ரஜினி கமல் ரசிகர்கள் நேர்மையாக விமர்சிக்க முடியுமா?

47
ரஜினி கமல் ரசிகர்கள்

ணையத்தில் மட்டுமல்லாது எங்குமே திரை ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது அந்தக் காலம் தொட்டு நடைபெறுகிறது. Image Credit

இதனால் எந்தப் பயனும் இல்லை என்றாலும் இது எந்தக் காலத்திலும் நிற்கப் போவதில்லை தொடர்ந்து கொண்டே இருக்கப் போகும் ஒன்று.

இக்கட்டுரையில் ரஜினி கமல் ரசிகர்களைப் பற்றிய என் கருத்தை வைக்கிறேன்.

ரசிகர்களில் தீவிர ரசிகர்கள் ஒரு பக்கம் இவர்கள் எந்த (ரஜினி கமல்) ரசிகராக இருந்தாலும் அவர்களுக்குப் பிடித்த நடிகர் என்ன செய்து இருந்தாலும் நியாயப்படுத்திப் பேசுவார்கள்.

மற்ற நடிகரை மட்டம் தட்டியே பேசிக்கொண்டு இருப்பார்கள் அவர்கள் என்ன செய்து இருந்தாலும்.

ரொம்ப ஆபத்தானவர்கள்

இன்னொரு பகுதி ரசிகர்கள் நடுநிலையார்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் இவர்கள் தங்களுக்குப் பிடிக்காத நடிகரை வெளிப்படையாக அதிகம் விமர்சிக்க மாட்டார்கள்.

அப்படியே விமர்சித்தாலும் நடுநிலையாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டாலும் சரியாகக் கவனிப்பவர்கள் அவர்களின் உள் மன வெறுப்பை எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள்.

இவர்களே ரொம்ப ஆபத்தானவர்கள். எல்லோருக்கும் நல்லவன் வேஷம் போடுபவர்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் இவர்கள் தாங்கள் ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தாலும் மற்ற நடிகரின் படத்தையும் மனதில் எந்த வெறுப்பும் இல்லாமல் பார்த்து ரசிப்பார்கள், அவசியம் இல்லாமல் விமர்சிக்க மாட்டார்கள், மட்டம் தட்ட மாட்டார்கள்.

தனக்குப் பிடிக்காத நடிகரின் ரசிகரை ஜாலியாகக் கிண்டலடித்து அவர்களுடன் கலந்து அவர்களின் ரசனையையும் மதித்து உற்சாகம் கொடுப்பார்கள் ஆனால், இவர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு.

போலி நடுநிலையாளர்கள்

தீவிர ரசிகர்கள் ஒருபுறம் பிரச்சனை ஆனவர்கள் என்றால் இந்த நடுநிலையாளர்கள் அதை விடப் பிரச்சனையானவர்கள்.

இவர்கள் நடுநிலையாகக் காட்டிக்கொண்டாலும் மற்ற நடிகரின் கஷ்டத்தைப் பார்த்து மகிழ்ச்சிடைவார்கள்.

அவர்கள் ஏதாவது விமர்சனத்தில் மாட்டிக்கொண்டால் உள்ளூர மகிழ்ச்சிடைவார்கள் ஆனால், அதை வெளிப்படையாகக் காட்டமாட்டார்கள்.

வாய்ப்பு கிடைக்கும் போது அந்த நடிகரைக் கிண்டலடித்துப் பதிவிடத் தயங்கமாட்டார்கள் நடுநிலையாளர் என்ற போர்வையில்.

இவர்களைத் தொடர்ந்து கவனிப்பவர்கள் மட்டுமே இவர்கள் உள் எண்ணத்தை அறிய முடியும், மற்றவர்கள் ஏமாந்து விடுவார்கள்.

ஆதரவாளர்கள்

இணையத்திலும் பொதுவிலும் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தாலும் பதிவுலகில் அவரை ஆதரித்து ஆணித்தரமான கருத்துக்களை வைத்து எழுதுவதற்குப் பதிவர்கள் மிகக் குறைவு.

அப்படியே எழுதினாலும் உயர்த்திக் கூறுவதாக நினைத்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி எழுதி விடுவார்கள் தாங்கள் அந்தத் தவறை செய்கிறோம் என்பதை அறியாமலே.

ரஜினிக்குப் பதிவுலகில் மறைமுக ஆதரவே அதிகம், அதற்கு இவர் மசாலா பட நடிகர் என்பதும் வெளிப்படையாக ஆதரித்தால் கிண்டலடிக்கப்படுவோம் என்பதும் ஒரு காரணம்.

இவை எல்லாம் ஒரு காரணம் இதுவே காரணம் அல்ல.

ரஜினியுடன் ஒப்பிடும் போது இணையம், பொதுவில் கமலுக்கு ஆதரவு குறைவு தான் ஆனால், இது பதிவுலகில் மாறி உள்ளது கமலுக்குப் பெருவாரியான ஆதரவு குறிப்பாகப் பிரபல! பதிவர்களின் ஆதரவு உள்ளது.

பதிவுலகில் கமலின் வெளிப்படையான ஆதரவிற்கு ஒரு காரணம், பல நல்ல சிறந்த படங்களைக் கொடுத்ததும், புதிய முயற்சிகளும் அவர் படங்களை ஆதரித்தால் தாங்கள் சிறந்த ரசிகர் பட்டியலில் வருவோம் என்ற இயல்பான மனநிலையும் காரணம்.

பதிவுலகம் மட்டுமல்லாமல் பொதுவாக அனைவருக்கும் உள்ள எண்ணம். எழுத்து என்று வரும் போது அது இங்கு வலுப்பெறுகிறது.

இவை எல்லாம் ஒரு காரணம் இதுவே காரணம் அல்ல.

பதிவுலகில் இது வரை இந்த இரு ரசிகர்களின் பல ஆதரவு எதிர்ப்பு பதிவுகளைப் படித்துள்ளேன்.

ஒரு சிலர் நடுநிலையாக எழுதுவதாகக் காட்டிக்கொண்டாலும் மற்ற நடிகரை (ரஜினி அல்லது கமல்) பற்றி அவரது பதிவில் குறிப்பிட வேண்டி வந்தால், அதில் ஒரு கிண்டல் தொனி அல்லது அவரை மட்டப்படுத்தும் எண்ணம் இருக்கும்.

அந்த எண்ணம் இல்லாமல் எழுதுபவர்கள் மிகக்குறைவு.

பதிவில் தங்களை நடுநிலையாகக் காட்டிகொள்பவர்கள் கூட வேறொருவர் யாரவது திட்டி, கிண்டலடித்துப் பதிவெழுதி இருந்தால் பின்னூட்டம் மூலம் தங்கள் உண்மை முகத்தை வெளிப்படுத்தி இருப்பார்கள் குறைந்த பட்சம் ஸ்மைலி மூலமாவது.

நேர்மையாக விமர்சிக்க முடியாது

எனவே, ரஜினி கமல் ரசிகர்கள் மட்டுமல்ல எந்த ரசிகராக இருந்தாலும் தங்களால் மற்றவரைப் பற்றி நேர்மையாக விமர்சிக்க முடியாது என்பதே என் திட்டவட்டமான கருத்து.

எங்கும் போல இங்கும் சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.

இதை நீங்கள் தங்களுக்குப் பிடித்த நடிகரைப் பற்றி முன்பு எழுதிய பதிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தீர்கள் என்றால் வித்யாசம் தெரியும்.

