குடியரசுத் தினத்தை அசிங்கப்படுத்திய தமிழக அரசு

10
Republic day

குடியரசு தின அணிவகுப்பு ஊர்தியில் தமிழக ஊர்தியை அனுமதிக்கவில்லை என்று தமிழக அரசு உட்படப் பலர் கொந்தளித்தார்கள் அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்தது. Image Credit

பெரியார்

மத்திய அரசு அனுமதிக்கவில்லையென்றால் என்ன! நாங்கள் தமிழகக் குடியரசு தின விழாவில் ஊர்தியைப் பங்கேற்க செய்வோம், ஊர் ஊராகக் கொண்டு செல்வோம் என்றார்கள்.

தேச தலைவர்களைக் கண்டுகொள்ளாத திராவிடக் கட்சிகள் தமிழக மக்களிடையே இவர்களைக் கொண்டு சென்றால் மகிழ்ச்சி தானே என்று பலரும் கருதினார்கள்.

ஆனால், சுதந்திரத்துக்கும் குடியரசுக்கும் சம்பந்தமே இல்லாத, சொல்லப்போனால் ‘சுதந்திரமே வேண்டாம், வெள்ளையனே ஆளட்டும்!‘ என்று கூறிய பெரியார் சிலையை ஊர்தியில் வைத்துள்ளார்கள்.

நாட்டுக்காகப் போராடிய அனைத்து தலைவர்களையும் அசிங்கப்படுத்தியுளார்கள்.

  • பிரிட்டிஷார் நாட்டை விட்டுச் சென்று விட்டால் இந்தியாவால் ஒரு குண்டூசி கூடத் தயாரிக்க முடியாது என்றவர்.
  • ஆகஸ்ட் 15 நமக்குத் துக்க தினம் என்றவர்.
  • தமிழைப் பயன்படுத்தாமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்துங்கள் என்றவர்.

இவரின் சிலை குடியரசு தின அணிவகுப்பில் இருப்பது எவ்வளவு பெரிய அவமானம்!

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள், மக்களின் நம்பிக்கைகள், பண்பாட்டை (கலாச்சாரம்) விளக்குபவைகள், நாட்டின் வளர்ச்சிக்குத் துணை புரிந்தவை இடம்பெறும் இடத்தில் இதற்கு முற்றிலும் எதிரான கருத்துகளைக் கொண்ட பெரியார் சிலை எப்படி வர முடியும்?!

பெரியாருக்கும் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்?!

பெரியார் பல முற்போக்கு கருத்துகளைக் கூறியிருக்கிறார், சமூகநீதிக்காகப் போராடியிருக்கிறார் ஆனால், அதற்கு குடியரசு தினம் சரியானது அல்ல.

பெரியாரை அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பெருமைப்படுத்தலாமே தவிர அவருக்குச் சம்பந்தமே இல்லாத நிகழ்விலும் அவரை முன்னிலைப்படுத்துவது நாட்டின் விடுதலைக்காக உயிரை விட்டவர்களை அசிங்கப்படுத்துவது போலாகும்.

சுதந்திரத்துக்காக உயிரைக் கொடுத்தவர்களும் சுதந்திரத்தையே அசிங்கப்படுத்தியவரும் ஒன்றா?!

வரலாற்றையே திரிக்கிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின், திராவிடக் கட்சிகளுக்கு வேண்டும் என்றால், பெரியார் ஒருவர் மட்டுமே முக்கியமானவராக இருக்கலாம் அதற்காக அவரை அனைத்து இடங்களிலும் கொண்டு வந்து முன்னிலைப்படுத்துவது சரியல்ல.

திராவிடக் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பது பெரியார் என்ற மனிதருக்காக அல்ல, திராவிட ஆட்சியிலும் தமிழகம் வளர்ந்தது என்ற காரணத்துக்காக.

ஆனால், பெரியாரைத் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடிக்கொண்டு இருப்பதாக இவர்கள் கற்பனை செய்து பெரியாருக்கு மிகைப்படுத்தப்பட்ட மரியாதையை வழங்கி வருகிறார்கள்.

