Bodyguard | British TV Crime series | Season 1

2
Bodyguard series

யிலில் நடக்க இருந்த தற்கொலைப்படை தாக்குதலைத் திறமையாகப் பேசித் தடுத்த David Budd, உள்துறை செயலாளர் Julia Montague பாதுகாப்புக்கு (Bodyguard) நியமிக்கப்படுகிறார். Image Credit

Julia Montague க்கு நேர இருந்த அபாயத்தைத் தடுத்தாரா? தன்னால் கடமையைச் செய்ய முடிந்ததா என்பதைப் பரபர திரைக்கதையில் கூறியுள்ளார்கள்.

Bodyguard

உயிருக்குப் பாதுகாப்பில்லாத பணியால் David க்கும் அவரது மனைவிக்கும் பிரச்சனை உருவாகிறது. பணி மன அழுத்தத்துடன் வீட்டிலும் பிரச்சனை.

இதோடு முக்கியமான பாதுகாப்பு பணி.

மொத்தமே 6 Episode தான். முதல் சீசனிலேயே கதையும் முடிந்து விடுகிறது.

துவக்கத்தில் இருந்து இறுதிவரை சலிப்புத்தட்டாமல் திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள். ஏதோ நடக்கப்போகிறது என்ற பரபரப்பு இருந்து கொண்டுள்ளது.

கதையை அடுத்தச் சீசனுக்குக் கொண்டு விடுவார்களோ என்று நினைத்தேன் ஆனால், மிகச்சிறப்பாகக் கொண்டு சென்று இறுதியில் சரியாக முடித்து விட்டார்கள்.

தேவையற்ற பகுதி என்று எங்குமே இல்லை, நீட்டிக்கவும் இல்லை.

க்ரைம் த்ரில்லர்

David தன்னைச் சுற்றிப் பின்னப்பட்ட பிரச்சனைகளைக் களைந்து, தன் பணி திறமையால், பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்துத் திணறடிப்பது சுவாரசியம்.

எச்சரிக்கையாக இருந்தும், இறுதியில் அபாயகரமாகச் சிக்கிக்கொள்ள அதில் இருந்து David தப்பிக்கிறாரா இல்லையா என்பதை பரபரப்பான காட்சிகள் மூலம் திரைக்கதை அமைத்து அசத்தியுள்ளார்கள்.

இங்கிலாந்தில் நடைபெறும் கதையாக உள்ளது. அனைவருமே ரசிக்கலாம் என்றாலும், இங்கிலாந்தை சார்ந்தவர்கள் கூடுதலாக ரசிக்கலாம்.

கணவர் நெருக்கடியால், தற்கொலை படை தாக்குதலுக்கு வரும் பெண் நிலை இறுதியில் வியப்பாகவும், மிரட்டலாகவும் இருந்தது 🙂 . யாருமே ஊகிக்க முடியாது.

காட்சிக்குத் தகுந்த ஒளிப்பதிவு, உறுத்தாத பின்னணி இசை.

David அதிகம் பேச மாட்டார், எப்போதும் முறைத்துக்கொண்டு இருப்பார். இருப்பினும் எதோ ஒரு சுவாரசியம், எதிர்பார்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.

இறுதியில் முடிவை எளிதாக முடித்து இருந்தார்கள், இது மட்டுமே நம்பும்படியில்லை, மற்றபடி அட்டகாசம்.

குறிப்பாக 5 / 6 வது Episode தாறுமாறாக உள்ளது. அதிகார மோதல், ஏமாற்றல், சதி, அரசியல் என்று பக்கா க்ரைம் த்ரில்லர்.

சில உடலுறவு காட்சிகள் உள்ளது. எனவே, குழந்தைகளுடன் பார்க்க ஏற்றதல்ல. க்ரைம் திரைப்படங்களை ரசிப்பவர்கள் தவறவிடக்கூடாத சீரிஸ்.

NETFLIX ல் உள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்

Prison Break [2005 – 06] – Terrific Thriller Series

Article 15 (இந்தி 2019)

Polar (2019) எங்கிட்ட மோதாதே!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. 5, 6 வது Episode செமையா இருக்கும் 🙂 . நீட்டிப்பார்கள் என்று நினைத்தேன், சரியாக முடித்து விட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!