அதே போலத் தங்களுக்குப் பிடித்த நடிகர் என்றால் அதில் என்ன தான் நியாயமாக! எழுத முயற்சித்தாலும் அதில் மறைமுக ஆதரவு கருத்து (அவர்களை அறியாமலே கூட) இருக்கும் என்பதே உண்மை.

கடைசியாக ரஜினி கமல் இருவரும் தனித்துவமானவர்கள், இருவரும் அதிர்ஷ்டத்தால் இந்த நிலையை அடையவில்லை.

கடும் போராட்டம் மற்றும் முயற்சிக்கிடையே தான் இந்த நிலையை அடைந்து இருக்கிறார்கள்.

இருவரின் கருத்துக்களும் எண்ணங்களும் வேறு வேறானவை ஆனால், நட்பு என்ற அடிப்படையில் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள்.

தங்களிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பொதுவில் அநாகரீகமாக விமர்சித்துக் கொள்வதில்லை.

ஆனால், அவர்களை ரசிக்கும் ரசிகர்கள் ஏனோ எப்போதும் எதிரியாகவும் நடுநிலை போர்வையிலும் மோதிக் கொண்டே உள்ளார்கள்.

பின் குறிப்பு

நான் ஒரு ரஜினி ரசிகன்.

இதில் பெரும்பாலான கருத்துக்கள் அனைத்து எதிர் ஜோடி நடிகர்களின் ரசிகர்களுக்கும் பொருந்தும் என்றாலும், நான் சம்பந்தப்பட்ட இருவர் இவர்கள் என்பதால் இவர்களைக் குறிப்பிட்டேன்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

47 COMMENTS

  1. // அவர்களை ரசிக்கும் ரசிகர்கள் ஏனோ எப்போதும் எதிரியாகவும் நடுநிலை போர்வையிலும் மோதி கொண்டே உள்ளார்கள்.//

    அது எல்லாக்காலத்துலயும் இருக்கும். அவங்களே போய் வேலையைப்பாருங்கன்னு சொன்னாலும் நமக்கு பொழுது போவணுமே 🙂

  2. கிரி

    நல்லா எழுதி இருக்கீங்க….

    நானும் வலையில் முடிந்தவரை இவர்களை வைத்து பதிவுகள் எழுதுகிறேன் (ந‌கைச்சுவை என்ற பெயரில்..).. இது தவறோ என்று தோன்றுகிறது… இருந்தாலும், விஜய், விஜயகாந்த், கமல் என்று எழுதி வந்த நான், இப்போது ரஜினியையும் விட்டு வைக்கவில்லை…

    ரஜினியை பற்றிய ஒரு தொடர் (10 பாகம்) ஜோக்கிரியில் எழுதியது நினைவிருக்கலாம். இப்போது, விஜய், விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றோரை வைத்து சில மைல்ட் காமெடி பதிவுகளும் எழுதியாச்சு.. (பெரும் அளவில் கலாய்க்காமல்…), அதே வரிசையில் நாளை ஒரு ரஜினி பதிவும் வருகிறது… இதெல்லாம் வெறும் த‌மாஷுக்கு ம‌ட்டுமே…

    யாரையும் மட்டம் தட்டும் நோக்கம் எனக்கில்லை… ரஜினி ரசிகன் என்பதால் கமலுக்கும், அவர் ரசிகர்களுக்கும் விரோதியும் அல்ல…

  3. தான் ஒருவருக்கு ரசிகர் என்று முத்திரை குத்தி கொள்வதில் உள்ள உளவியல் பிரச்சனைகளை அலசுவோமா!?

    1.ஏன் அவருக்கு ரசிகர்?

    2.என்ன செய்தாலுமா?

    3.அவரது தொழிலுக்கு மட்டுமா?

    4.அவருக்காக எதையெல்லாம் இழக்க தயார்?

    5.எதிரணி என்பது ஒருவர் மட்டுமா?
    அல்லது மற்ற அனைத்து தீவட்டிகளுமா?

    6.உங்கள் ஆதர்ஷ்புருஷருக்கு வாரிசுகள் வந்தால் அவரும் உங்களுக்கு அப்படியே தானா!?

    7.அல்லது வேறு யாருக்கு கிளை புருஷர் பதவி குடுப்பீர்களா?

    8.நீங்கள் கடவுளுக்கு சமமாக நினைக்கும் உங்கள் ஆதர்ஷபுருஷர் உங்களுக்கு சரியான மரியாதை தருகிறார் என்று நம்புகிறீர்களா?

    9.உங்களது தீவிர ரசிகன் என்ற ஸ்டேட்மெண்டை வாபஸ் வாங்குவீர்களா?

    உங்கள் விருப்பம் பத்தாவது பதிலாக!

    உங்க பதிலை சொல்லுங்க!
    என் ப்ளாக்குகளையும் போட்டு எல்லார் கிட்டயும் பதில் வாங்குறேன்

  4. பதிவுலகில் ஒருவர் தனக்கு கமல் பிடிக்கும்ன்னு சொன்னா மற்றவர்கள் அவரை பெரிய அறிவு ஜீவியாக எண்ணுவார்கள்ன்னு நினைச்சுட்டு பிடிக்குதோ இல்லையோ தசவதாரத்தை கூட உலக படம்ன்னு சொல்லுவாங்க.

    அப்பாடா வந்த வேலை முடிஞ்சுது 🙂

  5. //நான் ஒரு ரஜினி ரசிகன் (என்னை பற்றி தெரியாதவர்களுக்கு). //

    என்ன கிரி இப்படி சொல்லீட்டீங்க, வயித்துல இருக்கிற குழந்தை கிட்ட கேட்டா கூட சொல்லுமே, கிரி தலைவர் வெறியர்ன்னு

  6. //எனவே ரஜினி கமல் எந்த ரசிகராக இருந்தாலும் தங்களால் மற்றவரை பற்றி நேர்மையாக விமர்சிக்க முடியாது என்பதே என் திட்டவட்டமான (தனிப்பட்ட) கருத்து (எங்கும் போல இங்கும் சிலர் விதிவிலக்காக இருக்கலாம்)//

    இது உங்களுக்கும் பொருந்துமா ? அல்லது நீங்க விதிவிலக்குல வர்றீங்களா? :))

  7. ஆவ்…..இதான் பேசாமல் சாம் அண்டர்சன் ரசிகராக இருக்க வேணும் என்று சொல்லிறது 🙂

  8. //சினிமாவே ஒரு வெட்டி வேலை அதற்க்கு ரசிகர்கள் சண்டை போடுவது அதை விட வெட்டி வேலை என்று கருதும் உயர்ந்த சிந்தனை உள்ளவர்கள் உங்களது நேரத்தை வீணாக்காமல் இதோடு படிப்பதை நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.//

    All Right…. :))))))))

  9. //நான் சம்பந்தப்பட்ட இருவர் இவர்கள் என்பதால் இவர்களை குறிப்பிட்டேன்
    //
    நீங்க சம்பந்தப்பட்ட என்றால்?? நீங்கள் இவர்கள் இருவரையும் வைத்து படம் எடுத்திருக்கின்றீர்களா? அல்லது அவர்கள் படத்தை வைத்து டிஸ்டிரிபியூசன் செய்திருக்கின்றீரா? அல்லது அவர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கின்றீரா? இவங்க ரெண்டு பேரும் உங்க நண்பர்களா? அப்பப்ப பேசுவீங்களா இவர்களிடம்? அட அதெல்லாம் விடுங்க அவங்களுக்கு உங்க பெயராவது தெரியுமா? பின்ன எப்புடி நான் சம்பந்தப்பட்ட என்ற வார்த்தை?

