குழந்தைகள் ஸ்பெஷல்

17
Kids குழந்தைகள் ஸ்பெஷல்

லகிலேயே கவலை இல்லாமல் சந்தோசமாக இருப்பவர்கள் இருவர். ஒருவர் ஞானி இன்னொருவர் குழந்தைகள். குழந்தைகள் ஸ்பெஷல் என்னவென்று பார்ப்போம்.

குழந்தைகள் ஸ்பெஷல்

எப்போதுமே பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும் போது நமது கவலைகளும் கூடுகிறது ஆனால், இவர்கள் இருவருக்கும் இவை போன்ற எந்தச் சுமையும் இல்லை என்பதால் கள்ளம் கபடமின்றி மகிழ்சியாக இருக்க முடிகிறது.

குழந்தைகளை அதிகம் ரசிக்கும் காலம் எது என்றால், நாமும் ஒரு குழந்தையின் பெற்றோர் ஆகும் போது என்று தான். Image Credit

Read: குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்!

குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண காரியமில்லை தினம் தினம் நமக்குப் புதிய விசயங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

முன்பு இருந்தே நான் பொறுமையை கடைபிடித்தே வந்து இருக்கிறேன். தற்போது இன்னும் அதிகம் ஆகி இருக்கிறது.

பிடிவாதம்

நீங்கள் அடிக்கடி இதைக் கேள்விப்பட்டு இருக்கலாம் “என் மகன், மகள் சொன்னபடியே கேட்பதில்லை.  அனைத்தும் உடனே வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்(ள்)” என்று.

பெற்றோர்கள் கூறும் வழக்கமான குற்றச் சாட்டுகள்.

குழந்தைகள் அதிகம் பிடிவாதம் பிடிப்பதற்கு முக்கியக் காரணம் பெற்றோர்கள் தான்.

காரணம் குழந்தைகள் வேண்டும் என்று அடம் பிடிப்பதை உடனே கொடுத்துப் பழக்கப்படுத்துவதும் இல்லை என்றால் கொடுக்க மாட்டேன் என்று அவர்களுடன் மல்லுக்கட்டுவதுமே பிரச்னைக்கு முக்கியக் காரணம் ஆகும்.

குழந்தைகள் சைக்காலஜி என்னவென்றால் எது கேட்டவுடன் உடனே கிடைக்கவில்லையோ அதை வேண்டும் என்று நினைப்பது .

பெற்றோர்கள் புரிந்து கொள்ளாமல் அவர்களை மேலும் சீண்டி குழந்தைகளை பிடிவாதம் பிடிக்கச் செய்பவர்களாக மாற்றி விடுகிறார்கள்.

பின் “குழந்தைகள் நான் சொல்வதையே கேட்க மாட்டேன் என்கிறார்கள்” என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறார்கள்.

இதற்கு முழுக்காரணம் தான் தான் என்பதை உணராமலேயே.

இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது?

குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கும் போது, எடுத்துக்காட்டாக ஒரு பொருள் (பொம்மை சாக்லேட் ஐஸ்கிரீம்) கண்டிப்பாக வேண்டும் என்று அடம் பிடிக்கும் போது உடனே கொடுக்கவும் கூடாது, கொடுக்க மாட்டேன் என்று கூறவும் கூடாது.

எதைச் செய்தாலும் குழந்தைகளுக்கு மேலும் கோபமாகி வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள் அல்லது இதைப் பழக்கமாக்கி விடுவார்கள் அதாவது அழுதால் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வார்கள்.

குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பப் பழகிக்கொள்ள வேண்டும்.

அடம் பிடிக்கும் சமயங்களில் வேறு எதையாவது கூறி (பெற்றோர்களுக்கு அதிக பொறுமை தேவை) அவர்கள் கவனத்தை இதில் இருந்து மாற்றி, மறக்க வைத்து அமைதிப்படுத்தி வேறு விசயங்களில் கவனம் செலுத்த வைக்க வேண்டும்.

