சிங்கப்பூர் அரசாங்கம் வெற்றிகரமாக சிங்கப்பூர் Formula 1 Grand Prix இரவுப்போட்டியை நடத்தி முடித்து விட்டது.
போட்டியைக் காணச்சென்றவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கும். எனக்கு கிடைத்த அனுபவங்களைக் கூறுகிறேன் 🙂 .
இக்கட்டுரை பெரிதாகத்தான் போய் விட்டது என்று நினைக்கிறேன்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.
சிங்கப்பூர் Formula 1
சில சுவாரசியங்கள்
- சிங்கப்பூர் அரசாங்கம் செய்து இருந்த ஏற்பாட்டை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
- போட்டியின் போது கார் எழுப்பிய ஒலியால் காதே செவிடாகி விடும் போல இருந்தது.
- கார் செல்லும் போது எழும் ஒலி காதில் ஊசி குத்துவது போல உள்ளது. நல்லவேளையாக காதுக்கு பாதுகாப்பு சாதனம் எடுத்து சென்றதால் தப்பித்தேன்.
- ஒலியின் அளவு அதிகமாக இருக்கும் என்று நான் நினைத்து இருந்தாலும் என் எதிர்பார்ப்பை விட 100% அதிகமாக இருந்தது.
- கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நாம் வாங்கும் டிக்கெட் விலைக்கு தகுந்த மாதிரி பார்கோட் எண் டிக்கெட்டுகள் கிரெடிட் கார்டு மாதிரி தரப்பட்டு இருந்தன.
- எலக்ட்ரானிக் சோதனைக்கு பிறகே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆப்ரிக்கா நடன மற்றும் இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சி
- உள்ளே வந்ததும் ஆப்ரிக்கா நாட்டு நடன மற்றும் இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. என் இடுகைகளை (Post) படிப்பவர்களுக்குத் தெரியும் எனக்கு மேளச்சத்தம் என்றால் ரொம்ப பிடிக்கும் என்று 🙂 .
- மவனே! இவங்க அடித்த அடியும் ஆடுன ஆட்டமும் என்னை சரக்கடிக்காமாலே கிறுகிறுக்க வைத்து விட்டன.
- அவர்கள் இசைத்த இசைக்கு ஆடியே ஆக வேண்டும் போல இருந்தது அவ்வளவு அருமை ஆனால் போட்டி பார்க்க இடம் பிடிக்க வேண்டும் என்று என் நண்பன் அழைத்ததால் அரை மனதோடு சென்றேன்.
- இவர்கள் இசை எப்படி இருக்கும் என்றால் நீங்கள் National Geographic சேனலில் ஆப்ரிக்கா காடு பற்றிய நிகழ்ச்சி என்றால் அதில் சபாரி இசை ஒன்று வரும்.. அதே தான் இது.
- எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த இசை.
- அவர்கள் பாடிய பாடல் ஒரு இழவும் புரியவில்லை என்றாலும் கேட்க ரொம்ப நன்றாக இருந்தது. இசைக்கு ஏது மொழி!
- இப்போது கூட அந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று நினைத்து வருத்தமாக இருக்கிறது 🙁 என்னோட நண்பனிடம் புலம்பித் தள்ளிட்டேன்.
மின்னல் வேகம்
- போட்டியின் போது வருகிற ஒவ்வொரு காரும் மின்னல் வேகத்தில் வருகிறது. மிகைப்படுத்திக் கூறவில்லை.
- போட்டியைப் பார்க்க வந்து இருந்த அனைவரும் கார்களைப் படமெடுக்க திணறிக்கொண்டு கொண்டு இருந்தார்கள். நாம் இருக்கும் இடத்தை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கடந்து செல்கிறது.
- பலர் படமெடுக்கும் நேரத்தைக் கணிக்க முடியாமல் பாதிக் காரையும் வெறும் சாலையையும் எடுத்துக்கொண்டு விழித்துக்கொண்டு இருந்தார்கள். பார்க்க நகைச்சுவையாக இருந்தது.
- ஒருத்தர் என்னென்னவோ கணக்கு செய்து எடுத்துப் பார்த்தார்… ம்ஹீம் ஒருமுறை கூடச் சரியாக எடுக்க முடியவில்லை. காற்றை விட வேகமான வேகத்தில் கார்கள் செல்கின்றன.
