திமுகவின் பாகிஸ்தான் ஆதரவு

4
திமுகவின் பாகிஸ்தான் ஆதரவு

பாஜக எதிர்ப்பு, சிறுபான்மையினர் ஆதரவில் திமுக ஒரு மோசமான எல்லையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. என்னவென்று பார்ப்போம். Image Credit

இந்தியா பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் அகமதாபாத் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் விளையாட்டு மைதானத்திலேயே நமாஸ் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி பரவலான விமர்சனங்கள் எழுந்தன.

ஜெய் ஸ்ரீராம் கூறியது தவறு என்றால், விளையாட்டு மைதானத்தில் நமாஸ் செய்வதும் தவறு தானே!

இதுவரை வந்தேமாதரம் கூறப்பட்டு வந்த நிலையில், இந்த முறை ஜெய்ஸ்ரீராம் கூறப்பட்டதுக்கு ரிஸ்வான் நடவடிக்கைகள் முக்கியக்காரணங்களில் ஒன்று.

இதன் தொடர்ச்சியாக மற்ற விளையாட்டு அரங்குகளிலும் தொடர்ந்தது.

திமுக

ஜெய் ஸ்ரீராம் கூறியது திமுகவினரைக் கடுப்படித்து விட்டது. இதற்கு வெட்கம் இல்லாமல் #SorryPakistan hashtag வேறு ஓட்டினார்கள்

தற்போது வரை திமுக உட்பட எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்தியாவை, இந்துக்களை இழிவுபடுத்துவது பாஜகவை இழிவுபடுத்துவதற்குச் சமம் என்றே நினைக்கிறார்கள்.

இரண்டும் வேறு என்று இவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள்.

எனவே, இந்தியா ஒரு சாதனை செய்தால் அதையும் பாஜக அரசு என்று கருதி அதைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள், வருத்தமடைகிறார்கள், விமர்சிக்கிறார்கள்.

சென்னை சேப்பாக்கம்

பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான் போட்டி சென்னையில் நடைபெற்ற போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பலர் திரட்டப்பட்டனர்.

பெரும் கொடுமையாகப் பள்ளி குழந்தைகளை அழைத்து வந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப வைத்தார்கள். பாவம் அவர்களுக்கு என்ன புரிந்ததோ!

இந்தியத் தேசியக் கொடியை உள்ளே எடுத்துச் செல்லத் தடை விதித்த போதே கடுமையான ஆத்திரமாக இருந்தது. இது போன்ற நிலை இந்தியாவின் எந்த அரங்கிலும் நடக்கவில்லை

அதிலும் ஒருத்தன் DIl Dil Pakistan என்று கைகளை ஆட்டி, குழந்தைகள் கோஷம் இடுவதை பல்லைக்காட்டிக்கொண்டு இளித்ததைப் பார்த்த போது அடைந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை.

பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து செல்ல அனுமதி ஆனால், இந்தியக் கொடிக்குத் தடை. விளையாடுவது எந்த நாடாக இருந்தால் என்ன?

போட்டி நடப்பது இந்தியாவில் தானே!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை ஊடகங்கள் கேள்வி கேட்ட போது ‘அமித்ஷா பையன் BCCI ஜெய்ஷாவிடம் கேளுங்கள்‘ என்று கூறுகிறார்.

தமிழகக் காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில், தமிழக கிரிக்கெட் அமைப்புத் தலைவர் பொன்முடி மகன் கவுதம் சிகாமணி ஆனால், ஜெய்ஷாவை கேட்கணுமாம்.

அருமை! சிறப்பான பதில்.

ஆர்வம் இல்லை

கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் குறைந்து வருடங்களாகிறது. இந்தியா, CSK போட்டியில் வெற்றி பெற்றால் ஹைலைட்ஸ் மட்டும் எப்போதாவது பார்ப்பேன்.

அகமதாபாத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியைக்கூடப் பார்க்கத் தோன்றவில்லை, இந்தியா வெற்றி பெற்றதாக அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.

தற்போதெல்லாம் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறட்டும் என்கிற மனநிலை தான், அது பாகிஸ்தானாகவே இருந்தாலும்.

திறமையுள்ளவன் வெற்றி பெற வேண்டும் என்பதே சரி, நியாயம். இந்தியா வெற்றி பெற்றால் கூடுதல் மகிழ்ச்சி.

திமுகவினர் அட்ராசிட்டி

ஆனால், திமுகவினர் செய்த அட்ராசிட்டிகளை பார்த்த போது திமுக ஆதரவு நிலைக்காவாவது பாகிஸ்தான் தோற்க வேண்டும் என்று நினைத்தேன்.