குழந்தைகள் மற்ற விசயத்துக்கு மாறி விட்டால் முந்தைய பிரச்னையை உடனே மறந்து விடுவார்கள். தற்போது உள்ள காரியத்தில் அவர்கள் முழுக் கவனமும் சென்று விடும்.

நான் மேற்கூறியது எல்லாம் உடனே நடக்கக்கூடிய விசமில்லை அதாவது நான் கூறியதைப் படித்து உடனே செயல்படுத்த நினைக்கிறவங்களுக்கு இல்லை.

குழந்தைகளைப் பிடிவாதம் பிடிக்கப் பழக்கி, உடனே அவர்கள் இதைப்போலக் கூறினால் கேட்க வேண்டும் என்று நினைப்பதைப்போல முட்டாள்த்தனம் எதுவுமில்லை.

இதெல்லாம் ஒரு நாளில் நடக்கக்கூடிய விசயமில்லை.

நீங்கள் பழக்கப்படுத்த தான் இதெல்லாம் மாறும்.

கண்டிப்பு தேவை

குழந்தைகளை மின்சாரம், அடுப்பு கிட்டே செல்லும்  போது அதட்டலாகக் கூற வேண்டும் இல்லை என்றால், அவர்களுக்குத் தான் செய்வது தவறு என்று தெரியாது.

மின்சாரம் மற்றும் அடுப்பைத் தொட்டால் என்ன ஆகும் என்று விளக்கி அவர்களை அமைதிப்படுத்த வேண்டும் இதன் பிறகு அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஒரு சிலர் நினைப்பது என்னவென்றால் குழந்தைகள் குறும்பே செய்யக் கூடாது நாம் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்பதாகும்.

இதெல்லாம் நியாயமே இல்லாத செயல். குறும்பு செய்தால் தான் குழந்தைகள்.

மேற்கூறியது அனைத்தும் குழந்தைகளிடம் அன்போடு கட்டுப்பாட்டையும் சேர்த்து வளர்க்கும் பெற்றோர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

குழந்தைகளுக்குச் செல்லம் கொடுத்து அவர்களைக் கெடுப்பவர்களுக்குப் பொருந்தாது.

பெற்றோர் எப்படியோ பிள்ளைகளும் அப்படியே!

குழந்தைகளை அடித்து மிரட்டித் துன்புறுத்திப் பணிய வைக்க நினைக்காதீர்கள், எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

17 COMMENTS

 1. //குறும்பு செய்தால் தான் அவர்கள் குழந்தைகள் //

  மிகச் சரி. நல்ல பதிவு.

  விளையாடிக் கொண்டிருந்தால் கூட பெரியவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் இக்காலக் குழந்தைகள்:)! தம்பி மனைவியுடன் தொலைபேசியில் உரையாடுகையில் தன்னைப் பற்றிய பேச்சு வந்ததுமே எங்கிருந்தாலும் ஓடிவந்து பிடுங்கி சிலநிமிடம் பேசிவிட்டு அம்மா கையில் கொடுத்துவிட்டு ஓடிவிடுவான் தம்பி மகன்:)!

  யுட்யூப் பாடல் பகிர்வு சுட்டிகள் உள்ளவர்களுக்கு நல்ல பயனாகும்.

  சமச்சீர். குழந்தைகள் படிப்பிலும் அரசியல்:((!