தமிழக மக்களுக்கு பெரியார் மீது மதிப்புண்டு ஆனால், திராவிட கட்சிகள் மிகைப்படுத்திக்கொண்டு இருப்பது போல அல்ல.

திராவிட மண், பெரியார் மண் என்பது போன்ற கோமாளித்தனமான பேச்சுகள், எண்ணங்கள் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே! பொதுமக்களுக்கு அல்ல.

தமிழக அரசு தனது சுய கௌவரத்துக்காக (Ego) தவறான ஒரு முடிவைக் குடியரசு தினத்தில் செயல்படுத்தியுள்ளார்கள்.

இது நிச்சயம் எதிர்மறை விளைவுகளையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

சுதந்திரம் மற்றும் தமிழ் குறித்துப் பெரியார் தவறாகக் கூறிய பல கருத்துகள் மேலும் பலரை சென்றடைய துணை புரிந்துள்ளார்கள்.

இவர்களின் அரசியலை தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

நடப்பவை நல்லதுக்கே!

தொடர்புடைய கட்டுரைகள்

திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?

பெரியார் | ஈ. வெ. இராமசாமி

அணிவகுப்பு ஊர்தி அட்ராசிட்டிகள்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. கிரி, எப்படி இருக்கீங்க?? நான் இரண்டு மாதம் விடுமுறையை முடித்து விட்டு தற்போது தான் பணிக்கு திரும்பினேன்.. இடைப்பட்ட காலத்தில் நிறைய பதிவுகளை எழுதி இருக்கீங்க.. சிலவற்றை மேலோட்டமாக படித்தேன்.. ஓய்வு நேரத்தில் எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும்..

    இடைப்பட்ட காலத்தில் ஒரு படம் கூட பார்க்க வில்லை.. நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.. வந்து 5 நாட்கள் ஆகியும் ஊரின் நினைவுகள் இன்னும் அப்படியே உள்ளுக்குள் இருந்து கொண்டு இருக்கிறது.. முதன் முறையாக கிளம்பும் போது பையன் அழுததை பார்த்த உடன் என் கண்ணிலும் கண்ணீர் … இதுவரை ஒரு முறை கூட அழுதது இல்லை…

    பெரியாரின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் மரியாதையை கட்சிக்காரர்கள் நடந்து கொள்ளும் விதத்திலே, அது நாளடைவில் ஒரு வெறுப்பை உண்டாக்கி விடும் போலிருக்கிறது..

  2. அட! பெரியார் பற்றி ஒரு புரிதலும் இல்லாமல் யார் இப்படி எழுதினார்கள் என்று பார்க்க வந்தால் தான் புரிகிறது!

    சங்கிஸ் கான் என்று ! சங்கிகளின் உலகமே தனி தானே !

    இப்ப கூட பெரியார் உங்கள தூக்கத்தை கெடுகிறார் என்பதில் மகிழ்ச்சி !

    நிமிஷத்துக்கு ஒரு தடவை
    தமிழக மக்கள் ! தமிழக மக்கள் ! என்று சொல்லுகிறாயே ?!

    தமிழக மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் . அதுனால தான் உங்க கட்சி இங்க ஒத்த ஓட்டு கட்சி என்று பெயர் பெற வைத்தார்கள் !

    அரியலூர் மாணவி லாவணியா மரணத்தை வைத்து மத அரசியல் பண்ணலாம்னு நினைத்தீர்கள் !

    அதுலயும் உண்மை வீடியோ வந்து உங்க முகத்திரை கிழிந்து தொங்குது! தமிழக மக்கள் காரி துப்புகிறார்கள்!

    இதுல போலி முஸ்லீம் ?! பெயருள்ள நீங்களே உங்களுக்கு சாதகமா கருத்து போட்டுக்கிறிங்க !

    ஒன்னு மட்டும் நல்லா புரிந்துகொ !பெரியாரும்! தமிழகமும் ஒன்னும் !
    இது அறியாத சங்கிகளின் வாயில மண்ணு!

    அதுனால உங்க பருப்பு இங்க வேகாது !
    மீறினால் பிதுங்க படும் பருப்பு !அதுனால முட்ட முடிச்சு கட்டிட்டு வடநாட்டு பக்கமே ஓடிடுங்க டா !!
    சங்கீ மண்டைகளா !!!

