கமல்! உங்களைப் பற்றி மட்டும் பேசுங்க..

2
கமல் kamal-rajini

மல் அவர் கருத்தைத் தெரிவிக்கும் போது தேவையில்லாம ரஜினியை கூட இழுத்துட்டே இருக்காரு. ஒரு முறை என்றால் பரவாயில்லை ஒவ்வொருமுறையும் என்றால் எப்படி?! Image Credit

கருப்புக்குள் காவியும் அடங்கும்

ஏற்கனவே ஆங்கில ஊடகத்தில் ரஜினியையும் காவியையும் ஒப்பிட்டுப் பேசினார். அதன் பிறகு பல பேட்டிகளில் ரஜினி அரசியல் பற்றிப் பேசாமல் இருந்ததே இல்லை.

கேள்விகள் இது குறித்து இல்லையென்றாலும் இவராகவே பேசுகிறார்.

இவரே தான் “கருப்புக்குள் காவியும் அடங்கும்” என்றார், பின் “பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டிய தேவை வந்தால் தயங்க மாட்டேன்” என்றும் கூறினார்.

ஆனால், சம்பந்தமே இல்லாமல் ரஜினி கையையும் பிடித்து இழுத்து விட்டுட்டு இருக்காரு.

இதனாலோ என்னவோ நடிகர் திலகம் நிகழ்ச்சியில், ரஜினி மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.

ரஜினியுடன் இணைவீர்களா?

திரும்பக் கடந்த வாரம் விகடன் தொடரில் “ரஜினியுடன் இணைவீர்களா? என்று என்னைக் கேட்கிறார்கள்” என்று இவரே எழுதிக் கொள்கிறார்.

நிகழ்ச்சியில், பேட்டியில் யாராவது நிருபர் இணைப்பு பற்றிக் கேட்டு அதற்குப் பதில் கூறினால் ஒரு நியாயம் இருக்கிறது.

தொடரில் இவரே கூற வேண்டிய தேவையென்ன?

அது தான் ரஜினியே “காலம் பதில் கூறும்” என்று கூறியதை கமலும் ஏற்றுக்கொண்டாரே!

கமல் அடிக்கடி கூறுவதால், ஊடகங்களும் ரஜினியிடம் இக்கேள்வியை கேட்டு இம்சையை கூட்டுகிறார்கள்.  ரஜினி என்ன கூறினாலும் அதை வைத்து ஒரு வாரம் விவாதிக்கிறார்கள்.

ஹார்வார்ட் பல்கலை கழகத்தில் விவாதிக்கக்கூடிய பேச்சா?

ஹார்வார்ட் பல்கலை கழகத்தில் சென்று இதையே விவாதிக்க வேண்டிய தேவை என்ன?

காவி, கருப்பு, அரசு அதிகார எதிர்ப்பு என்று எதையோ பேசிட்டு போகட்டும். சம்பந்தமே இல்லாமல் திரும்ப எதற்கு ரஜினியை இழுக்க வேண்டும்?

ரஜினி ஏற்கனவே, தன்னுடையது “சாதி மதமற்ற ஆன்மீக அரசியல்” என்று தெளிவுபடுத்தி விட்டார். அதன் பிறகும் இவர் “நான் கருப்பு ஆனால், ரஜினி காவியாக இருக்கலாம்” ன்னு சொல்றாரு. ரஜினி பற்றிய ஊகங்களை இவர் என் கூறனும்?

இதை விடக் கடுப்பு நான் ரஜினியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறுகிறார்!

ரஜினி வந்து கமல் கிட்ட “கூட்டணி வைங்க கூட்டணி வைங்க” என்று கெஞ்சிட்டு இருக்கற மாதிரி “அதெல்லாம் வாய்ப்பில்லை” ன்னு சொல்லிட்டு இருக்காரு.

ரஜினி மீது விமர்சனம் இருந்தால், தாராளமாக விமர்சிக்கட்டும் அதை விட்டு எதற்கு இன்னொருவருடைய கொள்கைகள் பற்றி ஊகங்களைத் தெரிவிக்க வேண்டும்.

கமல் அவருடைய கட்சியை வளர்க்க மட்டும் பேசட்டும் அடுத்தவர் கட்சிக்கு “கொள்கை பரப்புச் செயலாளர், செய்தி தொடர்பாளர்” வேலை பார்க்க வேண்டாம்.

தொடர்புடைய கட்டுரை

ஆன்மீக அரசியல்

2 COMMENTS

  1. நீங்க சொல்வதில் உள்ள நியாயம் புரியுது. அதே சமயம் ரஜினி கண்டிப்பாக மக்களுக்கு ஆன்மீக அரசியல்னு அவர் சொல்ல வந்தது பிஜேபி சம்பந்தமானது இல்லை என்று கண்ண்டிப்பாக விளக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ சொல்ல வேண்டும்.
    இல்லை என்றால் இதன் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும்.

    ரஜினியை பிடிக்ககாதவர்கள் இதை பிடித்தே தொங்குவார்கள். மக்களிடம் இது போன்ற வதந்திகள் மிக விரைவில் பரவும்..

    ரஜினி விரைவில் மக்களிடம் பேச வேண்டும் – அவரின் திட்டங்களை மற்றும் கட்சியின் நோக்கம் குறித்து ..

  2. கிரி, நான் முன்பே குறிப்பிட்டது போல் ரஜினிசாரின் அரசியல் என்ட்ரி எவ்வாறு இருக்கும் என்று என்னால் யூகித்து குறிப்பிடமுடியவில்லை.. நல்லது நடக்கும் என நம்புவோம்.. சில சமீபத்திய நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது இருவரின் பாதைகள் வெவ்வேறாக தெரிந்தாலும், எதிர்காலத்தில் இருவரும் இணைத்து செயல்படுவார்கள் என எனக்கு தோன்றுகிறது..

    தனி பாதையில் பயணிப்பதை விட இணைத்து செயல்பட்டால் இன்னும் கூடுதல் பலமே!!! இணைந்து செயல்படுவதில் சில பிரச்சனைகளும் உண்டு…அவற்றை ஆராய்ந்து ஆரம்பத்திலே சரி செய்தால் எதிர்காலத்தில் பாதிப்புகள் வராது… (நீங்கள் கூட இணைந்த கைகள் என ஒரு பதிவிடவும் வாய்ப்புண்டு.. ) கமல் சாரின் இந்த கருத்துக்களுக்கு கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் பதில் தெரிவிக்க மாட்டார் என்பது உங்களை போன்ற ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் கண்டிப்பாக தெரியும்… பொறுத்திருந்து பார்ப்போம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here