 2. தெய்வத்திருமகள் படம் பார்த்ததின் பாதிப்பா சார் இந்த பதிவு… ?
  சமச்சீர்-As a matriculation teacher, I should tell something about symmetric education of Tamilnadu … I have five years experience handling matriculation Mathematics… In my point of view, Matriculation is Compared with symmetric syllabus many of the lessons are having good skills , needful exercises … And also, matriculation students are writing two papers for each and everysubject ..In symmetric education still only one paper for all..Paper cannot be evaluated the students…But that also one important thing….. And also matriculation are having practicals for science subjects from sixth standard .. But matriculation syllabus is not much as better than CBSE syllabus .. Many Of the students who are won in the IIM , IIT And etc are studied CBSE syllabus only ..in Tamilnadu we are having less count even though we have Matriculation schools And some kind Of other schools … I cant do some sums in CBSE Mathematics Because They are complicated And reasoning mind teasers .. IAS, Banking And other some competitive exams are mostly based this type Of questions only ..So what is The solution for this …? We have to improve our syllabus and methods extra ordinary than CBSE.. Then We have to competitive with all.. Now We have equating education for all.. That is good..! Everyone has to be accepted….But what they have done? Many of the lessons are decreased from matriculation and some exercises are added in state board..Its not complicated one… Only one thing, book is very attractive..But that only not enough..How we can be accepted this as a Teacher…? Many of them are talking 200 crores are lost.. But The students will be studied that books students life will be lost.. Who can explain this to everyone…?!!! நான் அ.தி.மு.க.. லாம் இல்லீங்க..(ஒரு பாதுகாப்புக்குத்தான் )

 3. கலக்கல்ஸ். ரொம்ப சரிங்க கிரி. நானும் பல சமயம் என் மகனுக்கு செல்லம் குடுக்குறேன் 🙁 மாத்திக்கணும். அடிக்கிறத ஏறக்குறைய நிறுத்திட்டேன்… 🙂

  நாங்க கடந்த 6 மாசமா யுடியுப்-ல பாட்டு போட்டுதான் சாப்பாடு குடுக்குறோம், அப்பத்தான் அவனும் சாப்பிடுறான். அப்பறம், வெறும் ரைம்ஸ் மட்டுமில்லாம கார்/பைக் ரேஸ், நல்ல பழக்கங்கள், விலங்குகள் படங்களையும் அவங்க விரும்பி பாப்பாங்க, கத்துக்குவாங்க.

  நம்ம கொழந்தைங்களுக்காக இத்தனைய பண்றோம்… இந்த டி.விய பாக்குறத கொஞ்சம் கொறைச்சுப்போமே… நம்மளால அவங்களும் இந்த டிவியில வர்றதை எல்லாம் பாத்து பல வேண்டாத விஷயங்கள கத்துக்கறாங்க (நாந்தான டிவி பாக்குறேன், அவங்க பாக்கலையேன்னு நெனைக்க வேண்டாம், சுத்தி நடக்குறதை எல்லாம் அவங்க நல்லா கவனிச்சுட்டுதான் இருக்காங்க).

  சமச்சீர் கல்வி – ஜே ஜே மேல கொலை வெறியில இருக்கேன்.

 4. //உலகிலேயே கவலையில்லாமல் சந்தோசமாக இருப்பவர்கள் இருவர் தான் ஒருவர் ஞானி இன்னொருவர் குழந்தைகள் //

  இன்னுமொருசாராரும் கவலை இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களைத்தான் பைத்தியக்காரன் என்கின்றார்கள் [எழுத்தாளர் ஞானி இதில் வேண்டுமானால் உள்ளடங்கலாம் 🙂 ]

  குழந்தைகள் பிடிக்காமல் ஒருவன் இருப்பான் என்றால் அவனுக்கு பெயர் மரம்.

 5. எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு பாடல் (இசை மற்றும் காட்சியில் எதோ ஒரு ஈர்ப்பு)

  இன்றையா தேதியில் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரிட் நிச்சயம் பேபி சாராவகத்தான் இருக்கும் 🙂

 6. பெரிய பதிவாக இருந்தாலும், மிக பயனுள்ள தகவல்கள். என்ன தெய்வதிருமகள் ஹேங்க் ஓவரா?

