நீயா நானா – மருத்துவர்கள் Vs பொதுமக்கள்

10
நீயா நானா

ருத்துவர்கள் பற்றிய நீயா நானா விவாதம் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. Image Credit

நீயா நானா

மருத்துவர்களைப் பற்றிக் கூறியது சரி தான் அவர்களுக்கு பணம் தான் முக்கியம் என்று ஒரு தரப்பினரும், மருத்துவர்கள் அது போல அல்ல என்று ஒரு தரப்பினரும் சமூகத் தளங்களில் விவாதித்து வருகிறார்கள்.

எந்த ஒரு துறையிலும் 100% நேர்மையானவர்கள் இருக்க மாட்டார்கள், இருக்கவும் முடியாது.

எந்த ஒரு விசயத்தில் பணம் அதிகம் சம்பந்தப்பட்டு இருக்கிறதோ அங்கே நிச்சயம் பிரச்சனை / சர்ச்சை இருக்கும். இது எந்தத்துறைக்கும் பொருந்தும்.

மருத்துவத் துறையை விமர்சிக்கும் முன் மற்றத் துறைகளைப் பார்ப்போம்.

காவல் துறை

காவல் துறை ஏன் பலராலும் விமர்சிக்கப்படுகிறது? ஏன் கிண்டலடிக்கப்படுகிறது? ஏன் காவல் துறையில் நல்லவர்கள் இல்லையா! அனைவருமே மோசமானவர்களா? கிடையாது.

எந்தத் துறையாக இருந்தாலும் அனைவரும் மோசமில்லை ஆனால், பெரும்பான்மையானவர்கள் தவறாக நடந்து கொள்வது தான் நடைமுறையில் இருக்கிறது.

இன்னும் லஞ்சம் வாங்காதவர்கள், தங்கள் பலத்தை தவறான வழியில் பயன்படுத்தாதவர்கள், மக்களுக்கு உண்மையில் ஆதரவாக இருப்பவர்கள், சிரமப்படும் போது நல்ல அறிவுரையை வழங்குபவர்கள் என்று ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

ஆனால், இருந்தும் மக்களின் பொதுவான மன நிலை என்னவோ அது தான் இவர்களையும் பாதிக்கிறது.

நேர்மையாக உள்ளவர்களைக் குறை கூறினால் தாங்க முடியாது.

நான் என் பணியில் நேர்மையாக இருப்பேன். எனவே, என்னை யாராவது குறை கூறினால் என்னால் ஜீரணிக்க முடியாது.

பொதுவாகக் கூறினால் இந்த விமர்சனம் என்னைப் பாதிக்காது. காரணம், நான் மட்டும் குறிப்பிட்டு விமர்சிக்கப்படவில்லை.

லஞ்சம்

காவல் அதிகாரி / காவல் துறையினர் என்றாலே லஞ்சம் வாங்குபவர்கள் அப்பாவிகளை மிரட்டுபவர்கள் என்பது தான் பெரும்பான்மை எண்ணம், அதை நடைமுறை வாழ்க்கையில் அனைவரும் சந்திக்கிறார்கள்.

எனவே தவறான எண்ணம் தான் வருகிறது. ஒருவர் சிறப்பாக செயல்படுகிறார் என்றால் அவருக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கு அபரிமிதமானது.

எங்கள் ஊரில் இருந்த உதவி கலெக்டர் சந்திரசேகர சகாமுரி அவ்வளவு நேர்மையானவர்.

அவரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்த போது வருத்தப்படாதவர்களே கிடையாது.

எனவே நேர்மையானவர்களை திறமையானவர்களை எவரும் குறை கூற மாட்டார்கள். குறை கூற வேண்டிய அவசியமும் இல்லை.

சகாயம் அவர்களை ஏன் அனைவரும் பாராட்டுகிறார்கள்?

தவறான காவல் அதிகாரியை கலெக்டரை மக்கள் விமர்சித்தால் அதற்காக நேர்மையாக இருப்பவர்கள் நம்மைத் தான் மக்கள் கூறுகிறார்கள் என்று கோபப்படத் தேவையில்லை.

IT துறை

IT துறை என்றாலே பணம் கொழிக்கும் இடம் என்று பொதுவான கருத்துள்ளது ஆனால், கடந்த ஐந்து வருடங்களாக IT துறையில் சம்பள உயர்வு என்பது ரொம்பக் குறைவு அல்லது இல்லை.