  3. @யாசின்

    “கிரி, எப்படி இருக்கீங்க?? நான் இரண்டு மாதம் விடுமுறையை முடித்து விட்டு தற்போது தான் பணிக்கு திரும்பினேன்.”

    மகிழ்ச்சி யாசின் 🙂 . நீங்க இல்லாம தனியா எழுதிட்டு இருப்பது போல இருந்தது 🙂 .

    “இடைப்பட்ட காலத்தில் ஒரு படம் கூட பார்க்க வில்லை.. நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.”

    உங்களைப்போல விடுமுறையில் வருபவர்களுக்கு நாட்கள் எப்படி போவது என்பதே தெரியாது. எனவே வியப்பில்லை.

    இப்ப தான் வந்த மாதிரி இருக்கும்.. ஆனால், விடுமுறை முடிந்து இருக்கும்.

    “வந்து 5 நாட்கள் ஆகியும் ஊரின் நினைவுகள் இன்னும் அப்படியே உள்ளுக்குள் இருந்து கொண்டு இருக்கிறது.. முதன் முறையாக கிளம்பும் போது பையன் அழுததை பார்த்த உடன் என் கண்ணிலும் கண்ணீர் … இதுவரை ஒரு முறை கூட அழுதது இல்லை…”

    புரிந்து கொள்ள முடிகிறது.

    https://www.giriblog.com/travel-notes-04-04-2013/ இக்கட்டுரையில் வரும் வினய் பகுதியை படித்துப்பாருங்க.. உங்களுக்கு திரும்ப உங்க மகன் நினைவு வந்து செல்லும்.

    “பெரியாரின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் மரியாதையை கட்சிக்காரர்கள் நடந்து கொள்ளும் விதத்திலே, அது நாளடைவில் ஒரு வெறுப்பை உண்டாக்கி விடும் போலிருக்கிறது..”

    அதை நோக்கித்தான் சென்று கொண்டுள்ளது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

  4. @பெயரில்லா திராவிடன்

    “அட! பெரியார் பற்றி ஒரு புரிதலும் இல்லாமல் யார் இப்படி எழுதினார்கள் என்று பார்க்க வந்தால் தான் புரிகிறது!”

    யாரு நாங்க படிக்கல.. இந்தக்கட்டுரையையும் அதில் என்ன இணைக்கப்பட்டுள்ளது என்பதையே படிக்கல.. இதுல நாங்க பெரியாரைப் படிக்கலையாம்.

    “இதுல போலி முஸ்லீம் ?! பெயருள்ள நீங்களே உங்களுக்கு சாதகமா கருத்து போட்டுக்கிறிங்க !”

    உனக்கு என்னைப்பற்றியும் தெரியாது, யாசினை பற்றியும் தெரியாது.

    முதல்ல நீ உண்மையான பெயரில் வா அப்புறம் அடுத்தவரைக் குறை கூறலாம்.

    பேசுவது சுய மரியாதை ஆனால், செய்வது எல்லாம் அதற்கு எதிராக.

    • குடியரசுத் தினத்தை அசிங்கப்படுத்திய ம.அரசு

      சாமியை கோவில் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பெருமைப்படுத்தலாமே தவிர சம்பந்தமே இல்லாத நிகழ்விலும் சாமியை முன்னிலைப்படுத்துவது நாட்டின் விடுதலைக்காக உயிரை விட்டவர்களை அசிங்கப்படுத்துவது போலாகும்.

  5. குடியரசுத் தினத்தை அசிங்கப்படுத்திய ம.அரசு

    சாமியை கோவில் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பெருமைப்படுத்தலாமே தவிர சம்பந்தமே இல்லாத நிகழ்விலும் சாமியை முன்னிலைப்படுத்துவது நாட்டின் விடுதலைக்காக உயிரை விட்டவர்களை அசிங்கப்படுத்துவது போலாகும்.

    இதை ஏன் சொல்லவில்லை. இதிலிருந்தே தெரிகிறது. தமிழக அரசின் மீது வெறுப்பின் / வன்மத்தின் உச்ச கட்டத்திலிருக்கிறீர்கள்.