அதிலும் DIl Dil Pakistan என்று கூறியவன் செய்கையைப் பார்த்துத்தான் கடுப்பானேன். இந்தக்காணொளி சமூகத்தளங்களில் வைரல் ஆகி இதைப்பார்க்கும் வரை போட்டி பார்க்கும் ஆர்வம் துளி கூட இல்லை.

பல வருடங்களுக்குப் பிறகு இரு போட்டிகளைப் பார்த்தேன் என்றால், அது பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் Vs தென் ஆப்ரிக்கா மட்டுமே!

இரண்டுமே பாகிஸ்தான் தோற்க வேண்டும் என்பதை விட, இவ்வளவு கேவலமாக நடந்த திமுக கடுப்பாக வேண்டும் என்பதற்காகவே மற்ற இரு அணிகள் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன்.

இரண்டிலுமே திமுக தோற்றது அளவில்லா மகிழ்ச்சி. பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்ததை விட அதிகமாக மகிழ்ந்தேன் என்பதே உண்மை.

பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று திமுக ஆதரவு ஊடகங்கள், முன்களப்புகள் ஏற்கனவே கட்டுரைகளை, பரபரப்பு தலைப்புகளைத் தயாராக வைத்து இருந்து இருப்பார்கள், அனைத்தும் வீணாகப் போனது.

பாஜக மீதான எதிர்ப்பில், சிறுபான்மையினர் ஆதரவு நிலைக்காக இந்தியாவையே, இந்துக்களையே எதிர்க்கும் கேடுகெட்ட மனநிலைக்கு திமுக சென்று விட்டது.

கவுரவம் கவுரவம்னு சொல்லிப் பாகிஸ்தானைச் சேற்றில் தள்ளி விட்டார்கள் இந்தத் திமுகவினர். கம்முனு இருந்தால், ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்று இருப்பார்களோ என்னவோ!

முஸ்லிம்கள் மீதான வெறுப்பா?

நிச்சயம் இல்லை.

இது முழுக்க முழுக்க பாகிஸ்தான் மீதான வெறுப்பே. இல்லையென்றால், ஆப்கானிஸ்தானுக்கு எப்படி ஆதரவு அளித்து இருக்க முடியும்!

ஆப்கானிஸ்தான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் ஆப்கானிஸ்தானை அம்மாநில மக்கள் ஆதரித்தார்கள். அதிலும் டெல்லியில் அதிரடி ஆராவாரம்.

இதற்காக ஒவ்வொரு போட்டி முடிந்ததும் ஆப்கானிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் இந்திய ரசிகர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தார்கள்.

ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவர் கூறும் போது,

பாகிஸ்தானை வென்றதே எங்களுக்கு உலகக்கோப்பை வென்றது போலத்தான். எனவே, இந்தியா வெல்லவே நாங்கள் ஆதரவு அளிப்போம்‘ என்றார்.

அந்த அளவுக்கு இந்தியா ஆப்கானிஸ்தான் ரசிகர்களிடையே ஒற்றுமை இருந்தது.

பின்பு எதனால் பாகிஸ்தான் மீது வெறுப்பு?

காரணம், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய, நடத்திக்கொண்டு இருக்கும் தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதல்.

இதுவரை எத்தனை ஆயிரம் பொதுமக்கள், வீரர்களைக் கொன்று இருப்பார்கள்!

இரு நாட்களுக்கு முன்னர் கூட சர்வதேச ஒப்பந்தத்தை மீறி இந்திய வீரர்கள் மீது பாக் படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. எல்லையோர கிராம மக்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தீவிரவாதிகளை இந்தியாவினுள் அனுப்பிக்கொண்டுள்ளார்கள். கடந்த மாதம் இந்தியப்படை உயர் அதிகாரிகள் உட்பட பலர் இறந்தனர்.

தொடர்க் குண்டு வெடிப்புகள் நடத்தியுள்ளனர், நடத்த முயற்சிக்கின்றனர். இந்தியாவை எந்த வகையிலாவது நாசம் செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் எப்படி சிலர் ஆதரிக்கிறார்கள் என்றே புரியவில்லை!

விளையாட்டை விளையாட்டா பாருங்க!

விளையாட்டை விளையாட்டா பார்க்க வேண்டும் என்பவர்கள் எதற்கு ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றவுடன் 1999 போல எழுந்து நின்று கைதட்டி ஆதரிக்காமல், அரங்கை விட்டு வெளியே சென்றார்கள்!

ஸ்ரீலங்கா அணியினருக்கு எதற்குச் சென்னையில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? IPL ரசிகர்களை அடித்து உதைக்க வேண்டும்?!

இதை விடக் கேவலமாக ‘அப்போது அந்த பாபர் வந்து இந்தியாவைக் கைப்பற்றினார், தற்போது இந்த பாபர் வந்து இந்தியாவைக் கைப்பற்றுவார்‘ என்று வசனங்கள்.

