மரக்கன்று நடுதல் என்ற வெட்டி வேலை!

41
Tree plant மரக்கன்று நடுதல்

ரக்கன்று நடுதல் மூலம் இயற்கையான சூழ்நிலையை வைத்து இருக்க வேண்டும் என்பதில் எனக்கு அதிக ஆர்வம். அதற்கான முயற்சிகளை எடுக்கிறேன்.

வீட்டைச் சுற்றி உள்ள இடங்களில் முடிந்த அளவு மரங்கள் வளர்த்து வருகிறேன், அதே போல மற்றவர்களையும் மரம் வளர்க்க கூறி வலியுறுத்தி வருவேன். Image Credit

தற்போது மரம் நடுவது என்பது அரசியல்வாதிகள் பொதுநலவாதிகள் ஆன்மீகவாதிகள் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செய்யும் காரியம் என்றாகி விட்டது.

மரக்கன்று நடுதல்

முதலில் மரம் நடுகிறார்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுகிறார்கள் என்ற செய்திகளைப் படிக்கும் போது மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.

பின்னர் தான் தெரிந்தது அவர்களது வேலை மரம் வைப்பதோடு முடிந்தது பராமரிப்பது கிடையாது என்று. இதில் தனியார், அரசு, ஆன்மிகம் என்று எவரும் பாகுபாடு இல்லை.

ஆயிரக்கணக்கில் செடிகளை வைத்து அவற்றைக் கருக செய்வதற்கு எதற்கு நடனும். சிறு ஆறுதல் அப்படியும் தப்பி தவறி ஒரு சில செடிகள் தப்பி பிழைத்து விடுகின்றன.

அரசாங்கம் செடிகளை நட்டாலும், சில இடங்களிலேயே சரியாகப் பராமரிக்கிறார்கள், எடுத்துக்காட்டாகச் சென்னை ECR சாலை மற்றும் சில நெடுஞ்சாலைகளைக் கூறலாம்.

பெரும்பான்மையான இடங்களில் அங்கே செடி வைத்ததற்கான அடையாளமே இருக்காது (கூண்டு மட்டும் காணலாம்).

நமது அரசாங்கங்கள் (அரசியல்வாதிகள்) அப்படி தான் செய்யும், பழகி விட்டது.

இதில் என்ன கவலை பட இருக்கிறது! என்று நம்மைச் சமாதான படுத்திக்கொண்டாலும், மற்றவர்களும் இதைப் போல நடந்து கொள்கிறார்கள் என்று அறியும் போது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

எங்கள் ஊரில் உள்ள பெண்கள் கல்லூரியில் இருந்து வந்து NSS போன்ற சேவைக்காக மரக்கன்று நட்டார்கள், அவர்கள் சென்று இரண்டு நாளில் அவர்கள் வைத்த ஒரு செடியையும் காணவில்லை வைத்ததற்கான அடையாளமே இல்லை.

ஈஷா யோகா

ஈஷா யோகா செய்தது கடுப்பாக இருந்தது. இவர்கள் வருடாவருடம் லட்சக்கணக்கில் மரக்கன்று நடுவதாக அறிவித்து, விளம்பரப்படுத்தி பெரிய அளவில் செய்வார்கள்.

அதே போல ஒரு சமயத்தில் எங்கள் ஊரிலும் ஆயிர கணக்கில் செடி நட்டார்கள் பாதுகாப்பிற்கு!! சுற்றியும் குச்சி நட்டு வைத்து இருந்தார்கள்.

கொஞ்ச நாட்கள் சென்ற பிறகு செடி பட்டுபோய் விட்டது அதற்குப் பாதுகாப்பாக வைத்த குச்சிகள் தளைத்து, தண்ணீர் விடாததால் பின் அதுவும் வறண்டு போனது.

வைத்ததில் 10 செடியாவது தற்போது வந்ததா என்று தெரியவில்லை.

ஈஷா யோகா என்பது பெரிய அமைப்பு அந்த அமைப்பு மூலம் பல நல்ல காரியங்களை, மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார்கள், இதனால் அந்த அமைப்பிற்கு எங்கள் ஊரில் நல்ல பெயர் உண்டு.