    பேசுவது நேர்மறை. ஆனால், ஒவ்வொரு பேச்சிலும், பதிவிலும் எதிர்மறை. இதிலிருந்து ஓன்று எனக்கு புரிகிறது. நேர்மறை என்று சொல்லிக்கொண்டு, எல்லாவற்றிலும் எதிர்மறை எண்ணம் கொண்டிருக்கிற நீங்களே ஓரளவு வாழ்க்கையில் successful இருக்கும்போது, முழுவதும் நேர்மறை எண்ணம் கொண்டிருந்தால், பெரிய வெற்றி பெறலாம் போலிருக்கிறது.

    உங்கள் blog லிருந்து ஒரு comman man உங்களை பற்றி புரிந்து கொள்வது என்னவென்றால்,

    திமுக என்றால் வெறுப்பு.

    இடதுசாரி என்றால் வெறுப்பு.

    பிஜேபி யை ஆதரிக்காத இந்துக்கள் மீது வெறுப்பு.

    ரஜினியை ஆதரிக்காதவர்கள் மீது வெறுப்பு.

    ரஜினிக்கு வாழ்த்து செல்லாதவர்கள் மீது வெறுப்பு.

    பெரியார் என்றால் மறைமுக வெறுப்பு. (அவர் கருத்து கீழ்ஜாதி மக்கள் அடிமை பட்டு கிடந்த சுதந்தரத்துக்கு மமுந்திய இந்தியா. இன்று இருந்திருந்தால், அவ்வாறு கூறியிருக்க மாட்டார்)

    மற்ற மதத்தவர்கள் மீது வெறுப்பு.

    கமல் மீது வெறுப்பு.

    இவர் எண்ணத்திற்கேற்ற படி சொல்லாத ஊடகங்கள் மீது வெறுப்பு.

    இவர் எண்ணத்திற்கேற்ற படி சொல்லாத சோசியல் மீடியா users மீது வெறுப்பு. (அவனவன் தன் கருத்தை சொல்கிறான் என்று கடந்து செல்லாமல், facebook போராளிகள் என்று ஏளனம் வேறு)

    தன கருத்து தான் சரி. தன கருத்திற்கு எதிர் கருத்து சொன்னால், நாகரிகமற்ற சொற்கள்.

    இப்படி நிறைய இருக்கிறது சொல்வதற்கு.

  6. @சுரேஷ்

    இந்த மாதிரியெல்லாம் யோசிக்க உங்களால மட்டுமே முடியும்.

    கடவுள் என்பது இங்கே கலாச்சாரம் பண்பாடு என்ற பிரிவின் கீழ் வரும் (கட்டுரையை முழுதாகப் படிக்கவும்).

    எந்தச் சாமியும் சுதந்திரம் பெற்றதை அவமானப்படுத்தவில்லை.

    இந்தியாக்கு சுதந்திரம் வேண்டாம் ஆங்கிலேயர்கள் ஆளட்டும் என்று கூறவில்லை.

    சுதந்திர தினத்தைத் துக்க தினம் என்று கூறவில்லை.

    வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கமே பயன்படுத்தப்பட்டது.

    உங்கள் அனைவராலும் இதுபோல எதையாவது குறை கூறிக்கொண்டு இருக்க முடியுமே தவிர, பெரியார் சுதந்திரம் குறித்த கூறிய விமர்சனத்துக்குப் பதில் அளிக்க முடியாது.

    இது தான் நிதர்சனம்.

    பெரியார் சமூக நீதிக்காக போராடியுள்ளார் அதை பெருமையாக கூறுங்கள். அதற்காக அவர் செய்த தவறுக்கும் வீம்புக்கு கொடி பிடிக்கணும் என்ற அவசியமில்லை

    நான் யார் என்பதை தெளிவாக விளக்கியுள்ளேன். எதையும் மற்றவர்களைப் போல மறைப்பதில்லை, போலியாக நடிப்பதில்லை.

    https://www.giriblog.com/neautral-is-possible-or-not/ இதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

    உங்களுக்கு எப்படியொரு ஒரு நிலை, நியாயம் இருக்கிறதோ அதே போல எனக்கும் உள்ளது.

