என் இந்திய பயணம் சில குறிப்புகள் 2

7
gobichettipalayam

ருல இருந்த போது மூன்று முறை (தமிழ்நாடு, ஹைதராபாத், பெங்களூரு) ஐ சி ஐ சி ஐ வங்கி திவாலாகி விட்டதாகப் புரளியை கிளப்பி விட்டார்கள். Image Credit

லீமன் பிரதர்ஸ் ல் பங்குகள் வைத்து இருந்ததாகவும் குறைந்த அளவே நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஐ சி ஐ சி ஐ அறிவித்தது. அதைத் தொடர்ந்து வங்கி திவாலாகி விட்டதாகப் புரளியை கிளப்பி விட்டு விட்டார்கள்.

இதனால் பொது மக்கள் இத்தனை நாள் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் மொத்தமாகப் போய் விடுமோ என்று நம் மக்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

அதி பயத்தில் மொத்தமாக ATM முன்பு குவிந்து மற்றும் ஃபண்ட் ட்ரான்ஸ்பர் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

திடீரென்று சர்வரில் ஏற்பட்ட அதிகச் சுமையாலோ என்னவோ ஐ சி ஐ சி ஐ தளமும் இயங்கவில்லை.

இதனால் இன்னும் பீதி ஆகி விட்டார்கள், இப்படி மொத்தமாக அனைவரும் பணத்தை எடுத்ததால் பயந்து போன ஐ சி ஐ சி ஐ பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

எந்த வங்கியும் அனைவரும் ஒரே சமயத்தில் பணம் எடுக்க ஆரம்பித்தால் தாங்காது, மிகச் சிரமம். தற்போது நிலைமை பரவாயில்லை என்று கருதுகிறேன்.

சொல்ல முடியாது மறுபடியும் யாராவது புரளியை கிளப்பலாம். இன்னும் கொஞ்ச நாளைக்கு ஐ சி ஐ சி ஐ க்கு தலை வலி தான்.

மின்சாரப் பிரச்சனை

மின்சாரப் பிரச்சனை எங்கள் கிராமத்தில் படு மோசமாக இருந்தது.

இதைப் பற்றி ஒரு பெரிய பதிவே போடலாம் என்று நினைத்தேன், ஆனால் சும்மா எத்தனை முறை இதையே கூறிக்கொண்டு இருப்பது என்று இதில் சிறு பகுதியாகக் கூறுகிறேன்.

எங்கள் ஊரில் ஐந்து மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இருந்த போது காலையில் 4-6, 9.15 மணிக்கு போன மின்சாரம் (ஒரு சில நாள்) மாலை 6 மணிக்கு தான் வந்தது.

திரும்ப இரவு 9-10 (கோலங்கள், அரசி காலி, பெண்களின் சாபம் 😀 ) திரும்ப அதி காலை 12-1.30.

இந்த இடை பட்ட நேரத்தில் என்ன செய்ய முடியும் நீங்களே யோசித்துப் பாருங்கள், வீடுகளை விடுங்கள் சிறு நிறுவனங்களை நடத்தி வரும் நபர்களை நினைத்துப் பாருங்கள்.

எத்தனை டீசல் போட்டு நடத்துவது.

டாலர்

திருப்பூரில் உள்ளவர்கள் நிலைமை படு மோசம். அவர்களுக்குத் தற்போது இருக்கும் ஒரே ஆறுதல் டாலர் மதிப்புக் கூடியது மட்டுமே. இல்லை என்றால் அவர்கள் கதி அதோ கதி தான்.

வீட்டில் உள்ளவர்கள் இரவிலேயே சட்னி எல்லாம் அரைத்து வைத்துக் கொள்கிறார்கள் காலைத் தேவைக்காக. நான் ஊருக்குக் கிளம்பும் போது 6.30 மணி நேர மின்வெட்டு என்று அறிவித்தார்கள்.

தற்போது காற்றாலை மின் உற்பத்தியும் தடை பட்டுள்ளது. விளங்குன மாதிரி தான்.