- கார் பிரேக் போடும் போது பட்டாசு வெடிப்பதைப் போலச் சத்தம் வருகிறது.
Missy Elliot
- பயிற்சிப் போட்டி நடந்த போது போட்டிக்கான இடைவெளியில் அமெரிக்க பாடகி Missy Elliot பாடல் மற்றும் அவரது குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இது முதலில் எங்களுக்குத் தெரியவில்லை.
- நான் சத்தம் கேட்டுச் சரி! அந்த ஆப்ரிக்கா குழு தான் பாடுகிறார்கள் என்று நினைத்து நண்பர்களை அழைத்துக்கொண்டு அங்கே சென்றால் இவர்கள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
- உங்களின் கற்பனைக்கு எட்டாதளவில் பெரிய பெரிய அளவில் ஒலிப் பெருக்கிகளை வைத்து அலற விட்டு இருந்தார்கள்.
- ஹய்யோ! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. என் உடம்பினுள் மின்சார அலைகள்.
- இது வரை தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து இருந்த ஒரு அட்மாஸ்பியர் கண் எதிரில் நடந்து கொண்டு இருந்தது.
- பிரபல பாடகர்கள் நிகழ்ச்சிகளை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்து இருக்கலாம் ரசிகர்கள் எழுப்பும் கரவொலி உற்சாகக் கத்தல்கள்.. அன்று தான் முதன் முதலாக அந்த அந்த அந்த… அது என்ன… அதை அனுபவித்தேன்.
- வெளிநாடுகளிலிருந்து பலர் போட்டியைப் பார்க்க வந்து இருந்தார்கள் அவர்களில் பலர் கையில் பீர் கப்புடன் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.
- ஒரு பெண் ஆடிச்சு பாருங்க.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னமோ போங்க.. நம்ம மனசு நம்மகிட்ட இல்லை 🙁 .
- அதிலும் ஒரு பெண் நம்ம பசங்க மாதிரி வாயில் விரலை வைத்து உய் உய் உய் னு விசில் அடித்துத் தூள் கிளப்புது.
- வழக்கம்போல எனக்கு கை கால் எல்லாம் பரபரன்னு ஆகி விட்டது.
சாப்பாடா முக்கியம்
- இங்கேயும் வில்லனாக இன்னொரு நண்பன் ஆத்தா வையும் காசு கொடுங்கற மாதிரி அணத்தி என்னை வேறு இடத்துக்குக் காது வலிக்குது, பசிக்குதுன்னு சாப்பிடக் கூட்டிட்டு போய்ட்டான்.
- எனக்கு அழுகை அழுகையா வருது. ஏங்க! நீங்களே சொல்லுங்க இப்ப சாப்பாடா முக்கியம்.. தினம் தினம் அதைத்தாங்க பண்ணிட்டு இருக்கோம். நீங்களே ஒரு நியாயத்தைச் சொல்லுங்க!
- அவர்கள் ஆடியது பெரும்பாலும் Club Music பாடல்களுக்காக (பாடியது கறுப்பின ஆண்கள் பெண்கள்) பட்டாசாக இருந்தது. High Decibel சத்தத்தில் அந்த ஏரியாவே ரணகளப்பட்டுக்கொண்டு இருந்தது.
- இதில் இன்னொரு முக்கியமான விசயத்தைக்கூற வேண்டும்… 🙂 .
- பாடல் பாடிய பெண் ஒரு ஜோடி ஷூக்களில் தன் கையெழுத்திட்டு ரசிகர்கள் பக்கம் தூக்கி எறிந்தார்… அதை பிடிக்கப் பெரிய அடிதடியே நடந்தது.
- இது நமக்கு ஒரு அவமானப்படுத்தும் சம்பவம் போலத் தோன்றினாலும் அவர்களுக்கு இவை ஒரு சகஜமான விஷயம். இருப்பினும் அது எனக்கு ஒரு தர்மசங்கடமான நிகழ்வாகவே இருந்தது.
- ஷூக்கு பதிலாக வேறு எதுவும் செய்து இருக்கலாம் என்று தோன்றியது.