    “அவனவன் தன் கருத்தை சொல்கிறான் என்று கடந்து செல்லாமல்”

    இதே எனக்கும் பொருந்தும் இல்லையா 🙂 . என் கருத்தை நான் கூறுகிறேன்.. நீங்க கடந்து செல்ல வேண்டியது தானே!

    முடியலைல்ல.. அதே போலத்தான் நானும்.

    “தன கருத்திற்கு எதிர் கருத்து சொன்னால், நாகரிகமற்ற சொற்கள்.”

    அப்படியா?! 🙂 எங்கே ஒரே ஒரு நாகரீமற்ற கருத்தைக் கருத்துப்பகுதியில் நான் கூறியதாக காட்டுங்கள் பார்ப்போம்.

  7. பெரியார் உருவச்சிலையை வைத்ததினாலேயே குடியரசு தினத்தை அசிங்கப்படுத்திய தமிழக அரசு என்று கூறுவது மிகவும் வருந்தத்தக்கது. ஒரு உண்மையான உணர்வாளனா இதை தமிழக அரசு மாநில அணிவகுப்புல கொண்டு வந்ததுக்கு நீங்க சந்தோசம்தான் பட்டிருக்கணும். அதை நீங்க செய்யல மாறாக குத்தம் தான் கண்டுபிடிக்கிறீங்க.

    தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள்.
    1.வ.உ.சி ஒரு தொழிலதிபர். அவருடைய சிலை எதற்கு?
    2.வேலு நாச்சியார் ஜான்சி ராணிக்கு முன்பே வெள்ளையனை எதிர்த்து போரிட்டார். கூடவே அவருக்கு உதவியது திப்பு சுல்தான் படை. இந்த இரண்டு காரணுங்களும் சேர்த்து அவரை ஏன் சேர்க்கணும்னு கேள்வி முன்வைக்கப்பட்டிருக்கணும்.

    இந்த இரண்டு காரணங்களையும் பத்தி நீங்க முந்தின பதிவுல கூட பேசல. ஆனா அணிவகுப்பு ஊர்தி அலப்பறைனு ஒரு சொல்லாடல் பயன்படுத்தி திமுக மேல இருந்த வன்மத்தை மொத்தமா இறக்கிட்டீங்க.

    //நமக்கே இன்னும் பிற தலைவர்களைப்பற்றி தெரியாது.// நான் கண்டிப்பாக இதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனா வடக்குல இருக்கிறவங்களுக்கு நம்மளையே யாருனு தெரியாத நிலைமை தான் இருக்கு. அதுக்காக இவங்களை அங்க கொண்டு போய் நிறுத்தி அவங்க பேர் வெளிய வர ஒரு வாய்ப்பாக இருந்திருக்குமே.

    //சுதந்திரமே வேண்டாம், வெள்ளையனே ஆளட்டும்!
    பிரிட்டிஷார் நாட்டை விட்டுச் சென்று விட்டால் இந்தியாவால் ஒரு குண்டூசி கூடத் தயாரிக்க முடியாது என்றவர்.
    ஆகஸ்ட் 15 நமக்குத் துக்க தினம் என்றவர்.
    தமிழைப் பயன்படுத்தாமல் ஆங்கிலத்தைப் பயன்படுத்துங்கள் என்றவர்.//

    பெரியார் கூறியதாக சொல்லப்படும் இந்த கருத்துக்கள் எந்த ஒரு காலகட்டத்தில, அப்போ இருந்த அடிமை முறை, பார்ப்பனிய ஆளுமை, சாதி வேற்றுமைகள் மூலமா பிளவுபட்ட சமூக அமைப்பு காரணமாக சொல்லப்பட்டதுன்னு புரிஞ்சிக்கக்கூட முயற்சி பண்ணமாட்டேனு நீங்க இருக்கிறதை எப்படி சொல்றது.

    உங்களுடைய வாதப்படி பெரியார் ஒரு சுதந்திர போராட்ட வீரர் அல்ல. அதற்கு பதில் –
    1. 1920-22ல் மகாத்மா காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் சிறைக்கு சென்றுள்ளார்.
    2. 1972ல் அப்போதைய மத்திய காங்கிரசு அரசு சுதந்திர போராட்ட வீரருக்கான செம்புப்பட்டயமும் அளித்துள்ளது.

