திரைப்படங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 3D Sex and Zen : Extreme Ecstasy என்ற 3D திரைப்படமாக வந்துள்ளது.
பேச்சில்லா படமாக முதலில் ஆரம்பித்து இன்று 3D 4D என்று தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு முடிவு என்பதே கிடையாது.
புதிது புதிதாக ஏதாவது கொடுத்துத் திரை ரசிகர்களைப் பலரும் பல்வேறு விதத்தில் கவர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
போட்டி மிகுந்த உலகம் ஆகி விட்டது. எனவே, ஏதாவது புதுமையாகச் செய்தால் தான் நிலைத்து நிற்க முடிகிறது.
3D படங்கள் ஏற்கனவே பல வருடங்கள் முன்பே வந்து விட்டாலும் ஒரு முழுமையான செக்ஸ் 3D வராமல் இருந்தது அதை இந்தப்படம் ஈடுகட்டி இருக்கிறது.
3D Sex and Zen: Extreme Ecstasy
இந்தப்படத்தின் முதல் பார்ட்டான Sex and Zen 1991 ம் ஆண்டே வந்து விட்டது அதனுடைய மேம்படுத்தப்பட்ட பகுதியாக இந்தப்படம் வெளியாகி உள்ளது. இரு படங்களின் தயாரிப்பாளரும் ஒருவரே ஆவார்.
இந்தப்படம் ஹாங்காங் நாட்டைச் சார்ந்ததாகும். ஹாங்காங் நாடு சிங்கப்பூர் போல ஒரு குட்டி நாடு (நகரம்) ஆகும். சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சட்ட திட்டங்கள் இங்கு வேறு ஆகும். சீனா போல இங்குக் கட்டுப்பாடுகள் இல்லை.
இப்படம் சீனாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆனாலும் பலர் இந்தப்படத்தை சீனாவில் இருந்து ஹாங்காங் வந்து பார்த்துச்சென்றதாகச் செய்திகளில் வந்தன.
ஹாங்காங்கி ல் வெளியான முதல் நாள் அதிக பட்ச வசூல் சாதனையான டைட்டானிக் மற்றும் அவதார் படங்களின் முதல் நாள் வசூலையே மிஞ்சி விட்டது.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் எந்த வித சென்சாரும் இல்லை அப்படியே வெளியாகும் என்று கூறி இருந்தார்கள் ஆனால், ஆனால் பல்வேறு காட்சிகளை வெட்டி விட்டார்கள்.
Read: செக்ஸ் ஒரு விரிவான பார்வை!
சிங்கப்பூரில் வெளியாகும் என்று செய்திகளில் படித்த போதே இந்தப்படத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
அப்படி என்ன தான் 3D ல் எடுத்து இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்ற இயல்பான ஆர்வம் இருந்தது.
படத்தின் கதை ஒன்றும் பெரிய அளவில் இல்லை எனக்கு (யாருக்கும்) அது அவசியமுமில்லை 🙂 .
உடலால் கிடைக்கும் சுகத்தை விட மனதால் உண்டாகும் அன்பே சிறந்தது.
இதுவே கடைசி வரை அலுக்காது நிலைக்கும் என்பதை நம்ம ஊர் மசாலாப் படங்கள் லட்சம் முறை கூறியதை இவர்கள் லட்சத்து ஒரு முறையாகக் கூறி இருக்கிறார்கள்.
இப்படம் பார்க்க வருகிறவர்கள் கதை எதிர்பார்த்து வருவார்கள் என்று தோன்றவில்லை.
அரசர் காலத்து கதை
அரசர் காலத்து கதையாக எடுக்கப்பட்டுள்ளது. சீனர்களுக்கு அரசர் கால கதைகள் என்றால் ஹல்வா சாப்பிடுற மாதிரி.
இன்றும் கூட ஜாக்கிசான் ஜெட்லி போன்ற நடிகர்கள் ராஜா காலத்து கதைகளில் நடித்து வருகிறார்கள். அதற்குப் பலத்த வரவேற்பும் காணப்படுகிறது.
திருமணமான இருவர் உடலுறவில் திருப்தி அடையாததால் அடுத்தவரைத் தேடுகிறார்கள்.
செக்ஸ் பற்றித் தெரிந்து கொள்ள ஆண் ஒரு இடம் செல்கிறான் அங்கே சென்ற பிறகு அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் படமாகக் காட்டப்பட்டுள்ளது.
நகைச்சுவைக்குப் பஞ்சம் இல்லை. ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது என்று அதைப் பெரிதாக்க இவர் செய்யும் முயற்சிகளும் அதனோட தொடர்புடைய காட்சிகளும் நகைச்சவையாக எடுக்கப்பட்டு உள்ளது.
