மௌனகுரு (2011)

13
மௌனகுரு Mounguru

யல்பான படமாக வெளிவந்துள்ளது மௌனகுரு.

மௌனகுரு

காவல் துறையில் உள்ள நால்வர் செய்யும் தவறால் அப்பாவியான ஒருவர் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதை க்ரைம் த்ரில்லராகக் கொடுத்துள்ளார்கள்.

இதில் பாதிக்கப்படுபவராகக் கலைஞரின் பேரன் அருள்நிதி, காவல் துறை அதிகாரியாக ஜான் விஜய் நடித்து இருக்கிறார்.

ஓரம்போ படத்தில் காமெடி கலந்த வில்லன் ரோல் ஜான் விஜய் செய்து இருப்பார். இதில் காமெடியாகப் பார்த்து மௌனகுருவில் வில்லனாகப் பார்க்க சிரமமாக இருந்தது.

பின்னர் அவருடைய நடிப்பால் மாற்றி விட்டார்.

அருள்நிதி பார்க்க ஒரு சாயலில் ஜெயம் ரவி போல இருக்கிறார். எப்படியும் உயரத்தில் ஆறடிக்கு மேல இருப்பார் போல 🙂 . வசனங்கள் அதிகம் இல்லை.

அதோடு கொஞ்சம் சிடு சிடுன்னு மௌனம் பேசியதே சூர்யா போல.

நாயகி இனியாவுடன் பேசுவது ரசிக்கும் படி இருக்கும்.

அருள்நிதி பின்னாடியே நின்று இனியா பேசிக்கொண்டு இருக்கும் போது ‘கொஞ்சம் முன்னாடி வாங்க! திரும்பிப் பேசிக் கழுத்து வலிக்கிறது‘ என்று ஆரம்பித்து வெகு இயல்பாக நடித்துக் காட்சியோடு நம்மை ஒன்றைச் செய்து விட்டார்.

இனியாக்கு நடிக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும் அவர் வரும் காட்சிகளில் சிறப்பாகச் செய்து இருக்கிறார்.

இயல்பான காட்சிகள்

படத்திற்கு பலம் இயல்பான காட்சிகளே! யாருக்கும் எந்த வித மேக்கப்பும் இல்லை இனியா மட்டும் விதிவிலக்கு.

கல்லூரியில் லூசு மாதிரி ஃப்ரொபசர்களாகக் காட்டாமல் வழக்கமாக எப்படி இருப்பர்களோ அது போலக் காட்டி உள்ளார்கள்.

வழக்கமாக மாணவர்கள் என்ன உடை அணிவார்களோ அதோடு நிறுத்தி இருக்கிறார்கள்.

இயல்பான படங்களையே வித்யாசமான படம் என்று கூறும் நிலையில் உள்ளோம்.

மனநல மருத்துவமனை காட்சிகளின் நீளம் சலிப்பாக்குகிறது, குறைத்து இருக்கலாம்.

ஜான் விஜயுடன் மற்ற அதிகாரிகளும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

தாங்கள் மாட்டிக்கொள்ளப்போகப் போகிறோம் என்கிற பயத்தில் தவறை மறைக்க ஒரு தவறு அதை மறைக்க ஒரு தவறு என்று தொடர்வது நன்றாகக் காட்டப்பட்டு உள்ளது.

அதில் உள்ள சிரமங்கள் காவல் துறை அதிகாரியாக இருந்தாலும் அவர்களுக்குள் உள்ள பயங்களும் பிரச்சனைகளும் நன்றாகக் காட்டப்பட்டு இருக்கின்றன.

விசாரணைக்காக வரும் நேர்மையான அதிகாரியாக உமா ரியாஸ். படம் முழுவதும் கர்ப்பிணியாக வருகிறார், அதோடவே விசாரணை என்று அசத்தி இருக்கிறார்.

இதில் ஆர்பாட்டம் எதுவும் இல்லாமல் வந்து செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல வாய்ப்பு “அன்பே சிவம்” படத்திற்குப் பிறகு.

தமன்

படம் பார்க்கும் முன்பு இசை யார் என்று தெரியாது ஆனால், பாடலும் பின்னணி இசையும் அருமையாக இருந்தது. அதன் பிறகே பார்த்தேன் அது தமன்.

தமன் ஈரம் படத்திலேயே பின்னணி இசை அசத்தி இருப்பார் இந்த க்ரைம் த்ரில்லரிலும் சும்மா சொல்லக்கூடாதுங்க பல இடங்களில் அட! போட வைக்கிறார்.

படம் முழுவதையும் இயல்பாகக் கொண்டு சென்று எப்படி முடிக்கிறார்கள் என்கிற ஆர்வம் இருந்தது. முழுவதும் திருப்தி அளிக்கவில்லை என்றாலும் மோசமில்லை.

புதுமுக இயக்குனர் சாந்தகுமார் முதல் படத்திலேயே தன்னை சிறப்பாக நிரூபித்து இருக்கிறார்.

இயல்பான படங்களை ரசிப்பவர்கள் தவற விடக்கூடாத படம் மற்றவர்களுக்கு போர் அடிக்கலாம்.