மரக்கன்று நடுவது மிகச்சிறந்த செயல், எந்தச் சந்தேகமுமில்லை, பூமியில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வரும் வேளையில் இயற்கையின் அருமையை இன்னும் உணராமல் இருப்பது தான் தவறு.

ஆனால், இதைப் போல விளம்பரத்திற்காக லட்சம் செடிகளை நடுகிறேன் என்று உருப்படியாக 100 செடி கூட நல்ல முறையில் வளர்க்காமல் இருப்பதற்கு எதற்கு அத்தனை செடிகள் நட வேண்டும்?

பராமரிப்பு

மரக்கன்றை நட்டால் போதுமா! அதைப் பராமரிக்க வேண்டாமா?!

எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல, எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி!

இவர்களைப் போன்ற அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதைச் சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.

லட்ச கணக்கில் நட்டதற்கு தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்குக் கூட முயற்சித்தார்கள்.

விளம்பரங்களே முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை.

இவர்கள் செய்யும் இந்தச் செயலில் ஒரு சில செடிகள் எப்படியாவது தம் கட்டி உயிர் பிழைத்து விடுவது மகிழ்ச்சி.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!!

தொடர்புடைய கட்டுரை

மியாவாக்கி காடு வளர்ப்பு முறை என்றால் என்ன?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

41 COMMENTS

  1. "இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!!"சபாஷ்!!!! சரியாக சொன்னீர்கள்.

  2. //அமைப்புகள் 100 செடிகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்தலே மிகப்பெரிய சமுதாய தொண்டு.//மிகச் சரியான கருத்துகள்..அருமையான பதிவு..

  3. திரு கிரி,

    நீங்கள் கூறியது போலவே பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள்.

    நான் இதில் குறிப்பிட்டவைகளை மாற்றுக்கருத்து இல்லாமல் வழிமொழிகிறேன்.

    ஒரு அமைப்பு எங்களை அனுகி சில லட்சம் மரங்களை நட்டு தர முடியுமா என கேட்டார்கள். சரி செய்கிறேன் என்றேன். மரத்துடன் அந்த அமைப்பின் பலகையும் கொடுத்து அதையும் அருகில் வைத்து நட சொன்னார்கள்.

    நாங்கள் செய்வதோ தர்மம். இதில் அவர்களின் செயல் எனக்கு மிகவும் அநாகரீகமாக பட்டது.

    அவர்களின் நோக்கம் மரம் நடுவதில்லை…! தாங்கள் மரம் நட்டதையும், சிலருடன் நெருக்கம் பாராட்டுவதையும் வெளியுலகில் காட்டவும், நாங்கள் மரம் நட்டோம் என கணக்கு காட்டி உலக வங்கியில் பணமும், நோபல் பரிசும் வாங்கத்தான்.

    பாண்டிச்சேரி அருகில் இருக்கும் ஆரோவில் எனும் பகுதி 1970ல் செம்மண் பூமியாக சில பனைமரங்களுடன் இருந்தது. அதை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மிருகங்கள் வாழும் வனமாக மாற்றி இருக்கிறார்கள். எத்தனை காலம்தான் நாம் அவர்களையே உதாரணம் கூறுவது?

    ————————
    உங்கள் பதிவுக்கு எனது பாராட்டுக்கள்.

    எல்லோரும் மரம் நடுவிழா என சொல்லி செடியையே நடுகிறார்கள். இதில் இருந்தே தெரியவில்லையா அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று :))

  4. \\\"இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!!"//:))அழகான படங்கள் … அப்படி அழகா இருக்கும் எல்லா மரமும் நல்லா வளர்ந்திருந்தா.. 100 செடி நட்டு காணாபோக்குறதுக்கு 10 செடிய மட்டும் நல்லா பராமரிச்சிருந்தாலே போதுமே..

  5. கிரி….உண்மைதான் மரம் நடுவதைக் காட்டிலும் அதனை பராமரிப்பதே சிரமமான வேலை. அதற்கு பொறுப்புணர்ச்சி வேணும், அது எம்மில் பலரிடம் இல்லை…

    :-(((

  6. அற்புதமான, பயனுள்ள இடுகை. நல்லதொரு கருத்துகளைத் தாங்கி வந்திருக்கிறது. சம்பந்தபட்ட அனைவரும், நாமும் கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.

    தானாக வளரும் மரங்களையே இவர்கள் வளர விடுவதில்லை. என்னவென சொல்வது?