இன்னும் 15,000 மற்றும் 20,000 க்கு வேலை பார்ப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

இவர்களிடம் “உனக்கென்னப்பா IT ல வேலை பார்க்குறே.. பெரிய சம்பளம்!” என்று கூறினால் அவருக்கு கோபம் தான் வரும். இதில் கேட்டவர் மீது தவறு இல்லை.

ஏனென்றால் பொதுமக்கள் பொதுவான மனநிலை IT துறை என்றால் அதிகப் பணம் என்பது தான். இது உண்மையும் கூட.

மற்ற துறையிலும் அதிக சம்பளம் பெறுபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் இது போல பெரும்பான்மை இல்லை.

IT துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிக வேலை செய்வதில்லை சொகுசாக இருக்கிறார்கள் என்ற பரவலான கருத்து இருக்கிறது.

ஆனால், மருத்துவர்களைப் போலக் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கக் கூட முடியாத நபர்களும் இருக்கிறார்கள்.

வேலை செய்யாமல் வெட்டியாகப் பொழுதைப் போக்குகிறவர்களும் இருக்கிறார்கள்.

IT Support

எடுத்துக்காட்டுக்கு கடந்த வாரம் மூன்று நாட்கள் (சுதந்திர தின விடுமுறை) தொடர் விடுமுறை. ரயில், பேருந்து, விமானம் என்று அனைத்துமே கூட்டம்.

எல்லோரும் ஊருக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்து இருப்பார்கள். இதே நிலை அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை.

இது போல நீண்ட விடுமுறை என்றால் IT Support பிரிவில் இருப்பவர்களுக்கு அன்று தான் வேலை இருக்கும், Maintenance என்ற பெயரில்.

எங்கள் சென்னை அலுவலகக் கிளையில் Network Migration நடந்தது இதனால், மூன்று நாட்களும் இரவு பகலாக தூங்காமல் வேலை செய்தார்கள்.

என்ன பிரச்சனை வந்தாலும் மூன்று நாட்களில் முடித்தே ஆக வேண்டும்.

வேலையை முடித்து விட்டார்கள் இருப்பினும் திங்கள் காலை சில பிரச்சனைகள் வந்தது. இதை எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள்?

சில பிரச்சனைகள் அனைத்து ஊழியர்களும் வந்து பயன்படுத்த ஆரம்பித்த பிறகு தான் தெரிய வரும். சிலர் புரிந்து கொள்வார்கள் சிலர் சத்தம் போடுவார்கள்.

இதே போல மற்ற பிரிவுகளிலும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வேலை செய்பவர்களும் வீட்டிற்கே போகாதவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், பொதுமக்களால் அதிகம் சம்பளமும் சொகுசும் தான் முன்னிறுத்தப்படுகிறது.

இதை இல்லை என்று மறுக்க முடியாது.

கற்றது தமிழ்

ராம் எடுத்த “கற்றது தமிழ்” படம் வெளியான போது IT துறையில் இருந்தவர்கள் பலர் பொங்கி விட்டார்கள்.

தற்போது எப்படி இந்த நீயா நானா விவாதிக்கப்படுகிறதோ இதை விட அதிகமாக அனைவரும் ராமை காய்ச்சி எடுத்தார்கள்.

என்ன தான் பலரும் குதித்தாலும் அவர் எடுத்ததில் உண்மை இல்லை என்றாகி விடுமா?

சிலது மிகைப்படுத்தப்பட்டு இருக்கலாம் ஆனால், அதில் கூறப்பட்டவை அனைத்தும் இல்லை என்று எவராலும் முழு மனதோடு மறுக்க முடியுமா?!

அனைத்துத் துறைகளிலும் ஏன் சாதாரண ஒரு கிராமத்திலேயே சமூக சீர்கேடுகள் நடக்கின்றன ஆனால், IT துறை தான் அதிகமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

IT துறை மட்டுமே இதை செய்வதில்லை என்று கூற முடியும் ஆனால், IT துறை இப்படி நடந்து கொள்வதே இல்லை என்று மறுக்க முடியுமா?

மறுத்தாலும் அதை எவரும் ஏற்றுக்கொள்வார்களா?! 