    இவங்க படத்தை நீங்க காசுகொடுத்து பார்க்குறீங்க? அவ்ளோதானே அதுக்கே நீங்க சம்பந்தப்பட்ட என்றால் மெக்டெணால்ட்ஸ், குடை கடை, அஞ்சப்பர், எம் ஆர் டி, பஸ் எல்லாம் நீங்க சம்பந்தப்பட்டது தான் :-)))))))))

  10. வாங்க சுரேஷ் 🙂

    =========================================================

    // Bleachingpowder said…
    அப்பாடா வந்த வேலை முடிஞ்சுது :)//

    ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க 😉

    //என்ன கிரி இப்படி சொல்லீட்டீங்க, வயித்துல இருக்கிற குழந்தை கிட்ட கேட்டா கூட சொல்லுமே, கிரி தலைவர் வெறியர்ன்னு//

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணை கட்டுதே .. ஒரு சின்ன திருத்தம் வெறியன் அல்ல ரசிகன் 🙂

    ===========================================================

    சக்தி ஓகே ஓகே 😉

    ===========================================================

    // சின்ன அம்மிணி said…
    அது எல்லாக்காலத்துலயும் இருக்கும். அவங்களே போய் வேலையைப்பாருங்கன்னு சொன்னாலும் நமக்கு பொழுது போவணுமே :)//

    :-))) அது சரி

    ===========================================================

    //R.Gopi said…
    நாளை ஒரு ரஜினி பதிவும் வருகிறது… இதெல்லாம் வெறும் த‌மாஷுக்கு ம‌ட்டுமே.//

    இருக்கலாம் இருந்தாலும் தலைவர் பதிவில் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை 🙂 இது இயல்பு

    //யாரையும் மட்டம் தட்டும் நோக்கம் எனக்கில்லை… ரஜினி ரசிகன் என்பதால் கமலுக்கும், அவர் ரசிகர்களுக்கும் விரோதியும் அல்ல.//

    நீங்கள் அப்படி நினைக்கலாம் ஆனால் படிப்பவர்கள் அப்படி நினைப்பார்களா என்று தெரியவில்லை 🙂

    ============================================================

    //ஜோ/Joe said…
    இது உங்களுக்கும் பொருந்துமா ? அல்லது நீங்க விதிவிலக்குல வர்றீங்களா? 🙂 //

    :-)))

    வாங்க ஜோ… இந்த கேள்விய யாராவது கேட்ப்பாங்கன்னு எதிர்பார்த்தேன் 😉

    எனக்கும் பொருந்தும் ..நான் யோக்கியன் இல்லை. என் மனசாட்சி படி நியாயமாக எழுத முடியாது என்று நான் கமல் பற்றி எழுதுவதையே நிறுத்தி விட்டேன் குற்ற உணர்ச்சி இருப்பதால்.

    மனசாட்சிக்கு திருப்தி தராத எந்த செயலையும் செய்வதில்லை.

    ==========================================================

    // ஐந்திணை said…
    தலைப்புக்கு பதில் => முடியாது//

    🙂 நீங்க சுருக்கமா சொல்லிட்டீங்க.. அதை நான் காரணத்தோடு விவரித்து இருக்கிறேன் அவ்வளோ தான்.

  11. //அவ்ளோதானே அதுக்கே நீங்க சம்பந்தப்பட்ட என்றால் மெக்டெணால்ட்ஸ், குடை கடை, அஞ்சப்பர், எம் ஆர் டி, பஸ் எல்லாம் நீங்க சம்பந்தப்பட்டது தான் :-)))))))))//

    அப்போ இல்லைங்கறீங்களா? :))

  12. குழலி,
    நீங்க சீரியஸா சொல்லியிருந்தால்..

    //நான் ஒரு ரஜினி ரசிகன் (என்னை பற்றி தெரியாதவர்களுக்கு). இதில் பெரும்பாலான கருத்துக்கள் அனைத்து எதிர் ஜோடி நடிகர்களின் ரசிகர்களுக்கும் பொருந்தும் என்றாலும், நான் சம்பந்தப்பட்ட இருவர் இவர்கள் என்பதால் இவர்களை குறிப்பிட்டேன்.//

    கிரி சொல்ல வந்தது போட்டி நடிகர்களில்(சிவாஜி -எம்.ஜி.ஆர் ,கமல்-ரஜினி ,அஜீத் -விஜய் இப்படி)இவர் சம்பந்தப்பட்டது கமல்-ரஜினி ,எனென்றால் அவர் ரஜினி ரசிகர் .

    அப்படித் தானே கிரி?

  13. நடுநிலையான விமர்சனம், நான் தீவிர கமல் ரசிகர் தான் ஆனாலும் ரஜனி படங்கள் பிடிக்கும். கமலும் ரஜனியும் ஒற்றுமையாக இருப்பதுபோல் அவர்களின் ரசிகர்கள் ஒற்றுமையாக இல்லை. ரசிகர்களிடம் வன்முறையத் தூண்டியவர்கள் தலை தளபதி ரசிகர்கள் தான்.

  14. // வால்பையன் said…
    தான் ஒருவருக்கு ரசிகர் என்று முத்திரை குத்தி கொள்வதில் உள்ள உளவியல் பிரச்சனைகளை அலசுவோமா!?//

    அலசுவோம் ..முத்திரை குத்திக்க நான் விரும்பவில்லை அது தானாக அமைந்து விடுகிறது.

    //1.ஏன் அவருக்கு ரசிகர்?//

    அவரின் நடிப்பும் பொது வாழ்வில் அவரது எளிமையும் வெளிப்படையான பேச்சும் பிடித்ததால்

    //2.என்ன செய்தாலுமா?//

    இல்லை

    //3.அவரது தொழிலுக்கு மட்டுமா?//

    அவரது எளிமைக்கும் வெளிப்படையான பேச்சிற்க்கும்

    //4.அவருக்காக எதையெல்லாம் இழக்க தயார்?//

    எதையும் இல்லை

    //5.எதிரணி என்பது ஒருவர் மட்டுமா?//

    அதை பற்றி எல்லாம் கண்டுகொள்வதில்லை

    //அல்லது மற்ற அனைத்து தீவட்டிகளுமா?//

    யாரும் இல்லை

    //6.உங்கள் ஆதர்ஷ்புருஷருக்கு வாரிசுகள் வந்தால் அவரும் உங்களுக்கு அப்படியே தானா!?//

    வாய்ப்பே இல்லை..ரஜினி மகள் வெற்றி பெற்றால் சந்தோசம் அவ்வளவே. ஒரு ரஜினி ரசிகன் ஒருவரால் இன்னொருவரை அதே மாதிரி நினைத்தே பார்க்க முடியாது (இது எம் ஜி ஆர், சிவாஜி, கமல் ரசிகர்கள் அனைவருக்கும் பொருந்தும்)

    //7.அல்லது வேறு யாருக்கு கிளை புருஷர் பதவி குடுப்பீர்களா?//

    ஒரு வெங்காய பதவியும் கிடையாது

    //8.நீங்கள் கடவுளுக்கு சமமாக நினைக்கும் உங்கள் ஆதர்ஷபுருஷர் உங்களுக்கு சரியான மரியாதை தருகிறார் என்று நம்புகிறீர்களா?//

    சிறு திருத்தம் நான் கடவுளாக அல்ல அதற்க்கு மேலே நினைப்பது என் பெற்றோரை மட்டுமே வேறு யாரையும் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாது.