    அதே மாதிரி அணிவகுப்பில் தேர்ந்தேக்கப்பட்ட மற்ற மாநிலங்களின் வானங்களில் இருந்த காமதேனு, அனுமார் மாதிரியான சிலைகளுக்கும் சுதந்திர/குடியரசு விழாவிற்கோ என்ன சம்பந்தம் என்று நீங்கள் தெரிவிப்பீர்கள் இல்லையென்றால் அதை எதிர்க்காவாவது செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

  8. @கனி வாங்க! நலமா!

    “ஒரு உண்மையான உணர்வாளனா இதை தமிழக அரசு மாநில அணிவகுப்புல கொண்டு வந்ததுக்கு நீங்க சந்தோசம்தான் பட்டிருக்கணும்.”

    சுதந்திரத்தை அவமானப்படுத்தியவர் சிலை குடியரசு தின அணிவகுப்பில் வருவதை நிச்சயம் என்னால் மகிழ்ச்சியாக ஏற்க முடியாது.

    “இந்த இரண்டு காரணங்களையும் பத்தி நீங்க முந்தின பதிவுல கூட பேசல. ஆனா அணிவகுப்பு ஊர்தி அலப்பறைனு ஒரு சொல்லாடல் பயன்படுத்தி திமுக மேல இருந்த வன்மத்தை மொத்தமா இறக்கிட்டீங்க.”

    என் கட்டுரை ஏன் பெரியார் சிலை என்பதாகத்தான் இருந்தது. வேறு எதையும் நியாயப்படுத்தியில்லை.

    “அதுக்காக இவங்களை அங்க கொண்டு போய் நிறுத்தி அவங்க பேர் வெளிய வர ஒரு வாய்ப்பாக இருந்திருக்குமே.”

    கடந்த ஐந்து வருடங்களாக நடந்து கொண்டு தானே இருந்தது. இந்த வருடம் நடக்கவில்லை அவ்வளவு தானே!

    மற்ற மாநில தேச தலைவர்களையும் அனைவரும் தெரிந்து கொள்ளட்டுமே.

    இதே திமுக, திராவிட தலைவர்களைத் தானே அனைத்திலும் முன்னிறுத்துகிறது. தேசிய தலைவர்களை ஏன் தமிழகத்தில் புறக்கணிக்கிறது.

    ஏன் தேச தலைவர்களை மக்களிடையே கொண்டு செல்லவில்லை. நீங்களே ஏற்றுக்கொண்டுள்ளீர்களே. நாமே செய்யாமல் மத்திய அரசை குறை கூறுவதில் என்ன அர்த்தம்?

    “வடக்குல இருக்கிறவங்களுக்கு நம்மளையே யாருனு தெரியாத நிலைமை தான் இருக்கு.”

    வட மாநிலத்தவர்களை விடுங்கள் தமிழக தேச தலைவர்களை தமிழர்கள் பலருக்கே தெரியவில்லை என்றால் யார் காரணம்?

    தமிழக அரசா? மத்திய அரசா?

    “பெரியார் கூறியதாக சொல்லப்படும் இந்த கருத்துக்கள் எந்த ஒரு காலகட்டத்தில, அப்போ இருந்த அடிமை முறை, பார்ப்பனிய ஆளுமை, சாதி வேற்றுமைகள் மூலமா பிளவுபட்ட சமூக அமைப்பு காரணமாக சொல்லப்பட்டதுன்னு புரிஞ்சிக்கக்கூட முயற்சி பண்ணமாட்டேனு நீங்க இருக்கிறதை எப்படி சொல்றது.”

    அவ்வாறு சாதாரண நபர் கூறலாம் ஆனால், ஒரு தலைவர் கூறக்கூடாது. அவர் கூறுவது அவர் விருப்பம் என்றால் இரண்டுக்கும் கிரெடிட் எடுக்க கூடாது.

    இதே மாதிரி அனைவரும் நினைத்து பேசி இருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்து இருக்குமா?

    பெரியார் சமூக நீதிக்காக போராடினார். அதை மறுக்கவில்லை. அதற்காக அவர் கூறிய அனைத்தையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்பதில்லை.