சீனப்பெண்கள் பார்க்கவே பொம்மை மாதிரி இருப்பார்கள் இதில் கேட்கவே வேண்டாம். முழு நிர்வாணக் காட்சிகளும் உடலுறவு காட்சிகளும் உள்ளன.
சீன ஆண்கள் பார்க்கப் பெண்கள் மாதிரி தான் இருப்பார்கள்.
இதில் அரச காலத்து கதை என்பதால் முடி வேறு நீளமாக வைத்து இருப்பதால், உடலுறவு காட்சிகளின் போது யார் ஆண் யார் பெண் என்றே சந்தேகம் வந்து விடும் போல இருக்கிறது 🙂 .
ஆங்கில சப்டைட்டில்
ஆங்கில சப்டைட்டில் போட்டார்கள் இருந்தாலும் மாண்டரின் (சீன) மொழியில் இரண்டு வார்த்தை பேசினால் ஆங்கிலத்தில் ஒரு பெரிய வரியே வருகிறது.
அதைப் படித்து முடிப்பதற்குள் அடுத்தது பேசப் போய்விடுகிறார்கள்.
சரி! நாம என்ன இவனுக பேசுறதையா கேட்க வந்தோம் என்று பொறுமை இழந்து படிப்பதை குறைத்து விட்டேன் 🙂 .
பலர் கணவன் மனைவி, ஆண் பெண் நண்பர்களாக வந்து இருந்தார்கள். எனக்கு ஒரு சாதாரண வேற்று மொழிப் படத்தைப் பார்த்தது போலவே சூழ்நிலை இருந்தது.
காட்சிகளில் உள்ள நகைச்சுவைகளுக்குசடு இருந்தார்களே தவிர ஆபாசமாகக் கமெண்ட் அடிப்பதோ கூச்சல் இடுவதோ அருகில் உள்ளவர்களைச் சங்கடப்படுத்தும் படியான செயல்களில் ஈடுபடுவதோ எதுவும் செய்யவில்லை.
கற்பனைக் குதிரை
படத்தைவிட செம காமெடி என் அருகில் இருந்தவர் செய்தது தான். கணவன் மனைவியாக வந்து இருந்தார்கள் இவருக்கு எப்படியும் 45 – 50 வயது இருக்கும்.
படம் ஆரம்பித்து அரைமணி நேரம் கழித்து வித்யாசமாகச் சத்தம் வருகிறதே என்று பார்த்தால் நம்ம ஆளு குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருக்கிறார்.
அடப்பாவிகளா! யோவ் இங்க என்ன படம் ஓடிட்டு இருக்குது இப்படி தூங்கிட்டு இருக்கிறாரே! என்று எனக்குச் சிரிப்பு தாங்கல.
திரைப்படத்தில் ஓடும் குதிரையைவிட என்னுடைய கற்பனைக் குதிரை அவரைப் பற்றி அதற்குள் பல மைல் வேகத்தில் ஓட, கஷ்டப்பட்டு நிறுத்திப் படத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன் 😀 .
நான் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்றாலும்… ஓகே. 3D காட்சிகள் அனைத்தும் மற்ற படங்களைப்போலச் சாதாரண காட்சிகளை ஒட்டியே இருந்தது.
இதற்கும் மற்ற பாலியல் காட்சிகளுக்கும் எந்த 3D வித்யாசமும் இல்லை ஆனால், தற்போது நீலப் படங்களில் (திரைப்படமல்ல) 3D முயற்சிகளில் படம் வெளிவந்துள்ளதாகச் செய்திகளில் படித்தேன்.
Directed by Christopher Suen
Produced by Stephen Shiu, Stephen Shiu Junior
Screenplay by Stephen Shiu, Stephen Shiu Junior, Mark Wu, Story by Li Yu
Starring Hayama Go,Saori Hara,Lan Yan,Vonnie Lui
Cinematography Jimmy Wong
Editing by Chung Wai Chiu
Release date(s) April 14, 2011
Running time 128 minutes
Country Hong Kong
Language Cantonese
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
அண்ணே ..ஜூப்பரு … படிக்கும் போது ஜொள்ளு வழிஞ்சி என் லேப்டாப் போகஞ்சிட்டு னா
அண்ணே!!!! டோரண்ட்லேயே இருக்கு !!! ரெண்டு பார்ட்டுமே ஒரே மாதிறி தான் இருக்கு 🙁 இந்த படத்தில ஒருத்தர் வந்து சண்டை எல்லாம் போடுவாரே அவர் மிக பிரபல குங்பூ பட வில்லன் !!!! நல்லா சண்ட போடுவார் !! அந்த முரட்டு ஆளும் நல்லா சண்டை போடுவார் !!!