  7. //செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா!//

    இதை படிக்கும்போது, கவுண்டமணி சொன்னதுதான் ஞாபகம் வருது…
    "எதுக்குடா.. இந்த வெட்டி விளம்பரம்? "

    அருமையான கருத்துதான்.. எவன் காதுல வாங்குவான்?

  8. //இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்//
    :)))

    எனக்கும் மரம் வளர்ப்பதில் நல்ல ஆர்வம்.
    ஆனால் நீங்கள் சொன்னது போல தான்,
    நிறைய மரம் வாங்கி வந்து வடிவாக நட்டு ஒரு கிழமைக்கு தண்ணீர் எல்லாம் ஊற்றுவேன்.
    அதுக்கு பிறகு மரம் நட்டதையே மறந்து போடுவன்.
    அம்மா தான் பேசிப்பேசி தண்ணீர் ஊற்றுவா.

  9. உங்களோட ஆதங்கம் எனக்கு புரியுது., தஞ்சாவூர்ல நான் பள்ளிக்கூடத்துல படிச்சுக்கிட்டு இருந்தப்ப அங்க கவித மன்றம் அப்டின்னு ஒரு கல்யாண மண்டபம் வைச்சுருக்கவரு ஊரு முழுக்க மரம் நட்டார். அதோட அதுக்கு கூண்டு அமைச்சு, ஒரு டேங்கர் வைச்சு தினம் தண்ணி ஊத்தி பராமரிச்சாங்க. அந்த மரங்களும் நல்லா வளர்ந்து நிக்குது இப்ப.

    அது போல செய்யிறவங்க மிகச் சிலரே.

    ஈஷா யோகா மையத்துக்கு எல்லா ஊர்லயும் கிளைகள் இருக்கு. அந்தந்த ஊர்ல இருக்கவங்க எல்லாரும் சேர்ந்து அதை பராமரிக்கலாம். அப்டி செஞ்சா உண்மையிலயே நல்லாருக்கும். ஆனா செய்யிறதில்ல. இப்ப சமீபத்திய சாலை விரிவாக்கப்பணிகளுக்காக பல ஆயிரக்கணக்கான மரங்கள வெட்டிட்டாங்க. சாலை வசதி முக்கியம். அதுக்காக மரங்கள வெட்டுறதையும் தடுக்க முடியாது. ஆனா இப்ப அமைக்கப்படும் சாலைகளுக்கு எல்லாம் சுங்க சாவடி அமைச்சு வரி வாங்குறாங்க. அதுல கொஞ்ச பணத்த ஒதுக்கி, மறுபடியும் சாலை ஓரங்கள்ல மரங்கள் வளர்த்து பராமரிக்கனும். செய்யிறாங்களான்னு தெரியல.

  10. கலையரசன், வின்சென்ட், தீப்பெட்டி, வாசுகி, ஜோசப் பால்ராஜ், ஸ்வாமி ஓம்கார், பாலா, முத்துலெட்சுமி, சிவா, அப்துல்லா, டொன் லீ, ராதாகிருஷ்ணன், மற்றும் அருண் வருகைக்கு நன்றி

    @ஜோசப் பால்ராஜ்

    "சாலை வசதி முக்கியம். அதுக்காக மரங்கள வெட்டுறதையும் தடுக்க முடியாது. ஆனா இப்ப அமைக்கப்படும் சாலைகளுக்கு எல்லாம் சுங்க சாவடி அமைச்சு வரி வாங்குறாங்க. அதுல கொஞ்ச பணத்த ஒதுக்கி, மறுபடியும் சாலை ஓரங்கள்ல மரங்கள் வளர்த்து பராமரிக்கனும். செய்யிறாங்களான்னு தெரியல"

    உண்மை தான் ஜோசப் பால்ராஜ், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரத்தை வெட்டாமல் இருக்க முடியாது, ஆனால் அதை ஈடு செய்யும் வகையில் மறுபடியும் மரம் வளர்க்க வேண்டும் என்பதே சரி. பொறுப்பில் உள்ளவர்கள் தான் இதை செய்ய வேண்டும் நம்மை போல உள்ளவர்கள் புலம்ப தான் முடியும்.