- இருப்பினும் நாம் வளர்ந்த விதம் வேறு அவர்கள் நிலை வேறு என்பதால் இதில் நாம் வருத்தப்பட ஒன்றுமில்லை என்று நானே சமாதானம் அடைந்து கொண்டேன்.
- இந்தியாவில் இப்படி நடந்து இருந்தால் இந்தியர்களை ஷூவை வீசி அவமானப்படுத்தி விட்டார் என்று போராட்டம் நடத்தி அந்தக் குழுவை டரியல் ஆக்கி இருப்பார்கள் ஹி ஹி ஹி .
- துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று தலைதெறிக்க ஓடி இருப்பார்கள் 😀 .
- போட்டியைப் பார்க்க வந்து இருந்த ஒரு வெளிநாட்டுப் ஃபிகரை பலர் சைட் அடித்துக்கொண்டு இருந்தார்கள்.
- பெண்கள் சிலரின் முகத்தில் வியப்பும் பலரின் முகத்தில் பொறாமையும் கொடி கட்டிப் பறந்தது.
- அந்த அளவிற்கு சூப்பர் ஃபிகர் ஆக இருந்தது… என்னது! எங்களைப் பற்றிக் கேட்கறீங்களா.. ஹி ஹி ஹி அவங்களே அப்படின்னா.. நாங்கெல்லாம்… 😉 .
சுத்தம்ன்னா சிங்கப்பூர்
- அங்குக் குடித்து விட்டுப் போடும் தண்ணீர் பாட்டில்கள் காலி பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை உடனுக்குடன் ஒரு பணியாளர் சுத்தம் செய்து சிங்கப்பூர் பெருமையை நிலை நிறுத்திக்கொண்டு இருந்தார்.
- ரெடிமேட் கழிவறைகளை இதற்காகவே ஏற்பாடு செய்து போட்டிக்கு வந்து இருந்தவர்களின் சிரமங்களை முற்றிலும் குறைத்து இருந்தனர்.
- அநியாயத்திற்கு இவங்க நல்லவங்களா பொறுப்பானவங்களா இருந்து மற்ற நாட்டினரின் பாராட்டுதல்களை மனதாரப்பெற்றுக்கொண்டு இருந்தார்கள்.
- இந்தப்போட்டி நகரத்தினுள் நடப்பதால் வேறு எந்தக்குழப்பமும் வந்து விடக் கூடாது என்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
- அனைத்து இடங்களிலும் பார்வையாளர்கள் குழப்பமின்றி செல்லக் குறியீடுகள் வைக்கப்பட்டு இருந்தன.
- பெரும்பாலும் எல்லோரும் கையில் பீர் கப்புடனே சுற்றிக்கொண்டு இருந்தார்கள் ஆனால், ஒரு சிறு கலாட்டா, அநாகரீகமான சம்பவம் கூட நடக்கவில்லை.
- முன்பே கூறி இருந்தபடி போட்டி நடக்கும் சாலை இந்தப்போட்டிக்காக புதுப்பிக்கப் படவில்லை பழைய சாலையிலே நடந்தது. சாலையின் தரம் அந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது.
- இவர்கள் செய்து இருந்த ஏற்பாடுகளின் சிறப்பைக் கூறினால் இந்த ஒரு கட்டுரைபோதாது. இதை நிச்சயமாக நான் கொஞ்சம் கூட மிகைப்படுத்திக் கூறவில்லை.
கிரேன்
- போட்டி வாகனங்கள் பழுதடைந்தால் அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு செல்லக் கிரேன் தயாராக இருந்தது. பழுதடைந்தபோது எளிதாக தூக்கிக்கொண்டு வந்து விட்டார்கள்.
- இதைப் போலச் சமயங்களில் கார் பழுதடைந்து வழியில் உள்ளது என்று காட்டுத்தனமான வேகத்தில் வரும் மற்ற வாகனங்களுக்கு தெரிவிக்க பெரிய திரையில் சிவப்பு விளக்கு ஒளிரச்செய்து எச்சரிக்கை செய்தார்கள் (இது சிங்கப்பூர் என்றல்ல F1 போட்டி நடக்கும் எங்கும் இதே போலத்தான்)
- ஹெலிகாப்டர் மூலம் போட்டிகள் கண்காணிக்கப்பட்டது அதே போல அங்கிருந்து காணொளி எடுக்கப்பட்டு நேரலையாக காண்பிக்கப்பட்டது.