    “1920-22ல் மகாத்மா காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதின் மூலம் சிறைக்கு சென்றுள்ளார்.”

    சென்றவர் எதற்கு எதிராக பேச வேண்டும்? அப்படி பேசினால் போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு என்ன அர்த்தம்?!

    “1972ல் அப்போதைய மத்திய காங்கிரசு அரசு சுதந்திர போராட்ட வீரருக்கான செம்புப்பட்டயமும் அளித்துள்ளது.”

    காங்கிரஸ் அளித்தால், பெரியார் சுதந்திர போராட்ட வீரர் ஆகி விடுவாரா?

    பட்டயம், விருது அனைத்திலுமே பாரபட்சமின்றி இங்கே அனைத்து கட்சிகளிடையே அரசியல் உள்ளது.

    “அணிவகுப்பில் தேர்ந்தேக்கப்பட்ட மற்ற மாநிலங்களின் வானங்களில் இருந்த காமதேனு, அனுமார் மாதிரியான சிலைகளுக்கும் சுதந்திர/குடியரசு விழாவிற்கோ என்ன சம்பந்தம் என்று நீங்கள் தெரிவிப்பீர்கள் இல்லையென்றால் அதை எதிர்க்காவாவது செய்வீர்கள் என்று நம்புகிறேன்.”

    சுரேஷ்க்கான பதிலிலேயே கூறியுள்ளேனே!

    இவை கலாச்சாரம் பண்பாடு என்ற பிரிவில் வரும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை அதிகம் என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே. குறைத்து இருக்கலாம் ஆனால், தவிர்க்க வேண்டியதில்லை.

    திமுக தலைவர் TRB ராஜா 2011 ல் காங் ஆட்சியில் வந்த வாகன அணிவகுப்பு படத்தை இந்தாண்டு அணிவகுப்பு போல பகிர்ந்து அவமானப்பட்டதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

    இதற்கு எதிராக பேசுபவர்கள் அனைவரும் குறிப்பிடுவது கடவுள் சிலை எதற்கு என்பது தான் ஆனால், இது மட்டுமல்லாது ஏராளமான விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன அவை எதுவுமே கூறப்படுவதில்லை.

    பின்வரும் விவரங்களைப் படியுங்கள். கடவுள் சிலை மட்டுமே உங்கள் கண்களுக்கு தெரிவது ஏன் மற்ற படைப்புகள் கண்களுக்கு தெரியவில்லை என்பது புரியவில்லை.

  9. Credit Chakravarthi

    புது தில்லியில் 73ஆவது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற / (பெறாமல் போன) மாநில மற்றும் அமைச்சக ஊர்திகள் குறித்து பரபரப்பான, எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே நம்முன் வைக்கப்பட்டுள்ளன.

    இன்றைய கண்காட்சியில் இடம் பெற்ற ஊர்திகள் மூலம் சில புதிய வரலாற்றுத் தகவல்களை அறியப் பெற்றேன்.

    1. விமான போக்குவரத்து துறை : சிறு நகரங்களுக்கு சேவையை விரிவு செய்யும் #UDAN திட்டம், பௌத்த வரலாற்று நகரங்களை சர்வதேச சுற்றுலாவுக்காக இணைப்பது பற்றி விவரிக்கிறது.

    2. கல்வி அமைச்சக ஊர்தியில் முன் புறம் இடம் பெற்ற சாமியார்கள் மட்டும் வெட்டி பரப்பப்படுகிறது. வேதகால குருகுலக் கல்வி முதல் மெட்டா வெர்ஸ் #Metaverse வரை நமது மாற்றங்களை அது பிரதிபலிக்கிறது.

    இணையம், கற்றல், கற்பித்தல், பயிற்சி முறைகள், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் படம் அதில் இடம் பெற்றுள்ளது.

    3. மகாராஷ்டிரா – எதிர்க்கட்சிகள் கூட்டணியுடன் ஆளும் மாநிலம்.

    அங்குள்ள பல்லுயிர் பெருக்கம், மாநில உயிரனங்கள் ( நீல வண்ணத்துப்பூச்சி, அரிய வகை புலி) காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

    4. குஜராத் – நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்ட பழங்குடி இன மக்களின் சோகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது வருத்தம் தரும் செய்தி.