    @ஸ்வாமி ஓம்கார்

    "அவர்களின் நோக்கம் மரம் நடுவதில்லை…! தாங்கள் மரம் நட்டதையும், சிலருடன் நெருக்கம் பாராட்டுவதையும் வெளியுலகில் காட்டவும், நாங்கள் மரம் நட்டோம் என கணக்கு காட்டி உலக வங்கியில் பணமும், நோபல் பரிசும் வாங்கத்தான்."

    ஸ்வாமி உலகமே விளம்பர மயமாகி விட்டது, எதிலும் ஆதாயம் இல்லாமல் விளம்பரம் இல்லாமல் செய்வதில்லை. இவர்கள் அவ்வாறு செய்வது கூட நான் தவறாக நினைக்கவில்லை அப்படி விளம்பரத்திற்காக செய்தாலும் பரவாயில்லை மரத்தை வளர்த்தார்கள் என்றால் சந்தோசம்..ஆனால் அதையும் செய்யாமல் இருப்பது தான் கடுப்பாக உள்ளது.

    "எல்லோரும் மரம் நடுவிழா என சொல்லி செடியையே நடுகிறார்கள். இதில் இருந்தே தெரியவில்லையா அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று :)"

    :-))))

    @ வெ.இராதாகிருஷ்ணன்

    "தானாக வளரும் மரங்களையே இவர்கள் வளர விடுவதில்லை. என்னவென சொல்வது?"

    :-)))

    @அருண்

    அருண் தண்ணீர் பிரச்சனை ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான் ஆனால் அது ஓரளவு வளரும் வரையே அதன் பிறகு அது தானாகவே வளர்ந்து விடும். தொடக்க பருவம் மட்டுமே பிரச்சனை.

    எங்கள் ஊரில் ஒரு சிலர் தங்கள் வீடுகள் முன்பு நட்டிய செடியையே பிடுங்கி எறிந்து விடுகிறார்கள் .. என்ன செய்வது?

    பெங்களூரில் தற்போது அதிக அளவில் மரங்களை நற்று உள்ளார்கள், முன்பு வெட்டிய மரத்தை ஈடு செய்ய. ஒரு சில பக்கம் மக்கள் மரங்கள் மீது காதல் கொண்டு இருக்கிறார்கள், ஒரு சிலருக்கு ஏனோ அதில் சிறிதும் ஆர்வம் இல்லை அவர்களால் செய்ய முடியும் என்றாலும். மனிதர்கள் பல விதம் அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் 🙂

  11. வாடிய பயிர்களை காண்கையிலே
    என் உயிரும் வாடுதம்மா!

    உடலுக்கு உணவு மட்டுமில்லாமல், அதி முக்கியமான மரங்கள் மட்டும் இல்லைனா நாமெல்லாம் கோயிந்தா தான்!

  12. நான் அரசியல், ஆன்மீக விளம்பரங்களை,

    கண்டு கொள்வதில்லை!

    ரொம்ப லேட்டாக வருத்தப்படுகிறீர்கள்!

  13. /
    இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!! இதில் அதிக அளவில் மரம் நட்டு கின்னஸ் சாதனைக்கு கூட முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், இதை போல விளம்பரங்களே இவர்களுக்கு முக்கிய நோக்கமாக உள்ளது மரம் வளர்ப்பதில் இல்லை.
    /

    :((

    வருத்தம்தான்

  14. நல்ல பதிவு கிரி!

    செடிகளை 🙂 ஒரு வருடம் அவர்களே பராமரிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

    பார்ப்போம்!!!!

    திருப்பூர் வலைப்பதிவு நண்பர் ஒருவர் மரங்கள் நடுவதற்கு உதவி புரிந்திருக்கிறார்.

    இன்னொரு வலைப்பதிவர் ஜக்கி வாசுதேவ் மற்றும் பசுமை காவலர்களுக்கு உதவியாக இருந்தார்.

  15. // @ஸ்வாமி ஓம்கார்

    "அவர்களின் நோக்கம் மரம் நடுவதில்லை…! தாங்கள் மரம் நட்டதையும், சிலருடன் நெருக்கம் பாராட்டுவதையும் வெளியுலகில் காட்டவும், நாங்கள் மரம் நட்டோம் என கணக்கு காட்டி உலக வங்கியில் பணமும், நோபல் பரிசும் வாங்கத்தான்." //

    இது வேறயா?