கொஞ்சமாவது நாட்டுப்பற்று இருப்பவன், சோத்துல உப்பு போட்டுச் சாப்பிடுகிறவன், வெட்கம், மானம், சொரணை இருப்பவன் பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டான்.

இங்கே நடந்தது முஸ்லீம் எதிர்ப்பல்ல, பாகிஸ்தான் எதிர்ப்பு மட்டுமே!

இங்குள்ள செக்குலர்களுக்கு அவனுக தலையிலே குண்டு விழுந்தால் தான், ஐயையோ என்று அலறுவார்கள். அதுவரை பாகிஸ்தானுக்கு முட்டுக்கொடுத்துட்டு இருப்பார்கள்.

கொசுறு

தென் ஆப்பிரிக்கா அணியில் 4 அடித்து வெற்றி பெற வைத்த கேசவ் மகராஜ், வெந்த புண்ணில் மிளகாய் தேய்த்தது போலத் திமுகவினருக்கு செய்து விட்டார்.

ஆக மொத்தத்துல ஐயம் செம ஹேப்பி 😀 . #SorryDMK

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. கிரி.. நான் இந்த கட்டுரையை முழுமையாக படிக்கவில்லை.. 1993 ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் பார்த்து வருகிறேன்.. இடையில் சில காலங்கள் ஆர்வமில்லாமல் இருந்தேன்.. பின்பு மீண்டும் பார்க்க தொடங்கினேன்.. தற்போது முழுமையாக எந்த போட்டியையும் பார்க்கவில்லை யென்றாலும் உலக அளவில் எங்கு போட்டிகள் நடக்கிறது, என்ன நிலவரம் என்பதை cricinfo தளம் மூலம் தெரிந்து கொள்வேன்..

    50 ஓவர் / 20 ஓவர் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகள் மீது அதீத காதல் கொண்டவன்.. IPL போட்டிகளில் சுத்தமாக ஆர்வமில்லை. என்னை பொறுத்தவரை விளையாட்டை, விளையாட்டாக பார்க்க வேண்டும்.. அதனுள் மதத்தையோ / ஜாதியையோ / அரசியலையே புகுத்துவது சரியல்ல.. இதை யார் செய்தாலும் தவறு தான்.. இது எல்லா விளையாட்டுக்கும் பொருந்தும்.

  2. @யாசின்

    “கிரி.. நான் இந்த கட்டுரையை முழுமையாக படிக்கவில்லை.”

    ஏன் யாசின்? படித்த பிறகு முடிவு செய்யலாமே! முன் முடிவு எடுப்பதை தவிர்க்கலாமே!

    இதில் கூறியுள்ளது ஏதாவது தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள். தவறு என்றால், மாற்றிக்கொள்கிறேன். உங்கள் புரிதல் தவறு என்றால், விளக்குகிறேன்.

    “உலக அளவில் எங்கு போட்டிகள் நடக்கிறது, என்ன நிலவரம் என்பதை cricinfo தளம் மூலம் தெரிந்து கொள்வேன்.”

    🙂 அடிக்கடி கூறியுள்ளீர்கள்.

    “50 ஓவர் / 20 ஓவர் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகள் மீது அதீத காதல் கொண்டவன்.. IPL போட்டிகளில் சுத்தமாக ஆர்வமில்லை.”

    டெஸ்ட் போட்டி என்றால் உங்கள் நினைவு எனக்கு நிச்சயம் வரும்.

    ஏன் என்றால், இன்றுவரை டெஸ்ட் போட்டிகளை ஆர்வமாக பார்க்கிறேன் என்று நீங்கள் ஒருவர் மட்டுமே என் நண்பர்கள் வட்டத்தில் கூறி வருகிறீர்கள்.

    “என்னை பொறுத்தவரை விளையாட்டை, விளையாட்டாக பார்க்க வேண்டும்.. அதனுள் மதத்தையோ / ஜாதியையோ / அரசியலையே புகுத்துவது சரியல்ல.”

    உங்களை மாதிரியே எல்லோரும் இருந்து விட்டால், இந்தியாவில் பிரச்சனைகளே இருக்காது யாசின் 🙂 .

    ஆனால், உங்கள் கருத்துக்கு எதிராக தான் அனைவரும் உள்ளார்கள். இது தவிர்க்க முடியாததும் கூட.

  3. கிரி.. டெஸ்ட் போட்டிகளை காண்பதில் வரும் ஒரு வித பரவசம் மற்ற போட்டிகளில் வருவதில்லை.. அதுவும் குறிப்பாக சம நிலையில் உள்ள இரு அணிகளின் போட்டி செம்மையாக இருக்கும்.. அதை எப்படி சொல்வது என்பது தெரியவில்லை.. அது உண்மையில் ஒரு வித feeling..அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது.. என்னை போல பல டெஸ்ட் போட்டிகளின் காதலர்கள் உலகமெங்கும் இருப்பார்கள்.. பழைய டெஸ்ட் போட்டிகளின் காணொளிகளை தற்போதும் youtubeல் நேரம் இருக்கும் போது காண்பேன்..