    எனக்கு அதை போல சம்பவம் நடக்கவில்லை, நடந்தால் பார்க்கலாம்.

    //9.உங்களது தீவிர ரசிகன் என்ற ஸ்டேட்மெண்டை வாபஸ் வாங்குவீர்களா?//

    நான் எப்போதும் தீவிர ரசிகன் கிடையாது..ரசிகன் தான் (அதற்க்கு என் பதிவுகளே சாட்சி)

    //உங்கள் விருப்பம் பத்தாவது பதிலாக!//

    எனக்கு ரஜினி ரசிகன் என்பதிலே எந்த வருத்தமும் அவமானமும் இல்லை. அப்படி நினைப்பவர்கள் மனதில் தான் கோளாறு.

    //உங்க பதிலை சொல்லுங்க!
    என் ப்ளாக்குகளையும் போட்டு எல்லார் கிட்டயும் பதில் வாங்குறேன்//

    உங்கள் கேள்விகள் நடுநிலையா இல்லை வெறுப்போடு உள்ளது (உங்களுக்கு நடிகர்களை பிடிக்காது என்பதால்), அதுவும் உங்கள் தளத்தில் இதை போட்டால் அது கும்மி பதிவாக தான் கருதப்படும் பயனிருக்குமா என்று தெரியவில்லை.

    உங்கள் கேள்விகளுக்கு நன்றி அருண்.

  15. //உங்கள் கேள்விகள் நடுநிலையா இல்லை வெறுப்போடு உள்ளது//

    நான் யாரையும் ஆதரிக்காத போது எங்கிருந்து வெறுப்பு வரும்!

  16. // வால்பையன் said…
    நான் யாரையும் ஆதரிக்காத போது எங்கிருந்து வெறுப்பு வரும்!//

    நீங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை ஆதரிக்க மாட்டீர்கள் என்பது எனக்கு 100% தெரியும்

    நான் அதை கூறவில்லை கேள்விகள் சரியான முறையில் இல்லை என்பதை கூறினேன்….கிண்டல் தொனியில் உள்ளது என்பதை குறிப்பிட்டேன்.

  17. //நான் அதை கூறவில்லை கேள்விகள் சரியான முறையில் இல்லை என்பதை கூறினேன்….கிண்டல் தொனியில் உள்ளது என்பதை குறிப்பிட்டேன். //

    கேள்வியின் சாராம்சமே முக்கியம், கேள்வி கேட்ட தோணி அல்ல!

    ரஜினி ரசிகர்கள் விஜயையும்,கமல் ரசிகர்கள் அஜித்தையும் அப்படியே ப்லோ பண்ணுவதால் இப்படி பட்ட கேள்விகள் கேட்க தோன்றுகிறது!

    யாருக்காவது ரசிகனாக இருந்தே ஆக வேண்டும் என்பது எதாவது வியாதியா!?

  18. கிரி: நான் பின்னூட்டமிட்டால் பெரிய சண்டைலதான் முடியும். இருந்தாலும் ஒரு சில விசய்த்தை சொல்றேன்.

    ரஜினி ஃபேன்ஸ் டாட் காம் அளவுக்கு இணைத்தில், கமலுக்கு ஒரு பெரிய வெப் சைட் இருக்கா? இருந்தால் சொல்லுங்க!

  19. // குறை ஒன்றும் இல்லை !!! said…
    All Right…. :))))))))//

    😉 எப்பூடி

    =========================================================

    // குழலி / Kuzhali said…
    //நான் சம்பந்தப்பட்ட இருவர் இவர்கள் என்பதால் இவர்களை குறிப்பிட்டேன்
    //
    நீங்க சம்பந்தப்பட்ட என்றால்?? நீங்கள் இவர்கள் இருவரையும் வைத்து படம் எடுத்திருக்கின்றீர்களா? அல்லது அவர்கள் படத்தை வைத்து டிஸ்டிரிபியூசன் செய்திருக்கின்றீரா? அல்லது அவர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கின்றீரா? இவங்க ரெண்டு பேரும் உங்க நண்பர்களா? அப்பப்ப பேசுவீங்களா இவர்களிடம்? அட அதெல்லாம் விடுங்க அவங்களுக்கு உங்க பெயராவது தெரியுமா? பின்ன எப்புடி நான் சம்பந்தப்பட்ட என்ற வார்த்தை?//

    நான் கூற நினைத்ததை ஜோ அவர்கள் மிக தெளிவாக கூறி விட்டார் 🙂

    //நீங்க சம்பந்தப்பட்ட என்றால் மெக்டெணால்ட்ஸ், குடை கடை, அஞ்சப்பர், எம் ஆர் டி, பஸ் எல்லாம் நீங்க சம்பந்தப்பட்டது தான் :-)))))))))//

    :-)))

    குழலி இதற்க்கு தான் நீங்க ரஜினி பதிவு என்றால் மட்டும் வந்து பார்க்க கூடாது, என்னோட மற்ற பதிவுகளையும் படித்து இருந்தால் இப்படி கேட்டு இருக்க மாட்டீர்கள் 😉

    ========================================================

    // ஜோ/Joe said…
    கிரி சொல்ல வந்தது போட்டி நடிகர்களில்(சிவாஜி -எம்.ஜி.ஆர் ,கமல்-ரஜினி ,அஜீத் -விஜய் இப்படி)இவர் சம்பந்தப்பட்டது கமல்-ரஜினி ,எனென்றால் அவர் ரஜினி ரசிகர் .

    அப்படித் தானே கிரி?//

    அப்படியே தான்…:நன்றி ஜோ. குழலி சும்மா கலாய்க்க கேட்டு இருப்பார்னு நினைக்கிறேன் :-))

    ========================================================

    // வந்தியத்தேவன் said…
    ரசிகர்களிடம் வன்முறையத் தூண்டியவர்கள் தலை தளபதி ரசிகர்கள் தான்.//

    வந்தியத்தேவன் யாரும் யாரையும் தூண்ட முடியாது. அனைவருக்கும் யோசிக்கும் திறன் இருக்கிறது. எனவே நாம் செய்யும் தவறை நியாயப்படுத்த முடியாது.