    5. ஹரியானா – விளையாட்டுத் துறையில் அம்மாநில சாதனை. ஒலிம்பிக் பதக்க வேட்டையிலும் சரி, பாராலிம்பிக் போட்டிகளிலும் சரி அம்மாநிலம் முதன்மையான பங்களிப்பை பறைசாற்றுகிறது.

    6. அருணாச்சல பிரதேசம் – 1800களின் பின் பகுதியில் தொடங்கி 1912 வரை நடைபெற்ற பிரிட்டிஷ் மற்றும் மலைவாழ் பூர்வகுடியினர் யுத்தம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    Anglo Abor (Adi) War – ஆங்லோ- அபோர் ஆதிவாசிகள் போர் என்று கூகுள் செய்தால் எத்தனை முறை மலைவாழ் இனத்தவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தை அசாம் தேயிலை தோட்டங்களில் இருந்து விரட்டி அடித்துள்ளனர் என்று அறியலாம்.

    7. தகவல் தொடர்பு அமைச்சகம் – அஞ்சல் துறையின் கடைசி கிராமம் வரையிலான அதன் சேவையை வெளிக்கொணர்ந்துள்ளது.

    8. பொதுப் பணித்துறை – இந்திய சுதந்திரப் போராட்டத்தில் INA, திரு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் மகத்தான சேவையை உருவகப்படுத்தியுள்ளது. இங்கு மேற்கு வங்க மாநில அரசியல் + ஊடகங்கள் நேதாஜி ஓரம் கட்டப்பட்டார் என்று சொல்கின்றன. கொடுமை.

    9. கடற்படை – இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் 48 மணி நேரத்திற்கு ஒரு முறை கடலுக்கு அடியில் இருந்து வெளிவர வேண்டிய தேவையே உள்நாட்டு ஆராய்ச்சி மூலம் பதினைந்து நாள்கள் வரை தாங்கும் பேட்டரி சார்ஜிங் ஆய்வு வெற்றியை பறைசாற்றுகிறது.

    Air Independent Propulsion – Indian Submarines – Naval Materials Research Laboratory செய்தியை தேடிப் படிக்கலாம்.

    10. DRDO – உலகின் மிகச்சிறந்த இலகுரக விமானமங்களில் ஒன்றான தேஜாஸில் பயன்படுத்த நாமே உருவாக்கிய சென்சார்கள், ஆயுதங்கள், மின்னணு தளவாடங்கள் குறித்து சொல்கிறது.

    11. சத்தீஸ்கர் – மாடுகளின் சாணத்தை அரசே கிலோ ரூ.2 க்கு வாங்கி அதனை உரமாக மாற்றி மறுசுழற்சிக்கு உதவி செய்யும் வெற்றிகரமான #Gauthan திட்டம் பற்றி கவனம் ஈர்க்கிறது.

    12. கர்நாடகா – மண் பொம்மைகள் முதல் சுடு சிற்பங்கள் வரை அதன் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் திறனைப் போற்றும் வகையில் அதன் சிறப்புகள் நிறைந்து ஊர்தி உருவாக்கப்பட்டுள்ளது.

    நம்மவர்கள் அங்கும் ஆஞ்சநேயரை விட பெரிய உருவமான வயதான தாயாரை மறந்து விட்டு உருட்டுவார்கள்.

    13. பஞ்சாப் – எதிர்கட்சி மாநிலம். திரு. பகத் சிங், திரு. சுகதேவ், திரு. ராஜகுரு ஆகியோர் வெள்ளயரை எதிர்த்து போராடிய காட்சியும், திரு. லாலா லஜபதி ராய் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தையும், ஜாலியன் வாலாபாக் படுகொலையையும் காட்சிப்படுத்துகிறது.

    14. கோவா – போர்த்துகீசியர்களை எதிர்த்தவர்களை சிறை வைத்த அகுவாடா #aguadafort கோட்டையையும், அம்மாநில பூர்வகுடியினரான கும்பி இனத்தவரையும் வடிவமைத்து உள்ளது.

    15. மேகாலயா – மூங்கில் வளர்ப்பு, பாரம்பரிய மஞ்சள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!