கோவை லக்ஷ்மி மில்ஸ்
கோவை லக்ஷ்மி மில்ஸ் பகுதியில் பயன்படுத்தாத பகுதியை இடித்து, அங்கே கடைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கே மூன்று கடைகள் இருந்தன என்று நினைக்கிறேன். இன்னும் வேலை நடைபெற்று வருகிறது. Image Credit
இவர்களின் திட்டங்களைப் பார்த்தால், பெரியளவில் எதோ செய்யப்போவது போல உள்ளது.
இங்கே உள்ள ஒரு கடையில் தள்ளுபடியில் மிகக்குறைவான விலையில் Tshirt (₹200), சட்டை (₹300) வாங்கினேன். அக்கா பசங்க தான் பரிந்துரைத்தார்கள்.
ரொம்ப நாட்களாகத் துணி எடுக்கவில்லை என்பதால் Tshirts எடுத்தேன். குழந்தைகள் Tshirt ₹150 க்கு இருந்தது, தரமாகவும் இருந்தது.
இன்னும் அதே விலையில் தருகிறார்களா என்று தெரியவில்லை, முயற்சித்துப்பாருங்கள். அனைத்துமே (Zudio) Branded துணிகள் தான்.
சென்னை ‘Brand factory’ யில் குறைவாக இருக்கும் என்று சென்றால், ஏகப்பட்ட விலை, நல்லவேளை நான் வாங்கவில்லை.
சட்டை நன்றாக இருந்தாலும் விலை கூடுதலாக இருந்தது. என் வரம்புக்குள் விலை அடங்கவில்லை.
செந்தில் ஃபார்மஸி
ஈரோட்டில் பிரபலமான மருந்து கடையான செந்தில் ஃபார்மஸி கோபியில் கிளை திறக்கப்போகிறது. 18% தள்ளுபடியுடன் மருந்துகளை விற்பனை செய்கிறது.
ஈரோடு பகுதியில் இது போன்ற தள்ளுபடி கடைகள் அதிகம் காணப்படுகின்றன ஆனால், சென்னையில் அவ்வாறு அதிகம் இல்லை. MedPlus கொடுக்கிறது.
கோபியில் ஏற்கனவே, ஏராளமான மருந்துக் கடைகள் உள்ளன.
சிங்கப்பூர்
எங்க பங்காளி வீட்டுக்குச் செல்லும் போது அருகிலேயே ENT மருத்துவர் ராமகிருஷ்னன் அவர்கள் மருத்துவமனைக்கும் மரியாதை நிமித்தம் சென்றேன்.
சிங்கப்பூரில் இருந்த போது மனைவி, மகள், பேத்தியுடன் சுற்றுலாக்கு வந்த போது (2014) என் வீட்டுக்கு வந்து இருந்தார்.
அப்போது நடந்த நிகழ்வுகளை மறக்காமல் இன்னும் கூறுகிறார்கள். சுற்றுலாவை மிக ரசித்து இருந்தாலே இது போலக் கூற முடியும்.
சிங்கப்பூரின் அமைப்பு, விதிமுறைகள், சுத்தம், கட்டமைப்பு, சீன உணவு உண்டது அனைத்தையும் என்னமோ போன வாரம் தான் போயிட்டு வந்த மாதிரி உற்சாகமாகக் கூறுகிறார்கள் 🙂 .
மறக்க முடியாத சுற்றுலா என்று ஒவ்வொரு முறையும் கூறுவார்கள்.
மருத்துவர் நூடுல்ஸ் சாப்பிட மாட்டேன் (பிடிக்கலை) என்று கூற, அவரது மனைவி மிக விருப்பமாக அதுவும் chopsticks ல் அட்டகாசமாகச் சாப்பிட்டார் 🙂 .
UPI
என்னமோ நானே UPI முறைக்கு முதலாளி மாதிரி எங்கெல்லாம் UPI பணவர்தனையைப் பார்க்கிறேனோ அங்கெல்லாம் எனக்கு மகிழ்ச்சி வரும் 🙂 அதையே எங்க ஊரில் பார்த்தால்…!
கோபியில் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு பழக்கடை மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள மருந்துக்கடை இரண்டிலும் UPI பரிவர்த்தனை இருந்தது.
மிக மகிழ்ச்சியாக இருந்தது. எதிர்காலம் இனி UPI பரிவர்த்தனை தான்.
டெல்லியில் 442% மடங்கு UPI பரிவர்த்தனை உயர்ந்துள்ளதாம். சென்னையிலும் தற்போது பெங்களூரு போலப் பல இடங்களில் UPI பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
டிவிஎஸ் ஜுபிடர்
கடந்த வருடம் வாங்கிய ஜுபிடர் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து இடங்களுக்கும் செல்ல வசதியாக இருந்தது.
கோவைக்கு இந்த வாகனத்தில் அதிகபட்சம் 60 கிமீ வேகத்தில் சென்றே 1 மணி 30 நிமிடங்களில் அடைந்தோம்.
இந்த வாகனத்தை வாங்கும் போது இவ்வளவு பயன்படுத்துவேன் என்று நினைக்கவில்லை.
ஏற்கனவே இருந்த டிவிஎஸ் XL ரொம்பப் பழையது மற்றும் தூரமாகச் செல்ல முடிவதில்லை என்பதால் ஜுபிடர் வாங்கினேன்.
ஆனால், நான் எதிர்பார்த்ததுக்கு மேலே பல மடங்கு பயனுள்ளதாக இருக்கிறது.
தொடர்புடைய கட்டுரை
பொங்கல் பயணக் குறிப்புகள் 1 (2020)
https://www.facebook.com/giriblog
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.