மனம் போன போக்கில் தின வாழ்க்கை நடத்தியவர்கள் நெருக்கடியில் உள்ளார்கள். மிகப்பெரிய சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும், தினக்கூலியாக இருந்தாலும் பலர் சேமிப்பின் அவசியம் உணராமல் உள்ளார்கள். Image Credit
வாங்கும் சம்பளத்தை, சிறு தொழிலில் சம்பாதித்ததை அன்றைய செலவுக்குப் பயன்படுத்தி, எதிர்காலத்துக்குச் சேமிக்காமல் இருந்தவர்கள் நிலை பரிதாபமாகியுள்ளது.
சேமிப்பின் அவசியம்
நமக்கு எவ்வளவு தின / வார / மாத வருமானம் இருந்தாலும் அதில் சேமித்தே ஆக வேண்டும். இதையொட்டியே அவரவர் வாழ்க்கைத் தரத்தை நெருக்கடி காலத்தில் சமாளிக்க முடியும்.
இன்றைய ஐடி துறையினர் உட்படப் பலர் நாளை என்ற திட்டமிடலை விட்டு முழுமையையும் செலவழித்து வருகிறார்கள்.
கவலைப்பட வேண்டியதில்லை ஆனால், திட்டமிடல் வேண்டுமல்லவா?
20% சேமிப்பு அவசியம்
எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் 20% கண்டிப்பாகச் சேமித்தே ஆக வேண்டும், குறைந்தது 10%. ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் தவறினாலும் அடுத்த நாளில், வாரத்தில், மாதத்தில் முடிந்தவரை சரிக்கட்டி விட வேண்டும்.
கார்மெண்ட்ஸில் துணி தேய்ப்பவர் (Ironing) தினமும் ₹1500, பண்டிகை நாட்களில் ₹2500, ₹3000 வரை சம்பாதிக்கிறார்.
தின / வாரக்கூலி என்பதால் வரியும் கட்டுவதில்லை.
கொரோனா சமயத்தில், பணி இழப்பு காரணமாக இவரால் ஒரு வாரம் கூடச் சமாளிக்க முடியாத சூழ்நிலை என்றால், நம்பச் சிரமாக இருக்கும்.
இவர் சம்பாதிப்பது ஐடி துறை நபர் வாங்கும் சம்பளத்துக்கு ஈடானது.
எந்த மன அழுத்தம், நெருக்கடியும் இல்லை.
எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் வேலை செய்கிறாரோ அந்த அளவுக்கு வருமானம் கூடும் ஆனால், தற்போது பணம் இல்லாமல் அலைந்து கொண்டுள்ளார்.
காரணம் என்ன?
சேமிப்பில்லாதது மட்டுமே!
இவர் ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட சதவீத ஊதியத்தைச் சேமித்து இருந்தால், இன்று அடைந்த மோசமான நிலையைத் தவிர்த்து இருக்கலாம்.
மேற்கூறியதை எடுத்துக்காட்டுக்கு கூறினேன். இது போலவே அவரவர் நிலையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.
சுருக்கமாக நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், சிறு சேமிப்பு அவசியம். இதுவே நம்முடைய நெருக்கடி காலங்களில் உதவும்.
தொடர்புடைய கட்டுரைகள்
கண்டிப்பாக கிரி
கிரி, இந்த பதிவை என்னுடைய சொந்த வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன்.. கிட்டத்திட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக மாத சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறேன்.. ஆனால் இதுவரை வாங்கிய மொத்த சம்பளத்தில் 10% சேமிப்பு இல்லை.. எல்லா நேரங்களிலும் சேமித்து தான் வந்தேன்.. ஆனால் எதிர்பாக்காத செலவுகளும், தவிர்க்க முடியாத செலவினங்களும் குருவி போல சேர்த்து வைத்ததை, பருந்தை போல தட்டி கொண்டு போகி விட்டது ..
மகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால் கடன் கிடையாது.. அம்மா,மனைவி, குழந்தைகள் அவர்களுக்காக சேமிப்பை ஓரளவுக்கு செய்து வைத்து இருக்கிறேன்.. மிகப்பெரிய மன திருப்தி நான் எண்ணிதில் 99% முழுமை செய்து இருக்கிறேன் .. அது போல சாதரண குடும்பத்தில் பிறந்ததால், நாம் கற்ற ஆரம்ப பாடங்கள், பணம் அதிகம் புரளும் போதும் நம்மை செழுமை படத்த உதவியது ..
வாழ்க்கை படத்துல வர வசனங்கள் என்றும் மறக்காதவை .. ஒருத்தருடைய இலாபம் , இன்னொருத்தருடைய நட்டம் ; ஒருத்தருடைய வெற்றி, இன்னொருத்தருடைய தோல்வி; ஒருத்தருடைய சிரிப்பு ; இன்னொருத்தருடைய அழுகை .. எவ்வளவு ஆழமாக பொருள் கொண்ட வரிகள். பகிர்வுக்கு நன்றி கிரி..
@ஹரிஷ் 🙂
@யாசின் சேமிப்பெல்லாம் பெரிய செலவு வரும் போது எளிதாகக் கரைந்து விடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடனில்லாத வாழ்க்கை அற்புதமான வாழ்க்கை.