இதே போல ஒரு விவாதம் IT துறையை வைத்து வந்தால், இன்று மருத்துவர்களை விமர்சிப்பவர்கள் “அந்நியன்” ஆகி “தங்களை” விமர்சிப்பவர்களை வறுத்தெடுத்து விடுவார்கள்.

இது தான் எதார்த்தம். அவரவர்க்கு அவரவர் நியாயம்.

அரசு அதிகாரிகள்

அரசு அதிகாரிகளை எடுத்துக்கொள்ளுங்கள். நம்மிடையே என்ன எண்ணம் இருக்கிறது? மருத்துவர்களையும் சேர்த்தே கேட்கிறேன்.

அரசு அதிகாரிகள் என்றாலே லஞ்சம் அலட்சியம் என்று தானே பொதுவான எண்ணம் இருக்கிறது. இதில் என்ன தவறு?

இது உண்மை தானே! ஏன் அரசுத் துறையில் நல்லவர்கள் இல்லையா? நிச்சயம் இருக்கிறார்கள்.

லஞ்சமே வாங்காதவர்கள், தாங்கள் செய்யும் வேலைக்கு மனசாட்சி படி வேலை செய்பவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களை திரைப்படங்களில் விமர்சிக்காதையையா மருத்துவர்களை விமர்சித்து விட்டார்கள்.

ஒரு “ரமணா” படம் வந்ததுக்கே பலர் கொந்தளித்து விட்டார்கள். இதில் கூறப்பட்டது எதுவும் நடக்கவில்லை / நடப்பதில்லை என்று யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

அனைத்துத் துறையுமே விமர்சிக்கப்படுகிறது. இதில் எந்தத் துறையும் 100% உண்மை நேர்மை என்று கிடையாது.

எடுத்துக்காட்டாக பலர்

அனைத்து துறையிலும் சிரமப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் ஆனால், தன் துறை தான் அதிகம் சிரமத்தை எதிர்கொள்கிறது என்று மனம் நினைக்கிறது.

குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் கடுமையாக வேலை செய்பவர்கள் மற்ற துறைகளிலும் இருக்கிறார்கள்.

கடுமையாக வேலை செய்தும் எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் பணி புரிபவர்களும் ஏராளம் இருக்கிறார்கள்.

இதே போல ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் என்று பலரை உதாரணமாகக் கூற முடியும்.

ஊடகத்துறை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது ஏன் அதில் நேர்மையான பத்திரிக்கையாளர்கள் கிடையாதா?!

தமிழ் மருத்துவர்

மனைவி கருவுற்று இருந்த போது இங்கே (சிங்கப்பூரில்) இருந்த ஒரு தமிழ் மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்றோம்.

மருத்துவர் வயது முதிர்ந்தவர் அனுபவம் பெற்றவர் ஆனால், அதை இதைக் கூறி மனைவியைப் பயப்படுத்தி விட்டார்.

ரத்தம் கொடுக்கணும், க்ளுக்கோஸ் கொடுக்கணும் கருவே கலைந்து விடும் என்று பீதியாக்கி விட்டார். இதை என்னிடம் தனியாகக் கூறி இருக்க வேண்டும் ஆனால், நோயாளி முன்பு கூறினார்.

அவர் பேசியதில் பணம் வாங்க என்ன வழியோ அதை மட்டுமே அவர் பின்பற்றியது போலவே அவரது நடவடிக்கை இருந்தது.

என் அக்காவும் மருத்துவத் துறையில் இருப்பதால், ஆலோசனை கேட்ட போது அதெல்லாம் செய்ய வேண்டாம் என்று உறுதியாகக் கூறி விட்டார்கள்.

இதை இவரிடம் கூறியபோது எதிர்பார்த்தது போல கொந்தளித்து விட்டார். நான் மருத்துவரா? உங்கள் அக்கா மருத்துவரா? என்று சண்டைக்கு வந்து விட்டார்.

இவர் கேட்டதில் தவறு இல்லையென்றாலும் நான் கேட்டதும் ஒரு மருத்துவரிடம் தான். சாதாரண நபரிடம் கேட்டு இதைக் கூறி இருந்தால் கூடச் சொல்லலாம்.