Directed by Santha Kumar
Written by Santha Kumar
Starring Arulnidhi, Ineya, John Vijay, Madhusudhan Rao, Uma Riyaz Khan, Krishnamoorthy
Music by Thaman
Cinematography Mahesh Muthuswami
Edited by Raja Mohammad
Release date 16 December 2011
Running time 2 hours 29 mins
Country India
Language Tamil

Read : மாநகரம் [2017] த்தா… இது சென்னைடா!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

  1. ‘பசங்க’ பாண்டியராஜ் இயக்கிய வம்சம் எனக்கு பிடித்த திரைப்படம், அதில் இவரது நடிப்பை பலர் எக்ஸ்பிரஷன் இல்லை என்று குறை கூறினார்; எனக்கு பிடித்திருந்தது; (எக்ஸ்பிரஷன் பெயரில் ஓவர் அக்டிங் தொல்லை இல்லை :p

    இப்ப ‘மௌனகுரு’ எனக்கு எதிர்பார்ப்பில இருக்கிற திரைப்படம்; ஒரிஜினல் DVD க்கு வெய்ட்டிங் (இங்கு எங்கும் ஓடவில்லை) நீண்ட நாளாக காத்திருக்கும் ‘முரண்’ ஒரிஜினலே இங்கு இன்னமும் வரவில்லை 🙂

    வம்சத்திற்கும் மௌனகுருவிற்க்கும் இடையில் ‘உதயன்’ என்கிற ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் இந்த தம்பி நடித்திருந்தார் 🙂 ஆக்ஷன் படம்தான், ஓகே ரகம்.

  2. கிரி நான் நேற்று காலை ராஜபாட்டை படமும் நேற்று மதியம் மௌன குரு படமும் சென்றேன்

    மௌனகுரு படம் என்னை அசத்தியது இந்த படத்தை பற்றி என் தளத்தில் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன் படம் படு யதார்த்தம்

  3. Mr.கிரி,

    I saw the movie already in pvr, chennai. As usual, our taste are same (But, ungal mayakam yenna vimarsanam parthu, andha padathukku poi ungalai nainaithu “teeth grind” panniyadhu veru vishayam).
    I like the movie very much. But, no one is interested in this movie. When i went to pvr, only last three rows were full. Today, some of my friends planned to watch “rajapattai”. I recommend them mouna guru. But, they ignored my recommendation. I think luck and timing didnt favour the director inspite of his hard work. There is no chance of late pick up also.

  4. வாகை சூடவா படத்தில் பார்த்து இருந்தாலும் அதை விட இதில் ரொம்ப அழகாக இருக்கிறார் (எனக்கு).

    ————————————————————————————————-
    எனக்கு இல்லை , நமக்கு . 😀

  5. @ஜீவதர்ஷன் நான் ஆரண்யகாண்டம் DVD க்காக காத்திருக்கிறேன் 🙂

    @சரவணன் கண்டிப்பா எழுதுங்க.

    @ராஜேஷ் ஹா ஹா மயக்கம் என்ன உங்களை ரொம்ப டென்ஷன் பண்ணி விட்டது போல.. எனக்கு ரொம்பப் பிடித்தது. நான் இரண்டு முறை பார்த்தேன்.

    மௌனகுரு மெதுவாக செல்லும் படம் என்றாலும் சிறப்பான திரைக்கதை. நல்ல படம் வரவில்லை என்றால் புலம்புறாங்க.. எடுத்தால் யாரும் பார்க்க மாட்டேங்குறாங்க! மசாலா படத்தை அதிகம் விரும்புறாங்க… இது போல இருந்தால் எப்படி நல்ல படம் வரும்?

    இனியாக்கு ரசிகர் எண்ணிக்கை அதிகமாகும் போல இருக்கே! 😉

    என்னோட Blog facebook fan page ல இணைந்தது நீங்களா!

  6. மௌனகுரு படம் எனக்கு ரொம்ப புடிச்சது கிரி

    “இனியாக்கு ரசிகர் எண்ணிக்கை அதிகமாகும் போல இருக்கே!”
    இன்னும் ஒன்னு கூடியாச்சு .. என்ன சொன்னேன் 🙂

    -அருண்

  7. வாகை சூடவா படத்தில் பார்த்து இருந்தாலும் அதை விட இதில் ரொம்ப அழகாக இருக்கிறார் (எனக்கு).

    ————————————————————————————————-
    எனக்கு இல்லை , நமக்கு .

    இனியாக்கு ரசிகர் எண்ணிக்கை அதிகமாகும் போல இருக்கே!

    எஸ் நானும் அதில் ஒருவன் ஹா ஹா

  8. கலைஞர் பற்றி சொன்னது…. ராம் படத்துல போலிஸ் ஸ்டேஷன் சீன்ல கஞ்ஜா கருப்பு காமிடிய நினைவு படுத்துசி….. எல்லாத்துக்கும் கலைஞர், கலைஞர்….

  9. என்னோட Blog facebook fan page ல இணைந்தது நீங்களா!

    ———————————————————————————————–
    yes giri,

    Myself with red t-shirt and i am carrying my daughter DIYA RAJESH

  10. அண்ணே !

    வம்சத்துக்கு அடுத்து பஞ்ச் டயலாக் பேசி பஞ்சரான படம் கூட ஒண்ணு பண்ணி இருக்காப்ல 🙂

  11. @அருண் சரவணன் யாசின் 🙂

    @ராஜேஷ் உங்க பொண்ணு ரொம்ப அழகு 🙂

    @ராஜ் எப்படி நடித்தாலும் பஞ்சர் பண்ணுவதை குறிக்கோளா அனைவரும் வைத்து இருக்காங்க போல 😉

    @பிரபு நன்றி 🙂

  12. கிரி,

    நீங்க சொன்நீங்கன்னுதன் தான் டவுன்லோட் பண்ணேன்… படம் ஒகே தான்..

    Iniya was good.. yeah one more to the list. Rajapattai.. konjam lightaa.. kadi.

    Kamesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here