    இப்பவே ஒரு செடிக்கு ரூ.100 வீதமும், நம் பெயர் பலகை வைத்தால் ரூ.650ம் வசூலித்து விட்டார்கள் 🙁

  16. //இது வரை இதை போல லட்ச கணக்கில் நட்டதற்கு இந்நேரம் தமிழகம் அமேசான் காடு மாதிரி ஆகி இருக்க வேண்டும்!

    //

    இஃகிஃகிஃகிஃகிஃகி

  17. Giri,

    You have made very valid points reg. tree planting. However, don't you think the local people also have to pitch in to grow the plants which have been planted in their area.

    I find the people in Bangalore more mentally attuned to growing plants & trees in their surroundings than the people in other places.

    May be it is to do with the availability of water too, what you say?

  18. maram entra solle ungal blog -i solai akkivittathu. Enakkum asaithan maram valarka?. sila neram atu maatu meipavarkal vendum enre aliththu vitukinranar.

  19. "மரம் நடுதல்" என்ற "வெட்டி" வேலை!/\*/\மரத்தை நட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுபவர்களும் மரம்வெட்டிகளும் ஒன்னு தான் என்று சொல்ல வருகிறீர்களா

  20. நண்பர் கிரி அவர்களுக்கு உங்களுடைய ஆதங்கம் புரிகிறது, இதே ஆதங்கம் எனக்கும் உண்டு என்னுடைய பதிவில் கிட்டத்தட்ட உங்களுடைய கருத்தையே நானும் என்னுடைய பிளாக்-ல் குளோபல் வாமிங்கும் அரசியல் வாதிகளும்- என்ற தலைப்பில் எழுதி என்னுடைய ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டேன்.கடமையைச் செய்வோம் நம்மால் இயன்ற மரக்கன்றுகளை நடுவோம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  21. தேவையான பதிவு.நம்ம ஊருக்காரங்களுக்கு மரத்தோட அருமை தெரிய மாட்டேங்குது. சில காலேஜ் (ஐஐடி, எம்.ஐ.டி, எம்.சி.சி) கேம்பஸ் போனாலே, சொர்கத்துக்குள்ள நொழஞ்ச மாதிரி இருக்கும். ஆனா, நம்ம தெருவாசிகள், மரம் நட்டா இலை கொட்டி குப்பையாகும், வேர் படர்ந்து, வீட்டை இடிச்சுடும் அது இதுன்னு சப்பை கட்டு கட்டியே காலம் கடத்தறானுவ.கெரகம் புடிச்சவனுவ.

  22. அருமையான பதிவு,கிரி.ஆனால் விளம்பரம் என்ற வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் முக்கியம்.ஆயிரக் கணக்கான மக்களின் பொறுப்பின்மையும்,இயலாமையும்,அறியாமையும் ஒவ்வொரு விளம்பரத்தின் பின்னும் தெரிகிறது.

    யோக்கியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரின் துணையில்லாமல் எந்த அயோக்கியத்தனமும் நடந்ததில்லை.

    ஒட்டுமொத்தத்தின் தனிமனித வடிவமே ஒரு அயோக்கியன்.

    நம் எல்லோருடைய செயலின்மை ஒருவனின் செயலாகிறது.

  23. கிரி எனக்கு சிறு வயது முதல் தொட்டா சினிங்கி செடி மீது ஒரு காதல் அதன் இலைகளை தொடும் போது கூச்சத்தால் ஒரு குழந்தை போல் உடலை சுருட்டிக் கொள்ளும் அழகே அழகு…
    இன்றும் வீட்டின் சில தொட்டா சினிங்கி செடிகளை வளர்த்து வருகிறேன்.

    நல்ல பதிவு கிரி நன்றி!