இவருக்கு என்னால் விளக்கவும் முடியவில்லை, கண்டபடி திட்டி விட்டார்.

இவரின் வயதிற்கும் அனுபவத்திற்கும் மரியாதை கொடுத்து நான் எதுவும் பேசவில்லை.

இதைப் படிக்கும் மருத்துவத் துறையை சார்ந்தவர்களுக்கு என் மீது தவறு இருப்பது போல தெரியும். உண்மையில் இதை நான் எழுத்தில் நீங்கள் முழுவதும் உணரும் படி கூற முடியாது.

இவர் செய்த களேபரத்தில், நான் ஊருக்கு அழைத்தாலே வீட்டில் உள்ளவர்கள் பயப்படும்படி ஆனது. மனைவியும் ஊருக்கு செல்ல வேண்டி வந்ததால் நானும் நிம்மதியானேன்.

எங்கள் ஊர் மருத்துவர் மனைவியைச் சோதனை செய்து எதுவுமே தேவையில்லை நார்மலாக இருக்கிறார் என்று கூறி விட்டார்!

அம்மா

பின் என் அம்மா இங்கே வந்தார்கள். இவருக்கு ரத்த அழுத்தம் உண்டு. தமிழ் மருத்துவர் என்பதால் திரும்ப இவரிடமே அழைத்துச் சென்றேன்.

அம்மாவிடமும் அதை இதைக் கூறி உயிருக்கே ஆபத்து என்று பயமுறுத்தி விட்டார், எக்கச்சக்கமாக பயந்துட்டேன்.

அம்மா தான் “இதெல்லாம் ஒண்ணுமில்ல வழக்கமான ஒன்று தான் நீ ஒன்றும் பயப்படாதே” என்று சமாதானப் படுத்தினார்கள்.

எனக்கு இங்குள்ள மருத்துவமனை பற்றி அதிகம் தெரியாது. ஏனோ நண்பர்களிடமும் கேட்கவில்லை.

நானும் சிங்கப்பூர் வந்து 8 வருடம் ஆகி விட்டது இன்னும் எனக்காக உடல் நிலை சரியில்லை என்று நான் மருத்துவமனை சென்றதே இல்லை.

சீன மருத்துவர்

பின் இவர் சவகாசமே வேண்டாம் என்று வெறுத்து அருகில் இன்னொரு சீன மருத்துவர் இருந்தார், சரி இவரிடம் சென்று பார்ப்போம் என்று அழைத்துச் சென்றேன்.

எனக்கு குடும்ப மருத்துவர் இருந்து இருந்தால் கூட இப்படி கவனித்து இருக்க மாட்டார்.

அந்த அளவிற்கு பொறுமையாக பிரச்சனைகளைக் கேட்டு என் அம்மாவிற்கு (நியாயமாக எனக்கு) தைரியம் கூறி சரியான மருந்துகளை இந்த சீன மருத்துவர் கொடுத்தார்.

அவர் பேசியதிலேயே அம்மா பாதி சரியாகி விட்டார்கள். இதன் பிறகு என் அம்மா மனைவி குழந்தைகள் அனைவருக்கும் இங்கே தான் வருவேன்.

அவ்வளவு அருமையாக நடந்து கொள்வார்.

அவரிடம் என் அக்காவும் ஒரு மருத்துவர் தான் அவர் இந்த ஆலோசனைகளைக் கூறினார் என்று பயந்து கொண்டே கூறினேன், ஏற்கனவே “பலத்த” அனுபவம் இருந்ததால்.

Second Opinion கேட்பது தவறில்லை அதே போல உங்கள் (இந்திய) சிகிச்சையிலும் எங்கள் சிகிச்சையிலும் சில வேறுபாடுகள் இருக்கிறது.

எனவே நீங்கள் கேட்டுக் கூறுங்கள் அதன் படி செய்து கொள்ளலாம் ஒன்றும் பிரச்சனையில்லை என்று கூறினார்.

அம்மா ஊருக்குக் கிளம்பும் போது இந்த மருத்துவரிடம் என்னை அழைத்துச் செல்லக் கூறி தன்னை இவ்வளவு நாட்களாக சரியாக கவனித்து கொண்டதற்கு நன்றி தெரிவித்துச் சென்றார்.

