எவனோ சூனியம் வச்சுட்டான்

3
எவனோ சூனியம் வச்சுட்டான்

 

னக்கும் ஏற்காடு விரைவு வண்டிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. எவனோ சூனியம் வச்சுட்டான் என்றே நினைக்கிறேன் 🙂 . Image Credit

சென்னையில் இருந்து ஊருக்குச் செல்ல வர எப்போதும் தனியார் பேருந்து தான் பயன்படுத்தி வந்தேன்.

பின்னர் “கோயம்பேடு பேருந்து நிலையம்” திறந்த பிறகு பேருந்துகள் அண்ணாசாலை வராமல் கிண்டியில் திரும்பியதால், நான் இருக்கும் மைலாப்பூர் வரத் தாமதமானது.

சில நேரங்களில் பேருந்து வரத் தாமதமானால் சென்னை கூட்டத்தில் காலையில் பைகளைத் தூக்கிக்கொண்டு மாநகரப் பேருந்தில் வருவது கடுப்பானது.

இரயில் பயணம்

எனவே, அதன் பிறகு இன்று வரை இரயில் பயணம் தான் (RAC & முன்பதிவு கிடைத்தால் மட்டுமே!).

இரயில் பயணம் பாதுகாப்பானது, கட்டணம் குறைவானது, சரியான நேரத்துக்குச் சென்று விடலாம். எனவே, அதன் பிறகு இரயில் பயணம் மட்டுமே செய்கிறேன்.

இரயிலில் பயணசீட்டு கிடைக்கவில்லை என்றால் ஊருக்கே செல்ல மாட்டேன்!

இரயில் பயணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனால், இந்த ஏற்காடு விரைவு வண்டி கழிவறை நாற்றம் குடலை புரட்டும்.

இடையில் கொஞ்ச நாள் பிரச்சனை இல்லாமல் இருந்தது, தற்போது சமீப வருடங்களாகத் திரும்ப அதிகமாகி விட்டது.

எப்போது முன்பதிவு செய்தாலும் 1 -8 அல்லது 65 – 72 படுக்கை வசதி தான் கிடைக்கும் (அதிகபட்சம் 52 – 57). Coach ம் S12 & S13 தான் கிடைக்கும்.

இரண்டு பக்கமும் செம்ம கப்பாக இருக்கும், அதோடு கதவுப் பக்கம் என்பதால், விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். S12 S13 என்றால் ரொம்பத் தூரம் நடக்கணும்.

1 – 8 அல்லது 65 – 72 படுக்கை வசதி, S12, S13 Coach வந்தாலே கடுப்பாக இருக்கும்.

பல்வேறு காரணங்களுக்காக வாராவாரம் ஊருக்குச் செல்கிறேன் ஆனால், முன்பதிவு செய்த அனைத்து நாட்களிலும் இதே படுக்கை எண் தான் வந்துள்ளது.

எவன் சூனியம் வைத்தானோ தெரியல இன்று வரை இதே போலச் சொல்லிவைத்த மாதிரி வருது. கடந்த வாரம் என் விதியை நினைத்து நானே நொந்து கொண்டேன்.

முன்பதிவு செய்தது RAC 47 ல் இருந்தது.

சேலம் தாண்டியதும் பயணச்சீட்டு பரிசோதகர் என் அருகே இருந்தவருக்கு வேறு ஒரு இடத்தில் படுக்கையைக் கொடுத்து விட்டு என்னை Side Lower Berth ல் படுத்துக்கொள்ளக் கூறி விட்டார்.

என்ன படுக்கை எண் 47 (கிட்டத்தட்ட Coach நடுவில்). “அப்பாடா! இன்னைக்காவது இங்க இடம் கிடைத்ததே!” என்று தூங்கி விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் பரிசோதகர் என்னை எழுப்பினார். “என்னடா இது! நம்மைத் தூங்க விடமாட்டாங்க போல” என்று அரைத்தூக்கத்தில் விழிக்க..

சார்! ஒரு ஹார்ட் பேஷண்ட் இருக்கார் அவர் Middle Berth ல் இருக்கார் நீங்க அங்கே படுத்துட்டு இந்த Lower Berth கொடுங்க ப்ளீஸ்!” என்றார்.

இக்கட்டுரை எழுதக் காரணமே அவர் கூறிய பதில் தான்.

என்ன நம்பர் சார்..!

2 சார்

அடப்பாவிகளா! யாரு சூனியம் வைத்தீங்களோ.. தயவு செய்து எடுத்துடுங்கய்யா! முடியல்ல. ஏதா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.

கொசுறு

மேலே உள்ள சென்னை சென்ட்ரல் படம் தான் இதுவரை நான் பார்த்த படங்களிலேயே முழுமையான படம்.

சென்ட்ரல் முன்பக்கம் நெருக்கடியாக இருப்பதால், மறைப்பதால் பலரும் படம் எடுக்கத் திணறுவார்கள் அல்லது முழுமையாகப் படத்தில் வராது.

நிழற்படம் எடுத்த சரவணனுக்கு வாழ்த்துகள், செம! 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி,

    பேசாம ரெண்டாவதா 1 டிக்கெட் பதிவு செய்யவும். அப்ப எப்படியும் வேற வரிசைலதா டிக்கெட் வரும். அப்புறம் முதல் பதிவ ரத்து செய்யவும். அப்படியும் அதே வரிசைனா ஒன்னும் பண்றதுக்கில்ல.

  2. கில்லாடி,
    யாரோ உங்களுக்கு சாபம் குடுத்துருக்காங்க போல 🙂 🙂 🙂

  3. @iKway 🙂 🙂 ரத்து கட்டணம் வேற வீணாகுமே! இந்த வாரம் போறேன்.. அதுல கோச் முன்னாடி கிடைத்தது படுக்கை வழக்கம் போல 62 🙂

    @விஜய் ஆமாங்க கேப்டன் எவன்னு தெரியல 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here