  24. //வால்பையன் said…
    வாடிய பயிர்களை காண்கையிலே
    என் உயிரும் வாடுதம்மா!//

    எனக்கும் ரொம்ப கஷ்டமாக தான் இருக்கும் 🙁

    //உடலுக்கு உணவு மட்டுமில்லாமல், அதி முக்கியமான மரங்கள் மட்டும் இல்லைனா நாமெல்லாம் கோயிந்தா தான்!//

    இதை பலர் உணர்ந்ததா தெரியவில்லை

    //ரொம்ப லேட்டாக வருத்தப்படுகிறீர்கள்!//

    நான் சிறு வயதில் இருந்தே இப்படி தான்.. இது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன்..தற்போது கொஞ்சம் விரிவா எழுதி இருக்கிறேன் அவ்வளவே

    =============================================

    //வெயிலான் said…
    செடிகளை 🙂 ஒரு வருடம் அவர்களே பராமரிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.//

    இவர்கள் பேச்சை தண்ணீரில் தான் எழுத வேண்டும்

    //இப்பவே ஒரு செடிக்கு ரூ.100 வீதமும், நம் பெயர் பலகை வைத்தால் ரூ.650ம் வசூலித்து விட்டார்கள் :(//

    கடமையை செவ்வனே செய்து விட்டார்கள் 😉

    =============================================

    //SUMAZLA/சுமஜ்லா said…
    சரியான நெத்தியடி! இது தான் நடக்கிறது!//

    என்ன பண்ணுறது..:-((

    ============================================

    //ஷண்முகப்ரியன் said…
    யோக்கியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரின் துணையில்லாமல் எந்த அயோக்கியத்தனமும் நடந்ததில்லை.//

    சார் நச்சுனு சொன்னீங்க….இந்த அயோக்கியர்களையாவது நமக்கு தெரியும் இப்படி தான் செய்வார்கள் என்று.. இந்த நல்லவன் வேஷம் போடுறாங்க பாருங்க..அவங்க தான் ரொம்ப பெரிய திருட்டு பசங்க

    =============================================

    //VJN said…
    maram entra solle ungal blog -i solai akkivittathu.//

    அருமை VJN. இதை தான் நானும் கூறுகிறேன்..படங்களை பார்க்கும் போதே நமக்கு ஒரு இதம் தெரிகிறது..நிஜத்தில்…

    //sila neram atu maatu meipavarkal vendum enre aliththu vitukinranar.//

    மனம் இருந்தால் மார்க்கமுண்டு ..முயற்சி செய்யுங்கள் ஆனால் நீங்கள் கூறும் நடைமுறை பிரச்சனை உண்மை தான்.

    ===========================================

    //♠புதுவை சிவா♠ said…
    கிரி எனக்கு சிறு வயது முதல் தொட்டா சினிங்கி செடி மீது ஒரு காதல் அதன் இலைகளை தொடும் போது கூச்சத்தால் ஒரு குழந்தை போல் உடலை சுருட்டிக் கொள்ளும் அழகே அழகு…
    இன்றும் வீட்டின் சில தொட்டா சினிங்கி செடிகளை வளர்த்து வருகிறேன்.//

    நல்லது சிவா..வளர்த்தலே முக்கியம்

    ===========================================

    // உடன்பிறப்பு said…
    "மரம் நடுதல்" என்ற "வெட்டி" வேலை!

    /*/

    மரத்தை நட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுபவர்களும் மரம்வெட்டிகளும் ஒன்னு தான் என்று சொல்ல வருகிறீர்களா//

    ஹா ஹா ஹா உடன்பிறப்பு உங்க உள்குத்தை ரசித்தேன்.. :-))

    "மரம்" தானே வளர முயற்சி செய்தது ஆனால் "பராமரிப்பு" இல்லை என்றால் காணாமல் போக வேண்டியது தான் என்பதை இப்போதாவது உணர்ந்து இருக்கும் 😉

    ==========================================

    //venkat said…
    கடமையைச் செய்வோம் நம்மால் இயன்ற மரக்கன்றுகளை நடுவோம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.//

    உண்மையான வார்த்தைகள் வெங்கட், மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்தி விட்டு நாம் செயலில் காட்டினாலே போதுமானது, நான் இதை நடைமுறை படுத்தி வருகிறேன்

    ==========================================

    //SurveySan said…
    நம்ம ஊருக்காரங்களுக்கு மரத்தோட அருமை தெரிய மாட்டேங்குது. //

    அது தான் ஏன் என்றே புரிய மாட்டேங்குது

    //சில காலேஜ் (ஐஐடி, எம்.ஐ.டி, எம்.சி.சி) கேம்பஸ் போனாலே, சொர்கத்துக்குள்ள நொழஞ்ச மாதிரி இருக்கும்.//

    உண்மையோ உண்மை.. சென்னை IIT வழியாக செல்லும் போதே இதன் வித்யாசத்தை உணரலாம்.