    Quality cricket என்றால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே!!! அந்த pressure handle செய்து விளையாடுவது மிக குறைவான ஆட்டக்கார்களுக்கு மட்டுமே தெரிந்த கலை.. முன்பு அதுவும் குறிப்பாக வெளிநாட்டில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆடுவது மிகவும் கடினம்.. குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து. பழைய பெர்த் பிட்ச் மிகவும் கடினமானது. வேக பந்து வீச்சை எதிர் கொள்வது மிக கடினம்.. uneven bounce, swing எல்லாம் இருக்கும். ஆட்டம் துவங்கி ஒரு மணி நேரம் விக்கெட் விழவில்லை யென்றாலே பாதி வெற்றி பெற்றதற்க்கு சமம்..

    ஆனால் தற்போது T 20 போட்டிகளின் ஆளுமை வந்த பிறகு உலகெங்கும் ஸ்கோர் வர வேண்டும் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழலில் பிட்ச்கள் தயார் செய்யப்படுவதால், டெஸ்ட் போட்டிகளின் கவனம் குறைந்து வருகிறது. இந்த சூழல் தொடர்ந்தால் எதிர்காலத்தில் கிரிக்கெட் இருக்கும். ஆனால் தரமான ஆட்டக்காரர்களை காண்பது அரிதாகி விடும். என் பார்வையில் ஒரு சிறந்த கிரிக்கெட்டர் என்பவர் “அவர் டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்தார்” என்பதை பொறுத்து தான் மதிப்பீடு செய்வேன்.

  4. @யாசின்

    “கிரி.. டெஸ்ட் போட்டிகளை காண்பதில் வரும் ஒரு வித பரவசம் மற்ற போட்டிகளில் வருவதில்லை.”

    எனக்கும் ஆர்வம் உண்டு ஆனால், அதற்காக டொக்கு வைத்துட்டே இருந்தால், கடுப்பாகி விடும் 🙂 .

    “குறிப்பாக சம நிலையில் உள்ள இரு அணிகளின் போட்டி செம்மையாக இருக்கும்.. அதை எப்படி சொல்வது என்பது தெரியவில்லை.. அது உண்மையில் ஒரு வித feeling..அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது.”

    புரிகிறது.. 🙂 சிலவற்றை எழுத முடியாது,, உணர்ச்சிகளால் வெளிப்படுத்தவும் முடியாது. அதுவொரு உணர்வு.

    “என்னை போல பல டெஸ்ட் போட்டிகளின் காதலர்கள் உலகமெங்கும் இருப்பார்கள்”

    நிச்சயமாக ஆனால், எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    “Quality cricket என்றால் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே!!! அந்த pressure handle செய்து விளையாடுவது மிக குறைவான ஆட்டக்கார்களுக்கு மட்டுமே தெரிந்த கலை..”

    நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன். அதே போல ஒருதினப்போட்டிகளும் ஒருவரின் முழு திறமையை வெளிப்படுத்தும்.

    “தற்போது T 20 போட்டிகளின் ஆளுமை வந்த பிறகு உலகெங்கும் ஸ்கோர் வர வேண்டும் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழலில் பிட்ச்கள் தயார் செய்யப்படுவதால், டெஸ்ட் போட்டிகளின் கவனம் குறைந்து வருகிறது. ”

    வருத்தமான உண்மை.

    டுவென்டி 20 வந்த பிறகு மட்டையாளர்களுக்கானதாக மாறி விட்டது. மக்களும் அதை பார்க்கவே விரும்புகிறார்கள்.

    எதிர்காலத்தில் டென் 10 என்று குறைந்து விடுமோ என்று சந்தேகமாக உள்ளது.

    ” இந்த சூழல் தொடர்ந்தால் எதிர்காலத்தில் கிரிக்கெட் இருக்கும். ஆனால் தரமான ஆட்டக்காரர்களை காண்பது அரிதாகி விடும்.”

    உண்மை தான் ஆனால், அதிக ஓட்டங்கள் எடுப்பவர்களைத் தரமான ஆட்டக்காரர்களாக உருவகப்படுத்திக்கொள்வார்கள்.

    “என் பார்வையில் ஒரு சிறந்த கிரிக்கெட்டர் என்பவர் “அவர் டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்தார்” என்பதை பொறுத்து தான் மதிப்பீடு செய்வேன்.”

    ஒருதினப்போட்டியையும் நான் சேர்த்துக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!