    =========================================================

    // Bhuvanesh said…
    என்ன இது?? இன்னும் யாரும் "அடிச்சு பேச" ஆரம்பிக்கல?? :)//

    ஹி ஹி ஹி உங்க ஆசை நிறைவேறி விட்டது

    ==========================================================

    // ’டொன்’ லீ said…
    ஆவ்…..இதான் பேசாமல் சாம் அண்டர்சன் ரசிகராக இருக்க வேணும் என்று சொல்லிறது :-)//

    :-)))))

    ===========================================================

    //சிங்கக்குட்டி said…
    ரஜினி ரசிகன் என்ற முறையில் இது ஒரு நல்ல பதிவு….:-))//

    அப்படியா! அப்ப ஒரு பக்க சார்பா இருக்கா! 🙂

    ============================================================

    // Mahesh said…
    நல்ல கேள்விதான் கேட்டிருக்கீங்க…. ஆனா… முடியாதுங்கறதுதான் என் பதில்.//

    உண்மை தான் மகேஷ் 🙂

    =============================================================

    // வால்பையன் said…
    கேள்வியின் சாராம்சமே முக்கியம், கேள்வி கேட்ட தோணி அல்ல!//

    இதில் எனக்கு உடன்பாடு இல்லை அருண்

    //ரஜினி ரசிகர்கள் விஜயையும்,கமல் ரசிகர்கள் அஜித்தையும் அப்படியே ப்லோ பண்ணுவதால் இப்படி பட்ட கேள்விகள் கேட்க தோன்றுகிறது!//

    மாற்றி சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன்

    //யாருக்காவது ரசிகனாக இருந்தே ஆக வேண்டும் என்பது எதாவது வியாதியா!?//

    நீங்க எதுக்கு இந்த கேள்வி கேட்டீங்கன்னே எனக்கு புரியலை.. இப்படி ஒரு கேள்வி வரும்படியா நான் எதையுமே கூறவில்லை அருண்.

    ==============================================================

    // வருண் said…
    கிரி: நான் பின்னூட்டமிட்டால் பெரிய சண்டைலதான் முடியும்..//

    ஹா ஹா ஹா உங்க மேல அவ்வளோ நம்பிக்கையா..

    எனக்கும் சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சு … எல்லா பதிவும் ஒரே மாதிரி இருக்கு காரசாரமா இல்லைன்னு வருத்தமா இருக்கு.. :-)))))

    =============================================================

    // ஜோ/Joe said…
    //கமல் ரசிகர்கள் அஜித்தையும் அப்படியே ப்லோ பண்ணுவதால்//

    என்ன கொடுமை சார் இது!//

    :-)))))))

  20. //வாசுகி said…
    ஆனால் உங்களுக்கு ஸ்மைலி போட்ட அனுபவம் இருக்கு போல//

    ஹி ஹி ஹி இருக்கும் ஆனால் ரொம்ப நாள் முன்பு… நினைவில்லை. நான் தான் சொல்லிட்டேனே நான் நல்லவன் இல்லை என்று 😉

    //உங்களால நடு நிலைமையாக பதிவு எழுத முடியும் என நினைக்கிறேன்.
    ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே.:))//

    இந்த விளையாட்டுக்கு நான் வரலை ..இன்னும் கொஞ்சம் பக்குவம் அடைந்த பிறகு முயற்சித்து பார்க்கிறேன் 🙂

    =====================================================

    // உடன்பிறப்பு said…
    நீங்க ரஜினி ரசிகரா, இந்த பதிவு செல்லாது செல்லாது, ஆமா//

    :-)))) ஒரே குஷ்டமப்பா ..

    =====================================================

    //
    பிரவின்குமார் said…
    //உடன்பிறப்பு said…
    நீங்க ரஜினி ரசிகரா, இந்த பதிவு செல்லாது செல்லாது, ஆமா//

    "உடன்பிறப்பு(நாட்டாமை)"
    தீர்ப்ப மாத்தி சொல்லு…..//

    பிரவின் அப்புறம் உடன்பிறப்பு சொம்பெல்லாம் வேணும்னு கேட்பாரு கம்முனு இருங்க 😉

  21. ***// வருண் said…
    கிரி: நான் பின்னூட்டமிட்டால் பெரிய சண்டைலதான் முடியும்..//

    ஹா ஹா ஹா உங்க மேல அவ்வளோ நம்பிக்கையா..

    எனக்கும் சண்டை போட்டு ரொம்ப நாள் ஆச்சு … எல்லா பதிவும் ஒரே மாதிரி இருக்கு காரசாரமா இல்லைன்னு வருத்தமா இருக்கு.. :-)))))***

    This kind of discussion going for years, Giri. Once we become a fan, I dont think we can be neutral or unbiased. Now, you are trying to be too nice to Kh fans as you are trying to be neutral. That is like Indian umpires when play Pakistan. They usually favor Pakistaan, when they try to be neutral. LOL!

    May be you, BP, Arun and few more should join together and start a blog for just for Rajni fans. That is the only way, you can really make a difference!

  22. நல்ல கேள்விதான் கேட்டிருக்கீங்க…. ஆனா… முடியாதுங்கறதுதான் என் பதில்.

  23. //கமல் ரசிகர்கள் அஜித்தையும் அப்படியே ப்லோ பண்ணுவதால்//

    என்ன கொடுமை சார் இது!

  24. நீங்கள் ரஜினி ரசிகராக இருந்தாலும் கமலை வெறுப்பதில்லை என்பது
    தெரியும். யாராவது கமலை கிண்டல் பண்ணி பதிவு எழுதியிருந்தாலும் அதை ஆதரித்து நீங்கள் பின்னூட்டம் இட்டதாக வாசித்த நினைவு இல்லை.
    ஆனால் உங்களுக்கு ஸ்மைலி போட்ட அனுபவம் இருக்கு போல.

    உங்களால நடு நிலைமையாக பதிவு எழுத முடியும் என நினைக்கிறேன்.
    ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே.:))

  25. //உடன்பிறப்பு said…
    நீங்க ரஜினி ரசிகரா, இந்த பதிவு செல்லாது செல்லாது, ஆமா//

    "உடன்பிறப்பு(நாட்டாமை)"
    தீர்ப்ப மாத்தி சொல்லு…..

  26. //உங்களால நடு நிலைமையாக பதிவு எழுத முடியும் என நினைக்கிறேன்.
    ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே.:))//

    – appadiye vazhi mozhikuren.. giri ungaloda pakkuvamm naaluku naal athigam ayitte poguthuu so nichayam ungalala kamal pathi positive pathivum poda mudiyumm but anyway vendammm because oru rajini rasigana athai yennala rasika than kashtama irukum:):)

    Sorry for not posting any message long time.. My grandpa went thru an operation and I was tsaking care of him for these days, now I am free.. yerkanave unga yella pathivum padichutenn inniku..

    Regards,
    Arun

  27. //வருண் said…
    This kind of discussion going for years, Giri. Once we become a fan, I dont think we can be neutral or unbiased//

    வழிமொழிகிறேன்

    //That is like Indian umpires when play Pakistan. They usually favor Pakistaan, when they try to be neutral. LOL//

    :-))) வருண் உங்க உதாரணம் நல்லா இருக்கு

    நான் தான் அம்ப்பையரா வே இருக்க தகுதி இல்லைன்னு சொல்லிட்டேனே 😉

    //May be you, BP, Arun and few more should join together and start a blog for just for Rajni fans. That is the only way, you can really make a difference!//

    வேண்டாத வேலை வருண், ஏற்கனவே இதற்க்கு நிறைய தளங்கள் இருக்கின்றன..அதுவுமில்லாமல் இவர்களுடன் சண்டை போட்டு கொண்டு இருந்தால் நம்ம பொழப்பு நாறிடும். இதை என்னோட மனத்திருப்திக்காக எழுதறேன்..இதே வேலையா இருக்க முடியாது. என் பதிவுகளையே தற்போது அளவாக தான் எழுதுகிறேன்

    ====================================================

    //arun said…
    anyway vendammm because oru rajini rasigana athai yennala rasika than kashtama irukum:):)//

    ஹி ஹி கவலைபடாதீங்க…. நல்லவன் வேஷம் போடுவது எனக்கு பிடிக்கலை..