    //நம்ம தெருவாசிகள், மரம் நட்டா இலை கொட்டி குப்பையாகும், வேர் படர்ந்து, வீட்டை இடிச்சுடும் அது இதுன்னு சப்பை கட்டு கட்டியே காலம் கடத்தறானுவ.//

    என் மனதில் இருந்ததை அப்படியே கூறி உள்ளீர்கள்.

    வேர் படந்து வீட்டை பாதிக்கும் என்பது உண்மை தான்..ஆனால் வேர் அதிகம் படர்ந்து வராத செடிகள் தற்போது நர்சரியில் இதற்காகவே கிடைக்கின்றன.

    குப்பை ஆகும் என்பதெல்லாம் சப்பை கட்டு தான்.. அதற்கும் வழி உள்ளது. தழை அதிகம் விழாத மரங்கள் எத்தனையோ உள்ளது..

    செய்யணும் என்று நினைத்தால் எதையும் செய்ய எத்தனையோ வழிகள் உள்ளது.

    ஆர்வமும் விழிப்புணர்வும் இல்லாததே இதற்க்கு காரணம்.

  25. செடிகளுக்கு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம்."100 செடி நட்டு காணாபோக்குறதுக்கு 10 செடிய மட்டும் நல்லா பராமரிச்சிருந்தாலே போதுமே..

  26. நல்ல இடுக்கை

    —————–

    செடியை நட்டால் மட்டும் போதுமா! அதை பராமரிக்க வேண்டாமா! எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி!]]

    நல்ல கேள்வி

  27. //மாதேவி said…
    செடிகளுக்கு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம்.//

    வழிமொழிகிறேன்

    //100 செடி நட்டு காணாபோக்குறதுக்கு 10 செடிய மட்டும் நல்லா பராமரிச்சிருந்தாலே போதுமே.//

    இது தான் அனைவரின் ஆதங்கமும்

    =================================================

    //நட்புடன் ஜமால் said…
    நல்ல இடுக்கை//

    நன்றி ஜமால்

  28. வெட்டி(cut)வேலை இல்லேண்ணா நடும் வேலைக்கு அவசியம் இல்லேண்ணெ!!!

  29. //ஈ ரா said…
    nalla pathivu giri …//

    நன்றி ஈ ரா

    ====================================================

    // குறை ஒன்றும் இல்லை !!! said…
    வெட்டி(cut)வேலை இல்லேண்ணா நடும் வேலைக்கு அவசியம் இல்லேண்ணெ!!//

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல! எப்படி இப்படி எல்லாம்! 😉

  30. மரம் நடுதலின் மறுபக்கத்தை அழகாய் காட்டி விட்டீர்கள்.

    இப்பதிவு யூத்விகடன் குட்ப்ளாக்ஸில் இடம் பெற்றிருந்தது. அது குறித்தெல்லாம் நீங்கள் அதிகம் கண்டு கொள்வதில்லை என்றாலும், தமிழ்மணம் சொல்கிறது ஒருநாள் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் 261 என்று. அதில் 6 அல்லது 7-யை விகடன் தேர்ந்தெடுக்கிறது. உங்களின் பல பதிவுகள் அதில் இடம் பெற்ற விட்டதை, பலதுறை சார்ந்து, சமூக அக்கறையுடனான பல விஷயங்களை அலசும் உங்கள் எழுத்துக்களுக்கான ஒரு சிறந்த அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன்:)! வாழ்த்துக்கள் கிரி.

