The Invisible Guest படத்தின் மறு உருவாக்கமே Evaru, இந்தியில் Badla.
Evaru
தன்னை நண்பர் வன்புணர்வு செய்ததால், சுட்டுக்கொன்று விட்டதாக ரெஜினா கைது செய்யப்படுகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறை என்று விவாதிக்கப்படுகிறது.
இவர் வழக்கில் ஆஜராகும் வழக்குரைஞர், வழக்கின் விவரங்களுக்காக ஊழல் காவல் அதிகாரியான விக்ரமை (அதிவி சேஷ்) நியமிக்கிறார்.
ரெஜினாவுடன் பேசி மேலும் விவரங்களைப் பெற்று வழக்கில் வெற்றி பெறுவதற்கான வழிகளை விக்ரம் கூறுகிறார்.
இறுதியில் ரெஜினா வழக்கில் இருந்து விடுபட்டாரா? எப்படி வன்புணர்வு செய்யப்பட்டார்? வழக்கு தொடர்பான கொலை எப்படி நடந்தது என்பதே கதை.
The Invisible Guest படத்தை அப்படியே எடுக்காமல், நம்ம ஊருக்காகச் சில மாற்றங்கள் செய்து எடுத்துள்ளார்கள். சொல்லப்போனால் ஸ்பானிஷ் படத்தை விடத் தெலுங்கு படம் சுவாரசியமாக இருந்தது.
இறுதியில் வரும் ட்விஸ்ட் எதிர்பாராதது, ஊகிக்க முடியவில்லை.
இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று யோசித்து யோசித்துப் பின் எப்படியோ கலக்கலாக வருகிறது 🙂 .
மாறி மாறிக் காட்சிகள் இருந்தாலும், குழப்பம் தராத படத்தொகுப்பு.
சுவாரசியமான திரைக்கதை
ரெஜினா மற்றும் காவல் அதிகாரியாக நடித்துள்ள அதிவி சேஷ் இருவரும் சிறப்பான நடிப்பு. இருவருக்குமே கதாப்பாத்திரங்கள் மிகச் சிறப்பாகப் பொருந்தியுள்ளது.
The Invisible Guest படம் போலவே இதிலும் எதையும் கூற முடியவில்லை. கூறினால், படம் பார்க்கும் போது சுவாரசியமாக இருக்காது.
சூழ்நிலை மோசமாக இருக்கும் போது அவசரப்பட்டுக் கோபத்தில் எதையும் கூறி விட்டால், உயிருக்கே ஆபத்தாகி விடும் என்பதை கதை உணர்த்துகிறது.
சில அடல்ட் காட்சிகள் உள்ளது. எனவே, குழந்தைகளுடன் பார்க்க ஏற்றப் படமல்ல.
த்ரில்லர் / க்ரைம் படங்களை விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத படம் Evaru.
7 கோடியில் எடுக்கப்பட்டு 35 கோடிகள் வசூலித்துள்ளது. Amazon Prime ல் உள்ளது.
Directed by Vasu
Produced by Pearl V. Potluri, Param V. Potluri, Kavin Anne
Written by Venkat Ramji (screenplay), Abburi Ravi (dialogues)
Starring Adivi Sesh, Naveen Chandra, Regina Cassandra, Murali Sharma
Music by Sricharan Pakala
Cinematography Vamsi Patchipulusu
Edited by Garry BH
Release date 15 August 2019
Running time 118 minutes
Country India
Language Telugu
தொடர்புடைய கட்டுரை
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, தற்போது தான் மலையாளப்படங்களை தேடி பிடித்து பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். இதற்கு இடையில் நீங்க தெலுங்கு படத்தோட பதிவை போட்டு இருக்கீங்க .. மலையாளமாவது 70 % எனக்கு புரியும்.. தெலுங்கு சுத்தமாக தெரியாது.. subtitle பார்த்து படம் பார்த்தாலும் எந்த அளவுக்கு சுவாரசியம் இருக்கும் என்று தெரியவில்லை .. நேரம் இருக்கும் போது படத்தை பார்க்க முயற்சி செய்கிறேன் .. பகிர்வுக்கு நன்றி கிரி..
யாசின் தமிழை தவிர வேறு எந்த மொழியும் எனக்கு முழுமையா தெரியாது. எல்லாம் சப்டைட்டில் தான்.