@ஆனந்த் 🙂
@ராஜ் ஆமாம் ஏறக்குறைய ஒரே மாதிரி தான்.. அவர் இதிலும் நல்லா சண்டை போட்டு இருக்காரு ஆனா வேற சண்டை 😉
இந்த இன்டலி ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறது. இதனால் இணைத்தவுடன் டிசபல்டு ஸ்டேடஸ் போய் விட்டது.. என்ன கொடுமை சார்.
ஆனந்த் ராஜ் நீங்க இரண்டு பேர் தான் கமெண்ட் போட்டு இருக்கீங்க.. மற்றவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க போல இருக்கு 😀 ஆனா இவ்வளோ நல்லவங்கன்னு தெரியாம போச்சே!
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா கிரி சார் !!!!!!
காயத்ரி நாகா நான் அனைத்தும் கலந்து இருக்கும் கலவை 🙂
இங்கே போய் பாருங்க விரிவாக கூறி இருக்கிறேன் https://www.giriblog.com/about-good-person/
இதை பற்றி கேபிள் முன்னாடியே எழுதிவிட்டார் சரி என்று படம் பார்த்தேன் பாதி தான் பார்த்திருக்கிறேன். கதை என்னவோ பிட்டு பட ரேஞ்சுதான். இருந்தாலும் 3D ங்கரதனால வேணுமினா பார்க்கலாம், ஆனா இது ரெட் ப்ளூ 3d கிடையாது அது ரொம்ப சீப். அதுவிமில்லாம இந்த வகை 3d இல் தொடர்ந்து 30 நிமிஷம் பார்க்குறதே கஷ்டம்.
இந்தமுறை ஹாங்காங் போகும்போது 3d கிளாஸ் வாங்கலாமின்னு இருக்கேன். (ஹி ஹி கூடவே இந்த படமும்) அவதார் டைப் 3d கிளாஸ் சவுதியில சோனி கடையில் 500 ரியால் சொல்றான் சீப்பா எங்க வாங்கலாமின்னு தெரியல.
5 பார்ட் படம் – நீங்க எங்க ஹாரி பாட்டர புகழ்ந்துடுவீங்கலோன்னு பயந்தேன் நல்லவேளை. (எனக்கு அதிமேதாவிகள் படங்களை பார்க்க பொறுமை இல்லை). பான்ஸ் லப்ரிந்த், லார்ட் of தி ரிங் ஓகே ..
Final Destination நான் முதல் பார்டிலிருந்தே பார்த்து வருகிறேன். நல்ல படம்.
ஒன்னு சொல்ல மறந்துட்டேன். 4D ய பத்தி வெப்புல சரியா எதுவும் சொல்லலை. எல்லாம் குழப்ப கேசா இருக்கு. போன வருஷம் செப்டம்பர் வாக்குல shanghai போனப்ப அங்க இருக்குற USA exhibition ல் 4D ன்னு ஒரு படம் காமிச்சனுவோ அதாவது திரைக்கு பதிலாக stage அதில் 4 கட்டவுட்டு மாதிரி அதுல தனி தனியா படம் தெரியுது. அதாவது ஒரு பைக் சென்றால் முதல் கட்டவுட்டில் வரும் அப்படியே அது ரெண்டாவதில் தொடரும் கடைசியாக 4 வதில் முடியும். அதே சமயத்தில் வேறொரு படம் முதல் கட்டவுட்டில் வந்துவிடும். (எத பாக்குறதுன்னு கடைசியில குழப்பம் தான் வரும்) இது வேற இல்லாமல் தியேட்டரில் மழை பெயுரமாதிரி ஒரு எபெக்ட் (அவனவன் தன்னோட மொபைலையும் கேமராவையும் பாதுகாக்குரதிலேயே நேரம் சரியா இருந்தது). இதுதான் 4d சொல்லி வெளிய அனுப்பிட்டனுவோ. இதை யு tube இல் அப்லோட் செய்யலாமென்று இருக்கிறேன். என்னைபொருத்தவரை 4 எனப்படுவது ரோபோ படத்துல stage performance சமயத்துல command கொடுக்க கம்ப்யூட்டர் அனிமேஷனில் தோன்றுவாறே அதுதான் 4d . அதாவது முன்னே உள்ள ஒருவரின் அனைத்து பகுதிகளையும் பார்க்கலாம் ஆனால் அவர் உண்மையாக அங்கே இல்லை.