- மேலே இருந்து பார்க்கும் போது (இரவு நேரம் என்பதால்) போட்டி நடக்கும் சாலை மட்டும் ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்தது… கண்கொள்ளாக் காட்சி.
இறுதிப்போட்டி சுவாரசியங்கள்
நான் முன்பே கூறியபடி இறுதிப்போட்டி பார்க்கவில்லை ஆனால், தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்த்தேன்.
சிங்கப்பூரில் இந்தப்போட்டி மூன்றாவது வருடமாக நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற அனைவராலும் இந்த முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபெராரி அணியின் ஃபெர்னாண்டோ அலான்சோ வெற்றி பெற்றார்.
இரண்டாம் இடத்தை Sebastian Vettel ம்
மூன்றாம் இடத்தை Mark Webber ம் முறையே பெற்றார்கள்.
கடந்த ஆண்டு 2009 வெற்றி பெற்ற ஹாமில்டன் நிலை பரிதாபமாகி விட்டது.
இவரும் Webber என்ற வீரரின் காரும் லேசாக மோதிக்கொண்டதில் இவரது கார் பழுதாகி ஒரு ஓரமாக சென்று நின்று விட்டது.
செம கடுப்பாகி ஸ்டீரியங்கை பிடுங்கி வெளியே எறிந்து விட்டார்… உண்மையில் ரொம்ப பரிதாபம் தான். போட்டியில் தோல்வி அடைந்தால் கூட மனதைத் தேற்றலாம் இது போல நடந்தால் ரொம்ப கொடுமை தான்.
இதனால் இவரது செய்கை எனக்கு ஆச்சர்யத்தை தரவில்லை. வழக்கம் போல ஊடகங்கள் அவர் காரினுள் இருந்து வருவதையும் ஸ்டீரியங்கை பிடுங்கி எறிந்ததையும் படம் பிடித்துத் தள்ளின.
அவருக்கு இது எவ்வளவு கடுப்பாக இருந்து இருக்கும் என்று அவரது நிலையிலிருந்து பார்த்தால் அறியலாம்.
இந்தப்பிரச்சனையால் இவருக்கு பாயிண்ட் இழப்பு ஏற்பட்டு விட்டது. இதை ஈடுகட்ட இவருக்கு இன்னும் சில போட்டிகள் தேவைப்படும்.
போட்டி முடியும் நேரத்தில் போட்டியாளர் Heikki Kovalainen கார் பின்னால் தீப்பிடித்து விட்டது.
பின்னர் காரை நிறுத்தி (பொறுமையாகத்தான் நிறுத்தினார் பார்க்கிற எனக்குத் தான் டென்ஷன் ஆகி விட்டது) தீ அணைப்பானை பயன்படுத்தி இவரும் மற்றவர்களும் தீயை அணைத்தனர்.. பார்க்கப் பாவமாக இருந்தது.
மரியா கேரி
போட்டியின் இடைவேளையில் கடைசி நாளன்று பிரபல பாப் பாடகி மரியா கேரியின் நிகழ்ச்சி நடைபெற்றது.
என்னால் பார்க்க முடியவில்லை என்பதால் இது பற்றிச் சுவாராசியமாக எதுவும் கூற முடியவில்லை.
கடைசியாக சிங்கப்பூர் அரசாங்கம் எந்த வித சிறு பிரச்சனையும் இல்லாமல் அனைவரையும் திருப்தி அடைய செய்து போட்டியை நிறைவு செய்தது.
சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
குறிப்பு: என் நண்பன் எடுத்த படங்கள் ஏகப்பட்டது இருப்பதால் அதில் சிலவற்றை தேர்வு செய்து விரைவில் தருகிறேன்.
கொசுறு
கடந்த வாரம் என் மனைவியும் மகனும் வந்து விட்டார்கள். இவர்களை அழைத்து வர விமான நிலையம் சென்று இருந்தேன்.
