், நான் Stadium வருகிறேன் என்று கூறவில்லை.

யாருடைய ஆலோசனையும் இல்லாமல் நானே எடுத்துப் பார்க்கணும் என்று தோன்றியதால் கூறவில்லை, வேறு ஒன்றுமில்லை.

ஸ்டேடியம் உள்ளே செல்லாமல் வெளிப்புறம் மட்டும் எடுத்தேன். என்னோட கெட்ட நேரம் முந்தைய இரவு கடுமையான மழையால் மேகமூட்டமாக இருந்தது. இதனால் சில படங்களுக்கு இயற்கை வெளிச்சம் போதவில்லை, இருப்பினும் பரவாயில்லை.

இங்கே முடித்து Marina Bay Sands.

Marina Bay Sands

நிழற்படம் எடுக்கும் போது எனக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது.

வருகிறவர்கள் பெரும்பாலும் மொபைலை தான் நோண்டிக்கொண்டு இருந்தார்கள், கிட்டத்தட்ட 70% பேர் உடன் இருந்தவருடன் பேசாமல் மொபைலைப் பார்த்துப் பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருந்தார்கள்.

இந்தத் திறன் பேசி (Smart phone) பிரபலமாகிய பிறகு இதனால் வசதிகள் கிடைத்தாலும் மக்கள் நேரில் உள்ளவர்களுடன் பேசுவதைக் காட்டிலும் Virtual உலகத்தில் தான் அதிகம் இன்பம் அடைகிறார்கள்.

நான் ஆர்வத்துக்குப் படம் எடுப்பவன் என்பதால், எனக்கு எதெல்லாம் சுவாரசியமான காட்சிகளாகத் தோன்றியதோ அவற்றை எல்லாம் எடுத்துத் தள்ளி விட்டேன்.

பின்னர் அதில் சிலவற்றை நீக்கி அளவாக இங்கே கொடுத்து இருக்கிறேன்.

எனக்கு நன்றாக எடுக்க வருகிறது ஆனால், பயிற்சி இல்லை. இதற்காக நேரம் செலவழித்தால் இன்னும் சிறப்பாக எடுக்க முடியும் என்று தோன்றியது.

அதோடு நிழற்படக் கருவி முக்கியக் காரணம் என்றும் புரிந்தது.

இரவில் எடுக்கும் போது பயன்படுத்தும் லென்ஸ் மற்றும் தூரமாக எடுக்கப் பயன்படுத்தும் லென்ஸ், நான் கொண்டு செல்லாததால் அந்தக் காட்சிகள் மட்டும் சுமாராக இருக்கும்.

இவற்றை எடுக்க எனக்கு 6 மணி நேரம் ஆனது.

சிங்கப்பூர் தேசிய தினம்

ஆகஸ்ட் 9 ல் சிங்கப்பூர் 50 வது தேசிய தினம் வருவதால் மாலையில் விமானச் சாகச காட்சிகள் மற்றும் வாண வேடிக்கையும் இருந்தது.

அதையும் எடுக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

ஒரே சமயத்தில் எண் ஐந்து போல விமானங்கள் அணி வகுத்துச் சென்றன. போர் விமானங்கள் என்பதால், சத்தம் காது கிழிகிறது.

கண் இமைக்கும் நேரத்தில் ஒரு விமானம் பின்புறம் தீயை கக்கிக் கொண்டு சென்றது. மேக மூட்டமாக இருந்ததால், கொஞ்சம் ஏமாற்றமே.

மேக மூட்டத்தால், குறிப்பிட்ட உயரத்திற்குப் பிறகு சென்ற விமானங்கள் மறைந்து விட்டன. வாண வேடிக்கை கிட்டத்தட்ட தீபாவளி அன்று வெடிப்பது போல நீண்ட நேரம் வெடித்தார்கள்.

படம் எடுப்பவர்கள் பல வகையான ஆர்வம் கொண்டவர்கள்.

ரசனைகள்

மனிதர்களை மட்டும் எடுப்பவர்கள், இயற்கை காட்சிகள், வறட்சியான பகுதியை எடுப்பவர்கள், பூக்களை எடுப்பவர்கள், ஒப்பனை செய்து எடுப்பவர்கள், அரங்கம் அமைத்து எடுப்பவர்கள் என்று பல வகையினர்.

இதில் எனக்கு மனிதர்களை எந்த ஒப்பனையும் இல்லாமல் இயல்பாக எடுப்பது ரொம்பப் பிடிக்கும் (“மயக்கம் என்ன” தனுஷ் மாதிரி).