இந்த மருத்துவர் ஒருமுறை என் அம்மாவிடம் உங்களை என் அம்மாவாக நினைத்துத் தான் சிகிச்சை அளிக்கிறேன் எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறி இருந்தார்.

இது போன்ற வார்த்தைகள் தான் ஒரு நோயாளிக்கு மருந்தை விட பலம் அதிகம். இவரைப் போல நல்லவர்களும், அன்பாக நடந்து கொள்பவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

என்னால் இவரை தவறாகக் கூற முடியுமா? கூறினால் அது நியாயம் தான் ஆகுமா!

சோதனை

நம் ஊரில் ஒரு சிலர் பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருப்பார்கள். ஒன்றுமில்லாத பிரச்னைக்கு இருக்கிற அனைத்து சோதனைகளையும் செய்யக் கூறுவார்கள்.

இது தேவையற்றது என்று இன்னொரு மருத்துவர் கூறி ஒரே நாளில் பிரச்னையை முடிக்கும் போது வருகிற ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல.

இதெல்லாம் நடக்கவில்லை என்று யாரும் கூற முடியுமா? நடுத்தர மக்கள் அதிக கட்டணங்களால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதை எவரிடம் பேசினாலும் தெரிந்து கொள்ள முடியும். இதை எவருமே மறுக்க முடியாது.

இதில் பொதுமக்களிடம் உள்ள பிரச்சனை, சின்ன தலைவலி என்றாலும் மருத்துவமனைக்கு செல்வது, அப்புறம் இதுக்குக் கூட இவ்வளோ பணம் வாங்குறாங்க என்று புலம்புவது.

நேர்மையான மருத்துவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, மக்களின் பணத்தை பல்வேறு மோசமான வழிகளில் பிடுங்குபவர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

மக்களும் உயிர் / உடல் சம்பந்தப்பட்டு இருப்பதால், பயந்து கொண்டே, தெரிந்தும் அவர்களின் ஊழலுக்கு துணை போக வேண்டியதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு ஒரு சிகிச்சைக்குக் குறிப்பிட்ட பரிசோதனைகள் தேவையே இருக்காது அது மருத்துவருக்கும் தெரியும் ஆனால், இதெல்லாம் செய்தால் தான் கண்டுபிடிக்க முடியும் என்று பயமுறுத்துவார்கள்.

உடல்நிலை சம்பந்தப்பட்டது என்பதால் வேறு வழியில்லாமல் அனைத்துச் சோதனைகளையும் செய்ய வேண்டி வரும்.

இதெல்லாம் தினம் தினம் நடந்து கொண்டு இருக்கும் பிரச்சனை.

அக்கா

அக்காவும் மருத்துவத் துறை தான். தன் பணியில் மிக நேர்மையாக இருப்பார், இது குறித்துப் பேசினேன்.

சண்டைக்கு வருவார் என்று தான் நினைத்தேன் மாறாக இரண்டு பக்கத்தையுமே கூறினார்.

நல்லது கூறினாலும் புரிந்து கொள்ளாமல் சண்டைக்கு வரும் பொது மக்களையும், கமிசன் வாங்கும் மருத்துவர்களையும் குறிப்பிட்டார்.

“கார்பரேட் மருத்துவமனைகள் அதிகரித்த பிறகு இலக்கு வைத்து செய்வதே பல பிரச்சனைகளுக்கு காரணம். குடும்ப மருத்துவர் என்ற நிலை என்று மாறியதோ அன்றே மருத்துவம் செலவு பிடிக்கும் ஒரு துறையாக மாறி விட்டது” என்றார்.

சிசேரியன் செய்வது குறித்துக் கேட்டேன்.

“இது போல நடப்பது உண்மை தான் அதே சமயம் தற்போது அனைத்திற்கும் வழக்கு தொடுத்து விடுவதால், சுகப் பிரசவம் முயற்சித்து எதுவும் பிரச்சனையானால் என்ன செய்வது என்ற பயத்திலும் சிலர் சிசேரியன் செய்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட பரிசோதனைக் கூடத்தில் செய்ய வைப்பது பற்றிக் கேட்ட போது “பலர் கமிசனுக்காக செய்கிறார்கள் சிலர் அவர்கள் செய்தால் சோதனை சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில், சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்று செய்யக் கூறுகிறார்கள்” என்றார்.