இவர்களுக்காக காத்து இருக்கும் போது அப்படியே சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்த போது (சைட் அடித்துக்கொண்டு இருந்தேன் என்பதை கொஞ்சம் டீசன்ட்டாக கூறினேன்) புது அரசியல் தலைவி குஷ்பூ நின்னுட்டு இருக்காங்க அவரது கணவர் சுந்தர் C க்காக.
கோலங்கள் படம் கோபியில் ஷூட்டிங் எடுத்த போது முதல் முறையாக பார்த்தது அதன் பிறகு இப்போது தான் பார்த்தேன்.
இவங்க பொண்ணுக குடிக்கிற பூஸ்ட் காம்ப்ளான் எல்லாம் இவங்களே வாங்கி குடித்து விடுறாங்க போல 🙂 .
தொடர்புடைய கட்டுரை
அலறப்போகும் சிங்கப்பூர் – F1 Grand Prix 2010 கோலாகலம்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
//அணத்தி என்னை வேறு இடத்துக்கு காது வலிக்குது, பசிக்குதுன்னு சாப்பிடக் கூட்டிட்டு போய்ட்டான்//
இனிமே அந்த எதிரி கூட சேராதீங்க கிரி 🙂
//ஷூக்கு பதிலாக வேறு எதுவும் செய்து இருக்கலாம் என்று தோன்றியது//
புரியுது புரியுது நீங்க எத நினைசீங்கன்னு…! இன்னும் அந்த புட்பால் பெண்ணை மறக்கல போல 🙂
பகிர்வுக்கு நன்றி கிரி 🙂
//இவங்க அடித்த அடியும் ஆடுன ஆட்டமும் என்னை சரக்கடிக்காமாலே கிறுகிறுக்க வைத்து விட்டன// அடடா, நான் இந்த ஆப்ரிக்கா நாட்டு நடன நிகழ்ச்சிய மிஸ் பண்ணிட்டேன்.
//போட்டியைப் பார்க்க வந்து இருந்த அனைவரும் கார்களை படமெடுக்க திணறிக்கொண்டு இருந்தார்கள்// 🙁 அது ரொம்ப கஷ்டம்ங்க.
//அணத்தி என்னை வேறு இடத்துக்கு காது வலிக்குது, பசிக்குதுன்னு சாப்பிடக் கூட்டிட்டு போய்ட்டான்// அப்பாடா, அது நான் இல்ல. 🙂
நாம் இதை பெரிதும் ரசித்தாலும், இந்த முறை போட்டியின் புள்ளி கணக்கிடுதலில் மாற்றம் செய்துவிட்டதால் ரசிகர்களுக்கு போட்டி எதிர்பாத்ததை விட பெரிய அளவில் எமாற்றம் என பலர் சொல்லிக் கேள்விப்பட்டேன். இந்த போட்டிக்கு முன்பு வரை புள்ளிக் கணக்கு வேறு மாதிரியாம். அதாவது, தோற்றால் 2-3 புள்ளிகள் மட்டுமே குறையும் (போட்டியில் அசம்பாவிதம் நடந்து ஒருவர் போட்டியை முழுதும் முடிக்கமுடியா விட்டாலும் கூட அதிகபட்சம் 10 பாயிண்டுகள் மட்டுமே இழக்க நேரிடும்), ஆனால் இப்போது அந்த வித்தியாசம் அதிகப்படுத்தப்பட்டு விட்டதாம். ஒரு இடம் கிழே போனால் 25 பாயிண்ட்டுகள் குறையும். அதனால் புள்ளிக் கணக்குக்கு பயந்து யாருமே மற்ற காரை முந்த முனையவில்லை, தற்போது போய்க்கொண்டிருக்கும் இடத்தை பாதுகாத்தாலே போதும் என்ற நிலையில் ஓட்டியதாக பேசிக்கொண்டனர். இது இந்த மாதிரியான போட்டிகளை மிகவும் ரசித்துப் பார்க்கும் ரசிகர்களுக்கு (வெறியர்களுக்கு) பெருத்த ஏமாற்றமாகவே இருந்திருக்கும்.