 7. கிரி,
  பதிவு சூப்பர்…
  “எழுத்தாளர் ஞானி இல்லை ” – இது கலக்கல்

  – அருண்

 8. கிரி இந்த வீடியோ பாருங்க
  ரஜினி சாங்க எப்படி படுறாங்க நு
  உங்களுக்கு பிடிக்கும் நு நினைக்கிறன்

 9. அறிவு ஜீவிகள் என்று சொல்லி கொள்ளும் மெட்ரிக் பள்ளிகூடங்கள் எல்லாம் உண்மையில் ஒரு மனபாட கூடங்கள் . பாடங்களை அதிகமாக கொடுத்து விட்டால் அது சரியான கல்வி முறையா ? , எதையும் புரிந்து படிக்கவேண்டும் யோசிக்கும் திறன் வேண்டும் அப்பா எப்படா இந்த வேலைய முடிப்போம் அப்படின்னு நினச்சி செய்யும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கு . இன்றைய மெட்ரிக் பள்ளி கல்வி முறை இப்படி தான் இருக்கு . அதற்காக கல்வின் தரத்தை குறைக்க சொல்லவில்லை . தரத்தை உயர்த்தி எளிமையாக புரிந்து படிக்கு சூழலை உருவாக்க வேண்டும் . ஜெயா செய்யும் கல்வி அட்டூழியம் தாங்களா சத்தியமா அவங்களுக்கு குழந்தைகள் கல்வியில் அக்கறை இல்லை மாறாக தான் என்ற அகங்காரம் மட்டுமே தெரிகின்றது . அதான் கல்வி தரத்தை உயர்த்தி சமமாக சமசீர் கல்வி அமல் படுத்துங்கள் என்று சொன்ன பிறகும் . வீண் பிடிவாதம் பிடித்துகொண்டு குழந்தைகளின் கல்வியோடு விளையாடி கொண்டிருகின்றனர் . இதில் கல்வி வியாபாரிகள் வேறு வரிந்து கட்டி கொண்டு என்னமோ இவர்களுக்கு குழந்தைகள் கல்வி மீது என்னமோ அக்கறை பொத்து கொண்டு வந்ததை போல் சீன் போடுராங்கோ . கல்வி கட்டணத்தை குறையுங்கன்ன்னு சொன்ன அதை செய்ய மாட்டாங்களாம் வந்துட்டாங்க . திருந்தாத ஜெயாவுக்கு வாக்களித்ததை நினைத்து கொஞ்சம் வருத்தம் தான் .இருந்தாலும் கலைஞ்சர் அப்படின்னு நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம் குறைவாதான் இருக்கு . நல்ல தலைவர்கள் கிடைக்காதது நாம் செய்த பாவமோ தெரியவில்லை . சட்டை பிடித்து கேள்வி கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது என் கருத்து . குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை ஹயோ ( நாம நடிகனா மாற வேண்டி இருக்கு )

 10. //எழுத்தாளர் ஞானி இல்லை //

  ஹ ஹ ஹ தொப்பி தொப்பி …:-) கிரி சூப்பர் …:-)

  எப்படியோ நானும் வந்து விட்டேன் சிங்கை :-).

  விரைவில் சநதிப்போம்.

  நன்றி.

 11. @ராமலக்ஷ்மி இது அனைவரது குடும்பங்களிலும் தற்போது நடக்கும் ஒரு சாதாரண விசயமாகி விட்டது 🙂

  @காயத்ரி நாகா & பாலா இது தெய்வத்திருமகள் பார்த்ததால் எழுதியது அல்ல. படம் பார்க்கும் முன்பே எழுதி விட்டேன். இது ஒரு கோ இன்சிடன்ஸ்

  @முத்து அடிப்பதை ஏறக்குறைய நிறுத்திட்டீங்களா!??? ஹலோ குழந்தைகளை அடிப்பதே தவறு என்று கூறிக்கொண்டு இருக்கிறேன் நீங்க என்னடான்னா குறைச்சுட்டு இருக்கேன்னு சொல்றீங்க.