மருத்துவத்துறை படிப்பில் பணம் கொடுத்து தகுதி இல்லாதவர்களும் நுழைவது பெயர் கெட ஒரு காரணம் என்பதையும் குறிப்பிட்டார்.

மருத்துவர்கள் நன்றாக சிகிச்சை அளிக்கிறீர்கள் பொது மக்களிடம் நியாயமாக நடந்து கொள்கிறீர்கள், பணத்தை ஏமாற்றிப் பிடுங்குவதில்லை என்றால், மக்கள் உங்களை கொண்டாடத் தான் செய்வார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

விமர்சனம் அனைவருக்கும் பொது

மக்கள் விமர்சிப்பது, தவறு செய்பவர்களையும் ஏமாற்றுபவர்களையும், ஏமாற்றி கட்டணம் வாங்குபவர்களையும் தானே தவிர நேர்மையாக இருப்பவர்களை அல்ல.

எனவே, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக எடுத்துக்கொண்டு கோபப்படவேண்டிய அவசியமில்லை.

என்ன திட்டினாலும் நாளை பிரச்சனை என்றால் உங்களைத் தான் தேடி வந்தாக வேண்டும்.

ஒரு உயிரை காப்பாற்றும் போது மற்றவர்களுக்கு மருத்துவர் கடவுளாகத் தெரிகிறார் என்பதெல்லாம் எதோ சும்மா போகிற போக்கில் கூறியதில்லை, நேரடியாகப் பார்த்த உண்மை.

அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள் மற்ற துறைகளில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்!

எவ்வளவு தான் திறமையாக இருந்தாலும் சிறப்பாக பணியை செய்தாலும் மருத்துவர்களுக்கு கிடைக்கும் உள்ளார்ந்த பாராட்டு எங்களுக்கு என்றுமே கிடைக்காது.

காரணம், மருத்துவர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது உயிருடன் / ஒருவரின் உடல் நலத்துடன், நாங்கள் இயந்திரத்துடன்.

அது தான் மருத்துவத்துறைக்கும் மற்ற துறைக்கும் உள்ள வித்யாசம். எனவே தான் பாராட்டோடு ஒருவர் நேரடியாக பாதிக்கப்படும் போது விமர்சனங்களும் கடுமையாக இருக்கிறது.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட துறை என்று எதுவுமே கிடையாது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. கிரி, நான் நீயா? நானா? பார்பதில்லை, ஆனால் தனிப்பட்ட முறையில் கோபிநாத்தை பிடிக்கும்… லஞ்சம், ஊழல், இதையெல்லாம் பற்றி பேசலாம், விவாதிக்கலாம் ஆனால் என்ன மாற்றம் நம்மால் கொண்டு வர முடியும் என்று தெரியவில்லை..லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும் / கொடுக்கும் பொது மக்களுக்கும் தவறு என்று தெரிந்தும் அது நடைமுறையில் இருப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று..

    நான் படித்த அரசு பள்ளியில் ஒரு attestation காக ஒரு பேனாவும் / 10 ருபாய் பணமும் கொடுத்துவிட்டு வெட்கி தலைகுனிந்த வெளியே வந்த எனக்கு அதுவரை, (என் அடையாளமாக தெரிந்த என் அரசு பள்ளி, எனக்கு அன்று அவமானமாக தோன்றியது..) OBC சான்றிதழ் வாங்க சென்ற என்னை நீ இந்த ஊரே இல்லை என்று விரட்பட்ட அனுபவமும்,

    கல்லூரியில் உதவி தொகை வாங்க வருமான சான்றிதழ்க்கு விண்ணப்பித்த போது, உதவி தொகையை விட அதிக அளவில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்ததால் உதவி தொகையே பெறாமல் போன அனுபவமும், என்னை போல் பல நண்பர்களுக்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் நிச்சயம் ஏற்பட்டு இருக்கும்… நான் இந்நாள் வரை நேர்மையான அதிகாரியை சந்திக்கவில்லை என்பது என் சொந்த அனுபவம்.. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி…