  31. இதை போல் தான் என் அறை நண்பர், எச்சில் கையில் காக்கா விரட்டமாட்டார். அவ்ரிடம் வாடகை பணம் வசூலிப்பதே மிக பெரிய காரியம். அடுத்தவனுக்கு ஒரு சின்ன உதவி கூட செய்ய மாட்டார். ஆனால் அவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது, அங்குள்ள மாணவ்ர்கள் சேர்ந்து சிறு தொண்டு செய்துள்ளனர். அதை தான் எப்போது பெருமையாக பேசிக்கொண்டே இருப்பார். அதை விட மற்றவர்கள் ஏதாவது நற்காரியங்கள் செய்வது பற்றி விவாதித்தால், ‘நான் இது போல பல நற்காரியம் செய்துள்ளேன். என்னிடமா பேசுகிறீர்கள்?’ என்ற ஆணவத்துடம் பேச்சுக்கள் தான் அவரிடம் வரும்.இவரை பார்த்த பின்னர்,ஏதாவ்து தொண்டு நிறுவனம் உதவி கேட்டு வந்தால் கூட உதவி செய்ய முடியவில்லை. எல்லாம் விளம்பரங்களுக்காக தான் என்று நினைப்பு தோன்றுகிறது.அறை நண்பர் எப்படியும் தொண்டுக்காக வசூலித்த பணத்தில் கொள்ளை அடித்திருப்பார் என்று தான் நாங்கள் எல்லாரும் நம்புகிறோம்.

  32. // அன்புடன் அருணா said…
    பூங்கொத்துப் பதிவு!//

    நன்றி அருணா

    =====================================================

    // ராமலக்ஷ்மி said…
    மரம் நடுதலின் மறுபக்கத்தை அழகாய் காட்டி விட்டீர்கள்.//

    நன்றி ராமலக்ஷ்மி

    //பலதுறை சார்ந்து, சமூக அக்கறையுடனான பல விஷயங்களை அலசும் உங்கள் எழுத்துக்களுக்கான ஒரு சிறந்த அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன்:)//

    உங்களின் உண்மையான மனம் திறந்த பாராட்டை அதை விட பெரிதாக கருதுகிறேன். அவர்களுக்கு நான் பத்தோடு பதினொன்று…

    ====================================================

    // थमिज़ ओजिका—वाज्का हिन्दी said.
    இவரை பார்த்த பின்னர்,ஏதாவ்து தொண்டு நிறுவனம் உதவி கேட்டு வந்தால் கூட உதவி செய்ய முடியவில்லை. எல்லாம் விளம்பரங்களுக்காக தான் என்று நினைப்பு தோன்றுகிறது.//

    உண்மையில் நானும் எந்த தொண்டு நிறுவனத்திற்கும் நானும் எதுவும் தருவதில்லை, அவர்கள் மேல் நம்பிக்கை இல்லை..எனவே என் உதவியை நான் தனியாகவே செய்கிறேன்..உதவி செய்வதே முக்கியம் அதை எப்படி செய்தால் என்ன?

    அப்புறம் எனக்கு ஹிந்தி நகி மாலும் ங்க ..அதுனால உங்க பேர் என்னன்ன தெரியல. எவ்வளோ நல்ல தமிழ் எழுதறீங்க அப்புறம் ஏங்க பேரை ஹிந்தி (ஹிந்தி தானே அது) ல எழுதி வைத்து இருக்கீங்க!

  33. கிரி, நல்ல பதிவு. நம்ம நாட்டில் நட்ட செடிகளை பராமரித்து இருந்தா, இன்று நம்ம நாடு சிங்கப்புரை மிஞ்சி இருக்கும் பசுமையில்….‍‍ _ ப‌யபுள்ள

  34. எத்தனை செடிகளை நடுகிறோம் என்பது முக்கியமல்ல அதில் எத்தனை செடியை நன்றாக வளர்த்தோம் என்பதே கேள்வி!

    நல்ல கேள்வி

    பதில் மரம் நடுபவர்கள் தான் சொல்ல வேண்டும்

    ஒரு பசுமையான பதிவு நன்றி கிரி

  35. // thayu said…
    கிரி, நல்ல பதிவு. நம்ம நாட்டில் நட்ட செடிகளை பராமரித்து இருந்தா, இன்று நம்ம நாடு சிங்கப்புரை மிஞ்சி இருக்கும் பசுமையில்.//

    என்னங்க பண்ணுறது! இது எல்லோருக்கும் தெரியும்..ஆனால் யாரும் எதுவும் செய்யமுடிவதில்லை.

    ======================================================================

    சரவணன் நன்றி 🙂

  36. இந்த மாதிரி குறை சொல்ற ஆட்கள் சொல்லிக்கிட்டு தன இருப்பாங்க ஒரு குடம் தண்ணி ஊத்த மாட்டங்க , இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டு , எல்லாரும் மரம் வளர்ப்போம் , வளர்போரை ஊக்குவிப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!