    //Sorry for not posting any message long time.. My grandpa went thru an operation and I was tsaking care of him for these days, now I am free.. //

    அருண் நான் கூட என்னடா இது ஆளையே காணோமே என்று பார்த்துட்டு இருந்தேன்..இந்த முறை ஊருக்கு வரும் போது உங்களிடம் பேசலாம் என்று உங்க மொபைல் எண் கேட்டு மின்னஞ்சல் செய்து இருந்தேன், அதற்கும் பதில் வரலை..அதனால் சிறிது குழப்பமாக இருந்தேன். அடுத்த முறை சந்திப்போம்.

    என்னோட பையன் கூட இருப்பதை பற்றி எழுத கேட்டு இருந்த இடுகையை நான் மறக்கலை விரைவில் பதிவிடுகிறேன் 🙂

    //yerkanave unga yella pathivum padichutenn inniku.. //

    நன்றி அருண்

    =======================================================

    //ஜோ/Joe said…
    கிரி,
    உங்கள் இந்த பதிவுக்கு பின் எனக்கு தோன்றிய ஒரு எண்ணத்தை பதிவிட்டிருக்கிறேன்//

    ஜோ நல்லா எழுதி இருந்தீங்க பின்னூட்டமும் இட்டு விட்டேன்.

  28. "என்னோட பையன் கூட இருப்பதை பற்றி எழுத கேட்டு இருந்த இடுகையை நான் மறக்கலை விரைவில் பதிவிடுகிறேன் 🙂
    "

    Nandri Giri.. mudincha oru 2 to 3 part ta (thodar pathiva) thai podunga

  29. // ச.செந்தில்வேலன்(09021262991581433028) said..
    பதிவுலகம் பற்றி எனக்கு அறிமுகம் குறைவு என்பதால் கருத்துக்கூற விரும்பவில்லை.
    ஆனால் ரசிகர்கள் என்றால் ரஜினியின் படத்தை ஓட்ட வைக்கும் அளவிற்கு கமலுக்கு இல்லை என்பது தான் உண்மை.//

    செந்தில் ஸ்ரீநிவாஸ் கூறியதை போல ரசிகர்களால் மட்டுமே எந்த படமும் ஓடி விட முடியாது..அப்படி என்றால் பாபா ஓடி இருக்க வேண்டும்..குசேலன் ஓடாமல் போனதுக்கு பல்வேறு அரசியல் காரணங்கள். ரஜினியை ஒப்பிடும் போது கமலுக்கு ரசிகர்கள் வேண்டும் என்றால் குறைவாக இருக்கலாம் ..அதற்க்கு காரணம் ரஜினி மாஸ் நடிகர் எனவே அதில் ஆச்சர்யம் இல்லை.

    // கமல் ரசிகர்கள் பெரும்பாலானோர் டிவியில் பார்ப்பதையே விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். மகாநதியைப் பார்த்து கண்ணிர் விடாத குடும்பங்கள் இல்லை எனலாம். ஆனால் அது படத்தை வெற்றியடைய உதவுவதில்லை.//

    இதுவும் அவர் கூறியதை போல தான்.. பொதுவாக ரஜினி படத்திற்கு பெண்கள் ஆதரவு அதிகம். ஒரு சிலர் நினைக்கலாம் பெண்களை விட ஆண்களே அதிகம் படம் பார்க்கிறார்கள் அப்படி இருக்கும் போது ஏன் தாய்குலங்களை அதிகம் தாங்குகிறார்கள் என்றால் ..அவர்கள் வந்தால் அவர் ஒருவர் மட்டுமே வருவதில்லை.உடன் கணவர், குழந்தைகள் என்று ஒரு பெரும் படையே வரும். இதனாலேயே தாய்க்குலங்களின் பேராதரவுடன் என்று கூறுகிறார்கள். ரஜினிக்கு அனைத்து தரப்பு மக்களும் வருவதாலே படம் வெற்றி அடைகிறது.

    பெண்கள் சீரியலில் அழுகையை ஆதரிக்கிறார்கள் ஆனால் ஏனோ திரைப்படத்தில் ரசிப்பதில்லை, உற்சாகத்தை தான் விரும்புகிறார்கள். இதனாலேயே கமலின் மசாலா படங்கள் வெற்றி அடைந்த அளவிற்கு பல சிறந்த படங்கள் வெற்றி அடையவில்லை.

    //மற்றொன்று ரசினையில் வேறுபாடு இருந்தால் எப்படி நன்றாக விமர்சிக்க முடியும்?//

    மறுக்க முடியாத உண்மை.

    ===================================================

    ஸ்ரீநிவாஸ் உங்க வருகைக்கு நன்றி உடன் உங்கள் விளக்கத்திற்கும்

    ===================================================

    // arun said…
    Nandri Giri.. mudincha oru 2 to 3 part ta (thodar pathiva) thai podunga//

    ஐயையோ! வாய்ப்பே இல்லை.. ஒரு பதிவு தான் போட முடியும்..அதற்க்கு மேல போன ரொம்ப போர் ஆகிடும் எழுதவும் விஷயம் இருக்காது 🙂

    அருண் உங்க மொபைல் எண்ணை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்க.

  30. //ரஜினியுடன் ஒப்பிடும் போது இணையம், பொதுவில் கமலுக்கு ஆதரவு குறைவு தான், ஆனால் இது பதிவுலகில் மாறி உள்ளது கமலுக்கு பெருவாரியான ஆதரவு குறிப்பாக பிரபல! பதிவர்களின் ஆதரவு உள்ளது.//
    பதிவுலகம் பற்றி எனக்கு அறிமுகம் குறைவு என்பதால் கருத்துக்கூற விரும்பவில்லை.
    ஆனால் ரசிகர்கள் என்றால் ரஜினியின் படத்தை ஓட்ட வைக்கும் அளவிற்கு கமலுக்கு இல்லை என்பது தான் உண்மை. கமல் ரசிகர்கள் பெரும்பாலானோர் டிவியில் பார்ப்பதையே விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். மகாநதியைப் பார்த்து கண்ணிர் விடாத குடும்பங்கள் இல்லை எனலாம். ஆனால் அது படத்தை வெற்றியடைய உதவுவதில்லை.
    இருவரையும் நேர்மையாக விமர்சிக்க முடியும். ஆனால் உடனே அதற்கு கமல் ரசிகன் என்ற போர்வை விழுந்து விடுவதும் ஒரு காரணம்.
    மற்றொன்று ரசினையில் வேறுபாடு இருந்தால் எப்படி நன்றாக விமர்சிக்க முடியும்?