தலைவரே இந்த படத்தை தரவிரக்கி பார்த்தேன் சொல்லப்போனால் எல்லா காட்சிகளுமே அருவருப்பில்லாத காட்சிகள். கதாநாய்கனின் மனைவி தரும் முக பாவனைகள் செம கியூட்.
ஆஹா கிரி என்ன இது தூர்தஷன் ல midnight masala போட்ட மாதிரி இருக்கு உங்க blog ல இந்த படத்துக்கு review..ஆனா இந்த படத்துக்கும் என்ன review ல சொல்ல முடியுமோ அதை சரியா சொல்லி இருக்கீங்க
“நாம என்ன இவனுக பேசுறதையா கேட்க வந்தோம் என்று பொறுமை இழந்து படிப்பதை குறைத்து விட்டேன்” – same blood தல
“உடலுறவு காட்சிகளின் போது யார் ஆண் யார் பெண் என்றே சந்தேகம் வந்து விடும் போல இருக்கிறது” – அது மட்டும் தான் இந்த படத்தோட பெரிய minus 🙂
அப்புறம் final destination கு நான் ரொம்ப பெரிய ரசிகன்.. ரொம்ப ஆர்வமா இருக்கேன் தல அந்த படத்துக்கு.
– அருண்
@ராஜ்குமார்
“அவதார் டைப் 3d கிளாஸ் சவுதியில சோனி கடையில் 500 ரியால் சொல்றான் சீப்பா எங்க வாங்கலாமின்னு தெரியல.”
அவ்வளோ விலையா! என்கிட்டே 3D
“நீங்க எங்க ஹாரி பாட்டர புகழ்ந்துடுவீங்கலோன்னு பயந்தேன் ”
🙂 ஏங்க இப்படி! எனக்கும் இந்தப்படம் பிடிக்காது.. எதோ ஒரு பார்ட் கொஞ்சம் பார்த்தேன் பொறுமை இழந்து நிறுத்தி விட்டேன் ஆனால் இதற்க்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. அவர்கள் கிட்ட இப்படி கூறினால் நம்மை நொக்கி விடுவார்கள் 😉
final destination செம படம். எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதிலும் ஒரு நெடுஞ்சாலையில் மரம் ஏற்றிச்சென்ற லாரியில் அனைத்தும் கழண்டு விழுந்து ஏற்படும் விபத்து பயங்கரமாக எடுக்கப்பட்டு இருக்கும்.
4D பற்றி அரைகுறையாகவே தெரியும். தெரிந்த பிறகு கூறுகிறேன் 🙂
@பாலா எல்லாம் சங்கி மங்கி என்பதால் நமக்கு அப்படி தோன்றவில்லை என்று நினைக்கிறேன். மற்றபடி ஓகே படம் தான்.
@அருண்
“கிரி என்ன இது தூர்தஷன் ல midnight masala போட்ட மாதிரி இருக்கு உங்க blog ல இந்த படத்துக்கு review.”
ஹா ஹா அருண் ரொம்ப ரசித்தேன். இங்கே அனைத்து படமும் காட்டப்படும் வரம்பு மீறாமல் 😉
சரி நீங்களும் பாத்துட்டீங்க! ரைட்டு 😉 நான் கூட அருண் நல்லவர் வேஷம் போடுவாரோன்னு நினைத்தேன் 🙂
final destination விரைவில் பார்த்துடுவோம் 3D ல வருது.
சொல்லாமலே போயிட்டு வந்துடீங்கேல!
கொசுறு 1 : இந்த முடி இறக்க விழாவில் மொட்டை அடிப்பவர்களுக்கு அவர்களது நண்பர்கள்/உறவினர்கள் மொய் எழுதுவார்கள் அது தொண்டு நிறுவனத்திற்கு சேரும். எனது நண்பரும் மொட்டை அடித்துள்ளார்.
giri,
how are you?
i saw the movie. But, its above average for me.
Once you wrote review about the movie “hostel”. I read that review and saw that movie. I liked that movie very much. if you know any movie like that, please give the list.
rajesh.v
கிரி,
if you have time write about recent economic problems happened in america and riots happened in london.
@லோகன் அப்படியே சொன்னா வந்துடுற மாதிரி 🙂
@ராஜேஷ் இது போல நிறையப் படங்கள் உள்ளன. பிறகு கூறுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டதில் லண்டன் பற்றி எழுதுகிறேன் ஆனால் அமெரிக்கா நிலை பற்றி எழுத நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டியுள்ளது 🙂 சாதாரண விசயமில்லை.