  குழந்தைகளுக்காக இத்தனை பண்ணுறோம்னு சொல்றீங்க… 🙂 நான் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. என்னுடைய மனைவி தான் இந்தச்சொல்லுக்கு பொருத்தமானவர். நான் செய்ய வேண்டியது ஏகப்பட்டது இருக்கு.

  சுட்டிகளுக்கு நன்றி இதை என் மகனுக்கு போட்டு காட்டுகிறேன் 🙂

  @ஜீவதர்ஷன் உங்களுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப இஷ்டம் என்று நினைக்கிறேன். கடந்த பதிவிலும் கூட ஆர்வமாக கூறி இருந்தீர்கள் 🙂

  @அருண் நன்றி

  @மாயா லிங்க் சரியா இல்ல.. இருப்பினும் இது பல்லேலக்கா பாடல் என்று நினைக்கிறேன். தற்போது அனைத்து இடங்களிலும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

  @பாலா என்னமோ போங்க! வருகிற ஆத்திரத்திற்கு …. கிர்ர்ர்

  @சிங்கக்குட்டி வாங்க! வாங்க! ஒரு ஃபோன் பண்ணுனா குறைந்தா போய்டப்போறீங்க

 12. நாங்களும் எங்கள் பசங்களுக்கு செல்லம் கொடுக்கிறோம் ரொம்ப எங்களை படுத்துனாங்க னா அடிக்கிறதும் உண்டு

  குழந்தைகளை அதிகம் ரசிக்கும் காலம் எது என்று என்று என்னைக்கேட்டால் நாமும் ஒரு குழந்தையின் பெற்றோர் ஆகும் போது என்று தான் கூறுவேன். முன்பு நாம் என்ன தான் குழந்தைகளை ரசித்தாலும் நானும் ஒரு குழந்தையின் தந்தையான போது தான் அது எவ்வளவு ஒரு அற்புதமான உணர்வு என்று உணர முடிந்தது.

  ஆம் கிரி

 13. கிரி அண்ணா வணக்கம் …… இப்படி ஒரு செய்தி பார்த்தேன் , என்னான்னு புரியலா… கொஞ்சம் விளக்க முடிமா ..?

  கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன் படுத்துகிறீர்களா! அப்படியானால், வரும் ஆகஸ்ட் 1 முதல், நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அதன் அண்மைக் காலப் பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால், அதனை கூகுள் சப்போர்ட்
  செய்திடாது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி பிரவுசர்களைக் குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நடப்பில் எந்த பதிப்பினை இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளனவோ, அந்த பதிப்பினையும், அதற்கு முந்தைய பதிப்பினையும் மட்டுமே, கூகுள் சப்போர்ட் செய்திடும். இதன்படி, ஆகஸ்ட் 1 முதல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, பயர்பாக்ஸ் 3.5 மற்றும் சபாரி 3 ஆகியவற்றுக்கு சப்போர்ட் கிடைக்காது.
  இந்த பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் கூகுள் அப்ளிகேஷன்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால், கூகுள் தரும் புதிய வசதிகளில் சில இதில் கிடைக்காமல் போகலாம். அவை சரியாகச் செயல்படும் என்ற உத்தரவாதத்தினை கூகுள் தராது.
  தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கு கூகுள் அப்ளிகேஷன்களுக்குக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வருபவர்களுக்கு இதனை கூகுள் ஏற்கனவே அறிவித்துள்ளது. தங்கள் பிரவுசர்களை அப்கிரேட் செய்திட லிங்க்கினையும் தந்துள்ளது. இந்த பிரவுசர்களைத் தந்துள்ள நிறுவனங்களின் தளங்களிலும் இதே போன்ற அறிவிப்பு தரப்பட்டுள்ளது.
  இந்த அறிவிப்பு களுக்குக் காரணம் என்ன? கூகுள் தன் மெயில், காலண்டர், டாக்ஸ் மற்றும் தளங்களில் (Mail, Calendar, Docs and Sites), எச்.டி.எம்.எல்.5 (HTML 5) இஞ்சினைப் பயன்படுத்துகிறது. கூகுள் தரும் பல புதிய வசதிகள் இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பைல் ஒன்றை அட்டாச் செய்திட, போல்டரி லிருந்து இழுத்து அமைப்பது (drag and drop attachment), படங்களை இதே போல அமைப்பது, புதியதாக மெயில் வந்துள்ளது என்ற அறிவிப்பு வழங்குவது போன்ற பல செயல்பாடுகள், எச்.டி.எம்.எல்.5 அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இவை குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரின் புதிய பதிப்புகளில் மட்டுமே கிடைக்கின்றன.
  இதில் ஒரு மோசமான சூழ்நிலையும் உருவாகி உள்ளது. கூகுள் ஆப்லைன் (Google Offline) வசதி இந்த புதிய பிரவுசர்களில் எடுபடவில்லை. இந்த வசதி பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் வழி தரப்படுகிறது. இவற்றை கூகுள் Google Gears என அழைக்கிறது. தற்போது இந்த வசதி பயர்பாக்ஸ் 3.6 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கிடைக்கிறது. இந்த பிரவுசர்களின் புதிய பதிப்பினை நீங்கள் பயன்படுத்தினால், இந்த ஆப் லைன் வசதி கிடைக்காது. ஆனால், கூகுள் இந்த விஷயத்தில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அநேகமாக, இன்னும் இரண்டு மாதங்களில், இந்த ஆப்லைன் வசதியை புதிய பிரவுசர் பதிப்புகளிலும் செயல்படும்படி எச்.டி.எம்.எல்.5 அடிப்படையில் கூகுள் அமைத்துவிடும். தற்போது இந்த ஆப் லைன் வசதி கூகுள் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது.

 14. @சரவணன் 🙂

  @ஆனந்த் இதில் குழம்ப எதுவுமே இல்லை. நம்முடைய பிரவுசரை (IE, Chrome, Firefox, Safari) தற்போதைய பதிப்புக்கு அப்டேட் செய்யக் கூறி இருக்கிறார்கள். ஒரு சிலர் இன்னும் IE 6 யையே பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அதன் பிறகு தற்போது IE 9 வரை வந்து விட்டது. பழைய பிரவுசரை பயன்படுத்தினால் உங்கள் கணினியை ஹேக் செய்ய முடியும்.. அதோடு பலர் அதன் பிறகு வந்த வெர்ஷனை வைத்து தங்கள் ப்ரோக்ராம் ஐ டெவலப் செய்து இருப்பார்கள்.. இதனால் நாம் பழைய பிரவுசர் பயன்படுத்தினால் சப்போர்ட் செய்யாது.

  எடுத்துக்காட்டாக என்னோட தளத்தை புதிய வோர்ட்பிரஸ் க்கு மாற்றி இருக்கிறேன். இதில் IE 6 பயன்படுத்தி என்னோட தளத்தை படித்தால் நீங்கள் ஒரு எச்சரிக்கை வாசகத்தை பெறுவீர்கள். அதாவது நீங்கள் outdated பிரவுசர் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள் புதுப்பித்து விட்டுப்பாருங்கள் என்று அறிவிப்பு வரும் இல்லை என்றால் சில பகுதிகள் உங்களுக்கு சரியாக தெரியாது என்று கூறும்.

  சுருக்கமாக கூறுவதென்றால் விண்டோஸ் அப்டேட் சரியாகச் செய்ய வேண்டும். எந்த பிரவுசர் புதிய பதிப்பு வெளியிட்டாலும் உடனே நாமும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இது ஒரு பெரிய விசயமே இல்லை.

  இது பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.

 15. என் குழந்தை 3 வசு ஆச்சு ஆனால் இன்னும் குறும்பு செய்கிறான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here