  31. //ஆனால் ரசிகர்கள் என்றால் ரஜினியின் படத்தை ஓட்ட வைக்கும் அளவிற்கு கமலுக்கு இல்லை என்பது தான் உண்மை. ?????.//

    ரஜினி படம் ஓடுவதற்கு ரசிகர்கள் மட்டும் காரணமல்ல……அனைவரும் குடும்பத்துடன் பார்பப்பதால் தான் நன்றாக ஓடுகிறது ரசிகர்கள் மட்டும் தான் காரணம் என்றால் குசேலனை கூட ஓட வைத்திருக்கலாமே…

    //கமல் ரசிகர்கள் பெரும்பாலானோர் டிவியில் பார்ப்பதையே விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.//

    அப்படியெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை… கமல் படத்திற்கு குடும்பத்துடன் செல்லும் பழக்கம் மிக குறைவு…ரஜினி படங்களை இலைகர்கள் தனியாகவும், நண்பர்களுடனும் குடும்பத்துடனும் பார்க்க செல்வதால் பெரும் வெற்றி பெறுகிறது …

  32. நான் கல்லூரியில் படித்தபோது என் நண்பர்களான சத்தியமூர்த்தி தீவிர ரஜினி ரசிகர், ராமச்சந்திரன் தீவிர கமல் ரசிகர். இருவருக்கும் நடக்கும் படங்கள் பற்றிய வாக்குவாதம் பயங்கரமாக இருக்கும். கமலின் குணா வந்த சமயம், ரஜினியின் படம் ஒன்று வந்திருந்தது. ரஜினி படம் பெயர் மறந்துவிட்டது. நன்றாக சண்டை போடுவார்கள். இருவர் சொல்லும் வாதங்களும் நன்றாகவே இருக்கும். படம் பார்த்தோமோ, ரசிச்சோமா, படிச்சோமானு இருக்காம என்ன இது என்று மட்டுமே சொல்லிவிட்டுப் போய்விடுவேன்.

    எனக்கு ரஜினி என்றால் மிகவும் பிடிக்கும். அதற்காக ஒருபோதும் கமலை தவறாகவே பேசுவது இல்லை. ரஜினியே கமல் தனக்குப் பிடித்த நடிகர் என ஒருமுறை சொன்னதை பேட்டியில் பார்த்தபோது இந்த சத்தியமூர்த்தியும், ராமச்சந்திரனும் நினைவுக்கு வந்துபோனார்கள்.

    ராமச்சந்திரன் என்னை கமலின் தேவர் மகனுக்கு படம் வெளியான அன்று முதல் காட்சிக்கு அழைத்துப் போனார். 'இன்னைக்கு சத்தியமூர்த்திக்கு இருக்கு வேட்டு' என அவர் சொன்னபோது, நானே ரஜினி ரசிகன் தானே என்றேன்.

    நீ ரஜினிக்குனு சண்டை போடமாட்ற, கமல் படத்தை மட்டமா பேசமாட்ற நீயெல்லாம் ரஜினி ரசிகனு சொல்லிக்காதே என்றார்.

    ரஜினிக்கு ரசிகன் எனில் கமலை விமர்சிக்க வேண்டும் என யார் ராமச்சந்திரனுக்குச் சொல்லித் தந்தது? இப்போதும் யோசிக்கிறேன். ஏன் என்னால் ரஜினிக்காக சண்டை போட இயலுவதில்லை! நான் ரஜினி எனும் மனிதருக்கு ரசிகன்.

    மனிதம் பிறர் துன்பப்படுவதை ஒருபோதும் விரும்பாது.

    நல்லதொரு இடுகை கிரி அவர்களே. நிச்சயம் விமர்சிக்க முடியும். ரஜினி ரசிகனான நான் கமலின் படங்களைப் பார்த்து வியந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். உதாரணத்துக்கு கமலின் 'மகாநதி'யில் நான் உறைந்து போனேன்.

  33. கிரி,

    ரஜினி கமல் ரசிகர்கள் (உண்மையிலேயே கலையை ரசிப்பவர்களாக இருந்து இருந்தால்) நேர்மையாக விமர்சிக்க முடியும்..

    தமக்கு விருப்பமான முறையில் இருக்கும் நடிப்போ அல்லது கலை வெளிப்பாடோ மட்டுமே சிறந்தது மற்றவர்களின் ரசனை முட்டாள் தனமானது என்ற எண்ணம் மேலோங்கினால், அடுத்தவனின் ரசிப்புத் தன்மைக்குள் மூக்கை நுழைக்கும் எண்ணம் தலை தூக்கும்…

    இது சிலருக்கு சில சமயம் தோன்றும்.. சிலருக்கு எப்போதுமே தோன்றும்.. சின்ன வயதில் சிங்கமா – புலியா, புல்லட்டா – யமகாவா என்றெல்லாம் எங்கள் ஊரில் நாங்கள் மல்லுக்கட்டுவது உண்டு. அதுவே ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை விட்டா யாரு ஜெயிப்பா? என்ற லெவலிலும் சண்டை நடந்தது உண்டு.. அதே மன நிலை வளர்ந்த பிறகும் தொடர்ந்தால் தான் ஆபத்து.

    வால்பையரின்(??) கேள்விகளுக்கு பதில் தர முயல்கிறேன். உங்கள் அனுமதியுடன்..

    // தான் ஒருவருக்கு ரசிகர் என்று முத்திரை குத்தி கொள்வதில் உள்ள உளவியல் பிரச்சனைகளை அலசுவோமா!? //

    இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாக யாராவது ஒரு சிறந்த மனிதனுக்கோ அல்லது திறமைசாலிக்கோ ரசிகர் (அட்மிரர்களாக) களாக இருப்பது புதிதல்லவே… கலைகளும் பரிமாணங்களும் மாறியிருக்கலாம்.. தனி மனிதனுக்கு தன் குடும்பம்- நட்பு வட்டம் தாண்டிய ஏதோ சிலர் மீது ஈடுபாடு வருவது புரிந்து கொள்ள முடியாத உணர்வு என்றே நினைக்கிறேன்.. அந்த ஈடுபாட்டின் அளவு ஒவ்வொருவரின் ஜீனுக்கும் வேறுபடும் என்றும் நினைக்கிறேன்.

    (எனக்கு ரஜினி கமல் இருவரையும் பிடிக்கும். மற்றவர்களின் படங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் பிடிக்கும்..)

    ரஜினியை மட்டும் அதிகமாகவே பிடிக்கும் என்ற முறையில் பின்வரும் பதில்கள்…

    //
    1.ஏன் அவருக்கு ரசிகர்?

    என்னமோ தெரியல, பிடிச்சிருக்கு….

    2.என்ன செய்தாலுமா?

    அவர் நல்ல மனுஷன்.. அவர் செய்யிறது நல்லதாத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. எப்பவாச்சும் தெரியாம தப்பு நடந்தா – குடும்பத்துல ஒருத்தர் தெரியாத செஞ்சா எப்படி அணுகுவோமோ அப்படியே நினைக்க விரும்புகிறேன்..

    3.அவரது தொழிலுக்கு மட்டுமா?

    தொழிலோடு, அவர் வாழ்க்கைக்கும்…

    4.அவருக்காக எதையெல்லாம் இழக்க தயார்?

    என்னுடைய இழப்பால் அவருக்கு எதுவும் தேவைப்படாது….

    5.எதிரணி என்பது ஒருவர் மட்டுமா?
    அல்லது மற்ற அனைத்து தீவட்டிகளுமா?

    இது எனக்கு புரியல…

    6.உங்கள் ஆதர்ஷ்புருஷருக்கு வாரிசுகள் வந்தால் அவரும் உங்களுக்கு அப்படியே தானா!?

    கிரி சொன்னாற்போல, அவுங்க ஜெயிச்சா சந்தோசம்… மற்ற நல்ல கலைஞர்களை ரசிப்பதுபோல அவர்களையும் ரசிப்பேன்.

    7.அல்லது வேறு யாருக்கு கிளை புருஷர் பதவி குடுப்பீர்களா?

    கிளை புருஷர்களும் கிடையாது, கிழவி புருஷர்களும் கிடையாது..

    8.நீங்கள் கடவுளுக்கு சமமாக நினைக்கும் உங்கள் ஆதர்ஷபுருஷர் உங்களுக்கு சரியான மரியாதை தருகிறார் என்று நம்புகிறீர்களா?

