இந்த முறை ஊருக்குச் சென்ற போது நண்பர்கள் பெரும்பாலனவர்கள் பேசியது லீமன் பிரதர்ஸ் மற்றும் அதன் தொடர்பு வங்கிகள் பற்றித் தான்.
லீமன் பிரதர்ஸ்
இதன் பாதிப்பு அனைத்து ஐடி நிறுவனங்களிலும் எதிரொலித்துள்ளது.
பலர் சம்பள உயர்வு பற்றிக் கூறாமல் வேலையை விட்டுத் தூக்காமல் இருந்தாலே பெரிய விஷயம் என்று கூறினார்கள்.
நீண்ட வருடத்திற்குப் பிறகு அனைவரது வயிற்றிலும் தற்போதைய பிரச்சனை புளியை கரைத்திருப்பது உண்மை.
இதற்கு முன்பு இதே போலப் பிரச்சனை ஏற்பட்டதை அனைவரும் கண்டிப்பாக மறந்து இருக்க மாட்டார்கள். புதியவர்களுக்கு இது புதிய அனுபவம் தான்.
ஒரு சிலர், இந்த மாதிரி வந்ததும் நல்லது தான், அப்போது தான் ஒரு சில பிரச்சனைகள் கட்டுக்குள் வரும் என்று கூறினார்கள்.
குறிப்பாக நிலத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டதைக் குறிப்பிட்டார்கள் (தற்போது சென்னையில் விலை குறைந்துள்ளது).
இதற்கு ஐ டி துறையை மட்டுமே குறை சொல்ல முடியாது என்றாலும் அவர்கள் முக்கியக் காரணிகள் என்பதை மறுக்க முடியாது.
மற்றொருவர் சொன்னது கல்லூரி முடித்தவுடன் கையில் 20000, 30000 வாங்கி விட்டு தன்னிலை புரியாமல் போடும் ஒரு சிலரின் ஆட்டம் தாங்க முடியலை.
ஊரில் இவர்கள் மட்டும் தான் சம்பளம் வாங்குவது போல நடந்து கொள்கிறார்கள் என்று கூறிய போது கணிப்பொறி துறையில் தான் இருக்கிறேன் என்றாலும் ஒரு சில விஷயங்கள் அறிவேன் என்பதால் மறுத்து பேச முடியவில்லை.
உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியதாகத் தான் இருந்தது.
ஆட்குறைப்பு
தற்போது நடைபெறும் ஆட்குறைப்பு பலரிடையே பீதியை (வார்த்தை உதவி சன் செய்தி மற்றும் தமிழ் பத்திரிகைகள்) ஏற்படுத்தி இருக்கிறது என்னையும் சேர்த்து.
ஆட்குறைப்பு ஐடி துறை மட்டுமல்லாது விமானத்துறை மற்றும் பல துறைகளில் நடைபெறுவதால் பாதிப்பு அனைத்து தரப்பிலும் இருக்கும் என்றே கருதுகிறேன்.
கணிப்பொறி துறை வளர்ந்ததால் பல நன்மைகள் ஏற்பட்டாலும் அதே போலப் பல பிரச்சனைகளையும் உடன் அழைத்து வந்தது மறுக்க முடியாது.
ஒன்றால் நன்மை என்றால் அதற்கு தீமைகளும் உடன் வருவது தவிர்க்கமுடியாததுதானே.
ஹி ஹி ஹி அது வேற ஒண்ணுமில்ல Gravatar ல் வேற படம் கொடுத்து இருக்கிறேன். அதில் என்ன படம் இருக்கோ அது தான் வரும்.
//பாதிப்பு அனைத்து தரப்பிலும் இருக்கும் என்றே கருதுகிறேன்.///
சரியான கணிப்பென்றே நானும் கருதுகிறேன்.
//ஒன்றால் நன்மை என்றால் அதற்க்கு தீமைகளும் உடன் வருவது தவிர்க்கமுடியாததுதானே.//
உண்மைதான் கிரி. முன்னால் தெரியும் நன்மையை மட்டுமே பார்த்து நடக்காமல் பின்னால் வரும் தீமையையும் எச்சரிக்கையுடன் திரும்பிப் பார்த்து நடையைத் தொடர்தல் என்றைக்கும் நலம்.
//ராமலக்ஷ்மி said…
உண்மைதான் கிரி. முன்னால் தெரியும் நன்மையை மட்டுமே பார்த்து நடக்காமல் பின்னால் வரும் தீமையையும் எச்சரிக்கையுடன் திரும்பிப் பார்த்து நடையைத் தொடர்தல் என்றைக்கும் நலம்.//
சரியாக சொன்னீர்கள் ராமலக்ஷ்மி. நம்மவர்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செய்து விட்டு அப்புறம் நஷ்டம் ஏற்பட்டதும் குய்யோ முறையோ ன்னு புலம்ப வேண்டியது.