  2. //மருத்துவர்கள் நன்றாக சிகிச்சை அளிக்கிறீர்கள் பொது மக்களிடம் நியாயமாக நடந்து கொள்கிறீர்கள், பணத்தை ஏமாற்றிப் பிடுங்குவதில்லை என்றால், மக்கள் உங்களை கொண்டாடத் தான் செய்வார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் விமர்சிப்பது, தவறு செய்பவர்களையும் ஏமாற்றுபவர்களையும், ஏமாற்றி கட்டணம் வாங்குபவர்களையும் தானே தவிர நேர்மையாக இருப்பவர்களை அல்ல எனவே, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக எடுத்துக்கொண்டு நீங்கள் கோபப்படவேண்டிய அவசியமில்லை என்பதே என்னுடைய கருத்து. //

    இதுவே என் கருத்தும். இது உடல் நலம் பற்றிய துறை, ஏனையது போன்றதல்ல நீங்கள் கூறுவது போல் “உடல், உயிர்” பற்றியது. அதைக் காக்க வைத்தியர்களின் பேராசையற்ற சேவை- அரசனுக்கும் ஆண்டிக்கும் தேவை! எத்துறையையும் வாழ்வில் தவிர்த்து வாழலாம். ஆனால் வைத்தியத்துறை அப்படியல்ல!!

    அதனால் கோபப்படாமல் கருணை காட்டுங்கள். தவறிழைப்போர்.
    இன்னும் பலர் நன்கு செயற்படுகிறார்கள். அவர்களுக்குத் தலைவணங்குகிறோம்.

    மிக அனுபவபூர்வமான ஆய்வு!

    இந் நிகழ்ச்சியைப் பார்த்த போது, இணையத்தில் இப்படிப்பட்ட ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்தை எதிர்பார்த்தேன். நீங்களும், வா.மணிகண்டனும் அதைத் தொடங்கியுள்ளீர்கள்.

    அங்கும் கருத்துப் பரிமாற்றம் நடக்கிறது. வைத்தியர்களும் கருத்திடுகிறார்கள்.
    ஆனால் என்ன ? புரையோடி விட்ட சமுதாயத்தில் மாற்றம் வருமோ! தெரியவில்லை.

  3. Giri,

    I have never watched Neeya Naana… after that commenting on something we do not know is not nice.. esp Gopinath what is his qualification there may be somebody here and there and we have seen some movies which exposed medical profession (Ramana for that matter) but that does not vouch for all the professionals. As Mohammad yasin said by discussing this in a open forum what is that he is trying to establish.. to say that All Doctors are corrupt.. then its absolute rubbish I know doctors who are caring and are not money minded … Let me bring one more issue on this there is a wide speculation that the channel in which Gopi is working is running on a christian fund and they went to the extent of saying that Mahabarata is a fiction my blood boils when you see all this nonsense can they take a film about christianity and say the above sentence again or can they do against Islam.. ivanga ellam iyer na.. thayir satham saptu sandaikku varamattannu nenaikkaranga… Iyer thayir sadam saptaalum … savadikka thayangamattannu oru incidence aanaa appa thaan adanguvaanunga…

    Kamesh

  4. Giri

    Sorry for jumping out of the context… I was also of the opinion that Doc’s take advantage and all those things until when it happened to me as an experience a doc who attended my father did not want to charge his bill his fees per visit goes in ‘000’s not only this in my early days when we ran around for help at mid night at a crisis time a doc who was asked for help came out and helped us … and in another instance a doc when knowing that we cannot stand in que used to come to our house and help us out I can quote upteen instances there are people who use this profession and there are gems who takes this profession as a service also I have seen both sides of the coin only that I have seen people who are more friendly which does not make me to go against doc’s

  5. கிரி.. இன்னும் சீனாவில்தான் இருக்கிறேன்.. (கூகிள் தடை… கமென்ட் வெளிவருவது சந்தேகம்)