தற்போது அனைவரும் மின்சாரம் எப்போதும் போகும் என்று கேட்பதில்லை. எப்போது இருக்கும் என்று கேட்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.

சென்னையில் இருப்பவர்களுக்கு இதன் பாதிப்பை உணர முடியாது, அங்கு மின்வெட்டுக் குறைவு.

காதலில் விழுந்தேன் படத்திற்கு (ஆரம்பத்தில் அழகிரி பிரச்சனை) சன் டிவி செய்த விளம்பரத்திற்குண்டான செலவை மட்டும் கணக்கெடுத்தால் ஒரு படமே கண்டிப்பாகத் தயாரித்து விடலாம்.

டைட்டானிக் படத்திற்குக் கூட இத்தனை விளம்பரம் பில்ட் அப்கொடுத்திருப்பார்களா என்று சந்தேகம்.

தற்போது அனைவரும் எதிர்பார்த்த மாதிரி டாப் 10 ல் முதலிடம். இதைச் சன் செய்தியில் கூடக் கூட்டம் அலைமோதுகிறது என்று சொன்னதைத் தான் தாங்க முடியவில்லை.

மார்கெட்டிங் செய்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா! குசேலன் படத்திற்கு இவர்கள் செய்த அட்டாகாசம் நினைவுக்கு வந்தது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. முரளிகண்ணன் சர்வேசன் வருகைக்கு நன்றி.

  முரளி கண்ணன் உங்க பதிவுகள் படிக்க வேண்டியது நிறைய இருக்கு, நேரம் இல்லை. பொறுமையாக வந்து படிக்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம்

  ====================================================================

  //புதுகை.அப்துல்லா said…
  வலைப்பதிவு உலகின் “பிலிம்நியூஸ் ஆனந்தன்” நம்ப முரளிகண்ணன்//

  சரியானா பேரு அப்துல்லா :-))

  =====================================================================

  //கூடுதுறை said…
  //வினை விதைத்தவன் வினை அறுப்பான்.//
  இது மிகவும் உண்மை…//

  வாங்க கூடுதுறை ஒருத்தனை அழிக்க நாம் நினைத்தால் நம்மை அழிக்க இன்னொருவன் வருவான் என்பது எவ்வளோ பெரிய உண்மை. இதில் என்ன வருத்தம் என்றால் யாரையும் அழிக்க நினைக்காமல் தன் வழி போகிறவர்களும் சேர்ந்து பாதிக்கப்படுவது.

 2. \\சன் செய்தியில் கூட கூட்டம் அலைமோதுகிறது என்று சொன்னதை தான் தாங்க முடியவில்லை. மார்கெட்டிங் செய்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா\\

  :-)))))))))))))))))))

 3. ///இதை சன் செய்தியில் கூட கூட்டம் அலைமோதுகிறது என்று சொன்னதை தான் தாங்க முடியவில்லை.////

  😉

 4. வலைப்பதிவு உலகின் “பிலிம்நியூஸ் ஆனந்தன்” நம்ப முரளிகண்ணன் அன்ணணே இதப் படிச்சிட்டு சிரிச்சுட்டு போறாரு. நம்ப தனியா வேற என்னத்த சொல்ல???

 5. //நான் ஆதவன் said…
  அவ்ளோ விளம்பரமா????//

  ஆமாம் ஆதவன். ஒரு சில நொடிகளுக்கே லட்ச கணக்கில் பணம், இவர்களுடைய டிவி செய்தித்தாள் புத்தகம் என்பதால் மட்டுமே இவர்களுக்கு கட்டுபடி ஆகி இருக்கும். மற்றபடி இந்த படத்தால் கதாநாயகன் மற்றும் நாயகி க்கு நல்ல விளம்பரம் அவ்வளோ தான்.

 6. //சன் டிவி செய்த விளம்பரத்திற்குண்டான செலவை மட்டும் கணக்கெடுத்தால் ஒரு படமே கண்டிப்பாக தயாரித்து விடலாம்//
  அவ்ளோ விளம்பரமா???? நல்ல வேளை நான் சன்.டிவி பாக்கறதில்ல…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here