//கூடுதுறை said…
என்ன ஆச்சி கிரி… ஊருக்கு வந்ததில் நல்ல திட்டோ யாரோ போட்டு கொடுத்துவிட்டார்களோ தங்கமணியிடம்…//
அவ்வ்வ்வ்வ்வ் கூடுதுறை இந்த படம் போட்டு பல மாதங்களாகி விட்டன. அப்புறம் என் மனைவிக்கு இதெல்லாம் தெரியும். என்னோட வருத்தம் மாளவிகா இப்படி அதுக்குள்ளே குடும்ப இஸ்த்திரி ஆகி குழந்தை குட்டின்னு, கலை சேவை செய்யாம என் போன்ற ரசிகர்கள் தலையில் இடி இறக்கிட்டாங்களேன்னு தான் … ஹி ஹி ஹி ரொம்ப முக்கியம் னு சொல்றீங்களா!
கிரி மாளவிகா படம் உங்கள் பதிவு தமிழ்மணத்தில் வரும்போது தெரியவில்லையே. வேறு படம் வருகிறதே
🙂
//
கிரி மாளவிகா படம் உங்கள் பதிவு தமிழ்மணத்தில் வரும்போது தெரியவில்லையே. வேறு படம் வருகிறதே //
கிரி சீரியஸா லேமான்.. பைனான்ஸ்..எண்டு கதைச்சுக் கொண்டிருக்கிறார், நீங்கள் மாளவிகா போட்டோ வரலை எண்டு பகிடி விடிறியள்…
//ஹி ஹி ஹி அது வேற ஒண்ணுமில்ல Gravatar ல் வேற படம் கொடுத்து இருக்கிறேன். அதில் என்ன படம் இருக்கோ அது தான் வரும்.//
என்ன ஆச்சி கிரி… ஊருக்கு வந்ததில் நல்ல திட்டோ யாரோ போட்டு கொடுத்துவிட்டார்களோ தங்கமணியிடம்…
//’டொன்’ லீ said…
கிரி சீரியஸா லேமான்.. பைனான்ஸ்..எண்டு கதைச்சுக் கொண்டிருக்கிறார், நீங்கள் மாளவிகா போட்டோ வரலை எண்டு பகிடி விடிறியள்…//
ஹா ஹா ஹா ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பு
//பழமைபேசி said…
கிரி, உடுமலைப் பக்கம் நல்ல வெவசாய நெலம் இருந்தாச் சொல்லுங்க…. பெருமைக்குப் புல் புடுங்கி அலுத்துப் போச்சு…இனியாவது எருமைக்குப் புல் புடுங்குற வழியப் பாக்கலாம்னு இருக்கேன்//
ஹா ஹா ஹா கோபி பக்கம் வேணும்னா வாங்க. உங்கள் முதல் வருகைக்கு நன்றி
//இனியா said…
நம்ம ஊர்ல எல்லோருமே லேஹ்மன் என்றே சொல்கிறார்கள்.
அது லீமன் பிரதர்ஸ் லேஹ்மன் அல்ல. அங்கதான் நான் இப்பவும் வேலை செய்கிறேன்.//
வாங்க இனியா. சுட்டி காட்டியமைக்கு நன்றி மாற்றி விட்டேன். உங்கள் நிறுவன பிரச்சனைகள் நீங்கி பழைய நிலைக்கு (காலம் பிடிக்கும்) வர இறைவனை வேண்டுகிறேன்.
கிரி, உடுமலைப் பக்கம் நல்ல வெவசாய நெலம் இருந்தாச் சொல்லுங்க…. பெருமைக்குப் புல் புடுங்கி அலுத்துப் போச்சு…இனியாவது எருமைக்குப் புல் புடுங்குற வழியப் பாக்கலாம்னு இருக்கேன்.
“இந்த முறை ஊருக்கு சென்ற போது நண்பர்கள் பெரும்பாலனவர்கள் பேசியது லேஹ்மான் பிரதர்ஸ் மற்றும் அதன் தொடர்பு வங்கிகள் பற்றி தான்.”
நம்ம ஊர்ல எல்லோருமே லேஹ்மன் என்றே சொல்கிறார்கள்.
அது லீமன் பிரதர்ஸ் லேஹ்மன் அல்ல. அங்கதான் நான் இப்பவும் வேலை செய்கிறேன்.