    சரிதான் விமர்சனத்துக்கு உட்படாத துறைகளே இல்லை… இந்தக்கால நிலைமை அப்படி.
    மருத்துவர்கள் உருவாகும் மருத்துவக்கல்லூரி எப்படி இருக்குமென்பது எனக்கு நன்றாகவே தெரியும் – நதி மூலம் ரிஷி மூலத்தை ஆராய்ந்தால் யாரும் இவ்வகை மருத்துவர்களிடம் சிகிச்சை பெறவே அஞ்சுவர். எத்தனை அரியர் வச்சி பேப்பர் சேஸ் பண்ணி பாஸ் பண்ணீங்க என்று எந்த மருத்துவரையும் நாம் கேள்வி கேட்பது கிடையாது (அஞ்சாம் வருஷம் தான் ஒருத்தர் முதல் வருட BioChemistry பேப்பரையே கிளியர் பண்ணின்னார் என்றால் பார்த்துகொள்ளுங்கள்) அவர்களும் சாதாரனமானவர்கள்தான் நாம் தான் கடவுள் ரேஞ்சுக்கு சமுதாயத்தில் உயர்த்தி வைத்திருக்கிறோம்.
    பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத என் குழந்தையை ப்ளைட்டில் கொண்டு செல்லலாமா என்னென்ன மருந்து எடுத்து செல்லவேண்டும் என்று ஆலோசனை கேட்க ஒரு டாக்டரிடம் சென்று மெதுவாக ஆரம்பித்தேன்…
    டாக்டர் நான் சவுதியில் வேலை செய்கிறேன்…. அதற்கு பதில் — நீ எங்க வேனுமினா வேலை செஞ்சுட்டு போய்யா.. அப்படியே எழுந்து ஒரு அறை விடலாம் போல இருந்தது — முடியவில்லை… ஏனெனில் நான் குழந்தையாய் இருந்தபோதும் அதே மருத்துவரிடம் தான் என் தாய் என்னை காண்பித்தார்.

  6. பல மருத்துவர்கள் தன் கிளினிக்கை (வட இந்தியர்கள் தம் மருத்துவமனைகளை)கட்டி காப்பாத்த டொனேஷன் சீட்டில் தன் மகன் மகள்களை வலுகட்டாயமாக சேர்க்கின்றனர்.. நண்பன் படத்தில் வருவது போல் ஒரு சர்டிபிகேட் மட்டும்தான் தேவை – ஆபரேஷன் பண்ண தேவை இல்லை.. ஹாச்பிடலை கவனித்துகொண்டால் மட்டும் போதும் என்ற எண்ணம்.

    கேதன் தேசாய் வீட்டில் மூட்டை மூட்டையாய் தங்கம் பிடிபட்டதை சமூகம் மறந்து விட்டது. திமுக மந்திரி ஒருவர் நீதிபதியை ஜாமீன் வழங்க மிரட்டியது
    ஏனைய கல்லூரிகள் போல் அடிதடி – சண்டை – காதல் – கல்யாணம் – சீர்கேடு – சீரழிவு – தில்லுமுல்லு – போலி செட்டப் செய்து கல்லூரி அனுமதி வாங்குவது – விருப்பமில்லா வலுக்கட்டாய ஆறுமாத கிராம சேவை (எதிர்ப்பு கிளம்பியது நியாபகம் இருக்கா ?).. எல்லாம் கடந்து தான் (இந்தக்கால) ஒரு மருத்துவரே வெளிவருகிறார். இப்படியெல்லாம் பேஸ்மென்ட் அமையும்போது.. நியாயமான சமூக சேவையை எப்படி எதிர்பார்ப்பீர்கள்.. இன்னும் எழுதலாம்.. சிலருக்கு வலிக்கும், மருந்து கிடையாது.

  7. படிக்கும்போது ஒரு குழு விவாதம் பார்த்தது போன்றே இருந்தது.

  8. சீன மருத்துவர் – kan kalanga vechutar avaar nadantha murai romba Pudichu iruku

    Medical field Mattum illai yella thurayum vimarsanathuku ullathu thaan

    Yennoda Aasai ooruku advice panura gopi, Antony, media – ivanga Loda Ottaya yarru sutti kata poranga nu therila

    Porumaya Intha visayatha Anugi emotional la bathil sollama nermaya bathil sonna unga akkavuku special thanks thala

    Arun

  9. சீன மருத்துவர் – kan kalanga vechutar avaar nadantha murai romba Pudichu iruku

    Medical field Mattum illai yella thurayum vimarsanathuku ullathu thaan

    Yennoda Aasai ooruku advice panura gopi, Antony, media – ivanga Loda Ottaya yarru sutti kata poranga nu therila

    Porumaya Intha visayatha Anugi emotional la bathil sollama nermaya bathil sonna unga akkavuku special thanks thala

    Arun

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here