விலங்குகள் மற்றும் வறட்சியான பகுதிகளையும் எடுக்கப் பிடிக்கும்.

அந்தப் பகுதியில் இருந்த பூக்களை எடுக்க நிழற்பட வல்லுனர்கள் கூட்டமாக இருந்தார்கள். எனக்கு அந்தப் பூக்களை விட, இவர்களை எடுக்கத்தான் பிடித்தது 🙂 .

யாருடைய உதவியும் ஆலோசனையும் இல்லாமல் நானே சொந்தமாகப் பல கலவையான மக்களை நிழற் படங்கள் எடுத்தேன்.

கொசுறு 1

படங்களை மெருகேற்ற Google Photos ல் உள்ள Mars மற்றும் Juno மட்டுமே பயன்படுத்தினேன். வேறு எந்த மென்பொருளையும் பயன்படுத்தவில்லை.

ஆனால், பயன்படுத்தினால் இன்னும் மெருகேற்றி இருக்க முடியும். முதல் முறை என்பதால் வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன்.

கொசுறு 2

DSLR ல் எடுப்பதில் ஒரு வசதி என்னவென்றால், நாம் ஒருவரைப் படம் எடுக்கும் போது அவர்களுக்கு அவர்களைத் தான் எடுக்கிறோம் என்று தெரியாது 🙂 .

வேறு எங்கோ நிழற்படக் கருவி Focus செய்வது போல இருக்கும் அதனால் இயல்பாக Singapore Stadium | Marina Bay Sands ல் எடுக்க முடிந்தது.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. அனைத்து படங்கள் நன்றாக உள்ளது. Portrait, Animals, Street photography, nature, night photography function photography என பல வகையான புகைப்படங்கள் எடுங்கள், எங்களுக்கு பகிருங்கள்.

    பின்புலம் மங்கலாகத் தெரிய 55-200 லென்ஸ் பயன்படுத்துங்கள்.

  2. எனக்கு இந்த துறையில் ஆர்வம் இருப்பினும் எப்படி முன்னேற்றம் அடைவது என்று தெரியவில்லை… நீங்கள் எடுத்த நிழல் படங்கள் அருமையாக உள்ளது..

    பழைய கோவில்கள், சிதிலமடைந்த கோட்டைகள், வறண்ட இடங்கள், மலையுச்சி, காடுகள் இது போன்ற பகுதிகளில் புகைப்படம் எடுப்பது எனக்கு பிடித்தமான ஓன்று!!!

    இந்தியா முழுமையும் (முக்கிய இடங்கள்) நண்பன் சக்தியுடன் பயணித்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற நீண்ட கனவு உள்ளது… பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. Pond Mirror Image Snap – மிக அருமையான கோணம்.

    Photography is not about knowing how to use the camera.
    Its about viewing the schene with different angle.
    Its about hutning the Beauty & Campturing stories and moments.

    ஒரு தேர்ந்த புகைபட நிபுணராக “கோணம் பார்த்தலில்” மாற்றி யோசிப்பது முக்கியம்.
    உங்களுக்கு இயல்பில் அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.

  4. தங்களுடைய நிழற்படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது , தங்கள் எடுத்த புகைப்படங்களின் வண்ணக் கலவையின் மூலம் தாங்கள் பயன்படுத்திய புகைப்படக்கருவியின் தரம் தெரிகின்றது ,எனது நண்பரும் புகைப்படம் எடுப்பதில் விருப்பம் உள்ளவர் ,அவர் ஓரு நிழற்படத்தை நாம் பார்க்க விரும்பும் தனிப்பட்ட கோணத்தில் நம் எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் எனக் கூறுவார், அது போலவே தங்கள் எண்ணத்தை இந்த நிழற்படங்கள் பிரதிபலிக்கின்றது, மேலும் சிறப்பான நிழற்படங்கள் எடுக்க வாழ்த்துக்கள் கிரி.

  5. @சங்கர் நீங்கள் குறிப்பிட்ட முறையில் எடுக்க முயற்சிக்கிறேன். தற்போது எடுக்க நிழற்படக் கருவி இல்லை, திரும்ப அடுத்த மாதம் எடுக்கணும் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

    அடுத்த மாதம் சிங்கப்பூர் 50 வது தேசிய தினம் வருகிறது.

    @யாசின் உங்க சக்தியையும் உங்களையும் சேர்த்து ஒரு படம் நான் எடுக்க வேண்டும் 🙂

    @முத்து & கார்த்திக் நன்றி 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!