அடேயப்பா
எம்மா பெரிய கட்டுரை ….சூப்பர் அப்பு
அப்படியே நேர்ல பார்த்த மாதிரி…கலக்கிடீங்க போங்க (மியூசிக் பற்றி ஹ்ம்ம் வார்த்தையே இல்லை. அது மேட்ச் பார்க்க செல்லும் மன நிலையை அப்படியே ப்லோடிங் ல வைத்து இருக்கும்}
என்ன ஒரே குறை vettel ஜெயிச்சு இருந்த இன்னும் நல்ல இருந்து இருக்கும் (வித்தியாசம் +0.2 sec, ஹ்ம்ம்)
Kovalainen கார் பின்னால் தீ பிடித்து விட்டதை பார்த்து நானும் கொஞ்சம் பயந்து விட்டேன். ஆனால் இதட்கும் ட்ரைனிங் குடுத்து இருப்பார்கள் என அவரின் செயல்பாடு பார்த்துதான் தெரிந்து கொண்டேன்
இந்த முறை போட்டியின் புள்ளி கணக்கிடுதலில் மாற்றம் செய்துவிட்டதால்?
அப்படி ஒன்றும் மாறுதல் இல்லை என நினைக்கிறேன். Hamilton 182 புள்ளிகள் பெற்று இருந்தார். இப்பொழுதும் அதே…
வாசிக்கும்போதே சுவாரசியமாக இருக்கிறது, இந்த வருடம் சூமேக்கரின் சொதப்பலால் f1 போட்டிகள் எதையும் முழு மனதுடன் பார்த்ததில்லை. குறிப்பாக சிங்கபூர் கிராண்ட்பிரிக்ஸ் சிறிதுநேரம் கூட பார்க்கவில்லை. போல்பொசிஷன் யார்? வின்னர் யார் ? என்பதே உங்கள் இடுக்கையை படித்த பின்னர் planetf1 .com பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். எனக்கு ஹமில்டனும், அலோன்சோவும் வெல்ல கூடாதென்பதற்காக (எல்லாம் சூமியின் டைட்டிலுக்கு (7) பாதுகாப்புக்குத்தான் 🙂 ) இம்முறை விற்றலுக்கும் வெப்பருக்கும்தான் எனது ஆதரவு. சூமிக்கு பின்னர் எனக்கு பிடித்த வீரர்கள் விற்றலும் ஹுல்கம்பெர்க்கும்தான் (காரணம் இருவரும் ஜெர்மனி இளம்வீரர்கள் ஹி ஹி ).
உங்கள் பதிவை படித்தபின்னர் மீண்டும் வெறித்தனமாக f1 பார்க்கவேண்டும்போல் உள்ளது.
நல்ல article கிரி. Interestinga இருந்துச்சு படிக்க.
கிரி சார் கட்டுரை பெரியதாய் தோன்றினாலும் சிங்கப்பூர் Formula 1 Grand Prix போட்டியை கண்டுகளித்த மாபெரும் தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கு இக்கட்டுரை. மேலும் படிக்கும் போதே இடையில் நாங்க என்ன நினைப்போம் என்பதை அனுமானித்து நீங்களே நகைச்சுவையுடன் எடுத்துக்கூறியிருக்கும் விதம் அருமையிலும் அருமை. இதனால் இக்கட்டுரையை ஆர்வத்துடன் படிக்க முடிகிறது கிரி சார்.
Unga anubavatha solveengannu partha…, engalaye anga koottittu poiteengale…! Thanks sir
SUPERB NARRATION
@சிங்கக்குட்டி அந்த ஃபுட்பால் கதை எல்லாம் அந்த பொண்ணுக்கு தான் செட் ஆகும்அப்புறம் தான் ஹி ஹி ஹி 😉
@முத்து பெருத்த ஏமாற்றம் என்கிற அளவிற்கு எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.
@சதா நன்றி 🙂 ரொம்ப நாளுக்கு பிறகு வந்து இருக்கீங்க போல
@ஜீவதர்ஷன் ஐயையோ! நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் ஷுமேக்கர் பற்றிய நினைவு வருகிறது.. அவர் 13 வது இடம் அது பற்றி குறிப்பிட மறந்து விட்டேன் 🙁
@தினேஷ் நன்றி
@ பிரவீன் மற்றும் Mrs.Krishnan உங்களின் மனமார்ந்த பாராட்டிற்கு மிக்க நன்றி
ராஜேந்தரின் ஆப்பிரிக்கா இசை கேட்டிங்களா?.