    ரஜினி போன்ற ஒரு பெரிய மனிதன் எனக்கு சரியான மரியாதை தரும் அளவிற்கு என்னை உயர்த்திக் கொள்ள விரும்புகிறேன்.

    9.உங்களது தீவிர ரசிகன் என்ற ஸ்டேட்மெண்டை வாபஸ் வாங்குவீர்களா?

    ஆமாம்…. நான் அதி தீவிர ரசிகன். (முதல் நாளே படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ரஜினி என்ற எழுத்தைப் பார்த்தவுடன் அது சம்பத்தப் பட்ட செய்தியை குறுகுறுப்பாக படிப்பவர்கள் அனைவருமே அதி தீவிர ரசிகர்கள் தான்….இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை … ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்)

    உங்கள் விருப்பம் பத்தாவது பதிலாக!

    வால் சார், ரஜினி நல்லவரு….என்னிக்காவது புரிஞ்சுப்பீங்க….

    அன்புடன்

    ஈ ரா

  34. //வெ.இராதாகிருஷ்ணன் said…
    நீ ரஜினிக்குனு சண்டை போடமாட்ற, கமல் படத்தை மட்டமா பேசமாட்ற நீயெல்லாம் ரஜினி ரசிகனு சொல்லிக்காதே என்றார்//

    :-)))

    //ரஜினிக்கு ரசிகன் எனில் கமலை விமர்சிக்க வேண்டும் என யார் ராமச்சந்திரனுக்குச் சொல்லித் தந்தது? இப்போதும் யோசிக்கிறேன்//

    இதை யாரும் சொல்லி தர வேண்டியதில்லை..பொறாமையால் இயல்பாகவே வருகிறது என்று நினைக்கிறேன். நமக்கு பிடிக்காதவர்கள் (போட்டியாளர்) பாராட்டப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள நம் மனம் தயாராக இல்லை..எனவே தான் அப்படி!

    //மனிதம் பிறர் துன்பப்படுவதை ஒருபோதும் விரும்பாது.//

    சார் மனிதர்களில் பல விதம்..ஒரே மாதிரியே அனைவரும் இருப்பதில்லை..உங்களை போல உயர்ந்த சிந்தனையுடன் எல்லோரும் இருந்தால் பிரச்சனையே இல்லையே! ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லையே!

    // உதாரணத்துக்கு கமலின் 'மகாநதி'யில் நான் உறைந்து போனேன்.//

    உண்மை தான் சார்..என்னுடைய விருப்ப படமாக என்னுடைய ஃப்ரோபைலில் உள்ளது.

    ===========================================================

    // ஈ ரா said…
    கிரி,

    ரஜினி கமல் ரசிகர்கள் (உண்மையிலேயே கலையை ரசிப்பவர்களாக இருந்து இருந்தால்) நேர்மையாக விமர்சிக்க முடியும்.. //

    உண்மை தான் ஈ ரா ஆனால் அவர்கள் மிக மிக குறைவு

    /ரஜினி என்ற எழுத்தைப் பார்த்தவுடன் அது சம்பத்தப் பட்ட செய்தியை குறுகுறுப்பாக படிப்பவர்கள் அனைவருமே அதி தீவிர ரசிகர்கள் தான்.//

    ஈ ரா, ரஜினி ஒரு கவர்ச்சியான நபர் (உடனே நமீதா மாதிரியான்னு யாரும் கேட்காதீங்க :-D) அதனால் அவர் பேச்சை அவரை பிடிக்காதவர்கள் கூட ஆர்வமாக கேட்கிறார்கள் கேட்பார்கள் அதற்காக அவர்களை ரசிகர்கள் என்று கூற முடியாது. ரஜினியை ஏற்று கொள்ளாதவர்கள் தான் ரசிகர்களுக்கு போட்டியாக அவர் பற்றிய செய்திகளை படிப்பார்கள்.

    ரசிகன், தீவிர ரசிகன், அதி தீவிர ரசிகன் என்பது ஒவ்வொருவர் எண்ணத்தை பொறுத்தது. இதற்க்கு வரைமுறை வைக்க முடியாது என்பதே என் கருத்து.

    =============================================================

    சிங்கக்குட்டி அழைப்புக்கு நன்றி 🙂

  35. //வால் சார், ரஜினி நல்லவரு….என்னிக்காவது புரிஞ்சுப்பீங்க….//

    நான் ரசினி கெட்டவருன்னு எப்பங்க சொன்னேன்!
    நாட்டில் நிறைய நல்லவர்கள் இருக்காங்க, எல்லாருக்கும் நாம ரசிகர் ஆக முடியுமா?

    ரெண்டாவது நல்லவரா இருக்குறது மனிதனோடு அடிபடை குணம் தானே அதுக்காக ரசிகரா இருக்கலாமா?

    முதலில் நாம் ஏன் ஒருவருக்கு ரசிகரா இருக்கனும்னு யோசிங்க!
    உளவியல் ரீதிஒயா அதுக்கு காரணம் ஒரு குழு புத்தி! உங்களுக்கு தேவை ஜனரஞ்சகமான ஒரு சினிமா மட்டுமே!
    நான் இன்னாருக்கு ரசிகன் அதனால மத்த நடிகர்கள் சினிமா பார்க்க மாட்டேன்னு யாராவது சொல்லியிருக்காங்களா?

  36. கமல்ஹாசன் மட்ட்ரவர்கள் சொன்னது போல் சோகமான படங்களை கொடுத்தாலும் அவர் நடிக்கும் நாடக தன்மை நடிப்பு மற்றும் ரியலிசம் இல்லாத அவருடைய நடிப்பு எனக்கு மட்டும் அல்ல மட்டற்ற இயல்பான நடிப்பை விரும்பும் எந்த குடும்ப ரசிகர்களுக்கும் பிடிக்காது அதனால் தான் பெண்களும் அந்த கமல் மடையனை விரும்புவதில்லை

  37. கமலஹாசன் மட்டற்ற ரசிகர்கள் சொன்னது போல் மஹா நதியில் சோகமாக நடித்தாலும் கதா பாத்திரம் மனதில் பதிய வேண்டும் என்று அடி மனதில் வாங்காமல் தன்னுடைய technical திறமை வெளிப்பட நடிப்பதால் அவருடைய ரசிகர்கள் தவிர எந்த medayanum அவனை பார்க்க mattargal

  38. நீங்கள் சொன்னது போல் சோகமாக mgr கூட நடித்து இருக்கிறார். ஆனால் அவர் என்றுமே டைரக்டர் உடைய நடிகர் இல்லை. எதையுமே சினிமா தனம் கலந்து செய்வார். அனால் நடிகர் திலகம் டைரக்டர் மேல் மதிப்பு வைப்பவர். முடிந்த அளவு இயல்பாக செய்து மக்கள் மனதில் பதிவார். தலைவர் சூப்பர் ஸ்டார் அப்படியே, கமல் ரஜினியை ஹீரோ ஆக்கி அவருடைய குண சித்திர நடிப்பை சாகடித்து விட்டான். மஹா நதியில் எப்படி அவர் calcutta சென்று தன் பெண்ணை மீட்கும் காட்சி லாஜிக் இல்லாத கோமாளி தனம். 1975-1985 samayangali சூப்பர் ஸ்டார் எவ்வளவு கதா பாத்திரம் செய்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here